<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,940,959,1492" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Feb 01 2026 22:50:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260202T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="02022026-CBE-08" position.sequence="08" ex-ref="02022026-CBE-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="33">தி.மு.கழகத்தின் சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="33"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="57">தமிழ்நாடு முழுவதும் ‘‘தமிழ்நாடு தலைகுனியாது’’ – 22 முன்னணி பேச்சாளர்களின் பரப்புரைப் பயணம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="40">டி.கே.எஸ்.இளங்கோவன் – நா.எழிலன் – கனிமொழி என்.வி.என்.சோமு பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, பிப். 2 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தி.மு. கழ­கத்­தின் சார்­பில் திரா­விட மாடல் அர­சின் சாத­னை­க­ளை­யும் ஒன்­றிய அர­சின் வஞ்­ச­கத்­தை­யும் மக்­க­ளி­டம் எடுத்­துச் சொல்­லும் வகை­யில் தமிழ்­நாடு முழு­வ­தும் ‘தமிழ்­நாடு தலை­கு­னி­யாது’ பரப்­பு­ரைப் பய­ணம்! *234 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளி­லும் கழ­கத்­தைச் சேர்ந்த 22 முன்­னணி பேச்­சா­ளர்­கள் பரப்­புரை மேற்­கொள்­கின்­ற­னர் என கழ­கச் செய்­தித் தொடர்­பு தலைவர்  டி.கே.எஸ். இளங்­கோ­வன், சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மருத்­து­வர் நா.எழி­லன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கனி­மொழி என்.வீ.என்.சோமு ஆகி­யோர் 31.01.2026 அன்று சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தது குறித்த செய்­திக்­கு­றிப்­பில் தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் இருக்­கும் 234 சட்­ட­மன்ற தொகு­தி­க­ளுக்­கும் சென்று மக்­களை சந்­தித்து மக்­க­ளோடு இருந்து இது­வரை கழ­கத் தலை­வர் மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யி­லான அரசு தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு என்­னென்ன நலத் திட்­டங்­க­ளைக் கொண்டு வந்­தி­ருக்­கி­றது என்­பதை எடுத்­துச் சொல்­வ­தற்­காக ’தமிழ்­நாடு தலை­கு­னி­யாது’ பரப்­பு­ரைப் பய­ணத்­தைத் தலைமை கழ­கம் அறி­வித்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மக்­க­ளு­டன் இருந்து மக்­க­ளோடு வாழ்ந்து மக்­க­ளு­டைய வீடு­க­ளி­ லேயே உண­வ­ருந்தி அவர்­க­ளுக்கு செய்­தி­ருக்­கின்ற திட்­டங்­களை விளக்­க­மாக சொல்லி, திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தின் மீது சொல்­லப்­ப­டு­கிற குற்­றச்­சாட்­டு­க­ளைக் களை­யெ­டுப்­ப­தற்­காக இந்­தப் பரப்­பு­ரைத் திட்­டம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொது­வாக 2021 ஆம் ஆண்டு கழக அரசு அமைந்த பிறகு மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யி­லான ஆட்சி, அனைத்­து­த­ரப்பு மக்­க­ளுக்­கும் பல்­வேறு நலத்­திட்­டங்­களை வழங்கி இருக்­கி­றது. குறிப்­பாக கல்வி, மருத்­து­வம், மக­ளிர் முன்­னேற்­றம் ஆகிய மூன்று துறை­க­ளில் அனைத்து மக்­க­ளுக்­கு­மான பல நல்ல திட்­டங்­களை வழங்கி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பள்­ளி­க­ளில் இடை­நிற்­றலை தடுக்­கும் வகை­யில் காலை உணவு திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வர் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். காலை­யில் பிள்­ளை­க­ளுக்கு உணவு தயா­ரித்­துக் கொடுக்க சிர­மப்­ப­டு­கிற நிலையை மாற்­றும் வகை­யில் மாண­வர்­க­ளுக்கு பள்­ளிக்­கூ­டத்­தி­லேயே காலை உணவை வழங்கி வரு­கி­றார். இதன் மூலம் இடை­நிற்­றல் தடுக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ்­நாட்­டில் உள்ள எல்­லோ­ரும் கல்வி கற்க வேண்­டும் என்ற ஒற்றை நோக்­கத்­தில் இந்த திட்­டத்தை முத­ல­மைச்­சர் 
அறி­வித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பல்­வேறு பணி­க­ளுக்கு செல்­கிற பெண்­க­ளுக்­குக் கிடைக்­கிற ஊதி­யம் குறை­வாக இருக்­கும் அதே நேரத்­தில் அவர்­கள் பய­ணிக்க வேண்­டிய தூரம் அதி­க­மாக இருக்­கும். இது போன்ற நிலை­யில் பெண்­க­ளுக்கு சிர­மம் ஏற்­ப­டும். இதை தடுப்­ப­தற்­காக விடி­யல் பய­ணம் என்ற பெய­ரில் தமிழ்­நாட்டு பெண்­கள் தங்­க­ளு­டைய பணிக்­குக் கட்­ட­ண­மின்றி சென்று வரு­வ­தற்­கான திட்­டத்தை அறி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பெண்­கள் பொது­வாக தங்­க­ளு­டைய தேவை­க­ளுக்­காக தங்­க­ளு­டைய கண­வ­ரையோ, பிள்­ளை­ க­ளையோ நம்பி இருக்க வேண்­டிய சூழ்­நிலை இருந்­தது. அதை தடுப்­ப­தற்­காக அவர்­க­ளு­டைய சுய தேவை­க­ளுக்­காக மாதம்­தோ­றும் ரூ.1000 வழங்­கும் ‘கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டத்­தை­யும்’ முத­ல­மைச்­சர் அறி­வித்து செயல்­ப­டுத்தி வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மருத்­து­வ­ம­னைக்கு சென்று சிகிச்சை பெற முடி­யா­த­வர்­க­ளுக்கு ‘இல்­லம் தேடி மருத்­து­வம்’ என்ற திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி அவர்­கள் வீட்­டுக்கே மருத்­துவ உத­வியை வழங்­கக்­கூ­டிய திட்­டத்­தை­யும் அறி­வித்து அது­வும் நடை­மு­றை­யில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இப்­படி அனைத்து தரப்­பி­லும் முக்­கி­ய­மாக கல்வி, மருத்­து­வம், பெண்­கள் முன்­னேற்­றம் உள்­ளிட்ட துறை­க­ளில் பல சீரிய திட்­டங்­களை கழக அரசு வழங்கி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால், இதற்கு உரிய ஒத்­து­ழைப்பை, ஒன்­றிய அரசு வழங்­கு­கி­றதா என்­றால் இல்லை. குறிப்­பாக மாநில அர­சு­க­ளின் மிகப்­பெ­ரிய நிதி வரு­வாய் என்­பது விற்­பனை வரி­யின் மூலம் காலங்­கா­ல­மாக கிடைத்து வந்­தது. ஆனால் இந்த பாஜக அரசு விற்­பனை வரி என்­ப­தையே நிறுத்­தி­ விட்டு ஜிஎஸ்டி என்ற பெய­ரில் அதி­கா­ரத்தை எடுத்­துக்­கொண்டு, அதி­லி­ருந்து வரும் வரு­வாயை மாநி­லங்­க­ளுக்கு பகிர்ந்து அளிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நேர­டி­யாக மக்­க­ளுக்கு செய்ய வேண்­டிய பல திட்­டங்­களை மாநில அர­சு­தான் செய்ய வேண்­டும். கல்வி, மருத்­துவ வசதி, வீடு வழங்­கு­தல், உணவு வழங்­கு­தல், பெண்­கள் முன்­னேற்­றம் போன்ற திட்­டங்­களை எல்­லாம் செய்­கிற அதி­கா­ரம் இந்­திய அர­சி­ய­ல­மைப்பு சட்­டப்­படி மாநில அர­சின் பட்­டி­ய­லில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் ஒன்­றிய அர­சுக்கு வெளி­யு­றவு, படை­களை நடத்­து­வது, விமா­னம் செலுத்­து­வது இது போன்ற துறை­க­ளின் அதி­கா­ரம்­தான் இருக்­கி­றது. நேர­டி­யாக மக்­க­ளுக்கு திட்­ட­மிட்டு நிறை­வேற்ற வேண்­டிய பொறுப்­பில் இருக்­கிற மாநில அர­சுக்கு நிதி தரா­மல் வஞ்­சிக்­கி­றது ஒன்­றிய அரசு; எதை கேட்­டா­லும் 
தர முடி­யாது என்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எங்­க­ளு­டைய திட்­டத்­துக்கு கட்­டுப்­பட்­டால்­தான் எங்­க­ளு­டைய கொள்­கை­களை ஏற்­றுக்­கொண்­டால்­தான் நாங்­கள் நிதி தரு­வோம் என்று ஒரு அமைச்­சரே வந்து இங்கே சொல்லி இருக்­கி­றார்; இல்­லை­யென்­றால் தர­மாட்­டோம் என்று சொல்லி இருக்­கி­றார்; மாநி­லங்­களை வஞ்­சிக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இப்­ப­டிப்­பட்ட அரசு ஒன்­றி­யத்­தில் இருக்­கும் பொழுது இதை­யும் மீறி தமிழ்­நாட்டு மக்­கள்­தான் முக்­கி­யம் என்ற அள­வில் தமிழ்­நாடு அரசை முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் சிறப்­பாக நடத்­திச் செல்­கி­றார். ஒன்­றிய அரசு துரோ­கம் செய்­கிற அர­சாக இருக்­கி­றது. ஒரு நாட்­டின் பிர­த­மரே இங்கு வந்து எய்ம்ஸ் என்ற ஒரு மருத்­துவ கல்­லூ­ரியை கட்­டு­வ­தற்கு அடிக்­கல் நாட்­டி­னார்; இன்­று­வரை எய்ம்ஸ் மருத்­து­வ­மனை வர­வில்லை. மருத்­துவ கல்­லூரி வர­வில்லை என்­றால் யாரை ஏமாற்ற பிர­த­மர் இங்கு வரு­கி­றார் என்­பதை புரிந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பிர­த­மர் எப்­பொ­ழுது வந்­தா­லும் மக்­கள் இவர் இந்த முறை எதை சொல்லி ஏமாற்ற போகி­றாரோ என்­கிற எண்­ணத்­தில் இருக்­கி­றார்­கள். அந்த அள­வுக்கு ஒன்­றிய அரசு தமிழ்­நாட்­டின் மீது தங்­க­ளு­டைய வெறுப்பை காட்­டு­கி­றது. தமி­ழர்­க­ளின் பெரு­மையை சொல்­லக்­கூ­டியதமி­ழர்­க­ளின் தொன்­மையை 
சொல்­லக்­கூ­டிய கீழடி ஆய்வை ஏற்று கொள்ள மறுக்­கி­றார்­கள். தமிழ்­நாட்­டுக்கு என்று எந்த திட்­டத்­தை­யும் வழங்­கு­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டுக்கு ரயில்­வே­யில் இவ்­வ­ளவு தந்­தோம் என்று சொல்­கி­றார்­கள். ராமேஸ்­வ­ரம் ரயில் நிலை­யத்தை புன­ர­மைப்­ப­தற்கு எட்டு கோடி ரூபாய் ஒதுக்­கி­னார்­கள். காசி ரயில் நிலை­யத்தை புன­ர­மைப்­ப­தற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்­கி­றார்­கள். இப்­படி தமிழ்­நாட்­டுக்கு என்­றால் ஒரு வகை­யி­லும் வட மாநி­லங்­க­ளுக்கு என்­றால் ஒரு வகை­யி­லும் செயல்­ப­டு­கிற அர­சாக ஒன்­றிய அரசு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த பாஜக அரசு தமிழ்­நாட்டை திட்­ட­மிட்டு புறக்­க­ணிக்­கி­றது. மதக் கல­வ­ரங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றது. அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தை மீறு­கி­றது. இந்­திய அர­சி­ய­ல­மைப்பு சட்­டம் பிரிவு 25, மன­சாட்­சிப்­படி நடந்து கொள்­ளும் உரிமை, எந்த மதத்­தை­யும் பின்­பற்­று­வ­தற்­கான உரிமை இவற்றை வழங்கி இருக்­கி­றது. அது அடிப்­படை உரிமை. ஆனால் அதை மீறி இந்த நாட்டை மத­வாத நாடாக மாற்­றும் முயற்­சி­யில் ஒன்­றிய அரசு இருக்­கி­றது. இது போன்ற விஷ­யங்­க­ளில் தேவை­யில்­லாத குழப்­பத்தை உரு­வாக்­கு­கிற அர­சாக, மக்­க­ளி­டம் அமை­தி­யை­யும் ஒற்­று­மை­யை­யும் குலைக்­கிற அர­சாக ஒன்­றிய அரசு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது போன்ற ஒன்­றிய அரசு தமிழ்­நாட்­டுக்கு இழைக்­கும் அநீ­தி­க­ளுக்கு எதி­ரான பிரச்­சா­ரத்­தை­யும் எங்­க­ளு­டைய சாத­னை­களை குறித்த பிரச்­சா­ரத்­தை­யும் எங்­க­ளு­டைய கழ­கத்­தின் முன்­னணி சொற்­பொ­ழி­ வா­ளர்­கள் 22 பேர் தமிழ்­நாட்­டின் அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் தொகு­தி­வா­ரி­யாக சென்று மக்­க­ளி­டையே எடுத்து சொல்ல இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதற்­காக ‘தமிழ்­நாடு தலை­கு­னி­யாது’ என்ற தலைப்­பிலே இந்த பிரச்­சார பய­ணம்  01.02.2026 அன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>