<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="504,69,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 10 2025 04:03:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="10102025-VLR-10" position.sequence="10" ex-ref="10102025-VLR-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">தி.மு.க.வின் அறிவுச் செல்வம்!</lang>
	</hl2>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup515200_10_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup515201_10_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="18">மு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">த்தமி­ழ­றி­ஞர் கலை­ஞர் மறை­வின்­போது, ராஜாஜி அரங்­கில் அவ­ரது உடல் இருந்த மணித்­து­ளி­க­ளில் ஒரு நிமி­டம் எவ­ரா­லும் மறக்க இய­லா­தது. மெரி­னா­வில் கலை­ஞ­ருக்­கான இடத்தை சட்­டப்­போ­ராட்­டம் நடத்தி தீர்ப்பை பெற்ற நொடி அது. அந்த நொடி­யில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் அன்­றைய செயல் தலை­வ­ரும் இன்­றைய கழ­கத் தலை­வ­ரு­மான முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் உடைந்து அழுத காட்­சி­கள் உணர்ச்­சி­ம­ய­மா­னவை. கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மல் கசிந்த அந்த கண்­ணீரை, உடைந்து அழுத அந்த நொடி­களை அவர் வாழ்­வில் மீண்­டும் சந்­தித்த ஒரு நாள் 10 அக்­டோ­பர் 2024. ஆம், அன்­று­தான் முர­சொலி செல்­வம் மறைந்­தார். “நான் சாய்­வ­தற்­குக் கிடைத்த கடை­சித் தோளை, கொள்­கைத் தூணை இழந்து நிற்­கி­றேன். என்னை நானே ஆற்­றுப்­ப­டுத்த முடி­யாத நிலை­யில், கட்­சி­யி­லும் குடும்­பத்­தி­லும் யாருக்கு எப்­படி ஆறு­தல் சொல்­லப் போகி­றேன்”  என்று மன­மு­டைந்து இரங்­கல் அறிக்கை வெளி­யிட்­ட­து­டன், கோபா­ல­பு­ரம் இல்­லத்­தில் முர­சொலி செல்­வம் உட­லுக்கு அரு­கில் அவர் உறைந்து நின்ற காட்­சி­க­ளும்  2018 ஆகஸ்ட் 7ஆம் தேதியை மீட்­டு­ரு­வாக்­கம் செய்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">பன்­னீர்­செல்­வத்­தின் நினை­வாக!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞ­ரின் இழப்­புக்கு ஈடாக முர­சொலி செல்­வத்­தின் இழப்பு கழ­கத் தலை­வரை பாதித்­தது என்­றால், அந்த கொள்­கைச் செல்­வத்­தின் வாழ்­நாள் உழைப்­பு­தான் கார­ணம். முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் மரு­ம­க­னும், முர­சொலி மாற­னின் உடன்­பி­றந்த சகோ­த­ர­ரு­மான முர­சொலி செல்­வம் 1940-–ஆம் ஆண்டு ஏப்­ரல் 24-–ஆம் தேதி திரு­வா­ரூர் மாவட்­டம் திருக்­கு­வ­ளை­யில் பிறந்­த­வர். இவ­ரது பிறப்­புக்கு ஒரு மாதத்­திற்கு முன்­னர்­தான், மார்ச் 1-–ஆம் தேதி நீதிக்­கட்­சி­யின் சர் ஏ.டி.பன்­னீர்­செல்­வம் இந்­திய அதி­கா­ரி­யாக பொறுப்­பேற்­ப­தற்­காக லண்­டன் சென்­ற­போது, ஓமன் கட­லில் விமா­னம் விபத்­துக்­குள்­ளாகி மறை­வெய்­தி­னார்.  மனைவி நாகம்­மை­யார் மறைந்­த­போது கூட கண்­ணீர் விடாத தந்தை பெரி­யார்,  ‘மனம் பதைக்­கி­றது நெஞ்சு திக் திக் என்று அடித்­துக்­கொள்
­கி­றது கண் கலங்கி மறைக்­கி­றது’ என்ற கதறி அழு­தார். பெரி­யாரை மட்­டு­மல்ல, ஒட்­டு­மொத்த திரா­விட இய­க்கத்­தி­ன­ரை­யும் கலங்­க­டிக்­கச் செய்­தது அந்த மர­ணம். அத­னால்­தான் அவ­ரி­ன் நினை­வாக தனது மரு­ம­க­னுக்கு பன்­னீர்­செல்­வம் என பெயர் சூட்­டி­னார் கலை­ஞர். பள்­ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்த செல்­வம், சென்னை மாநி­லக்­கல்­லூ­ரி­யில் பி.ஏ. முடித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">செல்­வம் பிறந்­த­போதே, “உனக்கு பெண் குழந்தை பிறந்­தால், அதற்கு செல்வி  என பெய­ரிட்டு செல்­வத்­துக்கே துணை­வி­யாக்க வேண்­டும்” என்று அன்­புக்­கட்­டளை இட்­டி­ருந்­தார் கலை­ஞ­ரின் தாயார். அது­போ­லவே கலை­ஞ­ருக்­கும் ஒரு மகள் பிறந்­தது. மருத்­து­வ­ம­னை­யில் அப்­போது உட­னி­ருந்த அக்கா சண்­மு­க­சுந்­த­ரத்­தம்­மாள், “பிறந்­தது என்ன குழந்தை?” எனக்­கேட்க, “செல்­வத்­துக்கு ஒரு செல்வி பிறந்­தி­ருக்­கி­றாள்” என்று அப்­போதே பதி­ல­ளித்­துள்­ளார். அதன்­ப­டியே, பேர­றி­ஞர் அண்ணா தலை­மை­யில், தந்தை பெரி­யார், மூத­றி­ஞர் ராஜாஜி, காயிதே மில்­லத் எனப் பெருந்­த­லை­வர்­கள் பல­ரும் பங்­கேற்க இரு­வ­ரின் திரு­ம­ணத்தை வெகு­சி­றப்­பாக நடத்­தி­னார் கலை­ஞர். முர­சொலி செல்­வம், செல்வி தம்­ப­திக்கு ஒரு மகள் எழில் அரசி பிறந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">பழி­வாங்­கிய எம்.ஜி.ஆர்., ஜெய­ல­லிதா!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞ­ரின் அக்கா மகன்,முர­சொலி மாற­னுக்கு தம்பி, மகள் செல்­விக்கு கண­வர் என்ற குடும்ப உற­வு­க­ளை­யெல்­லாம் தாண்டி முர­சொலி செல்­வத்தை தனது உயி­ருக்கு நிக­ராக நேசித்­தார் கலை­ஞர். அதற்­குக் கார­ணம் தி.மு.கழ­கத்தி அறி­வு­சார் சொத்­தாக மிளிர்ந்­த­வர் முர­சொலி செல்­வம். தி.மு.க.வினரை கடந்து பொது­வான வாச­கர்­களை ஈர்க்­கும் வித­மாக துணுக்­குச் செய்­தி­களை எழுதி வந்த முர­சொலி செல்­வம், 1989 முதல் முர­சொ­லியை கவ­னிக்­கும் பொறுப்பை ஏற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1980-–ஆம் ஆண்டு நவம்­பர் 26-–ஆம் தேதி திருச்­செந்­தூர் ஆலய சரி­பார்ப்பு அதி­கா­ரி­யாக இருந்த சுப்­ர­ம­ணி­யப் பிள்ளை மர்­ம­மாக கொலை செய்­யப்­பட்­டார். ஓய்­வு­பெற்ற நீதி­பதி சி.ஜே.ஆர்.பால் தலை­மை­யில் விசா­ரணை கமி­சன் அமைத்­தி­ருந்­தது எம்.ஜி.ஆர். அரசு.அந்த அறிக்­கையை சட்­ட­மன்­றத்­தில் வெளி­யிட்டு விவா­தம் நடத்த வலி­யு­றுத்­தி­னார் கலை­ஞர். ஆனால் காலம் தாழ்த்­தி­யது எம்.ஜி.ஆர். அரசு. சுப்­ர­ம­ணி­யப் பிள்ளை தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக கூறி­யி­ருந்­தது அரசு. திடீ­ரென ஒரு­நாள் பத்­தி­ரி­கை­யா­ளர்­களை சந்­திக்க பால் கமி­சன் அறிக்­கையை வெளி­யிட்­டார். அதில் தற்­கொலை அல்ல, கொலை என்று தெள்­ளத்­தெ­ளி­வாக கூறப்­பட்­டி­ருந்­தது. அரசு நிய­மித்த கமி­ச­னின் அறிக்கை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் கைக­ளுக்கு எப்­ப­டிச் சென்­றது என எம்.ஜி.ஆர். பத­றி­னார். இத­னால் கடும் ஆத்­தி­ர­ம­டைந்த எம்.ஜி.ஆர். அரசு முர­சொலி அலு­வ­லத்­தில் சோதனை நடத்­தி­யது. அரசு அதி­காரி சதா­சி­வம், கரு­ணா­நி­தி­யின் உத­வி­யா­ளர் சண்­மு­க­நா­தன் ஆகி­யோ­ரோடு சேர்ந்து முர­சொலி செல்­வத்­தை­யும் கைது­செய்து சிறை­யில் அடைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல, 1991–-ஆம் ஆண்டு, முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லிதா ஆட்­சிக்­கா­லத்­தில், அப்­போ­தைய தி.மு.க. சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர் பரிதி இளம்­வ­ழுதி, தமிழ்­நாடு வீட்­டு­வ­சதி குடி­யி­ருப்பு தொடர்­பாக பேர­வை­யில் பேசிய செய்­தியை முர­சொ­லி­யில் பிர­சு­ரித்­தார். ஆர்.எம்.வீரப்­ப­னைப் பற்றி அவ­தூறு கருத்­து­களை கூறி­யி­ருப்­ப­தாக குற்­றம் சாட்­டப்­பட்­டது. மேலும் அர­சின் கொள்­கை­கள் குறித்­தும், சட்­டப்­பே­ர­வை­யின் அதி­கா­ரம் உள்­ளிட்ட பல்­வேறு முர­சொலி கட்­டு­ரை­க­ளை­யும் சுட்­டிக் காட்­டி­னர். இதற்­காக அப்­போ­தைய சபா­நா­ய­கர் சேடப்­பட்டி முத்­தையா, முர­சொலி மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்­பி­னார். சபா­நா­ய­கர் சேடப்­பட்டி முத்­தையா உத்­த­ர­வின்­படி சட்­ட­மன்­றத்­தில் ஆஜ­ரா­னார் முர­சொலி 
செல்­வம். அவரை விசா­ரிப்­ப­தற்­காக சட்­ட­மன்­றத்­தில் ஒரு கூண்டு வைக்­கப்­பட்­டது. ஆனால், இந்த விசா­ர­ணை­யில் தனக்கு தக­வல் சொன்­ன­வர்­க­ளைப் பற்றி கூற மறுத்­தார் 
முர­சொலி செல்­வம். துணிச்­ச­லாக நின்­றார். அவர் மீது 
கண்­ட­னத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. முர­சொலி செல்­வத்­தின் மீதான இந்த நட­வ­டிக்­கைக்கு பத்­தி­ரி­கை­யா­ளர் சங்­கங்­கள் பல­வும் கண்­ட­னம் தெரி­வித்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முர­சொலி செல்­வத்­தின் துணிச்­ச­லைப் பாராட்டி ‘கூண்டு கண்­டேன்- – குதூ­க­லம் கொண்­டேன்’ என்ற தலைப்­பில் தி.மு.க. தொண்­டர்­க­ளுக்கு கடி­தம்எழு­தி­னார் கலை­ஞர். “பெரி­யார், அண்ணா, ராஜாஜி, காயிதே மில்­லத் ஆகி­யோர் புடை­சூழ, மணக்­கோ­லத்­தில் செல்­வத்தை நான் பார்த்த போது­கூட எனக்கு அத்­தனை மகிழ்ச்­சி­யில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதுக்­கோட்டை, திருச்சி நிகழ்ச்­சி­களை முடித்­து­விட்­டுத் திரும்­பும் போது தாம்­ப­ரம் ரயி­ல­டி­யில் வாங்­கிப் படித்த ஆங்­கி­லம். தமிழ் நாளே­டு­கள் அத்­த­னை­யி­லும் செல்­வம் சட்­டப் பேர­வைக் கூண்­டில் சிரிப்பு தவழ நின்று கொண்­டி­ருக்­கும் படம் வெளி­வந்­துள்­ள­தைப் பார்த்த போது­தான் எனக்கு மகிழ்ச்சி தாங்க முடி­ய­வில்லை. வாடிய முகத்­து­டன் அந்­தக் கூண்­டுக் குள் செல்­வம் நின்­றி­ருந்­தால்; என்­ன­கம் வாடிப்­போ­யி­ருக்­கும்! அந்­தச் செல்­வத்­தின் பெயரை இந்­தச் செல்­வத்­துக்கு எத்து ணைப் பொருத்­த­மாக அப்­போதே வைத் தேன் என்று என்­னையே நான் பாராட்­டிக் கொண்­டேன்” என அக­ம­கிழ்ந்­தார் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“அடை­யாறு மருத்­து­வ­ம­னை­யில் அண்­ணா­வுக்கு இறு­தி­யாக ஓர் அறுவை சிகிச்சை அவ­சி­யம் தேவை என முடிவு செய்­யப்­பட்­ட­போ­து­கூட; அண்ணா அவர்­கள் அந்த உடல் நலி­வு­ட­னும் “செல்வா எங்கே?” என அழைத்து. செல்­வம் அவர் அரு­கில் சென்­ற­தும், ‘செல்வா! வீட்­டில் உள்ள பிள்­ளை­களை அழைத்து வா! நான் பார்க்க வேண்­டும்’ என்று கூறி­யதை எப்­படி மறக்க முடி­யும்? அந்­தப் பாச­முள்ள பெருந்­த­லை­வ­னின் படத்­த­ருகே கூண்டு! அதிலே செல்­வம்! கடமை. கண்­ணி­யம், கட்­டுப்­பாடு பார்த்­தாயா! என்ற எழுத்­துக்­கள் ஒளி விடு­கின்­றன” என முர­சொலி செல்­வத்­தைப் பற்­றிய பசு­மை­யான நினை­வு­க­ளை ­யும் அந்­தக் கடி­தத்­தில் மிக அழ­காக பகிர்ந்­தி­ருந்­தார் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்­றத்­துக்கு செல்­வ­தற்கு முன்­பாக, கலை­ஞரை சந்­தித்த முர­சொலி செல்­வம், நான் பேர­வை­யில், அர­சின் நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­விக்­கட்­டுமா என்று கேட்­டுள்­ளார். அப்­போது கலை­ஞர், “இது சட்­ட­மன்­றம், நீ எதிர்ப்பு தெரி­விக்­கக் கூடாது. உன் எதிர்ப்பை தெரி­விக்க வேண்­டும் என்­றால், நீல நிற சட்­டைக்கு பதி­லாக கருப்­புச்சட்டை அணிந்து செல்” என்றுகூறி­யுள்­ளார். அதன்­ப­டியே அன்று சட்­டப்­பே­ர­வைக்கு கருப்­புச் சட்டை அணிந்து சென்­றார் முர­சொலி செல்­வம். தமிழ்­நாடு அர­சி­யல் வர­லாற்­றில் மறக்க முடி­யாத நிகழ்வு அந்த சம்­ப­வம். ஏனெ­னில் அதற்கு முன்­பும் சரி, அதற்கு
பின்­பும் சரி, இப்­ப­டி­யொரு சம்­ப­வம் நடந்­ததே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Arial" fontStyle="Bold" size="13">Murasoli will take it</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல, ஒரு மிகச்­சி­றந்த பத்­தி­ரி­கை­யா­ள­ராக முர­சொலி செல்­வம் துணிச்­ச­லாக கையாண்ட மற்­றொரு விவ­கா­ரம் ராஜீவ் காந்தி படு­கொலை. 1991 மே 21-–ஆம் தேதி ஸ்ரீபெ­ரும்­பு­தூ­ரில் நடை­பெற்ற தேர்­தல் பிரச்­சா­ரக் கூட்­டத்­தில் ராஜீவ் காந்தி படு­கொலை செய்­யப்­பட்­டார். அந்த படு­கொ­லைக்­கும் தி.மு.க.வுக்­கும் என்ன சம்­பந்தம்? ஆனால் அர­சி­யல் விஷ­மி­கள் தி.மு.க.வை நோக்கி அதை திருப்­பி­விட்­ட­
னர். முர­சொலி அலு­வ­ல­கம் தாக்­கப்­பட்டு, தீ வைத்து எரிக்­கப்­பட்­டது. வாக­னங்­கள், ஆவ­ணங்­கள், அச்­சுக் காகி­தங்­கள், அச்­ச­கம் எல்­லாம் எரிந்து கரு­கின. எனி­னும் மறு­நாளே முர­சொலி நாளி­தழ் அச்­சி­டப்­பட்­டது. அதற்­குப் பின்­னால் இருந்த உழைப்­புக்­கும் துணிச்­ச­லுக்­கும் முக்­கி­யக் கார­ண­மா­ன­வர் முர­சொலி செல்­வம். அன்­றைக்கு வந்த முர­சொ­லிக்கு முர­சொலி செல்­வம் வைத்த தலைப்பு ‘Murasoli will take it’.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ராஜீவ் காந்தி படு­கொ­லைக்கு முன்­பாக, ஜன­நா­ய­கப் படு­கொலை ஒன்று நடை­பெற்­றது. அர­சி­யல் சட்­டத்­தின் 356வது பிரி­வின் இரண்­டாம் பகு­தி­யான ‘அதர்­வைஸ்’ என்­பதை பயன்­ப­டுத்தி ஆளு­ந­ரின் ஒப்­பு­தல் இல்­லா­ம­லேயே, 1991 ஜன­வ­ரி­யில் தி.மு.க. அரசை கலைத்­தது ஒன்­றிய அரசு. ஆட்சி கலைப்பு அறி­விப்பை காலை­யில் இருந்தே எதிர்­பார்த்­தி­ருந்த கலை­ஞர், அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­கள் குறித்து கட்சி நிர்­வா­கி­க­ளு­டன் ஆலோ­சித்து கொண்­டி­ருந்­தார். அன்று இரவு 10.30 மணிக்கு, முர­சொலி அலு­வ­ல­கத்­தின் ஆசி­ரி­யர் குழு ஆட்­சிக்­க­லைப்பு செய்­தியை எந்த முறை­யில் வெளி­யி­டு­வது, என்ன தலைப்பு வைப்­பது என்று யோசித்­துக் கொண்­டி­ருந்­தது. அப்­போது அங்கு வந்த முர­சொலி செல்­வம், அடுத்த சில நிமி­டங்­க­ளில் செய்தி, அதற்­கான தலைப்பு, முதன்­மைச்­செய்­
தியை ஒட்­டிய பெட்டி செய்­தி­கள் என அனைத்­தை­யும் விறு­வி­று­வென எழு­திக்­கொ­டுத்­தார். எந்த செய்­தியை எந்­தப் பக்­கத்­தில் போட வேண்­டு­மென்­றும் அங்­கி­ருந்­த­வர்­க­ளுக்கு விளக்­கி­விட்­டுச் சென்­றார். ஆட்­சிக்­க­லைப்பு ஒரு ‘ஜன­நா­யக படு­கொலை’ என்­ப­து­தான் அவர் கொடுத்த தலைப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">‘சிலந்­தி’­­யாக கொட்­டி­ய­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒட்­டு­மொத்­த­மாக அரை நூற்­றாண்­டுக்கு மேல் முர­சொ­லிக்­காக தனது வாழ்வை அர்ப்­ப­ணித்­த­வர் முர­சொலி 
செல்­வம். கலை­ஞ­ருக்கு அடுத்து முர­சொ­லி­யில் அதிக காலம் பங்­க­ளிப்பு செய்­த­வர் என்ற பெருமை இவ­ருக்கு உண்டு. கலை­ஞ­ரின் எண்­ணத்தை தனது எழுத்­து­க­ளால் பிர­தி­ ப­லித்­தார். கலை­ஞ­ரின் எள்­ளல் நடை­யில் மட்­டு­மல்ல, காத்­தி­ர­மான எழுத்து நடை­யும் இவ­ரது தனித்த பாணி.  சிலந்தி 
கட்­டு­ரை­கள் மூலம் ஒவ்­வொரு முறை­யும் அவர் நிரூ­பித்­துக் ­கொண்டே இருந்­த­ார். ஆளு­நர் ஆர்.என்.ரவி­யின் அத்­து­
மீ­றல்­க­ளுக்கு எதி­ராக, “கொக்­கென்று நினைத்­தாயோ கொங்­க­னவா?” என்ற அவ­ரது சிலந்தி கட்­டுரை இன்­றைய 
தலை­மு­றை­யி­ன­ரை­யும் அவ­ரது எழுத்­துக்­களை நோக்கி ஈர்க்­கச் செய்­தது. 80 ஆண்­டு­க­ளைக் கடந்த முர­சொலி 
தனது பய­ணத்­தில் எதிர்க்கொண்ட நெருக்­க­டி­களை, தாக்­கு­தல்­களை, கைது நட­வ­டிக்­கை­களை தொகுத்து ‘முர­சொ­லி – -­­சில நினை­வு­கள்’ என நூலை­யும் எழு­தி­னார். தனது 
அத்­தனை ஆற்­றல்­க­ளுக்கு பின்­னா­லும் அமைதி 
ஒன்­றையே இலக்­க­ண­மா­கக் கொண்­டி­ருந்­த­வர் முர­சொலி செல்­வம்.
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>