<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/11/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,398,958,1139" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Nov 11 2025 03:45:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251111T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="11112025-CHN-06" position.sequence="06" ex-ref="11112025-CHN-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">ரூ 766.53 கோடி செலவில் 577 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார்! 103 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="87">புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு விழா – 43,993 பயனாளிகளுக்கு நலஉதவிகள்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="42">முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">புதுக்­கோட்டை, நவ.11–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் நேற்று (10.11.2025) புதுக்­கோட்டை மாவட்­டம், கீர­னூ­ரில் நடை­பெற்ற அரசு விழா­வில், 223 கோடியே 6 இலட்­சம் ரூபாய் செல­வி­லான 577 முடி­வுற்ற பணி­களை திறந்து வைத்து, 201 கோடியே 70 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டி­லான 103 புதிய திட்­டப் பணி­க­ளுக்கு அடிக்­கல் நாட்டி, பல்­வேறு துறை­க­ளின் சார்­பில் 43,993 பய­னா­ளி­க­ளுக்கு 341 கோடியே 77 இலட்­சம் ரூபாய் மதிப்­பி­லான அரசு நலத்­திட்ட உத­வி­களை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் திறந்து வைக்­கப்­பட்ட முடி­வுற்ற திட்­டப்­ப­ணி­க­ளின் விவ­ரங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஊரக வளர்ச்சி மற்­றும் ஊராட்­சித் துறை சார்­பில், புதுக்­கோட்டை மாவட்­டத்­தின் பல்­வே­றுப் பகு­தி­க­ளில், 15–வது நிதிக்­குழு மான்­யம்,  அனைத்து கிராம அண்ணா மறு­ம­லர்ச்­சித் திட்­டம், குழந்தை நேய பள்ளி உட்­கட்­ட­மைப்பு மேம்­பாட்­டுத் திட்­டம், அயோத்­தி­தா­சர் பண்­டி­தர் திட்­டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு­தித் திட்­டம், முதல்­வ­ரின் கிராம சாலை­கள் மேம்­பாட்­டுத் திட்­டம், நபார்டு, நமக்கு நாமே திட்­டம்,  தூய்மை பாரத இயக்­கம் (ஊர­கம்),  பள்­ளி­கள் உட்­கட்­ட­மைப்பு மேம்­பாட்­டுத் திட்­டம் போன்ற பல்­வேறு திட்­டங்­க­ளின் கீழ்  ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள், சுகா­தார துணை மையங்­கள், புதிய மற்­றும் சீர­மைக்­கப்­பட்ட துணை சுகா­தார வளா­கங்­கள், சீர­மைக்­கப்­பட்ட நூல­கங்­கள், சாலை மேம்­பாட்­டுப் பணி­கள், புதிய இடு­கா­டு­கள், சுற்­றுச்­சு­வர்­கள் மற்­றும் நடை­பா­தை­கள், அங்­கன்­வாடி மையக் கட்­ட­டங்­கள், கதி­ர­டிக்­கும் தளங்­கள், உணவு தானிய சேமிப்­புக் கிடங்­கு­கள், ஊராட்சி அலு­வ­ல­கக் கட்­ட­டங்­கள், அங்­கன்­வாடி மையக் கட்­ட­டங்­கள், மேம்­ப­டுத்­தப்­பட்ட குளங்­கள்,  சமு­தா­யக் கூடங்­கள், தார்­சா­லை­கள்,  மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்­டி­கள், ஆழ்­துளை கிண­று­கள் மற்­றும் மோட்­டார் வச­தி­கள், நாடக மேடை­கள்,  பேருந்து நிழற்­கு­டை­கள், பொது சேவை மையக் கட்­ட­டங்­கள், புன­ர­மைக்­கப்­பட்டு புதுப்­பிக்­கப்­பட்ட அர­சுப் பள்­ளிக் கட்­ட­டங்­கள், கழி­வ­றை­கள் மற்­றும் சமை­ய­ல­றைக் கொட்­ட­கை­கள், ஊராட்சி ஒன்­றிய நடு­நி­லைப் பள்­ளி­கள், தொடக்­கப் பள்­ளி­கள், அரசு மேல்­நி­லைப் பள்­ளி­கள் மற்­றும் அரசு உயர்­நி­லைப் பள்­ளி­க­ளில் கூடு­தல் வகுப்­ப­றை­கள், கணினி ஆய்­வ­கங்­கள், கலை­ய­ரங்­கங்­கள், பொருள் வைப்­ப­றை­யு­டன் கூடிய சமை­ய­ல­றைக் கட்­ட­டங்­கள் மற்­றும் கழி­வ­றை­கள், மின் மயா­னம், பேவர் பிளாக் சாலைப் பணி­கள், புதிய நெற்­க­ளங்­கள், பொது விநி­யோ­கக் கடை­கள், உணவு அருந்­தும் கூடங்­கள், என மொத்­தம் 132 கோடியே 46 இலட்­சத்து 51 ஆயி­ரம் ரூபாய் செல­வி­லான 555 முடி­வுற்­றப் பணி­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நக­ராட்சி நிரு­வா­கம் மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை சார்­பில்,  கலை­ஞர் நகர்ப்­புற மேம்­பாட்­டுத் திட்­டத்­தின் கீழ் ஆலத்­தூர், தட்­டா­வூ­ரணி, பொன்­ன­ம­ரா­வதி ஆகிய இடங்­க­ளில் 4 கோடியே 87 இலட்­சம் ரூபாய் செல­வில் நவீன எரி­வாயு தகன மேடை­கள், புதுக்­கோட்டை மாந­க­ராட்­சி­யில் திரு­வப்­பூர் மற்­றும் இரா­ஜ­கோ­பா­ல­பு­ரம் ஆகிய இடங்­க­ளில் உள்ள உயர்­நி­லைப் பள்­ளி­கள், சந்­தைப்­பேட்டை, சாந்­த­நா­த­பு­ரம், கோவில்­பட்டி மற்­றும் போஸ் நகர் ஆகிய இடங்­க­ளில் உள்ள நடு­நி­லைப் பள்­ளி­கள் மற்­றும் காந்­தி­ந­கர் தொடக்­கப் பள்­ளி­க­ளில் 3 கோடியே 82 இலட்­சம் ரூபாய் செல­வில் வகுப்­ப­றைக் கட்­ட­டங்­கள் மற்­றும் கூடு­தல் கட்­ட­டங்­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை சார்­பில், திரு­ம­யத்­தில் 10 கோடி ரூபாய் செல­வில் விரி­வான அவ­சர சிகிச்சை மையக் கட்­ட­டம், வளை­ய­பட்டி அரசு மருத்­து­ம­னை­யில் 63 இலட்­சம் ரூபாய் செல­வில் பிண­வறை பிரி­வுக் கட்­ட­டம், நார்த்­தா­ம­லை­யில் 60 இலட்­சம் ரூபாய் செல­வில் அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யக் கட்­ட­டம்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பள்­ளிக் கல்­வித் துறை சார்­பில், புனல்­கு­ளம் அரசு உயர்­நி­லைப் பள்­ளி­யில் 47 இலட்­சத்து 12 ஆயி­ரம் ரூபாய் செல­வில் கூடு­தல் வகுப்­ப­றைக் கட்­ட­டங்­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">வரு­வாய் மற்­றும் பேரி­டர் மேலாண்­மைத் துறை சார்­பில், கல்­லாக்­கோட்டை மற்­றும் கந்­தர்­வக்­கோட்டை ஆகிய இடங்­க­ளில் 65 இலட்­சத்து 91 ஆயி­ரம் ரூபாய் செல­வில் வரு­வாய் ஆய்­வா­ளர் அலு­வ­ல­கத்­து­டன் கூடிய குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">வேளாண்மை மற்­றும் உழ­வர் நலத் துறை சார்­பில், அன்­ன­வா­ச­லில் 21 இலட்­சத்து 50 ஆயி­ரம் ரூபாய் செல­வில் வட்­டார அள­வி­லான வேளாண் இயந்­தி­ரங்­க­ளுக்­கான நிழற்­கூ­டம்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எரி­சக்­தித் துறை சார்­பில், புதுக்­கோட்டை மாவட்­டத்­தின் பல்­வேறு இடங்­க­ளில் 32 கோடியே 92 இலட்­சத்து 35 ஆயி­ரம் ரூபாய் செல­வில் கூடு­தல் பளு மற்­றும் குறைந்த மின் அழுத்­தத்­தினை சீர்­செய்­திட 212 எண்­ணிக்­கை­யி­லான மின்­மாற்­றி­கள், பாக்­குடி மற்­றும் நக­ரப்­பட்டி, புதுக்­கோட்டை மற்­றும் வடு­கப்­பட்டி ஆகிய இடங்­க­ளில் உள்ள துணை மின் நிலை­யங்­க­ளின் 7 கோடியே 60 இலட்­சத்து 80 ஆயி­ரம் ரூபாய் செல­வில் திறன் கூட்­டப்­பட்ட திறன் மின்­மாற்­றி­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">வீட்டு வசதி மற்­றும் நகர்ப்­புற வளர்ச்­சித் துறை சார்­பில், ஆலங்­குடி திட்­டப்­ப­கு­தி­யில் 28 கோடியே 64 இலட்­சத்து 84 ஆயி­ரம் ரூபாய் செல­வில் அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மாற்­றுத் திற­னா­ளி­கள் நலத் துறை சார்­பில், தமிழ்­நாடு உரி­மை­கள் திட்­டத்­தின் கீழ் 15 இலட்­சம் ரூபாய் செல­வில் கோட்ட அள­வி­லான விழு­து­கள் மறு­வாழ்வு  சேவை மையம்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">என மொத்­தம், 223 கோடியே 6 இலட்­சம் ரூபாய் செல­வி­லான 577 முடி­வுற்ற திட்­டப் பணி­களை முத­ல­மைச்­சர் அவர்­கள் நேற்­றைய தினம் திறந்து வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் அடிக்­கல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">நாட்­டப்­பட்ட பணி­க­ளின் விவ­ரங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஊரக வளர்ச்சி மற்­றும் ஊராட்­சித் துறை சார்­பில், புதுக்­கோட்டை மாவட்­டத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளில் மூல­தன மான்ய சேமிப்பு நிதி, சிறு­பா­சன குளம் மேம்­பாடு செய்­தல், முத­ல­மைச்­ச­ரின் கிராம சாலை­கள் திட்­டம் போன்ற பல்­வேறு திட்­டங்­க­ளின் கீழ், சாலை­கள் வலுப்­ப­டுத்­து­தல், குளங்­கள் மேம்­ப­டுத்­து­தல், சிறு விளை­யாட்டு அரங்­கங்­கள், சமு­தா­யக் கூடங்­கள் என மொத்­தம் 27 கோடியே 66 இலட்­சத்து 53 ஆயி­ரம் ரூபாய் மதிப்­பீட்­டில் 46 பணி­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எரி­சக்­தித் துறை சார்­பில், கொத்­தக்­கோட்டை, கடி­யாப்­பட்டி, வார்ப்­பட்டு, விச­லூர், செங்­க­மேடு, மத­கம், குழி­பிறை ஆகிய இடங்­க­ளில் 47 கோடியே 85 இலட்­சத்து 70 ஆயி­ரம் ரூபாய் மதிப்­பீட்­டில்  புதிய துணை மின் நிலை­யங்­கள், கீர­மங்­க­லம் மற்­றும் வடு­கப்­பட்­டி­யில் 8 கோடியே 10 இலட்­சத்து 40 ஆயி­ரம் ரூபாய் மதிப்­பீட்­டில் துணை மின் நிலை­யங்­க­ளின் திறன் மின்­மாற்­றி­யின் திறன் கூட்­டு­தல்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பள்­ளிக் கல்­வித் துறை சார்­பில், அனை­வ­ருக்­கும் கல்­வித் திட்­டத்­தின் கீழ் ஒடு­கம்­பட்டி, கீர­னூர், புலி­யூர், வேலா­டிப்­பட்டி, கல்­லாக்­கோட்டை, கறம்­பக்­குடி, ரெகு­நா­த­பு­ரம், மாத்­தூர் (சிறப்பு),  பெருங்­க­ளூர், அரி­ம­ளம், கழ­னி­வா­சல், கீழ­ப­ழு­வஞ்சி, விரா­லி­மலை, இலுப்­பூர், ஆல­வ­யல், சூரி­யூர், மேல­சி­வ­புரி, ஆவு­டை­யார்­கோ­வில், திரு­ம­யம், நக­ரப்­பட்டி, மண­மேல்­குடி, நல்­லூர், அம்­மாப்­பட்­டி­னம், பொன்­ன­க­ரம், கொத்­த­மங்­க­லம், சிலட்­டூர், நெடு­வா­சல், வல்­லத்­தி­ராக்­கோட்டை, கீர­மங்­க­லம், திரு­நல்­லூர் ஆகிய இடங்­க­ளில் உள்ள அரசு மேல்­நிலை மற்­றும் உயர்­நி­லைப் பள்­ளி­க­ளில் 46 கோடியே 88 இலட்­சத்து 28 ஆயி­ரம் ரூபாய் மதிப்­பீட்­டில் கூடு­தல் வகுப்­ப­றைக் கட்­ட­டங்­கள்,  கழிப்­ப­றை­கள், சுற்­றுச்­சு­வர்­கள், குடி­நீர் வச­தி­கள், கூடு­தல் கட்­ட­டங்­கள், ஆய்­வ­கம்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப் பிற்­ப­டுத்­தப்­ப­ பட்­டோர் மற்­றும் சிறு­பான்­மை­யி­னர் நலத் துறை சார்­பில், கறம்­பக்­கு­டி­யில் 8 கோடியே 41 இலட்­சத்து 50 ஆயி­ரம் ரூபாய் மதிப்­பீட்­டில் கல்­லூரி மாண­வி­யர்­க­ளுக்­கான சமூக நீதி விடு­திக் கட்­ட­டம்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">வரு­வாய் மற்­றும் பேரி­டர் மேலாண்­மைத் துறை சார்­பில், கறம்­பக்­கு­டி­யில் 35 இலட்­சம் ரூபாய்  மதிப்­பீட்­டில் வரு­வாய் ஆய்­வா­ளர் அலு­வ­லத்­து­டன் கூடிய குடி­யி­ருப்­புக் கட்­ட­டம்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை சார்­பில்,  அறந்­தாங்கி, திரு­ம­யம், கந்­தர்­வக்­கோட்டை ஆகிய சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் உள்ள ஆள­பி­றந்­தான், செங்­கீரை, வத்­த­னா­கோட்டை ஆகிய கிரா­மங்­க­ளில் 9 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில்  முத­ல­மைச்­ச­ரின் சிறு விளை­யாட்டு அரங்­கங்­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கால்­நடை பரா­ம­ரிப்பு, பால்­வ­ளம், மீன்­வ­ளம் மற்­றும் மீன­வர் நலத் துறை சார்­பில், கறம்­பக்­கு­டி­யில் 65 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் கால்­நடை மருந்­த­கக் கட்­ட­டம், கோட்­டைப்­பட்­டி­னம்  மீன்­பிடி  இறங்­கு­த­ளத்­தில் 5 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் புதிய படகு நிறுத்­தும் தளம் மற்­றும் நிரு­வாக கட்­ட­டம், ஜெக­தாப்­பட்­டி­னம் மீன்­பிடி இறங்­கு­த­ளத்­தில் 1 கோடியே 36 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் படகு நிறுத்­தும் தளம் தூர் வாரு­தல் மற்­றும் வலை பின்­னும் கூடம் அமைக்­கும் பணி­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை சார்­பில்,  புதுக்­கோட்டை அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் 3 கோடியே 62 இலட்­சம் ரூபாய்  மதிப்­பீட்­டில் கழி­வு­நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யக் கட்­ட­டம் அமைக்­கும் பணி­கள் மற்­றும் 2 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில்   விடு­திக் கட்­ட­டங்­களை மேம்­ப­டுத்­தும் பணி­கள்,  கறம்­பக்­குடி அரசு மருத்­து­வ­ம­னை­யில் 3 கோடியே 50 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் கூடு­தல் கட்­ட­டம், சுப்­ர­ம­ணி­ய­பு­ரம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் 3 கோடியே 50 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் கூடு­தல் கட்­ட­டம்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நக­ராட்சி நிரு­வா­கம் மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை சார்­பில், அறந்­தாங்கி நக­ராட்சி வார சந்தை அரு­கில் 20 கோடியே 54 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் புதிய நவீன வச­தி­க­ளு­டன் கூடிய பேருந்து நிலை­யம் அமைக்­கும் பணி­கள், புதுக்­கோட்டை மாந­க­ராட்சி, ராசாப்­பட்டி நடு­நி­லைப் பள்­ளி­யில் 34 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் கூடு­தல் வகுப்­ப­றைக் கட்­ட­டங்­கள், சிவ­பு­ரம் தொடக்­கப்­பள்­ளி­யில் 35 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் கூடு­தல் வகுப்­ப­றை­கள், திருக்­கட்­டளை தொடக்­கப்­பள்­ளி­யில்  72 இலட்­சத்து 60 ஆயி­ரம் ரூபாய் மதிப்­பீட்­டில் இரண்டு தளங்­க­ளு­டன் கூடிய பள்­ளிக் கட்­ட­டம், புதுக்­கோட்டை மாந­க­ராட்­சி­யில் கீழ 4ஆம் வீதி மற்­றும் வடக்கு 2ஆம் வீதி­யில் 7 கோடியே 86 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் மண்­டல அலு­வ­ல­கக் கட்­ட­டம், புதுக்­கோட்டை மாந­க­ராட்சி சந்­தைப்­பேட்டை பகு­தி­யில் 3 கோடியே 98 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் மீன் மார்க்­கெட் அமைக்­கும் பணி­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">என மொத்­தம், 201 கோடியே 70 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டி­லான 103 புதிய திட்­டப் பணி­க­ளுக்கு முத­ல­மைச்­சர் அவர்­கள் நேற்­றைய தினம் அடிக்­கல் நாட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் பய­னா­ளி­க­ளுக்கு அரசு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கிய விவ­ரங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">வரு­வாய் மற்­றும் பேரி­டர் மேலாண்­மைத் துறை சார்­பில், 12,618 பய­னா­ளி­க­ளுக்கு விலை­யில்லா வீட்­டு­ம­னைப் பட்­டாக்­கள், 13 பய­னா­ளி­க­ளுக்கு கருணை அடிப்­ப­டை­யில் பணி நிய­மன ஆணை­கள், 217 பய­னா­ளி­க­ளுக்கு சமூக பாது­காப்பு திட்­டம் மூலம் திரு­மண உத­வித்­தொகை, இயற்கை மரண மற்­றும் ஈமச்­ச­டங்­கிற்­கான உத­வித்­தொகை, கல்வி உத­வித்­தொகை, விபத்து மர­ணம் மற்­றும் ஈமச்­ச­டங்கு உத­வித்­தொகை, 3,107 பய­னா­ளி­க­ளுக்கு இல­வச நத்­தம் செட்­டில்­மெண்ட் வீட்­டு­ம­னைப் பட்­டாக்­கள், ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் நலத் துறை சார்­பில், 2,874 பய­னா­ளி­க­ளுக்கு இல­வச வீட்­டு­ம­னைப் பட்­டாக்­கள், 47 பய­னா­ளி­க­ளுக்கு விலை­யில்லா சல­வைப் பெட்­டி­கள், விலை­யில்லா தையல் இயந்­தி­ரங்­கள் ஆகிய உத­வி­கள், தாட்கோ சார்­பில், 76 பய­னா­ளி­க­ளுக்கு ஆட்டு பண்ணை, ஆட்டோ, கணிணி விற்­பனை நிலை­யம், கறவை மாடு­கள், சுமை­தூக்­கும் வாக­னம், டிராக்­டர், நில­வு­டைமை திட்­டம், புகைப்­பட கடை, வாகன விற்­பனை கடை, வாடகை வாக­னம், வீட்டு உப­யோக பொருட்­கள் கடை, வெல்­டிங் கடை, ஜெராக்ஸ் கடை ஆகி­ய­வற்­றிற்­கான கடன் உத­வி­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஊரக வளர்ச்சி மற்­றும் ஊராட்­சித் துறை சார்­பில், 1,101 பய­னா­ளி­க­ளுக்கு இலங்கை தமி­ழர் மறு­வாழ்­வுத் திட்­டம், கலை­ஞ­ரின் கனவு இல்­லம், முத­ல­மைச்­ச­ரின் வீடு­கள் மறு­கட்­டு­மா­னத் திட்­டம் ஆகிய திட்­டங்­க­ளின் கீழ் வீடு­கள், 4 பய­னா­ளி­க­ளுக்கு கருணை அடிப்­ப­டை­யில் பணி­நி­ய­ம­னம், சமூக நலன் மற்­றும் மக­ளிர் உரி­மைத் துறை சார்­பில், 17,107 பய­னா­ளி­க­ளுக்கு சமு­தாய முத­லீட்டு நிதி, வங்­கிக் கடன் இணைப்பு, வட்­டார வணிக வள மையம் தொழிற்­க­டன் ஆகி­ய­வற்­றின் கீழ் உத­வி­கள், 88 பய­னா­ளி­க­ளுக்கு பெண் குழந்­தை­கள் பாது­காப்­புத் திட்­டத்­தின் கீழ் உத­வி­கள், 122 பய­னா­ளி­க­ளுக்கு அன்­புக் கரங்­கள் திட்­டத்­தின் கீழ் உத­வி­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கூட்­டு­றவு, உணவு மற்­றும் நுகர்­வோர் பாது­காப்­புத் துறை சார்­பில், 3,105 பய­னா­ளி­க­ளுக்கு கால்­நடை பரா­ம­ரிப்­புக் கடன், டாப்­செட்கோ கடன், டாம்கோ கடன், பணி­யா­ளர் கூட்­டு­றவு சங்க கடன், பயிர்க்­க­டன், மக­ளிர் சுய உத­விக் குழு கடன், வீடு அட­மா­னக் கடன், வீட்­டு­வ­ச­திக் கடன்­கள், 500 பய­னா­ளி­க­ளுக்கு புதிய குடும்ப அட்­டை­கள், தொழி­லா­ளர் நலன் மற்­றும் திறன் மேம்­பாட்­டுத் துறை சார்­பில், 20 பய­னா­ளி­க­ளுக்கு ஓய்­வூ­தி­யம், இயற்கை மர­ணத்­திற்­கான உத­வி­கள், வேளாண்மை மற்­றும் உழ­வர் நலத் துறை சார்­பில், 718 பய­னா­ளி­க­ளுக்கு கலை­ஞ­ரின்அனைத்து கிராம ஒருங்­கி­ணைந்த வேளாண் வளர்ச்­சித் திட்­டம், தேசிய சமை­யல் எண்­ணெய் இயக்­கம், முத­ல­மைச்­ச­ரின் மண்­ணு­யிர் காத்து மன்­னு­யிர் காப்­போம் திட்­டம், நெல் நடவு இயந்­தி­ரங்­கள் வழங்­கு­தல், தேசிய தோட்­டக்­கலை இயக்­கம், தேசிய வேளாண்மைவளர்ச்சி திட்­டம், நுண்­ணீர் பாச­னம், மாநில தோட்­டக்­கலை வளர்ச்­சித் திட்­டம் ஆகி­ய­வற்­றின் கீழ் உத­வி­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மற்­றும் சிறு­பான்­மை­ யி­னர் நலத் துறை சார்­பில், 190 பய­னா­ளி­க­ளுக்கு அழகு கலை நிலை­யம், ஆடு வளர்ப்பு, இட்லி கடை, இல­வச தையல் இயந்­தி­ரம், எண்­ணெய் வியா­பா­ரம், கரவை மாடு, கல்வி உத­வித் தொகை, காய்­கறி வியா­பா­ரம், கீற்று முடை­தல், கூடை பின்­னல்,தையல் தொழில், பால் வியா­பா­ரம் போன்ற பல்­வேறு சிறு தொழில்­கள் தொடங்­கு­வ­தற்கு நிதி உத­வி­கள், 1,077 இல­வச வீட்­டு­ம­னைப் பட்­டாக்­கள்; மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் நலத் துறை சார்­பில், 100 பய­னா­ளி­க­ளுக்கு இணைப்பு சக்­க­ரம் பொருத்­தப்­பட்ட பெட்­ரோல் ஸ்கூட்­டர், தமிழ்­நாடு நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யம் சார்­பில், 300 பய­னா­ளி­க­ளுக்கு திற­னுக்­கேற்ப வீடு கட்­டும் திட்­டத்­தின் கீழ் உத­வி­கள், எரி­சக்­தித் துறை சார்­பில், 350 பய­னா­ளி­க­ளுக்கு கலை­ஞ­ரின் அனைத்து கிராம ஒருங்­கி­ணைந்த வேளாண் வளர்ச்­சித் திட்­டம், விவ­சாய மின் இணைப்­பு­கள் ஆகி­ய­வற்­றின் கீழ் உத­வி­கள், கால்­நடை பார­ம­ரிப்பு, பால்­வ­ளம், மீன்­வ­ளம் மற்­றும் மீன்­வ­ளத் துறை சார்­பில், 216 பய­னா­ளி­க­ளுக்கு அலை­கள் திட்­டத்­தின் கீழ் மீனவ மக­ளி­ருக்கு நுண் கடன் வழங்­கு­தல், படகு நிறுத்­தும் தளம் தூர் வாரு­தல், வலை பின்­னும் கூடம் அமைத்­தல், புதிய படகு நிறுத்­தும் தளம் அமைத்­தல், மீனவ மக­ளி­ருக்கு கடற்­பாசி வளர்ப்­ப­தற்கு மானி­யம், வெற்றி நிச்­ச­யம் திட்­டத்­தின் கீழ் கடற்­பாசி வளர்ப்பு தொழில்­நுட்ப பயிற்சி சான்று, மீன் உணவு பொருட்­கள் தொழில்­நுட்ப பயிற்சி மற்­றும் சான்­று­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">என பல்­வேறு துறை­க­ளின் சார்­பில், மொத்­தம் 341 கோடியே 77 இலட்­சத்து 22 ஆயி­ரம் ரூபாய் மதிப்­பி­லான நலத்­திட்ட உத­வி­களை  43,993 பய­னா­ளி­க­ளுக்கு முத­ல­மைச்­சர் அவர்­கள் நேற்­றைய தினம் வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்தவிழா­வில், நக­ராட்சி நிர்­வா­கத் துறை அமைச்­சர் கே.என்.நேரு, இயற்கை வளங்­கள் துறை  அமைச்­சர் எஸ்.இர­கு­பதி, கூட்­டு­ற­வுத் துறை அமைச்­சர் கே.ஆர். பெரி­ய­க­ருப்­பன், போக்­கு­வ­ரத்து மற்­றும் மின்­சா­ரத் துறை அமைச்­சர் எஸ்.எஸ்.சிவ­சங்­கர், பள்­ளிக் கல்­வித் துறை அமைச்­சர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி, பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலத்­துறை அமைச்­சர் சிவ.வீ. மெய்­ய­நா­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் திருச்சி சிவா, ஆ.ராசா, துரை வைகோ, கே.நவாஸ் கனி, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் டாக்­டர் வீ.முத்­து­ராஜா, தி.ராமச்­சந்­தி­ரன், எம்.சின்­ன­துரை, பிர­பா­க­ரன், புதுக்­கோட்டை மாவட்ட ஆட்­சித் தலை­வர் திரு­மதி மு.அருணா, உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் மற்­றும் அரசு உயர் அலு­வ­லர்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>