<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,301,958,1231" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Feb 02 2026 03:41:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260202T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="02022026-CHN-12" position.sequence="12" ex-ref="02022026-CHN-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">பிப்­ர­வரி 11-ஆம் தேதி திரு­வி­டந்­தை­யில் கோலா­க­ல­மாக  நடை­பெற உள்ள மண்­டல  பி.எல்.ஏ. 2, பி.எல்.சி. சந்­திப்பு மாநாட்­டில்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">காஞ்சி வடக்கு மாவட்­டத்­தில் 30,000 பேர் அணிதிரண்டு பங்­கேற்பு!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="45"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">காஞ்சி வடக்கு மாவட்ட செயற்­குழு உறுப்­பி­னர்­கள் கூட்­டத்­தில் முடிவு! மாவட்­டச் செய­லா­ளர் - அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் தக­வல்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Anbarasanஉ_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">காஞ்­சி­பு­ரம், பிப்.2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பிப்­ர­வரி 11-ஆம் தேதி காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டம், கோவ­ளம் அருகே திரு­வி­டந்­தை­யில் நடை­பெற உள்ள சென்னை - விழுப்­பு­ரம் மண்­டல BLA-2, BLC சந்­திப்பு மாநாட்­டில் காஞ்­சி­பு­ரம் வடக்கு மாட்­டத்­தி­லி­ருந்து 30,000 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட BLA-2, BLC, BDA, BYO பங்­கேற்க செய்­வது என்று காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்ட செயற்­குழு கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப் பட்­டுள்­ள­தாக மாவட்­டச்செய­லா­ளர் - அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் தி.மு.கழக அவ­சர செயற்­குழு உறுப்­பி­னர்­கள் கூட்­டம் ஆலந்­தூர் கத்­திப்­பாரா மேம்­பா­லம் அரு­கில் உள்ள மாவட்ட தி.மு.க. அலு­வ­ல­கத்­தில் மாவட்ட அவைத்­த­லை­வர் த.துரை­சாமி தலை­மை­யில் நடை­பெற்­றது.  மாவட்­டக் கழக துணைச் செய­லா­ளர்­கள் இ.கரு­ணா­நிதி, எம்.எல்.ஏ., து.மூர்த்தி மற்­றும் மாவட்ட கழ­கப் பொரு­ளா­ளர் வெ.விசு­வ­நா­தன் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மாவட்­டச் செய­லா­ளர் - அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் தொடக்­கத்­தில் அனை­வ­ரை­யும் வர­வேற்று பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தீர்­மா­னக் குழு செய­லா­ளர் மீ.அ.வைதி­ய­லிங்­கம், எல்.இத­ய­வர்­மன், சட்­ட­மன்ற தொகுதி பார்­வை­யா­ளர்­கள் பிரபு கஜேந்­தி­ரன், ரஃபி அகம்­மது, பரிதி இளம்­சு­ருதி, எஸ்.எம்.கே.அண்­ணா­துரை, காஞ்­சி­பு­ரம் மாவட்ட ஊராட்சி தலை­வர் படப்பை ஆ.மனோ­க­ரன், தாம்­ப­ரம் மாந­க­ராட்சி மேயர் க.வசந்­த­கு­மாரி, துணை மேயர் கோ.காம­ராஜ், தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் ஆதி­மா­றன், க.அன்­புச்­செல்­வன், ஜி.சி.அன்­புச்­செ­ழி­யன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பகுதி செய­லா­ளர்­கள் என்.சந்­தி­ரன், பி.குணா­ளன், வே.கரு­ணா­நிதி, இ.ஜோசப் அண்­ணா­துரை, த.ஜெய­கு­மார், டி.காம­ராஜ், பெருங்­க­ளத்­தூர் சேகர், மாடம்­பாக்­கம் நட­ரா­ஜன், ஏ.கே.கரு­ணா­க­ரன், இ.எஸ்.பெர்­னாட்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஒன்­றி­யச் செய­லா­ளர்­கள் ந.கோபால், எஸ்.டி.கரு­ணா­நிதி, பைய­னூர் எம்.சேகர், ஏ.வந்­தே­மா­த­ரம், ஜி.கே.ரவி, எம்.டி.லோக­நா­தன், திரு­மு­டி­வாக்­கம் இ.மணி, கே.பி.ராஜன், நக­ரச் செய­லா­ளர்­கள் ஜெ.சண்­மு­கம், எஸ்.ஜப­ருல்லா, கோ.சத்­தி­ய­மூர்த்தி, எம்.கே.டி.கார்த்­திக், ஆர்.சதீஷ்­கு­மார், த.வினோத்­கு­மார், பேரூர் செய­லா­ளர்­கள் மு.தேவ­ராஜ், ஜி.டி.யுவ­ராஜ்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கழக மருத்­துவ அணி துணைச் செய­லா­ளர் மருத்­து­வர் கிருத்­திகா தேவி, தலை­மைப் பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் எம்.எஸ்.கே.இப்­பி­ரா­கிம், ஆர்.டி.பூபா­லன், கீதா ஆனந்­தன், க.தேவேந்­தி­ரன், ஆர்.எஸ்.சங்­கர், மா.கணேஷ்­பாபு, இரா.பாஸ்­க­ரன், சே.அருள்­தேவி, ஜிஜேந்­தி­ரன் ராமு உள்­ளிட்ட கழக நிர்­வா­கி­கள் கலந்­துக் கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இக்­கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள்:-
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பிப்­ர­வரி மாதம் முழு­வ­தும், தமி­ழ­கத்­தில் 234 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளி­லும் நட்­சத்­திர பேச்­சா­ளர்­கள் உரை­யாற்­றும் தீவி­ர­மான தேர்­தல் பரப்­புரை கூட்­டங்­களை நடத்­திட வேண்­டும் என்று, நாம் நாளும் போற்றி வணங்­கும் நம்­மு­டைய நெஞ்­சம் நிறைந்த அன்­புத் தலை­வர்  முதல்­வர் அவர்­க­ளின் அன்பு கட்­ட­ளையை ஏற்று</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நம்­மு­டைய மாவட்­டத்­தில் தலை­மைக் கழ­கத்­தால்    அறி­விக்­கப்­பட்­டுள்ள 6 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் நடை­பெ­ற­வுள்ள மாபெ­ரும் தேர்­தல் பரப்­புரை பொதுக் கூட்­டங்­க­ளில் 5000 க்கும் மேற்­பட்ட கழ­கத்­தி­ன­ரை­யும் - பொது­மக்­க­ளை­யும் பங்­கேற்­கச் செய்து மிக­வும்  எழுச்­சி­யு­டன் நடத்­து­வது என்­றும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கலந்­து­ரை­யா­டல் கூட்­டத்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஏற்­பாடு செய்­தி­டுக!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இப்­ப­ரப்­புரை கூட்­டங்­கள் நடத்­து­வ­தற்கு முன்பு அன்று மாலை 5.00 மணி­ய­ள­வில் அரு­கில் உள்ள திரு­மண மண்­ட­பத்­தில் அந்த தொகு­தி­யில் செல்­வாக்கு மிக்க முக்­கிய நபர்­கள், இளை­ஞர்­கள் - மாண­வர்­கள் - தன்­னார்வ அமைப்­பு­கள், கல்­வி­யா­ளர்­கள், தொழில்­மு­னை­வோர், தொழிற்­சாங்க பிர­தி­நி­தி­கள், நலச்­சங்க நிர்­வா­கி­கள் ஆகி­யோர் பங்­கேற்­கும் கலந்­து­ரை­யா­டல் கூட்­டத்தை ஏற்­பாடு செய்­திட வேண்­டும் என்­றும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அன்று நடை­பெ­றும் பொதுக் கூட்­டத்­தில் உரை­யாற்­றும் நட்­சத்­திர பேச்­சா­ளர், இக்­க­லந்­து­ரை­யா­டல் கூட்­டத்­தில் பங்­கேற்று திரா­விட மாடல் அர­சின் 5 ஆண்டு சாத­னை­களை அவர்­க­ளி­டம் விளக்கி கூறி­டு­வது என்­றும், இக்­கூட்­டத்­தில் கலந்து கொள்­வோ­ரின் கோரிக்­கை­கள், எதிர்­பார்­பு­கள் ஆகி­ய­வற்றை அறிந்­திட வேண்­டும் என்­றும் காஞ்­சி­பு­ரம் வடக்குமாவட்ட தி.மு.க ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை - விழுப்­பு­ரம் மண்­ட­லத்­தில் உள்ள 49 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் அடங்­கி­யுள்ள 1,50,000 -க்கும் மேற்­பட்ட BLA -2, BLC, BDA, BYO சந்­திப்பு  மாபெ­ரும் மாநாடு வரு­கிற 11.2.2026 புதன்­கி­ழமை அன்று மாலை 4.00 மணி­ய­ள­வில், நம்­மு­டைய மாவட்­டத்­தில் ECR சாலை­யில் கோவ­ளம் அரு­கில் அமைந்­துள்ள திரு­வி­டந்­தை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள கலை­ஞர் திட­லில் மிக­வும் பிர­மாண்­ட­மாக நடத்­திட ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மிக­வும் எழுச்­சி­யு­டன் நடை­பெ­ற­வுள்ள இம்­மா­நாட்­டில் நம்­மு­டைய காஞ்சி வடக்கு மாவட்­டத்­தில் உள்ள 30,000க்கும் மேற்­பட்ட BLA -2,  வாக்­குச்­சா­வடி நிலை­மு­க­ வர்­கள், BLC- வாக்­குச்­சா­வடி தேர்­தல் பணிக்­குழு உறுப்­பி­னர்­கள், BYO - வாக்­குச்­சா­வடி இளை­ஞர் அணி அமைப்­பா­ளர், BDA - வாக்­குச்­சா­வடி தக­வல் தொழில்­நுட்ப அணி முக­வர் உள்­ளிட்­டோரை அலை­க­ட­லென திரண்டு பங்­கேற்க செய்து, மாற்­றுக் கட்­சி­ய­ன­ரும் மிரண்டு போகும் வகை­யில், வரு­கிற 2026- ஆம் ஆண்டு தேர்­த­லில் மீண்­டும் தி.முக தான் ஆட்­சிக்கு வரும் என மக்­கள் அனை­வ­ரும் எண்­ணும் அள­விற்கு இந்த மாநாட்டை வெற்றி மாந­ாடாக மிக­வும் எழுச்­சி­யு­டன் ஏற்­பாடு செய்து நடத்­தி­டு­வது என்­றும் காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்ட தி.மு.க ஒரு­ம­ன­தாக தீர்­மா­னிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கழக அர­சின் சாத­னை­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">விளக்­கிக் கூறு­வீர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­காக நாளும் நல்ல பல திட்­டங்­களை நிறை­வேற்றி நாடும்- நாட்டு மக்­க­ளும் மனம் மகிழ்ந்து போற்றி பாராட்­டும் வகை­யில் திரா­விட மாடல் நல்­லாட்சி நடத்தி வரும் இந்­தி­யா­வில்  No.1 Super முதல்­வர் நம்­மு­டைய ஒப்­பற்ற தலை­வர் தள­பதி அவர்­க­ளின் 5 ஆண்­டு­கால பொற்­கால ஆட்­சி­யின் சாத­னை­களை விளக்கி, மக­ளிர் வீடு வீடாக சென்று ஆட்­சி­யின் சாத­னை­கள் பற்­றிய துண்டு பிர­சு­ரங்­களை வழங்கி  தேர்­தல் பரப்­பு­ரையை மேற்­கொள்ள வேண்­டும் என்று நம்­மு­டைய நெஞ்­சம் நிறைந்த அன்­புத் தலை­வர் அவர்­க­ளின் அன்­புக் கட்­ட­ளையை ஏற்று,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் உள்ள 2664 வாக்­குச்­சா­வ­டி­க­ளி­லும், இன்று பிப்­ர­வரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை மக­ளிர்­கள் வீடு வீடாக சென்று ஆட்­சி­யின் சாதனை பற்­றிய துண்டு பிர­சு­ரங்­களை வழங்கி, தேர்­தல் பரப்­பு­ரை­யில் தீவி­ர­மாக ஈடு­ப­டு­வது என்­றும், பூத் வாரி­யாக இப்­பி­ரச்­சார பணியை மக­ளிர் இணைந்து மேற்­கொள்ள அந்­தந்த ஒன்­றிய - நகர - பகுதி செய­லா­ளர்­கள் முன்­கூட்­டியே பிரச்­சார பய­ணப் பட்­டி­யலை தயார் செய்து,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அந்­தந்த சட்­ட­மன்­றத் தொகு­திக்கு நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்ள மக­ளிர் தொகுதி பொறுப்­பா­ளர்­க­ளி­டம் தந்து அந்த தொகுதி பொறுப்­பா­ளர்­கள் பூத் மக­ளிர் தேர்­தல் பணிக்­கு­ழு­வி­ன­ரு­டன் இணைந்து மக­ளிர் தேர்­தல் பரப்­புரை வெற்­றி­க­ர­மாக நடத்­து­வது என்­றும் காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்ட தி.மு.க ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தலை­வர் பிறந்­த­நாளை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">சிறப்­பா­கக் கொண்­டா­டு­வீர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்­டில் உள்ள அனைத்து தரப்பு மக்­க­ளும்  மனம் மகிழ்ந்து பாராட்­டு­கின்ற வகை­யில், திரா­விட மாடல் நல்­லாட்சி நடத்தி – இந்­தி­யா­விற்கே வழி­காட்­டும் வகை­யில் எண்­ணி­ல­டங்கா திட்­டங்­களை நிறை­வேற்றி இந்­தி­யா­வின் No.1 முதல்­வர் என்ற வர­லாற்­றுச் சாத­னையை படைத்த - நம்­மு­டைய உயி­ரி­னும் மேலான அன்­புத் தலை­வர் தமி­ழக முதல்­வர் தள­பதி அவர்­க­ளின் 73-வது பிறந்த நாளை காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டம் முழு­வ­தும் பட்டி - தொட்­டி­யெங்­கும் மிக­வும் சிறப்­பான வகை­யில் வரு­கிற மார்ச் மாதம் முழு­வ­தும் எழுச்­சி­யு­டன் கோலா­க­ல­மாக கொண்­டா­டு­வது என்­றும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அவ­ரது பிறந்த நாளான 1.3.2026 அன்று காலை 9.00 மணிக்­கெல்­லாம், காஞ்சி வடக்கு மாவட்­டம் முழு­வ­தும் உள்ள ஒன்­றி­யம் - பகுதி - நகர - பேரூர்­க­ளில் உள்ள அனைத்து கிளைக் கழ­கங்­க­ளி­லும், கழக கொடி தோர­ணங்­கள்­கட்டி, ஒலி­பெ­ருக்கி அமைத்து கழ­கக் கொடி தோர­ணங்­களை அழ­குற கட்டி, ஒலி­பெ­ருக்கி அமைத்து, கழக கொடி­யேற்றி, இனிப்­பு­களை வழங்­கி­டு­வது என்­றும் நம்­மு­டைய மாவட்­டத்­தில் உள்ள 40-க்கும் மேற்­பட்ட ஆத­ர­வற்­றோர் இல்­லங்­க­ளில் உள்ள ஆத­ர­வற்­றோர்­க­ளுக்கு அன்று மதிய உணவு - உடை­களை வழங்­கி­டு­வது என்­றும், காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் கழ­கம் ஒரு­ம­ன­தாக முடி­வெ­டுக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நம்­மை­யெல்­லாம்  ஆளாக்­கிய “காஞ்சி தந்த காவி­யத் தலை­வன்”, “தென்­னாட்டு காந்தி”, “இந்­நாட்டு இங்­கல்­சால்” என்று அனை­வ­ரா­லும் போற்றி புக­ழப்­ப­டும் அர­சி­யல் மாமேதை பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் நினைவு நாளான வரு­கிற பிப்­ர­வரி 3-ஆம் தேதி அன்று காலை  நம்­மு­டைய காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் உள்ள ஒன்­றிய - நகர- பகுதி- பேரூர்­க­ளில் அறி­ஞர் அண்­ணா­வின் திரு­வு­ரு­வப் படத்­தினை அலங்­க­ரித்து வைத்து கழ­கத்­தி­னர் அனை­வ­ரும் திரண்டு மலர் அஞ்­சலி செலுத்­தி­டு­வது என்­றும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அன்று காலை சென்­னை­யில் நம்­மு­டைய கழ­கத் தலை­வர்  முதல்­வர் அவர்­கள் தலை­மை­யில் நடை­பெ­றும் அண்ணா நினைவு நாள் அமை­திப் பேர­ணி­யில் நம்­மு­டைய காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்ட கழ­கத்­தி­னர் பெரு­ம­ளவு திரண்டு பங்­கேற்­பது என்­றும் ஒரு­ம­ன­தாக தீர்­மா­னிக்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>