<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,828" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 24 2026 22:43:11 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260325T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="25032026-MDU-05" position.sequence="05" ex-ref="25032026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">25.03.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="39">கடந்த ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாளும் 10 மணி நேரம்</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="98">16,500 பேரிடம் நேர்காணல் நடத்திய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் !</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="38">பெண்கள் – இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்பு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup265072_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194660_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="34c09728b6a3598_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, மார்ச் 25–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தி.மு.க தலை­வர்  மு.க.ஸ்டாலின் அவர்­கள்  தேர்­த­லில் போட்­டி­யிட தி.மு.க சார்­பில் கேட்பு மனு அளித்­த­வர்­க­ளி­டம் நேர் ­கா­ணல் நிகழ்ச்சி நடத்தினார். பெண்­க­ளும் இளை­ஞர்­க­ளும் அதிக அள­வில் பங்­கேற்றனர். ஐந்து நாள்­கள் நடை­பெற்ற இந்த நேர்­கா­ண­லில் தமிழ்­நாடு, புதுச்­சேரி ஆகிய மாநி­லங்­க­ளைச் சேர்ந்த 16,500 பேர் கேட்பு மனு அளித்­தி­ருந்­த­னர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வர் திரா­விட நாய­கர் அவர்­கள் தமிழ்­நாட்­டில் படைத்து வரும் புது­மை­கள் அனைத்­தும் என்­றும் வர­லாற்­றில் இடம் பெறக்­கூ­டி­யவை. திரா­விட மாடல் ஆட்­சி­யை­யும், கட்­சி­யை­யும் அவர் இயக்கி வரும் திறன்­க­ளைக் கண்டு தமிழ்­நாடு மட்­டும் அல்ல இந்­தி­யா­வின் பிற மாநி­லங்­க­ளும் கண்டு வியக்­கின்­றன. பல வழி­க­ளில் திரா­விட நாய­கர் அவர்­க­ளின் அறி­வாற்­றலை, செயல் திறன்­களை, அணு­கு­மு­றை­களை நேர­டி­யா­க­வும்  மறை­மு­க­மா­க­வும் தத்­தம் மாநி­லங்­க­ளில் கடைப்­பி­டிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த அள­வுக்கு திரா­விட நாய­க­ரின் திறன்­க­ளும் அணு­கு­மு­றை­க­ளும் வித்­தி­யா­ச­மா­க­ வும் விநோ­த­மா­க­வும் அமைந்­துள்­ளன. நடை­பெ­ற­வுள்ள சட்­ட­மன்­றத்­தேர்­த­லில் போட்­டி­யிட கேட்பு மனு அளித்­த­வர்­க­ளி­டம் அவர் நடத்­திய நேர்­கா­ணல் நிகழ்ச்­சி­யும் அனை­வர் கவ­னத்­தை­யும் ஈர்த்­துள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட நாய­கர் அவர்­கள் அர­சின் அதி­கா­ரி­கள் அலு­வ­லர்­கள் அனை­வ­ரை­யும் அர­வ­ணைப்­பது போலவே, கட்­சி­யின் நிர்­வா­கி­ க­ளை­யும், தொண்­டர்­க­ளை­யும் கனி­வு­ட­ னும் கண்­டிப்­பு­ட­னும் வழி நடத்­தி­வ­ரு­கி­றார்­கள். கட்சி நிர்­வா­கி­க­ளி­ட­மும் தொண்­டர்­க­ளி­ட­மும் அவர் கொண்­டுள்ள நேசம் நிக­ரில்­லா­ தது.தொண்­டர்­க­ளி­டம் அவர் காட்­டும் கனிவு, தொண்­டர்­க­ளுக்கு அவர் செலுத்­தும் மரி­யாதை இவை­க­ளெல்­லாம் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும்நினைந்து நினைந்து மகி­ழ­வைக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­வ­ரைக் காண வேண்­டும் 
அவ­ரு­டன் பேச வேண்­டும் அவ­ரு­டன் புகைப்­ப­டம் எடுத்­துக்­கொள்ள வேண்­டும் என்­ப­தில் நிர்­வா­கி­க­ளும் தொண்­டர்­க­ளும் கொண்­டுள்ள ஆர்­வத்தை தி.மு.க.வை  தவிர வேறு எந்த கட்­சி­யி­லும் காண முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சில நாள்­க­ளில் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­திற்கு தேர்­தல் வர இருக்­கி­றது. இந்­தத் தேர்­த­லில் போட்­டி­யிட விரும்­பும் நிர்­வா­கி­கள் தொண்­டர்­க­ளுக்கு தலை­மைக் கழ­கத்­தில் நேரில் வந்து கேட்பு மனு அளித்­திட வேண்­டும் என தலை­மைக் கழ­கம் மூலம் அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எந்த தொகு­தி­யில் யார் போட்­டி­யி­டு­வது என்­பதை முடிவு செய்­திட வேண்­டும். இதற்­கா­கப் போட்­டி­யிட கேட்பு மனு அளித்­த­வர்­க­ளி­டம் மாவட்ட வாரி­யாக சட்­டப்­பே­ரவை தொகுதி வாரி­யாக நேர்­கா­ணல் நடத்தி அவர்­க­ளில் தகு­தி­யா­ன­வர்­க­ளைத் தேர்வு செய்­திட வேண்­டும். எனவே திரா­விட நாய­கர் அவர்­கள் விண்­ணப்­பித்­த­வர்­க­ளுக்­கான நேர்­கா­ணல் தேதியை மாவட்­டம் வாரி­யாக தொகுதி வாரி­யாக அறி­வித்­தார்­கள். அந்த அறி­விப்­பின்­படி வேட்­பா­ளர்­க­ளா­கப் போட்­டி­யிட விரும்பி கேட்பு மனு அளித்த கழ­கத் தோழர்­கள் தங்­க­ளுக்கு உரிய நாளில், காலை­யிலோ மாலை­யிலோ உரிய நேரத்­தில் அறி­வா­ல­யம் வந்து கூடி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத் தலை­வர், திரா­விட நாய­கர் அவர்­கள் மார்ச் 17 செவ்­வாய் முதல் மார்ச் 23 திங்­கள் வரை ஆறு நாள்­கள் சென்னை அறி­வா­ல­யம் கலை­ஞர் அரங்­கில் நேர்­கா­ணல் நடத்­தி­னார்­கள். நேர்­கா­ண­லில் முதல் நாளான 17.3.2026 அன்று புதுச்­சேரி மாநி­லத்­திற்­கும், 18.3.2026 முதல் மற்ற நாட்­க­ளில் தமிழ்­நாட்­டிற்­கு­மான கேட்பு மனு கொடுத்­த­வர்­க­ளி­டம் நேர்­கா­ணல் நடை
­பெற்­றது. நேர்­கா­ணல் நடை­பெ­றும் நாளில் காலை 9.00 மணிக்கே திரா­விட நாய­கர் அவர்­கள் அறி­வா­ல­யம் வருகை தந்­தார்­கள். காலை 9.30 மணி தொடங்கி பகல் 2.00 மணி வரை­யி­லும், பிற்­ப­க­லில் 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை­யி­லும் என ஒவ்­வொரு நாளும் ஏறத்­தாழ 10 மணி நேரம் போட்­டி­யிட கேட்பு மனு அளித்த 
ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் நேர்­கா­ணலை நடத்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத் தலை­வர் திரா­விட நாய­கர் அவர்­கள் போட்­டி­யிட விரும்பி கேட்பு மனு அளித்­த­வர்­க­ளின் பட்­டி­யல் இருந்­தது. அந்­தப் பட்­டி­யல்­படி பெயர்­சொல்லி ஒவ்­வொ­ரு­வ­ராக அழைத்­தார்­கள். அதன்­படி நேர்­கா­ண­லில் பங்­கேற்­ற­வர் வந்­த­வு­டன் அவரை இருக்­கை­யில் அம­ரச் செய்­தார்­கள். அவ­ரி­டம் உங்­கள் பெயர் என்ன, உங்­கள் ஊர் எது, உங்­கள் தொகுதி எது, உங்­கள் மாவட்­டம் எது மாவட்­டச் செய­லா­ளர் யார் என்ற விவ­ரங்­க­ளை­யெல்­லாம் ஒன்­றன் பின் ஒன்­றாக கேட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதன் பின்­னர், திரா­விட மாடல் அர­சின் திட்­டங்­க­ளைப் பற்­றிக் கேட்­டார்­கள். இந்த திட்­டங்­கள் மீது உங்­கள் பகுதி மக்­கள் கொண்­டுள்ள எண்­ணம் உங்­க­ளுக்­குத் தெரி­யுமா அதைப் பற்­றிச் சொல்­லுங்­கள் என கேட்டு மக்­களை எப்­படி அணு­கு­வீர்­கள், எப்­படி மக்­க­ளி­டம் வாக்­கு­கள் கேட்­பீர்­கள், உங்­க­ளால் எத்­தனை வாக்­கு­கள் பெற முடி­யும், உங்­கள் தொகு­தி­யில் எதிர்க்­கட்சி சார்­பில் யார் நின்­றா­லும் தயக்­க­மின்றி, அஞ்­சா­மல் அவரை எதிர்த்து நின்று வெற்­றி­பெற என்ன திட்­டங்­கள் வைத்­தி­ருக்­கி­றீர்­கள் என்­பது போன்ற கேள்­வி­க­ளைக் கேட்டு வேட்­பா­ளர் ஆகும் தகு­தியை ஆய்வு செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­படி ஆய்வு செய்­யும்­போது அவர்­கள் அனை­வ­ரும் திரா­விட மாடல் அர­சின் திட்­டங்­கள் எல்­லாம் சிறப்­பான முறை­யில் பயன் அளிக்­கின்­றன அவற்­றின் மூலம் மக்­கள் இந்த அர­சின் மீது மிகுந்த மரி­யாதை கொண்­டுள்­ளார்­கள் என்­பது போன்ற செய்­தி­களை கூறி­னார்­கள். அவற்­றைக் கேட்ட கழ­கத் தலை­வர் அவர்­கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி, ஐந்து நாள்­க­ளி­லும் தமிழ்­நாட்­டின் 234 சட்­டப்­பே­ரவை தொகு­தி­க­ளுக்­கும் புதுவை மாநி­லத்­தின் 30 தொகு­தி­க­ளுக்­கும் போட்­டி­யிட விரும்பி கேட்பு மனு அளித்­தி­ருந்த நிர்­வா­கி­க­ளி­டம் கேள்­வி­க­ளைத் தொடுத்து தொகுதி நில­வ­ரங்­களை தெளி­வாக அறிந்து கொண்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நேர்­கா­ண­லில், தமிழ்­நாடு, புதுச்­சேரி மாநி­லங்­க­ளைச் சேர்ந்த 16,500 பேர் கேட்பு மனு அளித்­துள்­ளார்­கள். மற்­ற­வர்­க­ளுக்­காக விண்­ணப்­பித்­த­வர்­க­ளி­ட­மும்  நேர­டி­யாக பங்­கேற்­ற­வர்­க­ளி­ட­மும் தொகுதி பற்­றிய  விவ­ரங்­களை கேட்­ட­றிந்­தார். இந்த நேர்­கா­ண­லில் கேட்பு மனு அளித்­த­வர்­க­ளில் பெண்­க­ளும் இளை­ஞர்­க­ளும் அதி­க­மாக இருந்­த­தும், அவர்­கள் ஆர்­வத்­து­டன் நேர்­கா­ண­லில் பங்­கேற்­ற­தும் எல்­லோ­ருக்­கும் மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. நேர்­கா­ணல் நடை­பெற்ற இந்த நாள்­க­ளில் அறி­வா­ல­யம் கழக நிர்­வா­கி­க­ளா­லும் தொண்­டர்­க­ளா­லும் நிரம்பி 
வழிந்­தது. நேர்­கா­ண­லில் பங்­கு­பெற்ற ஒவ்­வொ­ரு­வ­ரும் தலை­வ­ரைப் பற்றி நினைந்து தம்­மைப் பற்றி தலை­வர் அவர்­கள் கேட்டு அறிந்­தது எங்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யாக இருந்­தது; அத்­து­டன் எங்­க­ளைப் பற்­றிய தக­வல்­களை  முன்­கூட்­டியே தெரிந்து வைத்­தி­ருந்து எங்­க­ளைப் பற்றி அவர் கேட்­டது மேலும் எங்­க­ளுக்­குப் பெரு­மி­தத்­தைத் தந்­தது என்று அவர்­கள் மகிழ்ச்­சியை அங்கு கூடி இருந்­த­வர்­க­ளி­டம் எல்­லாம் பகிர்ந்து கொண்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி ஒரு தலை­வர் தொண்­டர்­க­ளைப் பற்றி முழு­மை­யாக நேருக்கு நேர் சந்­தித்து அறிந்து கொள்­வ­தும். தலை­வ­ரின் சிறப்­பு­களை நேரில் கண்டு மகிழ்­வ­தும் வேறு எந்த அர­சி­யல் கட்­சி­யி­லும் காண்­பது என்­பது மிக­வும் அரி­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட நாய­கர் அவர்­க­ளைப் பொருத்­த­வ­ரை­யில் எந்த ஒரு ­ப­ணி­யை­யும் சிறப்­பாக செய்­வது எல்­லோ­ரும் ஏற்­கக் கூடி­ய­ வ­கை­யில் நேர்த்­தி­யா­கச் செய்து முடிப்­பது என்­பது அவ­ரி­டம் அமைந்­துள்ள ஒரு பெரு­மைக்­கு­ரிய சிறந்த குண­மா­கும். இந்த நேர்­கா­ணல் பணி­யி­லும் திரா­விட நாய­கர் அவர்­க­ளின் முத்­திரை அனை­வ­ரா­லும் பாராட்­டப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கப் பொதுச்­செ­ய­லா­ளர்  துரை­மு­ரு­கன், கழ­கப் பொரு­ளா­ளர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்  டி.ஆர்.பாலு, முதன்­மைச் செய­லா­ளர்  கே.என்.நேரு, அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி ஆகி­யோர் கழக தலை­வ­ரு­டன் இந்த நேர்­கா­ண­லில் உட­னி­ருந்­த­னர். இணை அமைப்­புச் செய­லா­ளர்  அன்­ப­கம் கலை, துணை அமைப்­புச் செய­லா­ளர்­கள்   எஸ்.ஆஸ்­டின்,   தாய­கம் கவி, தலைமை நிலை­யச் செய­லா­ளர்­கள் துறை­மு­கம் காஜா,  பூச்­சி­மு­ரு­கன் ஆகி­யோர் நேர்­கா­ண­லில் பங்­கேற்­ற­வர்­களை நேர்த்­தி­யாக வரி­சை­யில் கலந்து கொள்ள உதவி செய்­தார்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>