<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/11/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,153,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Nov 10 2025 22:19:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251111T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="11112025-MDU-03" position.sequence="03" ex-ref="11112025-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="75">அ.தி.மு.க. கபட நாடகம் நடத்தத் திட்டம்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="33">திருவரங்கம் மொ.பழனியாண்டி எம்.எல்.ஏ. இல்ல மணவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup609925_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திருவரங்கம், நவ.11–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">‘‘S.I.R. குறித்து உச்சநீதிமன்றத்தில் 
அ.தி.மு.க. திடீரென மனுத்தாக்கல் செய்து கபட நாடகம் நடத்தத் திட்டமிட்டுள்ளது’’ என்று   முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று திருவரங்கத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர் மொ.பழனியாண்டி இல்ல மண விழாவை நடத்தி வைத்து உரையாற்றும்போது கூறினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்நேற்று (10.11.2025)  திருச்­சி­ராப்­பள்ளி மாவட்­டம்,சோம­ர­சன்­பேட்டை, டாக்­டர் கலை­ஞர் திட­லில், திரு­வ­ரங்­கம் தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்  மொ.பழ­னி­யாண்டி அவர்­களின் மகன் விஜ­ய­பா­ரதி – மனிஷா ஆகி­யோ­ரது திரு­ம­ணத்தை தலை­மை­யேற்று நடத்தி வைத்து ஆற்­றிய உரை வருமாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலைமை செயற்­குழு உறுப்­பி­ன­ரும், 
சட்­டப்­பே­ரவை உறுப்­பி­ன­ரு­மான பழ­னி­யாண்டிஇல்­லத் திரு­மண விழா­வில் பங்­கேற்று மண­மக்­களை வாழ்த்தி உரை­யாற்றி அமர்ந்­தி­ருக்­கக்­கூ­டிய  உங்­கள் அனை­வ­ருக்­கும் என்­னு­டைய அன்­பான வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரு­வ­ரங்­கம் தொகு­தி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும், நம்­மு­டைய தலை­மைக் கழ­கத்­தின் செயற்­குழு உறுப்­பி­ன­ரு­மான பழ­னி­யாண்டி அவர்­க­ளின் இளைய மகன் விஜ­ய­பா­ரதி அவர்­க­ளுக்­கும், மனிஷா அவர்­க­ளுக்­கும்உங்­க­ளு­டைய அன்­பான வாழ்த்­து­க­ளோடு, இந்த மண­விழா நிகழ்ச்­சியை நிறை­வேற்றி வைத்து, அதைத் தொடர்ந்து மண­மக்­களை வாழ்த்­தக்­கூ­டிய ஒரு சிறப்­பான வாய்ப்பை நான் பெற்­றி­ருக்­கி­றேன். அந்த வாய்ப்­பைப் பெற்­ற­மைக்­காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன்! பெரு­மைப்­ப­டு­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பழ­னி­யாண்டி அவர்­க­ளுக்­கும், கழ­கத்­திற்­கு­மான உறவு என்­பது இன்று நேற்று ஏற்­பட்­டது அல்ல! 1986-லிருந்த அவர் இந்தஇயக்­கத்­தில் தன்னை ஒப்­ப­டைத்­துக் கொண்டுமுதன்­மு­த­லாக கிளைக் கழ­கத்­தின் செய­லா­ள­ரா­க­வும், இயக்­கத்­தின் ஆணி­வே­ராக இருக்க கூடிய கிளைக் கழ­கத்­தின் செய­லா­ள­ராக பொறுப்­பேற்று, பணி­யாற்றி அதைத் தொடர்ந்து என்­னு­டைய வாழ்­நா­ளின் பெரும்­ப­கு­தியை செல­விட்டு, பசி – தூக்­கம் இவை­களை எல்­லாம் மறந்து, உழைத்து வளர்த்­தெ­டுத்த இளை­ஞ­ர­ணி­யில் ஒன்­றிய அமைப்­பா­ளர் என்ற பொறுப்பை ஏற்­றுக் கொண்டு, 1999-ல் இருந்து 2003 வரை அவர் அந்­தக் கட­மையை நிறை­வேற்றி தந்­தி­ருக்­கி­றார்.  அதன் பய­னா­க­தான், ஒன்­றி­யச் செய­லா­ள­ராக ப்ரமோ­ஷன் பெற்று, பொறுப்­பேற்று பணி­யாற்­றி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்­குப் பிறகு, 2021-ல் நடை­பெற்ற சட்­ட­ மன்­றத் தேர்­த­லில் இந்த திரு­வ­ரங்­கம் தொகு­தி­யில் வேட்­பா­ள­ராக நின்று போட்­டி­யிட்டு, 20 ஆண்­டு­கள் கழித்து நம்­மு­டைய கழ­கத்­தின் கோட்­டை­யாக்கி, இன்­றைக்கு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக அந்­தப் பொறுப்­பை­யும் ஏற்று பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவரே நன்­றி­யுரை ஆற்­றி­ய­போது குறிப்­பிட்­டுச் சொன்­னார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பழ­னி­யாண்டி அவர்­க­ளின் திரு­ம­ணத்தை1993-ஆம் ஆண்டு, நம்­மு­டைய முத்­த­மி­ழ­றி ­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள்­தான் நடத்தி வைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">உரி­மை­யோ­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">உணர்­வோ­டும் பங்­கேற்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல, 2010-ஆம் ஆண்டு நான் துணை முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பேற்று பணி­யாற்­றிய நேரத்­தில், பழ­னி­யாண்டி சகோ­த­ர­ருக்கு என்­னு­டைய தலை­மை­யில் திரு­ம­ணம் நடை­பெற்­றி­ருக்­கி­றது. அதன்­பிறகு, 2021-ஆம் ஆண்டு முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பேற்ற பிறகு, பழ­னி­யாண்டி அவர்­களின் மூத்த மகன் திரு­ம­ணத்­தை­யும் நான் தான் நடத்தி வைத்­தி­ருக்­கி­றேன். இப்­போது அவ­ரு­டைய இளையமக­னுக்­கும் நான் தான் நடத்தி வைத்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த வர­லாற்றை எல்­லாம் பார்க்­கின்­ற­போது,  அவ­ரு­டைய இல்­லத்­தில் நடை­பெ­றக்­கூ­டிய இன்­னும் நடை­பெற இருக்­கக்­கூ­டிய திரு­ம­ணங்­கள் ஏரா­ள­மாக இருக்­கின்றன. அந்­தத் திரு­ம­ணத்­திற்­கும் நான் தான் வரு­வேன் என்ற அந்த நம்­பிக்கை நிறைய இருக்­கின்­றன. அவ­ரு­டைய பேரன், பேத்­தி­க­ளுக்­கும்நான் தான் திரு­ம­ணத்தை நடத்தி வைப்­பேன் என்ற நம்­பிக்கை எனக்கு வந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி, இந்த குடும்­பத்­தில் ஒரு­வ­ராக தொடர்ந்து பங்­கெ­டுத்து அவ­ரு­டைய இல்­லத்­தில் நடை­பெ­றக்­கூ­டிய இந்த நிகழ்ச்­சி­க­ளுக்கு உரி­மை­யோ­டும், உணர்­வோ­டும், நான் பங்­கேற்று மண­மக்­களை வாழ்த்த வந்­தி­ருக்­கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­ப­டி­யான சகோ­த­ரப்­பாச உணர்­வு­டன்­தான் 75 ஆண்­டு­கா­ல­மாக இந்த இயக்­கத்தைபேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளும், தொடர்ந்து தலை­வர் கலை­ஞர் அவங்­க­ளும், அதற்­குப் பின்­னால் அவர்­க­ளு­டைய வழி­யில் இப்­போது நானும் நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றேன். நீங்­கள் ஒன்றை கூர்ந்து கவ­னிக்­க­லாம்! எப்­பொ­ழு­தும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைச் சார்ந்­த­வர்­கள் முன்­னோ­டி­க­ளாக இருந்­தா­லும், தள­ப­தி­க­ளாக இருந்­தா­லும், செயல் வீ­ரர்­க­ளாக இருந்­தா­லும், அவர்­கள் கழ­கம் என்று மட்­டும் சொல்­வது கிடை­யாது -  இயக்­கம் என்று அடிக்­கடி கூறு­வ­துண்டு. இயக்­கம் என்று சொன்­னால், நமக்கு ஓய்வே இல்லை என்­பது தான் இயக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த 75 ஆண்­டு­கா­ல­மும் ஆட்­சி­யில் இருந்­தா­லும் இல்­லை­யென்­றா­லும், அது தேர்­தல் சம­ய­மாக இருந்­தா­லும் இல்­லை­யென்­றா­லும், எப்­போ­தும் நம்­மு­டைய இயக்­கம் நின்­றது கிடை­யாது. சிறிய, சிறிய தடை­க­ளைப் பார்த்து கூட தேங்கி நின்­று­விட்­டால் அது தேக்­கம். ஆனால், இயங்­கிக் கொண்டே இருந்­தால்­தான் அது இயக்­கம். இப்­படி சுறு­சுறுப்­பாக இருக்­கின்ற கார­ணத்­தால் தான் நம்­மு­டைய கட்சி இன்­றைக்­கும் சீரி­ள­மை ­யு­டன் கம்­பீ­ர­மாக நடை­போட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது. நாம் எவ்­வ­ளவு ஆக்­டி­வாக இருக்­கி­றோம் என்று உங்­க­ளுக்­கெல்­லாம் நன்­றா­கத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">நேர்­கா­ணல் மூலம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">மகிழ்ச்சி – நம்­பிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உதா­ர­ணத்­திற்கு சொல்­ல­வேண்­டும் என்­றால், சில மாதங்­க­ளாக நான் அறி­வா­ல­யத்­தில் இருந்து கொண்டு “உடன்­பி­றப்பே வா”என்ற தலைப்­பின் கீழ் ஒவ்­வொரு சட்­ட­மன்றத்தொகு­தி­க­ளில் ஒன் டூஒன் என்று சொல்­வார்­களே, தனித்­த­னி­யாக, தொகு­தி­வா­ரி­யாக அந்த நிர்­வா­கி­களைஎல்­லாம் அழைத்து நேர்­கா­ணல் நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றேன். ஆய்வுசெய்து கொண்­டி­ருக்­கி­றேன். அவர்­கள் வெளிப்­ப­டுத்­து­கின்ற மகிழ்ச்­சி­யி­லும், நம்­பிக்­கை­யி­லும்­தான் நான் தெம்­பாக என்­னு­டைய பணி­களை செய்து கொண்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­வ­ரை­யில் ஏறக்­கு­றைய 80 தொகு­திளை முடித்­தி­ருக்­கி­றேன். விரை­வில் 234 தொகு­தி­க­ளை­யும் நான் முடிப்­பேன் என்ற அந்த நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது. அதை முடித்தே தீரு­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2021-ல் ஆட்­சிக்கு வந்த பிறகு, ஒரு பக்­கம் ஆட்­சிப்­பணி, அரசு விழாக்­கள், சுற்­றுப் 
ப­ய­ணங்­கள், நாள்­தோ­றும் புதிய, புதய திட்­டங்­கள் என்ற அறி­விப்பு இது ஒரு பக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல, கட்­சிப் பணி­கள் என்று எடுத்­துக் கொண்­டால், உதா­ர­ணத்­திற்கு சொல்ல வேண்­டும் என்று சொன்­னால்,  நேற்று ஞாயிறு அன்­றைக்கு காலை­யில் மாவட்­டச் செய­லா­ளர்­கள் கூட்­டத்தை காணொலி மூல­மாக நடத்­தி­னேன். அதன் பிறகு, வாக்­கா­ளர் திருத்­தப் பட்­டி­யல் பணி­க­ளைப் பற்றி நடை­பெற இருக்­கக்­கூ­டிய SIR-க்கு எதி­ரான அந்­தப் பிரச்சினை -  நாளைய தினம் நாம் நடத்த இருக்­கின்ற  நடை­பெற உள்ள S.I.R.-க்கு எதி­ரான கண்­டன ஆர்ப்­பாட்­டம். இதைப்­பற்றி எடுத்­துச் சொல்­வ­தற்­காக நேற்­றைக்கு மாவட்­டச் செய­லா­ளர்­க­ளி­டம் கலந்து பேசி­னேன்.  நம்­மு­டைய கூட்­ட­ணிக் கட்சி சார்­பில், அந்த ஆர்ப்­பாட்­டத்தை எப்­படி சிறப்­பாக நடத்­திட வேண்­டும் என்று அறி­வு­றுத்தி இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">பம்­ப­ர­மாய் தொடர்ந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">பணி­யாற்­றும் கழ­கத்­தி­னர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது­மட்­டு­மல்ல, நேற்­றைக்கு நீங்­கள் வீடியோ பார்த்­தி­ருப்­பீர்­கள். SIR என்­றால் என்ன? S.I.R.  என்­பது எந்த அள­விற்கு மக்­க­ளி­டத்­தில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தி இருக்­கிறது. அதை எப்­படி நாம் முறை­யாக பயன்­படுத்­திட வேண்­டும். அவர்­கள் என்ன கார­ணத்­திற்­காக கொண்டு வந்­தி­ருக்­கி­றார்­கள். அது­கு­றித்து நம்­மு­டைய பொது­மக்­கள் விழிப்­பு­ணர்வு பெற­வேண்­டும் என்­ப­தற்­காக வீடியோ ஒன்றை வெளி­யிட்­டி­ருக்­கி­றேன். அதை­யெல்­லாம் முடித்­துக் கொண்டு  மாலை­யில் விமா­னத்­தில் திருச்­சிக்கு வந்து, அதற்­குப் பிறகு இந்த திரு­மண நிகழ்ச்­சி­யில் நான் கலந்து கொள்ள வந்­தி­ருக்­கி­றேன். இதை முடித்­து­விட்டு, புதுக்­கோட்­டைக்­கும் நான் செல்ல இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி இயங்­கிக் கொண்­டி­ருப்­பது தான் எனக்கு பிடிக்­கும். அத­னால் தான் இதை இயக்­கம் என்று சொல்­கி­றோம். தொடர்ந்து இயங்­கிக் கொண்டே இருக்­க­வேண்­டும். அதற்­கா­க­தான் நாம் இயக்­கம் என்று சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றோம்.அப்­ப­டித்­தான் நிற்க நேரம் இல்­லா­மல் நாம் வேலை செய்து கொண்­டி­ருக்­கி­றோம்.நான்மட்­டு­மல்ல, இயக்­கத்­தில் இருக்­கக்­கூ­டிய முன்­னோ­டி­கள், இங்கே இருக்­கின்ற செயல்­வீ­ரர்­கள் இன்­றைக்கு பம்­ப­ர­மாக பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய காட்­சி­களை எல்­லாம் நான் தொடர்ந்து பார்க்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஒரு­போ­தும் எடு­ப­டாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்கு என்ன கார­ணம்? எதி­ரி­க­ளாக இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் புதுப்­புது உத்­தி­க­ளோடு நம்மை தாக்­கு­வ­தற்கு, நம்மை அழிப்­ப­தற்கு, ஒழிப்­ப­தற்கு புதுப்­புது முயற்­சி­களை எல்­லாம் எடுத்­தி­ருக்­கி­றார்­கள். வரு­மான வரித்­து­றையை ஏவி­விட்­டார்­கள்.அதற்­குப்­பி­றகு சி.பி.ஐ. என்று சொல்­லக்­கூ­டிய குற்­றப் புலா­னாய்­வுத் துறை­யின் மூல­மாக நம்மை மிரட்­டிப் பார்த்­தார்­கள். இப்­போது, SIR என்று சொல்­லக்­கூ­டிய ஒரு ஆயு­தத்தை எடுத்து திரா­விட முன்­னேற்­றக்கழ­கத்தை இதன் மூல­மாக தான் அழிக்க முடி­யும், ஒழிக்க முடி­யும் என்று முடிவு செய்து எடுத்­தி­ருக்­கி­றார்­கள்.  இது வேண்­டும் என்­றால், வேறு மாநி­லங்­களில் எடு­ப­ட­லாமே தவிர உறு­தி­யாக சொல்­கி­றேன் – திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைப் பொறுத்­த­வரை தமிழ்­நாட்­டில் ஒரு­போ­தும் அது எடு­பா­டாது – முடி­யாது என்று அழுத்­தந்­தி­ருத்­த­மாக நான் தெரி­வித்­துக் கொள்ள கடமைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு ஒரு செய்­தியை நான் சொல்­லி­யாக வேண்­டும். நான் திருச்­சிக்கு வந்­த­வு­டனே ஒரு செய்தி கிடைத்­தது – என்ன செய்தி என்­றால், இந்த SIR குறித்து நாம் நீதி­மன்­றத் திற்கு சென்­றி­ருக்­கி­றோம். விரை­வில் வர­விருக்­கி­றது. 11-ஆம் தேதி நாளைய தினம் நாம் ஆர்ப்­பாட்­டம் நடத்த இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நேற்று திடீ­ரென்று அதி­மு­க-­­வின் சார்­பில், உச்ச நீதி­மன்­றத்­திற்­குச் சென்று திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வழக்கு தொடுத்­தி­ருக்­கி­றது, அதில் எங்­க­ளை­யும் சேர்த்­துக் கொள்ள வேண்­டும் என்று  ஒரு மனு தாக்­கல் செய்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">வழக்கு தொடுப்பு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">அ.தி.மு.க.வின் கபட நாட­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் கேட்­கி­றேன். உங்­க­ளுக்கு உள்­ள­ப­டியே அதில் அக்­கறை இருக்­கி­றது என்று சொன்­னால், அதில் உங்­க­ளு­டைய எதிர்ப்பை தெரி­விக்க வேண்­டும் என்று சொன்­னால், முன்­கூட்­டியே வழக்கை தொடுத்­தி­ருக்­க­வேண்­டும். ஆனால், திடீ­ரென்று வழக்­கில் சேர்த்­துக் கொள்ள வேண்­டும் என்று சொல்­வ­தற்கு என்ன கார­ணம்? இதனை யோசித்­துப் பார்க்க வேண்­டும்.  அந்த SIR-யை அவர்­கள் ஆத­ரித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு பிஜே­பி-யோ அல்­லது தேர்­தல் ஆணை­யமோ எதைச் சொன்­னா­லும் ஆத­ரிக்­கின்ற நிலை­யில் இன்­றைக்கு அடி­மை­யாக நின்று கொண்­டி­ருக்­கி­றார்­களேதவிர  அவர்­கள் அதனை எதிர்ப்­ப­தற்கு துணிச்­சல்இல்லை. இருந்­தா­லும், இன்­றைக்கு நாம் தொடுத்­தி­ருக்­கக்­கூ­டிய வழக்­கில் தங்­களை இணைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்று சொன்­னால், ஒரு கபட நாட­கத்தை நடத்­து­வதற்­காக திட்­ட­மிட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது­மட்­டு­மல்ல, BLO என்­பது அங்கு இருக்­கக்­கூ­டிய அரசு ஊழி­யர்­களை வைத்து அந்­தப் பணி­களை செய்­வது. BLA2 என்­பது கட்­சி­யைச் சார்ந்தபிர­தி­நி­தி­களை நாம் நிய­மிக்­கி­றோம். அவர்­கள் அந்­தப் பணி­க­ளுக்கு துணை நிற்­பார்­கள், உதவி செய்­வார்­கள். அந்த அதி­கா­ரி­க­ளுக்கு துணை நின்று பணி­யாற்­று­வார்­கள். இது­தான் BLA2-வின் வேலை.அதை திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில், நாம் முறை­யாக BLA2 மூல­மாக பயிற்சி அளித்து, என்­னென்ன பணி­களை எல்­லாம் செய்­ய­வேண்­டும் என்று முறை­யாக பயிற்சி அளித்து அவர்­கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருக் 
கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­படி நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­கள் தவறு என்று சொல்லி, அதை நீக்க வேண்­டும், அதை தடுக்­க­வேண்­டும் என்று சொல்லி, அதை அடிப்­ப­டை­யாகவைத்து அதி­மு­க-­­வின் சார்­பில் இன்­றைக்கு நீதி­மன்­றத்­தில் தங்­களை இணைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இது­தான் உண்மை. ஆனால் அது எடு­ப­டாது என்­பதை மாத்­தி­ரம் இந்த நேரத்­தில் நான் எடுத்­துச் சொல்லி, டில்­லி­யில் இருக்­கக்­கூ­டியபிக்-­­பா­ஸூக்கு நம்­மு­டைய பழ­னி­சாமி ஆமாம்சாமி போட்­டு­தான் ஆக வேண்­டும். ஆனால், அதை­யும் தாண்டி மற்­றொரு காமெ­டி­யும் இன்­றைக்கு செய்­தி­ருக்­கி­றார் அது தான் உண்மை. இதை­யெல்­லாம் மக்­கள் பார்த்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே நேரத்­தில், வர இருக்­கக்­கூ­டிய தேர்­த­லை­யொட்டி, நம்­மு­டைய பழ­னி­யாண்டி அவர்­கள் இங்கே நன்­றி­யு­ரை­யாற்றி, அதற்­குப்­பி­றகு நான் பேசு­வ­தற்கு முன்­னால், தேர்­தல் நிதி­யாக ஏறக்­கு­றைய 50 இலட்­சம் ரூபாயை இங்கே வழங்­கி­யி­ருக்­கி­றார். உள்­ள­ப­டியே திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் இதை தேர்­தல் நிதி­யாக முதல் அறி­விப்­பாக இன்­றைக்கு இந்த திரு­வ­ரங்­கம் தொகு­தி­யி­லி­ருந்து நம்­மு­டைய பழ­னி­யாண்டி அவர்­கள் வழங்­கி­யி­ருக்­கி­றார். நிச்­ச­ய­மாக, உறு­தி­யாக இது ஒரு பெரிய வெற்­றியைதரு­வ­தற்கு அறி­கு­றி­யாக இது அமைந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">50 இலட்­சம் ரூபா­யு­டன் நிச்­ச­யம் நிற்­க­மாட்­டார். தொடர்ந்து இன்­னும் நாம் எதிர்­பார்க்­கக்­கூ­டிய நிதியைஅதி­க­மாக தரு­வார் என்ற நம்­பிக்கை எனக்கு நிறைய உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே நேரத்­தில், சமூக அமைப்­பின் தலை­வ­ராக இருக்­கக்­கூ­டிய கே.கே.செல்­வ­கு­மார் அவர்­கள் இங்கே பேசு­கின்­ற­போது, தம்­மு­டைய சமு­தா­யத்தை குறிப்­பிட்டு, கடை­கண் பார்­வையை எங்­கள் பக்­கம் திருப்­ப ­வேண்­டும் என்று சொன்­னார் – கடை­கண்­பார்வை மட்­டு­மல்ல, அனைத்­துப் பார்­வை­யும் உங்­கள் பக்­கம் திரும்­பும். அதில் எந்த சந்­தே­கம் வர­வேண்­டிய அவ­சி­ய­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">‘திரா­விட மாடல்’ ஆட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">யாரை­யும் விட்­டு­வி­டாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த திரா­விட மாடல் ஆட்­சி­யைப் பொறுத்­த­வ­ரைக்­கும், உறு­தி­யாக, தொடக்­கத்­தில் இருந்து சொல்­கி­றோம் – இன்­றைக்­கும் சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றோம் – எல்­லார்க்­கும்எல்­லாம் - எல்­லார்க்­கும் எல்­லாம் என்ற தலைப்­பில்இந்த ஆட்சி நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றதே தவிர யாரை­யும் விட்­டு­விட மாட்­டோம். இது திரா­விடமாடல் ஆட்சி. தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, தலை­வர் கலை­ஞர் வழி நின்று நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய இந்த ஆட்சி. இந்த ஆட்­சிக்கு என்­றைக்­கும் நீங்­கள் துணை நிற்க வேண்­டும். துணை நிற்­க­வேண்­டும் என்று நான் கேட்­டுக் கொண்டு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இங்கே மகிழ்ச்­சிக் கட­லில் மண­விழா கண்­டி­ருக்­கக்­கூ­டிய மண­மக்­க­ளி­டம் நான் அன்­போடு நான் கேட்­டுக் கொள்ள விரும்­பு­ வது, உங்­க­ளுக்கு பிறக்­கக்­கூ­டிய குழந்­தை­கள் அது ஆணாக இருந்­தா­லும், பெண்­ணாக இருந்­தா­லும்,அழ­கான தமிழ்ப் பெயர்­க­ளைச் சூட்­டுங்­கள் என்று அந்தகோரிக்­கையை உரி­மை­யோடு இங்கே எடுத்து வைத்து, புரட்­சிக்­க­வி­ஞர் பாவேந்­தர் பார­தி­தா­சன் அவர்­கள் எடுத்­துச் சொல்­லி­ய­படி “வீட்­டிற்கு விளக்­காய் - நாட்­டிற்­குத் தொண்­டர்­க­ளாய்” மண­மக்­கள் வாழுங்­கள்! வாழுங்­கள்! என்று வாழ்த்தி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (10.11.2025) திருச்சிராப்பள்ளி, சோமரசன்பேட்டை,  கலைஞர் திடலில், சட்டமன்ற உறுப்பினர்  மொ.பழனியாண்டி அவர்களின் மகன் விஜயபாரதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கண்ணையன் அவர்களின் பேத்தியும், முருகானந்தம் -– கலைச்செல்வி தம்பதியரின் மகள் மனிஷா ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து, மணமக்களை வாழ்த்தினார். இம்மணவிழாவில்,  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கள்  கே.என்.நேரு,   எஸ்.இரகுபதி,  திருமதி. பி. கீதா ஜீவன், எஸ்.எஸ்.சிவசங்கர்,  அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  சிவ.வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஆ.ராசா,  திருச்சி சிவா,  துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்  ஆர். விஸ்வநாதன்,  
கே.கே.செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>