<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/11/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,72,957,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Nov 10 2025 22:27:05 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251111T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="11112025-VLR-13" position.sequence="13" ex-ref="11112025-VLR-13.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">ஆட்டம் காணும் மக்களாட்சியின் அடித்தளம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="30">யார் அந்தப் பெண்? அதிகரிக்கும் தேர்தல் மர்மங்களும், பறிபோகும் வாக்குரிமையும்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame614354_13_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup614485_13_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M1bw_13_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M6bw_13_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="M5bw_13_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16.8">மன்­ன­ராட்சி காலத்­தி­லேயே கூட மக்­கள் கருத்­திற்கு மதிப்பு இருந்­தது. ஏனென்­றால் எவ்­வ­ள­வு­தான் சர்­வா­தி­கா­ரி­யாக இருந்­தா­லும் மக்­கள் ஆத­ரவு இல்­லா­மல் ஆட்சி வெகு­கா­லம் நீடிக்க முடி­யாது. அத­னால் மக்­க­ளின் நல்­வாழ்வை கருத்­தில் கொள்­ளா­மல் காட்­டாட்சி நடத்­தி­னால் அது நிலைக்­காது என்­பது எப்­போ­துமே வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. என்­ன­தான் கட­வு­ளின் ஆசி பெற்­ற­வர்­கள் என்று மன்­னர்­களை பூசா­ரி­கள் கூறி­னா­லும், கட­வுள்­கள், பூசா­ரி­கள், மன்­னர்­கள் அனைத்­தை­யும் உரு­வாக்­கி­யது  மக்­கள்­தானே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">பார­தீய ஜனதா கட்­சி­யி­னர் கொண்­டா­டும் ராமர் கதையை வைத்தே துவங்­கு­வோம். வால்­மீகி ராமா­ய­ணத்­தின் கடை­சி­யில் ஒரு சிக்­க­லான சூழ்­நிலை உரு­வா­கும். அது என்­ன­வென்­றால் சீதையை இலங்­கை­யி­லி­ருந்து மீட்­டுக்­கொண்டு வந்து ராமர் அர­ச­ராக முடி­சூ­டிய பிறகு, பொது­மக்­கள் சீதையை ராமர் ஏற்­றுக்­கொண்­டது குறித்து ஐயப்­பட்டு பேசு­வ­தாக அவ­ருக்­குத் தெரிய வரு­கி­றது. அப்­போது அவ­ருக்கு அர­சர்­க­ளுக்­கான ஒரு முக்­கி­ய­மான நெறி நினை­வுக்கு வரு­கி­றது. அது என்­ன­வென்­றால் அர­சன் மக்­க­ளின் ஐயத்­திற்கு அப்­பாற்­பட்­ட­வ­னாக இருக்க வேண்­டும் என்­ப­து­தான் அது. அத­னால் கர்ப்­பி­ணி­யான சீதை­யைக் காட்­டுக்கு அனுப்பி விடு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இதை ரோம சாம்­ராஜ்­யத்­தின் வர­லாற்றை வைத்­துச் சொல்­லும்­போது சீச­ரின் மனைவி சந்­தே­கத்­திற்கு அப்­பாற்­பட்­ட­வ­ளாக இருக்க வேண்­டும் என்று சொல்­வார்­கள். அந்த சொல­வ­டைக்­குக் கார­ணம் ஜூலி­யஸ் சீச­ரின் இரண்­டா­வது மனை­விக்கு வேறொ­ரு­வ­ரு­டன் தொடர்பு இருந்­த­தாக பேசப்­பட்­ட­தால் அவர் அந்த மனை­வியை விவா­க­ரத்­துச் செய்து விட்­ட­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">வெறும் வதந்­தியை வைத்தே விவா­க­ரத்­துச் செய்ய வேண்­டுமா என்ற கேள்­விக்­குப் பதி­லாக அவர் சொன்­ன­து­தான் “சீச­ரின் மனைவி சந்­தே­கத்­திற்கு அப்­பாற்­பட்­ட­வ­ளாக இருக்க வேண்­டும்’ என்­பது. மன்­ன­ரின் மனை­வி­யரை பாத்­தி­ர­மாக்கி குறை­சொல்­லும் ஆணா­திக்க சிந்­தனை இருந்­தா­லும், மக்­க­ளின் கருத்­துக்கு மதிப்­புக் கொடுக்க வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தும் அள­வில் இந்த சொல­வ­டையை இன்­றும் அர­சி­யல் தத்­துவ விவா­தத்­தில்  பயன்­ப­டுத்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இப்­ப­டி­யெல்­லாம் மன்­ன­ராட்சி காலத்­தி­லேயே சொல்­லப்­பட்ட நிலை­யில், இன்று இந்­தி­யக் குடி­ய­ரசு எழு­பத்­தைந்து ஆண்­டு­களை நிறைவு செய்த நிலை­யில் மக்­க­ளாட்­சி­யின் அடிப்­ப­டை­க­ளையே தகர்க்­கும் வித­மாக தேர்­தல் ஆணை­யம் செயல்­ப­டு­வதை எப்­படி புரிந்­து­கொள்­வது என்­ப­து­தான் மிகப்­பெ­ரிய கேள்­வி­யாக இருக்­கி­றது. சென்ற வார நிகழ்­வு­க­ளில் ராகுல் காந்தி வீசிய H Bomb மிகப்­பெ­ரிய அதிர்­வ­லை­களை உரு­வாக்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">பிரே­சில் நாட்டு பெண்­மணி எப்­படி ஹரி­யானா 
வாக்­கா­ளர் பட்­டி­ய­லுக்­குள் வந்­தார்?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">சென்ற வாரம் புதன் கிழமை, நவம்­பர் 5-ஆம் தேதி, இந்­திய மக்­க­ளாட்சி வர­லாற்­றில் ஒரு முக்­கி­ய­மான நாள். எதிர்­கட்­சித் தலை­வர் ராகுல் காந்தி ஹரி­யானா மாநில சட்­ட­மன்ற தேர்­தல் முடி­வு­களே கள­வா­டப்­பட்டு, காங்­கி­ரஸ் வெற்றி பெறு­வ­தற்­குப் பதி­லாக பார­தீய ஜனதா கட்சி வெற்றி பெற வைக்­கப்­பட்டு ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­ய­தாக பகி­ரங்­க­மா­கக் குற்­றம் சாட்­டி­னார். அவர் கூறி­ய­வற்றை வரி­சைப்­ப­டுத்தி புரிந்­து­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">முத­லில், வாக்­க­ளிப்­புக்­குப் பின் நட த்தபட்ட கருத்­துக் கணிப்­பு­கள், எக்­ஸிட் போல் எனப்­ப­டு­பவை அனைத்­தும் காங்­கி­ரஸ்­தான் ஆட்­சி­ய­மைக்­கும் என்று கூறின. தேர்­த­லுக்கு முன் நடக்­கும் கருத்­துக் கணிப்­பு­கள் பொய்த்­துப் போவது உண்டு என்­றா­லும், வாக்­க­ளிப்­புக்­குப் பின் நடத்­தப்­ப­டும் கணிப்­பு­கள் பெரு­ம­ளவு சரி­யாக இருக்­கும். ஐந்து எக்­ஸிட் போல்­கள் காங்­கி­ரஸ் மொத்­த­முள்ள 90 தொகு­தி­க­ளில், 54 தொகு­தி­ கள் முதல் 62 தொகு­தி­கள் வரை பெறும் என்று கணித் ­தன. பா.ஜ.க. 18 முதல் 29 தொகு­தி­கள் வரை பெறும் என்­றும் கணிக்­கப்­பட்­டது. பல­ரா­லும் நம்­ப­க­மா­ன­தா­கக் கரு­தப்­ப­டும் இந்­தியா டுடே+சி வோட்­டர் கணிப்­பில் காங்­கி­ர­சிற்கு 58 தொகு­தி­கள், பா.ஜ.க.-விற்கு 20 தொகு­தி­கள் கிடைக்­கும் என கூறப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">முடி­வு­கள் வெளி­யான போது பாஜக 48 தொகு­தி­க­ளும், காங்­கி­ரஸ் 37 தொகு­தி­க­ளும் வென்­றி­ருந்­தன. பிற கட்­சி­கள் 5 தொகு­தி­கள் பெற்­றி­ருந்­தன. காங்­கி­ரஸ் பெற்ற மொத்த வாக்­கு­கள் 54.31 இலட்­சம்; பா.ஜ.க. பெற்ற வாக்­கு­கள் 55.49 இலட்­சம். மொத்த வித்­தி­யா­சம் என்­பது ஒரு இலட்­சத்து 18 ஆயி­ரம் வாக்­கு­கள்­தான். இத­னைக் குறித்­துக்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">ராகுல் காந்தி குறிப்­பாக 8 தொகு­தி­களை சுட்­டிக்­காட்­டு­கி­றார். இந்த எட்டு தொகு­தி­க­ளில் வெற்றி வித்­தி­யா­சம் என்­பது ஐந்­தா­யி­ரம் வாக்­கு­க­ளுக்­குக் குறை­வா­கவே உள்­ளது. ஒரு தொகு­தி­யில் வெறும் 32 வாக்­கு­கள்­தான். இந்த எட்டு தொகு­தி­க­ளின் மொத்த வித்­தி­யா­சம் 22.779 வாக்­கு­கள்­தான். இந்த எட்டு தொகு­தி­க­ளில் காங்­கி­ரஸ் வென்­றி­ருந்­தால் அது ஆட்­சி­ய­மைத்­தி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">அத­னால் என்ன, குறைந்த வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி தோல்வி என்­பது நமது தேர்­தல் முறை­யில் சக­ஜம்­தானே என்று கேட்­க­லாம். அங்­கே­தான் அடுத்த அதிர்ச்­சி­ய­ளிக்­கும் தக­வ­லைத் தரு­கி­றார் ராகுல் காந்தி. அவர் ஒரு பெண்­ணின் புகைப்­பட த்தைக் காட்டி இந்த பெண் எந்த மாநி­லம் என்று கேட்­கி­றார். பிறகு கூறு­கி­றார் அவர் பிரே­சில் நாட்­டைச் சேர்ந்­த­வர் என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">அந்த பெண், லாரிஸ்ஸா நேரி என்ற பெயர் கொண்­ட­வர், ஒரு சிகை­ய­லங்­கார நிபு­ணர்; தன் நண்­ப­ருக்­காக அவர் ஒரு புகைப்­பட த்திற்கு போஸ் கொடுத்­துள்­ளார். அந்த புகைப்­ப­டம் அந்த நண்­ப­ரின் வலைத்­த­ளத்­தி­லி­ருந்து எடுக்­கப்­பட்டு ஹரி­யானா வாக்­கா­ளர் பட்­டி­யி­லில் இணைக்­கப்­பட்­டுள்­ளது. அது­வும் எப்­படி? சீமா, சுவீட்டி, சரஸ்­வதி என்று வெவ்­வேறு பெயர்­க­ளில் 22 வாக்­கா­ளர்­க­ளாக ராய் என்ற தொகு­தி­யைச் சேர்ந்த பத்து வாக்­குச் சாவ­டி­க­ளில் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">அந்த பெண்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">“நான் இந்­தி­யா­விற்கே சென்­ற­தில்லை, பிரே­சிலை விட்டு எங்­குமே சென்­ற­தில்லை, என் புகைப்­ப­டத்தை இப்­படி பயன்­ப­டுத்­தி­யுள்­ளார்­களே”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">என்று வியப்பு தெரி­வித்­ துள்­ளார். புகைப்­ப­டங்­ களைத் தொகுத்­துத் தரும் வலைத்­த­ளங்­க­ளில் அவர் நண்­ப­ரான புகைப்­ப­டக்­கா­ரர் எடுத்த இந்த புகைப்­ப­டம் இடம் பெற்­றுள்­ளது. பல­ரா­லும் இல­வ­ச­மாக தர­வி­றக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">இந்­திய தேர்­தல் ஆணை­யத்­தின் சார்­பில் யார் தர­வி­றக்­கம் செய்து வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் போலி வாக்­கா­ளர்­களை உரு­வாக்க பயன்­ப­டுத்­தி­னார்­கள் என்­ப­தைத் தேர்­தல் ஆணை­யம்­தான் கூற 
வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இந்த போலி வாக்­கா­ளர் அடை­யா­ளத்­தைப் பயன்­
ப­டுத்தி யாரும் வாக்­க­ளித்­தார்­களா என்­ப­தைச் சரி­பார்க்க வேண்­டும் என்­றால் வாக்­குச்­சா­வ­டி­யில் பதி­வான காணொ­லிக் காட்­சி­களை, சிசி­டிவி காமிரா காட்­சி­க­ளைத்­தான் சரி­பார்க்க வேண்­டும். ஆனால் தேர்­தல் ஆணை­யம் அந்த காட்­சி­க­ளைப் பகிர மறுக்­கி­றது. அவற்றை அழித்­து­விட்­டது. இந்த நிலை­யில் அந்த போலி சீமா, சுவீட்டி, சரஸ்­வதி பெயர்­க­ளில் எல்­லாம் யாரே­னும் வாக்­க­ளித்­தார்­களா என்­ப­தைத் தேர்­தல் ஆணை­யம்­தான் கூற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">பிரச்­சினை இந்த ஒரு பெண் மட்­டு­மல்ல. பிரே­சில் நாட்டு பெண்­ணின் புகைப்­ப­டம் என்­ப­தால் இது அதிக சுவா­ர­சி­யத்­தைத் தரு­கி­றது. வேறொரு இந்­தி­யப் பெண்­ணின் புகைப்­ப­டம் நூறு வாக்­கா­ளர் பெயர்­க­ளில் பதி­வா­கி­யுள்­ளது. இந்த நூறு ஓட்­டை­யும் அவரே போடு­வார் என்­ப­தில்லை. யாரோ கிட்ட த்தட்ட அது­போல இருக்­கும் பெண்­கள் அந்த போலி வாக்­கா­ளர் அடை­யா­ளத்­தில் வாக்­க­ளித்­தி­ருக்­க­லாம் என்­கி­றார் ராகுல் காந்தி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">ராகுல் காந்தி கூறும் இன்­னொரு முக்­கி­ய­மான கருத்து இத்­த­கைய மொத்­தப் போலி ஓட்­டு­கள் ஒரே புகைப்­பட த்துடன் உரு­வா­வது, கணி­னித் தர­வு­
க­ளைக் கையா­ளும் மையத்­தி­லி­ருந்­து­தான் என்­பது. அங்­கே­தான் ஒரு புகைப்­ப­டத்­தைப் பயன்­ப­டுத்தி வெவ்­வேறு வாக்­குச் சாவ­டி­க­ளில் வெவ்­வேறு பெயர்­க­ளில் போலி வாக்­க­ளர்­க­ளைச் சேர்க்க முடி­யும். ஏற்­க­னவே, நமது வாக்­கா­ளர் அட்­டை­க­ளி­லும், ஆதார் அட்­டை­க­ளி­லும் கூட நிக­ழும் பிழை­களை கவ­னித்­தால் அவை­யெல்­லாம் கணிணி தர­வேற்­றத்­தில் நிகழ்­பவை என்­பதை உண­ர­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">கணினி தர­வு­கள் உரு­வாக்­கம் மற்­றும் மேலாண்­மையை வெளிப்­ப­டை­யா­ன­தாக, பொது­மக்­கள் சரி­பார்­புக்கு உட்­பட்­ட­தாக மாற்­றா­மல் இந்த பிரச்சி­னையைத் தீர்க்க முடி­யாது. யாரோ தாற்­கா­லிக ஊழி­யர்­களை வைத்தோ, ஒப்­பந்­தக்­கா­ரர்­கள், சரி­யான பயிற்­சி­யற்­ற­வர்­களை வைத்தோ வாக்­கா­ளர் பட்­டி­யல் போன்ற முக்­கி­ய­மான கணி­னித் தர­வு­களை உரு­வாக்­கு­வது மிக­வும் ஆபத்­தா­னது. இதில் நிறைய முறை­கே­டு­கள் பல மட்­டங்­க­ளில் நடக்­கின்­றது. ராகுல் காந்தி எழுப்­பி­வ­ரும் ஓட்­டுத் திருட்டு பிரச்­சி­னை­யின் மூலா­தா­ரம் இந்­தத் கணி­னித் தர­வுக் கட்­டுப்­பாட்­டில், மேலாண்­மை­யில் நில­வும் மர்­மம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">மொத்­தம் 25 இலட்­சம் போலி ஓட்­டு­கள் இவ்­வி­தம் ஹரி­யா­னா­வில் உரு­வாக்­கப்­பட்­ட­தா­கக்கூறு­கி­றார். இரட்டை ஓட்டு உள்­ள­வர்­கள் 5,21,619; பொய் விலா­சம் உள்­ள­வர்­கள் 93,174; பிரே­சில் பெண் போல பல ஓட்­டுக்­கள் உள்ள வாக்­கா­ளர்­கள் 19,26,351. ஆக மொத்­தம் போலி வாக்­கு­கள் 25 இலட்­சம். இப்­போது பா.ஜ.க. வெற்றி வித்­தி­யா ­சத்தை கவ­னிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">ஒட்­டு­மொத்த வாக்கு வித்­தி­யா­சமே ஒரு இலட்­சத்து பதி­னெட்­டா­யி­ரம்­தான். குறிப்­பாக எட்டு தொகு­தி­க­ளின் வெற்றி வித்­தி­யா­சத்­தின் மொத்­தம் வெறும் 22,779 வாக்­கு­கள்­தான். 25 இலட்­சம் போலி வாக்­கா­ளர்­களை வைத்து இந்த சிறிய வெற்­றியை பெறு­வது கடி­ன­மல்ல என்­று­தான் கூறு­கி­றார் ராகுல் காந்தி. மொத்­தமே இரண்டு கோடி வாக்­கு­கள் உள்ள ஹரி­யா­னா­வில் 25 இலட்­சம் போலி வாக்­கு­கள் என்­றால் எட்டு ஓட்­டு­க­ளில் ஒன்று போலி என்­றா­கி­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">வழக்­கம்­போல பாஜக இதனை முற்­றி­லு­மாக மறுக்­கி­றது. ராகுல் காந்தி அந்­நிய சக்­தி­க­ளு­டன் சேர்ந்­து­கொண்டு நாட்­டின் பெய­ரைக் கெடுக்­கி­றார்; தோல்­வியை ஏற்­றுக்­கொள்ள மறுக்­கி­றார் என்­றெல்­லாம் கடு­மை­யா­கத் தாக்­கு­கி­றார்­கள். ஆனால் வாக்­கா­ளர் பட்­டி­யல் தேர்­தல் ஆணை­யம் கொடுத்­த­து­தான். காங்­கி­ரஸ் கட்சி வெவ்­வேறு வாக்­குச் சாவ­டி­க­ளில் உள்ள வாக்­கு­க­ளை­யெல்­லாம் தர­வேற்­றம் செய்து, தொகுத்து ஆராய்ந்­த­தில் இந்த போலி வாக்கு மோச­டியை கண்­டு­பி­டித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">தேர்­தல் ஆணை­யம் இந்த குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு என்ன பதில் சொல்­லப் போகி­றது என்று தெரி­ய­வில்லை. வழக்­கம்­போல போலி வாக்­கா­ளர்­கள் தவ­று­த­லா­கச் சேர்க்­கப் பட்­டி­ருக்­க­லாம்; ஆனால் அவர்­கள் வாக்­க­ளிக்­க­வில்லை என்று சொல்­ல­லாம். ஆனால் சி.சி.டி.வி. காட்­சி­க­ளைத் தரா­மல் அவர்­கள் சொல்­வது நம்­ப­கத்­தன்­மை­யற்­றது. வாக்­குச் சாவ­டி­க­ளில் காங்­கி­ரஸ் முக­வர்­கள் இல்­லையா என்று கேட்­க­லாம். வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் பெயர் இருந்­தால், அதற்­கான போலி அடை­யாள அட்­டையை ஒரு­வர் கொண்டு வந்­தால், அவ­ரைத் தடுப்­பது கடி­னம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">புகைப்­ப­டங்­களை ஒப்பு நோக்­கு­வதோ, அதே புகைப்­பட த்துடன் இன்­னொ­ரு­வர் வந்­தார் என்­பதை நினை­வில் வைத்­தி­ருப்­பதோ கடி­னம். பல புகைப் 
­ப­டங்­கள் தெளி­வற்று இருப்­ப­தால் அதனை வைத்­துக்­கொண்டு ஒரு­வரை வாக்­க­ளிப்­ப­தி­லி­ருந்து தடுக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இதெற்­கெல்­லாம் என்ன தீர்வு என்று கேட்­க­லாம். அது மிக­வும் சுல­பம். வாக்­கா­ளர் பட்­டி­யலை அனை­வ­ரும் தேர்­தல் ஆணைய வலைத்­த­ளத்­தி­லி­ருந்து டைன­மிக் டேட்­டா­வாக, அதா­வது பல­வாறு தொகுத்­துப் பார்க்­கத்­தக்க டேட்டா ஃபைலாக தர­வி­றக்க இய­ல­வேண்­டும். அப்­படி செய்­தால் கட்­சி­கள் ஒரே பெய­ரில், ஒரே புகைப்­பட த்தில் பல வாக்­கா­ளர்­கள் உள்­ளார்­களா, ஒவ்­வொரு தெரு­வி­லும், வீட்­டி­லும் மொத்­தம் எத்­தனை வாக்­கா­ளர்­கள் உள்­ளார்­கள் என்­ப­தை­யெல்­லாம் சுல­பத்­தில் சரி­பார்க்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">சிறப்­புத் தீவிர சீர்­தி­ருத்­தம் (SIR: SPECIAL INTENSIVE REVISION)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">தொலைக்­காட்சி விவா­ தங்­க­ளில் பா.ஜ.க. பேச்­சா­ளர்­கள் இவ்­வி­த­மான போலி வாக்­கு­கள், இரட்டை வாக்­கு­கள் பிரச்சி­ னையை சீர்­செய்­யத்­தான் சிறப்­புத் தீவிர சீர்­தி­ருத்­தம் என்று கூறு­கி­றார்­கள். ஆனால் பீஹா­ரில் செய்த சீர்­தி­ருத்­தத்­தில் அறு­பது இலட்­சம் வாக்­கா­ளர்­கள் நீக்­கப்­பட்­டார்­களே தவிர, குறை­பா­டு­கள் சரி­செய்­யப்­பட்­டதா என்­பதை இனி­மேல் ஆராய்ந்­து­தான் கண்­ட­றிய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இப்­போது தமிழ்­நாட்­டில் மேற்­கொள்­ளப்­ப­டும் எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்­கை­யைப் பார்த்­தால் மிகப்­பெ­ரிய குள­று­ப­டி­கள்­தான் உரு­வா­கும் என்று தோன்­று­கி­றது. ஏனெ­னில் இரு­ப­தாண்­டு­க­ளுக்கு முன் செய்­யப்­பட்ட சீர்­தி­ருத்­தம் தொடர்­பான விவ­ரங்­க­ளைக் கேட்­கி­றார்­கள். அதா­வது பழைய வாக்­கா­ளர் என்­றால் 2002-ஆம் ஆண்டு அவர் எங்கே எந்த தொகு­தி­யில், எந்த பாகத்­தில் இருந்­தார் என்று கூற­வேண்­டும். புதிய வாக்­கா­ளர் என்­றால் அவ­ரது உற­வி­னர், தாயோ, தந்­தையோ 2002-ஆம் ஆண்டு எந்த தொகு­தி­யில் எந்த பாகத்­தில் இருந்­தார் என்­ப­தைக் கூற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">இந்த தக­வல்­கள் இல்­லை­யென்­றால் வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் ஒரு­வர் சேர்க்­கப்­ப­டு­வாரா என்ற கேள்­விக்கு சரி­யான விடை­யில்லை. ஒரு­வர் தனது அடை­யா­ளத்தை நிரூ­பிக்க ஆவ­ணங்­க­ளைச் சமர்ப்­பிக்­கச் சொல்கி ­றார்­கள். இதில் அடிப்­ப­டை­யி­லேயே பல பிரச்­சி­னை­கள் எழு­கின்­றன. இந்த நாட்­டில் குடியி ­ருப்­ப­வர்­கள் குடி­மக்­கள். அவர்­க­ளுக்கு வாக்­கு­ரிமை என்­பது அடிப்­படை உரிமை. ஆனால் தன் அடை­யா­ளத்தை சான்­றா­தா­ரங்­கள் மூலம் நிரூ­பித்­து­தான் வாக்­கு­ரிமை பெற வேண்­டும் என்­றால், அவ­ருக்கு இயற்கை­ யிலேயே உள்ள குடி­யு­ரி­மை­யும், வாக்­கு­ரி­மை­யும் மறுக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">ஏன் இவ்­வி­தம் நிரூ­ப­ணம் கேட்­கி­றீர்­கள் என்­றால், அந்­நிய நாட்­டி­லி­ருந்து ஊடு­று­வி­யர்­கள், நம் நாட்டு குடி­மக்­கள் இல்­லா­த­வர்­கள் வாக்­க­ளிக்­கக் கூடாது என்று கூறு­கி­றார்­கள். தேர்­தல் ஆணை­யத்­திற்­குக் குடி­யு­ரிமை­ யைத் தீர்­மா­னிக்­கும் அதி­கா­ரம் கிடை­யாது. யாரா­வது குடி­ந­பர் இல்­லை­யென்­றால் அர­சு­தான் அவர்­களை கண்­ட­றிந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டுமே தவிர, வாக்­கு­ரி­மையை சாக்­காக வைத்து தேர்­தல் ஆணை­யம் குடி­யு­ரி­மையை ஆராய முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">மேலும் சம­கால மக்­க­ளாட்­சிக் குடி­ய­ர­சு­க­ளில் ஒரு­வர்ஓரிட த்தில் வசித்து, அங்கே பணி­யாற்றி வந்­தால் அவர்­க­ளுக்கு குடி­யு­ரிமை வழங்­கப்­பட வேண்­டும். இந்­தி­யர்­கள் உல­கின் பல்­வேறு நாடு­க­ளி­லும் குடி­யேறி பணி­பு­ரிந்து வரு­கி­றார்­கள். பல நாடு­க­ளில் தேர்­தல்­க­ளில் போட்­டி­யிட்டு வென்று பதவி வகிக்­கி­றார்­கள். குடி­யு­ரிமை என்­பதை வம்­சா­வழி உரி­மை­யாக நவீன குடி­ய­ர­சு­கள் கரு­து­வ­தில்லை. அமெ­ரிக்­கா­வில் பணி புரி­யச் சென்ற இந்­தி­யர்­கள் பலர் முத­லில் கிரீன் கார்ட் பெரு­வ­தும், பின்­னர் குடி­யு­ரிமை பெறு­வ­தும் கடந்த நூறாண்­டு­க­ளில் நிறைய நிகழ்ந்­துள்­ளது. பத்து வரு­டங்­கள் அமெ­ரிக்­கா­வில் பணி புரிந்த யாரும் அநே­க­மாக அங்கே குடி­யு­ரிமை பெற்று விடு­வார்­கள். இப்­போ­து­தான் டொனால்ட் டிரம்ப் அந்­நி­யர்­களை வெளி­யேற்­றும் இன­வாத அர­சி­யலை மேற்­கொண்டு வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">இந்­திய தேர்­தல் ஆணை­யம் குடி­யு­ரி­மையை சந்­தே­கிக்­கும் பெய­ரில், சரி­யான ஆவ­ணங்­கள் இல்­லாத ஏழை, எளிய மக்­க­ளின், சிறு­பான்மை மக்­க­ளின் வாக்­கு­ரி­மையை பறிக்க முயல்­கி­றதோ என்ற அச்­சத்தை பர­வ­லாக பல­ரும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். மேற்கு வங்­கம், கேர­ளம், தமிழ்­நாடு ஆகிய மாநி­லங்­கள் எஸ்.ஐ.ஆர் நட­வ­டிக்­கை­யைக் கடு­மை­யாக எதிர்க்­கின்­றன. தமிழ்­நாட்டு முதல்­வர் இதனை பா.ஜ.க.-வின் சதி என்றே வர்­ணித்­துள்­ளார். நாளை செவ்­வாய்க்­கி­ழமை தமிழ்­நாட்டு நக­ரங்­க­ளில் தி.மு.க தலை­மை­யில் ஆர்­பாட்­டங்­கள் நடக்­கப் போகின்­றன. தி.மு.க. தொடுத்­துள்ள வழக்­கும் உச்ச நீதி­மன்­றத்­தில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டப் போகின்­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">ஏற்­க­னவே மின்­னணு வாக்கு இயந்­தி­ரங்­க­ளின் பயன்­பாட்­டி­னால் பல­ரது  நம்­பிக்­கையை இழந்­துள்ள தேர்­தல் ஆணை­யம், ராகுல் காந்தி அடுக்­க­டுக்­காக வெளி­யிட்­டு­வ­ரும் வாக்­கா­ளர் பட்­டி­யல் முறை­கே­டு­கள், அவ­ச­ர­டி­யாக நடக்­கும் எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வற்­றின் மூலம் மக்­க­ளின் நம்­பிக்­கையை முற்­றி­லும் இழக்­கும் சூழ்­நி­லையை உரு­வாக்கி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">மக்­க­ளாட்­சி­யில் மக்­களே அர­சாட்­சி­யின் மூலா­தா­ரம். மக்­கள்­தான் அர­ச­மைக்க வேண்­டும். அரசு யார், யார் மக்­கள் என்று முடிவு செய்­யக்­கூ­டாது. அந்­நிய தேசத்­த­வர் ஊடு­றுவி இருந்­தால் அதனை காவல்­துறை மூலம் கண்­ட­றிந்து நட­வ­டிக்கை எடுக்­க­லாமே தவிர, அதைச் சாக்­கிட்டு மக்­க­ளின் வாக்­கு­ரி­மையை பறிக்க முடி­யாது. தன் அடை­யா­ளத்தை நிரூ­பித்து வாக்­கு­ரிமை பெறு­வது மக்­கள் பொறுப்பு என்று அரசு கூறு­வது மக்­க­ளாட்­சி­யின் அடித்­த­ளத்­தையே தகர்ப்­ப­தா­கும். யோகேந்­திர யாதவ் உள்­ளிட்ட பல அர­சி­யல் ஆர்­வ­லர்­கள் இத­னைக் கடு­மை­யா­கக் கண்­டித்து குரல் கொடுத்து வரு­கி­றார்­கள். அர­சி­யல் கட்­சி­க­ளும் குரல் கொடுக்­கின்­றன. ஏதேதோ வழக்­கு­களை சுவோ மோட்டோ என்று ஆங்­கி­லத்­தில் கூறு­வ­து­படி, தானாக முன்­வந்து விசா­ரிக்­கும் உச்­ச­நீ­தி­மன்­றம் மக்­க­ளாட்­சியை காப்­பாற்ற தானாக முன்­வந்து தேர்­தல் ஆணை­யத்­தினை நெறிப்­ப­டுத்த வேண்­டும்,</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>