<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/11/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,291,962,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Nov 11 2025 04:12:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251111T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="11112025-TRY-05" position.sequence="05" ex-ref="11112025-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்காவின் </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">469- வது கந்தூரி சந்தனக்கூடு திருவிழா – முன்னேற்பாட்டுப் பணிகள்!  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் -அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Theerargal5_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாகப்­பட்­டி­னம், நவ.11</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாகப்­பட்­டி­னம் மாவட்­டம் நாகூ­ரில் அமைந்­துள்ள உலக பிர­சித்தி பெற்ற நாகூர் தர்­கா­வின் 469-வது கந்­தூரி சந்­த­னக்­கூடு திரு­விழா முன்­னேற்­பாடு பணி­கள் குறித்து  சிறு­பான்­மை ­யி­னர் நலன் மற்­றும் வெளி­நாடு வாழ் தமி­ழர் நலத்­துறை அமைச்­சர் ஆவடி  எஸ்.எம்.நாசர்  பள்ளி கல்­வித்­துறை அமைச்­சர் 
அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி  ஆய்வு மேற்­கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதனை தொடர்ந்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அமைச்­சர்கள் தெரி­வித்­த­
தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் ஆணைக்­கி­னங்க நாகப்­பட்­டி­னம் மாவட்­டம் நாகூ­ரில் அமைந்­துள்ள உலக பிர­சித்தி பெற்ற நாகூர் தர்­கா­வின் 469-வது கந்­தூரி திரு­வி­ழா­வா­னது எதிர்­வ­ரும் 21.11.2025 முதல் 30.11.2025 வரை சிறப்­பாக நடை­பெற வேண்­டு­மென்ற நோக்­கில் இத்­தி­ரு­வி­ழா­வின் முக்­கிய விழா­வான சந்­த­னக்­கூடு ஊர்­வ­லம் 30.11.2025 அன்று இரவு நடை­பெற உள்­ளதை முன்­னிட்டு துறை­கள் வாரி­யாக மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய முன்­னேற்­பாடு பணி­கள் குறித்து ஆய்வு கூட்­டம் நடத்­தப்­பட்­டது. இக்­கூட்­டத்­தில் வரு­வாய்த்­து­றை­யி­னர் ஊர்­வ­லம் செல்­லும் இடங்­க­ளில் உள்ள ஆக்­கி­ர­மிப்­பு­களை அகற்­றி­ட­வும் மற்­றும் ஊர்­வ­லம் சிறப்­பாக நடை­பெ­ற­வும், நக­ராட்சி மற்­றும் குடி­நீர் வடி­கால் வாரி­யம் சார்­பில் நாகப்­பட்­டி­னம் முதல் நாகூர் அரு­கில் உள்ள குப்­பை­களை அகற்றி, ப்ளீச்­சிங் பவு­டர் தின­மும் தெளிக்க சுழற்சி முறை­யில் சுமார் 100 தூய்­மைப்­ப­ணி­ யா­ளர்­கள், குப்­பை­களை அகற்ற 4 டிராக்­டர்­கள் பழு­த­டைந்த தெரு விளக்­கு­கள், சாலை­களை சரி செய்­தி­ட­வும் மற்­றும் பொது­மக்­கள் வச­திக்­காக ஆங்­காங்கே 30 தற்­கா­லிக கழி­வ­றை­கள் அமைத்­திட ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும், பக்­தர்­கள் அதி­கம் கூடும். 10 இடங்­க­ளில் குடி­நீர் தொட்டி வசதி மற்­றும் குளோ­ரி­சன் செய்­யப்­பட்ட சுத்­த­மான குடி­நீரை வழங்­கிட நட­வ­டிக்கை, வாக­னங்­களை நிறுத்­து­வ­தற்கு ஏது­வாக 03 பார்க்­கிங் வசதி ஏற்­பாடு, ஊர்­வ­லம் வர ஏது­வாக நாகப்­பட்­டி­னம் முதல் நாகூர் வரை சாலை­யில் உள்ள வேகத்­த­டை­களை அகற்றி பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காவல்­து­றை­யி­னர் சார்­பில் நாகூர் கந்­தூரி விழா­வின் போது நாகப்­பட்­டி­னம் முதல் நாகூர் வரை உள்ள பகு­தி­க­ளி­லும் மற்­றும் தர்­காவை சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளி­லும் உரிய பாது­காப்பு வழங்க நட­வ­டிக்கை மேற்­கொள்ள நாகப்­பட்­டி­னம் மாவட்ட காவல் கண்­கா­ணிப்­பா­ளர் அவர்­க­ளின் தலை­மை­யில் 3 கூடு­தல் காவல் கண்­கா­ணிப்­பா­ளர்­கள், 15 துணைக்­கா­வல் கண்­கா­ணிப்­பா­ளர்­கள். 45 காவல் ஆய்­வா­ளர்­கள், 119 உதவி காவல் ஆய்­வா­ளர்­கள் மற்­றும் 987 காவ­லர்­கள் உள்­பட சுமார் 1100 பேர் பாது­காப்பு பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட உள்­ள­னர். 10 உயர் கண்­கா­ணிப்பு கோபு­ரங்­கள் (Watch Tower). வான்­வழி கேம­ராக்­கள் (Drone Camera). 80-க்கும் மேற்­பட்ட கண்­கா­ணிப்பு கேமி­ராக்­கள் மற்­றும் 24 மணி நேர­மும் செயல்­ப­டும் காவல் கட்­டுப்­பாட்டு அறை அமைக்­கப்­பட்டு பாது­காப்பு பணி மேற்­கொள்­ளப்­பட உள்­ளது. மேலும், சாலை விபத்­துக்­களை தடுப்­ப­தற்கு 03 நெடுஞ்­சாலை ரோந்து வாக­னங்­கள் ரோந்து பணி­யில் ஈடு­ப­டுத்­த­பட உள்­ளது. நாகூர் தர்­கா­விற்கு வருகை தரும் பொது­மக்­க­ளுக்கு உத­வி­யாக காவல் உதவி மைய­மும், திருட்டு, செயின் பறிப்பு உள்­ளிட்ட குற்ற சம்­ப­வங்­கள் ஏதும் நடை­பெறா வண்­ணம் தடுக்க 01 ஆய்­வா­ளர் தலை­மை­யில் 25 குற்ற தடுப்­புப்­பி­ரிவு காவ­லர்­கள் மற்­றும் வெடி குண்டு கண்­ட­றி­தல் மற்­றும் செய­லி­ழப்பு குழு­வி­னர் (BDDS) பாது­காப்பு பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட உள்­ள­னர். சுந்­தூரி திரு­வி­ழா­வினை முன்­னிட்டு, கொடி ஊர்­வ­லம் நடை­பெ­றும் நாளான 21.11.2025 மதி­யம் முதல் 22.11.2025 அதி­காலை வரை மற்­றும் சந்­த­னக்­கூடு ஊர்­வ­லம் நடை­பெ­றும் நாளான 30.11.2025 இரவு முதல் 01.12.2025 அதி­காலை வரை வாக­னங்­கள் ECR புத்­தூர் சாலை மார்க்­க­மாக செல்ல போக்­கு­வ­ரத்து மாற்­றம் செய்ய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. மேலும், ஊர்­வ­லம் செல்­லும் இடங்­க­ளில் உள்ள ஆக்­கி­ர­மிப்­பு­களை அகற்­றி­ட­வும். வாக­னம் நிறுத்­து­வ­ தற்கு ஒதுக்­கப்­பட்ட இடத்தை தவிர வேறு இடத்­தில் நிறுத்­தப்­பட்­டு ள்ள வாக­னங்­களை அப்­பு­றப்­ப­டுத்­த­வும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. தமிழ்­நாடு மின்­சார வாரி­யம் சார்­பில் சந்­த­னக்­கூடு அன்று ஊர்­வ­லம் செல்­லும் நாளில் மின் ஒயர்­க­ளால் பாதிப்பு ஏற்­ப­டா­த­வாறு தொய்­வான நிலை­யில் உள்ள மின் ஒய­று­களை முன்­கூட்­டியே சரி செய்­திட வேண்­டும். நெடுஞ்­சா­லைத்­து­றை­யி­னர் கனி­வான கவ­னத்­திற்கு நாகப்­பட்­டி­னம் காரைக்­கால்-­இ­சி­ஆர் சாலை மற்­றும் ஈசி­ஆர் நாகூர் தர்­கா­விற்கு செல்­லும் சாலை­யி­லும் வேகத்­தடை அமைத்­திட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். பிஎஸ்­என்­எல் சார்­பில் தடை­யில்லா தக­வல் தொடர்­பினை உறுதி செய்­திட வேண்­டும். மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை சார்­பில் தேவைக்­கேற்ப ஆம்­பு­லன்ஸ் வாக­னங்­களை முக்­கிய இடங்­க­ளில் நிறுத்தி வைக்­க­வும், 6 மருத்­துவ முகாம்­கள் மற்­றும் 07 நக­ரும் மருத்­துவ வாக­னம் அமைத்து இல­வச மாத்­தி­ரை­கள விநி­யோ­ கத்­தி­ட­வும், மெர்­ஜென்­சிக்­கான அனைத்து வச­தி­க­ளை­யும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டு ள்­ளது. கால்­நடை பரா­ம­ரிப்பு துறை சார்­பில் சாலை­க­ளில் சுற்றி தெரி­யும் தெரு நாய்­கள் மற்­றும் கால்­ந­டை­களை அப்­பு­றப்­ப­டுத்­தி­ட­வும், தீய­ணைப்பு துறை சார்­பில் தர்கா குளம் மற்­றும் நாகூர் கடற்­க­ரை­யில் அசம்­பா­வி­தங்­கள் நடை­பெறா வண்­ணம் 68 திய­ணைப்பு துறை அலு­வ­லர்­கள் மற்­றும் பணி­யா­ளர்­கள் உள்­ள­னர். மேலும் பைபர் பட­கு­களை தயார் நிலை­யில் வைத்து, விபத்து சம­யத்­தில் உதவ நீச்­சல் வீரர்­கள் மற்­றும் தன்­னார்­வ­லர்­களை தயார் நிலை­யில் வைத்­தி­ருக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. வட்­டார போக்­கு­வ­ரத்து அலு­வ­லர் சார்­பில் விழா காலங்­க­ளில் நாகூர் இர­யில் நிலை­யத்­தி­ லி­ருந்து தர்­கா­விற்கு வரும் பக்­தர்­க­ளுக்கு ஆட்டோ ஓட்­டு­நர்­கள் அதிக கட்­ட­ணம் வசூள் செய்­வதை கண்­கா­ணித்து அதிக கட்­டண தொகை வசூல் செய்­தால் உடனே அவர்­கள் மீது தக்க நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும். முன்­கூட்­டியே ஆட்டோ ஓட்­டு­நர்­களை அழைத்து ஆய்வு கூட்­டம் நடத்­திட வேண்­டும்.பொதுப்­ப­ணித்­துறை சார்­பில் தர்கா குளத்­தில் நான்கு முனை­க­ளி­லும் உயர் கோபுர விளக்­கு­கள் பொருத்­த­வும், குளத்தை சுற்றி மூன்று நடை­பா­தை­க­ளி­லும் குப்பை தொட்­டி­கள் வைக்க வேண்­டும் போக்­கு­வ­ரத்து துறை­யி­னர் சார்­பில் கந்­தூரி விழா­வினை முன்­னிட்டு கூடு­த­லாக 45 சிறப்பு பேருந்­து­களை இயக்­கப்­ப­டு­வதை உறுதி செய்து, கந்­தூரி விழா­விற்கு வெளி மாநி­லத்­தி­லி­ருந்து பக்­தர்­கள் வருகை புரி­வ­தற்கு முக்­கிய வழித்­த­டங்­க­ளில் இயக்­கப்­ப­டும் பேருந்­து­க­ளில் தமிழ் மற்­றும் ஆங்­கி­லத்­தில் ஸ்டிக்­கர் ஒட்­டிட நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும் என அமைச்­சர்கள் தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்­வில் மாவட்ட ஆட்­சித்­த­லை­வர் ப.ஆகாஷ், நாகப்­பட்­டி­னம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வை.செல்­வ­ராஜ், தமிழ்­நாடு மீன்­வ­ளர்ச்சி கழக தலை­வர் என்.கௌத­மன்  நாகப்­பட்­டி­னம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஜெ.முகம்­மது ஷா நவாஸ், மாவட்ட காவல் கண்­கா­ணிப்­பா­ளர் சு.செல்­வ­கு­மார், நாகப்­பட்­டி­னம் நக­ர­மன்ற தலை­வர் இரா.மாரி­முத்து, நாகப்­பட்­டி­னம் வரு­வாய் கோட்­டாட்­சி­யர் தரா.சங்­கர நாரா­ய­ணன், நாகப்­பட்­டி­னம் நக­ராட்சி ஆணை­யர் டி.லீனா­சை­மன், நாகப்­பட்­டி­னம் நக­ர­மன்ற துணைத்­த­லை­வர் செந்­தில்­கு­மார், நாகூர் தர்கா தலைமை நிரு­வாக அறங்­கா­வ­லர் சையது முக­மது காஜி ஹுசைன் சாஹிப், நாகூர் தர்கா ஆலோ­ச­னைக் குழு தலை­வர் சையது முக­மது கலீபா சாஹிப், மாநில சிறு­ பான்­மை­யி­னர் நல ஆணை­யத்­தின் உறுப்­பி­னர் நாகூர் ஏ.எச். நஜி­மு­தீன் ஆகி­யோர் உட­னி­ருந்­த­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>