<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,128,959,1492" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 24 2026 22:44:44 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260325T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="25032026-MDU-07" position.sequence="07" ex-ref="25032026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="136">பாசிச சக்­தி­க­ளின் அர­சி­யல் சூழ்ச்­சி­கள் தமிழ்­நாட்­டில் என்­றுமே வெற்றி பெறாது! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">கோவை­யில் நடை­பெற்ற இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் சந்­திப்­பில் </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="29"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="44">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் சிறப்­புரை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Dcmspeech233_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Dcmspeech2331_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="dmklogo_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">கோவை,மார்ச்.25–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">கோவை­யில் நடை­பெற்ற, கோவை மற்­றும் 
நீல­கிரி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த கழக இளை­ஞர் அணி­யின் மாவட்ட – ஒன்­றிய – நகர – பகுதி – பேரூர் அமைப்­பா­ளர்கள், துணை அமைப்­பா­ளர்­களுக்­கான ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில், கழக 
இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">அப்­போது அவர், ``நம் தலை­வர் அவர்­கள் பா.ஜ.க–வின் ஒவ்­வொரு திட்­டத்­தை­யும் முறி­ய­டித்து வரு­கி­றார். அத­னால்­தான் பா.ஜ.க–வுக்­குத் தமிழ்­நாட்­டைப் பார்த்­தால் கோபம். பாசிச சக்­தி­க­ளின் அர­சி­யல் விளை­யாட்­டு­கள் வட­நாட்­டில் வேண்­டு­மா­னால் செல்­லு­ப­டி­யா­க­லாம், ஆனால் இது தமிழ்­நாடு; அவர்­க­ளின் சூழ்ச்­சி­கள் தமிழ்­நாட்­டில் என்­றுமே வெற்றி பெறாது’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்­றிய சிறப்­பு­ரை­  வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">மீண்­டும் உங்­க­ளை­யெல்­லாம் சந்­திப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்சி. ஒரு மாதத்­திற்கு முன்பு கோவை­யில் இளை­ஞர் அணி­யின் மேற்கு மண்­டல நிர்­வா­கி­கள் சந்­திப்பை ஒரு மாநாடு போல நாம் நடத்­திக் காட்­டி­னோம். அந்­தச் சந்­திப்­பிலே நீங்­க­ளெல்­லாம் கலந்­து­கொண்­டீர்­கள். மிகப்­பெ­ரிய ஒரு வெற்றி நிகழ்ச்­சி­யாக அதை மாற்­றிக் காட்­டி­னோம். இப்­பொ­ழுது மீண்­டும் ஒரு முக்­கி­ய­மான நேரத்­தில் நாம் சந்­திக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மிகப்­பெ­ரிய வெற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">தேர்­தல் தேதி அறி­விக்­கப்­பட்ட பிறகு இந்த நிர்­வா­கி­கள் கூட்­டத்தை நாம் நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம். ஏப்­ரல் 23–ஆம் தேதி நடக்க இருக்­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லி­லும் நம் கழக அணி மீண்­டும் ஒரு மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெற வேண்­டும். அதற்கு நாம் அனை­வ­ரும் சேர்ந்து உழைக்க வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் கேட்­டுக்­கொள்­வ­தற்­காக நான் இங்கு வருகை தந்­துள்­ளேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">நான் அடிக்­கடி சொல்­வ­துண்டு, எத்­த­னையோ நிகழ்ச்­சி­க­ளில் கலந்­து­கொண்­டா­லும் இளை­ஞர் அணி நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள், நிர்­வா­கி­கள் உங்­க­ளை­யெல்­லாம் சந்­திப்­பது, என் குடும்ப நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு என் உற­வி­னர்­கள், சகோ­த­ரர்­க­ளைச் சந்­திக்­கின்ற உணர்­வை­யும் நெகிழ்ச்­சி­யை­யும் எனக்கு எப்­பொ­ழு­துமே கொடுக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">‘களத்­தில் இளை­ஞர் அணி’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போது ‘களத்­தில் இளை­ஞர் அணி’ என்­கிற முன்­னெ­டுப்­பைத் தொடங்கி, நாம் மக்­க­ளைச் சந்­தித்து வாக்கு கேட்­டோம். அப்­போது நீங்­கள் அனை­வ­ரும் களத்­தில் இறங்­கிப் பிரச்­சா­ரத்தை மேற்­கொண்­டீர்­கள். நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் உங்­க­ளின் உழைப்­பி­னால், பிரச்­சா­ரத்­தி­னால் 100 விழுக்­காடு வெற்­றி­யை­யும் நீங்­கள் பெற்­றுத் தந்­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இப்­பொ­ழுது மறு­ப­டி­யும் ‘களத்­தில் இளை­ஞர் அணி’ முன்­னெ­டுப்பை நாம் தொடங்கி, இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­த­லி­லும் அந்த 100 விழுக்­காடு வெற்­றியை நாம் பெற்­றாக வேண்­டும் என்று உரி­மை­யு­டன் உங்­க­ளை­யெல்­லாம் கேட்­டுக்­கொள்ள நான் வந்­தி­ருக்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">கோவையை யார், யாரோ அவர்­க­ளின் கோட்டை என்று இன்று சொல்­லிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். கோவை மட்­டும் அல்ல, ஒட்­டு­மொத்த மேற்கு மண்­ட­ல­மும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கோட்டை என்று நாம் அவர்­க­ளுக்கு நிரூ­பித்­துக் காட்ட வேண்­டிய நேரம், இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல். அதற்கு இளை­ஞர் அணி­யின் பங்­க­ளிப்பு மிக, மிக முக்­கி­ய­மாக இருக்­க­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">குறிப்­பாக வட்­டம், கிளை, பாகம், வாக்­குச்­சா­வடி வரை அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள் வீடு வீடா­கச் சென்று நம் பிரச்­சா­ரத்­தைச் செய்ய வேண்­டும். இன்று இந்­தி­யா­வில் பல இயக்­கங்­கள் வாக்­குச்­சா­வடி குழு அமைப்­ப­தற்­குத் திண்­டா­டிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். ஆனால், இன்று ஒவ்­வொரு வாக்­குச்­சா­வ­டிக்­கும் ஓர் இளை­ஞர் அணி அமைப்­பா­ளரை நாம் நிய­ம­னம் செய்­துள்­ளோம். ஒரு பெரிய இளை­ஞர் படையை நாம் அமைத்து வைத்­துள்­ளோம். இவ்­வ­ளவு பெரிய இளை­ஞர் படை­யைத் தேர்­தல் என்­கின்ற ஜன­நா­ய­கப் போருக்­குத் தயார்­ப­டுத்­து­வ­தற்­கான கூட்­டம்­தான் இன்று நடை­பெ­று­கின்ற இந்த ஆலோ­ச­னைக் கூட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">கழ­கத்­தில் 25 அணி­கள் உள்­ளன. ஆனால், டாக்­டர் கலை­ஞர் அவர்­கள் சொல்­வார், ``எத்­த­னையோ அணி­கள் இருந்­தா­லும் இளை­ஞர் அணி­தான் முதல் அணி, முதன்­மை­யான அணி’’ என்று அடிக்­கடி சொல்­வார். கலை­ஞர் சொன்­னதை நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டிய நேரம் இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மக்­கள் சந்­திப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இளை­ஞர் அணி­யைப் பொறுத்­த­வரை அது ஒரு பயிற்­சிக்­க­ளம். நாம் இன்று எடுக்­கக்­கூ­டிய இந்­தப் பயிற்­சி­தான் நாளை உங்­க­ளின் தகு­தி­யை­யும், வளர்ச்­சி­யை­யும் தீர்­மா­னிக்­கப் போகின்ற பயிற்சி. இன்று மக்­க­ளைச் சந்­திக்­கப் போகி­றோம், `அப்­ப­டி­யென்­றால் இத்­தனை நாளாக மக்­க­ளைச் சந்­திக்­க­வில்­லையா?’ என்­றால் கிடை­யாது, இத்­தனை நாட்­க­ளா­க­வும் மக்­க­ளைச் சந்­தித்­துக்­கொண்­டு­தான் இருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக இந்­தி­யா­வி­லேயே மக்­களை, தின­மும் சந்­திக்­கக்­கூ­டிய ஒரு முத­ல­மைச்­சர் நம் கழ­கத் தலை­வர் என்­பதை, நீங்­கள் மறந்­து­வி­டக் கூடாது. தின­மும் மக்­கள் பணி செய்­யக்­கூ­டிய ஒரு தலை­வர். அவ­ரைப் பார்த்து நாமும் உழைத்­துக்­கொண்டு இருக்­கி­றோம். தொடர்ந்து இளை­ஞர் அணி பணி­கள் எவ்­வ­ளவோ செய்­தி­ருக்­கி­றோம். 2019–ஆம் ஆண்­டி­லி­ருந்து ஒவ்­வொரு நாளும் இளை­ஞர் அணி பணி­களை நாம் பார்த்­துப் பார்த்­துச் செய்­தி­ருக்­கி­றோம். ஆனால், இப்­பொ­ழுது கடை­சி­நே­ரத்­தில் நாம் இன்­னும் அதி­க­மா­கக் கடு­மை­யாக உழைக்க வேண்­டும். அப்­பொ­ழு­து­தான் இத்­தனை நாள் உழைத்­த­தற்­கான முழுப் பலன் நமக்­குக் கிடைக்­கும். ஆங்­கி­லத்­தில் ஃபைனல் புஷ் (Final Push) என்று சொல்­வார்­கள். கடைசி நேரத்­தில் அந்த கூடு­தல் முயற்­சி­யைக் (Effort) களத்­தில் நாம் காட்ட வேண்­டும். ஆட்­சி­யின் சாத­னை­கள் எத்­த­னையோ உள்­ளன, அவற்றை மக்­க­ளி­டம் நினை­வு­ப­டுத்த வேண்­டி­யது நம் பொறுப்பு, நம் கடமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">920 கோடிப் பய­ணங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">ஐந்து ஆண்­டு­க­ளில் எத்­த­னையோ திட்­டங்­க­ளைத் நம் தலை­வர் சொல்­லிச் செய்து காட்­டி­யி­ருக்­கி­றார். விடி­யல் பய­ணத் திட்­டம் மூலம் 920 கோடிப் பய­ணங்­களை மக­ளிர் மேற்­கொண்­டுள்­ளார்­கள். முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம் மூலம் ஒவ்­வொரு நாளும் 20 லட்­சம் குழந்­தை­கள் பயன்­பெ­று­கி­றார்­கள். `அன்­புக் கரங்­கள்’ எனும் திட்­டத்­தின் மூலம் பெற்­றோர்­களை இழந்த குழந்­தை­க­ளின் கல்­விக்­காக மாதம் 2,000 ரூபாய் நம் அரசு வழங்­கு­கி­றது. 12,000 குழந்­தை­கள் இது­வரை பயன்­பெற்­றுள்­ள­னர். இந்­தி­யா­வில் எந்த மாநி­லத்­தி­லும் இப்­ப­டிப்­பட்ட திட்­டங்­கள் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">அர­சுப் பள்­ளி­யில் பயின்று உயர்­கல்வி கற்­கச் செல்­லும் மாண­வர்­க­ளுக்­குத் `தமிழ்ப் புதல்­வன்’ திட்­டம், மாண­வி­க­ளுக்­குப் ‘புது­மைப் பெண்’ திட்­டம் ஆகி­ய­வற்­றின் மூலம் மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்­கத்­தொகை வழங்­கப்­ப­டு­கி­றது. 13 லட்­சம் மாணவ, மாண­வி­கள் பயன்­பெற்­றுள்­ள­னர். இந்த ஆண்டு அண்­மை­யில் 10 லட்­சம் மாணவ, மாண­வி­க­ளுக்கு இல­வச மடிக்­க­ணி­னி­க­ளை­யும் வழங்­கி­யுள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு 3 சத­வி­கித இட ஒதுக்­கீட்­டில், தமிழ்­நாட்டு வர­லாற்­றி­லேயே முதன்­மு­றை­யாக 300 விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு அரசு வேலை­வாய்ப்பை வழங்­கி­யுள்­ளோம். கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டத்­தின் மூலம் ஒரு கோடியே 32 லட்­சம் மக­ளி­ருக்கு மாதம் 1,000 ரூபாய் நம் முத­ல­மைச்­சர் வழங்­கி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கோடைக்­கால சிறப்பு நிதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">அந்­தத் திட்­டத்தை எப்­ப­டி­யா­வது முடக்க வேண்­டும் என்று சிலர் சதித் திட்­டம் தீட்­டி­னார்­கள், நீதி­மன்­றத்­துக்­குச் சென்­றார்­கள். நம் தலை­வர் மூன்று மாதங்­க­ளுக்­குச் சேர்த்து, அத­னு­டன் கோடைக்­கால சிறப்பு நிதி­யாக இன்று ஒரு கோடியே 32 லட்­சம் மக­ளி­ருக்கு 5,000 ரூபாய் அவர்­கள் கணக்­கில் செலுத்­தி­யுள்­ளார். அது­மட்­டு­மல்ல, இன்­னொரு உறு­தி­மொ­ழி­யை­யும் நம் தலை­வர் அளித்­துள்­ளார். மீண்­டும் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்­த­வு­டன், மக­ளிர் உரி­மைத் தொகையை 1,000 ரூபா­யி­லி­ருந்து 2,000 ரூபா­யாக உயர்த்­தித் தரு­வேன் என்ற வாக்­கு­று­தி­யை­யும் நம் தலை­வர் கொடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">`தாயு­மா­ன­வர்’ திட்­டம் மூலம் முதி­ய­வர்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் நியா­ய­வி­லைக் கடை­யில் காத்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை; அவர்­க­ளுக்கு வீட்­டிற்கே பொருட்­கள் வந்து சேரும் வகை­யி­லான இத்­திட்­டத்­தால் 28 லட்­சம் பேர் பயன்­பெற்று வரு­கி­றார்­கள். இப்­ப­டிச் சிறு­வர்­கள் முதல் முதி­ய­வர்­கள் வரை அனைத்து வய­தி­ன­ருக்­கு­மான திட்­டங்­களை நம் அரசு செயல்­ப­டுத்­து­கி­றது. ஒவ்­வொரு மாவட்­டத்­துக்­கும் தேவை­யான திட்­டங்­களை நம் அரசு செயல்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">சாலை விரி­வாக்­கப் பணி­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">நீல­கிரி மாவட்­டத்­தில் 42 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 10 கூட்­டு­ற­வுத் தேயி­லைத் தொழிற்­சா­லை­கள் நவீ­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் நீல­கிரி அனு­மா­ன­பு­ரம் ஊசி மலைச் சாலை­க­ளின் விரி­வாக்­கப் பணி­கள் நடந்­துள்­ளன. குந்தா நீரேற்று மின் உற்­பத்­தித் திட்­டம் (Pumped Storage Hydroelectric Project) நடை­பெற்று வரு­கி­றது. கூட­லூர் அரசு மருத்­து­வ­ம­னை­யில் 30 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், மேம்­பாட்­டுப் பணி­கள் நடை­பெற்று வரு­கி­றது. 3 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஒலிம்­பிக் அகா­டமி கட்­டும் பணி­கள் நீல­கி­ரி­யில் நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">கோயம்­புத்­தூர் மாவட்­டத்­தைப் பொறுத்­த­வரை, விளாங்­கு­றிச்­சி­யில் 115 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் புதிய தக­வல் தொழில்­நுட்­பப் பூங்கா (IT Park) கட்­ட­டம், 800 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கோயம்­புத்­தூர் மாந­க­ராட்சி விரி­வாக்­கப்­பட்ட பகு­திக்­கான கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம், குறிச்­சி­யில் தொழி­லா­ளர்­கள் தங்­கும் விடுதி, சூலூ­ரில்வான்­வெளி மற்­றும் பாது­காப்­புப் பூங்கா (Aerospace &amp; Defence Park), 165 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் செம்­மொ­ழிப் பூங்கா, 300 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பெரி­யார் நூல­கம் என இந்த மாவட்­டத்­துக்­குத் தேவை­யான திட்­டங்­களை நம் அரசு செய்து கொடுத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இப்­படி ஒவ்­வொரு மாவட்­டத்­திற்­கும் தேவை­யா­ன­வற்­றைச் செய்து கொடுத்­த­தால்­தான், நம் தமிழ்­நாடு இன்று இந்­தி­யா­வி­லேயே இரட்டை இலக்க வளர்ச்­சி­யான 11.19 விழுக்­காட்­டு­டன் முதன்­மு­றை­யாக அந்த இலக்கை எட்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஒரே முத­ல­மைச்­சர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இதற்­கெல்­லாம் ஒன்­றிய அரசு நமக்கு உதவி செய்­ததா? ஆத­ரவு  அளித்­ததா? இல்லை. நமக்கு வழங்க வேண்­டிய நிதியை ஒதுக்­க­வில்லை. எந்த ஒரு திட்­டத்­தை­யும் ஒன்­றிய அரசு தமிழ்­நாட்­டுக்­குப் கொண்டு வர­வில்லை. மெட்ரோ திட்­டத்­துக்கு நிதி கேட்­டோம், அதற்­கும் வழங்­க­வில்லை. கல்வி நிதி கேட்­டோம், அது­வும் தர­வில்லை. புதிய கல்­விக் கொள்­கை­யைக் கொண்டு வந்து, அதை ஏற்­றுக்­கொண்­டால்­தான் கல்வி நிதியை கொடுப்­போம் என்று ஒன்­றிய அரசு தமிழ்­நாட்டை வஞ்­சிக்­கி­றது. கல்வி உரிமை, நிதி உரிமை என அனைத்து உரி­மை­க­ளை­யும் ஒன்­றிய அரசு பறிக்­கப் பார்க்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">பாசிச பா.ஜ.கவைத் துணிச்­ச­லாக எதிர்த்து நிற்­கக்­கூ­டிய முது­கெ­லும்­புள்ள ஒரே முத­ல­மைச்­சர், ஒரே தலை­வர் நம் தலை­வர் அவர்­கள் மட்­டும்­தான். இன்று நான்கு அடி­மை­க­ளைப் பிடித்து வைத்­துக்­கொண்­டால், தமிழ்­நாட்­டுக்­குள் எப்­ப­டி­யா­வது நுழைந்­து­வி­ட­லாம் என்று ஒன்­றிய பா.ஜ.க–வும் சங்­கிக் கூட்­ட­மும் நினைக்­கி­றது. ஆனால், நம் தலை­வர் அவர்­கள் பா.ஜ.க–வின் ஒவ்­வொரு திட்­டத்­தை­யும் முறி­ய­டித்து வரு­கி­றார். அத­னால்­தான் பா.ஜ.க–வுக்­குத் தமிழ்­நாட்­டைப் பார்த்­தால் கோபம். பாசிச சக்­தி­க­ளின் அர­சி­யல் விளை­யாட்­டு­கள் வட­நாட்­டில் வேண்­டு­மா­னால் செல்­லு­ப­டி­யா­க­லாம், ஆனால் இது தமிழ்­நாடு; அவர்­க­ளின் சூழ்ச்­சி­கள் தமிழ்­நாட்­டில் என்­றுமே வெற்றி பெறாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">டெல்லி vs தமிழ்­நாடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">வர­வி­ருக்­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­தல் `டெல்லி vs தமிழ்­நாடு’ தேர்­தல் என்று, நம் தலை­வர் அவர்­கள் தெளி­வா­கச் சொல்­லி­விட்­டார். உடனே எடப்­பாடி பழ­னி­சாமி `ஏன் டெல்லி என்று சொல்­கி­றீர்­கள்? டெல்­லி­யிலா சட்­ட­மன்­றத் தேர்­தல் நடக்­கி­றது?’ என்று கேட்­கி­றார். நான் கேட்­கி­றேன், வாரத்­துக்கு ஒரு­முறை டெல்­லிக்­குச் சென்று அமித்ஷா வீட்­டின் முன் நிற்­கி­றீர்­களே, அப்­பொ­ழுது இது டெல்லி vs தமிழ்­நா­டு­தானே? தமிழ்­நாட்­டில் அ.தி.மு.க–வின் தலை­மை­ய­கம் சென்­னை­யில் உள்­ளது. ஆனால் எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் தலைமை அலு­வ­ல­கம் இன்று டெல்­லி­யில்­தான் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">முன்­பெல்­லாம் முகத்தை மூடிக்­கொண்டு மறை­மு­க­மா­கச் சென்­றார். இப்­பொ­ழுது வெளிப்­ப­டை­யா­கவே செல்­லத் தொடங்­கி­விட்­டார். இன்று அ.தி.மு.க–வின் கூட்­ட­ணிக் பேச்­சு­வார்த்தை எல்­லாம் அமித்ஷா வீட்­டில் டெல்­லி­யில் நடக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">நான் மீண்­டும் சொல்­கி­றேன், தி.மு.க என்­பது அண்ணா உரு­வாக்­கிய கட்சி. இன்று அ.தி.மு.க என்­பது அமித்­ஷா­வுக்கு அடி­மை­யாக இருக்­கக்­கூ­டிய ஒரு கட்சி. அடி­மை­க­ளுக்கு இதெல்­லாம் ஒரு பிரச்­சினை இல்லை, எஜ­மா­னர்­கள் கூப்­பிட்ட குர­லுக்கு ஓடிச் சென்­றாக வேண்­டும். `சென்­னை­யி­லி­ருந்து ஓடி வாருங்­கள்’ என்று சொன்­னா­லும் டெல்­லிக்கு ஓடிச் செல்­வ­தற்கு அந்த அடி­மைக் கூட்­டம்தயா­ராக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தைரி­ய­மா­கச் சொல்­கி­றோம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">முன்­பெல்­லாம் கார் மாறி, மாறி சென்­றார்­கள்.  கார் மாறு­வ­தும் கால் மாறு­வ­தும் அடிமை கூட்­டத்­துக்கு ஒன்­றும் புதி­தல்ல. அ.தி.மு.க கூட்­ட­ணிக்­குள் இப்­பொ­ழுது ஒரு பெரிய போட்­டியே நடக்­கி­றது. `நீ பெரிய முரட்டு அடி­மையா அல்­லது நான் பெரிய முரட்டு அடி­மையா?’ என்று அவர்­க­ளுக்­குள் போட்டி நடக்­கி­றது. இன்று ஆளா­ளுக்கு டெல்­லிக்­குச் சென்று வணக்­கம் வைத்­து­விட்டு வரு­கி­றார்­கள். மக்­க­ளைச் சந்­தித்து இதை­யெல்­லாம் எடுத்­துக்­கூ­றுங்­கள். இந்த முறை ‘பத்­துத் தோல்வி பழ­னி­சாமி’, ‘படு­தோல்வி பழ­னி­சாமி’ ஆவது உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">நம் அர­சின் திட்­டங்­கள் எல்­லாம் தொடர வேண்­டும். கடந்த அ.தி.மு.க 10 ஆண்டு ஆட்­சி­யில் தமிழ்­நாடு எவ்­வ­ளவு இழந்­தது என்­பதை மக்­களை யோசித்­துப் பார்க்­கச் சொல்­லுங்­கள். நாம் இன்று தெளி­வா­கத் தைரி­ய­மா­கச் சொல்­கி­றோம், “மீண்­டும் நம் தலை­வர்­தான் முத­ல­மைச்­சர்” என்று. அ.தி.மு.க–வால் அவ்­வ­ளவு துணிச்­ச­லா­கச் சொல்ல முடி­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இது­வரை அமித்ஷா அவர்­களோ, மோடி அவர்­களோ எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யில்­தான் ஆட்சி என்று கூற­வில்லை. அவர்­களே ஏற்­றுக்­கொள்­ளாத எடப்­பாடி பழ­னி­சா­மியை, தமிழ்­நாட்டு மக்­கள் எப்­படி ஏற்­றுக்­கொள்­வார்­கள்? ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள். இந்த முறை­யும் மோடி, அமித்ஷா மற்­றும் அவர்­க­ளின் அடி­மைக் கூட்­ட­ணி­யைத் தமிழ்­நாடு நிச்­ச­யம் தோற்­க­டிக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">எப்­போ­துமே ஒரு சிறந்த பொருள் வந்­தால், உடனே ஒரு கூட்­டம் அதைப் போன்று போலி­யாக உரு­வாக்க முயற்­சிப்­பார்­கள். அதை நாம் அசெம்­பிள்டு செட் (Assembled Piece) அல்­லது சைனா மேக் (China Make) என்று சொல்­வோம். அது­போ­லத்­தான் இங்கு அ.தி.மு.க என்­பது இப்­பொ­ழுது  டெல்லி மேக் (Delhi Make). அனைத்­தை­யும் ஒன்­றி­ணைத்து அசெம்­பிள் செய்து (Assemble) வைத்­துள்­ளார்­கள். அது கொஞ்­சக் காலத்­துக்கு உண்­மை­யா­னது போல இருக்­கும். ஆனால், தேர்­தல் முடிந்த பிறகு அது ஒரி­ஜி­னல் கிடை­யாது, டெல்­லி­யி­லி­ருந்து அசெம்­பிள் செய்த பீஸ் என்று தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­குத் தெரிந்­து­வி­டும். அப்­ப­டிப்­பட்ட அசெம்­பிள்டு பீஸா­கத்­தான் அ.தி.மு.க கூட்­டணி உரு­வா­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தலை­வர் தான் சாம்­பி­யன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இன்று பா.ஜ.க–வின் பி–அணி, சி–அணி,  எனப் பல அணி­களை இறக்­கி­யுள்­ளார்­கள். எத்­தனை அணி­கள் வந்­தா­லும் தி.மு.க தான் சாம்­பி­யன், நம் தலை­வர் தான் சாம்­பி­யன் என்­பதை நாம் நிரூ­பிக்க வேண்­டும். இங்கு வந்­துள்ள இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் முத­லில் உங்­கள் குடும்­பத்­தி­ன­ரி­டம் பேசுங்­கள். உங்­கள் குடும்­பத்­தி­னர் அனை­வ­ரும் நம் கழ­கத்­துக்கு வாக்­க­ளிக்க வேண்­டும். நம் குடும்ப வாக்­கு­கள் சித­றா­மல் தி.மு.க கூட்­ட­ணிக்கு வந்­தாக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">உங்­கள் நண்­பர்­க­ளி­டம்­பே­சுங்­கள். கழக ஆட்­சி­யில் நாம் செய்­துள்ள சாத­னை­களை எடுத்­துச் சொல்­லுங்­கள். மாற்­றுக் கட்­சி­யில் உள்ள நண்­பர்­க­ளி­ட­மும் கழக வர­லாற்­றை­யும் திட்­டங்­க­ளை­யும் எடுத்­துக்­கூ­றுங்­கள்.  இப்­பொ­ழுது கொள்­கை­யற்ற கூட்­டம் ஒன்று உரு­வா­கி­யுள்­ளது.  அவர்­க­ளி­டம் பேசி அவர்­களை கொள்கை மயப்­ப­டுத்­து­கின்ற முயற்­சி­யில் நாம் ஈடு­ப­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">திரா­விட இயக்­கம் ஏன் தோன்­றி­யது, என்­னென்ன சாத­னை­கள் செய்­துள்­ளது என்­பதை எடுத்­துச் சொல்­லுங்­கள். நமக்கு எதி­ரா­கப் பரப்­பப்­ப­டு­கின்ற பொய் செய்­தி­க­ளை­யும், வதந்­தி­க­ளை­யும் ஆதா­ரத்­து­டன் முறி­ய­டி­யுங்­கள். முக்­கி­ய­மாக, கடந்த அ.தி.மு.க ஆட்­சி­யில் தமிழ்­நாடு எவ்­வ­ளவு பின்­னோக்­கிச் சென்­றது என்­ப­தைத் தர­வு­க­ளு­டன் சொல்­லுங்­கள். இந்த 5 ஆண்­டு­க­ளில் தமிழ்­நாடு எவ்­வ­ளவு முன்­னே­றி­யுள்­ளது என்­ப­தை­யும் தர­வு­க­ளு­டன் விளக்­குங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இளை­ஞர் அணி­யின் இலக்கு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">வட்ட, கிளை, பாக இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள்,  உங்­கள் வாக்­குச்­சா­வடி பகு­தி­யில் உள்ள ஒவ்­வொரு வீட்­டிற்­கும் குறைந்­தது இரண்டு முறை சென்று வாக்கு கேளுங்­கள். ஒவ்­வொரு வீட்­டி­லே­யும் நமது இலக்கு 18 வயது முதல் 35 வயது வரை உள்ள அனைத்து வாக்­கா­ளர்­க­ளுமே இளை­ஞர் அணி­யின் இலக்கு. அன்­ப­கத்­தில் தேர்­தல் அறிக்­கை­கள் மற்­றும் பிரச்­சா­ரப் பொருட்­கள் தயா­ரா­கிக் கொண்­டி­ருக்­கின்­றன. அவை மாவட்ட அமைப்­பா­ளர் மூல­மாக உங்­க­ளுக்கு விரை­வில் அனுப்பி வைக்­கப்­ப­டும். அதை ஒவ்­வொரு வீட்­டிற்­கும், ஒவ்­வொரு 
வாக்­கா­ள­ரி­ட­மும் கொண்டு சேருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">நான் உங்­களை பல­முறை சந்­திக்­கின்ற மாதிரி, வாக்­குச்­சா­வடி நிலை­யில் உள்ள இளை­ஞர் அணிப் பொறுப்­பா­ளர்­களை நீங்­கள் அடிக்­கடி சந்­தி­யுங்­கள். உங்­க­ளில் பலர் பி.எல்.ஏ,  பி.எல்.சி பொறுப்­பில் இருப்­பீர்­கள். அந்­தப் பொறுப்­பில் கவ­ன­மா­கப் பணி­யாற்­றுங்­கள். உங்­கள் தொகு­தி­யில் இளை­ஞர் அணி நிர்­வா­கி­யின் பணி தனித்­து­வ­மா­கத் தெரிய வேண்­டும். மக்­க­ளி­டம் பேசும் பொழுது கவ­ன­மா­க­வும் கட்­டுப்­பாட்­டோ­டும் பேசுங்­கள். ஒரு தவ­றான வார்த்தை பேசி­னா­லும் அதைப் பெரி­து­ப­டுத்­து­வ­தற்கு ஊட­கங்­கள் காத்­துக் கொண்­டி­ருக்­கின்­றன. எனவே, மிகுந்த கவ­னத்­து­டன் செயல்­ப­டுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">அடுத்த ஒரு மாதத்­துக்கு வெற்­றி­மட்­டும்­தான் நம் இலக்­காக இருக்க வேண்­டும். யாரு­டைய வாக்­குச்­சா­வ­டி­யில் அதிக வாக்­கு­கள் பெறப்­ப­டு­கின்­றன என்­பதை நான் கவ­னிப்­பேன். உங்­க­ளுக்­குள் ஓர் ஆரோக்­கி­ய­மான போட்டி இருக்க வேண்­டும். அடுத்த 32 நாள்­கள் மிக, மிக முக்­கி­யம். ஒவ்­வொ­ரு­வ­ரும் உங்­கள் பொறுப்­பு­க­ளைப் பிரித்­துக்­கொண்டு, நுணுக்­க­மாக வேலை செய்­தால், மிகப்­பெ­ரிய வெற்றி உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">ஒரு வாக்­குச்­சா­வ­டி­யில் 1,000 வாக்­கா­ளர்­கள் இருந்­தால், அவர்­கள் அனை­வ­ரை­யும் நீங்­கள் சந்­தித்­தி­ருப்­பதை உறுதி செய்ய வேண்­டும். இந்­தப் பணி­க­ளைச் செய்­யும்­போது உங்­கள் மாவட்ட, ஒன்­றிய, நக­ரச் பேரூர் செய­லா­ளர்­க­ளு­டன் கலந்து ஆலோ­சித்­துச் செயல்­ப­டுங்­கள். அவர்­கள் உங்­க­ளுக்கு உரிய வழி­காட்­டு­தல்­களை வழங்­கு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பதிவு செய்­யுங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">ஒவ்­வொரு நாளும் எத்­தனை பேரைச் சந்­தித்­தீர்­கள் என்­பதை உங்­கள் குறிப்­பேட்­டில் தேதி­யு­ட­னும் புகைப்­ப­டத்­து­ட­னும் பதிவு செய்­யுங்­கள். தேர்­தல் பிரச்­சா­ரத்­திற்­காக இன்­னும் 15 நாள்­க­ளில் மீண்­டும் நான் வரும்­போது அதைச் சரி­பார்ப்­பேன். யார் உண்­மை­யாக உழைக்­கி­றார்­களோ, அவர்­க­ளுக்­கான அங்­கீ­கா­ரம் நிச்­ச­யம் தேடி வரும். அதற்கு நான் பொறுப்பு. ஆனால் கழ­கத்­தின் வெற்­றிக்கு நீங்­கள் பொறுப்­பேற்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">நான் எப்­படி வேலை செய்­கி­றேன், நீங்­கள் எப்­படி வேலை செய்­கி­றீர்­கள் என்­பதை, தலை­வர் கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். இது உங்­க­ளுக்கு மட்­டு­மல்ல, நம் இரு­வ­ருக்­கும் சேர்த்து வைக்­கப்­பட்­டுள்ள தேர்வு. இத்­தேர்­வில் நாம் சிறப்­பான மதிப்­பெண்­க­ளு­டன் வெற்றி பெற வேண்­டும். `தி.மு.க. காரன் என்­றால் சிங்­கிள் டீயைக் குடித்­து­விட்டு இரவு பக­லாக வேலை செய்­வான்’ என்று முன்பு சொல்­வார்­கள். இன்று அதை நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும். தலை­வ­ரி­ட­மி­ருந்து ஒரு செய்தி வந்­தால் போதும், 234 தொகு­தி­க­ளி­லும் பூத் வாரி­யாக களம் இறங்க தி.மு.க இளை­ஞர் அணி எப்­போ­தும் தயா­ராக உள்­ளது என்­பதை மெய்ப்­பிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாடு என்­றைக்­கும் தலை­கு­னி­யாது, நம் தலை­வர் சொல்­வ­து­போல் தமிழ்­நாடு என்­றைக்­கும்  டெல்­லிக்­குக் அவுட் ஆப் கண்ட்­ரோல்­தான் என்­ப­தைப் புரிய வைக்க வேண்­டிய தேர்­தல் இது. தலை­வர் நமக்­குக் கொடுத்­துள்ள இலக்கு 200 தொகு­தி­கள், ஆனால், 234 தொகு­தி­க­ளி­லும் நம் இலக்கு வெற்­றி­யா­கத்­தான் இருக்க வேண்­டும். அந்த வெற்றி கோவை, நீல­கிரி மாவட்­டங்­க­ளி­லி­ருந்து தொடங்க வேண்­டும். கடந்த முறை கோவை­யில் தவ­ற­விட்ட இடங்­களை இந்த முறை மீட்­டெ­டுக்க வேண்­டும்.  நீல­கிரி மாவட்­டத்­தி­லும் 100 சத­வி­கித வெற்­றியை நாம் பெற்­றாக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">எந்த ஒரு விளை­யாட்­டாக இருந்­தா­லும், தோல்­வி­யை­யும் நாம் நினை­வில் வைத்­துக்­கொள்ள வேண்­டும். அப்­பொ­ழு­து­தான் விட்ட இடத்­தைப் பிடிக்க முடி­யும்.  அப்­போ­து­தான் அந்த வெற்­றிக்கு மிகப்­பெ­ரிய மரி­யாதை கிடைக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">அத­னால்­தான் இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் உங்­க­ளு­டன் சேர்ந்து கோவை­யி­லி­ருந்து இந்­தப் பிரச்­சா­ரத்தை நான் தொடங்­கி­யுள்­ளேன். உங்­கள் உழைப்பை நான் நம்­பு­கி­றேன். நம்மை விட இள­மை­யாக நம் தலை­வர் உழைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார். நம் தலை­வ­ருக்­கா­க­வும் அவ­ரின் கரங்­களை வலுப்­ப­டுத்­த­வும் நாம் வெற்றி பெற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மீண்­டும் ஒலிக்க வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">ஏப்­ரல் 23–ஆம் தேதி சட்­ட­மன்­றத் தேர்­தல், மே 4–ஆம் தேதி வாக்கு எண்­ணும்­போது 234 தொகு­தி­க­ளி­லும் நம் கூட்­டணி வெற்றி பெற்­றது என்ற செய்தி வர வேண்­டும். ‘முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின்’ என்­கின்ற அந்­தக் குரல் மீண்­டும் தமிழ்­நாட்­டில் ஒலிக்க வேண்­டும்.  அதற்கு உத­ய­சூ­ரி­யன்  அனைத்து தொகு­தி­க­ளி­லும் வெற்­றிப்­பெற்று காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">உத­ய­சூ­ரி­யன் சின்­னம் என்­பது வெறும் சின்­னம் அல்ல. அது நம் உயி­ரு­டன், உணர்­வு­டன் கலந்த சின்­னம் உத­ய­சூ­ரி­யன்.  பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் கண்­டெ­டுத்த சின்­னம் உத­ய­சூ­ரி­யன், நம் கழ­கத் தலை­வர் அவர்­க­ளால் வெற்­றியை மட்­டுமே கொடுத்­துக் கொண்­டி­ருக்­கின்ற சின்­னம் உத­ய­சூ­ரி­யன், அந்த உத­ய­சூ­ரி­ய­னின் வெற்­றியை நாம் உறுதி செய்­ய­வேண்­டும். அதை மன­தில் வைத்­துக்­கொண்டு அடுத்த 32 நாட்­கள் நம் பணி­க­ளைத் திட்­ட­மிட்­டுச் செய்­வோம். தேர்­தல் பிரச்­சா­ரத்­தின் போது மீண்­டும் உங்­க­ளைச் சந்­திப்­பேன். அப்­பொ­ழுது உங்­கள் வெற்­றிச் செய்­தியை நீங்­கள் உறு­திப்­ப­டுத்த வேண்­டும். நிச்­ச­ய­மா­கச் செய்­வீர்­களா? நீங்­கள் அவ்­வாறு செய்­தால், உங்­கள் உழைப்­புக்­கான அங்­கீ­கா­ரத்­தைத் தலை­வ­ரி­டம் போராடி நான் பெற்­றுத் தரு­வேன். அடுத்த 32 நாட்­கள் நமக்கு ஒரே இலக்­கு­தான். நம் பகு­தி­யில் தி.மு.க கடந்த நாடா­ளு­மன்ற தேர்­த­லில் பெற்­றதை விட அதிக வாக்கு வித்­தி­யா­சத்­தில் நாம் வெற்றி பெற வேண்­டும். தேர்­தல் பிரச்­சா­ரத்­தின்­போது மீண்­டும் உங்­க­ளைச் சந்­திப்­பேன் என்று கூறி,  இந்த சிறப்­பான வாய்ப்பை கொடுத்த மாவட்­டக் கழக நிர்­வா­கத்­துக்­கும், வருகை தந்­துள்ள அனைத்து அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் மீண்­டும் எனது நன்­றி­யைத் தெரி­வித்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">அமைச்­சர்  மு.பெ.சாமி­நா­தன், மண்­ட­லப் பொறுப்­பா­ளர் செந்­தில் பாலாஜி, அரசு கொறடா  ராமச்­சந்­தி­ரன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கே.இ.பிர­காஷ், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள்  தள­பதி முரு­கே­சன்,  தொண்­டா­முத்­தூர் ரவி, மாவட்­டக் கழ­கப் பொறுப்­பா­ளர்  கே.எம்.ராஜு, செந்­த­மிழ்ச்­செல்­வன், தக­வல் தொழில்­நுட்ப அணி­யின் இணைச் செய­லா­ளர் மருத்­து­வர் மகேந்­தி­ரன், கோட்டை அப்­பாஸ், சிந்து ரவிச்­சந்­தி­ரன், கழ­கச் செய்­தித் தொடர்­புக் குழு­வின் மாநி­லத் துணைச் செய­லா­ளர் சூர்யா கிருஷ்­ண­மூர்த்தி, மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் சபரி கார்த்­தி­கே­யன், சசி­கு­மார், ஹக்­கீம், தன­பால் உள்­பட இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>