<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,360,958,994" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 03 2026 03:54:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260303T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="03032026-VLR-04" position.sequence="04" ex-ref="03032026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="34">நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வரலாற்றில் முதல் முறையாக – இன்று</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="79">ஒரே நாளில் ரூ.840.76 கோடியில் 5367 குடியிருப்புகள்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="30">முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை. மார்ச் 3 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">முத­ல­மைச்­சர்  மு.க.ஸ்டாலின் அவர்­கள், வீட்­டு­வ­சதி மற்­றும் நகர்ப்­புற வளர்ச்­சித் துறை­யின் தமிழ்­நாடு நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யத்­தின் வர­லாற்­றில் முதல்­மு­றை­யாக நேற்று (2.3.2026) ஒரே­நா­ளில் மறு கட்­டு­மா­னத் திட்­டத்­தின் கீழ்,  சென்­னை­யில் 9 திட்­டப்­ப­கு­தி­க­ளில்  696.55 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள 4.035 புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­கள், அனை­வ­ருக்­கும் வீட்டு வசதி திட்­டத்­தின் கீழ்  வெளி மாவட்­டங்­க­ளில் 4 திட்­டப்­ப­கு­தி­க­ளில் 144.21 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள 1,332 புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­கள், என மொத்­தம்     13 திட்­டப்­ப­கு­தி­க­ளில் 840.76 கோடி ரூபாய் செல­வில் புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள 5367 குடி­யி­ருப்­பு­களை  திறந்து வைத்து, பய­னா­ளி­க­ளுக்கு குடி­யி­ருப்­புக்­கான ஒதுக்­கீடு ஆணை­களை வழங்­கி­னார். மேலும், 2 திட்­டப்­ப­கு­தி­க­ளில் 420.34 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 1984 புதிய அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­கள்  கட்­டு­வ­தற்கு அடிக்­கல் நாட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் வாழும் நகர்ப்­புற ஏழைக் குடும்­பங்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளை­யும் உள்­ள­டக்­கிய வீட்டு வச­தி­யினை ஏற்­ப­டுத்தி தரும் வகை­யில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் 1970-ஆம் ஆண்டு  தமிழ்­நாடு குடி­சைப் பகுதி மாற்று வாரி­யம் தொடங்­கப்­பட்­டது. நகர்ப்­புற ஏழைக் குடும்­பங்­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை மேம்­ப­டுத்த வீட்­டு­வ­சதி வாய்ப்­பு­கள் மட்­டுமே போது­மா­ன­தாக இருக்­காது. அவர்­க­ளுக்கு குடி­நீர், சுகா­தா­ரம், மின்­சா­ரம், போக்­கு­வ­ரத்து, கல்வி, மருத்­துவ வசதி, திடக்­க­ழிவு மேலாண்மை, பொது வெளி­யி­டம் போன்ற போது­மான நகர்ப்­புற வச­தி­க­ளு­டன் வீட்­டு­வ­சதி ஏற்­ப­டுத்­து­வது அவ­சி­யம் என்று கருதி முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் 1.9.2021 அன்று தமிழ்­நாடு குடி­சைப்­ப­குதி மாற்று வாரி­யத்­தின் பெய­ரினை தமிழ்­நாடு நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யம் என்று பெயர் மாற்­றம் செய்து ஆணை­யிட்­டார். குடி­சை­களை மாற்­று­வது மட்­டு­மல்ல, குடி­சை­க­ளில் வாழும் மக்­க­ளு­டைய வாழ்­வா­ தா­ரத்­தை­யும், வாழ்க்­கைத் தரத்­தை­யும் உயர்த்­திட வேண்­டும் என்ற எண்­ணத்­தோடு இந்­தப் பெயர் மாற்­றம் செய்­யப்­பட்டு திட்­டங்­கள் செயல் ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரிய புதிய குடி­யி­ருப்­பு­களை திறந்து வைத்து, புதிய  குடி­யி­ருப்பு கட்­டு­மா­னப் பணிக்கு அடிக்­கல் நாட்­டி­னார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யத்­தின் சார்­பில்  மறு கட்­டு­மா­னத் திட்­டத்­தின் கீழ்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஆயி­ரம் விளக்கு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் டாக்­டர் தாமஸ் சாலை திட்­டப்­ப­கு­தி­யில் நடை­பெற்ற விழா­வில்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">டாக்­டர் தாமஸ் சாலை திட்­டப்­ப­கு­தி­யில் 77.75   கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்ட 470 புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­க­ளை­யும், சுபே­தார் கார்­டன் திட்­டப்­ப­கு­தி­யில் 57.32 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்ட 300  புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­க­ளை­யும், அப்­பா­சாமி முதலி தெரு திட்­டப்­ப­கு­தி­யில் 12.90 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்ட 68   புதிய அடுக்­கு­மாடி குடியி ­ருப்­பு­க­ளை­யும், பெரி­ய­பா­ளை­யத்­தம்­மன்  கோயில் திட்­டப்­ப­கு­தி­யில் 5.72 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்ட 32   புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­க­ளை­யும்   முத­ல­மைச்­சர் அவர்­கள் இன்­றை­ய­தி­னம் திறந்து வைத்து, பய­னா­ளி­க­ளுக்கு குடி­யி­ருப்­புக்­கான ஒதுக்­கீட்டு ஆணை­களை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், கிரீம்ஸ் சாலை­யில் உள்ள குடி­சை­களை அகற்றி  அப்­ப­குதி மக்­க­ளுக்கு வீடு­கள்  வழங்க 46.12  கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 283  புதிய அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­கள் கட்­டும் பணிக்கு  முத­ல­மைச்­சர் அவர்­கள் அடிக்­கல் நாட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மயி­லாப்­பூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் குயில் தோட்­டம் திட்­டப்­ப­கு­தி­யில் நடை­பெற்ற விழா­வில்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் அவர்­கள் குயில் தோட்­டம் திட்­டப்­ப­கு­தி­யில் 65.02 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்ட 384  புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு­ களை­யும், வன்­னி­ய­பு­ரம் திட்­டப்­ப­கு­தி­யில் 36.92 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்ட 216 புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­க­ளை­யும் திறந்து வைத்து, பய­னா­ளி­க­ளுக்கு குடி­யி­ருப்­புக்­கான ஒதுக்­கீட்டு ஆணை­களை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சைதாப்­பேட்டை சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் கோட்­டூர்­பு­ரம் திட்­டப்­ப­கு­தி­யில் நடை­பெற்ற விழா­வில்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் அவர்­கள், கோட்­டூர்­பு­ரம் திட்­டப்­ப­கு­தி­யில் 307.24 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்ட 1800  புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­க­ளை­யும், அப்­பாவு நகர் மற்­றும் சுப்­பு­பிள்ளை தோட்­டம் திட்­டப்­ப­கு­தி­யில் 88.05 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்ட 522  புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­க­ளை­யும், இரா­ய­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் செட்­டித் தோட்­டம் திட்­டப்­ப­கு­தி­யில் 45.63 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்ட 243   புதிய அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­க­ளை­யும்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோயம்­புத்­தூர் மாவட்­டம், அவி­நாசி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் முல்­லை­ந­கர் திட்­ட ப்­ப­கு­தி­யில் 38.79 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்ட 348  புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­க­ளை­யும், வால்­பாறை சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் வால்­பாறை திட்­டப்­ப­கு­தி­யில் 12.27 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்ட 80  புதிய அடுக்­கு­மாடி குடி­யி ­ருப்­பு­க­ளை­யும்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மதுரை மாவட்­டம், திரு­மங்­க­லம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் கர­டிக்­கல் திட்­டப்­ப­கு­தி­யில் 85.88  கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்ட 840   புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­க­ளை­யும்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திருச்­சி­ராப்­பள்ளி மாவட்­டம், திருச்சி கிழக்கு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் ஜெயில்­பேட்டை பகுதி - 2 திட்­டப்­ப­கு­தி­யில் 7.27 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்ட 64  புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு­ களை­யும்   முத­ல­மைச்­சர் அவர்­கள் திறந்து வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சோழிங்­க­நல்­லூர் சட்­ட­மன்ற தொகு­தி­யில் பெரும்­பாக்­கம் திட்­டப்­ப­கு­தி­யில் 4 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கட்­டப்­பட்ட உட்­கட்­ட­மைப்பு வச­தி­கள் கொண்ட விளை­யாட்டு மைதா­னத்தை திறந்து வைத்து,   மேலும், சைதாப்­பேட்டை சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் சிட்கோ நகர் திட்­டப்­ப­கு­தி­யில் 374.22 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 1701  புதிய அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­கள் மற்­றும் பெரும்­பாக்­கம் திட்­டப்­ப­கு­தி­யில் 5 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் முதல்­வர் படைப்­ப­கம் கட்­டு­வ­தற்கு   முத­ல­மைச்­சர் அவர்­கள் அடிக்­கல் நாட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோட்­டூர்­பு­ரம் திட்­டப்­ப­கு­தி­யில் நடை­பெற்ற விழா­வில், தமிழ்­நாடு நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யத்­தின் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­களை  முத­ல­மைச்­சர் அவர்­கள் திறந்து வைத்து, பய­னா­ளி­க­ளுக்கு குடி­யி­ருப்­புக்­கான ஒதுக்­கீட்டு ஆணை­களை வழங்­கி­னார். மேலும், அக்­கு­டி­யி­ருப்பு வளா­கத்­தில் மரக்­கன்றை நட்டு வைத்து,  அக்­கு­டி­யி­ருப்­பு­களை பார்­வை­யிட்டு பய­னா­ளி­க­ளி­டம் அங்கு செய்து தரப்­பட்­டுள்ள வச­தி­கள் குறித்து கேட்­ட­றிந்­தார். அத்­து­டன்  அங்கு அமைக்­கப்­பட்­டி­ருந்த கூடைப்­பந்து விளை­யாட்டு மைதா­னத்தை பார்­வை­யிட்டு, அங்கு பயிற்­சி­யில் ஈடு­பட்ட வீரர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யத்­தின் வர­லாற்­றில் முதல்­மு­றை­யாக இன்று ஒரே நாளில் மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் 13 திட்­டப்­ப­கு­தி­க­ளில் 840.76 கோடி ரூபாய் செல­வில் புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள 5367 குடி­யி­ருப்­பு­களை திறந்து வைத்­தார் என்­பது சிறப்­புக்­கு­ரி­ய­தா­கும். மேலும், 2 திட்­டப்­ப­கு­தி­க­ளில் 420.34 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில்  1984 புதிய அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­கள்  கட்­டு­வ­தற்கு அடிக்­கல் நாட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­பு­திய குடி­யி­ருப்­பு­கள், ஒவ்­வொன்­றும் தலா 400 சதுர அடி பரப்­ப­ள­வு­டன், ஒரு பல்­நோக்கு அறை, படுக்கை அறை, சமை­யல் அறை மற்­றும் கழி­வறை ஆகிய வச­தி­க­ளு­டன் கட்­டப்­பட்­டுள்­ளது.  மேலும், அனைத்து குடி­யி­ருப்பு வளா­கங்­க­ளும், தார் சாலை வசதி, குடி­நீர்­வ­சதி, கழிவு நீரேற்று வசதி, மழை­நீர் சேக­ரிப்பு கட்­ட­மைப்பு ஆகிய வச­தி­க­ளு­டன்  கட்­டப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யி­லான அர­சால் இந்த ஐந்து ஆண்­டு­க­ளில் தமிழ்­நாடு நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யத்­தின் சார்­பில் 209 திட்­டப் பகு­தி­க­ளில் 74,126 அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­கள் வீடற்ற ஏழை எளிய  மக்­க­ளுக்­கா­க­வும், குடி­சைப் பகு­தி­க­ளில் வாழும் மக்­க­ளுக்­கா­க­வும் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­நி­கழ்ச்­சி­யில்,  துணை முத­ல­மைச்­சர்  உத­ய­நிதி ஸ்டாலின்,  குறு, சிறு மற்­றும் நடுத்­த­ரத் தொழில் நிறு­வ­னங்­கள் துறை அமைச்­சர்  தா.மோ.அன்­ப­ர­சன்,   மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர்   மா. சுப்­பி­ர­ம­ணி­யன்,   இந்து சமய அற­நி­லை­யத் துறை அமைச்­சர் பி.கே. சேகர்­பாபு, பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி மேயர் திரு­மதி ஆர். பிரியா, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் டாக்­டர் நா.எழி­லன்,  த.வேலு, துணை மேயர்  மு. மகேஷ் குமார், பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி நிலைக்­குழு தலை­வர்  நே. சிற்­ற­ரசு, வீட்­டு­வ­சதி மற்­றும் நகர்ப்­புற வளர்ச்­சித் துறை கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர் திரு­மதி காகர்லா  உஷா,  பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர் ஜெ. கும­ர­கு­ரு­ப­ரன்,  தமிழ்­நாடு நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரிய மேலாண்மை இயக்­கு­நர் திரு­மதி ஸ்ரேயா 
பி. சிங்,   வாரிய இணை மேலாண்மை இயக்­கு­நர் திரு­மதி ந.பிரியா ரவிச்­சந்­தி­ரன்,   வாரிய தலைமை பொறி­யா­ளர்­கள்  லால் பக­தூர்,    வி.எஸ். கிருஷ்­ண­சாமி   மற்­றும் அரசு உயர் அலு­வ­லர்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>