<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/12/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,397,957,1498" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Dec 12 2025 11:41:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251212T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="12122025-VLR-03" position.sequence="03" ex-ref="12122025-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="22">திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிபதியின் தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">பா.ஜ.க. அரசு மதச்சார்பற்ற கோட்பாட்டை சிதைத்து வருகிறது! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மதுரை கருத்­த­ரங்­கில் முன்­னாள் அமைச்­சர் பொன்.முத்­து­ரா­ம­லிங்­கம் பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Muthuramalingam_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">மதுரை, டிச. 12 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">திருப்பரங்குன்றம் தீப விவகா ரம் தொடர்பான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்  தீர்ப்பு  மறுபரி சீலனை செய்யப்பட வேண்டும் என்றும் ஒன்றிய பா.ஜ.க. அரசு மதச்சார்பற்ற கோட்பாட்டை சிதைத்து வருகிறது என்றும் மதுரையில் நடைபெற்ற கருத்­த­ரங்­கில் முன்­னாள் அமைச்­சர் பொன்.முத்­து­ரா­ம­லிங்­கம் பேசுகையில் குறிப்பிட்டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி வழக்­க­றி­ஞர் அணி­சார்­பில் மதச்­சார்­பின்மை(Secularism)என்ற தலைப்­பில் சிறப்பு கருத்­த­ரங்­கம் கழக அமைப்பு செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி தலை­மை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தக் கருத்­த­ரங்­கத்­தில் கலந்து கொண்டு கழ­கத்­தி­னு­டைய உயர்­நிலை செயல்­திட்ட குழு உறுப்­பி­னர் முன்­னாள் அமைச்­சர் பொன்.முத்­து­ரா­ம­லிங்­கம் ஆற்­றிய உரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘மதச்­சார்­பின்மை’ என்ற தலைப்­பில் எனக்கு முன்­னாலே இந்­தி­யக் கூட்­ட­ணி­யைச் சார்ந்த வழக்­க­றி­ஞர்­கள் இந்த தலைப்­பின்­கீழ் பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்­தார்­கள். அந்­தக் கருத்­துக்­க­ளுக்கு வலிமை சேர்க்­கக்­கூ­டிய வகை­யில், என்­னு­டைய எண்­ணங்­களை இந்த அவை முன் வைக்க விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மதச்­சார்­பின்மை என்ற அர­சி­யல் கோட்­பாட்டை இந்­திய அர­சி­யல் சட்­டத்­தின் முன்­னு­ரை­யி­லேயே(Preamble of the constitution)சேர்த்­துள்­ளார்­கள். இந்­திய அர­சி­யல் சட்­டத்­தின் கட்­ட­மைப்­புக்கு  எத்­த­கைய கொள்கை கோட்­பா­டு­கள் அடித்­த­ள­மாக இருக்க வேண்­டும் என்­பதை இந்தமுன்­னுரை தெளி­வுப்­ப­டுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விடு­தலை பெற்ற இந்­தியஒன்­றி­யத்­தின் ஆட்­சி­முறை  இறை­யாண்­மையை உள்­ள­டக்­கிய சமத்­துவ மதச்­சார்­பற்ற ஜன­நா­ய­கக் குடி­ய­ர­சாக இருக்க வேண்­டும் எனகுறிப்­பிட்­டுள்­ளார்­கள். இந்த அர­சி­யல் கோட்­பா­டு­க­ளின் அடிப்­ப­டை­யில்­தான்ஒன்­றிய  அர­சும்,  மாநி­லங்­க­ளு­டைய அர­சு­க­ளும் அமைந்­திட வேண்­டும். இந்த அர­சி­யல் ஜன­நா­ய­கத்தை வரை­ய­றுத்­த­பின் சமூக ஜன­நா­ய­கம் எப்­படி இருக்க வேண்­டு­மென தெளி­வு­ப­டுத்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சமூக ஜன­நா­ய­கத்­தின் சமூ­கப் பொரு­ளா­தார அர­சி­யல் சுதந்­தி­ரம்(Liberty)இருக்க வேண்­டும். அந்த சுதந்­தி­ரம் நியா­யத்­தின்(Justice)அடிப்­ப­டை­யில் பாது­காக்­கப்­பட வேண்­டும் என­வும், ஏற்­றத்­தாழ்­வற்ற சமூக அமைப்பு(Equality)கட்­ட­மைக்­கப்­பட வேண்­டும் என­வும், ஏற்­றத்­தாழ்­வற்ற சமூக அமைப்பை உரு­வாக்கி பாது­காக்­கப்­பட வேண்­டும் என­வும், சமூக உற­வு­க­ளின் சகோ­த­ரத் தன்மை(Fraternity)தொடர்ந்­திட அதற்­கான பாது­காப்பை உரு­வாக்க வேண்­டும் என­வும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே, ஆட்­சி­மு­றை­யில்ஜன­நா­யக குடி­ய­ர­சா­க­வும், சமூக ஜன­நா­யக சமத்­து­வம் பாது­காக்­கப்­பட வேண்­டும் என­வும், மதச்­சார்­பற்ற அர­சாக ஆட்­சி­மு­றையை கட்­ட­மைக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த அடிப்­ப­டைக் கட்­ட­மைப்­பு­களை உள்­ள­டக்­கி­யதே மதச்­சார்­பற்ற ஆட்­சி­மு­றை­யா­கும். இந்த இந்த ஆட்­சி­மு­றை­தான் தற்­பொ­ழுது கடும்­தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது. இத்­த­கைய விப­ரீத விளை­விற்கு ஒன்­றிய பா.ஜ.க அர­சின் மத­வெறி கோட்­பா­டும், செயல்­திட்­டங்­க­ளும்­தான் கார­ணம் என்­பதை விரி­வாக விளக்­கத் தேவை­யில்லை. ஒன்­றிய பா.ஜ.கஅர­சின் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட கொள்­கையே “இந்­துத்­துவா” கோட்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் “இந்­து­ராஷ்­டி­ரத்தை” உரு­வாக்­கு­வ­து­தான். “இந்­துத்­துவா” கோட்­பாடு என்­பது, வேதங்­க­ளின் மறு­ப­திப்­புத்­தான். எனவே, “இந்­துத்­துவா” கோட்­பாடு என்­பது இந்து சமூ­கத்தை மீண்­டும்சனா­த­னத்­திற்­கும் வர்­னா­ச­ன­தர்­மத்­திற்­கும் இட்­டுச் செல்­லும் வழித்­த­டம் என்­ப­தில் கிஞ்­சிற்­றும் ஐய­மில்லை!!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­திய ஒன்­றி­யம் என்­பது“ஒரு நாடு” அல்ல. மாறாக, ஒரு துணைக்­கண்­டம் என்­பது தான் வர­லாற்று ஆசி­ரி­யர்­க­ளின் தீர்க்­க­மான முடி­வா­கும். இந்­தியா பன்­மு­கத் ­தன்மை கொண்ட பல்­வேறுமொழி-­இன கலை, கலாச்­சார, நாக­ரிக, பண்­பாட்டு வேறு­பா­டு­களை உள்­ள­டக்­கி­யது. என­வே­தான், ஆங்­கி­லே­யர்­க­ளி­ட­மி­ருந்து விடு­தலை பெற்ற பன்­மு­கத் ­தன்மை கொண்ட இந்­தி­யத் துணைக்­கண்­டத்தை ஒரு ஆட்­சி­யில் கொண்­டு­ வ­ரு­வ­தற்­கான அன்­றைய தேசி­யத் தலை­வர்­க­ளின் ஒரு­மித்த முயற்­சி­யின் கார­ண­மா­கத்­தான், ஒரே ஆட்­சி­ யின்­கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரே ஆட்­சி­யின்­கீழ் கொண்­டு­வ­ரப்­பட்ட இந்­திய ஒன்­றிய ஆட்சி நிரந்­த­ர­மா­கத் தொடர வேண்­டும் என்ற தொலை­நோக்கு சிந்­த­னை­யில்­தான் அன்­றைய தேசிய தலை­வர்­கள் மதச்­சார்­பற்ற கோட்­பாட்டை இந்­திய அர­சி­யல் சட்­டத்­தின் அடிப்­ப­டைக் கட்­ட­மைப்­பு­க­ளில் ஒன்­றாக இணைத்­தார்­கள். எனவே, மதச்­சார்­பற்ற கோட்­பாட்டை உருக்­கு­ழைக்­கும் எந்த முயற்­சி­யும் இந்­திய நாட்­டி­னு­டைய ஒற்­று­மையை சித­ற­டித்து சின்­னா­ பின்­ன­மாக்­கி­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த  அடிப்­ப­டை   உண்­மை­களை அறிந்து கொள்ள மறுக்­கும் ஒன்­றிய பா.ஜ.க அரசு மதச்­சார்­பற்ற கோட்­பாட்டை சிதைத்து சின்­னா­பின்­ன­ மாக்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இத்­த­கைய நாசக்­கார நட­வ­டிக்­கை­க­ளில் ஒன்­று­தான் திருப்­ப­ரங்­   குன்­றம் மலை­யில் கார்த்­திகை தீபம் ஏற்­றும் பார­திய ஜனதா கட்­சி­யின் செய­ல்­ திட்­ட­மா­கும். தமிழ்­நாட்­டின் சட்­ட­மன்­றத்­திற்­கான தேர்­தல் நடை­பெற சில மாதங்­களே உள்ள நிலை­யில், கார்த்­திகை தீபம் ஏற்­றும் நிகழ்ச்­சியை விளம்­ப­ரத்­தோடு விரை­வுப்­ப­டுத்­து­வ­தற்­குக் கார­ணம் பெரும்­பான்­மை­யான இந்து மக்­க­ளின் வாக்­கு­களை ஏமாற்­றிப் பெறு­வ­தற்­காக மட்­டும்­தான் என்ற அர­சி­யல் ஆதாய உள்­ள­டக்க நட­வ­டிக்­கை­தான், பார­திய ஜனதா கட்­சி­யின் கார்த்­திகை  தீப விளக்­கேற்­றும் நட­வ­டிக்­கை­யா­கும். இந்த சந்­தர்ப்­பத்­தில் ஒன்றை நான்  தெளி­வு ­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பார­திய ஜனதா கட்­சி­யும் ஆர்.எஸ்.எஸ் அமைப்­பும் இந்த முயற்­சியை மேற்­கொள்­வது என்­ப­தை­யும் அவர்­க­ளது நோக்­கத்­தை­யும் நம்­மாலே புரிந்து கொள்ள முடி­யும். ஆனால், உயர்­நீ­தி­மன்­றம் தலை­யிட்டு எதார்த்த நிலை­மை­க­ளைக் கணக்­கில் எடுத்­துக் கொள்­ளா­மல், தீர்ப்­பு­களை வழங்­கு­வ­தும், மாநில அர­சி­னு­டைய பாது­காப்பு முன்­ஏற்­பா­டு­களை ரத்து செய்­வ­தும், மத்­திய தொழில்­துறை சார்ந்த காவல் துறையை துணைக்கு அழைப்­ப­தும் விப­ரீ­த­மான விளை­வு­களை உரு­வாக்­கும் என்­பதை தீர்ப்பு வழங்­கிய உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி இதனை சிந்­திக்க மறந்­து­விட்­டாரா? மறுத்­து­விட்­டாரா? என்­பது  ஒரு  மிகப்­பெ­ரிய கேள்­விக்­கு­றி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த வழக்­கில் தீர்ப்பு வழங்­கிய நீதி­பதி ஜி.ஆர்.சுவா­மி­நா­தன் அவர்­கள் கடந்த காலத்­தில் இந்­தப் பிரச்­சினை  குறித்த   உயர்­நீ­தி­மன்ற தீர்ப்­பு­களை முறை­யாக பரி­சீ­லித்­தி­ருக்க வேண்­டும். நீதி­பதி ஜி.ஆர்.சுவா­மி­நா­தன் வழங்­கிய தீர்ப்­பின்­படி, சிக்­கந்­தர் தர்­கா­விற்கு எதி­ரே­யுள்ள கல்­தூ­ணில் விளக்­கேற்­று­வ­தற் ­கான முயற்­சி­க­ளில் பா.ஜ.க.வினர் ஈடு­பட்ட நிலை­யில், ஏற்­க­னவே திருப்­ப­ரங்­குன்­றம் கோயில் நிர்­வா­கம் தாங்­கள் தொடர்ந்து பின்­பற்றி வரும் வழக்­கப்­படி டிசம்­பர் மூன்­றாம் தேதியே உச்­சிப் பிள்­ளை­யார் கோவில் வளா­கத்­தில் கார்த்­திகை தீபம் ஏற்­றி­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி ஜி.ஆர்.சுவா­மி­நா­தன் தீர்ப்­புப்­படி, பெரும்­பா­லும் வெளி­யூ­ரி­லி­ருந்து வந்த பார­திய ஜனதா கட்­சி­யைச் சார்ந்­த­வர்­கள்  திருப்­ப­ரங்­   குன்­றம் மலை­ய­டி­வா­ரத்­தில் கூடி சிக்­கந்­தர் தர்­கா­விற்கு  எதிரே  உள்ள  கல்­தூ­ணில் கார்த்­திகை தீபம் ஏற்­று­வ­தற்­காக முயற்சி மேற்­கொள்­வார்­க­ளே­யா­னால், அங்கு உரு­வா­கும்பதற்ற நிலை­மை­யும், கல­வரசூழ்­நி­லை­யை­யும் மாவட்டஆட்­சித் தலை­வ­ரும், மாவட்ட காவல்­துறை அதி­கா­ரி­க­ளும் கணக்­கில் எடுத்­துக்­கொண்டு சூழ்­நி­லை­ களை ஆழ­மாக பரி­சீ­லித்து பொது அமைதி காப்­ப­தற்­கும், கல­வர சூழ்­நி­லையை தடுப்­ப­தற்­கும், 144 சட்­டப் பிரி­வின்­கீழ் தடை உத்­த­ரவு பிர­க­ட­னப்­ப­டுத்­தி­ய­தில்என்ன தவறு இருக்க முடி­யும்?  
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உயர்­நீ­தி­மன்ற தீர்ப்­பில் குறிப்­பாக, மதம் சார்ந்த பிரச்­சி­னை­க­ளில் நிதா­னம் கடை­பி­டிக்­கப்­பட வேண்­டும் என்ற நடு­நி­லைச் சிந்­த­னை­யோடு 144 தடை உத்­த­ரவு பிறப்­பித்­தது எல்லா வகை­யி­லும் சரி­யா­ன­தும்தீர்க்­க­மா­ன­து­மா­கும். இந்­தத் தடை உத்­த­ர­வின் கார­ண­மா­கத்­தான் திருப்­ப­ரங்­     குன்­றத்­தில் பொது அமைதி பாது­காக்­கப்­பட்­டி­ருக்­கி­றது  என்­பதை  திருப்­ப­ரங்­    குன்­றத்­தில் வாழக்­கூ­டிய அனைத்து தரப்பு மக்­க­ளும் பகி­ரங்­க­மா­கத் தெரி­விக்­கி­றார்­கள். எனவே, இந்தசூழ்­நி­லை­யில் உயர் நீதி­மன்ன்­றத்­தி­னு­டைய தீர்ப்­பு ­தான் திருத்­தப்­பட வேண்­டு­மே­யொ­ழிய, 144 தடை உத்­த­ர­வினை எதிர்த்து விமர்­சிக்க வேண்­டிய கார­ணங்­கள் எது­வும் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத்­த­கைய மதம் சார்ந்த நீதி­மன்ற தீர்ப்­பு­க­ளில் மாநில அர­சுக்கு பொது அமை­தியை கட்­டிக்­காக்­கும் பொறுப்பை அர­சி­யல் சட்­டம் வழங்­கி­யி­ருக்­கி­றது. அந்த அடிப்­ப­டை­யில் மாவட்­டத்­தி­னு­டைய ஆட்­சித் தலை­வ­ரும், காவல்­துறை அதி­கா­ரி­க­ளும் மிகுந்த பொறுப்­பு­ணர்­வோடு தங்­கள் கட­மை­களை  நிறை­வேற்­றி­யி­ருக்­    கி­றார்­கள் என்­ப­து­தான் பொது­மக்­க­ளு­டைய எண்­ண­மும், சிந்­த­னை­யு­மா­கும். நீதி­பதி ஜி.ஆர்.சுவா­மி ­நா­தன் தீர்ப்பை விமர்­ச­னம் செய்த முன்­னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி ஹரி­ ப­ரந்­தா­மன், நீதி­பதி ஜி.ஆர்.சுவா­மி­நா­தன்  தீர்ப்­பில் சட்­ட­ வி­தி ­கள் மீறப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அது­மட்­டு­மல்ல, நீதி­பதி ஜி.ஆர்.சுவா­மி­நா­தன்,  ஆர்.எஸ்.எஸ். இயக்­கத்­தைச் சார்ந்­த­வர் என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே, அவ­ரு­டைய தீர்ப்பு மறு­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்த வேண்­டும் என்­பது அனைத்து மக்­க­ளின் எதிர்­பார்ப்­பா­கும்.  இங்கு குழு­மி­யி­ருக்­கும் இந்­தி­யக் கூட்­ட­ணி­யைச் சார்ந்த வழக்­க­றி­ஞர் பெரு­மக்­கள் இந்த எண்­ணங்­க­ளை­யும், சிந்­த­னை­க­ளை­யும் பொது­மக்­கள் மத்­தி­யில் எடுத்­துச் செல்ல வேண்­டும். மக்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்க வேண்­டும். மத­வெ­றி­யர்­க­ளுக்கு பாடம் புகட்ட வேண்­டும் என்ற கருத்தை கற்­ற­றிந்த வழக்­க­றி­ஞர்­க­ளா­கிய உங்­க­ளது சிந்­த­னைக்கு நான் சார்ந்­துள்ள இயக்­கத்­தின் சார்­பாக முன் வைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு  முன்­னாள் அமைச்­சர் பொன்.முத்­து­ரா­ம­லிங்­கம்  பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>