<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/11/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,74,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Nov 10 2025 22:16:26 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251111T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="11112025-VLR-08" position.sequence="08" ex-ref="11112025-VLR-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">சென்­னை­யில் தி.மு.க. 75 அறி­வுத் திரு­விழா – ‘காலத்­தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளி­யீடு:</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="33"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="59">“தி.மு.கழ­கம் -–, கழக உடன்­பி­றப்­பு­கள்  வியர்வை, ரத்­தம் சிந்தி    தங்­கள் உயி­ரையே உர­மாக்­கிய தியா­கத்­தால் வளர்ந்த இயக்­கம்”!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">கருத்­த­ரங்க நிறைவு நாளில் - இளை­ஞர் அணிச் செய­லா­ளர்</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் எழுச்­சி­மிக்க உரை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame453810_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="udhayacolsir_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">சென்னை,நவ.11–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">சென்னை வள்­ளு­வர் கோட்­டத்­தில், தி.மு.க. 75 அறி­வுத் திரு­வி­ழா­வை­யொட்டி, முற்­போக்கு புத்­த­கக் காட்சி –2 நாள் கருத்­த­ரங்­கம்– காலத்­தின் நிறம் கருப்பு சிவப்பு நூல்­வெ­ளி­யீடு, ஓவிய புகைப்­ப­டக் கண்­காட்சி, எனக் கோலா­க­ல­மாக தி.மு.கழக இளை­ஞர் அணி சார்­பில் சிறப்­பான  ஏற்­பா­டு­க­ளு­டன் நடை­பெற்­றது. தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் நூலை வெளி­யிட்­டார். இதைத் தொடர்ந்து,  இரு நாள் கருத்­த­ரங்­கம்  நடை­பெற்­றது. இதில் முற்­போக்­குச் சிந்­த­னை­யா­ளர்­கள்  பல­ரும் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னர். கருத்­த­ரங்­கின் நிறை­வாக கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும்  துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அப்­போது அவர் ``தி.மு.க. என்­கிற விதையை கழக உடன்­பி­றப்­பு­கள் தண்­ணீர் ஊற்றி வளர்க்­க­வில்லை.  வியர்வை, ரத்­தம் சிந்தி, தங்­கள் உயி­ரையே உர­மாக்கி, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை வளர்த்­தார்­கள்.  உடன்­பி­றப்­பு­க­ளின் தியா­கத்­தால்­தான் நம் இயக்­கம், இன்­றைக்கு ஒரு ஆல­ம­ர­மாக வளர்ந்து நிற்­கி­றது.  அத­னால்­தான், பெரிய பெரிய புய­லால் கூட நம் இயக்­கத்தை வீழ்த்த முடி­ய­வில்லை. இதை அனை­வ­ரும் புரிந்­து­ கொள்ள வேண்­டும்’’ என்று எழுச்­சி­மிக்க உரை­நிகழ்த்தினார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும்  துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் ஆற்­றிய எழுச்­சி­மிக்க உரை­யின் விவ­ரம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தொடங்­கப்­பட்டு, 75 ஆண்­டு­கள் முடிந்து 76 –வது ஆண்­டில் நாம் நடை­போட்­டுக் கொண்­டி­ருக்­கி­றோம். அதைக் கொண்­டா­டி­டும் வகை­யில் ஒரு நிகழ்ச்சி. `தி.மு.க – 75’ என்ற இந்த சிறப்­புக்­கு­ரிய விழாவை, இளை­ஞர் அணி­யின் சார்­பில் நடத்­து­வ­தில் மிகுந்த மகிழ்ச்­சி­யும், பெரு­மை­யும் அடை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இந்த நிகழ்ச்­சியை நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கி­ய­தோடு மட்­டு­மல்­லா­மல், அதற்­கான வழி­காட்­டு­தல்­க­ளை­யும் வழங்கி, இந்த நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்டு புத்­த­கத்தை வெளி­யிட்டு சிறப்­பித்து இந்த நிகழ்ச்­சியை இவ்­வ­ளவு சிறப்­பாக வெற்றி பெறச்­செய்த,  நம் கழ­கத் தலை­வர் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும், கழ­கத்­தின் பொதுச் செய­லா­ளர் – நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன் மாமா அவர்­க­ளுக்­கும், தலை­மைக் கழ­கத்­துக்­கும் இளை­ஞர் அணி­யின் சார்­பாக முத­லில் எங்­க­ளு­டைய நன்­றியை நாங்­கள் தெரி­வித்­துக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இரண்டு நாள் நிகழ்ச்­சி­யில் பேசி­ய­வர்­கள் எல்­லாம் பாராட்டி, வாழ்த்­திப் பேசி­யி­ருக்­கி­றார்­கள். பலர் மேடை­யில் வாழ்த்­தி­யி­ருக்­கின்­றார்­கள். பலர் என்னை நேரில் சந்­தித்த போது, சிறப்­பான முயற்சி என்று வாழ்த்­தி­யி­ருக்­கின்­றார்­கள். பலர் வாழ்த்­தி­யி­ருந்­தா­லும் மன­திற்­குள் சின்ன வருத்­த­மி­ருக்­க­லாம். மன­சுக்­குள் திட்­டி­யி­ருப்­பார்­கள். இப்­படி ஒரு நிகழ்ச்­சியை நடத்தி, இரண்டு நாட்­கள் நம்மை உட்­கார வைத்து விட்­டானே என்று. காலத்­தின் கட்­டா­யம் கரு­தித்­தான் இந்த நிகழ்ச்சி நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வள்­ளு­வர் கோட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">தி.மு.க. 75 விழாவை, எங்கு வேண்­டு­மா­னா­லும் நடத்­தி­யி­ருக்­க­லாம். அண்ணா அறி­வா­ல­யத்­தில் உள்ள கலை­ஞர் அரங்­கத்­தில் நடத்­தி­யி­ருக்­க­லாம். ஒய்.எம்.சி.ஏ. மைதா­னத்­தில் நடத்­தி­யி­ருக்­க­லாம். அன்­ப­கத்­தில் நடத்­தி­யி­ருக்­க­லாம். ஆனால், வள்­ளு­வர் கோட்­டத்­தைத் தேர்வு செய்­த­தற்கு மிக, மிக முக்­கி­ய­மான கார­ணம் உண்டு. நிறை­ய­பேர் இந்த வள்­ளு­வர் கோட்­டம் பக்­கம் வர­மாட்­டார்­கள். அதற்கு கார­ணங்­கள் உண்டு.  எனக்கு அதில் நம்­பிக்கை கிடை­யாது. அது­வும் இந்த இடத்­தைத் தேர்வு செய்­த­தற்கு ஒரு முக்­கிய கார­ணம். பலர் வரத் தயங்­கிய, யோசித்த இடம் இந்த வள்­ளு­வர் கோட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">கலை­ஞ­ருக்­கும் இந்த வள்­ளு­வர் கோட்­டத்­துக்­கும், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­துக்­கும், இந்த வள்­ளு­வர் கோட்­டத்­துக்­கும், எந்த அள­வுக்கு நெருக்­க­மும், தொடர்­பும் இருக்­கி­றது என்­ப­தற்கு, இங்கே நான் உங்­க­ளுக்கு விளக்கி சொல்ல விரும்­பு­கி­றேன்.  எப்­போ­தும் ஒரு நிகழ்ச்­சி­யில் நான்­கைந்து பேர் பேசிய பிறகு, கடை­சி­யா­கப் பேசு­ப­வர்­கள் பேசும்­போது மிக­வும் கஷ்­டப்­ப­டு­வார்­கள். நாம் பேச வைத்­தி­ருந்த குறிப்­பு­கள் அத்­த­னை­யை­யும் அந்த நான்­கைந்து பேர், பகிர்ந்து பேசி­யி­ருப்­பார்­கள். இளம் பேச்­சா­ளர்­கள் உங்­க­ளுக்கு தெரிந்­தி­ருக்­கும். எவ்­வ­ளவு குறிப்­பு­கள் தயார் செய்­தி­ருந்­தா­லும்,  எவ்­வ­ளவு கூட்­டங்­கள் பேசி­னா­லும், நாம் நினைத்­ததை வேறு ஒரு­வர் பேசி­விட்டு போய்­வி­டு­வார். ஐயோ, நாம் வைத்­தி­ருந்த பாயிண்ட் போய்­விட்­டதே என்று யோசிப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">ஒரு நிகழ்ச்­சிக்கே அப்­படி என்­றால், கிட்­டத்­தட்ட 10 அமர்­வு­கள், 44 சிறந்த பேச்­சா­ளர்­கள். சாதா­ரண பேச்­சா­ளர்­கள் கிடை­யாது. அவர்­கள் பேசி கடை­சி­யாக நாம் பேசும்­போது சில பிரச்­சி­னை­கள் இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">தமிழ்­நாட்­டின் முக்­கி­ய­மான பண்­பாட்டு அடை­யா­ள­மாக இருக்­கிற இந்த வள்­ளு­வர் கோட்­டத்­துக்கு, 1973–ஆம் ஆண்­டி­லேயே, கலை­ஞர் அவர்­கள் அடிக்­கல் நாட்­டி­னார்­கள். இந்த வள்­ளு­வர் கோட்­டத்­தைப் பார்த்து பார்த்து வடி­வ­மைத்து, கட்­டி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">1976–ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தில் இத­னைத் திறக்க, அப்­போது முத­ல­மைச்­ச­ராக இருந்த நம் கலை­ஞர் அவர்­கள், நாள் கூட குறித்­து­விட்­டார்­கள். ஆனால், அதற்கு முன்­பாக எமர்­ஜென்­சியை கொண்டு வந்து அன்­றைக்கு நம்­மு­டைய ஆட்­சி­யைக் கலைத்­து­விட்­டார்­கள். பிறகு, அன்­றைய ஆளு­நர் தலை­மை­யில், அப்­போ­தைய குடி­ய­ர­சுத் தலை­வர் வந்து இந்த வள்­ளு­வர் கோட்­டத்­தைத் திறந்து வைத்­தார்.  கலை­ஞர் அவர்­க­ளுக்கு, அழைப்பு கூட கொடுக்­க­வில்லை. கலை­ஞர் அவர்­கள், அடிக்­கல் நாட்­டிய கல்­லைக் கூட அப்­பு­றப்­ப­டுத்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வெற்­றிக் கோட்­டம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அப்­போது கலை­ஞர் அவர்­கள் முர­சொ­லி­யில் எழு­தி­னார்­கள், ``தான் வளர்த்து ஆளாக்­கிய பிள்­ளைக்கு திரு­ம­ணம் நடக்­கும்­போது, தாலி கட்­டும் காட்­சி­யைக் காணா­மல், பந்­த­லுக்கு வெளியே, ஒரு தாய் நிறுத்­தப்­பட்­டால் எப்­படி இருக்­குமோ, அப்­படி தவிக்­கி­றது என் மனசு’’ என்று எழு­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அந்த சம்­ப­வம் நடந்து 13 ஆண்­டு­கள் ஆன பிறகு, 1989–இல் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள் மீண்­டும் முத­ல­மைச்­ச­ரா­னார்.  மீண்­டும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சியை அமைத்­தது. அப்­போது, கலை­ஞர் அவர்­கள், இதே வள்­ளு­வர் கோட்­டத்­தில்­தான் பத­வி­யேற்பு விழாவை நடத்தி, முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பேற்­றார்­கள். இதி­லி­ருந்து ஒரே­யொரு விஷ­யத்தை மட்­டும் சொல்­லிக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">நம் இயக்­கத்தை யார் வீழ்த்த நினைத்­தா­லும், ``உங்­கள் திட்­டம் இங்கே பலிக்­காது” என்­பதை எதி­ரி­க­ளுக்கு உணர்த்­து­கிற இடம்­தான் இந்த வள்­ளு­வர் கோட்­டம். இது வள்­ளு­வர் கோட்­டம் மட்­டு­மல்ல. திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் வெற்­றிக் கோட்­டம் என்று சொல்­ல­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">80 கோடி ரூபாய் செலவு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இதை கலை­ஞர் கட்­டி­னார் என்ற ஒரே கார­ணத்­துக்­காக, சென்ற அ.தி.மு.க ஆட்­சி­யில், 10 ஆண்­டு­க­ளுக்கு மேலாக, பொது­மக்­கள் அனு­மதி இல்­லா­மல், பரா­ம­ரிக்­கா­மல் வைத்­தி­ருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">2021–இல் கழக ஆட்சி அமைந்­த­பி­றகு, நம்­மு­டைய தலை­வர் அவர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">80 கோடி ரூபாய் செல­வில், இந்த வள்­ளு­வர் கோட்­டத்­தைப் புதுப்­பித்­தி­ருக்­கி­றார்­கள். இதி­லி­ருந்து நாம் புரிந்து கொள்ள வேண்­டி­யது ஒன்றே ஒன்­று­தான்.  50 ஆண்­டு­க­ளுக்கு முன்பு, கலை­ஞர் அவர்­கள் கட்­டிய வள்­ளு­வர் கோட்­டத்தை, நம் முத­ல­மைச்­சர் அவர்­கள், நவீ­னப்­ப­டுத்தி திறந்து வைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அதே­போல் 75 ஆண்­டு­க­ளுக்கு முன்பு தொடங்­கப்­பட்ட நம்­மு­டைய திராவி முன்­னேற்­றக் கழ­கத்­தை­யும் நம் தலை­வர் அவர்­கள், நவீ­னப்­ப­டுத்தி, இன்று இருக்­கும் இளை­ஞர்­க­ளுக்­கும், கழ­கத்­துக்­கும் தொடர்­பு­ப­டுத்தி வைத்­துள்­ளார்­கள்.  அடுத்த தலை­மு­றைக்கு கழ­கத்தை எடுத்­துச் சென்­றுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">நேற்­றைய தினம் இந்த அறி­வுத்­தி­ரு­வி­ழா­வைத் தொடங்கி வைத்து பேசிய, நம் கழ­கத் தலை­வர் அவர்­கள், ஒவ்­வொரு ஆண்­டும், இந்த விழாவை நடத்த வேண்­டும் என்று இளை­ஞர் அணிக்­குக் கட்­ட­ளை­யிட்­டுள்­ளார்­கள். நிச்­ச­யம், இனி வரும் ஒவ்­வொரு ஆண்­டும், இளை­ஞர் அணி சார்­பில், `அறி­வுத்­தி­ரு­விழா’ நடத்­தப்­ப­டும் என்­பதை, இங்கே பெரு­மை­யோடு தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">என் வாழ்­நாள் பெருமை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இளை­ஞர் அணி­யின் பணி­க­ளைக் குறிப்­பிட்டு, தலை­வர் அவர்­கள் நம்மை வாழ்த்தி, பாராட்­டிப் பேசி­னார்­கள்.  ஒரு மக­னாக, ஒரு தந்­தை­யு­டன் வாழ்த்தை, பாராட்­டைப் பெற முயற்சி செய்து கொண்­டி­ருக்­கி­றேன். சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக, விளை­யாட்டு மற்­றும் சிறப்­புத் திட்­டச் செய­லாக்­கத் துறை­யின் அமைச்­ச­ராக, துணை முத­ல­மைச்­ச­ரா­க­வும், எனது பணி­க­ளுக்­காக தலை­வர் அவர்­க­ளின் பாராட்­டைப் பெற்று இருக்­கி­றேன். அப்­போ­தெல்­லாம், நான் உள்­ள­ப­டியே மகிழ்ந்து இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">ஆனால், இளை­ஞர் அணிச் செய­லா­ள­ராக என்­னு­டைய பணி­களை, நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் பாராட்­டும் போது, அதை, என் வாழ்­நாள் பெரு­மை­யா­கவே கரு­து­கி­றேன்.  ஏனென்­றால், இளை­ஞர் அணி என்­பது அவ­ரின் குழந்தை. ஏனென்­றால், நான் அடிக்­கடி சொல்­வது உண்டு, சட்­ட­மன்ற உறுப்­பி­னர், அமைச்­சர், துணை முத­ல­மைச்­சர் என, எனக்கு எத்­தனை பொறுப்­பு­கள் வந்­தா­லும், என் மன­துக்கு எப்­போ­தும் நெருக்­க­மான பொறுப்பு என்­றால், அது கழக இளை­ஞர் அணிச் செய­லா­ளர் பொறுப்­பு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கொள்­கைக் கூட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">நம் தலை­வர் அவர்­கள் ஒவ்­வொரு முறை­யும் பாராட்­டும் போது, நாம் இன்­னும் அதி­க­மாக உழைக்க வேண்­டும் என்ற உத்­வே­கம் ஏற்­ப­டு­கி­றது. தலை­வர் என்னை மட்­டும் பாராட்­ட­வில்லை, இளை­ஞர் அணி­யின் பணி­களை ஒட்­டு­மொத்­த­மாக சேர்த்­துத்­தான் பாராட்­டு­கி­றார்­கள்.  அந்த உத்­வே­கத்­து­டன்­தான், இந்த அறி­வுத்­தி­ரு­வி­ழாவை நடத்­து­கி­றோம். இந்த விழாவை மிக­வும் முக்­கி­ய­மான கால­கட்­டத்­தில் நடத்­து­கி­றோம். இன்­றைக்கு கொள்­கை­யற்ற ஒரு கூட்­ட­மும், தமி­ழர் விரோத பாசிச கும்­ப­லும், தமிழ்­நாட்­டைக் குறி வைத்­தி­ருக்­கி­றார்­கள். எனவே, இந்த அறி­வுத்­தி­ரு­வி­ழாவை, ஒரு தலை­யாய கட­மை­யா­கக் கரு­தியே நாம் செய்து இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இந்த 2 நாள் விழா­வில், `இரு­வண்­ணக் கொடிக்கு வயது – 75” கருத்­த­ரங்­கம், சென்னை முற்­போக்கு புத்­த­கக் காட்சி,  தி.மு.க வர­லாற்று கண்­காட்சி போன்ற நிகழ்­வு­களை நடத்­து­கி­றோம். அதி­லும் குறிப்­பாக, தி.மு.கழ­கத்­தின் 75 ஆண்டு கால வர­லாற்றை கூறும் `காலத்­தின் நிறம் – கருப்பு சிவப்பு’ என்­கிற நூலை, முத்­த­மி­ழ­றி­ஞர் பதிப்­ப­கம் சார்­பாக வர­லாற்று ஆவ­ண­மாக வெளி­யிட்டு இருக்­கி­றோம்.  இந்­தப் புத்­த­கத்தை முதற்­ப­திப்­பாக 5,000 புத்­த­கங்­களை அச்­சிட்­டோம்.  இந்த இரண்டு நாட்­க­ளில் மட்­டும் கிட்­ட­தட்ட 4,000 புத்­த­கங்­கள் விற்­று­விட்­டன.  சென்னை வட­கி­ழக்கு மாவட்ட அமைப்­பா­ளர் சகோ­த­ரர் மதன் அவர்­க­ளுக்கு எனது நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.  1,000 புத்­த­கங்­க­ளுக்கு முன்­ப­ண­மாக இந்த அரங்­கத்­தில் 6 லட்­சம் ரூபாயை என்­னி­டம் வழங்­கி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">கழ­கத்­தின் தீர்­மா­னக்­கு­ழுச் செய­லா­ளர் அண்­ணன் அக்ரி கணே­சன் அவர்­கள் ஒரு வேண்­டு­கோள் கடி­தத்தை என்­னி­டம் கொடுத்­துள்­ளார்.  வேண்­டு­கோள் மட்­டு­மல்ல, 10 லட்­சம் ரூபாய்க்கு ஒரு காசோ­லை­யை­யும் கொடுத்­துள்­ளார்.  அவர் கொடுக்­கும்­போதே நான் முடிவு செய்­து­விட்­டேன்.  அடுத்­த­டுத்த வரு­டம் `அறி­வுத்­தி­ரு­விழா’ நடக்க வேண்­டும்.  அவர் கொடுத்­துள்ள கோரிக்கை.  சென்­னை­யில் மட்­டும் நடத்­தா­தீர்­கள், வெவ்­வேறு மாவட்­டங்­க­ளில் நடத்­துங்­கள் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்.  அப்­படி நடத்­து­னீர்­கள் என்­றால், இந்த காசோ­லை­யைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ளுங்­கள் என்று மிக­வும் தெளி­வாக கடி­தத்­தில் எழுதி எனக்­குக் கொடுத்­துள்­ளார்.  நிச்­ச­யம் அடுத்த வரு­டம் வேறு மாவட்­டத்­தில் நடத்­தி­விட்டு, அந்த காசோ­லை­யைப் பயன்­ப­டுத்­திக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அறி­ஞர்­கள் –  எழுத்­தா­ளர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இந்த 2 நாள் கருத்­த­ரங்­கில், திரா­விட இயக்க அறி­ஞர் பெரு­மக்­கள், எழுத்­தா­ளர்­கள் தொடங்கி, இளை­ஞர் அணி கண்­டெ­டுத்த இளம் பேச்­சா­ளர்­கள் வரை பலர் பல்­வேறு கருத்­து­களை எடுத்து வைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இந்த நிகழ்ச்சி மட்­டு­மல்ல, இளை­ஞர் அணி­யின் ஒட்­டு­மொத்த செயல்­பா­டு­க­ளும், கொள்கை வழி­யில்­தான் இருக்­க­வேண்­டும் என்­று­தான் நானும், துணைச் செய­லா­ளர்­க­ளும் இதைத் திட்­ட­மிட்டு செய்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இளை­ஞர் அணி­யின் சார்­பில் சட்­ட­மன்­றத் தொகு­தி­தோ­றும் கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கம், முத்­த­மி­ழ­றி­ஞர் பதிப்­ப­கம், முர­சொ­லி­யில் பாச­றைப் பக்­கம், திரா­விட மாடல் பயிற்சி பாச­றைக் கூட்­டம், 200–க்கும் மேற்­பட்ட இளம் பேச்­சா­ளர்­க­ளைத் தேர்வு செய்­தது, கலை­ஞர் மாண­வர் பத்­தி­ரி­கை­யா­ளர் திட்­டம் என பல்­வேறு பணி­களை இளை­ஞர் அணி செய்து வரு­கி­றது.   இது­தான் கலை­ஞர் அவர்­கள் நமக்கு சொல்லி கொடுத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இந்­தக் கருத்­த­ரங்­கத்­தி­லும், புத்­த­கக் கண்­காட்­சி­யி­லும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் கலந்து கொண்டு புத்­த­கங்­களை வாங்­கி­கொண்டு இருக்­கி­றார்­கள். எங்­க­ளு­டைய முயற்­சியை உற்­சா­கப்­ப­டுத்­து­கிற உங்­கள் அனை­வ­ருக்­கும் இளை­ஞர் அணி­யின் சார்­பில் என்­னு­டைய நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இந்த புத்­த­கக் காட்­சியை பற்றி திட்­ட­மி­டும்­போது, திரா­விட இயக்க நூல்­களை மட்­டும் கொண்­டு­வ­ர­லாம் என்று சிலர் கருத்து சொன்­னார்­கள். தலை­வ­ரி­டம் சென்று கேட்­டோம்.  தலை­வர் அவர்­கள் இல்லை, இல்லை அது தவறு.  அனைத்­து­வி­த­மான அர­சி­யல் கருத்­து­க­ளை­யும் நம்­மு­டைய இளை­ஞர்­க­ளி­டம் நீங்­கள் கொண்டு சேர்க்க வேண்­டும்.   அத­னால், எல்லா முற்­போக்கு பதிப்­ப­கங்­க­ளை­யும் கொண்டு வர­வேண்­டும் என்று தலை­வர் அவர்­கள் உறு­தி­யா­கச் சொன்­னார்­கள்.  அதே­போல்­தான் இந்­தப் புத்­த­கக்­காட்­சியை ஏற்­பாடு செய்­துள்­ளோம்.   இளை­ஞர்­கள் திரா­விட தத்­து­வத்தை மட்­டும் தெரிந்­து­கொண்­டால் மட்­டும் போதாது, மற்ற முற்­போக்­குத் தத்­து­வங்­க­ளை­யும் தெரிந்­து­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இன்­னும் சொல்­லப் போனால், நம்மை விமர்­ச­னம் செய்­யக் கூடிய கருத்­து­க­ளை­யும் – நூல்­க­ளை­யும் கூட நம்­மு­டைய இளை­ஞர்­கள் படித்து நீங்­கள் தெரிந்­து­கொள்ள வேண்­டும்.   இளை­ஞர் அணிச் செய­லா­ளர் வரு­கி­றார் என்­ப­தால், கைத்­தட்டி, கூடி கலை­கிற கூட்­டம், நம் கூட்­டம் கிடை­யாது.  இந்த இரண்டு நாள் நீங்­கள் இங்கு அமர்ந்து இருக்­கி­றீர்­கள் என்­றால், யாரையோ பார்க்க வந்த கூட்­டம் கிடை­யாது.  நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் 44 பேர்­க­ளும் என்ன பேசு­கி­றார்­கள் என்­ப­தைக் கேட்க வந்த கொள்­கைக் கூட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">நம்­மு­டைய தலை­வர்­கள் தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் எல்­லோ­ருமே மாற்­றுக் கருத்து கொண்ட நூல்­களை ஆழ­மாக படித்­தார்­கள்.  அத­னால்­தான் நம் இன எதி­ரி­கள் எந்­த­வி­த­மான விமர்­ச­னங்­க­ளை­யும், கேள்­வி­க­ளை­யும் கேட்­டால் அவற்­றுக்கு உடனே பதில் சொல்­லக்­கூ­டி­ய­வ­ராக இருந்­தார் நம் முத­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்.  அந்­தத் திற­மையை அவர் வளர்த்­துக் கொண்­டார்.  திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தொடங்­கப்­பட்டு, கலை­ஞர் அர­சி­ய­லுக்கு வந்­தது வெறும் ஆட்­சி­யைப் பிடிப்­ப­தற்கோ, பத­வி­யில் இருப்­ப­தற்கோ கிடை­யாது.  தான் கொண்ட கொள்­கையை அடை­வ­தற்கு, இந்த இயக்­கத்­துக்­குத் தலை­வ­ரா­ன­வர்­தான் நம் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள்.  இதைத்­தான் நம் தலை­வர்­கள் நமக்­குச் சொல்­லிக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இன்­றைக்கு திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை அழிக்க வேண்­டும் என்று பலர் நினைக்­கி­றார்­கள். புதி­தாக சில பேர் கிளம்பி வரி­சை­யாக வரு­கி­றார்­கள்.  திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஒரு சாதா­ரண அர­சி­யல் கட்­சி­யாக, அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் மாதிரி, பத்­தோடு பதி­னொன்­றாக இருந்­தி­ருந்­தால், அதை யாரும் அழிக்க வேண்­டும் என்று முயற்சி செய்­ய­மாட்­டார்­கள்.  நாம் கொள்­கைக் கூட்­டம் என்று தெரிந்­த­தால்­தான் அவர்­கள் நம்மை அழிக்க வரு­கி­றார்­கள்.  குறிப்­பாக, பாசிச சக்­தி­கள் நம் கொள்­கைக் கூட்­டத்­தின் மீது கை வைத்­துப் பார்க்க முயற்­சிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வியர்வை, ரத்­தம் சிந்தி…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை, சென்னை ராபின்­சன் பூங்­கா­வில் தொடங்­கி­ய­போது பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் சொன்ன ஒரு விஷ­யத்தை இங்க நினை­வு­கூற விரும்­பு­கி­றேன்.  ``டெல்­லி­யின் ஆதிக்­கம் ஒழிய வேண்­டும், மக்­க­ளைப் பாழ்­ப­டுத்­தும் பாசி­சம் ஒழிய வேண்­டும், பதுங்­கிப் பாய நினைக்­கும் பழைமை ஒழிய வேண்­டும்” என்று அறி­வித்­து­விட்­டுத்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் துவக்கி வைத்­தார்­கள்.  அந்த முழக்­கத்தை மன­தில் ஏந்­தி­தான், இன்­றைக்­கும் நாம் களத்­தில் இறங்­கிப் போரா­டிக்­கொண்டு இருக்­கி­றோம்.  தி.மு.க. என்­கிற விதையை கழக உடன்­பி­றப்­பு­கள் தண்­ணீர் ஊற்றி வளர்க்­க­வில்லை.  வியர்வை, ரத்­தம் சிந்தி, தங்­கள் உயி­ரையே உர­மாக்கி, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை வளர்த்­தார்­கள்.  உடன்­பி­றப்­பு­க­ளின் தியா­கத்­தால்­தான் நம் இயக்­கம், இன்­றைக்கு ஒரு ஆல­ம­ர­மாக வளர்ந்து நிற்­கி­றது.  அத­னால்­தான், பெரிய பெரிய புய­லால் கூட நம் இயக்­கத்தை வீழ்த்த முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">நான் இங்கே இருக்­கின்ற அடுத்த தலை­முறை இளை­ஞர்­க­ளுக்கு ஒன்­றைச் சொல்­லிக் கொள்­கி­றேன். நீங்­கள் எல்­லோ­ரும் நம் கழ­கத்­தின் வர­லாற்­றைத் தெரிந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அதற்­கா­கத்­தான் இந்த முற்ப்­போக்கு புத்­த­கத் திரு­வி­ழாவை வரு­கின்ற 16–ஆம் தேதி வரை நடத்­திட ஏற்­பாடு செய்­தி­ருக்­கி­றோம்.  உங்­கள் குடும்­பத்­தி­னர்­கள், நண்­பர்­க­ளி­டம் இதைப்­பற்­றிப் பேசுங்­கள்.  இந்த புத்­த­கத் திரு­வி­ழா­வில் புத்­த­கத்தை வந்து வாங்க வேண்­டும் என்­று­கூட அவ­சி­ய­மில்லை,வந்து பார்த்­தால் போதும்.   தமிழ்­மொழி காப்­பாற்­றப்­பட வேண்­டும், தமிழ் இனம் காப்­பாற்­றப்­பட வேண்­டும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">தமிழ்­நாடு காப்­பாற்­றப்­பட வேண்­டும். இது­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கொள்கை.  இந்த கொள்­கைக்கு யாரெல்­லாம் எதி­ரியோ, அவர்­கள் அத்­தனை பேரும்  தி.மு.க–வுக்கு எதிரி என்­பதை இந்த நேரத்­தில் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">கொள்­கை­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­துக்கு அடித்­த­ளம். அந்த அடித்­த­ளம் 
பல­மாக இருந்­தால் தான், அதன் மேல் கட்­டு­கிற கோட்டை, வலு­வாக இருக்­கும்.  இப்­போது அர­சி­ய­லில் சில பேர் அடித்­த­ளமே இல்­லா­மல் உள்ளே வர முயற்­சிக்­கி­றார்­கள். கண்­காட்­சி­க­ளில் பார்த்­தி­ருப்­பீர்­கள். அங்கே தாஜ்­ம­ஹால் மாதிரி செட் போடு­வார்­கள், ஈஃபிள் டவர் மாதிரி செட் போட்­டி­ருப்­பார்­கள். கண்­காட்­சிக்­குச் செல்­கி­ற­வர்­கள் அந்த செட்­டுக்கு முன் நின்று புகைப்­ப­டம் எடுப்­பார்­கள். அவை­யெல்­லாம் வெறும் அட்­டை­தான், அதற்கு எந்த வித­மான அஸ்­தி­வா­ரமோ, கொள்­கையோ கிடை­யாது. சும்மா தட்­டுனா கீழே விழுந்­து­வி­டும். அவர்­க­ளுக்கு எல்­லாம் நான் சொல்­லிக் கொள்­வது, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­பது தியா­கத்­தா­லும், போராட்­டத்­தா­லும் உரு­வான இயக்­கம். எமர்­ஜென்­சி­யைப் பார்த்த கழ­கம், நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.  எமர்­ஜென்­சி­யைப் பார்த்த தலை­வர் எங்­கள் கழ­கத் தலை­வர், முத­ல­மைச்­சர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கட்­சி­யின் பெயரை மாற்­றி­னார்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">எமர்­ஜென்சி காலத்­தில் மாநி­லக் கட்­சி­களை எல்­லாம் ஒன்­றிய அரசு தடை செய்ய வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தார்­கள்.  உடனே, அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்ன செய்­தார்­கள் தெரி­யுமா? கட்­சி­யின் பெயரை மாற்­றிக்­கொண்­டார்­கள்.  ஏதோ உத்­தர பிர­தே­சத்­தி­லும், ராஜஸ்­தா­னி­லும் கிளை­கள் இருக்­கி­ற­மா­திரி, கட்­சி­யின் பெயரை அனைத்­திந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்று கட்­சி­யின் பெயரை மாற்­றி­விட்­டார்­கள்.  இது­தான் தி.மு.க–வுக்­கும், அ.தி.மு.க–வுக்­கும் இருக்­கிற வித்­தி­யா­சம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">ஆனால், நம் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் தெளி­வாக சொன்­னார்­கள். ``வாழ்ந்­தா­லும் கழ­கத்­தோடு வாழ்­வோம், வீழ்ந்­தா­லும் கழ­கத்­தோடு வீழ்­வோம்’ என்று சொல்லி, எங்­கள் இயக்­கத்­தின் பெயர் என்­றைக்­கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான் என்று என்ன வந்­தா­லும் பார்த்­துக்­கொள்­ள­லாம்’’ என்று நின்­ற­வர் நம் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அதை மாற்ற பேச்­சுக்கே இட­மில்லை என்று சொன்­னார். கலை­ஞர் காட்­டிய அந்த உறு­தி­யோ­டு­தான் இன்­றைக்கு நம் தலை­வர் நம் இயக்­கத்தை வழி­ந­டத்­திக்­கொண்டு இருக்­கி­றார்.  நம்மை எல்­லாம் கொள்­கை­தான் வழி நடத்­து­கி­றது. ஆனால், எடப்­பாடி பழ­னி­சா­மியை பயம்­தான் வழி நடத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">இப்­போது நாம் தி.மு.க–வின் 75–வது ஆண்­டைக் கொண்­டா­டு­கி­றோம். இந்த நிகழ்ச்­சிக்கு `அறி­வுத் திரு­விழா’ என்று பெயர்.  அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தால் `அறி­வுத் திரு­வி­ழா’­வெல்­லாம் நடத்த முடி­யாது. வேண்­டு­மென்­றால் `அடி­மைத் திரு­விழா’ என்று ஒரு நிகழ்ச்சி நடத்­த­லாம். அந்த அள­வுக்­குக் கடைந்­தெ­டுத்த அடி­மை­யாக இருக்­கி­றார். அனைத்­திந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் நிரந்­த­ரப் பொதுச்­செ­ய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சா­மி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அ.தி.மு.க–வின் ஓனர் பாசிச பா.ஜ.க–வால் நேர­டி­யாக தமிழ்­நாட்­டுக்­குள் கால் எடுத்து வைக்க முடி­ய­வில்லை.  அத­னால்­தான் வேறு வேஷத்­தைப் போட்­டுக்­கொண்டு வரு­கி­றார்­கள்.  அ.தி.மு.க என்­கிற போர்­வையை போர்த்­திக்­கொண்டுவரு­கி­றார்­கள். எதிர்­கட்­சித் 
தலை­வர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யைப் பார்க்­கும்­போது இரண்டு விஷ­யம்­தான் எனக்கு ஞாப­கம் வரும்.  ஒன்று கால், இன்­னொன்று கார்.  ஒரு கட்­சி­யின் தலை­வர் இன்­னொரு கட்சி தலை­வரை பார்ப்­ப­தற்கு யாரா­வது 
4 கார் மாறி செல்­வார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">அதே­போல் கால், ஜெய­ல­லிதா அம்மா இருந்­த­வரை அவ­ரின் கால், அந்த அம்மா இறந்த பிறகு அந்த அம்­மா­வின் உடன்­பி­றவா சகோ­தரி சசி­கலா அம்­மா­வின் கால், அந்த அம்­மை­யார் ஊழல் வழக்­கில் தண்­டிக்­கப்­பட்டு சிறைக்கு சென்­ற­வு­டன், டி.டி.வி.தின­க­ரன் கால், அதற்கு பிறகு டெல்­லிக்­குச் சென்று மோடி, அமித்­ஷா­வின் கால்­கள்.  இப்­போது ஜெ.தீபா அவர்­க­ளின் கால்.  இப்­போது அந்த கால்­கள் பற்­ற­வில்லை என்று, புதிய கால்­க­ளைத் தேடிக்­கொண்டு இருக்­கி­றார்.  அ.தி.மு.க தொண்­டர்­க­ளைப் பார்க்­கும்­போது நமக்­கெல்­லாம் பாவ­மா­கத்­தான் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் அ.தி.மு.க தொண்­டர்­க­ளைத் தொடர்ந்து ஏமாற்றி வரு­கி­றார்.  சில நாட்­க­ளுக்கு முன்பு ஒரு பிர­மாண்­ட­மான கட்சி, நம் கூட்­ட­ணிக்கு வரப்­போ­கி­றது என்று சொன்­னார்.   அ.தி.மு.க. பிரச்­சார கூட்­டத்­தில், இன்­னொரு கட்­சி­யின் கொடியை அவர்­களே பிடித்து ஆட்­டிக்­கொண்டு, ``பார்த்­தீர்­களா கொடி பறக்­குது. பிள்­ளை­யார் சுழி போட்­டாச்சு’’ என்று குரளி வித்தை காட்­டி­னார்.  தேர்­வுக்கு படிக்­கா­மல் வந்த மாண­வன், விடைத்­தா­ளில் பிள்­ளை­யார் சுழி மட்­டும் போட்டு உட்­காந்து இருக்­கி­ற­மா­திரி ஆச்சு. இப்­போது எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் நிலைமை. படிக்­கா­த­வர்­கள் ஒரே­யொரு பிள்­ளை­யார் சுழி­தான் போடு­வார்­கள்.  ஒன்­றும் எழு­தா­மல் எல்­லா­வற்­றை­யும் மேலே இருப்­ப­வன் பார்த்­துக் கொள்­வான் என்று விட்­டு­வி­டு­வார்­கள்.  அந்த நிலை­மை­யில்­தான் எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பாசிச பா.ஜ.க. திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.8">உங்­க­ளின் எழுச்­சி­யை­யும், உணர்­வை­யும் பார்க்­கும்­போது இதே எழுச்­சி­யும், உணர்­வும் அடுத்த நான்கு மாதம் நம்­மி­டம் இருக்க வேண்­டும்.  நிச்­ச­யம் அதை செய்­வீர்­கள் என்ற நம்­பிக்கை தலை­வ­ருக்­கும், எனக்­கும் இருக்­கி­றது.  நான் உங்­க­ளு­டன் களத்­தில் நிற்­கி­றேன்.  வரு­கின்ற தேர்­த­லில் திரா­விடமுன்­னேற்­றக் கழ­கத்­தின் வெற்­றியை யாரா­லும் தடுக்க முடி­யாது என்ற நிலைமை நீங்­கள் உரு­வாக்க வேண்­டும். இதை எப்­ப­டி­யா­வது குறுக்கு வழி­யில் தடுக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான், பாசிச பா.ஜ.க. திட்­டம்போட்டு கொண்டு வந்­த­து­தான் எஸ்.ஐ.ஆர் (SIR) என்று சொல்­கிற  ஸ்பெஷல் இன்­டென்­ஷிவ் ரிவி­ஷன் (Special Intensive Revision). பீகா­ரில் 65 லட்­சம் வாக்­கா­ளர்­களை எஸ்.ஐ.ஆர் (SIR) மூலம் நீக்­கி­னார்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>