<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="228,931,955,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 03 2026 03:38:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260303T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="03032026-CHN-06" position.sequence="06" ex-ref="03032026-CHN-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">ஊட­க­வி­ய­லா­ளர்­கள் – பல துறை­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளின் கேள்­வி­க­ளுக்கு</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34"> துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பதி­ல­ளித்தார்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Dcmspeech2.3.1_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கேள்­வி­கள்– பதில்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5"> பவானி தேவி போன்ற பல­ரைத் தற்­போது கண்­ட­றிந்து, அவர்­கள் முன்­னே­று­வ­தற்­கா­கத் தமி­ழ­நாடு அர­சும் நீங்­க­ளும் பல உத­வி­க­ளைச் செய்து வரு­கி­றீர்­கள். இது போன்ற வீரர்­களை எவ்­வாறு தேர்வு செய்­கி­றீர்­கள்? அவர்­களை எப்­படி அடை­யா­ளம் காண்­கி­றீர்­கள்? பவானி தேவி பற்றி உங்­கள் கருத்து என்ன? இவர்­க­ளுக்கு என்­னென்ன தேவை­கள் இருக்­கின்­றன என்­பதை, விளை­யாட்­டுத் துறை எவ்­வாறு முத­லில் கண்­ட­றி­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">துணை முத­ல­மைச்­சர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அது­தான் எங்­க­ளின் முதன்­மை­யான பணி. அதற்­கா­கத்­தான் இந்த விளை­யாட்­டுத் துறை உரு­வாக்­கப்­பட்­டது. முன்­னாள் முத­ல­மைச்­சர் கலை­ஞர் அவர்­கள், இதற்­கெ­னத் தனி­யாக ஒரு துறையை உரு­வாக்கி, வளர்ந்து வரும் திற­மை­க­ளைக் கண்­ட­றிந்து, அவர்­களை வளர்த்­தெ­டுத்து, அவர்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவே இத்­து­றை­யைத் தொடங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஆண்­டுக்கு 30 இலட்­சம் ரூபாய்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பவானி தேவி ஏறத்­தாழ 19 ஆண்­டு­க­ளா­கத் தமிழ்­நாடு விளை­யாட்டு மேம்­பாட்டு ஆணை­யத்­தின் ஆத­ர­வில் இருக்­கி­றார். அவர் `சாம்­பி­யன்ஸ் மேம்­பாட்­டுத் திட்­டம்’ (CDS) என்­ப­தில் இணைந்து, கடந்த 19 ஆண்­டு­க­ளா­கத் தொடர்ந்து எஸ்.டி.ஏ.டி–யு­டன் தொடர்­பில் உள்­ளார். தற்­போது அவர் `எலைட்’ (Elite) திட்­டத்­தின் கீழ் இருக்­கி­றார். இந்­தத் திட்­டத்­தின் மூலம் ஆண்­டுக்கு 30 இலட்­சம் ரூபா­யைத் தமிழ்­நாடு அரசு அவ­ருக்கு வழங்­கு­கி­றது. அவர் போட்­டி­க­ளில் வெற்றி பெற்­றால், அதற்­கான ஊக்­கத்­தொகை தனி­யாக வழங்­கப்­ப­டும். தவிர, அவ­ரின் மருத்­து­வச் செல­வு­கள், பய­ணம், உணவு ஆகி­ய­வற்­றைத் தமிழ்­நாடு அரசே ஏற்­றுக்­கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஒரு விளை­யாட்டு வீர­ருக்கு இவை மிக­வும் முக்­கி­ய­மா­னவை. ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­க­ளில் இந்­தி­யா­வைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி 11 முறை பங்­கேற்ற ஒரே வீராங்­கனை அவர்­தான். தற்­போது தோள்­பட்­டைக் காயம் கார­ண­மாக அவர் மீண்­டெ­ழும் சிகிச்­சை­யில், பிரான்ஸ் நாட்­டில் இருக்­கி­றார். தனது மருத்­து­வச் செல­வு­க­ளுக்­காக முத­ல­மைச்­ச­ரி­டம் கோரிக்கை வைத்­தார். உட­ன­டி­யாக, நாங்­கள் அதை முத­ல­மைச்­ச­ரின் கவ­னத்­திற்­குக் கொண்டு சென்­றோம். அவர் தமிழ்­நாட்­டுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் எவ்­வ­ளவு பதக்­கங்­களை வென்று கொடுத்­தி­ருக்­கி­றார் என்­பதை விளக்கி, அவ­ருக்­குத் தேவை­யான அனைத்து உத­வி­க­ளை­யும் செய்து வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்த ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­க­ளில் அவர் இந்­தி­யா­வைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கி­றார். அதில் அவர் நிச்­ச­யம் வெற்றி பெறு­வார். ஒலிம்­பிக் போட்­டி­க­ளுக்­கும் அவர் தயா­ராகி வரு­கி­றார். அவர் தமிழ்­நாட்­டுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் மேலும் பல பெரு­மை­க­ளைத் தேடித் தரு­வார் என்ற நம்­பிக்கை எங்­க­ளுக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பொது­வா­கப் பெரிய குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கோ அல்­லது கட்­சித் தலை­மைக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்கோ `கன­மான’ துறை­களே (Portfolio) ஒதுக்­கப்­ப­டும். ஆனால், நீங்­கள் தேர்வு செய்­தது விளை­யாட்­டுத் துறை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">துணை முத­ல­மைச்­சர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கன­மான துறை என்­றால் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அதா­வது அதிக வரு­வாய் ஈட்­டக்­கூ­டிய அல்­லது செல்­வாக்­கு­மிக்க துறை­க­ளாக அவை இருக்­கும். ஆனால் நீங்­கள் விளை­யாட்­டுத் துறை­யைத் தேர்வு செய்­துள்­ளீர்­கள். ஏன் இத்­து­றை­யைத் தேர்ந்­தெ­டுத்­தீர்­கள்? இதில் என்­னென்ன மாற்­றங்­க­ளைக் கொண்டு வந்­துள்­ளீர்­கள்? இன்­னும் என்­னென்ன மாற்­றங்­க­ளைக் கொண்டு வர விரும்­பு­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">துணை முத­ல­மைச்­சர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஒரு அரசு செயல்­ப­டும்­போது, இது சிறிய துறை, இது பெரிய துறை அல்­லது உங்­கள் மொழி­யில் சொன்­னால் இது ‘கன­மான’ துறை, இது ‘மெலி­தான’ துறை என்ற பாகு­பாடு எது­வுமே கிடை­யாது. எந்­தத் துறை­யின் மூலம் மக்­களை அதிக அள­வில் சென்­ற­டைய முடி­யுமோ, எந்­தத் துறை­யின் மூலம் அதி­க­மான நலத்­திட்­டங்­களை வழங்க முடி­யுமோ, அதுவே கன­மான துறை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அப்­ப­டிப் பார்த்­தால், நான் இத்­து­றையை ஏற்ற பிறகு இந்த விளை­யாட்­டுத் துறைக்கு அதிக கவ­னம் கிடைத்­துள்­ளது. அது ஒரு கார­ண­மா­க­வும் இருக்­க­லாம். நான் விளை­யாட்­டுத் துறையை மட்­டும் கவ­னிக்­க­வில்லை; உங்­கள் தக­வ­லுக்­கா­கக் கூறு­கி­றேன், ‘சிறப்­புத் திட்­டச் செய­லாக்­கத் துறை’ என்­றொரு துறை­யும் என்­னி­டம் உள்­ளது. அர­சின் எந்­த­வொரு துறை­யின் ஆய்­வுக் கூட்­டத்­தை­யும் இத்­துறை நடத்த முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நான் இத்­து­றை­யின் அமைச்­ச­ராக இருப்­ப­தால், கடந்த மூன்­றரை ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டில் உள்ள ஒவ்­வொரு மாவட்­டத்­துக்­கும் குறைந்­தது மூன்று முறை பய­ணம் செய்­துள்­ளேன். அங்­கி­ருக்­கும் அரசு அலு­வ­லர்­கள், மாவட்ட ஆட்­சி­யர்­கள் மற்­றும் மக்­கள் பிர­தி­நி­தி­களை அழைத்து ஆய்­வுக் கூட்­டங்­கள் நடத்­து­வோம். அது மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை நடை­பெ­றும். ஒவ்­வொரு துறை­யி­லும் அரசு அறி­வித்த பணி­கள் எந்த அள­வில் உள்­ளன, அந்த மாவட்­டத்­திற்கு வேறென்ன தேவை, எத்­தனை மனுக்­கள் வந்­துள்­ளன என்­பன குறித்து ஆய்வு செய்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மற்­றொன்று, மக­ளிர் சுய உத­விக் குழுக்­கள். தற்­போ­தைய முத­ல­மைச்­சர் அவர்­கள் உள்­ளாட்­சித் துறை அமைச்­ச­ராக இருந்­த­போது இத்­து­றை­யை­யும் கவ­னித்­தார். அது விளை­யாட்­டுத் துறையை விட கன­மான துறை. ஏனெ­னில், தமிழ்­நாட்­டில் 4.5 இலட்­சம் சுய உத­விக் குழுக்­கள் உள்­ளன. இதில் சுமார் 60 இலட்­சம் மக­ளிர் உறுப்­பி­னர்­க­ளாக உள்­ள­னர். அவர்­க­ளுக்­கா­க­வும் நாங்­கள் பல புதிய முயற்­சி­க­ளை­யும் திட்­டங்­க­ளை­யும் மேற்­கொண்­டுள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இளை­ஞர்­க­ளு­டன் எளி­தா­கத் தொடர்பு கொள்­ளக்­கூ­டிய துறை என்­ப­தால், விளை­யாட்­டுத் துறை­யைத் தேர்ந்­தெ­டுத்­தோம். முக்­கி­ய­மாக, விளை­யாட்டு உள்­கட்­ட­மைப்­பைப் பொறுத்­த­வரை, கடந்த அ.தி.மு.க அர­சு­டன் ஒப்­பி­டு­வது தவ­றா­கத் தெரி­ய­லாம். ஆனால், அப்­ப­டிச் சொன்­னால்­தான் இத்­து­றை­யில் எவ்­வ­ளவு பணி­கள் நடந்­துள்­ளன என்­பது புரி­யும். கடந்த 10 ஆண்­டு­க­ளில் அவர்­கள் ஒதுக்­கி­யது 380 கோடி ரூபாய். ஆனால், கடந்த நான்கு ஆண்­டு­கள் 10 மாதங்­க­ளில் இந்த அரசு ஒதுக்­கி­யது சுமார் 600 கோடி ரூபாய்.  அதே­போல், ஒவ்­வொரு பட்­ஜெட்­டி­லும் நிதி ஒதுக்­கீட்­டைத் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">முத­ல­மைச்­ச­ரின் மகன் என்­ப­தால் கூடு­தல் முக்­கி­யத்­து­வம் கிடைத்­து­வி­டும் என்­பது தவறு, அது அவ்­வ­ளவு சுல­ப­மாக நடந்­து­வி­டாது. நாங்­கள் ஒவ்­வொரு ஆண்­டும் சிறப்­பா­கச் செயல்­பட்டு, அதி­கப் பதக்­கங்­களை வென்று, சாத­னை­யா­ளர்­க­ளின் விவ­ரங்­களை முத­ல­மைச்­ச­ரி­டம் சமர்ப்­பித்து மெய்ப்­பித்த பிறகே, இவ்­வ­ளவு போட்­டி­க­ளை­யும் உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளை­யும் செய்து வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">உதா­ர­ண­மாக, ஐந்து மாதங்­க­ளுக்கு முன்பு உல­கக் கோப்பை ஜூனி­யர்ஹாக்கி போட்­டி­கள் நடை­பெற்­றன. இது இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடை­பெ­றும். நீண்ட இடை­வே­ளைக்­குப் பிறகு தமிழ்­நாட்­டுக்கு அந்த வாய்ப்பு கிடைத்­தது. அதற்கு இரண்டு இடங்­கள் தேவைப்­பட்­டன. ஒன்று சென்­னை­யில் நடத்­து­வ­தென முடி­வா­னது. மற்­றொன்­றைக் கோயம்­புத்­தூ­ரில் நடத்­த­லாம் என அவர்­கள் கரு­தி­னார்­கள். ஆனால், தென் தமிழ்­நாட்­டில் நிறைய ஹாக்கி வீரர்­கள் இருப்­ப­தால், அவர்­க­ளுக்­கும் ஒரு அனு­ப­வம் கிடைக்க வேண்­டும் என்­ப­தற்­காக, மது­ரை­யில் நடத்­த­லாம் என நான் கூறி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மது­ரை­யில் அதற்­கான வச­தியோ, ஹாக்கி மைதா­னமோ அப்­பொ­ழுது இல்லை. உட­ன­டி­யாக முத­ல­மைச்­ச­ரி­டம் பேசி நிதி பெற்று, நான்கே மாதங்­க­ளில் சர்­வ­தே­சத் தரம் வாய்ந்த ஒரு ஹாக்கி மைதா­னத்தை மது­ரை­யில் கட்டி முடித்து, போட்­டி­யை­யும் நடத்­தி­னோம். அங்கு வந்து விளை­யா­டிய 20 நாடு­க­ளைச் சேர்ந்த சர்­வ­தேச வீரர்­கள், சென்னை மைதா­னத்தை விட, மதுரை மைதா­னம் சிறப்­பாக இருப்­ப­தா­கக் கூறி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">எல்­லோ­ருக்­கும் எல்­லாம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இது­போன்றஒரு பர­வ­லான முன்­னேற்­றமே எங்­க­ளின் இலக்கு. `எல்­லோ­ருக்­கும் எல்­லாம்’ என்­ப­து­தான் திரா­விட மாடல் அர­சின் கொள்கை. அப்­படி அனை­வ­ருக்­கு­மான வளர்ச்­சியை இந்த அரசு வழங்கி வரு­கி­றது. அதன் விளை­வாக, விளை­யாட்­டுத் துறை­யில் சிறப்­பா­கச் செயல்­ப­டும் மாநி­லத்­திற்­கான (Best State Performing in Sports) விருதை, எங்­க­ளது துறை தொடர்ந்து நான்கு ஆண்­டு­க­ளா­கப் பெற்­றுள்­ளது. நாங்­க­ளும் எங்­களை மெய்ப்­பித்­துள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சில விளை­யாட்டு வீரர்­கள் முத­ல­மைச்­ச­ரைச் சந்­திக்­கும்­போது, மீண்­டும் உங்­க­ளது அரசு அமைந்­தால் (Dravidian Model 2.0) இவ­ரையே மீண்­டும் விளை­யாட்­டுத் துறை அமைச்­ச­ராக நிய­மிக்க வேண்­டும் எனக் கோரிக்கை வைக்­கின்­ற­னர். இது எனக்கு எவ்­வ­ளவு பெரிய அழுத்­தம் என்­பது எனக்­குத்­தான் தெரி­யும். ஏனெ­னில், இதை­வி­டச் சிறப்­பா­கச் செயல்­பட வேண்­டும் என்ற எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது. தமிழ்­நாட்­டில் அதற்­கான திற­மை­கள் நிறைய உள்­ளன. அவர்­களை வளர்த்­தெ­டுத்து வழி­காட்­டு­வ­து­தான் எங்­க­ளது துறை­யின் வேலை என்று நான் கரு­து­கி­றேன். நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பதில் கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>