<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,64,959,777" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 24 2026 14:36:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260325T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="25032026-CBE-09" position.sequence="09" ex-ref="25032026-CBE-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="48">ஈரோட்­டில் துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு! –   </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="48">8 ஆம் பக்கத்தொடர்ச்சி</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">உங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் நான் கேட்­டுக்­கொள்­வது, மக்­க­ளோடு நேர­டித் தொடர்­பில் இருங்­கள். மக்­க­ளு­டன் பேசுங்­கள். அவர்­க­ளின் நம்­பிக்­கையை மட்­டும் நீங்­கள் பெற்­று­விட்­டால், நிச்­ச­யம் அவர்­கள் உங்­களை நம்­பு­வார்­கள். யாரும் அந்த நம்­பிக்­கை­யைக் கெடுக்க முடி­யாது. நான் ஏதோ இந்த வர­வி­ருக்­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­தலை மட்­டும் மன­தில் வைத்­துப் பேசு­கி­றேன் என்று நினைக்­கா­தீர்­கள். மக்­க­ளின் நம்­பிக்­கையை நீங்­கள் பெற்­று­விட்­டால், அதை­வி­டப் பெரிய சொத்து எது­வுமே இல்லை. உங்­க­ளின் எதிர்­கா­லத்­துக்கு அது நிச்­ச­யம் பயன்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கண்­கொத்­திப் பாம்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">மக்­க­ளி­டம் பேசும்­போது மிகக் கவ­ன­மா­கப் பேசுங்­கள். நீங்­கள் பயன்­ப­டுத்­து­கின்ற ஒவ்­வொரு வார்த்­தை­யும் முக்­கி­யம். இன்று அனை­வர் கையி­லும் அலை­பேசி இருக்­கி­றது. தி.மு.க. நிர்­வா­கி­கள், குறிப்­பாக இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் ஏதே­னும் தவ­றா­கப் பேசி­விட மாட்­டார்­களா, தவ­றாக நடந்து கொள்ள மாட்­டார்­களா என்று காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். அத­னால் எச்­ச­ரிக்­கை­யா­கப் பேசுங்­கள். சிறிய தவறு கிடைத்­து­விட்­டால்­கூட அதைப் பெரி­ய­தாக ஊதி­வி­டு­வார்­கள். எதி­ரி­க­ளும் துரோ­கி­க­ளும் கண்­கொத்­திப் பாம்பு போலக் காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்.­</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">யார் வாக்­குச்­சா­வ­டி­யில் யார் அதிக வாக்­கு­கள் பெற்­றுத் தரப்­போ­கி­றீர்­கள் என்று உங்­க­ளுக்­குள் ஓர் ஆரோக்­கி­ய­மான போட்டி இருக்க வேண்­டும். நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் எந்த வாக்­குச்­சா­வடி என்­பது இப்­போது எங்­க­ளுக்­குத் தெரி­யும். “நான் இந்­தத் தெரு­வுக்­குப் பொறுப்பு, இத்­தனை வாக்­கு­க­ளுக்கு நான் பொறுப்பு, இத்­தனை குடும்­பங்­க­ளுக்கு நான் பொறுப்பு எடுத்­துக்­கொள்­கி­றேன்” என்று உங்­க­ளுக்­குள் திட்­ட­மிட்டு, கவ­னத்­து­டன் பணி­யாற்­றி­னால் நுணுக்­க­மான அள­வில் மிகப் பெரிய வெற்­றியை நாம் பெற­லாம். உதா­ர­ண­மாக, ஒரு வாக்­குச்­சா­வ­டி­யில் 1,000 வாக்­கா­ளர்­கள் இருக்­கி­றார்­கள் என்­றால், அந்த 1,000 வாக்­கா­ளர்­க­ளை­யும் கிளை மற்­றும் பகுதி நிர்­வா­கி­கள் நிச்­ச­யம் சந்­தித்­தி­ருக்க வேண்­டும். அதை நீங்­கள் உறுதி செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">குறிப்­பேட்­டில் பதிவு செய்­யுங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இந்­தப் பணி­க­ளை­யெல்­லாம் செய்­யும்­போது மாவட்ட, ஒன்­றிய, நகர, பேரூர் கழ­கச் செய­லா­ளர்­க­ளின் அனு­ம­தி­யைப் பெற்று, ஆலோ­சனை செய்­து­விட்டு இந்­தப் பணி­க­ளில் இறங்­குங்­கள். நிச்­ச­யம் மாவட்ட, ஒன்­றிய, நகர, பகு­திச் செய­லா­ளர்­கள் இளை­ஞர் அணி களத்­தில் இறங்­கு­கின்ற பணிக்கு உங்­க­ளுக்­குத் துணை­யாக நிற்­பார்­கள், உங்­க­ளுக்கு வழி­காட்­டு­வார்­கள். தேர்­த­லுக்கு இன்­னும் சரி­யாக ஒரு மாதம்­தான் இருக்­கி­றது. ஒவ்­வொரு நாளும் நீங்­கள் எத்­தனை பேரைச் சந்­தித்­துப் பேசி­னீர்­கள் என்­பதை ஒரு குறிப்­பேட்­டில் பதிவு செய்­யுங்­கள். உங்­க­ளின் தேர்­தல் பணி­களை எழுதி வையுங்­கள், புகைப்­ப­டம் எடுத்து, அதைக் குறிப்­போடு சேர்த்து வையுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நான் நிச்­ச­யம் பிர­ச்சா­ரத்­துக்­காக இன்­னும் ஒரு 10, 15 நாட்­க­ளில் மீண்­டும் இங்கு வரு­வேன். ஈரோட்­டுக்­கும் நாமக்­கல்­லுக்­கும்  வரு­வேன். அப்­பொ­ழுது உங்­க­ளின் குறிப்­பேட்டை எடுத்­துப் பார்ப்­பேன். நீங்­கள் எவ்­வ­ளவு வேலை செய்­துள்­ளீர்­கள் என்று உங்­க­ளி­டம் கேட்­பேன், உங்­க­ளின் கருத்­து­களை நான் கேட்­பேன். நீங்­கள் என்­னி­டம் சொல்ல வேண்­டும், “நான் இவ்­வ­ளவு பேரைச் சந்­தித்­துள்­ளேன், இவ்­வ­ளவு வாக்­கு­று­தி­களை நான் உறுதி செய்­துள்­ளேன்” என்­கிற அந்த உறு­தியை நீங்­கள் அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நான் மீண்­டும் மீண்­டும் உங்­க­ளுக்­குச் சொல்­கி­றேன், யார் உண்­மை­யாக இளை­ஞர் அணி­யில் உழைக்­கி­றார்­களோ அவர்­க­ளுக்கு நிச்­ச­ய­மா­கப் பெரிய வாய்ப்­பு­கள் தேடி வரும். உங்­க­ளின் உழைப்­புக்­கான அங்­கீ­கா­ரத்தை நம் தலை­வர் அவர்­கள் சரி­யான நேரத்­தில் உங்­க­ளுக்கு வழங்­கு­வார். அதற்கு நான் பொறுப்பு. நம் தலை­வர், நான் எப்­படி உங்­க­ளை­யெல்­லாம் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றேனோ, அதே­போல நம் தலை­வர் நம் அனை­வ­ரை­யும் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார். உங்­கள் உழைப்பை மட்­டும் அல்ல, நான் என்ன செய்­து­கொண்­டி­ருக்­கி­றேன் என்­ப­தை­யும் தலை­வர் தின­மும் கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். இது எனக்கு மட்­டும் வைத்த தேர்வு இல்லை. நம் இரு­வ­ருக்­கும் சேர்த்து வைத்த தேர்வு, நம் குழு­விற்கு வைத்த தேர்வு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மெய்ப்­பிக்க வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">அந்­தத் தேர்­வில் சாதா­ர­ண­மா­கத் தேர்ச்சி நிச்­ச­ய­மா­கப் பெற்­று­வி­டு­வோம். ஆனால் அது போதாது, மிகச் சிறந்த மதிப்­பெண்­ணு­டன் தேர்ச்சி பெற வேண்­டும். அதைச் செய்­து­காட்­டு­வீர்­கள் என்று எனக்கு நம்­பிக்கை இருக்­கி­றது. தி.மு.க–கா­ரன் என்­றால், பொது­வாக என்ன சொல்­வார்­கள் தெரி­யுமா? `சிங்­கிள் டீயைக் குடித்­து­விட்டு சற்­றும் தள­ரா­மல் தேர்­தல் வேலை பார்க்­கி­றான்’ என்று சொல்­வார்­கள். அதை நாம் இப்­போது காலத்­துக்கு ஏற்ப, சற்று மாற்­றிச் சொல்ல வேண்­டும். `தி.மு.க. இளை­ஞர் அணி என்­றால், தலை­மை­யி­லி­ருந்து சிங்­கிள் செய்தி வந்­தால் போதும், அதை 234 தொகு­தி­க­ளி­லும் வாக்­குச்­சா­வடி வரை கொண்டு சேர்ப்­ப­வன்­தான் தி.மு.க. இளை­ஞர் அணி’ என்­பதை மாற்­றிக் காட்­டு­வோம். நம் தலை­வர் சொன்­னது போல, `தமிழ்­நாடு என்­றும் தலை­கு­னி­யாது’ என்­பதை நாம் மெய்ப்­பித்­துக் காட்ட வேண்­டும். தமிழ்­நாடு என்­றைக்­கும் டெல்­லிக்­குக் அவுட் ஆப் கண்ட்­ரோல் என்­பதை மீண்­டும் நிரூ­பித்­துக் காட்­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">தலை­வர் நமக்கு ஓர் இலக்­குக் கொடுத்­துள்­ளார். ‘வெல்­வோம் 200, படைப்­போம் வர­லாறு’ என்று. ஆனால் நான் உங்­க­ளி­டம் சொல்­வ­தெல்­லாம், அடுத்த ஒரு மாத காலம் நாம் கவ­ன­மாக நம் பணி­க­ளைச் செய்­தோம் என்­றால், 200 அல்ல, 234 தொகு­தி­க­ளி­லும் நிச்­ச­யம் நம் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வென்று காட்­டும். அந்த வெற்றி ஈரோடு, நாமக்­கல்மாவட்­டங்­க­ளி­லி­ருந்து தொடங்க வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இளை­ஞர் அணி பங்­க­ளிப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">ஈரோடு மாவட்­டத்­தில் இருக்­கக்­கூ­டிய ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, அந்­தி­யூர் மற்­றும் மிக முக்­கி­ய­மாக கடந்த முறை நாம் வெற்றி வாய்ப்­பைத் தவ­ற­விட்ட மொடக்­கு­றிச்சி, பவானி, கோபி­செட்­டி­பா­ளை­யம், பவா­னி­சா­கர், பெருந்­துறை ஆகிய தொகு­தி­க­ளில் இருந்து இந்த முறை நாம் வெற்றி பெற்­றாக வேண்­டும். அதே­போல நாமக்­கல் மாவட்­டத்­தி­லி­ருந்து முக்­கி­ய­மா­கச் சென்ற முறை நாம் இழந்த குமா­ர­பா­ளை­யம், பர­மத்தி வேலூர் தொகு­தி­க­ளி­லி­ருந்து நாம் நிச்­ச­யம் வெற்றி பெற்­றாக வேண்­டும். அந்த வெற்­றிக்கு இளை­ஞர் அணி­யின் பங்­க­ளிப்பு மிக மிக முக்­கி­ய­மாக இருக்க வேண்­டும். வெற்றி என்­றால் சாதா­ரண வெற்­றி­யாக இருக்­கக் கூடாது, மிகப் பெரிய வாக்கு வித்­தி­ யா­சத்­தில் நாம் வென்று காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">அதற்கு அடுத்த ஒரு மாதத்­துக்­குத் தேர்­தல் மட்­டும்­தான் நம் கண்­க­ளுக்­குத் தெரிய வேண்­டும். அது மட்­டும்­தான் நம் இலக்கு. மே 4–ஆம் தேதி வாக்கு எண்­ணிக்கை. வாக்கு எண்­ணிக்­கை­யின்­போது 234 தொகு­தி­யி­லும் தி.மு.க. முன்­னிலை, நம் கூட்­டணி முன்­னிலை என்­கிற அந்­தச் செய்தி வர வேண்­டும். மீண்­டும் ‘முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின்’ என்­கிற குரல் ஒலித்து, அவர் மீண்­டும் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்க வேண்­டும். இதை மன­தில் வைத்து அடுத்த ஒரு மாதம் உங்­க­ளின்பணி­களை நீங்­கள் வகுத்­துக்­கொள்­ளுங்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நம்மை அழிக்­கப்­போ­வ­தாக ஏற்­க­னவே நிறைய பேர் சுற்­று­கி­றார்­கள். புதிது புதி­தாக நிச்­ச­யம் வரு­வார்­கள். அவர்­க­ளுக்­கெல்­லாம் ஒரே பதில்­தான். பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் 1940–களி­லேயே கூறி­விட்­டுச் சென்­று­விட்­டார். என்ன சொன்­னார் தெரி­யுமா? “தி.மு.கழ­கத்தை அழிக்க வேண்­டும் என்று இன்று எங்­க­ளுக்கு நான்கு அடிக்கு நீங்­கள் குழி வெட்­டு­வீர்­கள். நீங்­கள் குழியை வெட்டி முடிப்­ப­தற்­குள் நாங்­கள் ஆறு அடி வளர்ந்­து­வி­டு­வோம். அதற்­குப் பக்­கத்­தில் ஆறு அடிக்கு எங்­க­ளுக்கு ஒரு குழி வெட்­டு­வீர்­கள். நீங்­கள் குழியை வெட்­டு­வ­தற்­குள் நாங்­கள் 12 அடி வளர்ந்­தி­ருப்­போம். நீங்­கள் எங்­க­ளுக்­குக் குழி வெட்ட வெட்ட நாங்­கள் வளர்ந்­து­கொண்டே இருப்­போம்.” தி.மு.க–கா­ரனை யாரா­லும் குழி­தோண்­டிப் புதைக்க முடி­யாது, யாரா­லும் வீழ்த்த முடி­யாது என்று பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் அன்­றைக்கே சொன்­னார். அதை நாம் இளை­ஞர் அணி மற்­றும் தேர்­தல் களத்­தில் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நம் அனை­வ­ரை­யும் விட ஒரு­வர் இன்று இளை­ஞ­ராக மிகத் துடிப்­பு­டன் களத்­தில் செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார். யாருக்­காக வெற்றி பெறு­கி­றோமோஇல்­லையோ, அந்த ஒரு­வ­ருக்­காக நாம் வெற்றி பெற்றே ஆக வேண்­டும். அது வேறு யாரும் இல்லை, நம் முத­ல­மைச்­சர், நம் கழ­கத் தலை­வர் அவர்­கள்­தான். அவர் இந்த ஐந்து ஆண்­டு­கள் செய்த உழைப்­புக்­கும், பட்ட கஷ்­டத்­திற்­கா­வது இந்த உழைப்பை நாம் கொடுத்து வெற்றி பெற்­றாக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கருத்­துக்­க­ணிப்­பு­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இன்­னொரு வேண்­டு­கோள். இப்­பொ­ழுது சமீ­ப­மா­கத் தேர்­தல் களம் நெருங்­கி­ய­வு­டன் நிறைய கருத்­துக்­க­ணிப்­பு­கள் வரும். இப்­போது நான்மதிய உணவு அருந்­தும்­போது தொலைக்­காட்­சி­யில் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தேன், கருத்­துக்­க­ணிப்பு வந்­தி­ருந்­தது. எல்­லாக் கருத்­துக்­க­ணிப்­பு­க­ளி­லும் நாம்­தான் வெற்றி பெறு­வோம் என்று தொடர்ந்து வந்­து­ கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், தன்­னம்­பிக்கை இருக்­க­லாம் அள­வுக்­க­தி­க­மான தன்­னம்­பிக்­கை­யில் இருக்­கக்­கூ­டாது.  கருத்­துக் கணிப்­பில் எவ்­வ­ளவு சொல்­கி­றார்­களோ, அதை­விட மிகப் பெரிய வெற்­றியை நாம் பெற்­றாக வேண்­டும்.  எனவே, அதை ஒரு கோரிக்­கை­யாக உங்­க­ளுக்கு வைத்து, அடுத்த ஒரு மாதம் நம் அனை­வ­ருக்­கும் தூக்­கம், சாப்­பாடு முக்­கி­யம்.   ஆனால், அதை­விட தி.மு.க–வின் வெற்றி மிக மிக முக்­கி­யம் என்­பதை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">மீண்­டும் உங்­க­ளை­யெல்­லாம் பிரச்­சா­ரத்­துக்கு வரும்­போது சந்­திப்­பேன்.  அப்­போது நீங்­கள் அந்த வெற்­றியை உறுதி செய்ய வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்டு இந்த சிறப்­பான வாய்ப்பை ஏற்­ப­டுத்தி கொடுத்த மாவட்ட நிர்­வா­கத்­துக்­கும், வருகை தந்­தி­ருந்த அனைத்து நிர்­வா­கி­க­ளுக்­கும் மீண்­டும் எனது நன்­றி­யைத் தெரி­வித்து வாய்ப்­புக்கு நன்றி தெரி­வித்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">அமைச்­சர்­கள் முத்­து­சாமி, மு.பெ.சாமி­நா­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கே.இ.பிர­காஷ், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ஏ.ஜி.வெங்­க­டா­ச­லம், வி.சி.சந்­தி­ர­கு­மார், ராம­லிங்­கம்,  கழக துணைப் பொதுச் செய­லா­ளர் அந்­தி­யூர் செல்­வ­ராஜ், மண்­ட­லப் பொறுப்­பா­ளர் செந்­தில் பாலாஜி, அமைச்­சர் மதி­வேந்­தன், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் நல்­ல­சி­வம், கே.ஆர்.என்.ராஜேஷ்­கு­மார்,மாவட்­டப் பொறுப்­பா­ளர்­கள் கே.எஸ்.மூர்த்தி, தோப்பு வெங்­க­டா­ச­லம், மாந­க­ரச் செய­லா­ளர் சுப்­பி­ர­ம­ணி­ யன், கழக அணி­க­ளின் செய­லா­ளர்­கள் எஸ்.எல்.டி.சச்­சி­தா­னந்­தம், சிந்து ரவிச்­சந்­தி­ரன், வீர­மணி, இளை­ஞர் அணி மாநில துணைச் செய­லா­ளர்­கள் சீனி­வா­சன், ஆனந்­த­கு­மார், கழக அணி­க­ளின் மாநில நிர்­வா­கி­கள்கந்­த­சாமி, பார் இளங்கோ, குறிஞ்சி சிவ­கு­மார், கள்­ளிப்­பட்டி மணி, மணி­மா­றன், சர­வ­ணன், காயத்ரி சீனி­வா­சன், ரியா, மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் திரு­வா­ச­கம், திரு­வேங்­க­டம், சன் சுரேஷ், விஸ்­வ­நாத், பாலாஜி, மாந­கர அமைப்­பா­ளர் சேந்­த­பு­க­ழன் உள்­பட கழக முன்­ன­ணி­யி­னர் பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>