<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 03 2026 03:38:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260303T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="03032026-CHN-06" position.sequence="06" ex-ref="03032026-CHN-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">‘திரா­விட மாடல்’ அர­சில்  இளை­ஞர்­களை அதி­கா­ர­ம­யப்­ப­டுத்த பல்­வேறு திட்­டங்­கள்:</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="76">பா.ஜ.க. என்ன செய்­தா­லும், முற்­போக்­குச் சிந்­த­னை­கள் கொண்ட இன்­றைய இளம் தலை­மு­றை­யி­ன­ரின் நம்­பிக்­கையை வெல்ல முடி­யாது! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup534632_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Dcmspeech2.3._06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை,மார்ச்.3–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை, தாஜ் கோர­மண்­டல் ஹோட்­ட­லில் `தி வீக்’ ஆங்­கில வார இத­ழின் கருத்­த­ரங்­கம் நடை­பெற்­றது. துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள்  திரா­விட இயக்க அர­சி­யல் மற்­றும் தற்­கால இளை­ஞர்­க­ளின் போக்கு 
ஆகி­யவை பற்றி விரி­வா­கப் பேசி­னார். இதில் ஊட­க­வி­ய­லா­ளர்­கள், பல்­வேறு கட்­சி­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் மற்­றும் பல துறை­க­ளைச் சேர்ந்த நிபு­ணர்­கள் உட்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அப்­போது அவர், ``பா.ஜ.க. என்ன செய்­தா­லும்,  நவீன மற்­றும் முற்­போக்­குச் சிந்­த­னை­க­ளில் நம்­பிக்­கை­கொண்ட இன்­றைய இளம் தலை­மு­றை­யி­ன­ரின் நம்­பிக்­கையை அவர்­க­ளால் வெல்ல முடி­யாது’’  என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்­றிய உரை­யின் விவ­ரம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அனை­வ­ருக்­கும் என்­னு­டைய மாலை வணக்­கத்­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். தி வீக் ஆங்­கில பத்­தி­ரிகை ஏற்­பாடு செய்­தி­ருக்­கும் இந்­தக் கருத்­த­ரங்­கத்­தில் பேசு­வ­தில் மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இன்­றைய இளம் தலை­மு­றை­யி­ன­ரி­டம் திரா­விட இயக்க அர­சி­ய­லின் பொருத்­தப்­பாடு குறித்து, என் கருத்­துக்­க­ளைப் பகிர்ந்து கொள்ள விரும்­பு­கி­றேன். இளை­ஞர்­கள் அர­சி­ய­லில் ஆர்­வம் காட்­ட­வில்லை என்று, பொது­வாக ஒரு தவ­றான கருத்து நில­வு­கி­றது. நான் அதை நம்­ப­வில்லை. இளை­ஞர்­கள் இயல்­பா­கவே எல்­லா­வற்­றை­யும் ஆர்­வத்­து­டன் அறிய விரும்­பு­ப­வர்­கள். அவர்­க­ளு­டைய பெரும்­பா­லான கற்­றல், உரை­யா­டல் மற்­றும் பொழு­து­போக்கு ஆகி­யவை இணை­ய­த­ளம் வழி­யா­கவே  இப்­போது நடக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">உண்­மைத் தன்மை அறிய விருப்­பம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பல­ரும் கவ­னித்­தி­ருப்­பது போல,  ஒரு பொருளை வாங்­கு­வ­தற்கு முன், அவர்­கள் ரிவ்­யூக்­க­ளைப் பார்க்­கி­றார்­கள். ஒரு சேவை­யைப் பெறு­வ­தற்கு முன்,  பிளாட்­பார்ம்­களை ஒப்­பி­டு­கி­றார்­கள். அதே­போல, ஒரு அர­சி­யல் கூற்றை நம்­பு­வ­தற்கு முன், அவர்­கள் அதன் உண்­மைத் தன்­மையை அறிந்­து­கொள்ள விரும்­பு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பழ­மை­யை­யும் அதி­கா­ரத்­தை­யும் கேள்வி கேட்க, அவர்­கள் தயா­ராக உள்­ள­னர். அவர்­கள் சமத்­து­வம், பன்­மு­கத்­தன்மை, கண்­ணி­யம் மற்­றும் சுய­ம­ரி­யாதை ஆகி­ய­வற்றை மதிக்­கி­றார்­கள் — இவையே திரா­விட இயக்­கத்­தின் அடிப்­ப­டைக் கொள்­கை­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">திரா­விட இயக்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஒரு நூற்­றாண்­டுக்­கும் மேலாக,  திரா­விட இயக்­கம், பகுத்­த­றி­வுச் சிந்­தனை, சமூக நீதி,  மாநில சுயாட்சி மற்­றும் சமத்­து­வத்­திற்­கா­கப் போராடி வரு­கி­றது. எனவே, இளை­ஞர்­கள் இயல்­பா­கவே திரா­விட இயக்­கத்­தின் கொள்­கை­க­ளு­டன் பொருந்­து­கி­றார்­கள். நாம் மேற்­கொள்­ள­வேண்­டிய பணி அவர்­க­ளுக்கு திரா­விட அர­சி­யலை நன்கு புரிய வைப்­பது தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">குறிப்­பாக, சமூக மாற்­றத்­திற்­காக திரா­விட இயக்­கத்­தின் பங்­க­ளிப்­பு­க­ளை­யும், தியா­கங்­க­ளை­யும், எடுத்­து­சொல்­வ­தன் மூலம் இதை செய்ய முடி­யும் என்று நம்­பு­கி­றேன்.  ஆனால், பிரச்­சினை என்­ன­வென்­றால், திரா­விட அர­சி­ய­லுக்கு எதி­ரான பாசிச சக்­தி­கள், இளை­ஞர்­க­ளைத் திசை திருப்ப முயல்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­தக் கருத்­த­ரங்­கில் நம்­பிக்­கை­யு­டன் கூறு­கி­றேன், பா.ஜ.க. என்ன செய்­தா­லும்,  நவீன மற்­றும் முற்­போக்­குச் சிந்­த­னை­க­ளில் நம்­பிக்­கை­கொண்ட இன்­றைய இளம் தலை­மு­றை­யின் நம்­பிக்­கையை அவர்­க­ளால் வெல்ல முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பா.ஜ.க.வின் தேர்­தல் உத்­தி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பா.ஜ.க. சமூக ஏற்­றத்­தாழ்­வு­க­ளைப் பாது­காப்­ப­தில் நம்­பிக்கை கொண்­டுள்­ளது. இதை இளம் தலை­முறை ஒரு­போ­தும் ஏற்­காது.  ஆனால், திரா­விட இயக்­கக் கொள்­கை­கள் சமத்­து­வத்தை விரி­வு­ப­டுத்­த­வும், பெண்­களை அதி­கா­ரப்­ப­டுத்­த­வும், ஒடுக்­கப்­பட்ட சமூக மக்­க­ளின் விடு­த­லை­யை­யும் நோக்­க­மாக கொண்­டுள்­ளன. பா.ஜ.க. அதி­கா­ரக்­கு­விப்பை நம்­பு­கி­றது, திரா­விட அர­சி­யல் கூட்­டாட்­சியை உயர்த்­திப் பிடிக்­கி­றது. அவர்­கள் ஒரு­மைத்­தன்­மையை திணிக்­கி­றார்­கள். நாம் பன்­மு­கத்­தன்­மைக்­காக நிற்­கி­றோம். இந்த வேறு­பாட்டை இளம் தலை­மு­றை­யி­னர் நன்கு புரிந்து கொண்­டுள்­ள­னர். வெறுப்­பைப் பரப்­பு­வ­தும் சமூ­கத்­தைப் பிள­வு­ப­டுத்­து­வ­தும், பா.ஜ.க.வின் தேர்­தல் லாபத்­திற்­கான முதன்மை உத்­தி­கள். பா.ஜ.க. அனைத்து மாநி­லங்­க­ளி­லும் இந்­தி­யைத் திணிக்­க­வும்,  படிப்­ப­டி­யாக அதை நாட்­டின் தேசிய மொழி­யாக ஆக்­க­வும் விரும்­பு­கி­றது. ஆனால், புதிய கல்­விக் கொள்கை தாய்­மொ­ழிக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கி­றது என்று அவர்­கள் கூறு­கி­றார்­கள். உண்­மை­யில், மும்­மொ­ழிக் கொள்கை மூலம்  இந்­தியை நமது பள்­ளி­க­ளில் திணிப்­பதே அவர்­க­ளின் நோக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ் மக்­க­ளின் உணர்­வு­களை மதிக்­கா­மல், தமிழ்­மொ­ழி­யைப் பாது­காக்க போரா­டி­ய­வர்­க­ளின் தியா­கங்­க­ளைக் கருத்­தில் கொள்­ளா­மல், தமிழ்­நாட்­டில் மும்­மொ­ழிக் கொள்­கையை தொடர்ந்து திணிக்க முயல்­கி­றார்­கள். ஒன்­றிய பா.ஜ.க. அரசு கல்வி நிதி­யில் 3,548 கோடி ரூபாயை நிறுத்தி வைப்­போம் என்று அச்­சு­றுத்­தி­ய­போது,  நமது முத­ல­மைச்­சர் தெளி­வான பதிலை அளித்­தார்.  10,000 கோடி ரூபாய் கொடுத்­தா­லும், தமிழ்­நாடு ஒரு­போ­தும் மூன்று மொழிக் கொள்­கையை ஏற்­காது. நமது இளை­ஞர்­கள் இந்த எதிர்ப்­பைத் தொடர்ந்து முன்­னெ­டுப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அழி­வின் விளிம்­பில் பல மொழி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வட மாநி­லங்­க­ளின் பல பிராந்­திய  மொழி­களை, இந்தி அழி­வின் விளிம்­புக்­குத் தள்­ளி­யுள்­ளது என்­பதை நாம் அறி­வோம். தாய்­மொழி உரி­மையை உயர்த்­திப் பிடிப்­ப­தி­லும் பாது­காப்­ப­தி­லும் நாட்­டுக்கே முன்­மா­திரி மாநி­ல­மா­கத் தமிழ்­நாடு திகழ்­கி­றது. மும்­மொ­ழிக் கொள்­கையை, நாம் வலு­வாக எதிர்த்த பிறகு, கர்­நா­டகா, மகா­ராஷ்­டிரா போன்ற மாநி­லங்­க­ளும் இந்­தித் திணிப்­புக்கு எதிர்ப்பு தெரி­வித்­தன. கன்­ன­டம் மற்­றும் மராத்தி போன்ற தங்­கள் தாய்­மொ­ழி­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிப்­பதை அவர்­கள் மீண்­டும் உறு­திப்­ப­டுத்­தி­னர். ஆனா­லும், பா.ஜ.க. மூம்­மொ­ழிக் கொள்­கை­யைத் தொடர்ந்து திணிக்க முயல்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நேற்று மதுரை வந்த பிர­த­மர் ஆங்­கி­லத்­தில் பேசி­னார். அதற்கு முன் நடந்த எல்லா கூட்­டங்­க­ளி­லும் இந்­தி­யில் உரை­யாற்­றிய அதே பிர­த­மர்  இங்கு ஆங்­கி­லத்­தைத் தேர்ந்­தெ­டுத்­தார். அது­தான் தமிழ்­நாடு. தமிழ்­நாட்­டிற்கு வந்­தால், இந்தி ஆத­ர­வா­ளர்­க­ளும் மும்­மொ­ழிக் கொள்கை ஆத­ர­வா­ளர்­க­ளும் கூட ஆங்­கி­லத்­தில் பேசும் நிலை தான் உள்­ளது.  ஒரு மொழி அழிந்­தால், கூடவே அதன் கலாச்­சா­ர­மும் அழி­கி­றது. தமி­ழுக்கு அப்­படி நடக்க தமிழ்­நாடு ஒரு­போ­தும் அனு­ம­திக்­காது. தி.மு.கழ­கம் அந்த உணர்வை மட்­டுமே, உயர்த்­திப் பிடிக்­கி­றது, அதன் கார­ண­மாக பா.ஜ.க.வை அர­சி­யல் ரீதி­யா­க­வும் சித்­தாந்த ரீதி­யா­க­வும் முழு உறு­தி­யு­டன் எதிர்க்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அதே­போல, திரா­விட அர­சி­யல் கல்வி மற்­றும் வேலை­வாய்ப்­பில் பின்­தங்­கிய சமூ­கங்­க­ளுக்கு இட ஒதுக்­கீட்டை வலு­வாக வலி­யு­றுத்­து­கி­றது. இட ஒதுக்­கீடு என்­பது வெறும் தானமோ உத­வியோ அல்ல. அது அர­சி­ய­ல­மைப்பு நமக்கு வழங்கி இருக்­கும் உரிமை. நூற்­றாண்­டு­க­ளாக ஒடுக்­கப்­பட்ட சமூ­கங்­க­ளுக்கு ஏற்­பட்ட ஆழ­மான காயங்­க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு மருந்­தாக விளங்­கு­கி­றது.  ஆனால் சாதி சலு­கையை இன்­னும் பிடித்­துக் கொண்­டி­ருக்­கும் உயர் சாதி­யி­னர்  இட ஒதுக்­கீட்­டுக்கு எதி­ராக பொய்­க­ளைப் பரப்­பு­கின்­ற­னர். திரா­விட இயக்­கம் மட்­டுமே தங்­கள் உரி­மை­க­ளை­யும், கண்­ணி­யத்­தை­யும், எதிர்­கா­லத்­தை­யும் பாது­காக்­கி­றது என்­பதை நமது இளை­ஞர்­கள் அறி­வார்­கள்.  நமது திரா­விட மாடல் அரசு  இளை­ஞர்­களை அதி­கா­ர­ம­யப்­ப­டுத்த பல திட்­டங்­களை செயல்­ப­டுத்­தி­யுள்­ளது. கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு புது­மைப் பெண் மற்­றும் தமிழ்ப் புதல்­வன் திட்­டங்­க­ளின் கீழ், மாதம் 1,000 ரூபாய் உதவி தொகை­யாக  வழங்­கப்­ப­டு­கி­றது. மாநி­லம் முழு­வ­தும் 10 லட்­சம் கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு லேப்­டாப்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.  மேம்­பட்ட கற்­றல் மற்­றும் AI தொழில்­நுட்ப பயன்­பாட்டை ஆத­ரிக்க, நான் முதல்­வன் திட்­டத்­தின் கீழ்,  மாநி­லம் முழு­வ­தும் இளை­ஞர்­க­ளுக்கு சுமார் 50 லட்­சம் திறன் சான்­றி­தழ்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நான் முதல்­வன் மூலம் சுமார் 5 லட்­சம் மாண­வர்­கள் வேலை­வாய்ப்பு ஆணை­க­ளைப் பெற்­றுள்­ள­னர். முந்­தைய ஆட்­சி­யின்­போது  மாநி­லத்­தில் 2,000 ஸ்டார்ட்­அப் நிறு­வ­னங்­கள் மட்­டுமே இருந்­தன. ஆனால் 2021–இல் நமது அரசு பொறுப்­பேற்ற பிறகு,  சுமார் 12,000 ஸ்டார்ட்­அப் நிறு­வ­னங்­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இது முந்தை அர­சில் இருந்த நிலையை விட, ஆறு மடங்கு அதி­கம். 2011–இல் திமுக ஆட்­சி­யில் இருந்­த­போது, தமிழ்­நாட்­டி­லி­ருந்து 100–க்கும் மேற்­பட்­டோர் யு.பி.எஸ்.சி.யில் தேர்ச்சி பெற்­ற­னர். ஆனால் 2011 முதல் 2021 வரை இதில் பெரும் சரிவு ஏற்­பட்­டது. 2021 ஆம் ஆண்டு  தமிழ்­நாட்­டி­லி­ருந்து வெறும் 27 பேர் மட்­டுமே யு.பி.எஸ்.சி. தேர்­வில் தேர்ச்சி பெற்­ற­னர். எனவே, நான் முதல்­வன் மூலம் போட்­டித் தேர்வு பயிற்­சியை தொடங்­கி­னோம். ஒவ்­வொரு ஆண்­டும் வெளிப்­ப­டை­யான தேர்வு மூலம் 1,000 போட்­டி­யா­ளர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து, அவர்­க­ளுக்கு நிதி உதவி வழங்­கு­கி­றோம். நான் முதல்­வன் போட்­டித் தேர்வு மையம் தொடங்­கிய பிறகு, 2025–இல் சுமார் 60 மாண­வர்­கள் யு.பி.எஸ்.சி. தேர்­வில் தேர்ச்சி பெற்­றுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இளை­ஞர்­க­ளுக்கு சம வாய்ப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கல்­வி­யில் மட்­டு­மல்ல, விளை­யாட்­டி­லும் நமது இளை­ஞர்­க­ளுக்கு சம வாய்ப்­பு­களை உறுதி செய்­கி­றோம். கடந்த அ.தி.மு.க. ஆட்­சி­யில், விளை­யாட்டு வீரர்­க­ளுக்­கான 3 சத­வீத இட ஒதுக்­கீட்­டின் கீழ் வெறும் 3 வேலை­கள் மட்­டுமே வழங்­கப்­பட்­டன. ஆனால், 2021 முதல்,  விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு சுமார் 300 அரசு வேலை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. தமிழ்­நாடு சாம்­பி­யன்ஸ் ஃபவுண்­டே­ஷன் மூலம்,  போட்­டி­க­ளில் பங்­கேற்­ப­தற்கு முன்பே, விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு நிதி உதவி வழங்­கு­கி­றோம். அவர்­க­ளின் சாத­னை­க­ளுக்­குப் பிறகு, உயர் பணப் பரி­சு­களை வழங்­கு­கி­றோம். மாநி­லம் முழு­வ­தும் விளை­யாட்டு உள்­கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்கு முன்­னு­ரிமை அளிக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">முந்­தைய அதி­முக அர­சின் 10 ஆண்டு காலத்­தில்,  விளை­யாட்டு உள்­கட்­ட­மைப்­பிற்கு வெறும் 380 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது. ஆனால் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் நமது திரா­விட மாடல் அரசு  600 கோடி ரூபாய் மதிப்­பி­லான விளை­யாட்டு உள்­கட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யுள்­ளது. இளை­ஞர்­க­ளுக்­கான இந்­தத் திட்­டங்­கள் புக­ழுக்­காக மட்­டு­மல்ல. முன்­னேற்­றத்­திற்­காக வடி­வ­மைக்­கப்­பட்­டவை. நமது மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் தெளி­வா­கக் கூறி­யுள்­ளார்,``தமிழ்­நாட்­டின் செழிப்பு நோக்­கிய பய­ணத்­தில், யாரை­யும் பின்­தங்க விட மாட்­டோம்.” அந்த அடிப்­ப­டை­யில்,  சமூ­கத்­தின் ஒவ்­வொரு பிரி­வி­ன­ரை­யும் அதி­கா­ரப்­ப­டுத்­தும் வகை­யில், நமது திட்­டங்­கள் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன. இன்று நாடு முழு­வ­தும், மக்­க­ளு­டன் தரை­யில் தின­சரி நிற்­கும் ஒரே தலை­வர்  நமது மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">செயல்­ப­டுத்­திய திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நமது அரசு செயல்­ப­டுத்­திய திட்­டங்­கள் கார­ண­மாக, ஒவ்­வொரு வீட்­டி­லும் குறைந்­தது ஒரு உறுப்­பி­னர் பய­னா­ளி­யா­கி­யுள்­ளார். இளை­ஞர்­கள் இந்த உண்­மை­க­ளைப் புரிந்து கொண்டு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பா.ஜ.க.வின் பொய் பிரச்­சா­ரத்தை முழு­மை­யாக நிரா­க­ரிப்­பார்­கள் என்று நம்­பு­கி­றேன். பா.ஜ.க. ஊழலை ஒழிக்க விரும்­பு­வ­தாக நடிக்­கி­றது. இந்த பாசி­ச­வா­தி­கள் தங்­கள் அர­சி­யல் லாபத்­திற்­காக  சி.பி.ஐ., இ.டி, ஐ.டி ஆகி­ய­வற்­றைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.  சமீ­பத்­தில், திமுக மோடிக்­குப் பயப்­ப­ட­வில்லை என்று கூறி­னேன். நேற்று மது­ரை­யில் பொதுக்­கூட்­டத்­தில் பேசி­ய­போது,  மோடி என்னை மறை­மு­க­மா­கக் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு­வர் தனக்­குப் பயப்­ப­ட­வில்லை என்று கூறி­ய­தா­கக் குறிப்­பிட்­டார். ஜன­நா­ய­கத்­தில் யாரும் யாருக்­கும் பயப்­பட வேண்­டி­ய­தில்லை என்­றார். அவர் இதை என்­னி­டம் சொல்ல வேண்­டாம். எடப்­பாடி பழ­னி­சாமி மற்­றும் தமிழ்­நாட்­டில் பிற கூட்­டணி தலை­வர்­க­ளி­டம் சொல்­ல­லாம். அந்­தக் கூட்­டத்­தில், அதி­முக உறுப்­பி­னர்­கள் நுழை­வா­யி­லில் பெரி­யா­ரின் படத்தை வைத்­தி­ருந்­த­னர். ஆனால் பா.ஜ.க. அதை எதிர்த்து, பெரி­யார் படத்தை அகற்­று­மாறு கேட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">எச்­ச­ரிக்கை வந்த உட­னேயே, எடப்­பாடி பழ­னி­சாமி தன் ஆட்­க­ளி­டம் சொல்லி பெரி­யார் படத்தை இறக்­கச் சொன்­னார். பிறகு அதற்கு பதி­லாக என்ன வைத்­தார்­கள்?   பா.ஜ.க.வின் தாமரை சின்­னம். ஆச்­ச­ரி­யம் என்­ன­வென்­றால், அ.தி.மு.க. தன் கட்சி சின்­னத்­தைக் கூட வைக்­க­வில்லை. பா.ஜ.க. சின்­னத்தை வைத்­துள்­ள­னர். அர­சி­ய­லில் முரட்டு ஆத­ர­வா­ளர்­க­ளைப் பார்த்­தி­ருக்­க­லாம். ஆனால் முரட்டு அடி­மையை எப்­போ­தா­வது பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? தமிழ்­நாட்­டுக்கு வாருங்­கள். எடப்­பாடி பழ­னி­சா­மி­யில் ஒரு­வ­ரைப் பார்ப்­பீர்­கள். இது­தான் பயம் செய்­யும் வேலை. தமிழ்­நாட்­டில் பா.ஜ.க. உரு­வாக்­கிய கூட்­டணி கொள்கை கூட்­டணி அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">எடப்­பாடி பழ­னி­சாமி மட்­டு­மல்ல, அந்த கூட்­டணி தலை­வர்­க­ளும் அனை­வ­ரும் இப்­போது பயத்­தில் உள்­ள­னர். எனவே, டெல்­லி­யி­லி­ருந்து வந்த அவர், தன் கூட்­ட­ணித் தலை­வர்­க­ளி­டம் கூற வேண்­டும். – ``சம்­பந்­திக்கு எதி­ரான டெண்­டர் வழக்­கைப் பயன்­ப­டுத்தி அச்­சு­றுத்த மாட்­டேன், மருத்­து­வக் கல்­லூரி மோசடி வழக்­கைப் பயன்­ப­டுத்தி அச்­சு­றுத்த மாட்­டேன், ஃபெரா வழக்­கைப் பயன்­ப­டுத்தி அச்­சு­றுத்த மாட்­டேன் என்று, அவர்­க­ளுக்கு மோடி உறு­தி­ய­ளிக்க வேண்­டும்’’ – பயப்­பட வேண்­டி­ய­தில்லை என்று. நான் மீண்­டும் கூறு­கி­றேன், தி.மு.கழ­கம் எந்த அச்­சு­றுத்­த­லுக்­கும் பயப்­ப­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">விளை­வு­கள் எது­வாக இருந்­தா­லும் திரா­விட இயக்­கம், அநீ­திக்கு எதி­ராக நிற்­கக் கற்­றுத் தந்­துள்­ளது ஆம், பெரு­மை­யு­டன் கூறு­கி­றேன்,  நாங்­கள் திரா­விட இனத்­தைச் சேர்ந்­த­வர்­கள்.  டெல்­லி­யி­லி­ருந்தோ குஜ­ராத்­தி­லி­ருந்தோ வரு­ப­வர்­கள் யாராக இருந்­தா­லும், நாங்­கள் யாருக்­கும் பயப்­பட மாட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நாங்­கள் உறு­தி­யாக நிற்­போம். எதிர்ப்­போம். ஒரு­போ­தும் தலை­கு­னிய மாட்­டோம். இந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நமது கூட்­டணி பெரு­வெற்றி பெறும். உரையை முடிக்­கும் போது நான் கூற விரும்­பு­வது, தி.மு.க.வின் பய­ணம் வர­லாறு நெடுக, எப்­போ­தும் இளை­ஞர்­க­ளு­டன் தான் இருந்து வரு­கி­றது.  அந்த பாரம்­ப­ரி­யம் நமது இளை­ஞர்­க­ளின் ஆத­ர­வு­டன் என்­றும் தொட­ரும். உங்­கள் நேரத்­திற்­கும் கவ­னத்­திற்­கும் நன்றி. என்னை அழைத்­த­தற்கு தி வீக் ஆங்­கில வார இத­ழுக்கு நன்­றி­யைத்­தெ­ரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நன்றி வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின்  திரா­விட இயக்­கத்­தின் வளர்ச்சி மற்­றும் தற்­கால இளை­ஞர்­க­ளின் அர­சி­யல் பற்றி விரி­வா­கப் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>