<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,888,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Feb 01 2026 22:51:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260202T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="02022026-CBE-10" position.sequence="10" ex-ref="02022026-CBE-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="20">மாவட்டக் கழகச் செயலாளர் என். கௌதமன் பங்கேற்பு!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">நாகையில்  2102 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Krishnagiri1_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நாகை,பிப்.2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நாகை மாவட்ட ஆட்­சி­ய­ர­கத்­தில் 2102 பய­னா­ளி­க­ளுக்கு ரூ.85.26 இலட்­சம் மதிப்­பீட்­டில் இல­வச வீட்­டு­ம­னைப் பட்­டாக்­களை பள்ளி கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நாகை மாவட்­டம் திரு­மு­ரு­கல் ஒன்­றி­யம் நரி­ம­ணம் ஊராட்­சி­யில் சுள்­ளங்­கால் கிரா­மத்­தில் நாகை சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தொகுதி மேம்­பாட்­டுத் திட்­டம் மற்­றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு­தித்­திட்­டத்­தின் கீழ் ரூ.15.35 இலட்­சம் மதிப்­பீட்­டில் புதிய அங்­கன்­வாடி கட்­டி­டம், நாகப்­பட்­டி­னம் சிக்­கல் ஊராட்­சி­யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறு­தித்­திட்­டத்­தின் கீழ் ரூ.15 இலட்­சம் மதிப்­பீட்­டில் நியா­ய­வி­லைக்­கடை கட்­டி­டம், சிக்­கல் ஊராட்சி ஒன்­றிய தொடக்­கப் பள்­ளி­யில் குழந்­தை­நேய பள்ளி உட்­கட்­ட­மைப்பு மேம்­பாட்­டுத்­திட்­டத்­தின் கீழ் ரூ.34.50 இலட்­சம் மதிப்­பீட்­டில் புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள இரண்டு வகுப்­பறை கட்­டி­டம் திறப்பு விழா மற்­றும் நாகை நக­ராட்­சிக்­குட்­பட்ட தாம­ரைக்­கு­ளத்­தில் பொழுது போக்­கிற்­கான படகு சவாரி தொடக்க விழா, கல்வி தன்­மு­னைப்­புத் திட்­டத்­தில்  இசை, நட­னம், நாட­கம் மற்­றும் இசை கரு­வி­கள் பயிற்சி மைய திறப்பு விழா, நாகை, வெளிப்­பா­ளை­யம் அரசு மருத்­து­வ­மனை வளா­கத்­தில் ஆத­ர­வற்ற மன­ந­லம் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கான அவ­சர சிகிச்சை மற்­றும் மீள் மையம் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்­சி­கள் நடை­பெற்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நிகழ்ச்­சி­க­ளுக்கு நாகை மாவட்ட ஆட்­சித் தலை­வர் ப.ஆகாஷ் தலைமை தாங்­கி­னார்.நாகை மாவட்­டக் கழக செய­லா­ள­ரும், தமிழ்­நாடு மீன் வளர்ச்­சிக் கழக தலை­வ­ரு­மான என். கௌத­மன், நாகை சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஜெ.முகம்­மது ஷா நவாஸ் ஆகி­யோர் முன்­னிலை வைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நிகழ்ச்­சி­யில்  பள்ளி கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில்­ம­கேஷ்­பொய்­யா­மொழி கலந்­து­கொண்டு நரி­ம­ணம் ஊராட்­சி­யில் சுள்­ளங்­கால் கிரா­மத்­தில்  ரூ.15.35 இலட்­சம் மதிப்­பீட்­டில் புதிய அங்­கன்­வாடி கட்­டி­டம், நாகை ஒன்­றி­யம் சிக்­க­லில் கீழ் ரூ.15 இலட்­சம் மதிப்­பீட்­டில் நியா­ய­ வி­லைக்­கடை கட்­டி­டம், சிக்­கல் ஊராட்சி ஒன்­றிய தொடக்­கப் பள்­ளி­யில் ரூ.34.50 இலட்­சம் மதிப்­பீட்­டில் புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள இரண்டு வகுப்­பறை கட்­டி­டம் ஆகி­ய­வற்றை திறந்து வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அதை தொடர்ந்து நாகை தாம­ரைக்­கு­ளத்­தில் பொழுது போக்­கிற்­கான படகு சவா­ரி­யினை தொடங்கி வைத்து, நாகை­யில் கல்வி தன்­மு­னைப்­புத் திட்­டத்­தில்  இசை, நட­னம், நாட­கம் மற்­றும் இசை கரு­வி­கள் பயிற்சி மையத்தை திறந்து வைத்­தார். பின்­னர் நாகை, வெளிப்­பா­ளை­யம் அரசு மருத்­து­வ­மனை வளா­கத்­தில் ஆத­ர­வற்ற மன­ந­லம் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கான அவ­சர சிகிச்சை மற்­றும் மீள் மையம் திறந்து வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நாகை மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்ற விழா­வில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் நலத்­துறை சார்­பில் 37 மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு ரூ.37 இலட்­சத்து 66 ஆயி­ரம் மதிப்­பி­லான இணைப்­புச்­சக்­க­ரம் பொருத்­தப்­பட்ட பெட்­ரோல் ஸ்கூட்­டர்­க­ளை­யும், 8 மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு ரூ.1 இலட்­சத்து 15ஆயி­ரம் 920 மதிப்­பி­லான இல­வச திறன்­பே­சி­யி­னை­யும், 3 மாற்­றுத்­தி­ற­னா­ளி­ க­ளுக்கு ரூ.3 இலட்­சத்து 43 ஆயி­ரம் 200 மதிப்­பி­லான பேட்­ட­ரி­யால் இயங்­கும் சக்­கர நாற்­கா­லி­யி­னை­யும், 3 மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு ரூ.19 ஆயி­ரம் மதிப்­பி­லான மோட்­டார் பொருத்­தப்­பட்ட இல­வச தையல் இயந்­தி­ரங்­கள் என மொத்­தம் 51 மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு ரூ.42 இலட்­சத்து 44 ஆயி­ரம் 797 மதிப்­பி­லான நலத்­திட்­டங்­க­ளை­யும், அங்கு நடை­பெற்ற விழா­வில் 2102 பய­னா­ளி­க­ளுக்கு ரூ.85.26 இலட்­சம் மதிப்­பீட்­டில் இல­வச வீட்­டு­ம­னைப் பட்­டாக்­களை பள்­ளிக்­கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி வழங்கி சிறப்­பு­ரை­ யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இந்­நி­கழ்ச்­சி­யில் முன்­னாள் அமைச்­சர் உ. மதி­வா­ணன், கீழ்­வே­ளூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் நாகை மாலி,  மாவட்ட வரு­வாய் அலு­வ­லர் .வ.பவ­ணந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்­கு­நர்  கே.ஸ்ருதி, கழ­கத் தீர்­மா­னக் குழு உறுப்­பி­னர் என்.வி.காம­ராஜ், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் க.ராஜேந்­தி­ரன், ப.கோவிந்­த­ரா­ஜன், க.மறை­மலை, மாவட்ட கழக பொரு­ளா­ளர் மு.லோக­நா­தன், துணை செய­லா­ளர் ரவிச்­சந்­தி­ரன் கழக மீன­வர் அணி துணை செய­லா­ளர் ஜி. மனோ­க­ரன், ஒன்­றிய கழக செய­லா­ளர்­கள் ஆர்.டி.எஸ். சர­வ­ணன், செல்வ.செங்­குட்­டு­வன், மகா குமார், சிக்­கல் என். ஆனந்த்,  என்.சதா­சி­வம், உத­யம் வே.முரு­கை­யன், நகர கழக செய­லா­ளர்­கள் இரா.மாரி­முத்து, எம். ஆர்.செந்­தில்­கு­மார், பொதுக்­குழு உறுப்­பி­னர் எல்.எஸ் ஈ. பழ­னி­யப்­பன், திட்­டச்­சேரி பேரூர் செய­லா­ளர் முக­மது சுல்­தான், சார்பு அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் பி.என்.கார்த்தி, இளம்.சுந்­தர், எஸ்.பால்­ராஜ், ஆர்.ஆர். குலோத்­துங்­கன் ஆர்.ஏ.டி. அண்­ணா­துரை, மாவட்ட சார்பு அணி­க­ளின் துணை அமைப்­பா­ளர்­கள் ஷாஜ­கான்,  சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி­கள், ஒன்­றிய, நகர நிர்­வா­கி­கள், நகர் மன்ற உறுப்­பி­னர்­கள் கழ­கத்­தி­னர் பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், தனியார் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் 1,806 மாணவ மாணவிகள்  , பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பையூர் அரசு தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் 295 மாணவ மாணவியருக்கு  “உலகம் உங்கள் கையில்” என்னும் திட்டத்தின் கீழ், மடிக்கணினிகளை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ,மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் ஆகியோர் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சத்யபாமா ,பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>