<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,1500" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 10 2025 04:00:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="10102025-VLR-06" position.sequence="06" ex-ref="10102025-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20"> சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">10.10.2025</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="33">எத்­தனை சூழ்ச்­சி­கள் வந்­தா­லும், 2026 தேர்­த­லில் மீண்­டும்</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="75">உத­ய­சூ­ரி­யன் உதிப்­பதை யாரா­லும் தடுக்க முடி­யாது!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">திருச்­சி­யில் நடை­பெற்ற ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில்</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் எழுச்சி உரை!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup448102_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup448031_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="mdspeech_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">திருச்சி,அக்.10 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">திருச்சி, கலை­ஞர் அறி­வா­ல­யத்­தில், கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் திரு­வ­ரங்­கம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யைச் சேர்ந்த கழக நிர்­வா­கி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">அப்­போது அவர், ``எத்­தனை சூழ்ச்­சி­கள் வந்­தா­லும், 2026 தேர்­த­லில் மீண்­டும் உத­ய­சூ­ரி­யன் உதிப்­பதை யாரா­லும் தடுக்க முடி­யாது  என்று  குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­ வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">திருச்சி மத்­திய மாவட்­டத்­துக்கு வருகை தந்து, திரு­வ­ரங்­கம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யைச் சேர்ந்த கழக நிர்­வா­கி­கள், பூத் கமிட்டி நிர்­வா­கி­கள், அணி­க­ளின் நிர்­வா­கி­கள், உங்­கள் அத்­தனை பேரை­யும் தனித்­த­னி­யா­கப் பல­முறை நேர­டி­யா­கச் சந்­தித்­தி­ருக்­கி­றேன்.  இன்று அனை­வ­ரை­யும் ஒரே இடத்­தில், நம் கலை­ஞர் அரங்­கத்­தில் சந்­திப்­ப­தில், உண்­மை­யி­லேயே மிகுந்த பெரு­மை­யும் மகிழ்ச்­சி­யும் அடை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">கழ­கத்­தின் திருப்­பு­முனை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">திருச்சி மாவட்­டத்­துக்கு எப்­போது வந்­தா­லும் ஒரு தனி உற்­சா­க­மும் தெம்­பும் தானாக வந்­து­வி­டும்.  அது, திருச்­சிக்­கான சிறப்பு.  திருச்சி என்று சொன்­னால், நம் அனை­வ­ருக்­கும் ஞாப­கம் வரு­வது கழ­கத்­தின் திருப்­பு ­முனை என்­றால், அது திருச்­சி­தான்.  தமிழ்­நாட்­டின் வரை­ப­டத்­தில் மட்­டும் மத்­தி­யில் இருப்­பது திருச்சி கிடை­யாது. தமிழ்­நாட்டு அர­சி­ய­லி­லும் மத்­தி­யில் இருப்­பது திருச்­சி­தான். திருச்சி என்று சொன்­னால், `தீரர் கோட்டை’ என்று சொல்­வார்­கள்.  இன்று நம் கழ­கம் 75 ஆண்­டு­க­ளைக் கடந்து, பவ­ள­வி­ழா­வைக் கொண்­டா­டி­விட்டு, 76–வது ஆண்­டில் நாம் அடி­யெ­டுத்து வைத்­தி­ருக்­கி­றோம்.  பவ­ள­விழா நேரத்­தில் நாம் அனை­வ­ரும் ஒன்­றா­கச் சந்­திக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">இந்த 75 வரு­டங்­க­ளாக எத்­த­னையோ அவ­தூ­று­க­ளை­யும் பொய் குற்­றச்­சாட்­டு­க­ளை­யும், வதந்­தி­க­ளை­யும், பிரச்­சா­ரங்­க­ளைச் செய்­து­பார்த்­தும், இன்­றைக்­கும் தி.மு.க–வை எதி­ரி­க­ளால் தொட்­டுக்­கூட பார்க்க முடி­ய­வில்லை என்­றால், அதற்கு இங்கு வந்­தி­ருக்­கின்ற கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­க­ளா­கிய நீங்­கள்­தான் கார­ணம். 75 வரு­டங்­கள் ஆகி­யும் இன்­றைக்­கும் அதே இள­மை­யோ­டும் அதே துடிப்­போ­டும், அதே வேகத்­தோ­டும் உறு­தி­யோ­டும், வலி­மை­யோ­டும் இருக்­கி­றது என்­றால், அதற்­கும் கார­ணம், வந்­தி­ருக்­கின்ற உடன்­பி­றப்­பு­கள் நீங்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">தி.மு.க என்ற மிகப்­பெ­ரிய கோட்­டைக்கு அடித்­த­ள­மாக இருந்து, அந்­தக் கோட்­டைக்கு எந்­தச் சேதா­ர­மும் வரா­மல், அதைக் காத்­து­நிற்­பது உடன்­பி­றப்­பு­க­ளா­கிய நீங்­கள்­தான்.  நீங்­கள் இல்­லா­மல் நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் கிடை­யாது.  நீங்­கள் இல்­லா­மல் கலை­ஞர், நம் தலை­வர், இப்­போது இருக்­கின்ற திரா­விட மாடல் அர­சும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">கலை­ஞ­ருக்­கும் ஒரு பெருமை உண்டு.  எந்த அர­சி­யல் தலை­வ­ருக்­கும் இல்­லாத பெருமை, அவ­ருக்கு உண்டு என்று நாம் பெரு­மை­யா­கச் சொல்­வோம்.  அவர் நின்ற தேர்­த­லில் எல்­லாம் வென்ற ஒரே தலை­வர், நம் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள்­தான்.  நம் இயக்­கம்­கூட சில வெற்றி வாய்ப்­பு­களை இழந்­தி­ருக்­கி­றது.  அந்த நேரத்­தி­லும் வெற்­றி­பெற்ற ஒரே தலை­வர், தன் அர­சி­யல் வாழ்­வில் தோல்­வியே சந்­திக்­காத ஒரே தலை­வர், நம் தலை­வர் கலை­ஞர் அவர்­கள்­தான். அதே­போல், நம் கழ­கத் தலை­வர் அவர்­க­ளுக்கு ஒரு பெருமை உண்டு.  நம் தலை­வர் அவர்­கள் கழ­கத்­தின் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்று, கழ­கம் சந்­தித்த அனைத்­துத் தேர்­தல்­க­ளி­லும் வெற்­றி­பெற்ற ஒரே தலை­வர், நம் கழ­கத் தலை­வர் அவர்­கள்­தான்.  அதற்கு மிக­மிக முக்­கிய கார­ணம்.  50 சத­வி­கி­தம் நம் தலை­வ­ரின் உழைப்பு என்­றால், மீதி­யுள்ள 50 சத­வி­கி­தம், இங்கு வந்­துள்ள உங்­க­ளின் உழைப்­பும்­தான் அந்த வெற்­றிக்­குக் கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">திரா­விட மாடல் அரசு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">குறிப்­பாக, 2021–ஆம் ஆண்டு சட்­ட­மன்­றத் தேர்­த­லில், உங்­க­ளின் கடின உழைப்­பால்­தான் நம் திரா­விட மாடல் அரசு அமைந்­தது என்று பெரு­மை­யாக நாம் சொல்­ல­லாம்.  திரா­விட மாடல்அரசு அமைந்த இந்த நான்­கரை வரு­டங்­க­ளில், இந்­தி­யாவே திரும்­பிப் பார்க்­கிற அள­விற்கு சிறப்­பான ஆட்­சியை, ஏரா­ள­மான திட்­டங்­களை நம் தலை­வர் அவர்­கள் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­கா­கக் கொடுத்­தி­ருக்­கி­றார்.   சில­வற்றை மட்­டும் இங்கு உங்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">ஆட்­சிக்கு வந்­த­வு­டன் நம் தலை­வர் அவர்­கள், முதல் நாள் ஐந்து கையெ­ழுத்­து­க­ளைப் போட்­டார். அதில் முதல் கையெ­ழுத்து, மக­ளி­ருக்­குக் கட்­ட­மில்லா விடி­யல் பய­ணத்­திற்­கான கையெ­ழுத்­து­தான்.  இந்­தத் திட்­டத்­தில், இந்த நான்­கரை வரு­டத்­தில் 800 கோடி  பய­ணங்­களை மக­ளிர் மேற்­கொண்­டுள்­ளார்­கள்.  ஒவ்­வொரு மக­ளி­ரும் மாதந்­தோ­றும் 900 ரூபா­யி­லி­ருந்து 1,000 ரூபாய் வரை சேமிக்­கி­றார்­கள்.  இந்த திருச்சி மாவட்­டத்­தில் மட்­டும் 40 கோடிக்­கும் அதி­க­மான பய­ணங்­களை, இந்த மக­ளிர் விடி­யல் திட்­டத்­தின் மூலம் மக­ளிர் மேற்­கொண்­டுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">கல்­வி­யில் சிறந்த தமிழ்­நாடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">அர­சுப் பள்­ளி­யில் படித்த மாணவ, மாண­வி­கள் உயர்­கல்வி படிக்க வைக்க வேண்­டும் என்று நம் தலை­வர் அவர்­கள் கொண்­டு­வந்த திட்­டம்­தான், புது­மைப்­பெண் திட்­டம், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம்.  இந்த திட்­டத்­தின் மூலம் 8 லட்­சம் மாணவ, மாண­வி­க­ளுக்கு ஊக்­கத்­தொ­கை­யாக மாதம் ஆயி­ரம் ரூபாயை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் வழங்கி வரு­கி­றார்.  இந்த திருச்சி மாவட்­டத்­தில் மட்­டும் 14 ஆயி­ரம் மாண­வர்­க­ளுக்கு கல்வி உத­வித்­தொகை வழங்­கப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">இந்த ஆண்­டுக்­கான உத­வித்­தொகை வழங்­கும் `கல்­வி­யில் சிறந்த தமிழ்­நாடு’ நிகழ்ச்சி, கிட்­டத்­தட்ட 25 நாட்­க­ளுக்கு முன்பு, சென்­னை­யில், மிகுந்த உற்­சா­கத்­தோடு, மாண­வர்­க­ளின் பங்­க­ளிப்­போடு நடந்­தது.  அந்த நிகழ்ச்­சி­யில், தெலங்­கா­னா­வின் முத­ல­மைச்­சர் ரேவந்த் ரெட்டி அவர்­கள் கலந்­து­கொண்டு சிறப்­பித்­தார்­கள்.  அப்­போது `தமிழ்ப்­பு­தல்­வன், புது­மைப்­பெண்’ என்ற இரண்டு திட்­டங்­க­ளை­யும் தெலங்­கா­னா­வில் அடுத்த ஆண்டு முதல் அறி­மு­கப்­ப­டுத்­தப் போகி­றேன், என்று பெரு­மை­யா­கச் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம்.  ஒரு­நாள், முத­ல­மைச்­சர் அவர்­கள், ஆய்­வுக்­காக ஒரு பள்­ளிக்­குச் சென்­றார்.  அங்கு ஒரு குழந்தை மிக­வும் சோர்­வாக உட்­கார்ந்து இருந்­தது.  அந்­தக் குழந்­தையை அழைத்­துப் பேசி­னார். `என்­னப்பா ஏன் சோர்­வாக இருக்­கி­றாய்?’ என்று கேட்­டார்.  அந்­தக் குழந்தை `ஐயா காலை­யி­லி­ருந்து சாப்­பி­ட­வில்லை.  பசி­யோடு இருக்­கி­றேன்’ என்று சொன்­னது.  அன்­றைக்கு, தலை­வர் இந்­தத் திட்­டத்தை செயல்­ப­டுத்­தி­னார். இனி­மேல் ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்­பு­வரை படிக்­கின்ற குழந்­தை­கள் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்­தால், முத­லில் தர­மான காலை உணவு, அதன்­பி­றகு, தர­மான கல்வி வழங்­கப்­ப­டும் என்று அறி­வித்­தார்.  18 லட்­சம் மாண­வர்­கள் ஒவ்­வொரு நாளும் முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டத்­தின் மூலம் பயன்­பெ­று­கி­றார்­கள்.  இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பு அந்­தத் திட்­டத்தை அரசு உத­வி­பெ­றும் பள்­ளி­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தி­னார்.  இந்த திருச்சி மாவட்­டத்­தில் மட்­டும் 78 ஆயி­ரம் குழந்­தை­கள் இந்த திட்­டத்­தின் மூலம் பயன்­பெற்று வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">பஞ்­சாப் மாநில முதல்­வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">இந்த திட்­டத்தை விரி­வு­ப­டுத்­தும் நிகழ்ச்­சிக்கு வந்த பஞ்­சாப் மாநி­லத்­தின் முத­ல­மைச்­சர் பக­வான் சிங் அவர்­கள் சென்­னைக்கு வந்து, அந்த நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார்.  அப்­போது, இந்­தத் திட்­டத்­தின் சிறப்­பைப் பார்த்து, இந்­தத் திட்­டத்தை என் மாநி­லத்­தி­லும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­போ­கி­றேன் என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">எல்­லா­ரும் கேட்­கி­றார்­களே, திரா­விட மாடல் ஆட்சி என்று பெரு­மை­யா­கச் சொல்­கி­றீர்­களே திரா­விட மாடல் ஆட்சி என்­றால் என்­ன­வென்று, இது­தான் திரா­விட மாடல் ஆட்சி.  மற்ற மாநி­லங்­க­ளுக்­கும், மற்ற முத­ல­மைச்­சர்­க­ளுக்­கும் எடுத்­துக்­காட்­டாக இருப்­ப­து­தான், நம் முத­ல­மைச்­ச­ரும், நம் திரா­விட மாடல் அர­சும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொ­கைத் திட்­டம்.  நாம் ஆட்­சிக்கு வரும்­போது, கடும் நிதி நெருக்­கடி இருந்­தது.  கிட்­டத்­தட்ட 6 மாத காலம் நாம் கொரோனா பெருந்­தொற்­று­டன் போரா­டிக்­கொண்டு இருந்­தோம்.  எதிர்க்­கட்­சி­கள் எல்­லாம் இந்­தத் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தவே முடி­யாது என்று சொன்­னார்­கள்.  ஆனால், நம் தலை­வர் அவர்­கள், இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்பு 2023– ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் பிறந்த நாளில் இந்­தத் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.  கிட்­டத்­தட்ட 1 கோடியே 20 லட்­சம் மக­ளி­ருக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய், நம் தலை­வர் அவர்­கள் கொடுத்­துள்­ளார்­கள்.  25 மாதங்­கள் இந்த ஆயி­ரம் ரூபாயை நம் தலை­வர் அவர்­கள் வழங்­கி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">சில இடங்­க­ளில் இந்த கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை வர­வில்லை என்று சில குறை­கள் இருக்­கின்­றன.  அதை நாங்­கள் முத­ல­மைச்­ச­ரி­டன் சொன்­னோம்.  உடனே தலை­வர் அவர்­கள், உங்­க­ளு­டன் ஸ்டாலின் என்ற முகாம்­களை நடத்­தச் சொன்­னார்.  அந்த முகாம்­க­ளில் 60 சத­வி­கித கோரிக்கை மக­ளிர் உரி­மைத்­தொகை வேண்­டும் என்ற கோரிக்­கை­தான்.  அந்­தக் கோரிக்கை மனுக்­கள் இப்­போது வாங்­கப்­பட்டு, பரி­சீ­ல­னை­யில் இருக்­கின்­றன.  நிச்­ச­யம் தலை­வர் அவர்­கள் அதில் சில தளர்­வு­க­ளைக் கொடுத்­துள்­ளார்.  இன்­னும் இரண்டு மாதங்­க­ளில் இன்­னும் கூடு­த­லான மக­ளி­ருக்கு கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொ­கையை நிச்­ச­ய­மாக நம் தலை­வர் அவர்­கள் வழங்­கு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">திரு­வ­ரங்­கம் தொகுதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">இந்த திரு­வ­ரங்­கம் தொகு­திக்­குப் பல்­வேறு திட்­டங்­களை நம் அரசு செய்­தி­ருக்­கி­றது.  அதை­யும் இந்த நேரத்­தில் நினை­வுப்­ப­டுத்த விரும்­பு­கி­றேன். திரு­வ­ரங்­கத்­தில் 11 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பேருந்து நிலை­யம் அமைக்க அடிக்­கல் நாட்­டப்­பட்டு, கிட்­டத்­தட்ட 90 சத­வி­கித வேலை­கள் முடி­வ­டைந்­து­விட்­டன.  விரை­வில், அது  திறந்­து­வைக்­கப்­பட்டு, மக்­கள் பயன்­பாட்­டுக்கு வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">திருச்சி, காவேரி பாலத்­தில் 6 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், மரா­மத்­துப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. 100 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் காவேரி ஆற்­றின் குறுக்கே பாலம் கட்­டும் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">இந்­தி­யா­வி­லேயே நம்­பர் ஒன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">மணப்­பாறை மாவட்­டத் தலைமை மருத்­து­வ­னை­யில் ரூபாய் 20 கோடி மதிப்­பீட்­டில் அவ­சர சிகிச்சை பிரி­வுக்­காக புதிய கட்­ட­டங்­கள் கட்­டப்­பட்டு வரு­கின்­றன. கண்­ணு­டை­யான்­பட்டி, சமுத்­தி­ரன் இடையே மாமுண்டி ஆற்­றின் குறுக்கே உயர்­மட்ட பாலம் கட்­டு­வ­தற்­கான முதற்­கட்­டப் பணி­கள் தொடங்கி, வேக­மாக நடை­பெற்று வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">பெரி­யப்­பட்டி பகு­தி­யில் அரி­யாற்­றின் குறுக்கே ஒரு உயர்­மட்ட பாலம், தொகுதி முழு­வ­தும் 7 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் புதிய பள்­ளிக் கட்­ட­டங்­கள், அரசு கலைக் கல்­லூ­ரிக்கு 4 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் புதிய வகுப்­ப­றை­கள், திருச்சி தேசிய சட்­டப் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு 18 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் விடுதி, நமது  அர­சால் கட்­டப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">இப்­படி நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் ஒவ்­வொரு தொகு­தி­யாக பார்த்­துப் பார்த்து செய்­து­கொண்டு இருக்­கி­றார்.  அத­னால், இன்­றைக்கு இந்­தி­யா­வி­லேயே நம்­பர் ஒன் முத­ல­மைச்­ச­ராக நம் முத­ல­மைச்­சர் இருக்­கி­றார். பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் 11 சத­வி­கித வளர்ச்­சி­ய­டைந்து, இந்­தி­யா­வி­லேயே முதன்மை மாநி­ல­மாக நம் தமிழ்­நாடு திகழ்ந்­து­ கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">தமிழ்­நாட்­டின் இந்த வளச்­சி­யைப் பிடிக்­கா­மல்­தான் ஒன்­றிய பாசிச பா.ஜ.க அரசு, இங்கு இருக்­கின்ற அடி­மை­க­ளு­டன் சேர்ந்து பிரச்­சி­னை­கள் மற்­றும் சூழ்ச்­சி­க­ளைச் செய்­கி­றார்­கள்.  அந்­தத் தடை­களை எல்­லாம் உடைத்து, நம் முத­ல­மைச்­சர் அவர்­கள், ஒரு சிறப்­பான ஆட்­சியை நம் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­கா­கக் கொடுத்­துக் கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">மாநில உரி­மை­யும் பறிப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">நிதி உரிமை, கல்வி உரிமை, மொழி உரிமை, மாநில உரி­மை­யைப் பறிக்­கின்ற வேலை­க­ளில் ஒன்­றிய பாசிச பா.ஜ.க. அரசு தொடர்ந்து செய்­து­கொண்டு இருக்­கி­றது. தொகுதி மறு­வ­ரை­ய­றை­யைக் கொண்­டு­வந்து, 39 நாடா­ளு­மன்­றத் தொகு­தி­க­ளைக் குறைத்து, 32 தொகு­தி­யா­கக் குறைக்க முயற்சி செய்­கி­றார்­கள்.  இதை­யெல்­லாம் எதிர்த்து குரல் கொடுக்­கின்ற இந்­தி­யா­வி­லேயே ஒரே தலை­வ­ராக நம் தலை­வர் அவர்­கள் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">ஒன்­றிய அரசு, புதிய கல்­விக்­கொள்­கை­யைக் கொண்­டு­வந்து, இதை ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று சொன்­னது.  புதிய கல்­விக்­கொள்­கை­யின் மூல­மாக இந்­தி­யை­யும், சமஸ்­கி­ருத்­தத்­தை­யும் குறுக்கு வழி­யில் தமிழ்­நாட்­டுக்­குள் நுழைக்­கப் பார்த்­தார்­கள்.  குலக்­கல்­வித் திட்­டத்­தைக் கொண்­டு­வ­ரப் பார்த்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">பல அணி­கள் இருக்­கின்­றன</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">நீங்­கள் புதிய கல்­விக்­கொள்­கையை ஏற்­றுக்­கொண்­டால்­தான் தமி­ழ­நாட்டு பள்­ளிக் கல்­வித்­து­றைக்கு வர­வேண்­டிய 2,500 கோடி ரூபா­யைத் தரு­வேன் என்று ஒன்­றிய அமைச்­சர் நேர­டி­யா­கச் சொன்­னார்.  ஆனால், நம் முத­ல­மைச்­சர் அவர்­கள், `நீங்­கள் 2,500 கோடி ரூபாய் இல்லை, 10,000 ஆயி­ரம் கோடி ரூபாய் கொடுத்­தா­லும் தமிழ்­நாட்­டுக்­குள் என்­றைக்­கும் இந்­தி­யை­யும், சமஸ்­கி­ரு­தத்­தை­யும் திணிக்­க­விட மாட்­டேன்.  குலக்­கல்­வித் திட்­டத்தை தமிழ்­நாட்­டுக்­குள் அனு­ம­திக்க மாட்­டேன்’ என்று நம் தலை­வர் அவர் சட்­டப் போராட்­டத்தை நடத்­தி­னார்.  அந்த சட்­டப் போராட்­டத்­தால் நம் கல்வி உரி­மையை வென்று, ஒன்­றிய அரசு தமிழ்­நாட்­டுக்­குத் தர­வேண்­டிய நிதியை இன்று கொடுத்­துள்­ளது.  இது நம் தலை­வ­ருக்­குக் கிடைத்த வெற்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">நம் கழ­கத்­தில் 25 அணி­கள் இருக்­கின்­றன.  இளை­ஞர் அணி, மாண­வர் அணி, வழக்­க­றி­ஞர் அணி, மக­ளிர் அணி, தொண்­டர் அணி, தக­வல் தொழில்­நுட்ப அணி  என்று 25 அணி­கள் இருக்­கின்­றன.  ஆனால், அவற்­றை­விட அதி­க­மாக அணி­கள் அ.தி.மு.க–வில் இருக்­கின்­றன.  ஈ.பி.எஸ். அணி, ஓ.பி.எஸ். அணி, டி.டி.வி அணி, சசி­கலா அணி, செங்­கோட்­டை­யன் அணி, தீபா அணி, தீபா டிரை­வர் அணி என்று பல அணி­கள் இருக்­கின்­றன.  ஒவ்­வொரு நாளும் ஒவ்­வொரு அணி உரு­வா­கி­றது.  இந்த திருச்­சி­யில் வெள்­ள­மண்டி நட­ரா­ஜன் அணி, பரஞ்­ஜோதி அணி, வளர்­மதி அணி என்று இங்கு மூன்று அணி­கள் தனி­யாக இயங்­கி­கொண்டு இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">பா.ஜ.க. வுடன் இனி எந்­தக் காலத்­தி­லும் கூட்­டணி கிடை­யாது என்று நான்கு மாத­துக்கு முன்பு சொன்­னார் எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள்.  இன்று அதே எடப்­பாடி பழ­னி­சாமி, `எப்­போ­தும் பா.ஜ.க.வுக்கு நன்­றிக் கட­னு­டன் இருப்­பேன்’ என்று, அதே வாய் இன்று சொல்­கி­றது.  நன்­றி­யைக் காட்­டு­வ­தற்கு நான்கு கார்­கள் மாறி மாறிச் செல்­கிற ஒரே நபர் நம் எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள்­தான்.  காரை மாற்­று­வ­தும், கால்­களை மாற்­று­வ­தும் அவ­ருக்கு புதிது கிடை­யாது. இன்று நிரந்­த­ர­மாக மோடி­யின் கால்­க­ளில் சர­ண­டைந்­துள்­ளார், எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள்.  இன்று தமிழ்­நாட்டு மக்­கள் அவரை எடப்­பாடி பழ­னி­சாமி என்று அழைப்­பது கிடை­யாது.  செல்­ல­மாக, `முக­மூடி பழ­னி­சாமி’ என்­று­தான் அழைக்­கி­றார்­கள்.  ஏனென்­றால், டெல்­லிக்கு அவர் செல்­லும்­போது சிரித்­துக்­கொண்டே சென்­றார்.  உள்ளே என்ன நடந்­தது என்று யாருக்­கும் தெரி­ய­வில்லை.  வெளியே வரும்­போது, முகத்தை மூடிக்­கொண்டே வந்­தார் என்று பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் கண்­டு­பி­டித்­து­விட்­டார்­கள்.   அவ­ரி­டம் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் ஏன் முகத்தை மூடிக்­கொண்டு வந்­தீர்­கள் என்று கேட்­டால், அவர் உடனே முகத்தை மூடி­யது தப்பா, முகம் வியர்த்­தது என்று சொன்­னார்.  அப்­படி முகம் வியர்க்­கும் வரை என்ன நடந்­தது உள்ளே? அவ­ருக்­கும் முகம் வியர்க்­க­வில்லை, அவ­ரின் கண்­கள் வியர்த்து இருக்­கின்­றன என்று நான் சொல்­கி­றேன்.  தப்பு செய்­கி­ற­வர்­கள்­தான் முகத்தை மூடிக்­கொண்டு திருட்­டுத்­த­ன­மாக வரு­வார்­கள்.  அப்­ப­டிப்­பட்ட எதிர்­கட்­சித் தலை­வரை தமிழ்­நாடு பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள், மூன்று மாதங்­க­ளுக்கு முன்பு பேருந்தை எடுத்­துக்­கொண்டு மக்­களை சந்­திக்க கிளம்­பி­னார்.  பாதி பிரச்­சா­ரத்தை முடித்­து­விட்­டார்.  பிரச்­சா­ரத்­தைத் தொடங்­கும்­போது இருந்த கூட்­டத்­தில் பாதி பேர்­தான் இப்­போது இருக்­கி­றார்­கள்.  பிரச்­சா­ரத்தை முடிக்­கும்­போது அவ­ரும், டிரை­வ­ரும்­தான் வரு­வார்­கள் என்று நம்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">எப்­ப­டி­யா­வது தமிழ்­நாட்­டுக்­குள் நுழைய வேண்­டும் என்று பா.ஜ.க, அ.தி.மு.க–வின் துணை­யோடு வந்­து­கொண்டு இருக்­கி­றது.  பழைய அடிமை பழ­னி­சாமி பற்­ற­வில்லை என்று இன்­றைக்கு புதிய அடி­மை­க­ளை­யும் பா.ஜ.க. வலை­வீசி தேடிக்­கொண்டு இருக்­கி­றது.  நான் யாரைச் சொல்­கி­றேன் என்­பது உங்­க­ளுக்­குத் தெரி­யும்.  அடி­மை­கள் சிக்­கு­வார்­கள், ஆனால், எத்­தனை அடி­மை­கள் வந்­தா­லும் கருப்­பு–­சி­வப்பு கரை வேட்டி கட்­டி­யி­ருக்­கின்ற தி.மு.க.காரன் இருக்­கி­ற­வ­ரைக்­கும் நீங்­கள் தமிழ்­நாட்­டுக்­குள் கால் வைக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">பா.ஜ.க–வின் சதி­களை எல்­லாம் முறி­ய­டிக்­கப்­போ­வது திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் உடன்­பி­றப்­பு­கள் நீங்­கள்­தான்.  அனை­வ­ரும் தேர்­தல் பிரச்­சார வேலை­களை ஆரம்­பித்­து­விட்­டார்­கள்.  நாம் எல்­லோ­ருக்­கும் முன்பே ஆரம்­பித்­து­விட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">நாம், நம் தேர்­தல் பிரச்­சா­ரத்தை ஆரம்­பித்­து­விட்­டோம்.  பா.ஜ.க. அவர்­க­ளின் பிரச்­சா­ரத்தை ஆரம்­பித்­து­விட்­டார்­கள்.  முக்­கி­ய­மாக, இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு அவ­ரின் தேர்­தல் பிரச்­சா­ரத்தை ஆரம்­பித்­துள்­ளார்.  அவர் வேறு யாரும் இல்லை, நம் ஆளு­நர் திரு. ஆர்.என்.ரவி அவர்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">நாம் தமிழ்­நாடு போரா­டும், தமிழ்­நாடு வெல்­லும் என்று சொன்­னால், நீங்­கள் யாரு­டன் போரா­டப்­போ­கி­றீர்­கள், யாரை வெல்­லப்­போ­கி­றீர்­கள் என்று அவர் கேட்­கி­றார்.  தமிழ்­நாடு யாரு­டன் போரா­டும் என்று கேட்­டி­ருக்­கி­றார்.  தமிழ்­நாடு 4 வரு­ட­மாக உங்­க­ளு­டன்­தான் போரா­டிக்­கொண்டு இருக்­கி­றது.  நிச்­ச­யம், தமிழ்­நாடு உங்­க­ளு­டன் போராடி, வென்று காட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">மக்­கள் மன­தில் நம்­பிக்கை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள், புதி­தாக ஒரு விஷ­யத்­தைச் சொல்லி இருக்­கி­றார்.  அ.தி.மு.க–தான் இன்­றைக்கு மக்­கள் மன­தில் முதல் இடத்­தில் இருக்­கி­றது என்று கண்­டு­பி­டித்து இருக்­கி­றார்.  இரண்­டா­வது இடத்­தில்­தான் மற்ற கட்­சி­கள் எது இருக்­கி­றது என்று தெரி­யா­மல் போட்­டி­போட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள் என்று பேசி­யி­ருக்­கி­றார்.  உண்­மை­யைச் சொல்ல வேண்­டும் என்­றால் அ.தி.மு.க–வின் உள்­ளே­தான் இரண்­டா­வது இடத்­துக்கு போட்­டி­கள் நடந்­து­கொண்டு இருக்­கின்­றன.  ஏனென்­றால், முத­லி­டத்­தில் அமித்­ஷா­வும், மோடி­யும் இருக்­கி­றார்­கள்.  இரண்­டா­வது இடத்­திற்­கு­தான் எடப்­பாடி பழ­னி­சா­மியா, ஓ.பி.எஸ்ஸா, சசி­க­லாவா, செங்­கோட்­டை­யனா என்று அவர்­க­ளுக்­குள்­தான் போட்டி நடந்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">மக்­க­ளைக் காப்­போம், தமி­ழ­கத்தை மீட்­போம் என்று எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் சொல்­லிக்­கொண்டு இருக்­கி­றார்.  முத­லில் அவர் பா.ஜ.க–வி­டம் இருந்து அ.தி.மு.க–வை மீட்க வேண்­டும். அந்­தப் பணி­யில் அவர் இறங்க வேண்­டும்.  இப்­ப­டிப்­பட்ட அ.தி.மு.க–வும், பா.ஜ.க–வும் ஆட்­சிக்கு வந்­தால், தமிழ்­நாட்டை என்ன நிலை­மைக்­குக் கொண்டு விடு­வார்­கள் என்று நம் அனை­வ­ருக்­கும் தெரி­யும்.  நான்­கரை வரு­டத்­தில் மாநில உரி­மை­களை மீட்­டுள்­ளோம். ஆகவே, இதை­யெல்­லாம் தடுக்­க­வேண்­டிய பொறுப்பு யாருக்கு இருக்­கி­றதோ இல்­லையோ நம் கழக உடன்­பி­றப்­பு­கள் உங்­கள் அத்­தனை பேருக்­கும் இருக்­கி­றது என்­பதை நீங்­கள் அனை­வ­ரும் உணர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் இந்த அடி­மை­க­ளை­யும், பாசிஸ்ட்­டு­க­ளை­யும் மறு­ப­டி­யும் ஓட ஓட விரட்டி அடிக்க வேண்­டும்.  மாவட்ட, ஒன்­றிய, பேரூர், நகர, பகுதி, வார்டு, கிளைக்­க­ழக நிர்­வா­கி­கள் அத்­த­னை­பே­ரும் அடுத்த 5 மாத காலம் மக்­க­ளோடு மக்­க­ளாக நெருங்­கிப் பழக வேண்­டும்,  அவர்­க­ளின் குறை­க­ளைக் கேட்க வேண்­டும்.  நம்­மால் செய்ய முடிந்­ததை உடனே செய்து கொடுக்க வேண்­டும். மற்­ற­வர்­கள் மாதிரி நாம் ஆட்டு மந்­தை­கள் கிடை­யாது.  நாம் கொள்­கைக் கூட்­டம் என்­பதை நீங்­கள் உணர வேண்­டும்.  எந்த நிகழ்ச்­சியை நடத்­தி­னா­லும் திட்­ட­மிட்டு நடத்த வேண்­டும்.  ஒரு நிகழ்ச்­சிக்கு எவ்­வ­ளவு கூட்­டம் வரும், எவ்­வ­ளவு எழுச்­சி­யோடு வரு­வார்­கள் என்­ப­தை­யெல்­லாம், வரும் காலத்­தில் சரி­யான திட்­ட­மி­ட­லோடு நிகழ்ச்­சியை நடத்த வேண்­டும்.  சரி­யான செயல்­பாடு இருக்­கி­றதா, சரி­யான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளதா என்­பதை நாம் முன்­கூட்­டியே உறுதி செய்ய வேண்­டும்.  நம் கழ­கத்­தின் வர­லாற்றை இன்று இருக்­கின்ற இளை­ஞர்­க­ளி­டம் கொண்டு சேர்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்பு, நான் ஒரு விஷ­யத்தை ஒரு கூட்­டத்­தில் பேசி­னேன்.  `பிறப்­பால் எல்­லோ­ரும் சமம், பிறப்­பால் எந்த ஏற்­றத்­தாழ்­வும் சமு­தா­யத்­தில் இருக்­கக் கூடாது’ என்று பேசி­னேன்.  அப்­படி ஏதா­வது ஒன்று இருந்­தது என்­றால், நீ உயர்வு, நீ தாழ்வு என்று பேசி­னார்­கள் என்­றால், அதை ஒழிக்க வேண்­டும் என்று பேசி­னேன்.   உடனே சங்­கி­கள் எல்­லாம் பொய்ப் பிரச்­சா­ரத்­தைப் பரப்­பி­னார்­கள்.  பல சாமி­யார்­கள் எனக்கு மிரட்­டல் விட்­டார்­கள்.  ஒரு சாமி­யார் என் தலைக்கு ஒரு லட்­சம் என விலை வைத்­தார்.  இன்­னொரு சாமி­யார், 10 லட்­சம் என்று விலை வைத்­தார்.  இன்­னொரு சாமி­யார் உத­ய­நிதி தலையை வெட்­டிக்­கொண்டு வந்­தால், ஒரு கோடி ரூபாய் தரு­கி­றேன் என்று சொன்­னார்.  என்னை மன்­னிப்பு கேட்­கச் சொல்லி மிரட்­டி­னார்­கள்.  நான் சொன்­னேன்,  ``நான் கலை­ஞர் பேரன்; நான் சொன்­னால் சொன்­ன­து­தான்.  பிறப்­பால் அனை­வ­ரும் சமம்­தான். யாரி­ட­மும் மன்­னிப்பு எல்­லாம் கேட்க மாட்­டேன், நீங்­கள் நீதி­மன்­றத்­துக்கு வாருங்­கள்’’ என்று சொன்­னேன்.  இப்­போது அந்த வழக்கு நடந்­து­கொண்டு இருக்­கி­றது.  அன்று எனக்கு எதி­ரா­கப் பொங்­கி­ய­வர்­கள், இன்­றைக்கு அதே­போல் ஒரு கருத்தை உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி சொன்­ன­போது, உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­ப­தி­யையே தாக்­கி­யுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">ஒன்­றிய பாசிச ஆட்­சி­யில் இன்­றைக்கு இது­தான் நிலைமை.  உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி, நேற்று தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றார்.  ஆகவே, தமிழ்­நாட்டை மட்­டு­மல்ல இன்­றைக்கு ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வையே காப்­பாற்ற வேண்­டிய பொறுப்பு திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் உடன்­பி­றப்­பு­க­ளுக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">கழ­கத் தலை­வர் அவர்­கள் இங்கே இருக்­கின்ற பூத் கமிட்டி நிர்­வா­கி­கள் மீது மிக­வும் நம்­பிக்கை வைத்­தி­ருக்­கி­றார். 200 தொகு­தியை உறு­தி­யாக நாம் செல்­வோம் என்று நம்­பு­கி­றார் என்­றால், பூத் கமிட்டி நிர்­வா­கி­கள் உங்­கள் மீது இருக்­கின்ற அந்த நம்­பிக்­கை­தான் கார­ணம். உடல்­நிலை சரி­யில்லை என்று ஒரு மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றீர்­கள் என்­றால், அங்கு பல கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஸ்கேனிங் இயந்­தி­ரம் இருக்­கும், நவீன கரு­வி­கள், ஆப­ரே­ஷன் தியேட்­டர் இருக்­கும். ஆனால், முத­லில் மருத்­து­வர்­கள் எந்­தக் கரு­வி­யைப் பயன்­ப­டுத்­து­வார்­கள் என்­றால், அவர்­கள் கழுத்­தில் மாட்டி இருக்­கின்ற ஸ்டெதஸ்­கோப்பை வைத்­துத்­தான் முத­லில் என்ன பிரச்­சனை என்­ப­தைக் கண்­டு­பி­டிப்­பார்­கள். அதே மாதி­ரி­தான் கழக நிர்­வா­கி­கள், பூத் நிர்­வா­கி­கள் தான் கழ­கத்­தின் ஸ்டெதஸ்­கோப்.மக்­கள் மன­தில் நம்­பிக்கை ஏற்­ப­டுத்த முடி­யும் என்­றால் அது­வும் பூத் கமிட்டி நிர்­வா­கி­கள் உங்­க­ளால் மட்­டும்­தான் முடி­யும். உங்­கள் பூத்­தில் இருக்­கின்ற ஒவ்­வொரு குடும்­பத்­து­டன் நீங்­கள் அறி­மு­க­மாகி இருக்க வேண்­டும். அவர்­க­ளு­டன் தொடர்­பில் இருக்க வேண்­டும். அவர்­க­ளுக்கு என்­னென்ன தேவையோ அதை எல்­லாம் தெரிந்­து­கொண்டு, அந்த உத­வி­களை நீங்­கள் செய்து தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.2">மீண்­டும் கழ­க ஆட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">தலை­வர் அவர்­கள், சென்­னை­யில், `உடன்­பி­றப்பே வா’ என்ற முன்­னெ­டுப்­பின் மூல­மாக சட்­ட­மன்­றத்­தில் இருக்­கின்ற மிக­மிக முக்­கி­ய­மான நிர்­வா­கி­களை வர­வ­ழைத்து, சென்­னை­யி­லேயே ஆலோ­ச­னைக் கூட்­டத்தை நடத்­தி­னார்.  கடந்த வாரம், இந்த திரு­வ­ரங்­கம் தொகு­திக்கு அந்த ஆலோ­ச­னைக் கூட்­டம் நடந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">தலை­வர் அவர்­கள் எனக்கு கட்­ட­ளை­யிட்­டது... ``நீ தமிழ்­நாடு முழு­வ­தும் சென்று, அத்­தனை நிர்­வா­கி­க­ளை­யும் சந்­தித்து, அவர்­க­ளின் கருத்­து­க­ளைப் பெற்று, ஆலோ­சனை செய்­து­விட்டு வா’’ என்று அனுப்பி வைத்­தார்­கள்.  கிட்­டத்­தட்ட 6 தொகு­தி­கள் முடித்­துள்­ளேன்.  இன்று திரு­வ­ரங்­கம் தொகுதி ஆரம்­பித்து, மாலை திண்­டுக்­கல்­லுக்­குச் சென்று, நாளை காலை திண்­டுக்­கல்­லில் ஒரு திரு­ம­ணத்தை நடத்தி வைத்­து­விட்டு, நாளை மாலை துறை­யூர் தொகு­திக்கு வர இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">நான் பார்த்த இந்த6 தொகு­தி­க­ளில், மக்­க­ளின் வர­வேற்பு, எழுச்சி, கழக நிர்­வா­கி­க­ளின் உணர்­வு­களை எல்­லாம் பார்க்­கும்­போது, நிச்­ச­யம் சொல்­கி­றேன்…  மீண்­டும் நம் கழ­கம் ஆட்சி அமைக்­கப்­போ­வது உறுதி. எத்­தனை சூழ்ச்­சி­கள் வந்­தா­லும், 2026 தேர்­த­லில் மீண்­டும்­உ­த­ய­ சூ­ரி­யன் உதிப்­பதை யாரா­லும் தடுக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.2">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>