<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,69,957,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jan 01 2026 03:33:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260101T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="01012026-CBE-07" position.sequence="07" ex-ref="01012026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">ஈரோட்டில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,000 `கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’  வழங்கும் விழா!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="75">தன்னம்பிக்கையுடன் இருந்தால், ஆடுகளத்தில்    உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">விளையாட்டு வீரர்– வீராங்கனையர் இடையே</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup653264_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup653265_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Sportskitdcm_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="3Udhayasirsp_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="DEC30PHOTO_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (30.12.2025) ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அரியலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், இராமநாதபுரம், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த 4,824 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலா 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 6,890 டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அந்தியூர்.ப.செல்வராஜ், கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் வீரர், வீராங்கனைகள் இருந்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (30.12.2025) கோயம்புத்தூர் மாவட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 9.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உலகத்தரத்திலான அதிநவீன ஹாக்கி மைதானம் உள்பட 162.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 107 திட்டப் பணிகளை திறந்து வைத்து, 31.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 10,626 பயனாளிகளுக்கு 136.44 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அந்தியூர்.ப.செல்வராஜ், கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் வீரர், வீராங்கனைகள் இருந்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஈரோடு, ஜன. 1 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஈரோட்­டில் நடை­பெற்ற அரசு விழா­வில், ஈரோடு உள்­ளிட்ட 14 மாவட்­டங்­க­ளின் நகர்ப்­புற உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்கு, சுமார் 6,000 கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்டை உள்­ளாட்சி அமைப்­புப் பிர­தி­நி­தி­க­ளுக்கு துணை 
முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள்  வழங்கி, வீரர் வீராங்­க­னை­யரை வாழ்த்­திப் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">அப்­போது அவர், ``தமிழ்­நாட்டு வீரர்­கள் சாதிக்க, நம்­மு­டைய அரசு என்­றும் துணை­யாக இருக்­கும். ஆகவே, விளை­யாட்­டில் உங்­கள் முழு­க­வ­னத்­தைச் செலுத்­துங்­கள். தன்­னம்­பிக்­கை­யு­டன் இருந்­தால், 
ஆடு­க­ளத்­தில் உங்­கள் வெற்­றியை யாரா­லும் தடுக்க முடி­யாது. இதை­யெல்­லாம் மன­தில் வைத்­துக் கொண்டு இந்த கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்­டைப் பயன்­ப­டுத்­துங்­கள்’’  என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்­றிய வாழ்த்­து­ரை­  வரு­மாறு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விளை­யாட்­டுத் துறை­யின் சார்­பாக, இன்­றைக்கு ஈரோட்­டுக்கு வருகை தந்து, 14 மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த நகர்ப்­புற உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்கு `கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’ வழங்­கு­வ­தில் மிகுந்த மகிழ்ச்­சி­யும் பெரு­மை­யும் அடை­கி­றேன். முத­லா­வ­தாக இங்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய உங்­கள் அனை­வ­ருக்­கும் என் புத்­தாண்டு வாழ்த்­து­க­ளை­யும், பொங்­கல் வாழ்த்­து­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மகிழ்ச்சி – புத்­து­ணர்ச்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எப்­பொ­ழுது ஈரோட்­டிற்கு வந்­தா­லும், ஒரு தனி உணர்ச்­சி­யும் மகிழ்ச்­சி­யும் புத்­து­ணர்ச்­சி­யும் ஏற்­ப­டும். அதற்கு முழு­கா­ர­ணம் இது பெரி­யார் பிறந்த மண் என்­ப­து­தான். இங்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய விளை­யாட்டு வீரர்­கள் எடுக்­கின்ற பயிற்சி, போட்­டி­யில் உங்­களை வெற்­றி­பெ­றச் செய்­வ­தற்­கா­கத் துணை நிற்­கி­றது. அதே­போன்று பேர­றி­ஞர் அண்­ணா­வும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளும் இந்த ஈரோட்டு மண்­ணில்­தான் பெரி­யார் அவர்­க­ளி­டம் பயிற்சி எடுத்­தார்­கள். அவர்­க­ளுக்­கெல்­லாம் பயிற்சி கொடுத்த மண் இந்த ஈரோடு மாவட்­டம். அவர்­க­ளி­டத்­தில் எடுத்த பயிற்­சி­தான் இன்­றைக்­குத் தமிழ்­நாட்டை வெற்றி பெற வைத்­துக் கொண்­டி­ருக்­கி­றது, தொடர்ந்து வெற்றி பெற வைக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அந்­தப் பயிற்­சி­யைப் பாட­மா­கக் கொண்டு நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் செயல்­ப­டு­வ­தால்­தான், இன்­றைக்கு இந்­தி­யா­வி­லேயே நம்­மு­டைய தமிழ்­நாடு மிக­வும் பாது­காப்­பான ஒரு மாநி­ல­மா­க­வும், முன்­னே­றிய மாநி­ல­மா­க­வும் சிறப்­பா­கத் திகழ்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இன்­றைக்­குப் பல்­வேறு துறை­க­ளில் தமிழ்­நாடு எப்­படி முதன்­மை­யான மாநி­லம் என்று பெரு­மை­யோடு இருக்­கி­றதோ, அதே­போல நாம் அனை­வ­ரும் இன்­னும் பெரு­மைப்­ப­டும் அள­விற்கு விளை­யாட்­டுத் துறை­யி­லும் இந்­தி­யா­வி­லேயே தலை­சி­றந்த மாநி­ல­மா­கத் தமிழ்­நாடு விளங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது.அதற்கு நம்­மு­டைய அர­சின் முயற்சி மட்­டுமே கார­ண­மல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மேடையே ஒரு சாட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இங்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய விளை­யாட்டு வீரர்­கள், தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய அனைத்து விளை­யாட்டு வீரர்­கள், அவர்­க­ளின் பெற்­றோர்­கள் மற்­றும் பயிற்­சி­யா­ளர்­கள் என இவர்­கள் அனை­வ­ருமே இதற்­குக் கார­ணம். நம் அர­சின் முயற்சி, விளை­யாட்டு வீரர்­க­ளின் பயிற்சி – இவை­தாம் இன்­றைக்­குத் தமிழ்­நாட்­டி­லி­ருந்து ஏரா­ள­மான வீரர்­க­ளை­யும் வீராங்­க­னை­க­ளை­யும் உரு­வாக்கி வரு­கின்­றன. அதற்கு இங்­கி­ருக்­கக்­கூ­டிய இந்த மேடையே ஒரு சாட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த ஈரோடு மண்­ணைச் சேர்ந்த, சாத­னை­கள் பல படைத்த இரண்டு வீராங்­க­னை­கள் இங்கே மேடை­யில் அமர்ந்­தி­ருக்­கி­றார்­கள். ஜிம்­னாஸ்­டிக்ஸ் வீராங்­கனை தங்கை சிநேகா வந்­தி­ருக்­கி­றார். அவர் எவ்­வ­ளவு தன்­னம்­பிக்­கை­யு­டன் பேசி­னார் என்­ப­தற்கு, அவர் விளை­யாட்­டுப் பயிற்சி எடுத்­த­போது அவ­ருக்­குக் கிடைத்த அனு­ப­வமே முக்­கி­யக் கார­ணம்.இன்­றைக்­குப் பேசும் பொழுது அவர் தன்­னு­டைய ஊரான கரட்­டுப்­பா­ளை­யத்­திற்கு நான் வர வேண்­டும் என்று வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார். நிச்­ச­ய­மாக அடுத்த முறை வரும் பொழுது தங்கை சிநே­கா­வின் வீட்­டிற்கு நான் சும்மா வர­மாட்­டேன், உண­வ­ருந்­து­வ­தற்­காக வரு­வேன். ஈரோடு பெரிய கரட்­டுப்­பா­ளை­யத்­தி­லி­ருந்து புறப்­பட்டு, இன்­றைக்கு இந்­தி­யா­வின் முக்­கி­ய­மான ஜிம்­னாஸ்­டிக்ஸ் வீராங்­க­னை­க­ளில் ஒரு­வ­ரா­கத் திகழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார் தங்கை சிநேகா அவர்­கள். அவ­ருக்­கும் அவ­ரு­டைய சகோ­த­ர­ருக்­கும், தொலைக்­காட்சி வழி­யா­கப் பார்த்­துக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய அவ­ரு­டைய பெற்­றோர்­கள் அனை­வ­ருக்­கும் நாம் கைதட்­டல் மூல­மாக வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொள்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">எஸ்.டி.ஏ.டி (SDAT) மாணவி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­னொரு கூடு­தல் பெருமை, அவர் எஸ்.டி.ஏ.டி (SDAT) மாணவி என்­பது. இது எங்­க­ளது துறைக்­குக் கிடைத்த பெருமை. அவர் இன்­னும் பல சாத­னை­க­ளைப் படைப்­பார். தங்கை நித்யா ராம­ராஜ் அவர்­க­ளும் இங்கு வந்­தி­ருக்­கி­றார்­கள். இவ­ரும் நம் துறை­யின் எஸ்.டி.ஏ.டி விடுதி மாணவி என்­ப­தில், எங்­க­ளுக்­குக் கூடு­தல் பெருமை. இன்­றைக்கு சர்­வ­தேச அள­வில் தட­க­ளத்­தில் சிறந்து விளங்­கிக் கொண்­டி­ருக்­கி­றார் சகோ­தரி நித்யா ராம­ராஜ் அவர்­கள். மற்ற வீரர்­க­ளுக்கு, குறிப்­பாக, பெண்­கள் விளை­யாட்­டில் சாதிக்க வேண்­டும் என்­ப­தற்கு, இவர்­கள் இரு­வ­ரும் முன்­மா­தி­ரி­யா­கத் திகழ்­கி­றார்­கள். தங்­கை­கள் இரு­வ­ருக்­கும் நாம் கைதட்­டல் மூல­மாக வாழ்த்­து­க­ளைத் தெரி­விப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு இந்­தக் `கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’ உப­க­ர­ணங்­களை விளை­யாட்டு வீரர்­களை அழைத்து வழங்­கு­கி­றோம். அவர்­களை அழைத்து கௌர­வப்­ப­டுத்­து­வது, உங்­கள் அனை­வ­ருக்­கும் ஒரு உந்து சக்­தி­யாக இருக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான். அது­மட்­டு­மல்ல, உங்­க­ளி­ட­மி­ருந்து இன்­னும் நிறைய நித்யா ராம­ராஜ்­க­ளும் சிநே­காக்­க­ளும் உரு­வாக வேண்­டும் என்­கிற நோக்­கத்­தில்­தான் இந்­தத் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்தி வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">13,000 ஊராட்­சி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த ஆண்டு இந்­தத் திட்­டத்­தைக் கிராம ஊராட்­சி­க­ளுக்கு வழங்­கி­னோம். கிட்­டத்­தட்ட 13,000 ஊராட்­சி­க­ளுக்­குக் கொண்டு சேர்த்­தோம். இந்த விளை­யாட்டு உப­க­ர­ணத் தொகுப்­பில் கிட்­டத்­தட்ட 30 வகை­யான விளை­யாட்­டு­களை விளை­யாட முடி­யும். இதற்கு கிரா­மங்­க­ளில் மிகப்­பெ­ரிய வர­வேற்பு கிடைத்­தது. அத­னைத் தொடர்ந்து நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள், இது கிரா­மங்­க­ளுக்கு மட்­டு­மல்ல, நக­ரங்­க­ளுக்­கும் கொண்டு சேர்க்க வேண்­டும் என்று திட்­டத்தை விரி­வாக்­கம் செய்­தார்­கள். அதன் அடிப்­ப­டை­யில்­தான் கடந்த மாதம் முதல் நகர்ப்­புற உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்கு வழங்­கத் தொடங்­கி­னோம். அந்த வகை­யில், இன்­றைக்கு 14 மாவட்­டங்­க­ளுக்­குச் சுமார் 6,000 தொகுப்­பு­கள் இந்த நிகழ்ச்­சி­யின் மூல­மா­கச் சென்­ற­டைய உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அனை­வ­ரும் விளை­யாட்­டுத் திட­லுக்கு வர வேண்­டும், அனை­வ­ரும் விளை­யாட வேண்­டும். படிப்பு எவ்­வ­ளவு முக்­கி­யமோ அதே அள­வுக்கு உடற்­ப­யிற்­சி­யும் விளை­யாட்­டும் முக்­கி­யம். அப்­பொ­ழு­து­தான் உட­லும் உள்­ள­மும் உறு­தி­யாக இருக்­கும். இன்­றைக்கு நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் விளை­யாட்­டுத் துறை­யின் வளர்ச்­சிக்­காக ஏரா­ள­மான திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி வரு­கி­றார். ஒவ்­வொரு சட்­ட­மன்­றத் தொகு­திக்­கும் ஒரு மினி ஸ்டேடி­யம் தயா­ராகி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ஹாக்கி விளை­யாட்­டுத் திடல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­றைக்­குக் காலை­யில் கூட கோயம்­புத்­தூர் மாந­க­ராட்­சி­யில் 10 கோடி ரூபாய் மதிப்­பில், புதிய சர்­வ­தேச அள­வி­லான ஹாக்கி விளை­யாட்­டுத் திட­லைத் திறந்து வைத்­து­விட்டு, இந்த நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருக்­கி­றேன். ஒரு மாதத்­திற்கு முன்பு உல­கக் கோப்பை ஜூனி­யர் ஹாக்கி போட்டி, முதல் முறை­யாக இந்­தி­யா­வில் நடை­பெற்­றது. அதி­லும் முதன்­மு­றை­யா­கத் தமிழ்­நாட்­டில் சென்னை மற்­றும் மது­ரை­யில் நடத்­திக் காட்­டி­னோம். இனி தேசிய மற்­றும் சர்­வ­தேச அள­வி­லான ஹாக்கி போட்­டி­கள் கோவை­யி­லும் அடிக்­கடி நடக்­கும். நம்­மு­டைய அரசு பொறுப்­பேற்­றது முதல், தொடர்ந்து ஏரா­ள­மான சர்­வ­தேச மற்­றும் தேசிய அள­வி­லான போட்­டி­களை நடத்தி வரு­கி­றோம். ஸ்குவாஷ் உல­கக் கோப்பை, வேர்ல்ட் சர்­பிங் லீக், ஏசி­யன் கப் ஹாக்கி சாம்­பி­யன் ஷிப் ஆகி­ய­வற்றை நடத்­தி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை செஸ் கிராண்ட் மாஸ்­டர்ஸ் போட்­டி­யைச் சிறப்­பாக நடத்­திக் காட்­டி­னோம். முதன்­மு­றை­யாக `ஃபார்­முலா–4’ இரவு நேரப் பந்­த­யத்தை, சென்­னை­யில் வெற்­றி­க­ர­மாக நடத்­தி­னோம். சமீ­பத்­தில், ஆண்­கள் ஜூனி­யர் ஹாக்கி உல­கக் கோப்­பை­யை­யும் சென்னை மற்­றும் மது­ரை­யில் நடத்­தி­னோம். இதற்­காக மது­ரை­யில் சர்­வ­தேச தரத்­தி­லான ஹாக்கி விளை­யாட்­டுத் திடலை ஆறே மாதங்­க­ளில் 20 கோடி ரூபாய் செல­வில் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் அமைத்­துக் கொடுத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">எங்­க­ளுக்கு ஒரு இலக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">`தமிழ்­நாடு சாம்­பி­யன்ஸ் பவுண்­டே­ஷன்’ மூல­மா­கப் போட்­டி­க­ளில் வெற்றி பெறு­ப­வர்­க­ளுக்கு அரசு உய­ரிய ஊக்­கத் தொகையை வழங்­கு­கி­றது. ஆனால், போட்­டிக்­குச் செல்­வ­தற்கு முன்பே, ஒரு வீர­ருக்­குத் தேவை­யான பயிற்சி, பய­ணச் சீட்டு, உணவு போன்­ற­வற்­றுக்கு உத­வு­வ­தற்­கா­கவே இந்த அறக்­கட்­டளை தொடங்­கப்­பட்­டது. அதன் மூல­மா­க­வும் வீரர்­க­ளுக்­குத் தொடர்ந்து நிதி­யு­தவி வழங்­கு­கி­றோம். அது­மட்­டு­மல்ல, 3 சத­வி­கித இட ஒதுக்­கீட்­டின் கீழ், விளை­யாட்­டுத் துறை­யி­ன­ருக்­கான அரசு வேலை­வாய்ப்­பை­யும் வழங்­கு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­வரை எந்த அர­சி­லும் இல்­லாத அள­விற்கு முதன்­மு­றை­யா­கக் கடந்த ஆண்டு 100 விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு அரசு மற்­றும் பொதுத்­து­றை­யில் வேலை­வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­துள்­ளோம். முத­ல­மைச்­சர் அவர்­கள் எங்­க­ளுக்கு ஒரு இலக்கு கொடுத்­துள்­ளார்­கள் – 100 அல்ல, 125 விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு அரசு வேலை­வாய்ப்பை உறுதி செய்ய வேண்­டும் என்­பதே அந்த இலக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒவ்­வொரு ஆண்­டும் முத­ல­மைச்­சர் கோப்பை (CM Trophy) விளை­யாட்­டுப் போட்­டி­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. இதில் பரி­சுத் தொகை­யாக மட்­டும் ஒவ்­வொரு ஆண்­டும் 30 கோடி ரூபாய் அள­விற்­கான நிதியை முத­ல­மைச்­சர் ஒதுக்­கி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சியை `விளை­யாட்­டுத் துறை­யின் பொற்­கா­லம்’ என்று நாம் மட்­டும் கூற­வில்லை, இன்­றைக்கு ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வும் பிற மாநி­லங்­க­ளும் நம்­மைப் புகழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. `விளை­யாட்டை ஊக்­கு­விக்­கும் சிறந்த மாநி­லம்’ (Best State for Promoting Sports) என்ற விரு­தைத் தொடர்ந்து நம்­மு­டைய தமிழ்­நாடு அர­சுக்கு ‘தி ஹிந்து ஸ்போர்ட் ஸ்டார்’, சி.ஐ.ஐ. (CII),எஃப்.ஐ.சி.சி.ஐ. (FICCI) போன்ற அமைப்­பு­கள் வழங்கி வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த வெற்­றிப்­ப­ய­ணம் தொடர வேண்­டும். தமிழ்­நாட்டு வீரர்­கள் சாதிக்க நம்­மு­டைய அரசு என்­றும் துணை­யாக இருக்­கும். ஆகவே, விளை­யாட்­டில் உங்­கள் முழு கவ­னத்­தைச் செலுத்­துங்­கள். தன்­னம்­பிக்­கை­யு­டன் இருந்­தால் ஆடு­க­ளத்­தில் உங்­கள் வெற்­றியை யாரா­லும் தடுக்க முடி­யாது. இதை­யெல்­லாம் மன­தில் வைத்­துக் கொண்டு இந்­தக் கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்­டைப் பயன்­ப­டுத்­துங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த உப­க­ர­ணங்­க­ளைப் பத்­தி­ர­மா­கப் பரா­ம­ரி­யுங்­கள். மாவட்ட ஆட்­சி­யர்­கள், நக­ராட்சி ஆணை­யர்­கள், பேரூ­ராட்சி செயல் அலு­வ­லர்­கள் இதனை முறை­யா­கப் பயன்­ப­டுத்­து­வ­தைத்தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன். இந்­தக் கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்­டைப் பெற்­றுக்­கொண்ட அனை­வ­ருக்­கும் என் வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்த்­திப் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அமைச்­சர்­கள் சு. முத்­து­சாமி, மு.பெ.சாமி­நா­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அந்­தி­யூர் செல்­வ­ராஜ், கே.இ.பிர­காஷ், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் சந்­தி­ர­கு­மார், ஏ.ஜி.வெங்­க­டா­ச­லம், செந்­தில் பாலாஜி, மாந­க­ராட்சி மேயர் நாக­ரத்­தி­னம் சுப்­பி­ர­மணி, இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை அரசு கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர் முனை­வர் அதுல்யா மிஸ்ரா ஐ.ஏ.எஸ்., விளை­யாட்டு மேம்­பாட்டு ஆணைய உறுப்­பி­னர் செய­லர் மேக­நாத ரெட்டி ஐ.ஏ.எஸ்., மாவட்ட ஆட்­சித் தலை­வர் ச.கந்­த­சாமி ஐ.ஏ.எஸ்., மாந­க­ராட்­சித் துணை மேயர் செல்­வ­ராஜ், மாந­க­ராட்சி ஆணை­யர் அர்­பித் ஜெயின் ஐ.ஏ.எஸ்., மாவட்ட வரு­வாய் அலு­வ­லர் சாந்­த­கு­மார், தட­கள வீராங்­கனை நித்யா, ஜிம்­னாஸ்­டிக் வீராங்­கனைசிநேகா உள்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="0" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள், இது கிரா­மங்­க­ளுக்கு மட்­டு­மல்ல, நக­ரங்­க­ளுக்­கும் கொண்டு சேர்க்க வேண்­டும் என்று திட்­டத்தை விரி­வாக்­கம் செய்­தார்­கள். அதன் அடிப்­ப­டை­யில்­தான் கடந்த மாதம் முதல் நகர்ப்­புற உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்கு வழங்­கத் தொடங்­கி­னோம். அந்த வகை­யில், இன்­றைக்கு 
14 மாவட்­டங்­க­ளுக்­குச் சுமார் 6,000 
தொகுப்­பு­கள் இந்த நிகழ்ச்­சி­யின் மூல­மா­கச் சென்­ற­டைய உள்­ளன.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>