<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,68,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Dec 31 2025 22:20:02 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260101T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="01012026-TRY-10" position.sequence="10" ex-ref="01012026-TRY-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">திரா­வி­டத் தத்­து­வத்தை அடுத்த தலை­மு­றைக்­கும் கொண்டு செல்­லத் தகு­தி­யா­ன­வர் உத­ய­நிதி ஸ்டாலின்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="104">எதிர்­கா­லத்­தில் இந்த இயக்­கத்தை வழி­ந­டத்­தத் தகு­தி­யுள்ள தம்பி, நீ வா !</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">திரு­வண்­ணா­மலை – கழக இளை­ஞர் அணி வடக்கு மண்­டல நிர்­வா­கி­கள் சந்­திப்­பில் ஆ.இராசா எம்.பி. உரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="05bw_10_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">திரு­வண்­ணா­மலை, ஜன. 1–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">திரு­வண்­ணா­ம­லை­யில் நடை­பெற்ற – கழக 
இளை­ஞ­ரணி வடக்கு மண்­டல  நிர்­வா­கி­கள் 
சந்­திப்­பில் – கழக துணைப் பொதுச் செய­லா­ளர்ஆ.இராசா எம்.பி. உரை­யாற்­று­கை­யில், “திரா­வி­டத்தத்­து­வத்தை அடுத்த தலை­மு­றைக்­கும் கொண்டு செல்­லத் தகு­தியா­ன­வர் உத­ய­நிதி ஸ்டாலின்” என்­றும், “எதிர்­கா­லத்­தில் இந்த இயக்­கத்தை வழி­நடத்­தத் தகு­தி­யுள்ள தம்பி, நீ வா!” என்­றும் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இந்நிகழ்ச்சியில் கழக துணைப் பொதுச் செய­லா­ளர் ஆ.இராசா எம்.பி. ஆற்­றிய உரை வரு­மாறு:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஒரு அரை நூற்­றாண்­டுக்கு 5 ஆண்­டு­கள் குறைவு – நாற்­பத்­தைந்து ஆண்­டு­களுக்கு முன்­னால், 1980–ஆவது ஆண்டு ஜூலை மாதம் 20–ஆம் தேதி மது­ரை­யில் தொடங்­கப்­பட்ட அணி தி.மு.கழ­கத்­தின் இளை­ஞ­ரணி. அந்த இளை­ஞ­ர­ணி­யைத் தொடங்­கி­வைத்த நேரத்­தில், தலை­வர் கலை­ஞர் அவர்­கள் ஒரு முழக்­கத்தை முன்­வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="6">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">“நாங்­கள் பெரி­யா­ரின் தொண்­டர்­கள் – அண்­ணா­வின் தம்­பி­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="6">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">எங்­கள் கால்­கள் நடப்­பதை நிறுத்­தாது; நடந்து கொண்டே இருப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="6">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">எங்­கள் கைகள் எழு­து­வதை நிறுத்­தாது; எழு­திக் கொண்டே இருப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="6">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">எங்­கள் உத­டு­க­ளும், நாவு­க­ளும் பேசு­வதை நிறுத்­தாது; பேசிக் கொண்டே இருப்­போம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="6">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஏன் என்­றால், நாங்­கள் ஒரு மிகப் பெரிய அழுத்­த­மான கொள்­கைக்­குச் சொந்­த­மா­ன­வர்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நாங்­கள் பெரி­யா­ரின் தொண்­டர்­கள் –­­அண்­ணா­வின் தம்­பி­கள்” என்று  அந்த முழக்­கத்தை முடித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நாற்­பந்­தைத்து ஆண்டு காலம் உருண்­டோ­டி­விட்­டது. அன்­றைக்கு சில நூறு பேர், நான் பட்­டப்­ப­டிப்பை துவங்­கி­ 
யி­ருந்த முதல் ஆண்டு. ஆனால் நான் இன்­றைக்கு இந்த மேடை­யைப் பார்க்­கி­றேன்; மைதா­னத்­தைப் பார்க்­கி­றேன்; எவ்­வ­ளவு பெரிய எழுச்சி. இந்த இளை­ஞ­ரணி எவ்­வாறு உருக்­கொண்டு, இன்­றைக்கு ஆரு­யிர் இள­வல்  உத­ய­நிதி ஸ்டாலின் என்ற இளம் தலை­வ­ரால் மிகப்­பெ­ரிய உய­ரத்தை – சிக­ரத்தை எட்­டி­யி­ருக்­கி­றது. திரு­வண்­ணா­ம­லை­யில் நடை­பெ­றும் இந்த மண்­டல இளை­ஞர் அணி மாநாட்­டில் உரை­யாற்­றும் வாய்ப்பை கழ­கத் தலை­வர் அவர்­கள் எனக்கு வழங்­கி­யி­ருக்­கி­றார்­கள்; அவர்­க­ளுக்­கும், துணை முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய நன்­றியை முத­லில் நான் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கிளைக் கழ­கம் முதல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தலை­மைக் கழ­கம் வரை நிர்­வா­கி­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நான் இந்­தி­யா­வில் மட்­டு­மல்ல, உல­கத்­தில் உள்ள அர­சி­யல் கட்­சி­களை எல்­லாம் தேடிப் பார்க்­கி­றேன். தமிழ்­நாட்­டில் தி.மு.க.விற்கு 76 ஆயி­ரம் கிளைக் கழ­கங்­கள்; அந்த ஒவ்­வொரு கிளைக் கழ­கத்­திற்­கும் ஒரு இளை­ஞ­ரணி அமைப்­பா­ளர்; 
3 துணை அமைப்­பா­ளர்­கள்;  இதில் மட்­டும் 3 லட்­சம் நிர்­வா­கி­கள். ஒவ்­வொரு கிளைக்­கும் சேர்த்து தமிழ்­நாட்­டில் 3 லட்­சத்து 4 ஆயி­ரம் பேர் இளை­ஞ­ர­ணி­யின் நிர்­வா­கி­கள் இருக்­கி­றார்­கள். 68 ஆயி­ரம் வாக்­குச்­சா­வ­டி­கள் உள்­ளன. 68 ஆயி­ரம் வாக்­குச்­சா­வ­டி­க­ளுக்­கும் பாக­மு­க­வர்­கள் இளை­ஞ­ர­ணி­யின் சார்­பில் இருக்­கி­றார்­கள். சென்னை போன்ற பெரு­ந­க­ரங்­களில் பாகத்­தின் பகு­திக் கழ­கத்­தின் நிர்­வா­கி­கள், அவர்­கள் 2 லட்­சம் பேர். எனவே, ஏறத்­தாழ 5 லட்­சம் பேரை கிளைக் கழ­கம் தொடங்கி, தலை­மைக் கழ­கம் வரை நிர்­வா­கி­க­ளாக இளை­ஞர்­க­ளைப் பெற்­றி­ருக்­கிற ஒரு இயக்­கம், இந்­தி­யா­வில் மட்­டு­மல்ல, உல­கத்­தி­லேயே உண்டு என்­றால், அது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். அந்­தப் பெரு­மை­யைச் செய்து காட்­டிய ஒரு மகத்­தான இளந்­த­லை­வ­னாக ஆரு­யிர் இள­வல் தம்பி உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை நான் பார்க்­கி­றேன். அவரை நான் பாராட்­டு­கி­றேன், வாழ்த்­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அது­வும் சாதா­ரண முறை­யிலா? இப்­போது காணொலி வாயி­லாக காண்­பித்­தார்­களே, மாவட்ட அமைப்­பா­ளர்­களை – துணை அமைப்­பா­ளர்­களை நேர்­கா­ணல் செய்து, அதற்கு கீழே இருக்­கும் நிர்­வா­கி­களை தொலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு பேசி, முறைப்­படி தகு­தி­யா­ன­வர்­களை தேர்ந்­தெ­டுத்து கொண்டு வந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">இயக்­கத்­தின் கட்­டு­மா­னம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நான் வர­லாற்றை எண்­ணிப் பார்க்­கி­றேன். 1993–ஆம் ஆண்டு இந்த இயக்­கத்­திற்கு ஒரு சோதனை வந்த நேரத்­தில், தஞ்­சை­யில்பொதுக்குழுவை அண்­ணன் கோ.சி. மணி அவர்­கள் முன்­னின்று கூட்டி, இந்த இயக்­கம்­தான் உண்­மை­யான திரா­விட முன்­னேற்­றக்கழ­கம் என்­பதை தேர்­தல்ஆணை­யத்­தில் நிரூ­பிப்­­ பதற்­காக பொதுக் குழுதீர்­மான ஆவ­ணங்­களை – கிளைக் கழ­கம் முதல் தலை­மைக் கழ­கம் வரை உள்ள அமைப்பு முறை­க­ளை­யெல்­லாம் கொண்டு போய் சேர்த்து வாதிட்­ட­போது, அன்­றைக்கு தேர்­தல் ஆணை­யத்­தின் தலை­வ­ராக இருந்த டி.என்.சேஷன் சொன்­னார், “The only Political Party Democraticly and Legally  structured is DMK in the Country”.  “இப்­படி ஒரு தேர்­தல் அமைப்பு முறையை – இப்­படி ஒரு கட்­டு­மா­னத்தை – ஜன­நா­ய­கத்தை, நான் வேறு எந்த அர­சி­யல் கட்­சி­யி­லும் இந்­தி­யா­வில் காண­வில்லை” என்று 1993–லேயே சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">“கொட்­டு­கின்ற மழை­யில், வீசு­கின்ற புய­லில், சர­ளைக்­கற்­கள் நிரம்­பிய மலை உச்­சியை நோக்கி நாம் நடக்­கி­றோம்; கையிலே ஒரு அகல் விளக்கு; அந்த அகல் விளக்கு அணை­யா­மல் இருப்­ப­தற்கு, தம்­பி­மார்­களே... உங்­கள் கைக­ளின் அர­வ­ணைப்­பைத் தாருங்­கள்” என்று சில நூறு பேர்­களை வைத்­துக்­கொண்டு, சென்னை ராபின்­சன் பூங்­கா­விலே தொடங்­கிய இந்த இயக்­கம், அந்த இயக்­கத்­தின் இளை­ஞ­ரணி இன்­றைக்கு திரு­வண்­ணா­ம­லை­ யில் ஒரு லட்­சத்து 30 ஆயி­ரம் பேர் அமர்ந்து, 91 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளி­லி­ருந்து – 21 கழக மாவட்­டங்­க­ளி­லி­ருந்து இத்­தனை பேரை கட்­டுப்­பா­டோடு கட­மை­யாற்­றும் பணி­யைச் செய்­தி­ருக்­கும் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு என்­னு­டைய சல்­யூட்... சல்­யூட்... சல்­யூட்...!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">என்­றைக்­கா­வது ஒரு நாள் உல­கத்­தில் இருக்­கும் அர­சி­யல் கட்­சி­களை எல்­லாம் ஆய்வு செய்து, ‘இப்­படி  ஒரு இயக்­கம் கட்­ட­மைக்­கப்­பட்­டி­ருக்க முடி­யுமா?’ என்று எவ­ரா­வது ஆய்வு செய்­தால், இவர் செய்­தி­ருக்­கும் இந்த முன்­மு­யற்­சி­தான்... சரித்­தி­ரம்... சரித்­தி­ரம்… சரித்­தி­ரம்...!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பெரி­யா­ரைப் பற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கலை­ஞர் எழு­தி­யது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நான், இந்த இயக்­கம் தோன்­றிய மூலத்தை தம்பி உத­ய­நி­தியை வைத்­துக்­கொண்டு எண்­ணிப் பார்க்­கி­றேன்.  தந்தை பெரி­யார் இந்த இயக்­கத்­திற்கு தத்­து­வத்தை தந்­தார்; அண்­ணன் வேலு அவர்­கள் வர­வேற்­புரை நிகழ்த்­து­கி­ற­போது, “தந்தை பெரி­யாரை உத­ய­நிதி வடி­வத்­தில் பார்க்­கி­றேன்” என்று சொன்­னார். அந்த பெரி­யா­ரைப் பற்றி கலை­ஞர் எழு­தி­னார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">“எரி­ம­லை­யாய்; சுடு­த­ழ­லாய்; இயற்­கைக் கூத்­தாய்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இறை­வ­னுக்கே எதிர்ப்பு சொன்ன இங்­கர்­சா­லாய்; ஏனென்று கேட்­ப­திலே வைர நெஞ்ச வால்­டே­ராய்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">எப்­போ­தும் பேசு­வ­தில் ஏதென்சு நகர் சாக்­ர­டீ­சாய்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">எம் தந்தை பெரி­யா­ரும் வாழ்ந்­திட்­டார்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">பம்­ப­ர­மும் ஓய்வு பெறும் சுற்­றிய பின்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இவரோ படு­கி­ழ­மாய்ப் போன பின்­னும் பம்­ப­ர­மாய் சுற்றி வந்­தார்” என்று!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அண்ணா, பெரி­யார் தந்த தத்­து­வத்தை முன்­னி­றுத்தி ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்­து­விட்­டார். அப்­போது பெரி­யா­ருக்கு மனச்­ச­லிப்பு ஏற்­பட்­டது. ஏன் வாழ்­கி­றோம் என்ற விரக்தி ஏற்­பட்­டது என்று விடு­த­லை­யில் எழு­தி­னார். அப்­போது, புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்ட பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் அமெ­ரிக்­கா­வில் சிகிச்­சை­யில் இருந்­தார். பத­றிப்­போன அண்ணா பெரி­யா­ருக்கு கடி­தம் எழு­தி­னார், “தலை­வர் அவர்­களே... உங்­க­ளுக்கு ஏன் மனச்­ச­லிப்பு. எனக்­குத் தெரிய, உல­கத்­தில் எத்­த­னையோ புரட்­சி­க­ளைப் படித்­தி­ருக்­கி­றேன். இரஷ்­யா­வில் புரட்சி; ரஷி­யா­வில் இரண்டு தலை­வர்­கள்: மார்க்ஸ், லெனின். பிரஞ்­சுப் புரட்­சிக்கு வால்­டேர், ரூசோ என்று இரண்டு தலை­வர்­கள். இந்த புரட்­சி­கள் வெற்றி பெற இரண்டு நூற்­றாண்­டு­கள். வெவ்­வேறுகாலக்­கட்­டம். தத்­து­வத்­தைத் தந்­தது ஒரு­வர்; அதை அடுத்த நூற்­றாண்­டில் அரி­ய­ணை­யில் ஏற்­றி­ய­வர் இன்­னொ­ரு­வர். ஆனால், எனக்­குத் தெரிந்து ஒரு தத்­து­வத்தை ஒரு தலை­வன் சொல்லி, அவ­ரு­டைய வாழ்­நா­ளி­லேயே அத்­தத்­து­வம் வெற்றி பெற்ற வர­லாறு உங்­க­ளுக்கு மட்­டும்­தான் இருக்­கி­றது. அப்­ப­டிப்­பட்ட உங்­க­ளுக்கு ஏன் மனச்­சோர்வு”? என்று கேட்­ட­வர் பேர­றி­ஞர் அண்ணா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அந்த அண்ணா ஆட்­சிப் பொறுப்­பிற்கு வந்­த­வு­டன், ‘தமிழ்­நாடு’ என்று இந்த நாட்­டிற்­குப் பெயர் சூட்­டி­னார். “தமிழ்­நாடு என்று பெயர் இருக்­கும் வரை, இந்த நாட்­டில் யார் முத­ல­மைச்­ச­ராக இருந்­தா­லும், அண்­ணா­து­ரை­தான் தமிழ்­நாட்டை ஆள்­கி­றான்” என்று அண்ணா சொன்­னார். அதை இந்த மேடை­யிலே நான் எண்­ணிப் பார்க்­கி­றேன். எத்­தனை பெரிய வர­லாறு இந்த இயக்­கத்­திற்கு?  எத்­தனை உய­ரிய தத்­து­வம்?  எத்­தனை கொள்­கைத் தலை­வர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கலை­ஞ­ரின் சாத­னை­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சரித்­தி­ரம் பேசும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அண்ணா மறை­வுக்­குப் பிறகு, கலை­ஞர் ஆட்­சிப் பொறுப்­பிற்கு வந்­தார். நான் நாடா­ளு­மன்­றத்­தில் 20 ஆண்­டு­கள் காலத்­திற்கு மேலாக இருக்­கி­றேன். தமி­ழுக்கு செம்­மொழி மட்­டு­மல்ல; பெண்­ணுக்கு சம உரிமை மட்­டு­மல்ல; ஆட்­சி­யில் அவர் படைத்த சாத­னை­கள் சரித்­தி ­ரம் பேசும்; கொள்­கை­யில் அவர் எவ்­வாறு பற்று கொண்­டி­ருந்­தார்?. 56 இன்ச் மார்­ப­க­லம் கொண்ட பிர­த­மர் மோடி அவர்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் சொன்­னார், “சுதந்­தி­ரம் அடைந்து 75 ஆண்­டு­கள் ஓடி­விட்­டது. இன்­னும் 40 ஆயி­ரம் கிரா­மங்­க­ளுக்கு மின்­சா­ரம் சென்று சேர­வில்லை. நான்­தான் சேர்த்­தேன். நேரு செய்­ய­வில்லை; இந்­திரா காந்தி செய்­ய­வில்லை; நான்­தான் செய்­தேன்” என்று குடி­ய­ர­சுத் தலை­வர் உரைக்கு நன்றி தெரி­விக்­கும்  தீர்­மா­னத்­திற்­கான விவா­தத்­தின் ­போது சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நான், தி.மு.க. சார்­பில் குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு நன்றி தெரி­வித்து பேசு­கி­ற­போது சொன்­னேன், “பிர­த­மர் அவர்­களே... இன்­றைக்கு 2024–ல் 40 ஆயி­ரம் வீடு­க­ளுக்கு நாங்­கள் மின் இணைப்பு கொடுத்­தோம் என்று சொல்­கி­றீர்­களே... 1971–இலேயே அனைத்­துக் கிரா­மங்­ ­களுக்­கும் மின்­சா­ரத்தை கொண்டு போய் சேர்த்த ஒரு தலை­வர்,  கலை­ஞர்  என்ற மகத்­தான தலை­வனை தலை­வ­ராக பெற்ற இயக்­கம், எங்­கள்  இயக்­கம்” என்று சொன்­னேன். இவ்­வாறு பெரி­யார் – அண்ணா – கலை­ஞர், இந்­தத் தத்­து­வங்­களை எல்­லாம் தாங்கி இருக்­கும் தலை­வர் இங்கே இருக்­கி­றார். சுருக்­க­மா­கச் சொன்­னால், திரா­விட மாடல் அரசை இயக்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ஆற்­றல் மிக்க தலை­வன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">பெரி­யார், தனி­நாடு – திரா­விட நாடு கேட்­டார். அண்ணா, திரா­விட நாட்டை –  தனித் தமிழ்­நாட்டை கைவிட்­டு­விட்டு, மாநில சுயாட்சி கேட்­டார். கலை­ஞர், மாநில சுயாட்­சிக்­காக சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் போட்­டார். அவ்­வாறு தீர்­மா­னத்­தோடு நிற்­க­வில்லை. இன்­றைக்கு மாநி­லத்­தின் உரி­மை­கள் பறிக்­கப்­ப­டு­கி­ற­போது, நீட்­டாக இருந்­தா­லும் ஏற்­றுக் கொள்ள மாட்­டோம்; உண்­மை­யான இட ஒதுக்­கீடு கோட்­பாட்டை தவிர்த்­து­விட்டு, பொரு­ளா­தா­ரத்­தில் பின்­ன­டைந்­த ­வர்­கள் என்­ப­தற்­காக இட ஒதுக்­கீடு தரு­கி­றீர்­களே... அதை ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம்; விஸ்­வ­கர்மா திட்­டத்தை நாங்­கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம்; நாடா­ளு­மன்­றம் இயற்­று­கிற சட்­டத்தை ஏற்­றுக் கொள்ள மாட்­டோம்; “Political will of the people reflected in the  Parliament was rejected”. ஆனால், எங்­கள் சட்­ட­மன்­றத்­தில் இந்த ஆட்­சி­யின் நாய­கர், “உங்­கள் சட்­டங்­களை நாங்­கள் ஒப்­புக் கொள்ள மாட்­டோம்; நாங்­கள், “Out of Control to Delhi” என்று சொல்­லும் ஆற்­றல்­மிக்க ஒரு தலை­வன் இந்­தி­யா­வில் யார்? இவ­ரைத் தவிர. இத்­தனை பெரு­மைக்­கும் சொந்­தக்­கா­ரர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">விளை­யாட்­டுத் துறை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">இத்தனை சாதனைகளா!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு அவ­ரு­டைய மகன், இந்த இயக்­கத்தை எதிர்­கா­லத்­தில் வழி­ந­டத்த இருக்­கி­றார்;  இப்­போது தமிழ்­நாட்டு இளை­ஞர்­களை வழி­ந­டத்­திக் கொண்­டி­ருக்­கி­றார். நான் அவரை தலைமை தாங்கி நடத்த வேண்­டும்; தகுதி உங்­க­ளுக்கு இருக்­கி­றது என்று சொல்­வ­தற்கு கார­ணம் என்ன? கலை­ஞ­ரின் பேரன் என்­ப­தற்­காக மட்­டுமா; முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்ற மகத்­தான மனி­த­ரு­டைய பிள்ளை என்­ப­தற்­காக மட்­டுமா; அவை­யெல்­லாம் தொடர்­புக்­கு­ரிய கார­ணி­கள் Relavent factors… அதை­யும் தாண்டி ஆட்­சி­யை­யும் – கட்­சி­யை­யும் வழி­ந­டத்­தும் ஆற்­றல் எதிர்­கா­லத்­தில் அவ­ருக்கு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அவர் ஆட்­சி­யில் என்­னென்ன பணி­களை ஆற்றி இருக்­கி­றார்? விளை­யாட்­டுத் துறையை வைத்­துக்­கொண்டு, இத்­தனை சாத­னை­க­ளைச் செய்த ஒரு அமைச்­சரை நான் இந்­தி­யா­வி­லேயே பார்த்­த­தில்லை. நெடுஞ்­சாலை போடு­கி­றார் அமைச்­சர்  வேலு என்­றால், ஒப்­புக் கொள்­ள­லாம்; அனைத்து நக­ரங்­க­ளுக்­கும் தண்­ணீர் வரு­கி­றது என்­றால், நாம்  அமைச்­சர் நேருவை ஒப்­புக் கொள்­ள­லாம். அனைத்­துக் கிரா­மங்­க­ளுக்­கும் அடிப்­படை வச­தி­கள்  செல்­கி­றது என்­றால், அமைச்­சர் ஐ.பி.யை ஒப்­புக் கொள்­ள­லாம். இவை அனைத்­தும் தெரிந்த துறை­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஆனால், விளை­யாட்­டுத் துறை­யில் இவ்­வ­ளவு விந்­தை­க­ளைச் செய்­யும் ஆற்­ற­லைப் பெற்ற ஒரு அமைச்­சரை, தம்பி; உங்­க­ளைத்­தான் நான் பார்க்­கி­றேன். எத்­தனை திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11"></lang>
<lang  class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="6">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு சாம்­பி­யன்ஸ் பவுண்­டே­சன் டிரஸ்ட் (Tamil Nadu Champions Foundation )</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="6">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">போட்­டிக்­குச் செல்­வ­தற்கு முன்­பா­கவே ஊக்­கத்­தொகை,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="6">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தேசிய முதல் ஒலிம்­பிக் வரை யார் பதக்­கம் பெற்­றா­லும், அவர்­களை அழைத்து வந்து பதக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="6">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">எலைட் ஸ்போர்ட்ஸ் பெர்­சன்ஸ் ஸ்கீம் (Elite sports persons scheme)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="6">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">உல­கப் போட்­டியா? ஒலிம்­பிக் போட்­டியா? அனைத்­துச் செல­வு­க­ளை­யும் அரசு ஏற்­றுக் கொள்­ளும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="6">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இன்­டர்­நே­ஷ­னல் மெடல் ஸ்கீம், (International Medal Scheme)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="6">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஒரு வீரரை தயார் செய்­வ­தற்கு ஆண்­டுக்கு 12 லட்­சம் ரூபாய்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சாம்­பி­யன் டெவெ­லப்­மென்ட் (Champions Development Scheme – CDS) என்­றொரு திட்­டம் – 20 வய­துக்கு உட்­பட்­ட­வர்­களை எதிர்­கா­லத்­தில் தயார் செய்­வ­தற்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இவை எல்­லாம்­கூட நான் ஏற்­றுக் கொள்­கி­றேன். மற்­ற­வர்­க­ளைப் போல் சாதா­ரண சிந்­த­னை­யில்­கூட வந்­தி­ருக்­கக்­கூ­டும். தலை­வ­ருக்கு பக்­கத்­தில் இருக்­கி­றீர்­களே... அவ­ரி­டம் சொல்லி இன்­னொரு வேலை­யைச் செய்­தீர்­களே...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கலைஞர் என்ற மகத்தான மனிதர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு நான் பெரம்­ப­லூ­ரில் இருந்து கிளம்­பி­னேன். கை, கால் இரண்­டும்நடக்க முடி­யா­மல் குழந்தை போன்று ஒரு­வர் தவழ்ந்து வந்­தார். “ஏன் ஐயா, சொல்­லி­யி­ருந்­தால் நான்வந்து கையில் இருக்­கும் மனுவை வாங்கி இருப்­பேனே?” என்று கேட்­டேன். “நான் மனு கொடுக்கவர­வில்லை. நான் ஒரு பட்­ட­தாரி ஆசி­ரி­யர்” என்­றார் அவர்.  ”பிறகு எதற்­காக வந்­தீர்­கள்?” என்று கேட்­டேன். ஒரு லாமி­னேட் செய்­யப்­பட்ட காகி­தத்தை காட்­டி­னார். “உள்­ளாட்சி அமைப்­பில் நான் இன்­றைக்கே ஒரு கவுன்­சி­ல­ராக ஆக்­கப்­பட்­டி­ருக்­கி­றேன். அதற்­குக் கார­ணம் உத­ய­நிதி ஸ்டாலின். தன்­னு­டைய தந்­தை­யி­டத்­தில் சொல்லி எனக்கு வாங்­கிக் கொடுத்­தி­ருக்­கி­றார்”. நான் எண்­ணிப் பார்க்­கி­றேன்,நொண்டி என்­றார்­கள்; முடம் என்­றார்­கள்; குரு­டன் என்­றார்­கள்; செவி­டன் என்­றார்­கள். ஐ.நா. மன்­றம் அவர்­களை அவ்­வாறு சொல்­லக் கூடாது; ‘மாற்­றுத் திற­னா­ளி­கள்’ என்று சொல்­லச் சொன்­னது. ஐ.நா. சொன்னஅந்­தக் கட்­ட­ளையை இந்­தி­யா­வில் எந்த முத­ல­மைச்­ச­ரும் பார்க்­க­வில்லை, கேட்­க­வில்லை, நிறை­வேற்­ற­வில்லை. ஆனால், கலை­ஞர் என்ற மகத்­தான மனி­தர்­தான் இந்­தி­யா­வில் அவர்­களை ‘மாற்­றுத் திற­னாளி’ என்று அழைத்­தது மட்­டு­மல்ல; அவர்­க­ளுக்கு ஒரு தனித் துறையை உரு­வாக்­கி­னார். அவ­ரு­டைய பேர­னால் இன்­றைக்கு உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் மாற்­றுத் திற­னாளி ஒரு­வர் தேர்­தல் இல்­லா­மல் உள்ளே செல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இப்­போது சொல்­லுங்­கள்... கலை­ஞ­ருக்கு –  முத­ல­மைச்­ச­ருக்கு, உத­ய­நிதி ரத்த வாரிசு மட்­டுமா? இல்லை, அவர்­கள் அவர் கொண்­டி­ருக்­கும் லட்­சி­யத்­திற்­கும் வாரிசு. இத்­த­னை­யும் செய்­தி­ருக்­கி­றார் ஆட்­சி­யில்.  இதற்­கா­கக்­கூட உங்­களை நான் தலை­வர் பத­விக்கு தகுதி பெற்­ற­வர் என்று சொல்­ல­மாட்­டேன். இவை­யெல்­லாம் மற்ற அமைச்­சர்­க­ளும்­கூட செய்­ய­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மண்­டி­யி­டாத வீரன் உத­ய­நிதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">உங்­களை இன்­னொரு கோணத்­தில் பார்க்­கி­றேன். சனா­த­னத்­திற்கு மண்­டி­யிட மாட்­டேன் என்று சொன்­னீர்­களே; சனா­த­னம் குறித்து பேசி­ய­தற்­காக உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் ஒரு வழக்கு; இந்­தி­யா­வில் 10–க்கும் மேற்­பட்ட உயர்­நீ­தி­மன்­றங்­க­ளில் வழக்கு. பயந்­தாரா? என்ன செய்­யப் போகி­றோம் என்று திகைத்­தாரா? சிறை என்­றால் – சிலுவை என்­றால் தூக்­கிச் சுமப்­ப­தற்கு எத்­தனை பேருக்கு முடி­யும். எதிர்த்து நின்­றார்; மண்­டி­யிட மாட்­டேன்; கொள்­கை­யோடு இருப்­பேன் என்­றார். அப்­ப­டிப்­பட்ட வீரன் நீங்­கள். அதற்­காக உங்­களை நான் ஏற்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">‘திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மீது,  பெரி­யார் குறித்து, அண்ணா பற்றி,  கலை­ஞர் மீது – முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக தத்­து­வங்­களை திரித்து, பொய்ப் புகார்­கள் – அவ­தூ­று­கள் அள்ளி வீசப்­பட்ட நேரத்­தில், அதற்­குப் ‘பொய்ப்­பெட்டி’ என்று பெயர் கொடுத்து, நாட­றிந்த பேச்­சா­ளர்­களை அழைத்து வந்து, அவர்­க­ளுக்­கெல்­லாம் விளக்­கம் சொல்லி, ‘முர­சொ­லி’­­யில் பிர­சு­ரித்து வெளிச்­சம்போட்டு உடைத்­தீர்­களே, அந்த வித்­தையைஉங்­க­ளுக்கு யார் கற்­றுக் கொடுத்­தது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அறி­வின் மீதும், லட்­சி­யத்­தின் மீதும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உங்­க­ளின் தாகம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">‘பாச­றைப் பக்­கம்’ – முர­சொ­லி­யில் கடை­சிப் பக்­கம். இயக்­கத்­திற்­காக உழைத்­த­வர்­கள் யார்; அவர்­கள் சொன்ன சிந்­தனை என்ன; அந்­தச் சிந்­த­னையை 
எப்­படி வரை­ய­றுத்­தார்­கள்; அவர்­கள் போட்ட தடத்­தில் நாம் தத்­து­வம் பிற­ழா­மல் எவ்­வாறு நடந்து செல்­வது; இதற்­கென்று ஒரு பக்­கம் ‘முர­சொ­லி’­­யில். யார் கற்­றுக் கொடுத்­தார்­கள்! அறி­வின் மீது உங்­கள் தாகம்; லட்­சி­யத்­தின் மீது உங்­கள் மோகம்.  ஒரு சட்­ட­மன்­றத் தொகு­திக்கு ஒரு நூல­கம்; புத்­த­கத்­தைப் படி­யுங்­கள் என்று “முத்­த­மி­ழ­றி­ஞர்” பெய­ரில் ஒரு பதிப்­ப­கம். காரல் மார்க்­சைப் பற்றி  
புத்­த­க­மாக வரு­கி­றது. பெரி­யாரை அங்கு புத்­த­க­மா­கப் பார்க்­கி­றேன்; பேர­றி­ஞர் அண்­ணாவை அதி­லி­ருந்து வாசிக்க முடி­கி­றது; டிராட்ஸ்கி பார்க்­கி­ற­போது புது­மார்க்­சி­யம் பேசு­கி­றது; யார் அம்­பேத்­கர்; எது சாதி ஒழிப்பு; இத்­த­னைக்­கும் சிறு­நூல்­கள், முத்­த­மி­ழ­றி­ஞர் பதிப்­ப­கத்­தில். அதை உங்­க­ளுக்­குள் விதைத்­தது யார்?  அது மட்­டும்­தானா...?  கருத்­த­ரங்­கம்; புத்­த­கக் கண்­காட்சி. ஆண்­ட­வ­னுக்கு திரு­விழா இந்த மண்­ணில் நடக்­கி­றது. ஆனால், அறி­வுக்­குத் திரு­விழா நடத்­திய ஒரே அர­சி­யல் தலை­வன் நீ மட்­டும்­தான்... நீ மட்­டும்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">காவ­லன் எவனோ அவனே தலை­வன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சிலி நாட்­டில் ‘­­பாப்­லோ நெருடா’ என்ற ஒரு சிவப்­புக் கவி­ஞன். இலக்­கி­யத்­திற்கு நோபல் பரிசு பெற்­றான். சிவப்­புச் சிந்­த­னை­யில் தன்னை பிணைத்­துக் கொண்­டான், கம்­யூ­னிஸ்ட்­கா­ரன். பல நாடு­க­ளுக்கு ரக­சி­ய­மாக ஓடி­னான்; துரத்­தப்­பட்­டான். அவன் மறை­வ­தற்கு முன்­னால், “நீங்­கள் இந்த உல­கிற்கு என்ன சொல்ல விரும்­பு­கி­றீர்­கள்?” என்று கேட்­டார்­கள். அவன் சொன்­னான், “ஒரு 
தத்­துவ ஆறு தலை­மு­றை­யைத் தாண்­டிப்பய­ணிக்­கி­ற­போது, கரை­யைப் பலப்­ப­டுத்தி,காவல் காக்­கிற காவ­லன் எவனோ, அந்­தக் காவ­லன்­தான் அந்த இயக்­கத்­திற்கு தலைமை தாங்­கத் தகு­தி­யு­டைய தலை­வன்” என்று சொன்­னான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">பெரி­யார், அண்ணா, கலைஞர் உரு­வாக்­கிய தத்­துவ ஆறு, முத­ல­மைச்­ச­ரின் தலை­மை­யில் ஓடிக்­கொண்டே இருக்­கி­றது; அந்த தத்­துவ ஆற்­றின் கரை­யைப் பலப்­ப­டுத்­திக் கொண்டே இருக்­கி­றார் உத­ய­நிதி. பாப்­லோ நெருடா சொன்­னான், ‘அந்­தக் காவ­லன்­தான் தலை­மைக்­குத் தகு­தி­யுள்­ள­வன்‘ என்று.  அத­னால் நான் உரி­மை­யோடு ஒரு­மை­யில் அழைக்­கி­றேன், “தம்பி வா... எதிர்­கா­லத்­தில் இந்த இயக்­கத்தை நடத்து... வாழ்க... வெல்க…”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இவ்­வாறு ஆ.இராசா எம்.பி. 
உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>