<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/11/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Nov 10 2025 22:25:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251111T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="11112025-MDU-11" position.sequence="11" ex-ref="11112025-MDU-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="32">பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="32"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="67">தமிழ்நாட்டைப் போல பீகாரை உருவாக்குங்கள்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">பிரதமர் மோடிக்கு ‘பிரெளன் என்லைட்டன்மெண்ட்’ சேனல் அறிவுரை! தமிழ்நாட்டில் ‘தாமரை’ மலரவே மலராது என்றும் விளக்கம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup614860_11_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup614857_11_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup554469_11_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Untitled1bw_11_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="Screenshot2025_11_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="Untitled3bw_11_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="7" source="Untitled8bw_11_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="8" source="Untitled6bw_11_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதுடெல்லி, நவ.11–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திவரும் தமிழ்நாட்டைப் போல பீகாரை உருவாக்குகங்கள் என்று பிரதமர் மோடிக்கு ‘பிரெளன்’ என்லைட்டன்மெண்ட்’ சேனல் அறிவுரை கூறியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ‘தாமரை’ மலரவே மலராது என்றும் அச்சேனல் விளக்கமளித்துள்ளது.’’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அச்சேனல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வருமாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிர­த­மர் மோடி அவர்­கள் சமீ­பத்­தில் நிகழ்த்­திய உரை­யில்  ‘தமிழ்­நாட்­டில் பீஹா­ரி­லி­ருந்து வந்த தொழி­லா­ளர்­கள்’ துன்­பு­றுத்­தப்­ப­டு­கி­றார்­கள் எனக் கூறி­யதை  கேட்­ட­பின், நான் அந்­தக் குற்­றச்­சாட்­டைத் தனிப்­பட்ட முறை­யில் ஆராய வேண்­டு­மென முடிவு செய்­தேன். தமிழ்­நாட்­டில் தி.மு.க.வினர் பீஹா­ரின் உழைப்­பா­ளி­க­ளைத் துன்­பு­றுத்­து­கி­றார்­கள் என்ற குற்­றச்­சாட்டை அவர் முன்­வைத்­தி­ருந்­தார். இதனை உண்­மை­யாக இருக்­கி­றதா என அறிய, நான் தொலை­பே­சி­யில் அழைத்­தும், செய்தி அனுப்­பி­யும், நேர­டி­யா­க­வும் பீஹா­ரி­லி­ருந்து தமிழ்­நாட்­டில் வாழ்ந்து வரும் பலர்  சென்­னை­யி­லி­ருந்து கோயம்­புத்­தூர், திருப்­பூ­ரி­லி­ருந்து திருச்சி, மதுரை முதல் நெல்லை வரை  அவர்­க­ளு­டன் உரை­யா­டி­னேன். அந்த உரை­யா­டல்­க­ளின் பின் கிடைத்த உண்மை மிக­வும் ஆச்­ச­ரி­ய­மூட்­டி­யது: மோடி கூறி­யது “சரி” எனக் கூட தோன்­ற­லாம்; ஆம், பீஹாரி மக்­கள் தமிழ்­நாட்­டில் துன்­பு­றுத்­தப்­ப­டு­கி­றார்­கள்.  ஆனால் யாரால் தெரி­யுமா? தி.மு.க. அர­சின் கீழ் செயல்­ப­டும் சிறந்த நிர்­வா­கத்­தால்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மத அடிப்­ப­டை­யி­லான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பிரச்­சி­னை­கள் இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர்­கள் “துன்­பு­றுத்­தப்­ப­டு­கி­றார்­கள்”  என்­பது வேடிக்­கை­யா­னது. மலி­வா­க­வும் தர­மா­க­வும் உள்ள சுகா­தார சேவை­க­ளால், சீராக இயங்­கும் பள்­ளி­க­ளா­லும், நேரம் கடைப்­பி­டிக்­கும் பேருந்து சேவை­க­ளா­லும், மின்­சா­ரம் இடை­ய­றாது கிடைப்­ப­தா­லும், தூய்­மை­யான குடி­நீர் வச­தி­யா­லும், இயங்­கும் தெரு­வி­ளக்­கு­க­ளா­லும், வலு­வான தொழில் அமைப்­பு­க­ளா­லும், நிலை­யான வேலை வாய்ப்­பு­க­ளா­லும் மற்­றும் ஆட்­சி­யில் வெளிப்­ப­டைத்­தன்­மையை முன்­னி­றுத்­தும் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் ஆட்­சி­யா­லும். தமிழ்­நாடு நிர்­வா­கம் பிரச்­சா­ரத்­தைக் கூறு­வ­தில்லை, கொள்­கை­க­ளைச் செயல்­ப­டுத்­து­கி­றது. அந்­தக் கொள்­கை­கள், மதப் பிரி­வி­னை­யின்றி ஆட்­சி­யைக் கட்­டி­யெ­ழுப்­ப­லாம் என்­ப­தைக் காட்டி, மக்­களை உணர்­வூட்­டு­கின்­றன. இங்கு “இந்து – முஸ்­லிம் – கிறிஸ்­து­வர்” எனப் பிரித்து பார்க்­கப்­ப­டு­வ­தில்லை; கோயில்­கள், பள்­ளி­வா­சல்­கள், தேவா­ல­யங்­கள் என மதத்­தின் பெய­ரில் சச்­ச­ர­வு­கள் தூண்­டப்­ப­டு­வ­தில்லை; எந்­தக் குர­லும் அடக்­கப்­ப­டு­வ­தில்லை; மத அடிப்­ப­டை­யி­லான பிரச்­சி­னை­க­ளும் இல்லை. இதை “துன்­பு­றுத்­தல்” எனச் சொல்­வது உண்­மை­யில் வேடிக்­கை­யா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தாமரை மலர முடி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உண்­மை­யில், தமிழ்­நாடு பீஹா­ரி­க­ளைத் துன்­பு­றுத்­து­வ­தில்லை. ஏனெ­னில், தமிழ்­நாடு ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் வர­வேற்­கும் நிலம்; அங்கு அனை­வ­ரும் வாழ­வும் வள­ர­வும் முடி­கி­றது.  ஆனால் ஒரே விதி­வி­லக்கு: “தாமரை” மலர முடி­யாது! அதே கார­ணத்­தால்­தான் மோடி  அவர்­கள் மனக்­க­சப்­ப­டைந்­தி­ருக்­க­லாம். தமிழ்­நாடு மற்ற யாவ­ரை­யும் மல­ரச்­செய்­கி­றது, ஆனால் அவ­ரது கட்சி மட்­டுமே அங்கு வேரூன்ற முடி­ய­வில்லை. இங்கு இடம்­பெ­யர்ந்த தொழி­லா­ளர்­கள் வேலை பெறு­கின்­ற­னர்; மாண­வர்­கள் உயர்­கல்வி பெறு­கின்­ற­னர்; தொழில்­மு­னை­வோர் வாய்ப்­பு­க­ளைப் பெறு­கின்­ற­னர். ஆனால் பா.ஜ.க.வுக்கு இங்கு கிடைப்­பது மறுப்­பும் விமர்­ச­ன­முமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒவ்­வொரு தேர்­த­லி­லும் அவர்­கள் புதிய யுக்­தி­க­ளு­டன் வரு­கி­றார்­கள்; ஆனால் தமிழ்­நாடு எப்­போ­தும் மரி­யா­தை­யு­டன், ஆனால் தெளி­வாக, “நன்றி, வணக்­கம். இங்கே உங்­க­ளுக்கு இட­மில்லை” என்று கூறு­கி­றது. சில நாட்­க­ளுக்­குப் பிறகு, நான் தமிழ்­நாட்­டின் மதிப்­பிற்­கு­ரிய ஆளு­நர் ஆர்.என்.ரவி அவர்­க­ளு­டன் சந்­திப்பு மேற்­கொண்­டேன். அப்­போது அவர் மிக­வும் ஆழ­மான தத்­து­வக் கேள்வி ஒன்றை எழுப்­பி­னார்:’ “இந்த தமிழ்­நாடு போரா­டு­கி­றது என நீங்­கள் கூறு­கி­றீர்­கள்.  ஆனால் யாருக்கு எதி­ராக தமிழ்­நாடு போரா­டு­கி­றது?” என்­றார். அது உண்­மை­யில் முக்­கி­ய­மான கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மதச்­சார்­பற்ற நிலை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் மதிப்­பிற்­கு­ரிய ஆளு­நரே, இப்­போது அந்த விடை உங்­க­ளுக்­குத் தெரிந்­தி­ருக்­கும் என நம்­பு­கி­றேன். ஏனெ­னில் அந்த விடை, உங்­கள் பிர­த­மர் அவர்­க­ளின் வாயி­லி­ருந்து தின­மும் வெளிப்­ப­டு­கி­றது.’ தமிழ்­நாடு போரா­டு­வது, ஒரு இந்­தி­யரை இன்­னொரு இந்­தி­ய­ருக்கு எதி­ராக நிறுத்­தும், வெறுப்பு மற்­றும் பிரி­வி­னையை வளர்க்­கும் அந்­தக் கதைக்­க­ளத்­திற்­கெ­தி­ரா­கத்­தான். அது ஒரு பன்­மை­மிக்க நாட்டை மத­வெ­றி­யின் சாய­லில் சித்­த­ரிக்க முயல்­கின்ற அந்­தச் சிதை­வான வாக்­கு­மூ­லத்­திற்­கெ­தி­ரா­கப் போரா­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பல பார்­வை­யா­ளர்­கள் அடிக்­கடி என்­னைக் கேட்­டி­ருக்­கி­றார்­கள்: “நீங்­கள் எப்­போ­தும் மு.க.ஸ்டாலின் அவர்­களை ஆத­ரிப்­பது போலவே பேசு­கி­றீர்­கள். ஏன் தி.மு.க. ஆட்­சியை விமர்­சிப்­ப­தில்லை?” சில நேரங்­க­ளில், நானும் என்­னி­டமே அதையே கேட்­கி­றேன். “நான் ரக­சி­ய­மாக தி.மு.க.வின்பேச்­சா­ளரா?” என்று. உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் எனக்கு மறை­மு­க­மாக உறுப்­பி­னர் அட்­டையை அனுப்­பி­யி­ருக்­கி­றாரா என்றே சில சம­யம் எனக்கே தோன்­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் உண்­மை­யில் அதற்கு பதில் மிக எளி­தா­னது. என் உள்­ளத்­தின் ஆழத்­தில், நான் உண­ரும் ஒன்று மட்­டுமே உள்­ளது. ஒரு பக்­கம் தமிழ்­நாட்­டின் மதச்­சார்­பற்ற இத­யம்; மற்­றொரு பக்­கம், டெல்­லி­யில் பர­வி­யுள்ள “குங்­கு­மப்பூ” அலை. இந்த இரண்­டுக்­கும் நடுவே நிற்­கும் ஒரே சுவர், கருப்பு மற்­றும் செம்மை நிறத்­தில் வரை­யப்­பட்ட அந்­தச் சுவர். அந்­தச் சுவரை அகற்­றி­னால், அத­னால் நீங்­கள் தமிழ்­நாட்­டின் சுய­ம­ரி­யா­தை­யை­யும் மதச்­சார்­பற்ற தன்­மை­யை­யும் காப்­பாற்­றும் ஒரே அர­சி­யல் தடையை அகற்­றி­வி­டு­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மாநில கட்­சி­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பல­வீ­னப்­ப­டுத்­தும் போக்கு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. இல்­லை­யெ­னில், தமிழ்­நாட்­டிற்கு தன்­னிச்­சை­யான மாநில வலிமை இருக்­காது. இப்­போது கருப்பு மற்­றும் செம்மை நிறங்­க­ளின் அர­சி­யல் இல்­லை­யெ­னில், நிச்­ச­யம் “குங்­கு­மப்பூ நிற­ம­ய­மாக்­கல்” நடை­பெ­றும். இது மிகைப்­ப­டுத்­தல் அல்ல; இது ஒரு “முறை­யின் அடை­யா­ளம் காணல்”. ஏனெ­னில், அவர்­கள் பயன்­ப­டுத்­தும் அர­சி­யல் நாட­கம் பழை­ய­து­தான். முத­லில் அவர்­கள் வட இந்­தியா மற்­றும் தென் இந்­தி­யாவை பிரிப்­பார்­கள். அதன்­பின், கூட்­டாட்சி குரல்­களை “பிரி­வி­னை­வா­தம்” எனப் பெய­ரி­டு­வார்­கள். பின்­னர், மாநில கட்­சி­களை பல­வீ­னப்­ப­டுத்தி, அவற்றை “குடும்ப ஆட்சி”, “ஊழல் கட்­சி­கள்” எனச் சித்­த­ரிப்­பார்­கள். இறு­தி­யில், ஒவ்­வொரு மாநி­ல­மும் மெது­வா­க­வும் கட்­டா­ய­மா­க­வும் ஒரே முகத்­துக்­கும், ஒரே மொழிக்­கு­மான வணக்­கத்­தி­லும், டெல்­லி­யின் ஒரே ஆச­னத்­திற்­கும் தலை­வ­ணங்­கும் நிலைக்கு தள்­ளப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">டெல்லி வெறும் ஆட்­சி­யைக் கைப்­பற்ற மட்­டும் விரும்­பு­வ­தில்லை. அது கீழ்ப்­ப­டி­தலை விரும்­பு­கி­றது. அது கூட்­டாண்­மையை விரும்­பு­வ­தில்லை. அது பொம்­மை­களை விரும்­பு­கி­றது. அது எதிர்­கா­லத்­தில் ஒவ்­வொரு மாநி­லத்­தை­யும், “பங்­காளி” அல்ல, “பணி­யா­ளர்” எனக் காண விரும்­பு­கி­றது. அத­னால், தன்­னி­றைவு அடைந்து உயர்ந்து நிற்க முயன்ற ஒவ்­வொரு மாநி­ல­மும் ஒன்­றன்­பின் ஒன்­றாக அதன் முழங்­கா­லில் விழ வைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் உள்ள எதிர்க்­கட்­சி­கள், இந்­தக் கருத்தை அடிக்­கடி கேலி செய்­கின்­றன. அவர்­கள் கூறு­வது, “தி.மு.க. முஸ்­லிம்­கள், கிறிஸ்­த­வர்­கள், தலித்­து­கள் மற்­றும் சுதந்­திர சிந்­த­னை­யா­ளர்­க­ளின் வாக்­கு­களை பய­மு­றுத்தி பெறு­கி­றது. ‘எங்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்­கள்; இல்­லை­யெ­னில் பா.ஜ.க. வந்து உங்­களை துன்­பு­றுத்­தி­வி­டும்’ என்று கூறி வாக்­கு­க­ளைப் பெறு­கி­றது” என அவர்­க­ளது சொற்­க­ளின்­படி, இது ஒரு பெரிய உணர்ச்சி மோசடி; (அது “emotional blackmail” என்­றும், “பய அர­சி­யல்” என்­றும் அழைக்­கப்­ப­டு­கி­றது). ஆனால் உண்­மை­யில் இது பயம் பரப்­பல் அல்ல,  இது ஒரு எச்­ச­ரிக்கை. இது “அர­சி­யல் கால­நிலை மாற்­றம்” குறித்த முன்­செய்தி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பா.ஜ.க.தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">துன்­பப்­ப­டு­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. – “பா.ஜ.க. வரும்” என்று மெல்­லி­சை­யா­கச் சொல்ல வேண்­டிய அவ­சி­ய­மில்லை; மக்­களே அவர்­கள் வரும் கால­டிச் சத்­தத்­தைத் தாமா­கவே கேட்­கி­றார்­கள். ஏனெ­னில், விந்த்யா மலை­யைக் கடந்து வடக்­குப் பகு­தி­க­ளில் என்ன நிகழ்ந்­தது என்­பதை அவர்­கள் பார்த்­துள்­ள­னர். “தாமரை மல­ரும்­போது” எது நிக­ழும் என்­பதை அவர்­கள் நன்கு அறிந்­துள்­ள­னர். பாட­நூல்­கள் மாற்­றப்­பட்­டன, சிறு­பான்மை மக்­களை ஒதுக்­கி­னர், எதிர்­ம­றை­யான குரல்­கள் அடக்­கப்­பட்­டன. கல்வி முறை, சிந்­த­னையை வளர்க்­கும் சாத­ன­மாக அல்­லா­மல், “மனப்­பி­ரச்­சா­ரத்­தைப் பரப்­பும் கரு­வி­யாக” மாற்­றப்­பட்­டது. அந்­தப் பின்­ன­ணி­யில், மோடி அவர்­கள் “பீஹா­ரி­கள் தமிழ்­நாட்­டில் துன்­பு­றுத்­தப்­ப­டு­கி­றார்­கள்” என கூறும்­போது, அவர் உண்­மை­யில் சொல்­வது, “என் பிரச்­சா­ரம் தமிழ்­நாட்­டில் துன்­பு­றுத்­தப்­ப­டு­கி­றது” என்­பதே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“இந்­தி­யா­வின் என் வடி­வ­மைப்பு” தமிழ்­நாட்­டில் துன்­பு­றுத்­தப்­ப­டு­கி­றது. பன்மை (diversity) அதனை துன்­பு­றுத்­து­கி­றது, கார­ண­வா­தம் (rationalism) அதனை துன்­பு­றுத்­து­கி­றது, ஒற்­றுமை (inclusivity) அதனை துன்­பு­றுத்­து­கி­றது. மக்­கள் மதத்­தின் அடிப்­ப­டை­யில் பிரி­யா­மல் ஒன்­றாக வாழ முடி­யும்; அவர்­கள் ஒரு­வ­ரு­டன் ஒரு­வர் ஒத்­து­ழைத்து முன்­னேற முடி­யும்; அதுவே அவ­ருக்­குத் தாங்க முடி­யாத உண்மை. அந்த உண்­மையே அவரை “துன்­பு­றுத்­து­கி­றது”.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பீஹாரை போல</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">உடைக்க வேண்­டாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத­னால், அன்­பிற்­கு­ரிய பிர­த­மரே, நீங்­கள் உண்­மை­யில் பீஹாரி மக்­க­ளுக்கு உதவ விரும்­பி­னால், தமிழ்­நாட்­டைப் போல பீஹாரை உரு­வாக்­குங்­கள். தமிழ்­நாட்டை பீஹா­ரைப் போல உடைக்க வேண்­டாம். இது ஒரு கட்­சி­யைப் பற்­றிய விருப்­பம் அல்ல. இது ஒரு சிந்­த­னை­யை­யும் அதன் உயி­ரை­யும் காப்­பது பற்­றி­யது. அந்­தச் சிந்­தனை, முகங்­க­ளின் அடை­யா­ளத்தை மீறி நிற்­கி­றது; அது மத­வா­தத்­திற்­கும், பொய்யை தொழி­லாக்­கும் அர­சி­யல் தொழிற்­சா­லைக்­கும் எதி­ராக நிற்­கி­றது; அது ‘இந்­தியா’ என்ற கருத்­தையே மறு­ப­டி­யும் எழுத முயல்­கின்ற சக்­தி­க­ளுக்­கெ­தி­ராக போரா­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்­தச் சிந்­த­னையை நான் பாது­காப்­ப­த­னால் நான் பாகு­பா­டா­கக் கரு­தப்­ப­டு­கி­றே­னெ­னில், அந்­தக் குற்­றச்­சாட்டை நான் பெரு­மை­யு­டன் ஏற்­றுக்­கொள்­கி­றேன். ஏனெ­னில், நெறி நெருக்­கடி நில­வு­கின்ற நேரத்­தில் நடு­நி­லை­யாக இருப்­பது செய்­தி­யா­ளர்­த­னம் அல்ல, அது கோழைத்­த­னம். ஒரு சம­யம், கலாச்­சா­ரம், அர­சி­ய­ல­மைப்பு, மற்­றும் கல்வி முறை வரி வரி­யாக மறு­ப­டி­யும் எழு­தப்­ப­டும் வேளை­யில் நடு­நி­லை­யாக இருப்­பது இய­லாது. வெறுப்பு சாதா­ர­ண­மாக்­கப்­ப­டும் போது அமை­தி­யாக இருப்­ப­தும் ஒரு­பா­வம். மேலும், “சப்கா சாத்த், சப்கா விகாஸ்” (அனை­வ­ரின் ஒத்­து­ழைப்­பும், அனை­வ­ரின் முன்­னேற்­ற­மும்) எனக் கூறிய பிர­த­மர் இப்­போது “சப்கோ” பிரிக்­கும் நிலைக்கு தானே தள்­ளி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பொறுப்­பின் கண்­ணி­யத்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இழக்­கா­தீர் பிர­த­மரே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மோடி அவர்­களே, நீங்­கள் ஒரே சிந்­த­னைக்­கான பிர­த­மர் அல்ல; ஒரே கட்சி அல்­லது ஒரே வாக்கு வங்­கிக்­கான பிர­த­ம­ரும் அல்ல. நீங்­கள் இந்­தி­யா­வின் பிர­த­மர். பீஹா­ரின், தமிழ்­நாட்­டின், வார­ணா­சி­யின், விழுப்­பு­ரத்­தின், ஹிந்தி பேசும் மண்­ணின், திரா­வி­டத்­தின் பிர­த­மர். அத­னால், உங்­கள் தேர்­தல் பிரச்­சா­ரத்­தின் அவ­ச­ரத்­திற்­காக உங்­கள் பொறுப்­பின் கண்­ணி­யத்தை இழக்க வேண்­டாம். பிர­த­மர் என்ற உயர்ந்த மேடை, தீர்­வு­க­ளுக்­காக அல்­லா­மல் சந்­தே­கங்­க­ளைப் பரப்­பு­வ­தற்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் போது, நீங்­கள் தமிழ்­நாட்டை மட்­டு­மல்ல, இந்­தி­யா­வின் அடிப்­படை யோச­னை­யையே அவ­ம­திக்­கி­றீர்­கள். இந்­தியா ஒரே குர­லில் பேசும் நாடாக உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. அது எப்­போ­துமே ஒரு இசை, அழ­கான, கல­க­லப்­பான, பல்­வேறு சுரங்­க­ளால் ஆன ஒன்று. கபீ­ரி­லி­ருந்து பார­தி­யார் வரை, புத்­த­ரி­லி­ருந்து பெரி­யார் வரை. இந்த மண்­ணின் அடிப்­படை, கேள்வி கேட்­ப­து­தான், கீழ்ப்­ப­டி­தல் அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைய ஆட்­சி­யா­ளர்­கள் கேள்­வி­களை விரும்­பு­வ­தில்லை; அவர்­கள் விரும்­பு­வது கைத்­தட்­டல்­களை மட்­டுமே. ஆனால் தமிழ்­நாடு கண்ணை மூடி கைத்­தட்ட மறுக்­கி­றது. அதுவே அதன் “குற்­றம்”. தமிழ்­நாடு போரா­டு­கி­றது அந்த மனப்­பான்­மைக்­கெ­தி­ராக. “கல்­விக்­கான நிதி ஹிந்தி மொழியை ஏற்­றுக்­கொண்­டால் மட்­டுமே கிடைக்­கும்” எனச் சொல்­லும் வாதத்­துக்­கெ­தி­ராக அது போரா­டு­கி­றது, அந்­தக் கண்­ணோட்­டத்­திற்­கெ­தி­ராக. உல­கின் பழ­மை­யான மொழி­யான தமிழ் இன்­னும் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­ற­போ­தும்,“இந்­தி­ய­னாக இருப்­ப­தற்­காக நீங்­கள் இன்­னொரு மொழியை கற்­றுக்­கொள்ள வேண்­டும்” எனக் கூறும் அகங்­கா­ரத்­துக்­கெ­தி­ராக.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“இந்திதெரி­ய­வில்­லையா? நீ உண்­மை­யில் இந்­தி­ய­னாக இருக்­கி­றாயா? நாட்­டின் மொழியை கற்­றுக்­கொள்ள முடி­ய­வில்­லையா?” என கேட்­கும் அச்­சொற்­க­ளுக்­கெ­தி­ராக தமிழ்­நாடு போரா­டு­கி­றது. அது “ஒரு நாடு, ஒரு மொழி” என்ற அர­சி­யல் எண்­ணத்­துக்­கெ­தி­ரா­கக் குரல் கொடுக்­கி­றது. ஏனெ­னில் “ஒரு நாடு” உரு­வா­னது பல மொழி­க­ளா­லும், பல இத­யங்­க­ளா­லும், பல கைக­ளா­லும் தான். இந்­தியா போன்ற பரந்­த­தும் பன்­மை­மிக்­க­து­மான ஒரு நாடு,  ஒரே சிந்­தனை அல்­லது ஒரே வழி­யில் மட்­டுமே இயங்க முடி­யாது என்­ப­தில் தமிழ்­நாடு உறு­தி­யாக நம்­பு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மனுஸ்­மி­ரு­திக்­கெ­தி­ராக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">போரா­டு­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது மனுஸ்­மி­ரு­தி­யின் சாம்­பலை மீண்­டும் தோண்டி எடுத்து அதை அர­சி­ய­ல­மைப்­பாக மகு­டம் சூட்ட முய­லும் வல­து­சாரி சிந்­த­னை­க­ளுக்­கெ­தி­ரா­கப் போரா­டு­கி­றது. அது “தலித்­து­கள் தங்­க­ளின் இடத்தை அறிந்து அமை­தி­யாக இருக்­கட்­டும்” எனக் கூறும் பொய்­யான சமூ­கக் கொள்­கை­க­ளுக்­கெ­தி­ரா­கப் போரா­டு­கி­றது. அது “சப்கா சாத்த், சப்கா விகாஸ்”  (அனை­வ­ரின் ஒத்­து­ழைப்பு அனை­வ­ரின் முன்­னேற்­றம்) எனக் கூறி, சிலர் ஆட்சி செய்­யப் பிறக்­கி­றார்­கள்,மற்ற சிலர் சேவை செய்­யப் பிறக்­கி­றார்­கள் என்ற மறை­மு­க­மான சமூக அடி­மைத்­த­னத்­தைக் கொண்ட அமைப்­புக்­கெ­தி­ரா­கப் போரா­டு­கி­றது. அது இந்­தி­யாவை சமத்­து­வத்­தி­லி­ருந்து சலு­கைக்கே, நீதி நிலை­யி­லி­ருந்து ஆதிக்­கத்­திற்கே இழுத்­துச் செல்ல முயல்­கின்ற சக்­தி­க­ளுக்­கெ­தி­ரா­கப் போரா­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது திரா­வி­டத்­தின் அடை­யா­ள­மான கருப்­பு–­செம்மை நிறத்தை குங்­கு­மப்பூ நிறத்­தில் மூழ்­கச் செய்ய நினைப்­ப­வர்­க­ளுக்­கெ­தி­ரா­கப் போரா­டு­கி­றது. அது கல்­வி­யைப் பற்றி பெரு­மை­யா­கச் சொல்­லி­யும் அந்த வார்த்­தை­க­ளின் பொரு­ளையே துரோ­கம் செய்­ப­வர்­க­ளுக்­கெ­தி­ரா­கப் போரா­டு­கி­றது.இது தனக்­கான புக­ழுக்­காக அல்ல, உண்­மைக்­காக, அது உண்­மையை புதைத்­து­விட முயல்­கின்ற சக்­தி­க­ளுக்­கெ­தி­ரா­க­வும், “வரை­ய­றை­கள்”, “ஒழுங்­கு­கள்” என்ற பெய­ரில் மக்­க­ளின் சுதந்­தி­ரக் குரலை அடக்க முயல்­கின்ற அர­சி­யல் பாவ­னை­க­ளுக்­கெ­தி­ரா­க­வும் போரா­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது எதிர்­கால இந்­தியா முழு­வ­தும் வட­இந்­திய வாக்­கு­க­ளின் பலத்­தால் மட்­டுமே ஆட்­சி­கள் உரு­வாக, தென் மாநி­லங்­க­ளின் குரல்­கள் மவு­னப்­ப­டுத்­தப்­ப­டு­மெ­னக் கணக்­கிட்­டுள்ள அந்­தக் கலாச்­சா­ரக் கொடு­மைக்­கெ­தி­ரா­கப் போரா­டு­கி­றது. அந்த எதிர்ப்­பின் வழி­யா­கவே தமிழ்­நாடு ஒவ்­வொரு மாநி­லத்­திற்­கா­க­வும் போரா­டு­கி­றது. ஏனெ­னில் ஜன­நா­ய­கம் என்­பது மக்­க­ளின் எண்­ணிக்­கை­யின் அள­வைப்­பற்­றி­யது அல்ல, அவர்­க­ளின் பங்­கேற்­பின் வலி­மை­யைத்­தான் அள­வு­கோ­லா­கக் கொள்ள வேண்­டும் என்­ப­தில் அது நம்­பு­கி­றது. அது இந்­தி­யாவை “தலை­யெண்­ணாக” மாற்ற முயல்­கின்ற அர­சி­ய­லுக்­கெ­தி­ராக, அதனை “இத­யத் துடிப்­பாக” காக்­கப் போரா­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘நீட்’க்கு எதி­ராக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">போரா­டு­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது “நீட்” எனப்­ப­டும் கொடூ­ர­மான தேர்­வுக்­கெ­தி­ராக போரா­டு­கி­றது. ஒவ்­வொரு ஆண்­டும் பல உயிர்­க­ளைப் பலி­கொள்­கின்ற அந்த பொய்­யான “தேசி­யத் தேர்வு” முறைக்­கெ­தி­ராக. அது ஒவ்­வொரு,  “அரி­ய­லூர்” “அனிதா”  என்ற மாண­விக்­கா­கப் போரா­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது ஒவ்­வொரு, “திருப்­பூர்” “ரிது” மாண­விக்­கா­க­வும் போரா­டு­கி­றது. அது ஒவ்­வொரு திண்­டி­வ­னம் “பிர­தீபா”, “சேலம்” இளை­ஞர்­க­ளுக்­கா­க­வும் போரா­டு­கி­றது.  அது ஒவ்­வொரு “பூஜா”, “ஜக்­தி­யல் – தெலங்­கானா” மாண­விக்­கா­க­வும், ஒவ்­வொரு “மனோஜ் குமார்”, “ஆதி­லா­பாத் – தெலங்­கானா” இளை­ஞ­ருக்­கா­க­வும் போரா­டு­கி­றது. அது ஒவ்­வொரு “சாதனா”, “சாங்க்லி – மகா­ராஷ்­டிரா” மாண­விக்­கா­க­வும் போரா­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு போரா­டு­கி­றது ஒரு சிந்­த­னைக்­காக. தேர்­வு­கள் கத­வு­க­ளைத் திறக்க வேண்­டும், உயிர்­களை மூடக்­கூ­டாது என்ற சிந்­த­னைக்­காக. அது “பெட்டி பச்­சாவ், பெட்டி படாவ்” எனக் கூறி மகள்­க­ளின் கல்வி புத்­த­கங்­க­ளின் விலை அவர்­க­ளின் தந்­தை­யின் வருட வரு­மா­னத்­தை­விட அதி­க­மாக்­கும் பொய்­யான கொள்­கை­க­ளுக்­கெ­தி­ரா­கப் போரா­டு­கி­றது. அது “ராஜ்­ப­வன்­க­ளில்” அமர்ந்து “ராஜாக்­க­ளாக” கனவு காணும் மனி­தர்­க­ளுக்­கெ­தி­ரா­கப் போரா­டு­கி­றது. அது மசோ­தாக்­க­ளைத் தடுத்து நிறுத்­தும், கோப்­பு­களை தாம­தப்­ப­டுத்­தும், மக்­க­ளின் வாக்­கால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அரசை பல­வீ­னப்­ப­டுத்­தும் அந்­தத் தலைமை ஆச­னத்­தின் தவ­றான பயன்­பாட்­டுக்­கெ­தி­ரா­கப் போரா­டு­கி­றது. டெல்லி “கீழ்ப்­ப­டி­தல் வேண்­டும்” என்று சொல்­வ­தற்கு, தமிழ்­நாடு “ஏன்?” என்று கேட்­கி­றது. — அதுவே உண்­மை­யான துன்­பு­றுத்­த­லாக மோடிக்கு தோன்­று­கி­றதோ! இது­தான் துன்­பு­றுத்­தல் என்­றால், இந்­தி­யா­வின் மற்ற மாநி­லங்­க­ளும் இதே­போன்ற “துன்­பு­றுத்­தலை” அனு­ப­விக்க தகு­தி­யு­டை­யவை. ஆம், நல்ல ஆட்சி, பொறுப்­பு­ணர்வு, மதச்­சார்­பற்ற தன்மை, அமைதி, இணை வாழ்வு, தார்க்­கி­கம் ஆகி­ய­வற்­றால் “துன்­பு­றுத்­தப்­ப­டு­வது” தகுந்த பெரு­மை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தமிழ்­நாடு போரா­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தமிழ்­நாடு வெல்­லும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">  அடுத்த முறை மோடி “பீகா­ரி­கள் தமிழ்­நாட்­டில் துன்­பு­றுத்­தப்­ப­டு­கி­றார்­கள்” என்று கூறி­னால், முழு நாடும் ஒரே குர­லில் பதி­ல­ளிக்­கட்­டும்.  “தயவு செய்து எங்­க­ளை­யும் அதே­போல் துன்­பு­றுத்­துங்­கள்!” ஏனெ­னில், நாம் வெறுப்­பின் கீழ் போது­மான துன்­பம் அனு­ப­வித்­து­விட்­டோம்; இப்­போது நாம் ஒற்­று­மை­யின் கீழ் துன்­பப்­ப­டத் தயா­ராக உள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் ஒழுக்­கம் குற்­ற­மா­கக் கரு­தப்­ப­டு­மா­னால், அப்­ப­டி­யென்­றால் முன்­னேற்­றமே சட்­ட­வி­ரோ­த­மா­கட்­டும். ஒவ்­வொரு நக­ர­மும் “கார­ணத்­தின் ஒளி­யில்” எரி­யட்­டும்; ஒவ்­வொரு இந்­தி­ய­ரும் மேம்­பாடு கேட்­ப­தற்­காக, பெரிய சத்­தத்­தில் கேள்வி கேட்­ப­தற்­காக, ஆழ­மாக நேசிப்­ப­தற்­காக “குற்­ற­வாளி” எனக் கரு­தப்­ப­டட்­டும். இதுவே “பழுப்பு வெளிச்­சம்” — Brown Enlightenment.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆம், நாங்­கள் “துன்­பு­றுத்­து­கி­றோம்”, செயல்­ப­டும் தர்க்­கத்­தால், வர­லாற்று நினை­வு­க­ளால், மற்­றும் சாதா­ரண அறி­வின் தாங்க முடி­யாத பிர­கா­சத்­தால். தமிழ்­நாடு போரா­டும். தமிழ்­நாடு வெல்­லும்! இது நமது நிலம், நமது மக்­கள், நமது மொழி. தமி­ழர்­களே எழுந்து நில்­லுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு அந்த வீடி­யோ­வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>