<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/12/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,420,958,1205" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Dec 11 2025 21:36:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251212T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="12122025-CBE-03" position.sequence="03" ex-ref="12122025-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="44">ரூ.332.46 கோடியில் 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="44"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை, டிச. 12 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ரூ.13.97 கோடி செல­வில் கட்­டப்­பட்­டுள்ள 3 வட்ட செயல்­முறை கிடங்கு வளா­கங்­களை திறந்து வைத்து, ரூ.332.46 கோடி மதிப்­பீட்­டில் கட்­டப்­ப­ட­வுள்ள மேற்­கூரை அமைப்­பு­டன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு                   வளா­கங்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் அடிக்­கல் நாட்­டி­னார். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் நேற்று முன்தினம் (10.12.2025) தலை­மைச் செய­ல­கத்­தி­லி­ருந்து காணொ­லிக் காட்சி வாயி­லாக தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கத்­தின் சார்­பில் நாமக்­கல் மாவட்­டம் – சேந்­த­மங்­க­லம், நீல­கிரி மாவட்­டம் – பந்­த­லூர், திரு­வண்­ணா­ மலை மாவட்­டம் – கீழ்­பெண்­ணாத் ்­தூர் ஆகிய வட்­டங்­க­ளில் 7000 மெட்­ரிக் டன் கொள்­ள­ள­வில் 13.97 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள 3 வட்ட செயல்­முறை கிடங்கு வளா­கங்­களை திறந்து வைத்­தார். மேலும், தஞ்­சா­வூர், நாகப்­பட்­டி­னம்,  மயி­லா­டு­துறை, கட­லூர்,  திரு­வண்­ணா­மலை, திண்­டுக்­கல் மற்­றும் கிருஷ்­ண­கிரி ஆகிய மாவட்­டங்­க­ளில் 332 கோடியே 46 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் கட்­டப்­ப­ட­வுள்ள மேற்­கூரை அமைப்­பு­டன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளா­கங்­க­ளுக்கு அடிக்­கல் நாட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அனை­வ­ருக்­கும் உண­வுப் பாது­காப்­பினை உறுதி செய்­யும் வகை­யி­லும், பொது விநி­யோ­கத் திட்­டத்­திற் ­கான உணவு தானி­யங்­க­ளைச் சேமித்து வைத்­தி­டும் நோக்­கு­டன் கிடங்­கு­க­ளின் கொள்­ள­ள­வினை உயர்த்­தும் வகை­யி­லும், உண­வுப்பாது­காப்­பின் அங்­கங்­க­ளான சேமிப்பு, விற்­பனை ஆகி­ய­வற்­றில் முக்­கிய பங்­காற்றி வரும் தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கத்­தின் மூல­மாக சேமிப்­புக் கிடங்­கு­களை அதி­க­ரித்து உணவு தானி­யங்­களை நவீன முறை­யில் சேமித்து வைத்­தி­ட­வும், அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திறந்து வைக்­கப்­பட்ட கிடங்­கு­ க­ளின் விவ­ரங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்டு மக்­க­ளின் உண­வுப் பாது­காப்­பினை வட்ட அள­வில் உறுதி செய்­ய­வும், பொது­வி­நி­யோ­கத் திட்­டத்­தின் பயன்­பாட்­டிற்­கான தானி­யங்­க­ளின் சேமிப்­பிற்­கான கொள்­ள­ள­வினை அதி­கப்­ப­டுத்­தும் வித­மா­க­வும், தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக்­க­ழ­கத்­தின் சார்­பில்  நாமக்­கல் மாவட்­டம், சேந்­த­மங்­க­லம் வட்­டத்­தில் 4.97 கோடி ரூபாய் செல­வில் 2000 மெ.டன் கொள்­ள­ள­வில் கட்டி முடிக்­கப்­பட்­ டுள்ள வட்ட செயல்­முறை கிடங்­கு­கள், நீல­கிரி மாவட்­டம், பந்­த­லூர் வட்­டத்­தில் 4.50 கோடி ரூபாய் செல­வில் 2500 மெ.டன் கொள்­ள­ள­வில் கட்டி முடிக்­கப்­பட்­டுள்ள வட்ட செயல்­முறை கிடங்­கு­கள், திரு­வண்­ணா­ மலை மாவட்­டம், கீழ்­பெண்­ணாத் ­தூர் வட்­டத்­தில் 4.50 கோடி ரூபாய் செல­வில் 2500 மெ.டன் கொள்­ள­ள­வில் கட்டி முடிக்­கப்­பட்­டுள்ள வட்ட செயல்­முறை கிடங்­கு­கள், என மொத்­தம் 13.97 கோடி ரூபாய் செல­வில் 7000 மெ.டன் கொள்­ள­ள­வில் கட்­டி­மு­டிக்­கப்­பட்­டுள்ள 3 வட்ட செயல்­முறை கிடங்கு வளா­கங்­களை முத­ல­மைச்­சர் அவர்­கள் திறந்து வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அடிக்­கல் நாட்­டப்­பட்­டுள்ள கிடங்­கு­க­ளின் விவ­ரங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விவ­சா­யி­க­ளின் கடின உழைப்­பில் உற்­பத்­தி­யாகி கொள்­மு­தல் செய்­யப்­ப­டும் “ஒரு நெல்­ம­ணிக்­கூட வீணா­கக்­கூ­டாது” என்ற முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உய­ரிய சிந்­த­னையை செயல் வடி­வ­மாக்­கும் வித­மாக மேற்­கூரை அமைப்­பு­டன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளா­கங்­கள் நிறு­வப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதன்­படி தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக்­க­ழ­கத்­தின் சார்­பில் டெல்டாமாவட்­டங்­க­ளான தஞ்­சா­வூர் மாவட்­டம்,ஒரத்­த­நாடு வட்­டம், நடு­வூர் கிரா­மத்­தில் 170.22 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 1,00,000 மெ.டன் கொள்­ள­ள­வி­ லும், நாகப்­பட்­டி­னம் மாவட்­டம், நாகப்­பட்­டி­னம் வட்­டம், திருக்­கண்­ண­பு­ரம் கிரா­மத்­தில் 29.02 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 20,500 மெ.டன் கொள்­ள­ள­வி­லும், திருக்­கு­வளை வட்­டம், மணக்­குடி கிரா­ மத்­தில் 22.95 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 17,000 மெ.டன் கொள்­ள­ள­வி­லும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மயி­லா­டு­துறை மாவட்­டம், மயி­லா­டு­துறை வட்­டம், பர­ச­லூர் கிரா­மத்­தில் 12 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 9,000 மெ.டன் கொள்­ள­ளவி­ லும், தரங்­கம்­பாடி வட்­டம், வில்­லி­ய­நல்­லூர் கிரா­மத்­தில் 27 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 21,000 மெ.டன் கொள்­ள­ள­வி­லும்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கட­லூர் மாவட்­டம், வேப்­பூர் வட்­டம், டி.புடை­யூர் கிரா­மத்­தில் 12.66 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 9,500 மெ.டன் கொள்­ள­ள­வி­லும் மற்­றும் திட்­டக்­குடி வட்­டம், தாழ­நல்­லூர் கிரா­மத்­தில் 15 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 11,000 மெ.டன் கொள்­ள­ள­வி­லும்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரு­வண்­ணா­மலை மாவட்­டம், மேல்­பெண்­ணாத்­தூர் வட்­டம், செங்­கம் கிரா­மத்­தில் 17.91 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 12,000 மெ.டன் கொள்­ள­ள­வி­லும், திண்­டுக்­கல் மாவட்­டம், பழனி வட்­டம், கோவி­லம்­மா­பட்டி    கிரா­மத்­தில் 12.85 கோடி ரூபாய்     மதிப்­பீட்­டில் 9,000 மெ.டன் கொள்­ள­ள­வி­லும், கிருஷ்­ண­கிரி மாவட்­டம், ஜூஜூப்­பள்ளி கிரா­மத்­தில் 12.85 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 9,000 மெ.டன் கொள்­ள­ள­வி­லும்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என மொத்­தம் 2,18,000 மெ.டன் கொள்­ள­ள­வில், 332 கோடியே 46 இலட்­சம்  ரூபாய்  மதிப்­பீட்­டில்  கட்­டப்­ப­ட­வுள்ள மேற்­கூரை அமைப்­பு­டன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளா­கங்­கள் கட்­டும் பணி­க­ளுக்கு  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் அடிக்­கல் நாட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­நி­கழ்ச்­சி­யில், உணவு மற்­றும் உண­வுப்­பொ­ருள் வழங்­கல்­துறை அமைச்­சர் அர.சக்­க­ர­பாணி, தலை­மைச் செய­லா­ளர் நா.முரு­கா­னந்­தம், கூட்­டு­றவு, உணவு மற்­றும் நுகர்­வோர் பாது­காப்­புத் துறை முதன்­மைச் செய­லா­ளர் சத்­ய­பி­ரத சாகு, தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கத்­தின் மேலாண்மை இயக்­கு­நர் முனை­வர்அ.அண்­ணா­துரை, கூட்­டு­றவு, உணவுமற்­றும் நுகர்­வோர் பாது­காப்­புத் துறை துணைச் செய­லா­ளர் பானோத் ம்ருகேந்­தர் லால் மற்­றும் அரசு உயர் அலு­வ­லர்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காணொ­லிக் காட்சி வாயி­லாக தஞ்­சா­வூர் மாவட்­டத்­தி­லி­ருந்து உயர்­கல்­வித் துறை அமைச்­சர் முனை­வர் கோவி. செழி­யன், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் டி.கே.ஜி. நீல­மே­கம், துரை சந்­தி­ர­சே­க­ரன், கே.அண்­ணா­துரை, என்.அசோக்­கு­மார், ஒன்­றிய முன்­னாள் அமைச்­சர் எஸ்.எஸ்.பழ­னி­மா­ணிக்­கம், மாவட்ட ஆட்­சித் தலை­வர் திரு­மதி பா.பிரி­யங்கா பங்­க­ஜம், தஞ்­சா­வூர் மாந­க­ராட்சி மேயர் சண். இரா­ம­நா­தன், துணை மேயர் திரு­மதி அஞ்­சு­கம் பூபதி, விவ­சாய சங்க நிர்­வா­கி­கள், உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­ கள் மற்­றும் அரசு உயர் அலு­வ­லர்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>