<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/12/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,609,891" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Dec 11 2025 21:39:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251212T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="12122025-CBE-07" position.sequence="07" ex-ref="12122025-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">12.12.2025</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்துபோய் 
அ.தி.மு.க.வை அமித்ஷாவிடம் அடமானம் வைத்தவர்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">‘சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம்’ என முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்திருக்கிறார் பழனிசாமி! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25"> அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup262125_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="RagupathiBW_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை, டிச. 12–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இயற்கை வளங்­கள் துறை அமைச்­சர் எஸ்.ரகு­பதி விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">10 தேர்­தல்­க­ளில் தொடர்ந்து தோற்­றுக் கொண்­டி­ருக்­கும் 
’தோல்­வி­சாமி’, ’’210 தொகு­தி­க­ளில் 
அ.தி.மு.க. வெல்­லும்’’ என 
அ.தி.மு.க. பொதுக்­கு­ழு­வில் கிச்சு மூச்சு மூட்­டி­யி­ருக்­கி­றார் எதிர்க் கட்­சித் தலை­வர். குழந்­தை­க­ளைச் சிரிக்க வைப்­ப­தற்­கா­கக் கிச்சு மூச்சு மூட்­டு­வது போல அதி.மு.க.வின­ ருக்கு உற்­சாக மூட்­டச் சிரிக்­கா­மல் பொய்யை சொல்­லி­யி­ருக்­கி­றார் 
பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">எத்­தனை எத்­தனை 
கொடு­மை­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“தி.மு.க. நம் ஆட்­சி­யைப் பற்றி விமர்­சிக்க முடி­ய­வில்லை. அ.தி.மு.க. பாஜ­க­வோடு கூட்­டணி என்­று­தான் சொல்­கி­றார். அப்­ப­டி­யான சிறப்­பான ஆட்­சி­யைக் கொடுத்­தோம்’’ என தன்­னு­டைய ஆட்­சிக்­குத் தானே பொதுக்­கு­ழு­வில் சான்­றி­தழ் கொடுத்­தி­ருக்­கி­றார் பழ­னி­சாமி. ஆட்­சிக்கு ஆபத்­தைத் தடுக்­கத் தின­க­ரன் ஆத­ரவு எம்.எல்.ஏ–க்­கள் 18 பேர் தகுதி நீக்­கம், பத்­தி­ரி­கை­யா­ளர்­கள், சமூக செயற்­பாட்­டா­ளர்­கள், எதிர்க் கட்­சி­யி­னர் மீது அவ­தூறு வழக்­கு­கள், விவ­சா­யி­கள் மீது அடக்­கு­முறை, கொட­நாடு கொலை­கள், போலீஸ் அதி­காரி விஷ்ணு பிரியா தற்­கொலை,  கனி­மக் கொள்­ளை­கள், கஜா, ஓகி புயல்­க­ளில் காட்­டிய மெத்­த­னம், கூவத்­தூர் கூத்­து­கள், கொரோனா மர­ணங்­கள், கொரோனா பேரி­ட­ரி­லும் கொள்ளை, சாத்­தான்­கு­ளம் தந்தை மகன் லாக் அப் டெத், தூத்­துக்­குடி துப்­பாக்­கிச் சூடு, கல்­லூரி மாண­வி­க­ளைத் தவ­றான வழிக்­குத் தூண்­டிய பேரா­சி­ரியை நிர்­ம­லா­தேவி விவ­கா­ரம், பொள்­ளாச்சி பாலி­யல் வன்­மு­றை­கள், நுங்­கம்­பாக்­கம் ரயில்வே ஸ்டேஷ­னில் சுவாதி கொலை, அ.தி.மு.க. பேனர் மர­ணங்­கள், ஜல்­லிக்­கட்டு தடை போராட்­டம், சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள்  என எத்­தனை எத்­தனை கொடு­மை­கள் நடை­பெற்­றன. இதை­யெல்­லாம் மறைத்­து­விட்டு, ’சிறப்­பான ஆட்­சி­யைக் கொடுத்­தோம்’ எனச் சோற்­றுக்­குள் பூச­ணிக்­காயை மறைத்­தி­ருக்­கி­றார் பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னி­சாமி சொல்­வது போலவே அது சிறப்­பான ஆட்சி என்­றால், 2021 சட்­ட­மன்­றத்தேர்­த­லில் அதி.மு.க.வை மக்­கள் ஏன் வீட்­டுக்கு அனுப்­பி­னார்­கள்? தமிழ்­நாட்­டின் வளர்ச்­சியை முடக்கி தமிழ்­நாட்­டைக் கற்­கா­லத்­திற்கு இழுத்­துச் சென்ற ஆட்­சி­தான் பழ­னி­சா­மி­யின் ஆட்சி. அது பொற்­கால ஆட்சி அல்ல. தமிழ்­நாட்­டின் இருண்­ட­கால ஆட்சி.மாநி­லத்­தின் உரி­மை­களை எல்­லாம் டெல்­லி­யின் கால­டி­யில் அட­மா­னம் வைத்து விட்டு, நமது பொரு­ளா­தார வளத்­தைச் சுரண்­டும் திட்­டங்­க­ளுக்­கும் சட்­டங்­க­ளுக்­கும் தலை­யாட்டி கையெ­ழுத்­திட்டு துரோ­கம் செய்­த­து­தான் பழ­னி­சா­மி­யின் துரோக ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">வெட்­கப்­பட வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் உரி­மை­களை மறுத்­தும், நிதி ஒதுக்­கீட்­டில் பார­பட்­சம் காட்­டி­யும், வளர்ச்­சித் திட்­டங்­களை முடக்­கி­யும், தமி­ழர் பண்­பாட்டை உல­க­றிய செய்­யும் கீழடி அக­ழாய்வு முடிவை மறுத்­த­தும் மட்­டு­மின்றி தமி­ழர்­களை திரு­டர்­கள் என்­றும் கொடு­மைக்­கா­ரர்­கள் என்­றும் தங்­கள் அர­சி­யல் ஆதா­யத்­திற்­காக ஒடிசா, பீகார் தேர்­தல் போது விமர்­சித்­துப் பேசிய பா.ஜ.க.வோடு கூட்­டணி வைத்­துக் கொண்டு இருப்­ப­தற்கு பழ­னி­சாமி பெரு­மைப்­ப­டக் கூடாது. வெட்­கப்­ப­ட­தான் வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல மக­ளிர் விடி­யல் பேருந்­தில் நமது பெண்­கள் பய­ணிப்­பதை பொறுத்­துக் கொள்ள முடி­யா­மல் லிபஸ்­டிக் பஸ் என பெண்­களை அவ­ம­திக்­கும் வகை­யில் அநா­க­ரீ­க­மாக நடந்து கொண்ட பழ­னி­சாமி இன்று பெண்­க­ளின் நலத்­திட்­டங்­க­ளுக்­காக குரல் கொடுத்­தேன் என நாட­க­மாடி உள்­ளார். திரா­விட மாடல் ஆட்­சி­யில் பெண்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்டு வரும் உரிமை தொகை, விடி­யல் பய­ணம், புதுமை பெண் போன்ற திட்­டங்­க­ளைக் கண்டு தாங்கி கொள்ள முடி­யாத முன்­னாள் அ.தி.மு.க. அமைச்­சர் சிவி சண்­மு­கம் “பொண்­டாட்­டி­யை­யும் இல­வ­ச­மாக கொடுப்­பார்­கள்” என சொல்லி ஒட்டு மொத்த தமிழ்­நாட்டு பெண்­க­ளை­யும் கொச்­சைப்­ப­டுத்தி பேசி­னாரே அதை பெய­ர­ள­வுக்­கா­வது கண்­டித்­தாரா பழ­னி­சாமி.? இந்த லட்­ச­ணத்­தில் பெண்­க­ளுக்கு ஆத­ர­வாக அ.தி.மு.க. இருப்­பது போல பகல் வேஷம் போடு­கி­றார் பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டை சீர­ழித்த பழ­னி­சாமி!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், அரைத்த மாவை அரைப்­பது போல் பேசிய பொய்­க­ளையே பொதுக்­கு­ழு­வி­லும் திரும்­பப் பேசி­யி­ருக்­கி­றார் பழ­னி­சாமி. கூவத்­தூ­ரில் குறுக்கு வழி­யில் முத­ல­மைச்­ச­ராக ஊர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பழ­னி­சா­மி­யால் தமிழ்­நாடு அனைத்­துத் துறை­க­ளில் படு­பா­தா­ளத்­திற்­குச் சென்­றது. தொட்­டத் துறை­தோ­றும் ஊழல், கொட­நாடு தொடங்கி தூத்­துக்­குடி வரை சீர­ழிந்து கிடந்த சட்­டம் ஒழுங்கு, பாஜ­க­வின் கண்­ண­சை­விற்கு இசைந்து நடந்து தமிழ்­நாட்­டின் உரி­மை­கள் தாரை வார்ப்பு, அடிமை அ.தி.மு.க. ஆட்­சி­யின் அவ­லட்­ச­ணங்­களை எதிர்த்­துப் போரா­டி­ய­வர்­கள் மீது குண்­டர் சட்­டம் முதல் துப்­பாக்­கிச் சூடு வரை நடத்தி அடக்கு முறை, செய்தி நிறு­வ­னங்­கள் மீது அவ­தூறு வழக்­கு­கள் எனத் தமிழ்­நாட்­டைச் சீர­ழித்த பழ­னி­சா­மியை மக்­கள் அவ்­வ­ளவு எளி­தில் மறந்­து­வி­ட­வில்லை. அத­னால்­தான் மக்­கள் தொடர்ந்து 10 தேர்­தல்­க­ளில் அவரை தோற்­க­டித்­துக் கொண்டே இருக்­கி­றார்­கள். தமிழ்­நாட்­டைத் தலை நிமிர வைத்­தி­ருக்­கும் திரா­விட மாடல் அர­சின் சாத­னை­க­ளைப் பொறுக்க முடி­யா­மல் பொதுக்­கு­ழுக் கூட்­டம் கூட்­டிப் பொரு­மி­யி­ருக்­கி­றார். பழ­னி­சா­மி­யின் அர்த்­த­மற்ற அவ­தூ­று­க­ளால் தி.மு.க.வை அசைத்­துக் கூட பார்க்க முடி­யாது. இனி­யும் இந்­தப் பொய்­கள் மக்­க­ளி­டம் எடு­ப­டும் என நினைத்து பகல் கன­வில் மிதந்து கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">பொதுக்­கு­ழு­வில் புலம்­பல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“நாட்டு மக்­க­ளுக்­கா­கச் சூழ்­நிலை கருதி பா.ஜ.க–வு­டன் கூட்­டணி வைத்­தோம். பா.ஜ.க–வு­டன் இனி கூட்­டணி இல்லை’’ என்று 2024 ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யில் மது­ரை­யில் நடந்த SDPI கட்சி மாநாட்­டில் வீர வச­னம் பேசிய பழ­னி­சாமி, மீண்­டும்  பாஜ­க­வு­டன் கூட்­டணி வைத்­துக் கொண்டு அதற்கு நியா­யம் கற்­பிக்­கப் பொதுக்­கு­ழு­வில் புலம்­பு­வ­தைப் பார்த்­தால் சிரிப்­பு­தான் வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“அடுத்த 100 நாட்­க­ளில் தி.மு.க. அமைச்­சர்­கள் பத்­தி­ர­மான இடத்­துக்­குப் போவார்­கள்’’ என ஜோதி­டம் சொல்­லி­யி­ருக்­கி­றார் பழ­னி­சாமி. தன்­னு­டைய உற­வி­னர்­கள் வீட்­டில் நடந்த இரண்டு ரெய்­டு­க­ளுக்­குப் பயந்து போய் அதி.மு.க.வை அமித்­ஷா­வி­டம் பத்­தி­ர­மாக அட­மா­னம் வைத்த பழ­னி­சாமி எல்­லாம் பேசு­வ­தற்கு அரு­கதை இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">செந்­தில் காமெடி போல் பேசி­யி­ருக்­கி­றார்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“2019 எம்பி தேர்­த­லில் 39 நாடா­ளு­மன்­றத் தொகு­தி­யில் ஒன்­றில்­தான் வென்­றோம், அப்­போது நடந்த 22 சட்­ட­மன்­றத் தொகு­தி­கள்  இடைத்­தேர்­த­லில் 9 இடங்­க­ளில் வென்­றோம்’’ என புள்­ளி­வி­வ­ரம் சொல்­கி­றார் பழ­னி­சாமி. தின­க­ரன் ஆத­ரவு எம்.எல்.ஏ–க­ளால் ஆட்­சிக்கு ஆபத்து என்­ற­தும் அவர்­க­ளைத் தகு­தி­நீக்­கம் செய்­தார்­கள். அந்­தத் தொகு­தி­க­ளுக்­கும் சேர்த்து அப்­போது இடைத் தேர்­தல் நடை­பெற்­றது. அறு­திப் பெரும்­பான்­மையை இழந்­து­வி­டு­வோமோ, ஆட்சி கவிழ்ந்­து­வி­டு­வோமோ என அஞ்சி அந்த 9 தொகு­தி­க­ளில் மட்­டுமே குறி­யாக வேலை பார்த்து வென்­றார்­கள். ’’நான் ஏழா­வது பாஸ்னே. நீங்க எஸ்.எஸ்.எல்.சி ஃபெயி­லுனே. பாஸ் பெருசா ஃபெயில் பெருசா’’ என செந்­தில் காமெடி போலப் பேசி­யி­ருக்­கி­றார் பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க.வினரே நம்ப மாட்­டார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் 39 நாடா­ளு­மன்­றத் தொகு­தி­களை தி.மு.க.தான் வென்­றது. ஆனால், நாடா­ளு­மன்­றத் தொகு­திக்­குள் இருக்­கும் 10 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் அதி.மு.க.வே அதிக வாக்­கு­கள் பெற்­றது. அப்­போது அ.தி.மு.க. மற்­றும் பாஜக கூட்­டணி வாங்­கிய வாக்­கு­கள் இரண்­டை­யும் சேர்த்­தால் 41.33 சத­வி­கி­தம். எனவே, வரு­கிற தேர்­த­லில் 210 இடங்­க­ளில் அ.தி.மு.க. கூட்­டணி வெல்­லும்’’ என அரித்­மெட்­டிக் கணக்கு போட்­டி­ருக்­கி­றார் பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பாஜக, அ.தி.மு.க. தனித் தனி­யா­கக் கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்­டது. பாஜக கூட்­ட­ணி­யில் பாமக, அம­முக, பன்­னீர்­செல்­வம். தமாகா, புதிய நீதிக் கட்சி, ஐ.ஜே.கே, தமி­ழக மக்­கள் முன்­னேற்­றக் கழ­கம் போன்ற கட்­சி­கள் இடம்­பெற்­றன. இப்­போது அ.தி.மு.க. கூட்­ட­ணி­யில் பாஜக, தமாகா தவிர வேறு எந்­தக் கட்­சி­கள் இருக்­கின்­றன? அன்­றைக்கு அ.தி.மு.க. கூட்­ட­ணி­யில் இருந்த எஸ்.டி.பி.ஐ வில­கி­விட்­டது. தேமு­தி­க­வின் நிலை உறு­தி­யா­க­வில்லை. அது­மட்­டு­மின்றி 2024 நாடா­ளு­மன்ற தேர்­த­லில் பாஜக வோடு கூட்டு சேர்ந்து அ.தி.மு.க. நின்­றி­ருந்­தா­லும் தி.மு.க. கூட்­ட­ணியை வென்­றி­ருக்க முடி­யாது, இனி­யும் வெல்ல முடி­யாது என்­பது தமிழ்­நாட்­டில் நேற்று பிறந்த பிஞ்­சுக் குழந்­தைக்­குக் கூட தெரி­யும். நிலைமை இப்­ப­டி­யி­ருக்க நீங்­கள் அடித்து விடும் பொய்க்­க­ணக்கை அ.தி.மு.க. வினரே நம்­ப­மாட்­டார்­கள் பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>