<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,34,958,949" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Feb 01 2026 21:55:19 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260202T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="02022026-TRY-02" position.sequence="02" ex-ref="02022026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">02.02.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="27">சிவகங்கை மாவட்டம் – செட்டிநாட்டில் 330 ஏக்கரில்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="27"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="62">ரூ.61.79 கோடியில் வேளாண்மைக் கல்லூரி! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">கட்டிடங்களைத் திறந்து வைத்து – அரங்கத்திற்கு – ‘சி.சுப்பிரமணியம் பெயர்’ சூட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup361694_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup361639_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup361567_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="CMPhoto4co_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.8">காரைக்குடி, பிப்.2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.8">சிவகங்கை மாவட்டம், செட்டிநாட்டில் 330 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ.61.79 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்களையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு ”பாரத ரத்னா விருது பெற்ற  
சி.சுப்பிரமணியம் பல்நோக்கு அரங்கம்” என்று  பெயர் சூட்டி  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்   திறந்து வைத்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">அதன் விவரம் வருமாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 31.01.2026 அன்று சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் 330 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு  61 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு ”பாரத ரத்னா விருது பெற்ற சி.சுப்பிரமணியம் பல்நோக்கு அரங்கம்”  என்று பெயர் சூட்டி அவ்வரங்கத்தினையும் திறந்து வைத்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="11.3">தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">பாரம்பரியம்  மிக்க, பொன்விழா ௧ண்ட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 1971–ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்டு 47,888 இளங்கலை மாணவர்களுக்கும், 13,259 முதுகலை மாணவர்களுக்கும், 4,295  முனைவர் மாணவர்களுக்கும் வேளாண்மை மற்றும் வேளாண்மை  சார்ந்த துறைகளில் பட்டம் வழங்கி சிறந்த முறையில் கல்வியை வழங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகம் வேளாண்மைக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் என மூன்று பிரிவுகளிலும் சிறப்புற  செயல்பட்டு  வருகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">இந்த அரசு பொறுப்பேற்றது முதல், ஐந்து முறை தாக்கல் செய்யப்பட்ட வேளாண்மை–உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கைகளில் வேளாண்மை கல்வி, வேளாண்மை ஆராய்ச்சிக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு  3,065 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">மேலும், ஐந்து ஆண்டுகளில் 101 புதிய பயிர் இரகங்கள்,  21 வேளாண் நுட்பங்கள்,  16 புதிய பண்ணைக்  கருவிகள் நமது உழவர் பெருமக்களின் பயன்பாட்டிற்காக  வெளியிடப்பட்டுள்ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">தமிழ்நாடுஅரசின் உயர்கல்வி உறுதிக்கான இலட்சியத் திட்டமான ”புதுமைப்பெண்” திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2,964 மாணவியருக்கும், ”தமிழ்ப்புதல்வன்” திட்டத்தின் கீழ் 1,628 மாணவர்களுக்கும்  உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.  ”உலகம் உங்கள் கையில்” – தமிழ்நாடு அரசு மடிக்கணினித் திட்டத்தின் கீழ் 5,407 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுவழங்கிய 7.5 சதவீத மாணவர் இடஒதுக்கீட்டின் கீழ் இதுவரை 1,708 மாணவர்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டு  கல்வி பயின்று வருகின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">தமிழ்வழிக் கல்வி திட்டத்தின் கீழ் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்புகள் 2021–ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டு,  இதுவரை 467 மாணவர்கள் தமிழ்வழி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பு பயின்றுள்ளனர். இளங்கலை மாணவர்களின் பட்டறிவினை உயர்த்திடும் நோக்கில் ஒரு மாணவர் – ஒரு வேளாண் குடும்பம் திட்டம் தொடங்கப்பட்டு 2,395 முதலாமாண்டு இளங்கலை மாணவர்கள் வேளாண் குடும்பங்களுடன்இணைக்கப்பட்டுள்ளனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இந்த அரசு பொறுப்பேற்றவுடன், 2021–22ஆம் ஆண்டில் நாகப்பட்டினம், கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மூன்று புதிய அரசு வேளாண் கல்லூரிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  ஒரு தோட்டக்கலைக் கல்லூரி புதிதாக தொடங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டு  176 கோடியே 72 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.செட்டிநாட்டில் செயல்பட்டுவரும் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு புதிய கட்டடங்கள் திறப்பு
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">அவ்வகையில், சிவகங்கை மாவட்டம், செட்டிநாட்டில் செயல் பட்டுவரும் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்திற்கு 61 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களையும், புதிதாக கட்டப்பட்ட அரங்கத்திற்கு ”பாரத ரத்னா விருது பெற்ற   சி. சுப்பிர மணியம் பல்நோக்கு அரங்கம்” எனப் பெயர் சூட்டி, அவ்வரங்கத்தி னையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார். பின்னர், தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள், அவ்வளாகத்தில் மரக்கன்றை நட்டு, வகுப்பறைகள், பல்நோக்கு அரங்கம், ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றை பார்வை யிட்டு, மாணவ, 
மாணவியர்களுடன்  கலந்துரையாடினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இக்கல்லூரிக்கான கட்டடங்கள் சுமார் 2.52 இலட்சம் சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டு, அப்புதிய கட்டடத்தில், நிர்வாக அலுவலகக் கட்டடம், 250 மாண வர்கள் அமரக்கூடிய வகையில் இணைய தள வசதியுடன் கூடிய நான்கு வகுப்பு அறைகள்,  12 துறை களுக்கான  ஆய்வுக் கூடங்கள், மாணவர்மற்றும் மாணவியர் விடுதிகள், உணவக விடுதி, சிற்றுண்டி விடுதி, மருத்துவ மையம், 1,500 நபர்கள் அமரக்கூடிய பல்நோக்கு அரங்கம், நூலகம் மற்றும் மாணவர்களுக்கான இணையதள மையம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இக்கல்லூரியில்  மானாவாரிப் பயிர்களான நிலக்கடலை, சிறுதானியங்கள், பயறுவகை களுக்குத் தேவையான வேளாண் சாகுபடி உத்திகளை உருவாக்குதல், குறைந்த நீர் தேவைப்படும், அதிக மதிப்புள்ள பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்தல், வறண்ட மண்டல பழப்பயிர்கள், மரங்கள் மற்றும் தீவனப்பயிர்கள் மேம்பாடு,  வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி மற்றும் மரம் வளர்ப்பு போன்றவற்றின் மூலம் நில பயன்பாட்டுக்கான ஒருங்கிணைந்தபண்ணையமுறை, மானாவாரி பயிர்களுக்கான மழைநீர் சேகரிப்பு மற்றும் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் நிறுவுதல், பண்ணைக்குட்டைகள் போன்ற நீர்செறிவூட்டு அமைப்புகள் மூலம் உற்பத்தித் திறன் அதிகரித்தல், மானாவாரி நிலங்களில் இயந்திரமயமாக்கல்,  விவசாயிகள் மற்றும் கிராமப்புர இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளித்தல் போன்ற நோக்கங்களுடன் இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">மேலும், இக்கல்லூரியில் மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்  செயல்பட்டு வருவதுடன்,  புதிய உணவு செய்முறைகள் மற்றும் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள்,  குறிப்பாக சிறுதானியங்கள், பழங்கள் மற்றும் பிற வேளாண் விளைபொருட்களில் பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் தொழில் நுட்பங்களை  உருவாக்கவும், பயிற்சி அளிக்கவும்  உணவு பதப்படுத்துதல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் ஒன்றும்,  மானாவாரி மேலாண்மை மகத்துவ மையம் ஒன்றும்  செயல்பட்டு வருகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">2025 ஆம் ஆண்டில், இக்கல்லூரி வறட்சியைத் தாங்கி வளரும், அதிக மகசூல் தரவல்ல “செட்டிநாடு 1” என்னும் புதிய நிலக்கடலை இரகம் வெளியிட்டுள்ளது. மேலும் 10 உள்ளூர் மரவகைகளைக் கொண்டு பன்முகத்தன்மை கொண்ட வேளாண் காடுகள் மாதிரி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.  இதுவரை 3,930 விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இயற்கை வளங்கள் துறை  அமைச்சர் எஸ். இரகுபதி, கூட்டுறவுத் துறை அமைச்சர்  கே.ஆர். பெரியகருப்பன், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், ஒன்றிய முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்  திருமதி ஆ.தமிழரசி, வேளாண்மை – உழவர் நலத்துறைச் செயலாளர்  வ.தட்சிணாமூர்த்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கா. பொற்கொடி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) முனைவர் கா. சுப்ரமணியன் மற்றும்  அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.3">முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 31.01.2026 அன்று சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் 330 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு 61 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு” பாரத ரத்னா விருது பெற்ற சி. சுப்பிரமணியம் பல்நோக்கு அரங்கம்” என்று பெயர் சூட்டி அவ்வரங்கத்தினையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள்  கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.இரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சிவ.வீ. மெய்யநாதன், ஒன்றிய முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி 
ப. சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>