<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/11/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,957,960" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Nov 11 2025 03:47:41 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251111T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="11112025-CHN-13" position.sequence="13" ex-ref="11112025-CHN-13.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="1.5">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="58">கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டத்தில் இளைஞரணியின் அறிவுத் தேரோட்டம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615459_13_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="vallivarkottam_13_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="24">ஒ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வ்­வொரு கல்­லா­கப் பார்த்­துப் பார்த்து வானு­யர் வள்­ளு­வர் கோட்­டத்தை தமிழ்­நாட்­டின் தலை­ந­க­ரில் வடி­வ­மைத்­த­வர் அப்­போது முத­ல­மைச்­ச­ராக இருந்த முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர். பல ஆண்­டு­க­ளாக ஓடா­மல் இருந்த திரு­வா­ரூர் தேரை தன் ஆட்­சிக்­கா­லத்­தில் ஓட்­டி­ய­வர் கலை­ஞர். அந்­தத் தேர் வடி­வில் சென்­னை­யில் வள்­ளு­வர் கோட்­டத்தை அமைத்­தார்.  உயர்ந்து நின்ற கோட்­டத்­தைக் கண்­டார். திறப்பு விழா­வுக்­குத் தேதி­யும் குறித்­தார். நெருக்­கடி நிலையை எதிர்த்­த­தால் அவ­ரது ஆட்­சி கலைக்­கப்­பட்­டது. ஆளு­நர் ஆட்­சி­யில் குடி­ய­ர­சுத் தலை­வர் அந்­தக் கோட்­டத்­தைத் திறந்து வைத்­த­போது, அதைக் கட்­ட­மைத்த கலை­ஞ­ருக்கு உரிய அழைப்­பில்லை. என்ன பாடு­பட்­டி­ருக்­கும் அவ­ரது உள்­ளம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தன் உணர்­வு­களை உடன்­பி­றப்­பு­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­வ­து­தானே கலை­ஞ­ரின் உள்­ளம். முர­சொ­லி­ யில் கடி­தம் எழு­தி­னார். ‘கோட்­டம் திறக்­கப்­ப­டு­கி­ற­து-­ கு­ற­ளோ­வி­யம் தீட்­டப்­ப­டு­கி­றது’ என்று தலைப்­பி­டப்­பட்ட அந்­தக் கடி­தத்­தின் இறு­திப் பகு­தி­யில், “இனிய திரு­மண விழா நடை­பெ­றும்­போது தாலி கட்­டும் காட்­சி­யி­னைக் காண முடி­யா­மல், மணப்­பந்­த­லுக்கு வெளியே நிற்­கின்ற தாயின் மன­தில் ஒரு­வி­தத் தவிப்பு இருந்­தா­லும், தன் அன்­புச் செல்­வத்­துக்கு நடை­பெ­றும் மண­விழா குறித்த மகிழ்ச்சி பொங்­கி­டத்­தானே செய்­யும் என் தங்க உடன்­பி­றப்பே அந்­தத் தாயின் மகிழ்ச்­சி­யைத்­தான் நான் பெறு­கி­றேன் இன்று” என்று குறிப்­பிட்­டி­ருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் இன்­றி­ருந்­தால், அந்த வள்­ளு­வர் கோட்­டத்­தின் பொன்­விழா ஆண்­டில்,  கழ­கத்­தின் இளை­ஞ­ரணி அதே வள்­ளு­வர் கோட்­டத்­தில் நடத்­திய  அறி­வுத் திரு­விழா கண்டு அக­ம­கிழ்ந்து, உணர்ச்­சி­மி­குந்த கடி­தத்தை நிச்­ச­யம் எழு­தி­யி­ருப்­பார். வள்­ளு­வர் கோட்­டத்தை சுற்­று­லாப் பய­ணி­க­ளின் பொழுது போக்கு இட­மாக கலை­ஞர் கட்­டி­யெ­ழுப்­ப­வில்லை. திருக்­கு­ற­ளின் பெரு­மை­யும் தமிழ் இலக்­கி­யம்-­பண்­பாட்­டின் அரு­மை­யும் உல­கின் பல நாடு­க­ளி­லி­ருந்து இங்கு வரு­ப­வர்­க­ளி­டம் போய்ச் சேர வேண்­டும் என்ற இலட்­சிய நோக்­கத்­து­டன் அதனை அமைத்­தார். தமிழ் மொழி சார்ந்­த-­த­மிழ்­நாட்­டின் சிறப்­பு­களை எடுத்­துக் கூறக்­கூ­டிய ஆய்­வ­ரங்­கு­கள் நடை­பெ­ற­வேண்­டும் என விரும்­பி­னார். முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் கட்­டப்­பட்டு, திரா­விட நாய­கர்   முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளால் புதுப்­பிக்­கப்­பட்­டுள்ள வள்­ளு­வர் கோட்­டத்­தில், துணை முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் தலை­மை­யி­லான இளை­ஞ­ரணி கலை­ஞ­ரின் எண்­ணத்தை, அறி­வுத் திரு­விழா என்று பெயர் சூட்­டப்­பட்ட இரு­நாள் நிகழ்­வு­க­ளின் வாயி­லாக நிறை­வேற்­றிக் காட்­டி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நவம்­பர் 8, 9 ஆகிய இரு­நாட்­க­ளும் நடை­பெற்ற அறி­வுத் திரு­வி­ழா­வில், முற்­போக்கு புத்­த­கக் காட்சி, புத்­தக வெளி­யீட்டு விழா, கருத்­த­ரங்­கம், வர­லாற்­றுப் புகைப்­ப­டக்­காட்சி என நிகழ்­வு­கள் நிறைந்த பொழு­து­கள், பொருள் பொதிந்­த­ன­வாக அமைந்­தன. தி.மு.க. எனும் அர­சி­யல் பேரி­யக்­கம் 75 ஆண்­டு­க­ளைக் கடந்து வீறு­நடை போடும் நிலை­யில், அதன் வர­லாற்றை இன்றைய தலை­மு­றை­யி­ன­ரும், ஆய்வு மாண­வர்­க­ளும் தெரிந்­து­கொள்­ளும் வகை­யில் ஏறத்­தாழ 1200 பக்­கங்­க­ளில் ‘காலத்­தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்­கிற கட்­டு­ரைத் தொகுப்பை துணை முத­ல­மைச்­சர்-­இ­ளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் தலை­மை­யி­லான குழு உரு­வாக்­கி­யுள்­ளது. அதனை வள்­ளு­வர் கோட்­டத்­தில் 8-–11–-2025 அன்று வெளி­யிட்டு வாழ்த்­தி­னார் முத­ல­மைச்­சர், நம் கழ­கத் தலை­வர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கழ­கத்­தின் மூத்த நிர்­வா­கி­கள், திரா­விட இயக்க எழுத்­தா­ளர்­கள், ஆய்­வா­ளர்­கள், சமூக செயற்­பாட்­டா­ளர்­கள், கலை-­இ­லக்­கிய பங்­க­ளிப்­பா­ளர்­கள், தோழ­மைக் கட்­சி­யி­னர், இந்­திய அள­வி­லா­னத் தலை­வர்­கள் உள்­ளிட்ட பல­ரும் எழு­தி­யுள்ள கட்­டு­ரை­கள், நேர்­கா­ணல்­கள் அடங்­கிய வர­லாற்று ஆவ­ண­மான அந்­தத் தொகுப்பு வெளி­யி­டப்­பட்­ட­து­டன், வள்­ளு­வர் கோட்­டம் வளா­கத்­தில் முற்­போக்கு புத்­த­கக் காட்­சி­யை­யும் கழ­கத் தலை­வர் திறந்து வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஆர்­வம் நிறைந்த இளை­ஞர்­களை ஆர்­வக்­கோ­ளா­று­க­ளாக மாற்­றி­வி­டக்­கூ­டிய ஆபத்­தான சக்­தி­கள் ஊடு­ரு­வி­யுள்ள  நிலை­யில், இளை­ஞர்­களை சரி­யான முறை­யில் அர­சி­யல்­ப­டுத்­து­வ­தற்­கேற்ற வகை­யி­லான புத்­தக அரங்­கு­கள் நிறைந்த திரு­விழா இது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பெரி­யார், அண்ணா, கலை­ஞர் போன்ற திரா­விட இயக்­கப் படைப்­பா­ளி­க­ளின் புத்­த­கங்­க­ளு­டன், அம்­பேத்­க­ரி­ய-­மார்க்­சி­ய-­பெண்­ணிய சிந்­தனை அடிப்­ப­டை­யி­லான புத்­த­கங்­க­ளும் இந்­தப் புத்­த­கக் காட்­சி­யில் இடம்­பெற்­றுள்­ளன. அத­னால்­தான், ‘‘கருப்­பு-­சி­வப்­பு-­நீ­லம் இவை மூன்­றும் இணைந்­தால் எந்­தக் காவி­யும் நம்மை எது­வும் செய்ய முடி­யாது’‘ என்று புத்­தக வெளி­யீட்டு விழா­வில் கழ­கத் தலை­வர் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திரா­வி­டம் என்­பது மறுக்­கப்­ப­டும் உரி­மை­களை மீட்­டெ­டுக்­கும் கருத்­தி­யல். அதற்­கா­னப் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வென்று காட்­டி­ய­து­தான் திரா­விட இயக்­கம். அனைத்து தரப்­பி­ன­ரை­யும் உள்­ள­டக்­கிய ஒருங்­கி­ணைந்த வளர்ச்­சிக்­குப் பெயர்­தான் திரா­விட மாடல். அந்த திரா­விட மாடல் அர­சின் துணை முத­ல­மைச்­சர், முற்­போக்கு எண்­ணம் கொண்ட அனைத்து அர­சி­யல் இயக்­கங்­க­ளின் பங்­க­ளிப்­பும் இருக்க வேண்­டும் என்ற உன்­னத நோக்­கத்­து­டன் புத்­த­கக் காட்­சி­யை­யும், இரு நாட்­கள் நடை­பெற்ற கருத்­த­ரங்­கத்­தை­யும் ஒருங்­கி­ணைத்­தி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நவம்­பர் 8ஆம் நாள் கழ­கப் பொதுச்­செ­ய­லா­ளர்- மொழிப்­போர் வீரர்- அமைச்­சர் துரை­மு­ரு­கன் அவர்­கள் கழக வர­லாற்­றுப் புகைப்­ப­டக் கண்­காட்­சி­யைத் திறந்து வைக்க, அத­னைத் தொடர்ந்து கழ­கத் தலை­வர் அவர்­கள் புத்­த­கத்தை வெளி­யிட்ட பிறகு, ‘இரு வண்­ணக் கொடிக்கு வயது 75‘ என்ற தலைப்­பி­லான கருத்­த­ரங்­கத்­தின் முதல் அமர்வு தொடங்­கி­யது. தி.மு.க.வின் பொதுக்­கூட்­டங்­கள் மாலை நேரக் கல்­லூ­ரி­கள் என்­றால், தி.மு.க. நடத்­தும் மாநா­டு­க­ளும் கருத்­த­ரங்­கு­க­ளும் திறந்­த­வெ­ளிப் பல்­க­லைக்­க­ழ­கங்­கள். ஒன்­றும் அறி­யாத பாம­ரர்­க­ளும் அர­சி­யல் தெளிவு பெறு­வார்­கள். மெத்­தப் படித்­த­தாக நினைத்­தி­ருப்­போ ­ரும்­கூட, இதை நாம் அறி­யா­மல் போய்­விட்­டோமே எனும் அள­வில் புதிய செய்­தி­க­ளைத் தெரிந்து கொள்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இரண்டு நாட்­கள்-­பத்து அமர்­வு­கள்-44 சொற்­பொ­ழி­வா­ளர்­கள் கொண்ட கருத்­த­ரங்­கம், முக்­கால் நூற்­றாண்டு கால கழக வர­லாற்­றை­யும், அதற்கு முன்­ன­தாக செய­லாற்­றிய திரா­விட இயக்­கங்­க­ளின் பங்­க­ளிப்­பை­யும் இளைய தலை­மு­றைக்கு எடுத்­து­ரைக்­கும் வகை­யில் அமைந்­தி­ருந்­தது. ஆதிக்­கத்தை எதிர்த்து நாம் சாதித்­தது என்ன, உரி­மை­களை மீட்­டெ­டுக்க நாம் நடத்­திய போராட்­டங்­கள் எப்­ப­டிப்­பட்­டவை, தமி­ழர்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த திரா­விட இயக்­கங்­கள் கையாண்ட உத்­தி­கள் எத்­த­கை­யவை, சமூக நீதி­யால் விளைந்த பலன்­கள் என்­னென்ன, சட்­ட­மன்­றத்­தி­லும் நாடா­ளு­மன்­றத்­தி­லும் நம்­மு­டைய பங்­க­ளிப்பு என்ன, தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்கு செய்­தவை யாவை, தவிர்க்க முடி­யாத சக்­தி­யாக இந்­திய அள­வில் உயர்ந்து நிற்­பது எத­னால், தலை­மு­றை­கள் தாண்­டி­யும் காலத்­திற்­கேற்ற செயல்­பா­டு­கள் கொண்ட இயக்­க­மாக இருப்­பது எப்­படி என்­பன உள்­ளிட்ட அனைத்­தை­யும் விவா­திப்­ப­தற்­கும், விரி­வாக எடுத்­துக் கூறு­வ­தற்­கு­மான கள­மாக அமைந்­தது கருத்­த­ரங்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கழ­கத்­தின் துணைப் பொதுச்­செ­ய­லா­ளர்­கள் தொடங்கி இளை­ஞ­ர­ணி­யால் வார்த்­தெ­டுக்­கப்­பட்ட இளம் பேச்­சா­ளர்­கள் வரை கருத்­த­ரங்­கில் உரை­யாற்­றி­னர். இரு வண்­ணக் கொடிக்கு வயது 75 என்­றா­லும் அது 25 வயது இளை­ய­த­லை­மு­றை­யின் கைக­ளில் கொள்கை உணர்­வு­டன் பறக்­கி­றது என்­பதை கருத்­த­ரங்­கம் உணர வைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தேர்­தல் திரு­வி­ழா­வுக்­குத் தயா­ரா­கும் நிலை­யில், அறி­வுத் திரு­வி­ழாவை இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் முன்­னெ­டுத்­தார். வாக்கு அர­சி­ய­லைக் கடந்து, ஒவ்­வொரு தமி­ழ­ரின் வளர்ச்சி மிகுந்த வாழ்க்­கைக்­கான அர­சி­ய­லை­யும் தி.மு.க. முன்­னெ­டுக்­கி­றது என்­பதை அவ­ரது செயல்­பா­டு­கள் உணர்த்­தின. முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் மூத்த பிள்­ளை­யான முர­சொ­லி­யில் வர­லாற்­றுச் செய்­தி­களை எளிமையாக எடுத்­து­ரைக்­கும் பாச­றைப் பக்­கம், திரா­விட இயக்க சாத­னை­களை நூல்­க­ளாக வெளி­யி­டும் முத்­த­மி­ ழ­றி­ஞர் பதிப்­ப­கம், ஒவ்­வொரு சட்­ட­மன்­றத் தொகு­தி­யி­லும் இளை­ஞ­ரணி சார்­பில் நூல­கம், அவற்­றுக்­கான வாச­கர் வட்­டம், 200 இளம்­பேச்­சா­ளர்­கள் தேர்வு, அவர்­க­ளுக்­கு­ரிய பயிற்­சி­கள் அளித்து மேடை­யேற்­றம், இளை­ஞ­ர­ணி­யி­ன­ருக்கு திரா­விட இயக்­கப் பயிற்­சிப் பாசறை, சமூக வலைத்­த­ளப் பயிற்சி என ஒவ்­வொன்­றை­யும் சிறப்­பாக நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றார். செயல்­தி­றன் மிக்க இளைய பட்­டா­ளத்­தை­யும் அதற்­கான கொள்­கைப் 
படைக்­க­லன்­க­ளை­யும் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார் இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அடித்­த­ளம் வலு­வாக இருந்­தால்­தான் கோபு­ரம் உயர்ந்து நிற்­கும். கொள்கை அடித்­த­ளம். கோபு­ரம் இயக்­கம். ஒவ்­வொரு தொண்­ட­ரும் கொள்­கை­யைத் தெளி­வாக உணர்ந்­து­கொண்டு கோபு­ர­மான இயக்­கத்­தைத் தாங்கி நிற்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில் அறி­வுத் திரு­வி­ழாவ சிறப்­பாக நடத்தி முடித்­தி­ருக்­கி­றார். அவ­ருக்கு உறு­து­ணை­யாக இருந்த இளை­ஞ­ரணி நிர்­வா­கி­கள், அன்­ப­கம் குழு­வி­னர், இரண்டு நாட்­க­ளும் வள்­ளு­வர் கோட்ட வளா­கத்­தில் குழு­மிய மாநி­லந் தழு­விய இளை­ஞ­ர­ணி­யி­னர் என அனை­வ­ரி­ட­மும் உத்­வே­கத்தை காண முடிந்­தது. உணர்ச்சி மிகுந்த கொள்கை முழக்­கங்­கள் வள்­ளு­வர் கோட்ட வளா­கத்­தில் ஒலித்­துக்­கொண்டே இருந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திரு­வா­ரூர் தேர் வடி­வில் கோட்­டத்தை அமைத்­தார் கலை­ஞர். வள்­ளு­வர் கோட்­டம் தேர், கல்­லால் வடிக்­கப்­பட்­டது. அது ஓடாது என்­பது அவ­ருக்­குத் தெரி­யும். அத­னால் தேரில்  தொங்­கு­கிற தொம்­பை­கள் எனப்­ப­டும் வண்­ணத் தோர­ணங்­களை மட்­டும், திரு­வா­ரூர் தேரில் உள்­ளது போலவே துணி­யி­னால் செய்து அமைத்­தார். அந்­தத் தோர­ணங்­கள்  காற்­றில் அழ­காக அசை­யும். தேரை அண்­ணாந்து பார்க்­கும்­போது, மேலே மேகங்­கள் தவ­ழும். காற்­றில் ஆடும் தோர­ணங்­க­ளை­யும், வானில் நக­ரும் மேகங்­க­ளை­யும் சேர்த்­துப் பார்க்­கும்­போது, தேர் ஓடு­வது போலவேதெரி­யும். கல் தேரை­யும் அசைய வைக்­கும் விந்­தையை தன் கலைத் திற­னால் உரு­வாக்­கி­ய­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் கட்­டிய வள்­ளு­வர் கோட்­டத்­தில், மாண்­பு­மிகு முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் கட்­டிக் காத்து வளர்த்த இளை­ஞ­ரணி, இன்­றைய இளை­ஞ­ர­ணிச் செய­லா­ள­ரின் முன்­னெ­டுப்­பில் அறி­வுத் தேரோட்­டத்தை நடத்­தி­யி­ருக்­கி­றது. இரண்டு நாள் நிகழ்­வு­க­ளு­டன் அது நிறை­வ­டைந்து விட­வில்லை. நவம்­பர் 16ஆம் நாள் வரை தொடர்­கி­றது முற்­போக்கு புத்­த­கக் காட்சி. அங்­கும் நாள்­தோ­றும் கலை நிகழ்ச்­சி-­உ­ரை­ய­ரங்­கம் என அறி­வுத் தேரோட்­டம் தொடர்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>