<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/11/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,348,958,941" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Nov 11 2025 03:48:34 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251111T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="11112025-CHN-11" position.sequence="11" ex-ref="11112025-CHN-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="54">மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக – தமிழ்நாட்டில் 25 ‘அன்புச் சோலை’ மையங்கள்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="CMPhoto13_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, நவ.11–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மூத்த குடி­மக்­க­ளின் நல்­வாழ்வை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக, 25 “அன்­புச் சோலை” மையங்­களை திருச்­சி­
ராப்­பள்­ளி­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­ யில் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தொடங்கி வைத்­தார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் நேற்று (10.11.2025) திருச்­சி­ரா ப்­பள்ளி, பொன்­ம­லை­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில், சமூக நலன் மற்­றும் மக­ளிர் உரி­மைத்­துறை சார்­பில் மூத்த குடி­மக்­க­ளின் நல்­வாழ்வை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக “அன்­புச் சோலை” மையங்­கள் ஒரு மாந­க­ராட்­சி­யில் இரண்டு வீதம் 10 மாந­க­ராட்­சி­க­ளில் 20 மையங்­கள், சென்னை பெரு­ந­க­ராட்­சி­யில் 3 மையங்­கள் மற்­றும் தொழில் மாவட்­டங்­க­ளான இரா­ணிப்­பேட்டை மற்­றும் கிருஷ்­ண­கி­ரி­யில் 2 மையங்­கள் என மொத்­தம் 25 “அன்­புச் சோலை” மையங்­களை தொடங்கி வைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சமூக நலன் மற்­றும் மக­ளிர் உரி­மைத்­துறை மூல­மாக குழந்­தை­கள், மக­ளிர், கல்வி பயி­லும் மாணவ, மாண­வி­யர், திரு­நங்­கை­கள் மற்­றும் முதி­யோர் அனை­வ­ரை­யும் பேணி­காக்­கும் வகை­யில் பல்­வேறு நலத்­திட்­டங்­கள் மற்­றும் சட்­டங்­கள் இத்­து­றை­யின் மூல­மா­கச் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆத­ர­வற்ற மற்­றும் கைவி­டப்­பட்ட முதி­யோர்­க­ளுக்­காக முதி­யோர் இல்­லங்­கள், ஒருங்­கி­ணைந்த வளாக இல்­லங்­கள், நட­மா­டும் மருத்­துவ அல­கு­கள் மற்­றும் ஓய்­வூ­தி­யத் திட்­டங்­கள் உள்­ளிட்ட மூத்த குடி­மக்­க­ளுக்­கான பல்­வேறு நலத்­திட்­டங்­களை தமிழ்­நாடு அரசு செயல்­ப­டுத்தி வரு­கி­றது.  முதி­ய­வர்­கள் அமை­தி­யான, கண்­ணி­ய­மான மற்­றும் நிறை­வான வாழ்க்­கையை நடத்­து­வதை உறு­தி­செய்து, அத்­தி­யா­வ­சிய வச­தி­களை வழங்­கு­வதே இத்­திட்­டங்­க­ளின் நோக்­கம் ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மூத்த குடி­மக்­க­ளுக்­கான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“அன்­புச் சோலை” மையங்­கள்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் சமூக நலன் மற்­றும் மக­ளிர் உரி­மைத்­துறை சார்­பில் மூத்த குடி­மக்­க­ளின் ஒட்­டு­மொத்த நல்­வாழ்வை உறுதி செய்­வ­தற்­காக ஒரு மாந­க­ராட்­சி­யில் இரண்டு அன்­புச் சோலை­கள் வீதம், மதுரை, கோயம்­புத்­தூர், திருச்­சி­ராப்­பள்ளி, சேலம், திருப்­பூர், ஈரோடு, தூத்­துக்­குடி, வேலூர், தஞ்­சா­வூர் மற்­றும் திண்­டுக்­கல் ஆகிய 10 மாந­க­ராட்­சி­க­ளில் 20 அன்­புச் சோலை­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. மேலும், 2 தொழில்­துறை மாவட்­டங்­க­ளான இரா­ணிப்­பேட்டை மற்­றும் கிருஷ்­ண­கிரி, பெரு­ந­கர மாந­க­ராட்­சி­யான சென்­னை­யில் தண்­டை­யார்­பேட்டை, சோழிங்­க­நல்­லூர் மற்­றும் விரு­கம்­பாக்­கம் ஆகிய மூன்று இடங்­க­ளில் ‘’அன்­புச்­சோலை’’ மையங்­கள் தொடங்­கப்­பட்டு, இயன்­முறை மருத்­துவ சேவை­கள் (Physiotherapy), யோகா, பொழு­து­போக்கு அம்­சங்­கள் மற்­றும் நூல­கம் போன்­றவை வழங்­கப்­ப­ட­வுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அன்­புச்­சோ­லை­யின் முக்­கிய நோக்­கங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முதி­யோ­ருக்கு வழங்­கப்­ப­டும் இயன்­முறை மருத்­துவ சேவை­கள், பொழு­து­போக்கு, திறன் மேம்­பாடு நிகழ்­வு­கள் மூலம் மன­மும், உட­லும் சுறு­சு­றுப்­பு­டன் இருக்­கச் செய்­தல், முதி­யோர் ஒரு­வ­ரு­டன் ஒரு­வர் தொடர்புகொண்டு, சமூக உற­வு­களை வலுப்­ப­டுத்­து­தல், ஆண், பெண் இரு­வ­ரும் வேலை பார்க்­கும் குடும்­பங்­க­ளுக்கு, அவர்­க­ளது மூத்த உறுப்­பி­னர்­கள் பாது­காப்­பாக பரா­ம­ரிக்­கப்­ப­டு­வதை உறுதி செய்­தல் ஆகி­ய­வற்றை நோக்­க­மாக கொண்டு அன்­புச் சோலை மையங்­கள் செயல்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அன்­புச்­சோ­லை­யின் சமூக நோக்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்­புச்­சோலை திட்­ட­மா­னது, முதி­யோர்­களை போற்­றும் தமிழ் பாரம்­ப­ரி­யத்தை பிர­தி­ப­லிப்­ப­தோடு, முதி­யோர்­க­ளின் பாது­காப்­பை­யும், நன்­மு­றை­யில் பரா­ம­ரிப்­ப­தை­யும் உறுதி செய்­வ­தால் அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ருக்கு மன அமை­தியை ஏற்­ப­டுத்­து­கி­றது.  இத­னால் முழு­மை­யான நிறு­வ­னம் சார்ந்த பரா­ம­ரிப்பு தேவையை குறைத்­தும், குடும்ப பிணைப்பை வலுப்­ப­டுத்­த­வும் உத­வு­கி­றது.  மேலும், வேலைக்கு செல்ல ஆர்­வ­முள்ள பெண்­கள், தங்­கள் வீட்­டி­லுள்ள முதி­யோர்­களை பகல் நேரங்­க­ளில் பரா­ம­ரிக்க இய­லா­த­தால் வேலைக்கு செல்ல இய­லாதநிலை­யுள்­ளது.  எனவே, வேலைக்கு செல்­லும் பெண்­க­ளுக்­கா­க­வும், வேலைக்கு செல்ல ஆர்­வ­முள்ள பெண்­க­ளுக்­கா­க­வும், அவர்­க­ளது வீட்டு முதி­ய­வர்­க­ளுக்கு தனி­மை­யில்­லா­மல் நேரத்தை சிறந்த முறை­யில் செலவு செய்து, மகிழ்­வாக வாழ வழி­வகை செய்­யும் நோக்­கத்­தோ­டும் இம்­மை­யங்­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மூத்த குடி­மக்­க­ளின் நல்­வாழ்வை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக திருச்­சி­ ராப்­பள்­ளி­யில் நேற்திறைய தி­னம் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில், 25 அன்­புச்­சோலை மையங்­களை காணொலிவாயி­லாக முத­ல­மைச்­சர் அவர்­கள் தொடங்கி வைத்து, மூத்த குடி­மக்­க­ளுக்கு மக­ளிர் சுய­உ­த­விக் குழு­வி­ன­ரால் தயா­ரிக்­கப்­பட்ட சிறு­தா­னிய உணவு வகை­கள் மற்­றும் சத்­து­மாவு கொண்ட பெட்­ட­கங்­களை வழங்கி, அவர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி, கேரம் விளை­யா­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­நி­கழ்ச்­சி­யில், நக­ராட்சி நிர்­வா­கத் துறை அமைச்­சர் கே.என்.நேரு, இயற்கை வளங்­கள் துறை  அமைச்­சர் எஸ்.இர­கு­பதி, சமூக நலன் – மக­ளிர் உரி­மைத் துறை அமைச்­சர் திரு­மதி. பி.கீதா ஜீவன், போக்­கு­வ­ரத்து மற்­றும் மின்­சா­ரத் துறை அமைச்­சர் எஸ்.எஸ். சிவ­சங்­கர், பள்­ளிக் கல்­வித் துறை அமைச்­சர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி, பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலத்­துறை அமைச்­சர் சிவ.வீ.மெய்­ய­நா­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் திருச்சி சிவா, ஆ.ராசா, துரை வைகோ, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் டாக்­டர் வீ.முத்­து­ராஜா, அப்­துல் சமது, ஸ்டாலின் குமார், தியா­க­ரா­ஜன், இனிகோ இரு­த­ய­ராஜ், திருச்­சி­ராப்­பள்ளி மாந­க­ராட்சி மேயர் மு.அன்­ப­ழ­கன், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.எம்.அப்­துல்லா, சமூக நலன் மற்­றும் மக­ளிர் உரி­மைத்­துறை செய­லா­ளர் திரு­மதி. ஜெயஸ்ரீ முர­ளீ­த­ரன், சமூக நல இயக்­கு­நர் திரு­மதி. மா.சௌ.சங்­கீதா, திருச்­சி­ராப்­பள்ளி மாவட்ட ஆட்­சித் தலை­வர் வே.சர­வ­ணன், திருச்­சி­ராப்­பள்ளி மாந­க­ராட்சி ஆணை­யர் எல், மது­பா­லன், உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் மற்­றும் அரசு உயர் அலு­வ­லர்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>