<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="220,869,773,1500" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 09 2025 14:31:06 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="10102025-TRY-04" position.sequence="04" ex-ref="10102025-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">கழக நிர்­வா­கி­கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பதில்கள்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="34"> </lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.3">கேள்வி – பதில்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.3">சுப்­பி­ர­மணி, மணி­கண்­டம் ஒன்­றி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">கேள்வி:`உங்­க­ளு­டன் ஸ்டாலின்’ முகா­மில் பெறப்­பட்ட மனுக்­கள் அனைத்­துக்­கும் முடிந்­த­வரை தீர்வு காண்­ப­தன் மூலம் நமது வெற்­றியை உறுதி செய்ய முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">துணை முத­ல­மைச்­சர் :நம் சுப்­ர­ம­ணி­யன் சொன்­னது 100 சத­வி­கி­தம் உண்மை. மக்­க­ளுக்கு அர­சின் அனைத்து திட்­டங்­க­ளும் சென்று சேர வேண்­டும் என்ற ஒரே நோக்­கத்­தோடு ஆரம்­பிக்­கப்­பட்­ட­து­தான் `உங்­க­ளு­டன் ஸ்டாலின்’ முகாம். இன்­றைக்கு கிட்­டத்­தட்ட 10,000 முகாம்­கள் நடத்த வேண்­டும் என்ற இலக்­கு­டன் ஆரம்­பிக்­கப்­பட்டு, 8,000 முகாம்­கள் வெற்­றி­க­ர­மாக முடிக்­கப்­பட்­டுள்­ளன. என்­னு­டைய தொகு­தி­யில் மட்­டு­மல்ல, சென்­னை­யில் இருக்­கின்ற பல்­வேறு தொகு­தி­க­ளில், அந்த முகாம்­கள் நடக்­கும் பொழுது நானே நேரில் சென்று, ஆய்­வு­செய்து இருக்­கி­றேன். நம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளும் ஆய்­வு­செய்து இருக்­கி­றார்­கள். ஒவ்­வொரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் அவர்­க­ளின் தொகு­தி­யில் அந்த முகாம் நடக்­கும்­போது, நேரில் சென்று, மக்­க­ளோடு பய­ணித்து முகாம்­களை நடத்தி இருக்­கி­றார்­கள். இந்த முகாம்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய வர­வேற்பு கிடைத்­தி­ருக்­கி­றது. இந்த முகா­மில் கொடுக்­கப்­ப­டு­கின்ற கோரிக்­கை­கள் முடிந்த அள­வுக்கு தீர்வு காண அரசு தரப்­பில், முத­ல­மைச்­சர் அவர்­கள் தொடர்ந்து நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றார்­கள். இது­வ­ரைக்­கும் 8,200 முகாம்­கள் முடிந்­தி­ருக்­கின்­றன. 18 லட்­சம் மனுக்­க­ளில், 12 லட்­சம் மனுக்­க­ளுக்கு தீர்வு காணப்­பட்­டுள்­ளது. இந்­தி­யா­வி­லேயே இது­வரை எந்த மாநில அர­சும் செய்­யாத ஒரு சாதனை. மேலும், நம் தலை­வர் அவர்­கள் அனைத்து அரசு அதி­கா­ரி­க­ளை­யும் தீர்­வு­காண முடி­யாத மனுக்­க­ளுக்கு உரிய விளக்­கம் அளிக்க வேண்­டும் என்­றும் அறி­வுரை கொடுத்து இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.3">எஸ்.சிவ­சுப்­பி­ர­ம­ணி­யன், திரு­வ­ரங்­கம் பகுதி, 1–வது வார்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">கேள்வி:பள்ளி மாண­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக மடிக்­க­ணினி வழங்­கும் திட்­டத்தை விரை­வில் வழங்க வேண்­டும் என்று தலை­வ­ருக்கு ஒரு ஆலோ­சனை கூறி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">துணை முத­ல­மைச்­சர் :நம் அரசு ஆட்­சிக்கு வந்த பிறகு, தமிழ்­நாட்டை கல்­வி­யில் எப்­படி எல்­லாம் உயர்த்த முடி­யுமோ, குழந்­தை­களை எப்­படி எல்­லாம் பள்­ளிக்­கூ­டத்­திற்கு வர­வ­ழைக்க முடி­யுமோ, பள்­ளிக்­கூ­டம் படிக்­கின்ற குழந்­தை­கள் எப்­படி எல்­லாம் உயர் கல்­விக்கு அனுப்ப முடி­யுமோ, அவர்­க­ளுக்கு எப்­படி எல்­லாம் வேலை வாய்ப்பு பெற்று தர முடி­யுமோ, அதை­யெல்­லாம் முடிந்த அள­விற்கு செய்­து­கொண்டு இருக்­கி­றோம். புது­மைப் பெண் திட்­டம், தமிழ்ப் புதல்­வன் திட்­ட­மெல்­லாம் மாண­வர்­க­ளின் கல்­விக்­காக உத­வு­கின்ற திட்­டங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">அதே­போல்­தான் முத­ல­மைச்­ச­ரின் இல­வச மடிக்­க­ணினி வழங்­கும் திட்­டத்தை தலை­வர் அவர்­கள் அறி­வித்­தார். அதற்கு இந்த நிதி­யாண்­டில் 2,000 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. மடிக்­க­ணினி வழங்­கு­வ­தற்­கான அடுத்­த­கட்ட பணி­கள், நடை­பெற்று வரு­கின்­றன. இன்­னும் இரண்டு மாதங்­க­ளில் நிச்­ச­யம் மாண­வர்­க­ளுக்கு மடிக்­க­ணினி வழங்­கும் திட்­டத்தை, நம் தலை­வர் அவர்­களே துவங்கி வைப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.3">சார்­லஸ், மணி­கண்­டன் ஒன்­றி­யம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">கேள்வி:முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் மாதம் ஒரு முறை­யா­வது கழ­கத் தொண்­டர்­க­ளுக்­குக் கடி­தம் மூல­மாக, தொடர்­பில் இருப்­பார். கழ­கத்­தி­ன­ருக்கு உற்­சா­கத்தை ஊட்­டு­வார். அதே­போல் நீங்­க­ளும் பணி­யாற்­று­வீர்­களா?.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">துணை முத­ல­மைச்­சர் :உங்­க­ளின் கருத்து சிறப்­பா­னது. ஆனால் கலை­ஞர் அவர்­க­ளுக்கு நிகர் கலை­ஞர் அவர்­கள் மட்­டும்­தான். அவ­ரைப் போல இன்­னொரு தலை­வர் கிடை­யவே கிடை­யாது. கண்­டிப்­பாக இந்த முன்­னெ­டுப்­பு­களை எல்­லாம், நம் தலை­வ­ரின் கட்­ட­ளையை ஏற்று, என்­னால் முடிந்த வரை நிச்­ச­ய­மாக செய்­வேன் என்­பதை இங்கே கூறிக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.3">சுந்­தர்­ராஜ், மணி­கண்­டம் ஒன்­றி­யம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">கேள்வி:தலை­வர் அவர்­கள் ஒன்­றிய அரசை எதிர்த்து, அவர்­க­ளுக்கு அடி­ப­ணி­யா­மல் ஆட்சி செய்­வது பற்றி….</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">துணை முத­ல­மைச்­சர் :நம் தலை­வர் அவர்­கள் தமிழ்­நாட்­டின் எந்த உரி­மை­யை­யும் இழக்­கக்­கூ­டாது என்­ப­தில் உறு­தி­யாக இருக்­கி­றார்.  தொகுதி மறு­வ­ரை­ய­றையை ஒன்­றிய அரசு கொண்டு வரும்­போது, இந்­தி­யா­வி­லேயே முதன் முறை­யாக நம் முத­ல­மைச்­சர் அவர்­கள்­தான் இப்­படி ஒரு பிரச்­சினை வரப்­போ­கி­றது.  ஒன்­றிய அரசு இதை திட்­ட­மிட்­டுள்­ளார்­கள் என்று ஆரம்­பித்­தார்.  அதன்­பி­ற­கு­தான் மற்ற முத­ல­மைச்­சர்­கள் எல்­லாம் இவர் சொல்­வது சரி என்று சொன்­னார்­கள்.  மற்ற முத­ல­மைச்­சர்­கள் எல்­லாம் தமிழ்­நாட்டு முத­ல­மைச்­சர் என்ன சொல்­கி­றார், தமிழ்­நாடு அரசு என்ன முடிவு எடுக்­கி­றது என்று பார்க்­கி­றார்­கள்.  நீட் தேர்வு, வரி பகிர்­வில் பார­பட்­சம், சிறப்பு வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தம், கல்­விக்­கான நிதி ஒதுக்­கு­வது, ஒரே நாடு ஒரே தேர்­தல், ஒன்­றிய அரசு பட்­ஜெட்­டில் தமிழ்­நாடு அர­சுக்கு பார­பட்­சம், இந்­தித் திணிப்பு, தொகுதி மறு­வ­ரை­யறை இப்­படி தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு எதி­ரான அனைத்து திட்­டங்­க­ளை­யும் ஒன்­றிய அரசு கொண்டு வரும்­போது, நம் முத­ல­மைச்­சர் அவர்­கள்­தான் அதற்கு முதல் ஆளாக எதிர்த்து குரல் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.3">ஜெயச்­சந்­தி­ரன், மணி­கண்­டம் ஒன்­றி­யம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">கேள்வி:இளை­ஞர்­க­ளுக்கு கழ­கத்­தில் கூடு­தல் வாய்ப்­பு­கள் வழங்க வேண்­டும் ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">துணை முத­ல­மைச்­சர் :ஜெயச்­சந்­தி­ரன் அவர்­க­ளுக்கு நன்றி.  வட்­டம், கிளை, பாகம் வாரி­யாக இன்­றைக்கு இளை­ஞர் அணிக்கு அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­களை நாங்­கள் ஒவ்­வொரு மாவட்­டம் வாரி­யாக, மாவட்ட, ஒன்­றிய, வட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளின் பரிந்­து­ரைப் பட்­டி­யலை எடுத்­துக்­கொண்டு, நேர்­கா­ணல் நடத்தி, முர­சொ­லி­யில் தினந்­தோ­றும் அறி­விப்­பு­கள் வந்­து­கொண்டு இருக்­கின்­றன.  நிர்­வா­கி­கள் தங்­கள் குடும்­பத்­தில் உள்­ள­வர்­களை கழ­கத்­தில் முழு­மை­யாக செயல்­பட வைத்­தாலே நமக்கு இணை­யான இளை­ஞர் ஆத­ரவு இருக்­கின்ற கட்சி, இந்­தி­யா­வி­லேயே இருக்­காது.  நம் வீட்­டில் இருந்து இளை­ஞர்­களை ஈடு­பட வைக்க வேண்­டும்.  நீங்­கள் அனை­வ­ரும் உங்­கள் பகு­தி­யில் உள்ள இளை­ஞர்­க­ளி­டம் சென்று கழக அர­சின் சாத­னை­களை அவர்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்த வேண்­டும்.  பல இளை­ஞர்­கள் நம் கழ­கத்­தில் சேர்­வ­தற்கு நீங்­கள் உறு­து­ணை­யாக இருக்க வேண்­டும்.  இளை­ஞர்­களை மூத்த முன்­னோ­டி­க­ளா­கிய நீங்­கள் வழி­ந­டத்த வேண்­டும்.  அவர்­க­ளுக்கு இயக்­கத்­தின் கொள்­கை­கள், வர­லாற்­றைச் சொல்­லித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.3">கன­க­ராஜ், மணி­கண்­டம் ஒன்­றி­யம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">கேள்வி:காலனி என்­றச் சொல் இன்­றும் பயன்­பாட்­டில் உள்­ளது.  அதை நீக்க உட­ன­டி­யாக நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும் ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">துணை முத­ல­மைச்­சர் :`காலனி’ என்ற பெயரை மாற்ற, நம் தலை­வர் அவர்­கள்­தான அர­சாணை வெளி­யிட்­டார்­கள்.   எப்­படி கலை­ஞ­ரின் ஆட்­சி­யில் சமத்­து­வப்­பு­ரத்­தைக் கட்டி, அனை­வ­ரும் சமம் என்­பதை உரு­வாக்­கி­னாரோ, அதே­போல் இன்­றைக்கு கலை­ஞர் வழி­யில் நம் தலை­வர் அவர்­கள் காலனி என்ற வார்த்­தையை ஒழிப்­ப­தற்­கான அர­சா­ணையை வெளி­யிட்டு இருக்­கி­றார்­கள்.  விரை­வில் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும் என்­ப­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.3">மரு­த­கு­மார், அந்­த­நல்­லூர் ஒன்­றி­யம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">கேள்வி:கிளைச் செய­லா­ளர்­களை நீங்­கள் அதி­கம் ஊக்­கு­விக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">துணை முத­ல­மைச்­சர் :நம் கழ­கத்­தைச் சேர்ந்த எந்­த­வொரு நிர்­வா­கி­யும், கழ­கப் பணி­க­ளில் சோர்­வ­டைந்­த­தில்லை.  சோர்­வ­டைந்­தால்­தான் நான் சென்று ஊக்­கு­விப்­ப­தற்­கான வேலை வரும்.  நம் கழக நிர்­வா­கி­கள் போன்று இந்­தி­யா­வில் எந்­த­வொரு கட்­சி­யி­லும் சிறப்­பாக செயல்­ப­டக்­கூ­டி­ய­வர்­கள் கிடை­யாது.  தற்­போது வட்ட, கிளைக் கழ­கச் செய­லா­ளர்­க­ளு­டன் புகைப்­ப­டம் எடுத்­துக்­கொள்ள வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான், நானே உங்­க­ளைத்­தேடி இங்க வந்­துள்­ளேன்.  தலை­வர் அவர்­க­ளுக்கு வட்ட, கிளைச் செய­லா­ளர்­கள் மீது தனிப்­பா­சம் உண்டு.  ஏனென்­றால், நீங்­கள்­தான் கழ­கத்­தின் ஆணி­வேர்.  நீங்­கள் இல்லை என்­றால் இந்த இயக்­கம் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.3">மனோ­கர், மணி­கண்­டம் ஒன்­றி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">கேள்வி:கிளைக் கழ­கச் செய­லா­ளர்­களை 6 மாத­துக்கு ஒரு முறை­யா­வது நீங்­கள் சந்­திக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">துணை முத­ல­மைச்­சர் :டாக்­டர் கலை­ஞர், நம் தலை­வர் அவர்­க­ளைப்­போல தொடர்ந்து நானும் கிளை, வட்­டக் கழ­கச் செய­லா­ளர்­களை சந்­தித்து வரு­கி­றேன்.  நீங்­கள் எப்­போது சென்­னைக்கு வந்­தா­லும், நான் உங்­களை சந்­திப்­பேன்.  இளை­ஞர் அணி­யின் தலைமை அலு­வ­ல­கம், அன்­ப­கத்­தின் கத­வு­கள் திறந்தே இருக்­கும்.  அடுத்த 5 மாதங்­கள் பூத் கமிட்டி நிர்­வா­கி­க­ளி­லி­ருந்து, மாவட்­டக் கழக நிர்­வா­கி­கள் வரை அனை­வ­ரும் ஒவ்­வொரு நாளும், ஒவ்­வொரு மணித்­து­ளி­யும் மிக­மிக முக்­கி­யம் என்­பதை நீங்­கள் உணர வேண்­டும். நம் கழக ஆட்சி மீண்­டும் அமைய வேண்­டும் என்­றால், நம் தலை­வர் அவர்­கள் தொடர்ந்து இரண்­டா­வது முறை­யாக முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யில் அமர வேண்­டு­மென்­றால், நீங்­கள் அத்­த­னை­பே­ரும் இதே உணர்­வோ­டும், எழுச்­சி­யோ­டும் மக்­களை சந்­தித்து பிரச்­சா­ரத்தை மேற்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">தலை­வர் அவர்­கள் நாம் 200 தொகுதி வெற்­றி­பெற வேண்­டும் என்று இலக்கு கொடுத்­தி­ருக்­கி­றார்.  நாம் அனை­வ­ரும் அடுத்த 5 மாதம் இந்­தத் தேர்­தல் பணி­யில் ஈடு­பட்­டோம் என்­றால், 200 இல்லை 200–க்கும் அதி­க­மான தொகு­தி­க­ளில் நம் திரா­விட முன்­னேற்­றக் கழக அணி நிச்­ச­யம் வென்று காட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">இலக்கு 200 க்கு முதல் தொகு­தி­யாக இந்த திரு­வ­ரங்­கம் தொகுதி நிச்­ச­ய­மாக அமை­யும்.  அதை நீங்­கள் செய்­து­காட்ட வேண்­டும்.  திரு­வ­ரங்­கம் மட்­டு­மல்ல, மத்­திய மாவட்­டத்­துக்கு உட்­பட்ட மூன்று தொகு­தி­யி­லும் சென்ற முறை வாங்­கிய வாக்கு வித்­தி­யா­சத்­தை­விட, இந்த முறை அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்தை நீங்­கள் வாங்கி கொடுக்க வேண்­டும். தலை­வர் அவர்­கள் உங்­கள் மீது நம்­பிக்கை வைத்­துள்­ளார்.  அந்த நம்­பிக்­கையை நீங்­கள் நிறை­வேற்­றிக் காட்­டுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">இந்த சிறப்­பான நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்த முதன்­மைச் செய­லா­ளர் அண்­ணன் நேரு அவர்­க­ளுக்­கும், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளுக்­கும், வந்­தி­ருக்­கின்ற அனைத்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும், அனைத்து நிர்­வா­கி­க­ளுக்­கும், கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­கள் அத்­த­னை­பே­ருக்­கும் நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.3">தமிழ்­நாடு போரா­டும், தமிழ்­நாடு வெல்­லும்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>