<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,71,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jan 01 2026 03:53:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260101T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="01012026-TRY-05" position.sequence="05" ex-ref="01012026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">கோவையில் 11 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.137 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular"  size="32">தமிழ்நாட்டின் மக்களுக்குத் தொடர்ந்து உழைத்திட,</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="75">‘திராவிட மாடல்’ அரசு 2.0 அமைந்திட ஆதரவு தாருங்கள்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">கோவையில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில்,</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup652287_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="DEC30PHOTO_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="DEC30PHOTO1_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நேற்று முன்தினம் (30.12.2025) கோயம்புத்தூர் மாவட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 9.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உலகத்தரத்திலான அதிநவீன ஹாக்கி மைதானம் உள்பட 162.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 107 திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 31.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 10,626 பயனாளிகளுக்கு 136.44 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 
முனைவர் கணபதி ப.ராஜ்குமார், க.ஈஸ்வரசாமி, கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்  வி.செந்தில் பாலாஜி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">கோவை, ஜன. 1 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">கோவை­யில் நடை­பெற்ற மாபெ­ரும் அரசு 
விழா­வில், சுமார் 11 ஆயி­ரம் பய­னா­ளி­க­ளுக்கு ரூ.137 கோடி மதிப்­பி­லான பல்­வேறு நலத்­திட்ட உத­வி­களை, துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கி வாழ்த்­திப் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">அப்­போது அவர், 1,500 மக­ளிர் சுய உத­விக்­குழு சகோ­த­ரி­க­ளுக்கு வங்­கிக் கடன் இணைப்­பு­கள் – 1500 பொது­மக்­க­ளுக்கு வீட்­டு­மனைப் பட்­டாக்­கள் – 211 
மாற்­றுத் திற­னாளி சகோ­தர சகோ­த­ரி­க­ளுக்கு இணைப்­புச் சக்­க­ரம்  பொருத்­தப்­பட்­டுள்ள ஸ்கூட்­டர்­கள் வாக­னம் மற்­றும் செவித்­தி­றன் கரு­வி­கள் – 
கலை­ஞர் கனவு இல்­லம் திட்­டத்­தின் கீழ், ஆணை­கள் உட்­பட பல்­வேறு நலத்­திட்ட உத­வி­களை வழங்கி வாழ்த்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">இந்த நிகழ்­வின் போது, ரூ.163 கோடி மதிப்­பில் பணி நிறை­வு­பெற்ற திட்­டங்­களைத் திறந்து வைத்து, ரூ.32 கோடி மதிப்­பி­லான புதிய பணி­க­ளுக்கு 
அடிக்­கல் நாட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் 
ஆற்­றிய வாழ்த்­து­ரை­ வரு­மாறு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கோவை மாவட்­டத்­தில் நடை­பெ­று­கின்ற இந்­தச் சிறப்­பான அரசு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு, பல்­வேறு நலத்­திட்ட உத­வி­களை வழங்­கு­வ­தில் உண்­மை­யி­லேயே மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன். முத­லில் வந்­தி­ருக்­கக்­கூ­டிய உங்­கள் அனை­வ­ருக்­கும் என் அட்­வான்ஸ் புத்­தாண்டு மற்­றும் பொங்­கல் வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இன்­றைக்­குக் கோவை­யில் சுமார் 11,000 பய­னா­ளி­க­ளுக்கு 137 கோடி ரூபாய் அள­வி­லான நலத்­திட்ட உத­வி­களை இந்த நிகழ்ச்­சி­யில் வழங்க இருக்­கி­றோம். அதே­போல 163 கோடி ரூபாய் மதிப்­பில் நிறைவு பெற்­றுள்ள பணி­களை எல்­லாம் இன்­றைக்கு மக்­கள் பயன்­பாட்­டிற்கு நாம் அளிக்க இருக்­கி­றோம். மேலும் 32 கோடி ரூபாய் மதிப்­பி­லான பணி­க­ளுக்கு அடிக்­கல் நாட்­டித் துவக்கி வைக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கோவை மீது தனிப் பாசம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ராக இருக்­கட்­டும், நம்­மு­டைய மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­க­ளாக இருக்­கட்­டும், என்­றைக்­குமே இந்த கோவை மீது அவர்­க­ளுக்­குத் தனிப் பாசம் உண்டு. நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் பொறுப்­பேற்ற நாள் முதல் அடிக்­கடி சொல்­கின்ற ஒரே­யொரு விஷ­யம், ``வாக்­க­ளித்த மக்­கள் மகி­ழும்­படி மட்­டு­மல்ல, வாக்­க­ளிக்­காத மக்­க­ளும் `நமக்கு வாக்­க­ளிக்­கா­மல் விட்­டு­விட்­டோமே’ என்று வருந்­து­கின்ற அள­விற்கு நான் ஆட்சி செய்­வேன்’’ என்­ப­து­தான். அந்த அடிப்­ப­டை­யில் இன்­றைக்கு ஒட்­டு­மொத்த இந்­தி­யாவே தமிழ்­நாட்டை உற்­று­நோக்­கு­கின்ற வகை­யில், நம்­மு­டைய முத­ல­மைச்­சர் இந்­தத் திரா­விட மாடல் ஆட்­சி­யைச் சிறப்­பாக வழி­ந­டத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மக­ளிர் மேம்­பாடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">குறிப்­பாக, மக­ளிர் மேம்­பாட்­டிற்­காக ஏரா­ள­மான திட்­டங்­களை நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார். ஆட்­சிக்கு வந்­த­வு­டன் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் இட்ட முதல் கையெ­ழுத்து மக­ளிர்க்­கான விடி­யல் பய­ணத் திட்­டத்­திற்­குத்­தான். விடி­யல் பய­ணத் திட்­டத்­தின் மூலம் இந்த நான்­கரை ஆண்­டு­க­ளில் மக­ளிர் சுமார் 900 கோடி பய­ணங்­களை மேற்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஒவ்­வொரு மக­ளி­ரும் மாதம் குறைந்­தது 1,000 ரூபாய் வரை இந்­தத் திட்­டத்­தின் மூலம் சேமிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">காலை உண­வுத் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தாய்­மார்­கள் தின­மும் காலை­யில் எழுந்து குழந்­தை­க­ளுக்­குச் சமைப்­ப­தற்­குச் சிர­மப்­ப­டக் கூடாது என்று அர­சுப் பள்­ளி­யில் ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரை பயி­லும் அனைத்­துக் குழந்­தை­க­ளுக்­கும் முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டத்தை நம்­மு­டைய முத­ல­மைச்­சர் தொடங்கி வைத்­தார். இந்­தத் திட்­டத்­தின் மூலம் இன்று ஒவ்­வொரு நாளும் சுமார் 20 லட்­சம் குழந்­தை­கள் பயன்­பெ­று­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் புது­மைப் பெண் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்­கள். குழந்­தை­கள் பள்­ளிக்­கூ­டத்­திற்கு வந்­தால் மட்­டும் போதாது, உயர்­கல்வி படிக்க வேண்­டும் என்­ப­தற்­காக, அர­சுப் பள்­ளி­யில் படித்து எந்­தக் கல்­லூ­ரி­யில் சேர்ந்து பயின்­றா­லும் அவர்­க­ளுக்­குக் கல்வி ஊக்­கத் தொகை­யாக மாதம் 1,000 ரூபாய் வழங்­கும் திட்­டத்தை உரு­வாக்­கி­னார். அதே­போல் மாண­வர்­க­ளுக்­கா­கத் தமிழ்ப் புதல்­வன் திட்­டத்­தை­யும் துவக்கி வைத்­தார். இதன் மூலம் ஒவ்­வொரு ஆண்­டும் 8 லட்­சம் மாணவ மாண­வி­கள் பயன்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மடிக்­க­ணி­னி­கள் 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இன்று இன்­னொரு முக்­கி­ய­மான விஷ­யம், கடந்த சட்­ட­மன்­றக் கூட்­டத்­தொ­ட­ரில் முத­ல­மைச்­சர் அவர்­கள் அறி­வித்­தார். கல்­லூரி மாணவ மாண­வி­க­ளின் கல்­விக்­குத் துணை நிற்­கின்ற வகை­யில், இன்­னும் சில நாட்­க­ளில் இந்த வரு­டம் மட்­டும் 10 லட்­சம் அதி­ந­வீன மடிக்­க­ணி­னி­கள் மாண­வர்­க­ளுக்கு வழங்க இருக்­கி­றோம். இதை மாண­வர்­கள் சிறப்­பா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள என் வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் 
கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவை எல்­லா­வற்­றிற்­கும் மேலாக இந்­தி­யாவே திரும்­பிப் பார்க்­கின்ற ஒரு திட்­டம், அது­தான் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம். இன்று தமிழ்­நாடு முழு­வ­தும் ஒரு கோடியே 30 லட்­சம் மக­ளி­ருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்­கப்­பட்டு வரு­கி­றது. இது­மட்­டு­மல்ல, இந்த கோவை மாவட்­டத்­திற்­குத் தொடர்ந்து ஏரா­ள­மான நலத்­திட்­டங்­களை நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் அறி­வித்­துச் செயல்­ப­டுத்­தி­யும் வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">செம்­மொ­ழிப் பூங்கா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சமீ­பத்­தில் கோவைக்கு வந்த நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் செம்­மொ­ழிப் பூங்­கா­வைத் திறந்து வைத்­துச் சிறப்­பித்­தார். நான் இன்று இங்கு வரு­வ­தற்கு முன்­னால், கோவைக்கு நம்­மு­டைய அர­சின் புத்­தாண்­டுப் பரி­சாக 10 கோடி ரூபாய் மதிப்­பில் புதிய ஹாக்கி மைதா­னத்­தைத் திறந்து வைத்­தி­ருக்­கி­றேன். இனி சர்­வ­தேச மற்­றும் தேசிய அள­வி­லான ஹாக்­கிப் போட்­டி­கள் சென்­னை­யில் மட்­டு­மல்ல, மது­ரை­யில் மட்­டு­மல்ல, உங்­க­ளு­டைய கோவை­யி­லும் அடிக்­கடி நடை­பெ­றும் என்ற வாக்­கு­று­தியை வழங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கோவை சிங்­கா­நல்­லூர் ஒண்­டிப்­பு­தூர் எஸ்.ஐ.ஹெச்.எஸ் (SIHS) குடி­யி­ருப்­புப் பகு­தி­யில் உயர்­மட்ட ரயில்வே மேம்­பா­லம் கட்ட 2010–ஆம் ஆண்டு கலை­ஞ­ரின் ஆட்­சிக் காலத்­தில் அடிக்­கல் நாட்­டப்­பட்­டது. முந்­தைய பத்­தாண்டு ஆட்சி செய்­த­வர்­கள், அந்த மேம்­பா­லப் பணி­யைக் கிடப்­பில் போட்­டு­விட்­டார்­கள். நம்­மு­டைய அரசு சுமார் 56 கோடி ரூபாய் செல­வில், இன்­றைக்­குக் கட்டி முடித்­தி­ருக்­கி­றது. அதை­யும் இன்று இந்த விழா­வில், உங்­கள் முன்­னால் நான் திறந்து வைத்­துள்­ளேன். இந்த மேம்­பா­லம் மூல­மா­கச் சுமார் 42,000 கோவை மக்­கள் பயன்­பெற இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மேலும் கோவை­யில் 300 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், தந்தை பெரி­யார் அறி­வி­யல் மையத்­திற்­கான கட்­டு­மா­னப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. கோவை மாந­க­ராட்சி பகு­தி­யில் 2,000 கோடி ரூபாய் மதிப்­பில் பாதா­ளச் சாக்­க­டைப் பணி­கள், 620 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 9,000 சாலைப் பணி­கள் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. கோவை மாவட்­டத்­தில், இரண்டு முத­லீட்­டா­ளர் மாநா­டு­களை நடத்தி சுமார் 7,100 கோடி ரூபாய் அள­வி­லான முத­லீ­டு­களை நாம் ஈர்த்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">முதன்மை மாநி­லம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">திரா­விட மாடல் அர­சின் இது­போன்ற திட்­டங்­க­ளால் இன்று நம்­மு­டைய தமிழ்­நாடு 11.19 சத­வி­கித வளர்ச்­சி­யோடு, இந்­தி­யா­வி­லேயே முதன்மை மாநி­ல­மா­கத் திகழ்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இந்த நலத்­திட்­டங்­க­ளின் தொடர்ச்­சி­யா­கத்­தான் இன்று 1,500 பேருக்கு வீட்­டு­ம­னைப் பட்­டாவை வழங்க இருக்­கி­றோம். இந்த அர­சைப் பொறுத்­த­வரை பட்டா என்­பது சலுகை கிடை­யாது, அது உங்­க­ளு­டைய உரிமை. இந்த நான்­கரை ஆண்­டு­க­ளில் மட்­டும் சுமார் 20 லட்­சம் பட்­டாக்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்த நிகழ்ச்­சி­யில் 1,500 மக­ளிர் சுயஉத­விக் குழுக்­க­ளுக்கு வங்­கிக் கடன் இணைப்­பு­களை வழங்க இருக்­கி­றோம். சில மாதங்­க­ளுக்கு முன்பு திரு­வா­ரூர் மாவட்­டத்­திற்­குச் சென்­றி­ருந்­த­போது, மக­ளிர் சுய உத­விக் குழுக்­க­ளைச் சேர்ந்த சகோ­த­ரி­கள் ஒரு வேண்­டு­கோள் வைத்­தார்­கள். அரசு ஊழி­யர்­க­ளைப் போல தங்­க­ளுக்­கும் அடை­யாள அட்டை வழங்க வேண்­டும் என்று கேட்­டார்­கள். அதை முத­ல­மைச்­ச­ரி­டம் சொன்­ன­வு­டன் உட­ன­டி­யாக அங்­கீ­க­ரித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அந்த வகை­யில்­தான் இன்று தமிழ்­நாடு முழு­வ­தும் குழுச் சகோ­த­ரி­க­ளுக்­குப் புகைப்­ப­டத்­து­டன் கூடிய அடை­யாள அட்­டை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இதன் மூலம் குழுச் சகோ­த­ரி­கள் தங்­க­ளு­டைய தயா­ரிப்­புப் பொருட்­களை 25 கிலோ வரை 100 கிலோ­மீட்­டர் தூரம் அர­சுப் பேருந்­து­க­ளில் கட்­ட­ண­மில்­லா­மல் எடுத்­துச் செல்ல முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நலத்­திட்ட உத­வி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்த நிகழ்ச்­சி­யில் 211 மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­களை வழங்க இருக்­கி­றோம். கலை­ஞர் அவர்­கள்­தான் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு என்று தனித் துறையை உரு­வாக்­கி­னார். கலை­ஞர் வழி­யில் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதி செய்­யும் சட்­டத்­தைக் கொண்டு வந்­தார்­கள். இதன் மூலம் இனி மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் மற்­ற­வர்­க­ளுக்­கா­க­வும் குரல் கொடுக்­கக்­கூ­டிய நிலை­யைத் திரா­விட மாடல் அரசு உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">`எல்­லா­ருக்­கும் எல்­லாம்’ என்ற திட்­டங்­களை நிறை­வேற்றி வரு­வ­தால்­தான் திரா­விட மாடல் அர­சின் மீது பொது­மக்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய வர­வேற்பு இருக்­கி­றது. உங்­க­ளுக்­கா­கத் தொடர்ந்து உழைக்க நம்­மு­டைய அரசு தயா­ராக இருக்­கி­றது. இந்­தத் திரா­விட மாடல் அரசு தொடர நீங்­கள் உங்­கள் ஆத­ரவை வழங்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">விளை­யாட்டு வீரர்­கள் இந்த ஹாக்கி மைதா­னத்­தைச் சிறப்­பா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு, சர்­வ­தேச அள­வில் புகழ்­பெற்ற வீரர்­க­ளாக உரு­வெ­டுக்க வேண்­டும் என்று வாழ்த்தி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் வாழ்த்­து­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அமைச்­சர் ராஜ­கண்­ணப்­பன், முன்­னாள் அமைச்­சர் செந்­தில் பாலாஜி, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கண­பதி ராஜ்­கு­மார், பிர­காஷ், ஈஸ்­வ­ர­சாமி, தமிழ்­நாடு தூய்­மைப் பணி­யா­ளர்­கள் நல வாரி­யத் தலை­வர் துப்­பம்­பட்டி ஆறுச்­சாமி, துணைத் தலை­வர் கனி­மொழி, மாந­க­ராட்சி மேயர் ரங்­க­நா­யகி ராமச்­சந்­தி­ரன், துணை மேயர் வெற்­றிச்­செல்­வன், மாவட்ட ஆட்­சித் தலை­வர் பவன்­கு­மார் ஐ.ஏ.எஸ்., மாந­க­ராட்சி ஆணை­யர் சிவ­குரு பிர­பா­க­ரன் ஐ.ஏ.எஸ்., கூடு­தல் ஆட்­சி­யர் சங்­கீத் பல்­வந்த் ஐ.ஏ.எஸ்., மாவட்ட வரு­வாய் அலு­வ­லர் நாரா­ய­ணன், மண்­ட­லக்­குழு தலை­வர் தெய்­வானை தமிழ்­மறை, கழக நிர்­வா­கி­கள் தள­பதி முரு­கே­சன், தொண்­டா­முத்­தூர் ரவி, செந்­த­மிழ்ச்­செல்­வன், ராஜீவ்­காந்தி, கோட்டை அப்­பாஸ், வ.ம.சண்­மு­க­சுந்­த­ரம், அசோக் பாபு, கார்த்­திக் செல்­வ­ராஜ், அரசு அதி­கா­ரி­கள் அலு­வ­லர்­கள் உள்­பட பல­ரும் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>