<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,69,957,1145" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jan 01 2026 03:58:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260101T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="01012026-VLR-03" position.sequence="03" ex-ref="01012026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup658872_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup658871_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தமிழ்­நாட்­டில் எதிர்க்­கட்சி, சர­ணா­கதி அடைந்துசாய்ந்து கிடக்­கி­றது. ஆளுங்­கட்­சி­யான திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான், தமிழ்­நாட்டை வஞ்­சிக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அர­சு­டன் தொடர்ந்து உறு­தி­யா­கப் போரா­டிக் கொண்­டி­ருக்­­கிறது. கடந்த 5 ஆண்­டு­கால ஆட்­சி­யும் நமக்கு, உரி­மைப் போராட்­டம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ஏழை மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை உறுதி செய்­யும், ‘மகாத்மா காந்தி’ 
பெய­ரி­லான 100 நாள் வேலைத் 
திட்­டத்தை பெயர் மாற்­ற­மும் உரு­மாற்­ற­மும்செய்து, திட்­டத்­தையே முடக்­கு­ கின்ற ஒன்­றிய பா.ஜ.க. அர­சைக் கண்­டித்து கள­மி­றங்­கிப்போரா­டிக் கொண்­டி­ருப்­பது தி.மு.க.வும் –அதன் தோழ­மைக் கட்­சி­க­ளும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தேசி­யக் கல்­விக் கொள்கை வழி­யா­கத் தமிழ்­நாட்­டின் மீது இந்­தி­யை­யும் சமஸ்­கி­ரு­தத்­தை­யும் திணிக்­கும் 
நோக்­கத்தை எதிர்த்து,பேர­றி­ஞர்பெருந்­தகை அண்ணா அவர்­கள் வகுத்­துத் தந்த இரு­மொ­ழிக் கொள்­கை­யில் உறு­தி­யாக நாம் நிற்­ப­தால், தமிழ்­நாட்­டிற்­கு­ரிய கல்வி நிதியை வழங்­கா­மல் வஞ்­சிக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அரசை எதிர்த்­துப் போரா­டு­வ­தும் 
தி.மு.கழ­கம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தமிழ்­நாட்­டின் நிதி உரிமை – வரி உரிமை – சட்ட உரிமை என அனைத்­திற்­கும் போரா­டு­வது நாம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">எல்­லா­வற்­றுக்­கும் மேலாக, இந்­திய மக்­க­ளின் ஜன­நா­யக உரி­மை­யானவாக்­கு­ரி­மை­யைப் பறிக்­கும் எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்­கையை எதிர்த்து சட்­ட­ரீ­தி­யான போராட்­டத்தை நடத்­து­வ­தும், களத்­தில் நின்று ஒவ்­வொரு வாக்­குச்­சா­வ­டிக்­குட்­பட்ட வாக்­கா­ள­ரின் உரி­மை­யைக் 
காப்­ப­தும் திரா­விட முன்­னேற்­றக் 
கழ­கம் மட்­டும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">இந்­திய ஜன­நா­ய­கத்­தின் பாது­கா­வ­ல­னாக தி.மு.க. முன்­னிற்­கி­றது. 
நம்தோழ­மைக் கட்­சி­கள் துணை ­
நிற்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ஒரு கையில் வாளை ஏந்தி, 
உரி­மைப் போர்க்­க­ளத்­தில் நிற்­கி­றோம். மறு கையில் கேட­யத்தை ஏந்தி, மக்­கள் நல­னைப் பாது­காக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">போர்க்­க­ளத்­தில் வென்­றிட 
வேண்­டும்! மக்­கள் நலன் காக்­கும் 
திட்­டங்­க­ளைத் தொடர்ந்­திட வேண்­டும்! தமிழ்­நாட்­டின் மக்­கள் படை நமக்கு ஆத­ர­வாக உள்­ளது. அதைச் சித­ற­டிக்க வேண்­டும் என எதி­ரி­க­ளும் உதி­ரி­­களும் வகுக்­கும் வியூ­கங்­க­ளைத் தகர்த்­தெ­றிந்து, ஜன­நா­ய­கப்போர்க்­க­ளத்­தில் நாம் செய­லாற்­றி­டு­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">திரு­வண்­ணா­ம­லை­யில் நடை­பெற்ற, ‘இளை­ஞ­ர­ணி­யின் வடக்கு மண்­டல நிர்­வா­கி­கள் சந்­திப்பு’ எனும் பிரம்­மாண்ட நிகழ்­வும், திருப்­பூர்–­ 
பல்­ல­டத்­தில் நடை­பெற்ற, ‘மக­ளி­ர­ணி­யின் மேற்கு மண்­டல நிர்­வா­கி­கள் 
சந்­திப்பு’ எனும் பிர­மிப்­பான நிகழ்­வும் – கழ­கத்­தின் இளை­ஞர்­க­ளும், 
மக­ளி­ரும் உத்­வே­கத்­து­டன் களத்­தில் நிற்­பதை உறுதி செய்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தக­வல் தொழில்­நுட்ப அணி, மாண­வ­ரணி, மருத்­துவ அணி, வழக்­க­றி­ஞ­ரணி, சிறு­பான்­மை­யி­னர் நல உரி­மைப்பிரிவு உள்­ளிட்ட பல அணி­க­ளும் 
மண்­ட­ல­வா­ரி­யான நிர்­வா­கி­கள் ஆலோ­ச­னைக் கூட்­டங்­களை நடத்தி களப்­ப­ணி­யில் ஈடு­பட்டு வரு­வ­தை­யும் அறி­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">கழக நிர்­வா­கி­களை ‘ஒன் டூ ஒன்’ 
சந்­திக்­கும் ‘உடன்­பி­றப்பே வா’ 
நிகழ்­வில் இது­வரை 115 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளைச் சேர்ந்த கழக நிர்­வா­கி ­களை, ‘உங்­க­ளில் ஒரு­வ­னான’ நான் நேரில் சந்­தித்து, அவர்­க­ளின் கழ­கப் பணி­க­ளை­யும் கள நில­வ­ரத்­தை­யும் அறிந்து, உரிய ஆலோ­ச­னை­களைவழங்­கி­யி­ருக்­கி­றேன். தொகு­தி­வா­ரி­யான நிர்­வா­கி­கள் சந்­திப்பு தொடர்ந்து நடைபெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தலை­மைக் கழ­க­மான அண்ணா அறி­வா­ல­யம் முதல் கடைக்­கோடி 
வாக்­குச்­சா­வடி பாகம் வரை கழக உடன்­பி­றப்­பு­கள் ஓயாது பணி­களை மேற்­கொண்டு வரு­வதை அறி­வேன். உடன்­பி­றப்­பு­க­ளான உங்­க­ளுக்­கும், உங்­க­ளில் ஒரு­வ­னான எனக்­கும் 
தேர்­தல் முடி­யும்­வரை ஓய்­வில்லை; உழைப்பு.. உழைப்பு.. கழ­கத்­தின் 
வெற்­றிக்­கான உழைப்­பு­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">அந்த உழைப்பு; மக்­க­ளு­டன்இணைந்த, அவர்­க­ளின் பங்­கேற்­பு­ட­னானநிகழ்­வு­க­ளாக அமைய வேண்­டும். 
ஏனெ­னில், திரா­விட முன்­னேற்­றக் 
கழ­கம் என்­பது அனைத்து மக்­க­ளுக்­கு­மான இயக்­கம்! தமி­ழர்­க­ளின் நலன் காக்­கும் இயக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தமி­ழர் பண்­பாட்­டைப் போற்­றும்வகை­யில் கீழ­டி­யி­லும், பொரு­நை­யி­லும்அருங்­காட்­சி­ய­கங்­கள் அமைத்­துள்­ளோம். தமிழ்­மொழி வளர்ச்­சிக்­கா­க­வும், தமிழ்ச் சமு­தாய முன்­னேற்­றத்­ திற்­கா­க­வும், தாய்­நாட்­டின் விடு­த­லைக்­ கா­க­வும் பாடு­பட்ட வீரத் தியா­கி­க­ளுக்­குச்சிலை அமைத்­தும் மணி­மண்­ட­பங்­கள்உரு­வாக்­கி­யும் சிறப்­புச் சேர்த்­துள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">பண்­டி­தர் அயோத்­தி­தா­சர், 
தமி­ழைப் போற்­றிய ஐரோப்­பி­ய­ரானவீர­மா­மு­னி­வர், மாமன்­னன் பெரும்­பி­டுகுமுத்­த­ரை­யர், தாத்தா இரட்­டை­மலை சீனி­வா­சன், உத்­த­மத் தியாகி 
ஈஸ்­வ­ரன், ஐயா எல்.இளை­ய­
பெ­ரு­மாள், முன்­னாள் அமைச்­சர் சி.சுப்­பி­ர­ம­ணி­யன், மாவீ­ரன் பொல்­லான், சர்.ஏ.டி.பன்­னீர்­செல்­வம், 
எம்.கே.தியா­க­ராஜ பாக­வ­தர், பசும்­பொன் முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர், 
முன்­னாள் அமைச்­சர் ஏ.கோவிந்­த­சாமி ஆகி­யோர் பெயர்­க­ளி­லும் இட­ ஒ­துக்­கீட்­டுப் போராட்­டத்­தில் உயிர்ஈந்த தியா­கி­கள் பெய­ரி­லு­மாக இது­வரை 20 நினைவு மண்­ட­பங்­கள் – அரங்­கு­கள்அமைக்­கப்­பட்­டி­ருப்­ப­து­டன், வெள்­ளை­ யரை எதிர்த்த வீர­பாண்­டிய கட்­ட­பொம்­மன், மருது சகோ­த­ரர்­கள், வீர­மங்கை குயிலி, வாளுக்கு வேலி அம்­ப­லம், கப்­ப­லோட்­டிய தமி­ழர் வ.உசி­தம்­ப­ரனார், தமிழ்­நாட்­டின் பெரு­மைக்­கு­ரிய டாக்­டர் ப.சுப்­ப­ரா­யன், முன்­னாள் குடி­ய­ர­சுத் தலை­வர் டாக்­டர் ஏ.பி.ஜெ.அப்­துல்­க­லாம், நாமக்­கல் கவி­ஞர் இரா­ம­லிங்­கம் பிள்ளை, மூவ­லூர் இரா­மா­மிர்­தம் அம்­மை­யார், டாக்­டர் முத்­து­லட்­சுமி ஆகி­யோர் உள்­ளிட்ட 29 பேருக்­குத் திரு­ வு­ரு­வச்சிலை­கள் அமைக்­கப்­பட்டு அவர்­­ களின்புகழ்­போற்­றும் அர­சா­கத் திரா­விட மாடல் அரசு செய­லாற்றி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">கொள்­கை­யில் மாறு­பட்­டி­ருந்­தா­லும் – அர­சி­ய­லில் வேறு­பட்­டி­ருந்­தா­லும் தமிழ்­நாட்­டின் உயர்­வுக்­கா­கப் பங்­க­ளிப்பு செய்­த­வர்­கள் யாராக இருந்­தா­லும் அவர்­களை மதிக்க வேண்­டும்என்­கிற உயர்ந்த பண்­பாட்டை நமக்­குக்கற்­றுத் தந்­த­வர் நம் உயிர்­நி­கர்த் 
தலை­வர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தன் வாழ்­நா­ளில், அர­சி­யல் கருத்து மாறு­பா­டு­க­ளுக்கு அப்­பாற்­பட்டு அதை நிறை­வேற்­றிக் காட்­டி­ய­வ­ரும் அவர்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">வாழ்­நா­ளெல்­லாம் தமி­ழர்­க­ளின் உரி­மைக்­கா­க­வும் – உயர்­வுக்­கா­க­வும் பாடு­பட்டு, தமிழ்­மொழி காத்­திட 
களத்­தில் நின்று போராடி, தமி­ழுக்­குச் செம்­மொ­ழித் தகுதி கிடைக்­கச் செய்து, நவீ­னத் தமிழ்­நாட்­டைக் கட்­ட­மைத்த முத்­த­மி­ழ­றி­ஞர்கலை­ஞர் அவர்­க­ளின் நூற்­றாண்­டில் “தொகு­தி­கள் தோறும் அவ­ரது சிலை நிறு­வப்­ப­டும்” எனத் 
தீர்­மா­னித்து 16–7–2021 முதல் 
15–12–2025 வரை கழகத்தின் சார்பில் 40க்கும் மேற்பட்ட முழு 
உரு­வச் சிலை­கள் நிறு­வப்­பட்­டுள்­ளன. 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">அண்­மை­யில் திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­திற்­குச் சென்­ற­போது, அங்கு திறந்து வைக்­கப்­பட்ட நம் உயிர்­நி­கர்த் தலை­வர் அவர்­க­ளின் சிலை­க­ளு­டன் சேர்த்து, அந்த மாவட்­டத்­தில் உள்ள அனைத்­துத் தொகு­தி­க­ளி­லும் 
முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் சிலை திறக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">திருச்சி தெற்கு மாவட்­டத்­தி­லும், 
மயி­லா­டு­துறை மாவட்­டத்­தி­லும் அனைத்­துத் தொகு­தி­க­ளி­லும் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் சிலை­கள் 
திறக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தமிழ்­நாட்­டின் பல தொகு­தி­க­ளில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் சிலை­கள் தயார் நிலை­யில் உள்­ளன. திரா­விட இயக்­கத்­தின் தனிப்­பெ­ரும் விழா­வாக, தமி­ழர் திரு­நா­ளா­கப் பொங்­கல் 
விழா­வைச் சிறப்­பா­கக் கொண்­டா­டச் செய்­த­வர், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள்!.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தந்தை பெரி­யார் – பேர­றி­ஞர் அண்ணா – முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் வழி­யில், தமி­ழ­ரின் பண்­பாட்டு 
அடை­யா­ள­மான பொங்­கல் நன்­னா­ளைக் கழ­கத்­தின் சார்­பில், 2026 
புத்­தாண்டு தொடக்­கத்­தி­லி­ருந்தே
‘திரா­வி­டப் பொங்­கல்’ விழாவை, 
சமூ­க­நீ­திக்­கான கொண்­டாட்­ட­மாக உடன்­பி­றப்­பு­கள் முன்­னெ­டுக்க வேண்­டும் என ‘உங்­க­ளில் ஒரு­வன்’ என்ற உரி­மை­யு­டன் கேட்­டுக்­கொள்­கி­றேன். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">கழக நிர்­வா­கி­கள் தங்­க­ளு­டன் பணி­யாற்­றும் உடன்­பி­றப்­பு­க­ளுக்­குப் பொங்­கல் பரி­சு­கள் வழங்கி மகிழ்­வ­து­டன், தமிழ்­நாட்டு மக்­கள் அனை­வ­ரும் 
பங்­கேற்­றி­டும் வகை­யில் கலை – 
இலக்­கிய நிகழ்­வு­களை நடத்­திட 
வேண்­டும்.குறிப்­பாக, இளையதலை­முறை ஆண்­க­ளும் பெண்­க­ளும் கலந்­து­கொள்­ளும் விளை­யாட்­டுப் போட்­டி­க­ளைச் செம்­மை­யாக நடத்தி, வெற்­றி­யா­ளர்­க­ளுக்­கும் பங்­கேற்­பா­ளர்­க­ளுக்­கும் பரி­சு­களை வழங்­கிட வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மாநி­லம் முழு­வ­தும் கழ­கத்­தின் 
சார்­பில் மூன்று கட்­டங்­க­ளாக 
விளை­யாட்­டுப் போட்­டி­கள் நடத்­தப்­பட வேண்­டும். கபடி, கிரிக்­கெட்,வாலி­பால், கால்­பந்­தாட்­டம், ஓட்­டப்­ பந்த­யம், மிதி­வண்­டிப் போட்டி,‘கோ–கோ’ என ஆண்–­பெண் இரு­பா­ல­ருக்­கும் தனித்­த­னி­யாக விளை­யாட்­டுப் போட்­டி­கள் நடை­பெ­றும் வகை­யில் ஏற்­பா­டு­கள் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ஒவ்­வொரு பிரி­வி­ன­ருக்­கும் குறைந்­த­பட்­சம் 3 விளை­யாட்­டுப் போட்­டி­களை, ஒருங்­கி­ணைந்த ஒன்­றி­யம், 
ஒருங்­கி­ணைந்த நக­ரம், ஒருங்­கி­ணைந்த பகுதி (மண்­டல) அள­வில் ஜன­வரி 3–ஆம் நாள் முதல் ஜன­வரி 
9 வரை நடத்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">கலந்­து­கொள்­ளும் அனைத்து அணி­க­ளும் www.dravidapongal.inஎன்ற தளத்­தில் பதிவு செய்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">இதில் வெற்­றி­பெற்ற அணி­க­ளைக் கொண்டு, ஜன­வரி 10–ஆம் நாள்  முதல் பொங்­கல் திரு­நாள் வரை – கழக மாவட்ட அள­வி­லான போட்­டி­களைநடத்தி பரி­சு­களை வழங்­கிட வேண்­டும்!கழக மாவட்ட அள­வில் வெற்றி பெறும் அணி­க­ளைக் கொண்டுபிப்­ர­வரி 
மாதத்­தில், மாநில அள­வி­லான 
பிரம்­மாண்­டப் போட்­டி­கள் நடை­பெ­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ஜன­வரி 14–15 ஆகிய நாட்­க­ளில் தமிழ்­நாடு முழு­வ­தும் ஊராட்­சி­கள்–­வார்­டு­கள் அள­வில் மக­ளி­ரைத் திரட்டி –சாதி, மத ஏற்­றத்­தாழ்­வற்ற ‘திரா­வி­டப் பொங்­கல்’ வைத்­துக் கொண்­டாட வேண்­டும். அனைத்து வீடு­கள் 
முன்­பும், ‘சமத்­து­வம் பொங்­கட்­டும்! தமிழ்­நாடு வெல்­லட்­டும்!’என்றமுழக்­கங்­க­ளு­டன் ‘திரா­வி­டப் பொங்­கல்’கோல­மிட்டு, பெண்­க­ளும் குழந்­தை­
க­ளும் பங்­கேற்­கும் வகை­யி­லான 
சிறு­சிறு போட்­டி­களை நடத்­திப் 
பரி­ச­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ஜன­வரி 16–17 ஆகிய இரு 
நாட்­க­ளும் ஊரின் பொது­வான 
இடத்­தில் தமி­ழர் பெருமை சொல்­லும் கலை – இலக்­கிய விழாக்­களை 
நடத்­து­வ­து­டன், திரை அமைத்து,திரா­விட மாடல் அர­சின் பொங்­கல் சிறப்­புச்செய்­தியை அனை­வ­ரும் காணும்­படி செய்­ய­வேண்­டும். இந்த நிகழ்­வு­களை ஒன்­றி­ய–­ந­க­ர–­ப­கு­திக் கழ­கச் செய­லா­ ளர்­க­ளும் சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி ­க­ளும் இணைந்து எழுச்­சி­யு­டன் 
நடத்­து­வ­தற்­கான முழு விவ­ரங்­க­ளும் தலை­மைக்கழ­கத்­தால் மாவட்­டக் 
கழ­கங்­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">அந்த வழி­காட்­டு­தல்­க­ளின்­படி,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">திரா­விட மாடல் ஆட்­சி­யின் சாத­னை­களை விளக்­கி­டும் வகை­யி­லும், தமி­ழர்­கள்அனை­வ­ரும் பங்­கேற்­றி­டும் வகை­யி­லான கலை – இலக்­கிய – விளை­யாட்­டுப் போட்­டி­க­ளு­டன் திரா­வி­டப் பொங்­கல் விழாவை ஊர்­தோ­றும் சிறப்­பாக 
நடத்­தி­டு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">பிறக்­கின்ற புத்­தாண்டு 2026 – அது, திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்­தி­டும் ஆண்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">இரு­ளில் பிறக்­கும் புத்­தாண்டை விடி­யச் செய்­யும் உத­ய­சூ­ரி­யன் போல, தமிழ்­நாட்­டின் விடி­யல் வெளிச்­ச­மா­கக் கழக ஆட்சி தொடர்ந்­தி­டும்! அனை­வ­ருக்­கும் மீண்­டும், உங்­க­ளில் 
ஒரு­வ­னான என்­னு­டைய இனிய 
ஆங்­கி­லப் புத்­தாண்டு நல்­வாழ்த்­து­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="15">அன்­பு­டன்,
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">மு.க.ஸ்டாலின்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திரு­வள்­ளு­வர் ஆண்டு 2056</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> மார்கழி 16
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">31–12–2025.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>