<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/11/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,37,609,1500" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Nov 11 2025 03:47:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251111T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="11112025-CHN-12" position.sequence="12" ex-ref="11112025-CHN-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">மதுரை மாவட்டம் – கோ.புதுப்பட்டியில் </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">ரூ.70 கோடி மதிப்பில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை கட்டடங்கள் கட்டும் பணி!   </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் – பி.மூர்த்தி  அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup456925_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup447568_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup447441_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="healthminister_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="FNews10.11.20_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="Theerargal3_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மதுரை, நவ.11</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மதுரை மாவட்­டம், திருப்­ப­ரங்­குன்­றம் வட்­டம் கோ. புதுப்­பட்­டி­யில் ரூபாய் 70 கோடி மதிப்­பீட்­டில் அரசு ஓமி­யோ­பதி மருத்­து­வக் கல்­லூரி மற்­றும் மருத்­து­வ­மனை கட்­ட­டங்­கள் கட்­டு­வ­தற்கு மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், வணி­க­வரி மற்­றும் பதி­வுத்­துறை அமைச்­சர் பி.மூர்த்தி ஆகி­யோர் நேற்று (10.11.2025) அடிக்­கல் நாட்டி பணி­களை துவக்கி வைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">வணி­க­வரி மற்­றும் பதி­வுத்­துறை அமைச்­சர் பி.மூர்த்தி  மதுரை மாவட்­டம் அரசு ஓமி­யோ­பதி கல்­லூ­ரி­யின் பொன்­விழா ஆண்டு காலத்­தில் ரூபாய் 70 கோடி மதிப்­பீட்­டில் புதிய மருத்­து­வக் கல்­லூரி மற்­றும் மருத்­து­வ­மனை கட்­டி­டங்­க­ளுக்கு அடிக்­கல் நாட்­டப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஏற்­க­னவே இந்த கல்­லூரி இருந்த இடத்தை விட தற்­போது அமை­ய­வுள்ள இந்த இடம் இன்­னும் ஒரு சில ஆண்­டு­க­ளில் சிறப்­பு­மிக்க இட­மாக அமைய வாய்ப்­புள்­ளது. நினைக்­கப்­பட்­டுள்ள காலத்­திற்­குள் இந்த கட்­டி­டங்­கள் கட்டி முடிக்­கப்­பட்டு பேருந்து வசதி, சாலை வசதி உள்­ளிட்ட அனைத்து அடிப்­படை வச­தி­க­ளை­யும் மேற்­கொள்­ளப்­பட்டு மிக விரை­வில் திறக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாட்­டில் உள்ள ஏழை, எளிய உள்­ளிட்ட அனைத்து மக்­க­ளும் உயர்­தர மருத்­துவ சேவை­களை பெற வேண்­டும் என்ற நோக்­கத்­தில் மாண்­பு­மிகு மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் அவர்­கள் ஓய்­வின்றி உழைத்து வரு­கி­றார். மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் மற்­றும் நலம் காக்­கும் ஸ்டாலின் போன்ற திட்­டங்­கள் பொது­மக்­க­ளி­டையே மிகுந்த வர­வேற்­பினை பெற்­றுள்­ளது. கொரோனா காலத்­தில் இந்­தி­யா­வுக்கே முன்­னோ­டி­யாக தமிழ்­நாட்­டில் சிறப்­பான மருத்­துவ சேவை­களை வழங்­கி­யது நமது அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">’கிரா­மங்­க­ளில் நலம் காக்­கும் ஸ்டாலின் திட்­டம் மிகுந்த வர­வேற்­பினை பெற்­றுள்­ளது. அரசு மருத்­து­வர்­கள் காலை முதல் மாலை வரை கிரா­மங்­கள் தோறும் முகா­மிட்டு தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் கிடைக்­கும் மருத்­துவ சேவையை விட அதி­க­ மாக சிறப்­பான மருத்­துவ சேவை­யினை வழங்கி வரு­கி­றார்­கள். இந்த முகாம்­க­ளில் முழு உடல் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்டு அதற்­கான அறிக்கை வழங்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இதன் மூலம் உடல்­நல பரி­சோ­தனை என்­பது கட்­டா­யம் அல்ல அது ஒரு தேவை என்­பதை பொது­மக்­க­ளு­டைய ஒரு விழிப்­பு­ணர்வு ஏற்­பட்­டுள்­ளது. கொரோனா காலத்­தில் அரசு ஹோமி­யோ­பதி மருத்­து­வ­ம­னை­யில் மரு த்­து­வர்­கள் மற்­றும் செவி­லி­யர்­கள் உத­வி­யு­டன் கோவிட் சிகிச்­சை­கள் சிறப்­பாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சிறந்த பணி என்­பது மருத்­து­வப்­பணி என்­ப­தற்­கி­ணங்க இது போன்ற சிறப்­பான சிகிச்­சை­களை மருத்­து­வர்­கள் வழங்கி வரு­வ­தால் ஆபத்­தான காலத்­தில் பொது­மக்­கள் அனை­வ­ருக்­கும் கட­வு­ளுக்கு அடுத்­த­ப­டி­யாக மருத்­து­வர்­களை கட­வு­ளாக நினைக்­கின்­ற­னர்  என தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் அவர்­கள், மதுரை அரசு ஓமி­யோ­பதி மருத்­து­வக் கல்­லூ­ரிக்கு புதிய இடத்­தில் ரூ.70 கோடி செல­வில் கட்­டி­டங்­கள் கட்­டப்­ப­டும் என்ற அறி­விப்­பின்­படி, இன்று மதுரை மாவட்­டம், திருப்­ப­ரங்­குன்­றம் வட்­டம், கோ.புதுப்­பட்­டி­யில் அரசு ஓமி­யோ­பதி மருத்­து­வக் கல்­லூரி கட்­டி­டங்­கள் கட்­டும் பணி அடிக்­கல் நாட்­டப்­பட்டு கட்­டி­டப் பணி­கள் தொடங்கி வைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்­தப்­ப­கு­தி­யில் 5.11  ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் மருத்­து­வ­மனை மருத்­து­வக்­கல்­லூரி கட்­டி­டம், மாணவ, மாண­வி­க­ ளுக்­கான தங்­கும் விடு­தி­கள் அமைக்­கப்­பட வுள்­ளது. AIMS மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யை­யொட்டி அமை­ய­வுள்ள இந்த ஹோமி­யோ­பதி மருத்­து­வ­மனை  இன்­னும் இரண்டு ஆண்­டு­க­ளில் பிர­மிக்­கும் வகை­யில் அமைக்­கப்­பட்­டி­ருக்­கும். மாண­வர்­கள் என்­னி­டம் வைத்த கோரிக்­கை­க­ளுக்­கி­ணங்க சாலை வசதி, போக்­கு­வ­ரத்து வச­தி­கள் உள்­ளிட்ட அனைத்து அடிப்­படை வச­தி­க­ளு­டன் கூடிய மருத்­து­வ­மனை கட்­டி­டத்தை தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் அமைத்­துத் தரு­வார்­கள் என உறு­தி­ய­ளிக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தற்­போது மதுரை திரு­மங்­க­லத்­தில் உள்ள அரசு ஹோமி­யோ­பதி மருத்­து­வக் கல்­லூரி ஒரு ஏரிப் பகு­தி­யில் அமைந்­துள்­ள­தால் அடிக்­கடி நீரி­னால் பாதிக்­கப்­பட்டு வரு­கி­றது. மேலும் நிர்­வாக கட்­டி­ டம், பெண்­கள் விடுதி மற்­றும் ஆண்­கள் விடு­தி­கள் வெள்­ள­நீ­ரி­னால் பாதிக்­கப்­பட்டு பாழ­டைந்து வரு­கின்­றன. இத­னால் புற­நோ­யா­ ளி­கள் சேவை­யும் மிக­வும் பாதிக்­கப்­பட்டு வரு­கி­றது. எனவே, நானும் மாவட்ட ஆட்­சி­யர் அவர்­க­ளும், மதுரை மாவட்­டம், கே.புதுப்­பட்­டி­யில் அரசு ஓமி­யோ­பதி மருத்­து­வக் கல்­லூ­ரிக்கு புதிய கட்­டி­டங்­கள் கட்ட  ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்டு  இடம் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">05.09.2023 அன்று ஒன்­றிய ஆயுஷ் அமைச்­ச­கத்­தால் சென்­னை­யில் நடை­பெற்ற ஆய்­வுக் கூட்­டத்­தின் போது, புதிய ஹோமி­யோ­பதி மருத்­து­வக் கல்­லூரி மற்­றும் மருத்­து­வ­மனை கட்­டு­வது தொடர்­பாக ஒன்­றிய ஆயுஷ் அமை ச்­ச­ரு­டன் ஒரு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டது. அத­னைத் தொட ர்ந்து சட்­டப்­பே­ர­வை­யில் மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­து­றை­யின் இந்­தாண்டு மானி­யக்­கோ­ரிக்கை அறி­விப்பு (அ.எண்.13) ன்படி ரூ.70 கோடி செல­வில் மதுரை அரசு ஹோமி­யோ­பதி மருத்­துவ கல்­லூ­ரிக்கு புதிய கட்­டி­டங்­கள் கட்­டப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்டு இன்று அடிக்­கல் நாட்­டப்­பட்டு பணி­கள் தொடங்கி வைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஆயுஷ் அமைச்­ச­கம் என்­பது ஆயுர்­வேதா, யோகா, யுனானி, சித்தா, ஓமி­யோ­பதி ஆகும். முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் ஆட்­சிக்­கா­லத்­தில் தான் இந்­தி­யா­வில் எந்த மாநி­லத்­தி­லும் இல்­லா­மல் தமிழ்­நாட்­டில் தான் இந்த ஆயுஷ் அதா­வது ஆயுர்­வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமி­யோ­பதி என அனைத்­திற்­கும் மருத்­து­வக்­கல்­லூரி  அமைந்­துள்­ளது. தற்­போது ஓமி­யோ­பதி மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னையை முத­ல­மைச்­சர் அவர்­கள் இன்று தொடங்­கி­ யுள்­ளார். மேலும் சித்த மருத்­துவ பல்­க­லைக்­க­ழ­க­மும் விரை­வில் அமை­ய­வுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கொரோனா பெருந்­தொற்­றின்­போது மதுரை, தோப்­பூர், அரசு நெஞ்­சக நோய் மருத்­து­வ­ம­னை­யில் 2020–ஆம் ஆண்டு 2,293 பேர் சிகிச்சை பெற்­ற­னர். 2021–ஆம் ஆண்டு 2,294 பேர் சிகிச்சை பெற்­ற­னர். 2022–ஆம் ஆண்டு 185 பேர் சிகிச்சை பெற்­ற­னர். தமிழ்­நாடு முழு­வ­தும் கோவிட் காலத்­தில் இந்­திய மருத்­துவ முறை மருத்­து­வ­ம­னை­க­ளில் மொத்­தம் 55,937 பேர் சிகிச்சை பெற்று குண­ம­டைந்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மதுரை அரசு இரா­சாசி மருத்­து­வ­ம­னை­யில் 2021 ஆண்­டிற்கு முன்­னர் 3,000 முதல் 4,000 புற பய­னா­ளர்­கள் வந்­த­னர். முத­ல­மைச்­சர் அவர்­கள் ஆட்­சிப்­பொ­றுப்­பேற்ற பின்­னர் தினந்­தோ­றும் 7,000 முதல் 9,000 புற பய­னா­ளர்­கள் வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மதுரை அரசு இரா­சாசி மருத்­து­வ­ம­னை­யில் ரூ.419.50 கோடி செல­வில் பல்­வேறு மருத்­துவ கட்­டி­டங்­கள் மற்­றும் உயர் மருத்­தவ உப­க­ர­ணங்­கள் தொடங்கி வைக்­கப்­பட்­டுள்­ளது. இதில், ரூ.313.25 கோடி – (Japan Internationl Cooperation Agency (JICA) நிதி­யு­த­வி­யு­டன், மதுரை அரசு இரா­சாசி மருத்­து­வ­ம­னை­யில், தரை மற்­றும் 6 தளங்­கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்­டி­டம், ரூ.7.99 கோடி – மதுரை அரசு இரா­சாசி மருத்­து­வ­ம­னை­யில் கேத்­லேப் கருவி, ரூ.2.89 கோடி - மதுரை அரசு இரா­சாசி மருத்­து­வ­ம­னை­யில், நெஞ்­சக மருத்­துவ பிரிவு கட்­டி­டம், ரூ.1.03 கோடி – மதுரை அரசு இரா­சாசி மருத்­து­வ­ம­னை­யில், கட்­டண படுக்கை தொகு­தி­கள், விபத்து மற்­றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்­கை­கள், ரூ.65 இலட்­சம் - மதுரை அரசு இரா­சாசி மருத்­து­வ­ம­னை­யில், சீமாங் கட்­டி­டம் தரை தளத்­தில் பார்­வை­யா­ளர்­கள் அம­ரும் கூடம், ரூ.21.95 இலட்­சம் – மதுரை அரசு இரா­சாசி மருத்­து­வ­ம­னை­யில், அவ­சர ஊர்தி, ரூ.2.47 இலட்­சம் - மதுரை அரசு இரா­சாசி மருத்­து­வ­ம­னை­யில், சப்­பாத்தி மிஷின், ரூ.41.25 கோடி – மதுரை அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­யில், கல்­வி­யி­யல் கூடம், ஆசி­ரி­யர் மற்­றும் ஆசி­ரி­ய­ரல்­லா­தோர் குடி­யி­ருப்பு,, ரூ.12.27 கோடி - மதுரை அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­யில், கூடு­தல் முது­நிலை மருத்­துவ படிப்பு மாண­வர்­கள் விடுதி, ரூ.9.39 கோடி - மதுரை அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­யில், கூடு­தல் மாண­வி­யர் விடுதி - 1 கட்­டி­டம், ரூ.9.12 கோடி - மதுரை அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­யில், கூடு­தல் மாண­வி­யர் விடுதி - 2 கட்­டி­டம், ரூ.8.60 கோடி - மதுரை அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­யில், கூடு­தல் மாண­வர்­கள் விடுதி கட்­டி­டம், ரூ.8.62 கோடி - மதுரை அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­யில், புதிய நூல­கக் கட்­டி­டம், ரூ.2.46 கோடி - மதுரை அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­யில், கருத்­த­ரங்­கம் சீர­மைப்பு, ரூ.1.74 கோடி - மதுரை அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­யில், விலங்­கு­கள் கூடம் என அனைத்­தும் அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மேலும் இன்று ரூ.50 இலட்­சம் செல­வில் உயர் மருத்­துவ கருவி மதுரை இரா­சாசி மருத்­து­வ­ம­னை­யில் DEXA Scan கருவி தொடங்கி வைக்­க­வுள்­ளோம் என்­பதை தெரி­வித்­துக்­கொள்­கி­றேன் என தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்­நி­கழ்ச்­சி­யில் இந்­திய மருத்­து­வம் (ம) ஹோமி­யோ­பதி துறை ஆணை­யா­ளர் திரு­மதி மு.விஜ­ய­லட்­சுமி, மாவட்ட வரு­வாய் அலு­வ­லர் க.அன்­ப­ழ­கன், அரசு ஹோமி­யோ­பதி கல்­லூரி மற்­றும் மருத்­து­வ­மனை முதல்­வர் மரு.பி.ராதா­மணி மற்­றும் அரசு அலு­வ­லர்­கள் உட்­பட பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி கவரைப்பேட்டை சேர்ந்த ஆர்.புவனேஷ் என்பவர் சவுத் ஆசியா இந்திய ஆணழகன் சங்கம் மற்றும் Beast knock out என்ற தலைப்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்ற மாபெரும் ‘மிஸ்டர் இந்தியா’ ஆணழகன் போட்டியில் 5 வது இடம் பிடித்த இவருக்கு முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தாராஜன் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். உடன் கே.ஜி.நமச்சிவாயம், கே.வி.நாகராஜ், கே.என்.பழனி, கிஷோர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>