<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,499,957,1255" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Feb 02 2026 03:40:06 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260202T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="02022026-CHN-05" position.sequence="05" ex-ref="02022026-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="106">நம் தோழ­மை­தான் மத­வா­தத்தை – எதேச்­சா­தி­கா­ரத்தை வீழ்த்­தும்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் நூற்­றாண்டு நிறைவு விழா­வில் </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="48">கழ­கத் தலை­வர் – முதல்­வர் மு.க.ஸ்டாலின் உரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை,பிப்.2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய கொள்­கை­கள் இங்கு நிலை­பெற வேண்­டும்! இந்­தத் தோழ­மை­தான், எதேச்­சா­தி­கா­ரத்தை வீழ்த்­தும்!” என்­றும், – “இந்­தத் தோழ­மை­தான், மத­வா­தத்தை வீழ்த்­தும்! இந்­தத் தோழ­மை­தான், சர்­வா­தி­கா­ரத்தை வீழ்த்­தும்!” என்­றும், கழ­கத் தலை­வ­ரும் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரு­மான  மு.க. ஸ்டாலின் 
அவர்­கள் நேற்று (01–02–2026) சென்­னை­யில் நடை­பெற்ற இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்சி 
நூற்­றாண்டு நிறைவு விழா­வில் கலந்­து­
கொண்டு உரை­யாற்­று­கை­யில் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வி­ழா­வில் – கழ­கத் தலை­வர் – முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஆற்­றிய உரை 
வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘எல்­லா­ருக்­கும் எல்­லாம்’ எனும் சமத்­து­வச் சமு­தா­யத்தை அமைக்க பாடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கும் தோழர்­க­ளின், இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் நூற்­றாண்டு நிறைவு விழா­வில் பங்­கேற்று, உரை­யாற்­று­வதை, எனக்­குக் கிடைத்த பெரு­மை­யாக எண்ணி நான் மகிழ்ச்சி அடை­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கம்­யூ­னி­சம் என்­பது, ஒரு உணர்வு! மனி­தர்­கள் அனை­வ­ருக்­குள்­ளும் உரு­வாக வேண்­டிய உணர்வு! அந்த உணர்­வுக்கு அர­சி­யல் வடி­வம் கொடுத்து – செங்­கொ­டியை ஏந்தி உழைத்­துக் கொண்­டி­ருக்­கும் உங்­க­ளின் உழைப்­பிற்கு ஈடு இணை­யில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த இயக்­கத்­திற்­கா­கப் பாடு­பட்ட தோழர் அய்யா நல்­லக்­கண்ணு அவர்­க­ளும் நூற்­றாண்­டைக் கடந்­தி­ருக்­கி­றார். இது எந்த இயக்­கத்­தி­லும் இல்­லாத மிகப்­பெ­ரிய சாதனை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நூற்­றாண்­டைக் கொண்­டா­டும் இந்த நேரத்­தில், இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் அகில இந்­தி­யத் தலை­மைக்­கும் – தமிழ்­நாட்­டில் இயக்­கத்தை வலி­மை­யாக நடத்­திக் கொண்­டி­ருக்­கும் தோழர்­க­ளுக்­கும் – திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வ­ராக மட்­டு­மல்ல; திரா­விட மாட­லால் தமிழ்­நாட்டை வளர்த்­தெ­டுக்­கும் முத­ல­மைச்­ச­ராக மட்­டு­மல்ல; உங்­க­ளில் ஒரு­வ­னாக நான் மன­தார வாழ்த்­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட இயக்­கத்­திற்­கும் – பொது­வு­டைமை இயக்­கத்­திற்­கும் இலக்கு ஒன்­று­தான்! எல்­லோ­ருக்­கும் எல்­லாம் கிடைக்க வேண்­டும் என்­ப­து­தான் நம்­மு­டைய ஒற்றை இலக்கு! அத­னால்­தான், திரா­விட இயக்­கக் கொடி­க­ளில் சிவப்பு இருக்­கி­றது! திரா­விட முன்­னேற்­றக் கழக கொடி­யி­லும் சரி­பா­தி­யாக சிவப்பு இருக்­கி­றது! நம்­மு­டைய கொள்­கை­க­ளில் – அர­சி­யல் வழி­மு­றை­க­ளில் – சிறு சிறு வேறு­பா­டு­கள் இருந்­தா­லும், நம்­மு­டைய பொது இலக்கு சமத்­து­வச் சமு­தா­யம்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத­னால்­தான், இந்த மேடை­யில், தோழ­மைக் கட்­சி­யி­னர் அத்­தனை பேரும், இந்த நூற்­றாண்டு ஆல­ம­ரத்தை வாழ்த்த ஒன்று கூடி­யி­ருக்­கி­றோம்! இந்த ஒற்­று­மை­தான், இந்­திய நாட்­டின் வளர்ச்­சிக்­குத் தேவை­யான ஒற்­றுமை. கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய கொள்­கை­கள் இங்கு நிலை­பெற வேண்­டும்; அதி­க­மான உழைப்பை கொடுக்க வேண்­டும் என்று, நான் தொடர்ந்து சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட இயக்­கத்­திற்­கும் – கம்­யூ­னிஸ்ட் இயக்­கத்­திற்­கும் உள்ள நட்பு உங்­கள் அனை­வ­ருக்­கும் நன்­றா­கத் தெரி­யும்! இது நூறாண்டு கால­மா­கத் தொட­ரும் நட்பு! தலை­வர் கலை­ஞர் அவர்­களோ,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“திரா­விட இயக்­கம் உரு­வா­கா­மல் போயி­ருந்­தால், நானே கம்­யூ­னிஸ்ட் ஆகி­யி­ருப்­பேன்” என்று சொன்­னார். அனைத்­திற்­கும் மேல், எனக்கு ஸ்டாலின் என்று பெய­ரும் வைத்­தார். எனக்­குள்­ளும் அந்த உணர்வு ஓடு­வ­தால்­தான், உங்­க­ளில் ஒரு­வ­னாக எப்­போ­தும் உங்­க­ளு­டன் இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">காரல் மார்க்ஸ் சிலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கு சொன்­னார்­களே, இரண்டு நாட்­க­ளுக்கு முன்­பு­கூட, சிவ­கங்கை மாவட்­டத்­தில் இருக்­கும் சிரா­வ­ய­லில், உத்­த­மர் காந்தி – தோழர் ஜீவா சந்­திப்­பின் நினை­வாக, தமிழ்­நாடு அர­சின் சார்­பில் அமைத்­தி­ருக்­கும் அரங்­கத்தை நான் திறந்து வைத்­தேன். அதே­போன்று, தொடர்ந்து, சென்னை கன்­னி­மாரா நூலக வளா­கத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள காரல் மார்க்ஸ் சிலையை, வரும் 6–ஆம் நாள் திறந்து வைக்க இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு, உங்­க­ளில் ஒரு­வ­னாக நானும் – என்­னில் பாதி­யாக நீங்­க­ளும் இருப்­ப­தால்­தான், ஸ்டாலின் என்று என்னை அழைக்­கும்­போ­தெல்­லாம், என்­னுள் சிவப்பு வந்து குடி­கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நமக்­குள் இருக்­கும் நட்பு என்­பது, தேர்­தல் அர­சி­யலை கடந்த நட்பு! சாதி­ய­வா­தம் – வகுப்­பு­வா­தம் – பெரும்­பான்மை வாதம் – எதேச்­சா­தி­கார வாதம் என்று, மக்­களை ஒடுக்­கும் அத்­த­னைக்­கும் எதி­ராக, ஜன­நா­ய­கச் சக்­தி­கள் ஒற்­று­மை­யு­டன் ஓர­ணி­யில் நின்று பணி­யாற்ற வேண்­டும் என்ற நோக்­கத்­தில் உரு­வான தோழமை, நம்­மு­டைய தோழமை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் உறு­தி­யாக சொல்­கி­றேன்... இந்­தத் தோழ­மை­தான், பாசி­சத்தை ஒழிக்­கும் – வீழ்த்­தும்! இந்­தத் தோழ­மை­தான், எதேச்­சா­தி­கா­ரத்தை வீழ்த்­தும்! இந்­தத் தோழ­மை­தான், மத­வா­தத்தை வீழ்த்­தும்! இந்­தத் தோழ­மை­தான், சர்­வா­தி­கா­ரத்தை வீழ்த்­தும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">எண்­ணங்­க­ளுக்­காக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அமைந்­தி­ருக்­கும் கூட்­டணி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய இந்த நோக்­கங்­க­ளுக்கு எதி­ராக இருப்­ப­வர்­கள், என்­னென்­னவோ கன­வு­கள் கண்­டார்­கள்... இந்த ஒற்­று­மை­யைச் சிதைக்க முடி­யுமா என்று பார்த்­தார்­கள்! ஆனால், அவர்­க­ளின் எண்­ணங்­கள்­தான் சிதைந்து போயி­ருக்­கி­றது! நம்­மு­டைய இந்­தத் தோழ­மையை எந்­தச் சக்­தி­யா­லும் பிரிக்க முடி­யாது! ஏன் என்­றால், இது எண்­ணிக்­கைக்­காக அமைந்த கூட்­டணி அல்ல; எண்­ணங்­க­ளுக்­காக அமைந்­தி­ருக்­கும் கூட்­டணி! நம்­மு­டைய இந்­திய நாட்­டை­யும் – தன்­மா­ன­மிக்க தமிழ்­நாட்­டை­யும் காக்க வேண்­டும் என்ற உயர்ந்த எண்­ணத்தை, லட்­சி­ய­மா­கக் கொண்டு அமைந்­தி­ருக்­கும் கூட்­டணி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">இந்­திய நாட்­டுக்கு மிகப் பெரும் ஆபத்து!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பாசிச பா.ஜ.க., தன்­னு­டைய ஆக்­டோ­பஸ் கொடுங்­க­ரங்­களை அனைத்­துப் பக்­க­மும் நீட்டி, கப­ளீ­க­ரம் செய்து கொண்­டி­ருக்­கி­றது! இந்­திய நாடு, இது­வரை காப்­பாற்றி வைத்து வந்த அனைத்து விழு­மி­யங்­க­ளை­யும் சிதைக்­கும் செயலை, ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்து கொண்டு வரு­கி­றது! இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் கோட்­பா­டு­களை, தங்­க­ளுக்கு ஏற்ற மாதிரி சிதைக்­கும் வேலை­யில் ஈடு­பட்டு வரு­கி­றார்­கள். வேற்­று­மை­யில் ஒற்­றுமை என்­பதை அழித்து, ஒற்­றைத் தன்மை கொண்ட நாடாக மாற்ற நினைக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பா.ஜ.க. எவ்­வ­ளவு ஆபத்­தா­னது – எவ்­வ­ளவு குறு­கிய சிந்­தனை கொண்­டது – எந்­த­ள­விற்­குப் பன்­மு­கத்­தன்­மைக்கு எதி­ரா­னது என்­றால், அவர்­க­ளைப் பொறுத்­த­வ­ரைக்­கும், ஒரு நாடு என்­றால், அதில் ஒரு மதம் – ஒரு மொழி – ஒரு பண்­பாடு – ஒரே ஒரு தலை­மை­தான் இருக்க வேண்­டும்! மாநி­லங்­க­ளின் வளத்­தைச் சூறை­யாடி, ஒன்­றி­யத்­தில் குவிக்­கி­றார்­கள்! மாநில அர­சு­க­ளுக்கு எந்த அதி­கா­ர­மும் இருக்­கக் கூடாது என்று நினைக்­கி­றார்­கள்! மதச்­சார்­பின்மை – சோச­லி­சம் – சம­நீதி – சமூ­க­நீதி – பொது­வு­டைமை – பொது உரிமை உள்­ளிட்ட சொற்­க­ளைக் கேட்­டாலே, பா.ஜ.க.வின­ருக்­குக் கசக்­கி­றது! இந்­தச் சொற்­களை எல்­லாம், ஆட்­சி­யில் இருந்து மட்­டு­மல்ல – அக­ரா­தி­யில் இருந்தே அழிக்க வேண்­டும் என்று துடி­யா­கத் துடிக்­கி­றார்­கள்! பரந்து விரிந்த நம்­மு­டைய இந்­திய நாடு, இப்­போது மிகப்­பெ­ரிய நெருக்­க­டிக்­கும் – ஆபத்­துக்­கும் உள்­ளாகி இருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பா.ஜ.க. நினைத்­தது போன்று, 400 இடங்­கள், 370 இடங்­கள் என்று வெற்றி பெற்­றி­ருந்­தால், இப்­போது இருப்­ப­தை­விட நிலைமை இன்­னும் மோச­மாகி இருக்­கும்! இந்­தி­யா­வில் இருக்­கும் ஜன­நா­ய­கச் சக்­தி­கள் அனைத்­தை­யும் இன்­றைக்கு இணைத்து, இந்­தியா கூட்­ட­ணியை உரு­வாக்கி, பா.ஜ.க.வின் வேகத்­தைக் குறைத்­தி­ருக்­கி­றோம்! ஆனா­லும், பெரும்­பான்மை இல்­லாத நேரத்­தி­லேயே, பா.ஜ.க. தன்­னு­டைய கொடூ­ர­மான நகங்­க­ளைப் பயன்­ப­டுத்தி, ஜன­நா­ய­கத்­திற்கு காயங்­களை ஏற்­ப­டுத்­திக் கொண்டு இருக்­கி­றது! இந்­தச் சூழ­லில், அனை­வ­ரும் குறிப்­பிட்ட நாம் எச்­ச­ரிக்­கை­யா­க­வும் – கவ­ன­மா­க­வும் இருக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">துரோ­கி­கள் – கொத்­த­டி­மை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">முது­கில் பா.ஜ.க.!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏன் என்­றால், வரப்­போ­கும் சட்­ட­மன்­றத் தேர்­தல், தமிழ்­நாட்­டுக்­கும் – N.D.A. கூட்­ட­ணிக்­கும் நடக்­கும் தேர்­தல்! இதை மக்­கள் நன்­றா­கப் புரிந்து கொள்ள வேண்­டும்! தமி­ழுக்­கும் – தமி­ழி­னத்­திற்­கும் – தமிழ்­நாட்­டுக்­கும் – அடுக்­க­டுக்­காக துரோ­கங்­களை செய்­து­விட்டு, துரோ­கத்­திற்கு ஏற்ற கொத்­த­டி­மை­கள் அனை­வ­ரை­யும் ஒன்று சேர்த்து, அவர்­கள் முது­கில் ஏறி வரு­கி­றது, பா.ஜ.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">E.D. – I.T. – C.B.I. வழக்­கு­க­ளைக் காட்டி மிரட்டி அமைக்­கப்­பட்­டுள்ள அந்­தத் தேர்­தல் கூட்­ட­ணி­யின், தேர்­தல் பரப்­பு­ரைக்கு வந்த  பிர­த­மர் மோடி அவர்­கள், அ.தி.மு.க. என்ற பெய­ரையே சொல்­ல­வில்லை! ஏன், அவர் அ.தி.மு.க.வின் பெய­ரைச் சொல்­ல­வில்லை தெரி­யுமா? ஏன் என்­றால், அ.தி.மு.க. என்­பது தனிக்­கட்சி கிடை­யாது! பா.ஜ.க.வின் கிளை அமைப்பு! அந்­தக் கிளை அமைப்­பைச் சேர்ந்த பழ­னி­சாமி அவர்­கள், மோடி கொடுக்­காத வாக்­கு­று­தி­கள் அனைத்­தை­யும் இப்­போது கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முக்­கி­ய­மாக, மகாத்மா காந்தி பெய­ரி­லான நூறு நாள் வேலைத் திட்­டத்­தில், 50 நாட்­கள்­கூட வேலை­யைத் தரா­மல், ஒன்­றிய பா.ஜ.க. அரசு எப்­ப­டி­யெல்­லாம் சீர­ழித்­தது என்று, நாட்­டுக்கே நன்­றா­கத் தெரி­யும்! இப்­போது, தேசத்­தந்தை காந்­தி­யின் பெய­ரையே அழித்­தி­ருக்­கும் அந்­தத் திட்­டத்­தில், 125 நாட்­கள் வேலை தரப்­போ­வ­தாக பா.ஜ.க. சொல்­கி­றது! ஆனால் பழ­னி­சாமி அவர்­கள், 150 நாட்­கள்வேலை தரு­வோம் என்று, முத­லா­ளி­களை மிஞ்­சும் பர்ஃ­பார்­மென்ஸ்–ஐ இன்­றைக்­குச் செய்து கொண்­டி­ருக்­கி­றார். தமிழ்­நாட்­டில் எப்­ப­டி­யும் தோல்வி உறுதி என்ற கார­ணத்­தி­னால், பா.ஜ.க. அர­சும் இந்­தப் பட்­ஜெட்­டி­லும் நம்­மைப் புறக்­க­ணித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">டப்பா என்­ஜி­னின் லட்­ச­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த லட்­ச­ணத்­தில், நேர­டி­யாக பா.ஜ.க. ஆட்சி என்று சொல்ல கூச்­சப்­பட்டு, டபுள் எஞ்­சின்ஆட்சி என்று சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்! பா.ஜ.க. சொல்­லும் டபுள் எஞ்­சின் என்­பது டப்பா எஞ்­சின் என்று நாட்டு மக்­கள் நன்­றாக உணர்ந்­தி­ருக்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எடுத்­துக்­காட்­டுக்­குச் சொல்­கி­றேன்... போதை மருந்து கடத்­தலா? பா.ஜ.க. ஆளும் குஜ­ராத்­தைப் பாருங்­கள்! குற்­றச்­சம்­ப­வங்­களா? பா.ஜ.க. ஆளும் உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தைப் பாருங்­கள்! மாநி­லமே பற்றி எரி­வதை பார்க்க வேண்­டுமா? பா.ஜ.க. ஆட்சி செய்த மணிப்­பூ­ரைப் பாருங்­கள்! இன்­னும் சொல்­கி­றேன்... பட்­டி­ய­லின மக்­க­ளுக்கு எதி­ரான வன்­கொ­டு­மை­கள் அதி­க­மாக நடக்­கும் மாநி­லங்­க­ளாக, ஒன்­றிய அர­சின் புள்­ளி­வி­வ­ரங்­களே எந்த மாநி­லம் என்று சொல்­கி­றதே... உத்­த­ரப்­பி­ர­தே­சம் – ராஜஸ்­தான் – மத்­தி­யப் பிர­தே­சம்! இந்த மூன்று மாநி­லங்­க­ளி­லும் பா.ஜ.க.தான் ஆளும் கட்சி! சரி, முதல் மூன்று மாநி­லங்­கள் மட்­டும்­தானா? அடுத்த மூன்று இடங்­க­ளில் இருப்­பது யார்? பீகார் – ஒடிசா – மகா­ராஷ்­டிரா! இந்த மூன்று மாநி­லங்­க­ளி­லும் பா.ஜ.க.தான் ஆட்­சி­யில் இருக்­கி­றது. இது­தான் டப்பா எஞ்­சி­னின் லட்­ச­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாட்­டுக்கே முன்­னோ­டி­யான திட்­டங்­களை, தமிழ்­நாட்­டைப் பொறுத்­த­வ­ரைக்­கும் நாம் இன்­றைக்­குச் செயல்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம். அதி­க­மான வளர்ச்­சி­ய­டைந்த மாநி­ல­மா­கத் தமிழ்­நாட்டை திரா­விட மாடல் உயர்த்­தி­யி­ருக்­கி­றது! இங்கு பா.ஜ.க.வின் டப்பா எஞ்­சி­னுக்கு வேலையே கிடை­யாது! இதே உணர்­வைத்­தான், மக்­க­ளின் முகங்­க­ளில் மகிழ்ச்­சி­யாக நான் பார்க்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நமக்­கான ஆத­ரவு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அண்­மை­யில், இந்­தியா டுடே பத்­தி­ரி­கை­யும் – சி வோட்­டர்ஸ் நிறு­வ­ன­மும் இணைந்து நடத்­திய கருத்­துக் கணிப்­பில், நம்­மு­டைய கூட்­டணி 45 விழுக்­காடு ஆத­ர­வு­டன் முன்­னி­லை­யில் இருப்­ப­தா­கச் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள்! நான் உறு­தி­யா­கச் சொல்­கி­றேன், நமக்­கான ஆத­ரவு நிச்­ச­யம் இன்­னும் கூடு­த­லா­கத்­தான் இருக்­கும்! கருத்­துக்­க­ணிப்­பு­கள் – கருத்­துத்­தி­ணிப்­பு­கள் அனைத்­தி­லும் கவ­னத்­தைச் செலுத்தி, நம்­மு­டைய எண்­ணத்தை சித­ற­விட்­டு­விட வேண்­டாம்; மெத்­த­ன­மாக இருந்­து­விட வேண்­டாம். மக்­க­ளு­டன் இணைந்து நம்­மு­டைய பய­ணத்­தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்­டும்! தோழ­மைக் கட்­சி­யி­னர் அனை­வ­ரும் இன்­னும் வேக­மா­கப் பரப்­பு­ரை­க­ளைத் தொடங்க வேண்­டும் என்று உரி­மை­யு­டன் நான் கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் நாம் பொறுப்­பேற்று, நாம் பெறப்­போ­கும் வெற்றி – “பா.ஜ.க.வை வீழ்த்த முடி­யும்” என்ற நம்­பிக்­கையை ஒட்­டு­மொத்த இந்­தி­யா­விற்­கும் வழங்­கும் வெற்­றி­யாக இருக்க வேண்­டும்! ஒற்­றுமை இருக்­கும் இடத்­தில் பா.ஜ.க.வின் பாசிச எண்­ணம் ஒரு­போ­தும் பலிக்­காது என்­பதை நாம் மீண்­டும் நிரூ­பித்­துக் காட்­டு­வோம்! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>