<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/11/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,69,377,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Nov 10 2025 22:13:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251111T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="11112025-VLR-02" position.sequence="02" ex-ref="11112025-VLR-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#8e3800" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">வாக்கை உறுதி செய்யுங்கள்!</lang>
	</hl2>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup624100_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">“எனது வாக்கே எனக்கு இருக்­குமா என்று தெரி­ய­வில்ல</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.5">ை” என்று சொல்லி இருக்­கி­றார் காங்­கி­ரஸ் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான பீட்­டர் அல்­போன்ஸ். இந்­திய நாட்­டின் தேர்­தல் ஆணை­யம், ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் அந்த நிலை­மைக்­குத்­தான் கொண்டு வந்து விட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.5">S.I.R. எனப்­ப­டும் சிறப்பு வாக்­கா­ளர் பட்­டி­யல் சீர்­தி­ருத்­தத்தை கடு­மை­யாக எதிர்க்­கும் அதே நேரத்­தில் அதனை மிகக் கவ­ன­மா­கக் கண்­காணிக்க வேண்­டும். தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள், இது தொடர்­பான சட்­டப் போராட்­டத்தை ஒரு பக்­கம் நடத்­தி­னா­லும், பொது­மக்­கள் விழிப்­ப­டைய ஒரு காணொ­ளியை வெளி­யிட்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">“ ‘உங்­க­ளின் வாக்கு நீக்­கப்­ப­டுமா?’ என்று கேட்­டால், அவ்­வாறு ஒரு அபா­யம் நிச்­ச­யம் இருக்­கி­றது, இல்லை என்று சொல்­லி­விட முடி­யாது. அதைத் தடுக்க வேண்­டும் என்­றால், உங்­கள் பகு­திக்­கு­ரிய BLO யார்? என்று கேட்டு, அவ­ரி­டம் இருந்து கணக்­கீட்­டுப் படி­வத்தை வாங்கி, சரி­யாக நிரப்பி, திரும்­பச் சமர்ப்­பிக்க வேண்­டும். அதற்­கான ஒப்­பு­கைச் சீட்­டை­யும் மறக்­கா­மல் வாங்க வேண்­டும். இது­தான் உங்­க­ளின் வாக்­கு­ரி­மை­யைப் பாது­காக்கும்.”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.5">என்று மிகத் தெளி­வாக அறி­வுரை சொல்லி இருக்­கி­றார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">“BLO–க்கள் தங்­க­ளின் பணி­யைச் சரி­வர செய்­ய­வில்லை என்­றால், இந்த S.I.R. பணியே மொத்­த­மாக பாதிப்­பைச் சந்­திக்­கும். BLO–க்களும், கட்­சி­களின் BLA-–2–க்களும் இணைந்து செயல்­ப­டத் தேவை­யான அனைத்­தை­யும் செய்­வோம் என்று தேர்­தல் ஆணை­யம் சொன்­னார்­கள்! அவ்­வாறு சொன்­னார்­களே தவிர, அவ்­வாறு ஒரு சூழலை இது­வரை உரு­வாக்­கவே இல்லை. தி.மு.க. BLA2 தயா­ராக இருந்­தா­லும் கூட, பல இடங்­க­ளில் BLO–க்கள் வரா­மல் இருக்­கி­றார்­கள். இதை­யெல்­லாம் மீறித்­தான் நம்­மு­டைய செயல்­வீரர்­கள் விழிப்­பா­கச் செயல்­பட்டு வரு­கி­றார்­க</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.5">ள்” என்று சொல்லி இருக்­கி­றார் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.5">S.I.R.–க்காக வழங்­கப்­ப­டும் கணக்­கீட்­டுப் படி­வத்­தில் பல குழப்­பங்­கள் இருக்­கி­றது. ஒரு வாக்­கா­ளர் எதற்­காக அவ­ரது உற­வி­னர் பெய­ரைச் சொல்ல வேண்­டும்? உற­வி­னர் என்­றால் யார்? எந்த உற­வி­ன­ரைச் சொல்­வது? அது­வும் 2002 இல்  அவர்­க­ளது EPIC எண்ணை எங்­கி­ருந்து எப்­படி தேடி கண்டு பிடிப்­பது..? ஊர் மாறி இருந்­தால், தெரு மாறி இருந்­தால் என்ன ஆகும்? 2002 முதல் 2025 வரைக்­கு­மான கால­கட்­டத்­தில் தொகுதி வரை­யறை மூலம் பல்­வேறு தொகு­தி­க­ளின் பெயர்­கள் மாறி­யுள்­ளன.  அதே முக­வ­ரி­யில் இருந்­தா­லும் கூட ஒரு தொகு­தி­யில் இருந்த ஊர் வேறொரு தொகு­தி­யில் சேர்க்­கப்­பட்டு இருக்­க­லாம்.   தொகுதி மாற­வில்லை என்­றா­லும் பல­ருக்கு வாக்­குச்­சா­வடி மாறி இருக்­க­லாம். இதை எல்­லாம் என்ன செய்­வது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.5">மொத்­தத்­தில் விண்­ணப்­பத்­தைக் கொடுத்து குழப்­பம் ஏற்­ப­டுத்­தவே துடிக்­கி­றது தேர்­தல் ஆணை­யம். சரி­யான தக­வல் தர­வில்லை என்று சொல்லி வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் இருந்து பெயரை நீக்­கப் பார்க்­கி­றார்­கள். இந்த நிலை­யில் ஒவ்­வொரு வாக்­கா­ள­ரும் தங்­க­ளது வாக்கை உறுதி செய்து கொள்­வ­து­தான் மிக­மிக முக்­கி­ய­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.5">தேர்­தல் ஆணை­யம் ஒவ்­வொரு ஆண்­டும் சிறப்பு சுருக்­கத்  திருத்­தம்  (Special Summary Revision –SSR) மேற்­கொள்­கி­றது. இதில் வாக்­கா­ளர் தனது பெயரை சேர்க்­க­லாம். இறந்து போன­வர் பெயரை நீக்­க­லாம். தனது விப­ரங்­க­ளில் திருத்­தம் செய்­ய­லாம். இது ஆண்­டு­தோ­றும் நடக்­கி­றது. இப்­போது மேற்­கொள்­ளப்­ப­டும்  S.I.R. எனப்­ப­டும் சிறப்பு வாக்­கா­ளர் பட்­டி­யல் சீர்­தி­ருத்­தத்­தில்  வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் உள்ள அனைத்து வாக்­கா­ளர்­க­ளும் விண்­ணப்­பம் சமர்ப்­பிக்க வேண்­டும். நவம்­பர் 4 தொடங்கி 
பிப்­ர­வரி 7 ஆம் தேதிக்­குள் இந்­தப் பணி­களை முடிக்­கச் சொல்லி இருக்­கி­றார்­கள். வாக்­குச் சாவடி  நிலை அலு­வ­லர்­க­ளால்  இந்த பணி­கள் செய்­யப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.5">வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் இருக்­கும் அனை­வ­ருக்­கும் கணக்­கெ­டுப்பு படி­வம் தரப்­ப­டும். அதனை பூர்த்தி செய்து தர­வேண்­டும். இந்த படி­வம் வீடு தேடி வரும். வரா­விட்­டால் அத­னைக் கேட்­டுப் பெற்­றாக வேண்­டும். பூர்த்தி செய்­யப்­பட்ட படி­வத்தை கொடுத்­த­தற்கு அத்­தாட்சி நகல் வழங்­கப்­ப­டும். அத­னை­யும் மறக்­கா­மல் வாங்க வேண்­டும். இவை அனைத்­தும் ஏற்­க­னவே வாக்­கா­ளர்­க­ளாக இருப்­ப­வர்­கள் செய்­தாக வேண்­டும். புதி­தாக சேர்ப்­ப­தற்­கான பணி­கள் டிசம்­பர் 9 தொடங்கி ஜன­வரி 8–ஆம் தேதி வரை நடை­பெற இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.5">ஒரே முக­வ­ரி­யில் தான் வசிக்­கி­றீர்­கள் என்­றால் சிக்­கல் இல்லை. வேறு முக­வ­ரிக்கு மாறி இருந்­தால் மிகக் கவ­ன­மாக இருக்க வேண்­டும். வாக்­கா­ளர்­கள் தற்­கா­லி­க­மாக அல்­லது நிரந்­த­ர­மாக  இடம்­பெ­யர்ந்து விட்­டார்­களா என்­பதை வாக்­குச்­சா­வடி நிலை அலு­வ­லர்­கள் கணக்­கெ­டுப்­பின்­போது பதிவு செய்­கி­றார்­கள்.  பல­ரும் வேறு முக­வ­ரிக்கு மாறி விட்­டா­லும் வாக்­க­ளிக்­கும் தினத்­தன்று சொந்த ஊருக்கு வந்து வாக்­க­ளிப்­பதை வழக்­க­மாக வைத்­தி­ருப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14.5">முந்­தைய முக­வ­ரி­யில் கணக்­கெ­டுப்பு படி­வத்தை வழங்க முடி­ய­வில்லை என்­றால் அவர்­கள் பெயர் நீக்­கப்­பட்டு விடும். எனவே தற்­போது வசிக்­கும் இடத்­தில் உள்ள வாக்­குச் சாவ­டி­யில் தான் அவர் தனது பெயரை பதிவு செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">ஒவ்­வொரு வாக்­கா­ள­ரின் வாக்­கு­ரி­மை­யை­யும் உறுதி செய்ய திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் உதவி மையம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இது தி.மு.க.–வின­ருக்கு மட்­டும் அமைத்­தி­ருக்­கும் உதவி மையம் இல்லை; அனை­வ­ருக்­கு­மா­னது.  S.I.R.–ஆல் பாதிக்­கப்­ப­டும் அனைத்­துப் பொது­மக்­க­ளும்  08065420020 என்ற உதவி எண்­ணைத் தொடர்பு கொண்டு தங்­க­ளது சந்­தே­கங்­களை தீர்த்­துக் கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­க­ளது வாக்­கு­ரி­மையை உறுதி செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>