<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/12/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,67,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Dec 12 2025 11:39:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251212T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="12122025-VLR-04" position.sequence="04" ex-ref="12122025-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதில் பிரிட்டிஷ்   அரசைவிட மோடி அரசு மிக மோசமானதாக செயல்படுகிறது!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup688319_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">ந்­திய தேசிய தொழி­லா­ளர் ஆணை­யம் பரிந்­து­ரை­யின் அடிப்­ப­டை­யில் இருந்து வந்த 44 தொழி­லா­ளர் சட்­டங்­களை, ஒன்­றிய மோடி அரசு ஒருங்­கி­ணைப்பு என்ற பெய­ரில் 15 சட்­டங்­களை முழு­வ­து­மாக ரத்து செய்­து­விட்டு மீத­முள்ள 29 சட்­டங்­களை மட்­டும் 4 தொகுப்­பு­க­ளாக மாற்­றி­யுள்­ளது. மேற்­கண்ட 44 தொழி­லா­ளர் சட்­டங்­க­ளில் 1200-க்கும் மேற்­பட்ட சட்ட உட்­பி­ரி­வு­கள் இருந்­தன, ஆனால் தற்­போது 29 சட்­டங்­களை மட்­டும் 4 தொகுப்­பு­க­ளாக மாற்­றிய பிறகு 490-க்கும் உட்­பட்ட சட்ட பிரி­வு­களே உள்­ள­தாக தெரி­விக்­கின்­ற­னர் மீதம் உள்ள அனைத்து சட்ட உட்­பி­ரி­வு­க­ளும் நீக்­கப்­பட்­டு­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">மேலும் மோடி அர­சால் ரத்து செய்­யப்­பட்ட 15 சட்­டங்­க­ளி­லும் தொழி­லா­ளர்­க­ளின் பணி­பா­து­காப்பு, ஊதி­யப்­பா­து­காப்பு, சமூக பாது­காப்பு போன்ற பல முக்­கிய சட்­டங்­களை உள்­ள­டக்­கி­ய­வை­யா­கும். இவை அனைத்­தும் கடந்த காலத்­தில் தொழிற்­சங்­கங்­கள், தொழி­லா­ளர்­க­ளின் கூட்­ட­மைப்பு மற்­றும் பல்­வேறு அர­சி­யல் கட்­சி­கள் அன்­றைய ஒன்­றிய அர­சி­டம் வைத்த கோரிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் நாடா­ளு­மன்­றத்­தில் இரு அவை­க­ளி­லும் பல கட்ட விவா­தங்­க­ளுக்­குப் பிற­கு­தான் சட்­ட­மாக்­கப்­பட்­டது என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">தற்­போ­தைய மோடி அரசு 4 தொழி­லா­ளர் தொகுப்­புச் சட்­டங்­களை நாடா­ளு­மன்­றத்­தில் அவ­ச­ரக்­க­தி­யில் தாக்­கல் செய்­த­தோடு, இரு அவை­க­ளி­லும் உள்ள எதிர்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு விவா­திக்க போதிய வாய்ப்பு தரா­ம­லும், நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்தை மதிக்­கா­ம­லும் மாநில அர­சு­க­ளி­டம் முறை­யாக கலந்­தா­லோ­சிக்­கா­ம­லும், இந்­திய தொழி­லா­ளர் கூட்­ட­மைப்­பில் விவா­திக்­கா­ம­லும் சர்­வா­தி­கார முறை­யில் தன்­னிச்­சை­யாக பெரு முத­லா­ளி­க­ளுக்கு ஆத­ர­வா­க­வும், கார்­பு­ரேட்­டு­க­ளுக்கு சாத­க­மா­க­வும் கீழ்­கண்ட 4 தொழி­லா­ளர் தொகுப்பு சட்­டங்­களை மோடி அரசு அமல்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">1. தொழில்­சார் பாது­காப்பு, சுகா­தா­ரம் மற்­றும் பணி­யிட சூழல்­கள் சட்ட தொகுப்பு -2020  THE OCCUPATIONAL SAFETY, HEALT HAND WORKING CONDITIONS CODE - 2020. (இதில் 13 சட்­டங்­களை ஒருங்­கி­ணைத்து ஒரே சட்ட தொகுப்­பாக மாற்றி சட்­ட­மாக்­கி­யுள்­ள­னர்.)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">2. சமூக பாது­காப்பு தொகுப்பு சட்­டம் – 2020</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">CODE ON SOCIAL SECURITY - 2020</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">(இதில் 9 சட்­டங்­களை ஒருங்­கி­ணைத்து ஒரே சட்ட தொகுப்­பாக மாற்­றி­யுள்­ள­னர்.)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">3. ஊதிய தொகுப்பு சட்­டம் – 2019 .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">CODE ON WAGES - 2019</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">(இதில் 4 சட்­டங்­களை ஒருங்­கி­ணைத்து ஒரே சட்ட தொகுப்­பாக மாற்­றி­யுள்­ள­னர்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">4. தொழில் உற­வுச்­சட்ட தொகுப்பு - 2020</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">INDUSTRIAL RELATIONS CODE - 2020</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">(இதில் 3 சட்­டங்­களை ஒருங்­கி­ணைத்து ஒரே சட்ட தொகுப்­பாக மாற்­றி­யுள்­ள­னர்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">மேற்­கண்ட 4 தொழி­லா­ளர் தொகுப்பு சட்­டங்­க­ளை­யும் அமல் படுத்த கூடாது என­வும், நமது தொழி­லா­ளர் வர்க்­கம் 100 ஆண்­டு­க­ளுக்கு மேல் போராடி பெற்ற பணி பாது­காப்பு, ஊதிய பாது­காப்பு, சமூக பாது­காப்பு போன்ற பல உரி­மை­க­ளை­யும், சலு­கை­க­ளை­யும் விட்­டுத்­தர முடி­யாது என­வும், மோடி அர­சி­டம் இருந்து பாது­காக்­க­வும் கடந்த நான்கு, ஐந்து ஆண்­டு­க­ளாக இந்­திய ஒன்­றி­யத்­தில் உள்ள அனைத்து தொழிற்­சங்க அமைப்­பு­க­ளும் குறிப்­பாக LPF, HMS, AITUC, INTUC, CITU, AICCTU, MLF, LTUC, LLF, AIUTUC – போன்ற பல அமைப்­பு­கள் ஒன்று கூடி கூட்­டங்­கள் நடத்தி, நாடு தழு­விய அள­வில் நான்கு முறை பொது வேலை நிறுத்­தப் போராட்­டங்­களை நடத்­தி­யுள்­ள­னர். இந்த போராட்­டங்­க­ளில் 25 கோடிக்­கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்­கள் கலந்து கொண்டு மோடி அர­சுக்கு எதி­ராக தங்­க­ளது எதிர்ப்பை பதிவு செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">இது போன்ற பல கார­ணங்­க­ளால் 4 தொழி­லா­ளர் தொகுப்­புச் சட்­டங்­க­ளை­யும் அமல்­ப­டுத்த கால­தா­ம­தப்­ப­டுத்தி வந்த பா.ஜ.க. அரசு பீகார் சட்­ட­மன்ற தேர்­தல் முடிந்­த­தும், இந்­திய தொழி­லா­ளர் வர்க்­கத்­திற்கு விரோ­த­மான மற்­றும் துரோக தொழி­லா­ளர் சட்­டங்­களை 21-.11.-2025 முதல் நடை­மு­றைப்­ப­டுத்த நிர்­வாக ரீதி­யி­லான அறி­விப்­பினை வெளி­யிட்­டது. இந்த நாளை இந்­திய ஒன்­றி­யத்­தின் தொழி­லா­ளர் வர்க்­கம் கருப்பு தின­மா­கவே கரு­து­கின்­ற­னர். இன்­னும் சொல்­லப்­போ­னால் நம்மை ஆண்ட பிரிட்­டிஸ் ஆட்­சி­யா­ளர்­கள் வழங்­கிய பல தொழி­லா­ளர் பாது­காப்பு நல சட்­டங்­க­ளை­யும் மோடி அரசு நீக்­கி­யுள்­ளது, மாற்­றி­யுள்­ளது என்­ப­து­தான் வேத­னைக்­கு­ரிய செய்­தி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">பா.ஜ.க. அர­சால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள 4 தொழி­லா­ளர் தொகுப்பு சட்­டங்­க­ளி­னால் தொழி­லா­ளர் வர்­கத்­திற்கு ஏற்­ப­டும் பாதிப்­புக்­க­ளைப் பற்றி சுருக்­க­மாக பார்த்­தோ­மா­னால், மோடி அர­சால் நாடா­ளு­மன்­றத்­தில் இயற்­றப்­பட்ட தொழி­லா­ளர் சட்ட தொகுப்­பு­கள் தொழி­லா­ளர் நல­னில் எந்­த­வித தொடர்­பும் இல்­லா­மல், தொழில் செய்­வதை எளி­தாக்­கு­வ­தோடு கார்­பு­ரேட் முத­லா­ளி­கள் தொழி­லா­ளர்­களை தமக்கு தேவைப்­ப­டும்­போது வேலைக்கு வைத்­துக் கொண்டு, தேவை­யற்­றப் போது நீக்கி விடு­வ­தற்­குமே கொண்­டு­வ­ரப்­பட்­டன என்­பது தெளி­வாக தெரிய வந்­துள்­ளது. புதிய தொழி­லா­ளர் சட்ட தொகுப்­பு­கள் ஆலை முத­லா­ளி­க­ளுக்கு சாத­க­மாக தொழி­லா­ளர்­களை மீண்­டும் காலனி ஆதிக்­கத்­திற்கு கொண்டு சென்­றி­ருப்­பது மிக­வும் வேத­னைக்­கு­ரி­ய­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">நிலை­யாணை சட்­டம் (Standing Order) ஐம்­பது தொழி­லா­ளர்­கள் பணி­யாற்­றும் தொழிற்­சா­லை­க­ளுக்­கும் பொருந்­தும் என பல ஆண்­டு­க­ளாக இருந்து வந்­ததை, தற்­போது மோடி அரசு 300 தொழி­லா­ளர்­க­ளுக்கு மேல் பணி செய்­யும் தொழிற்­சா­லை­க­ளுக்கு மட்­டுமே பொருந்­தும் என மாற்­றி­யுள்­ளது. இத­னால் கோடிக்­க­ணக்­கான தொழி­லா­ளர்­கள் பணி பாது­காப்­பின்­றி­யும், சட்ட பாது­காப்­பின்­றி­யும் மற்­றும் ஊதிய பாது­காப்­பின்­றி­யும் பணி செய்­யும் சூழல் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் புதிய நிலை­யான சட்­ட­மா­னது தற்­கா­லிக தொழி­லா­ளர்­கள் (Casual), பயிற்­சி­யா­ளர்­கள் (Trainees), மற்­றும் ஒப்­பந்த தொழி­லா­ளர்­க­ளுக்கு பொருந்­தாது என மோடி அரசு தெரி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">நடை­மு­றை­யில் இருந்த தொழி­லா­ளர் நல சட்­டப்­படி 100 மற்­றும் 100-க்கு மேற்­பட்ட தொழி­லா­ளர்­கள் பணி செய்­யும் தொழிற்­சாலை அல்­லது நிறு­வ­னத்­தின் நிர்­வா­கம் ஆலையை பணி­யி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைப்­பது (Lay Off) அல்­லது தொழி­லா­ளர்­க­ளின் எண்­ணிக்­கையை குறைக்க நினைத்­தல் மற்­றும் ஆலை மூடல் போன்ற ஆலை நிர்­வா­கத்­தின் செயல்­பா­டு­க­ளுக்கு அர­சின் அனு­ம­தியை பெற வேண்­டும் என்று இருந்த சட்­டத்தை ஒன்­றிய மோடி அரசு 300 மற்­றும் 300க்கும் கீழ் தொழி­லா­ளர்­கள் பணி செய்­யும் தொழிற்­சா­லை­க­ளுக்கு Lay Off விடு­வ­தற்­கும், ஆட்­கு­றைப்பு செய்­வ­தற்­கும், மற்­றும் ஆலை மூட­லுக்­கும் அர­சின் அனு­மதி தேவை­யில்லை என மோடி அரசு நாடா­ளு­மன்­றத்­தில் சட்­டம் இயற்­றி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">இந்­திய ஒன்­றி­யத்­தில் உள்ள தொழி­லா­ளர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் 80 சத­வீ­தம் பேர் 300-க்கும் குறை­வான தொழி­லா­ளர்­கள் உள்ள தொழிற்­சா­லை­க­ளில்­தான் பணி­யில் உள்­ள­னர். மோடி அர­சின் இந்த புதிய சட்­டத்­தி­னால் பல கோடி தொழி­லா­ளர்­களை சமூக பாது­காப்­பின்­றி­யும், சட்ட பாது­காப்­பின்­றி­யும் மற்­றும் ஊதிய பாது­காப்­பின்­றி­யும் பணி செய்­யும் ஆபத்­தான சூழலை உரு­வாக்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">தொழி­லா­ளர்­க­ளின் அடிப்­படை உரி­மை­யான வேலை நிறுத்­த­மா­னது தொழிற்­சங்­கம் மூல­மா­கவோ அல்­லது தொழி­லா­ளர் கூட்­ட­மைப்பு மூல­மா­கவோ 15-நாட்­க­ளுக்கு முன் அறி­விப்பு கொடுக்க வேண்­டும் என்­பதை மோடி அரசு 60 நாட்­க­ளுக்கு முன்­ன­தா­கவே கொடுக்க வேண்­டும் என சட்­டம் மாற்­றப்­பட்­டுள்­ளது. இத­னால் தொழி­லா­ளர்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய தீர்வு கால­தா­ம­த­மாக்­கவே வழி­வகை செய்­வ­தோடு, வேலை­நி­றுத்த போராட்­டத்­தை­யும் நீர்த்­துப் போக செய்­யும் செய­லா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">தொழிற்­சங்­கங்­கள் நிறு­வு­வதை மோடி அர­சின் புதிய சட்­டங்­கள் மிக­வும் கடு­மை­யாக்­கி­யுள்­ளது. தற்­போது உள்ள சட்­டப்­படி ஏழு தொழி­லா­ளர்­கள் ஒன்று சேர்ந்து தனக்­கான சங்­கத்தை அமைத்­துக் கொள்­ள­லாம் என உள்­ளது. ஆனால் புதிய சட்­டத்­தில் மொத்த தொழி­லா­ளர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் 10 விழுக்­காட்­டி­னர் அல்­லது 100 தொழி­லா­ளர்­கள் இருந்­தால் மட்­டுமே சங்­கம் அமைக்க முடி­யும் என சட்­டத்தை மாற்­றி­யுள்­ள­னர். மேலும் இந்த சங்­கம் அங்­கீ­கா­ரம் பெற வேண்­டு­மா­னால் மொத்த தொழி­லா­ளர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் 51 விழுக்­காடு ஆத­ரவு பெற்­றால் மட்­டுமே அந்த சங்­க­மா­னது அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு நிர்­வா­கத்­தி­ன­ரு­டன் கலந்து பேசும் உரிமை உடை­ய­தாக கரு­தப்­ப­டும். சங்க அங்­கீ­கா­ரத்­திற்கு ரக­சிய வாக்­கெ­டுப்பு சம்­மந்­த­மாக சட்­டத்­தில் எது­வும் இடம் பெற­வில்லை. மாறாக சங்க அங்­கீ­கா­ரத்­திற்கு சரி­பார்ப்பு முறை (Verification Method) கடைப்­பி­டிக்­ கப்­ப­டும் என தெரி­வித்­தி­ருப்­பது, ஆலை முத­லா­ளி­கள் சங்­கங்­களை தங்­க­ளின் கைப்­பா­வை­யாக மாற்­றி­வி­டும் பேரா­பத்து உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">புதிய தொகுப்பு சட்­டத்­தில் கால நிர்­ண­யத்­து­டன் கூடிய வேலை முறையை (Fixed Employment) அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். இத்­திட்­டத்­தில் தொழி­லா­ளர்­க­ளின் வேலை­வாய்ப்பு காலம் ஆலை முத­லா­ளி­க­ளால் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது. இந்த முறை­யில் வேலைக்கு அமர்த்­தப்­ப­டும் தொழி­லா­ளர்­கள் தொடர்ந்து பணி கோரவோ, பணி நிரந்­த­ரம் கோரவோ, தொழிற் தக­ராறு எழுப்­பவோ மேலும் நீதி­மன்­றத்­தில் முறை­யீடு செய்ய முடி­யாது, இத­னால் தொழி­லா­ளர்­கள் பணி பாது­காப்­பற்­ற­வர்­க­ளா­க­வும், ஊதிய பாது­காப்­பற்­ற­வர்­க­ளா­க­வும், மற்­றும் சமூக பாது­காப்­பற்­ற­வர்­க­ளா­க­வும் உண்­டா­கும் சூழல் உரு­வாகி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">மோடி அர­சின் புதிய தொழி­லா­ளர் தொகுப்பு சட்­டத்­தில் தொழிற்­சா­லை­க­ளில் மேற்­பார்­வை­யா­ளர்­கள் யார் என்­பதை தெளி­வு­ ப­டுத்­தா­மல் எந்த ஒரு தொழி­லா­ளர் ரூ.18000/-க்கும் மேல் ஊதி­யம் பெரு­கி­றார்­களோ அவர் மேற்­பார்­வை­யா­ள­ராக கரு­தப்­ப­டு­வார் என­வும் அவர் தொழி­லாளி மற்­றும் பணி­யா­ளர் என்ற வரம்­பிற்கு வெளியே தள்­ளப்­ப­டு­வார் என­வும், மேலும் ஒரு தொழி­லா­ளி­யின் ஊதி­யம் மட்­டுமே மேற்­பார்­வை­யா­ளர் தகு­திக்கு தேவை என்­பதை மறுத்திருப்பது ஏற்­க­னவே உயர் நீதி­மன்­றங்­கள் மற்­றும் உச்ச நீதி மன்­றம் வழங்­கி­யுள்ள தீர்ப்­புக்கு எதி­ரா­ன­வை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">தொழி­லா­ளர்­க­ளின் சமூ­க­பா­து­காப்­பிற்­கான புதிய சட்ட தொகுப்­பில், அமைப்பு சார்ந்த மற்­றும் அமைப்பு சாரா தொழி­லா­ளர்­க­ளுக்கு சமூக பாது­காப்பு கொடுப்­ப­தாக கூறப்­பட்­டுள்­ளது. ஆனால் அமைப்­பு­சாரா தொழி­லா­ளர்­க­ளுக்கு வைப்­பு­நி­தியோ அல்­லது தொழி­லா­ளர் காப்­பீட்டு நிதி­யத்­திற்கு பங்­க­ளிப்பு வழங்க வழி­வகை செய்­யப்­ப­ட­வில்லை. இத­னால் 90 விழுக்­காடு அமைப்­பு­சாரா தொழி­லா­ளர்­க­ளின் நலன்­களை மோடி அரசு புறக்­க­ணித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">பா.ஜ.க. ஆட்­சி­யா­னது தொழி­லா­ளர்­கள் மற்­றும் விவ­சா­யி­ க­ளுக்கு விரோ­த­மா­க­வும், எதி­ரா­க­வும் தொடர்ந்து செயல்­பட்டு வரு­வ­தோடு, தொழி­லா­ளர்­வர்க்­கம் காலங்­கா­ல­மாக பெற்று வந்த உரி­மை­களை அழித்து, அடி­மைத்­த­னத்தை திணித்­துள்­ளது. மேலும் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மாநில அர­சு­களை மத்­திய புல­னாய்­வுத்­துறை (CBI) அம­லாக்­கத்­துறை (ED) வரு­மா­னத்­துறை (IT) போன்ற அமைப்­பு­கள் மூல­மாக பாஜக ஆட்சி செய்­யாத மாநி­லங்­களை தொடர்ந்து அச்­சு­றுத்தி வரு­வதை தொழி­லா­ளர்­வர்க்­கம் வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">தொழி­லா­ளர்­க­ளின் பாது­கா­வ­லர் கழக தலை­வ­ரின் கரத்தை வலுப்­ப­டுத்த ! கழக ஆட்சி மீண்­டும் மலர !! தொழி­லா­ளர்­வர்க்­கம் எப்­போ­தும் உறு­து­ணை­யாக நிற்­கும் !!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">எல்­லோ­ருக்­கும் ஏற்­றம், எல்­லோ­ருக்­கும் எல்­லாம் என்ற கோட்­பாட்­டின்­படி திரா­வி­ட­மா­டல் ஆட்சி நடத்­தி­வ­ரும்  தமிழ்­நாட்­டின் முதல் அமைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் பல லட்­சம் கோடி முத­லீ­டு­களை தமிழ்­நாட்­டிற்கு கொண்டு வந்து, பல நூற்­றுக்­க­ணக்­கான தொழிற்­சா­லை­களை உரு­வாக்கி, பல லட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பி­னை­யும் வழங்கி தமி­ழர்­க­ளின் முன்­னேற்­றத்­திற்­கா­க­வும், தமிழ்­நாட்டை தொழில் வளச்­சி­யில் முதன்மை மாநி­ல­மாக கொண்­டு­வ­ர­வும் மேலும் ஒரு டிரில்­லி­யன் பொரு­ளா­தார இலக்கு என்ற உயர்ந்த இலட்­சி­யத்தை அடைய இரவு பகல் பாரா­மல் அய­ராது உழைத்து வரும் கழக தலை­வர் தள­பதி அவர்­க­ளுக்­கும்,  துணை முதல்­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும் தொழி­லா­ளர் வர்க்­கம் என்­றென்­றும் உங்­க­ளது பின்­னால் அணி­வ­குத்து நிற்­போம் என தெரி­வித்­துக் கொள்­வ­தோடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">வரும் 2026 சட்­ட­மன்ற தேர்­த­லில் கழக தலை­வர் அவர்­க­ளின் ஆணைக்­கி­ணங்க தொழி­லா­ளர் தோழர்­க­ளும், பாட்­டா­ளி­வர்க்­க­மும் இரவு பகல் பாரா­மல், கண் துஞ்­சா­மல் ஒவ்­வொ­ரு­வ­ரும் உரி­மை­யோ­டும், உணர்­வோ­டும் உழைப்­போம், உழைப்­போம், வெல்­வோம். மீண்­டும் கழக தலை­வர் தலை­மை­யில் தொழி­லா­ளர் நல ஆட்சி அமைய உறு­தி­யேற்­போம் ! படைப்­போம் வர­லாறு !!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>