<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,71,959,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 24 2026 22:45:19 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260325T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="25032026-MDU-08" position.sequence="08" ex-ref="25032026-MDU-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">இந்­தி­யா­வி­லேயே தின­மும் மக்­க­ளைச் சந்­திக்­கக்­கூ­டிய ஒரே தலை­வர்:</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="79">கழ­கப் பணி­க­ளில் எப்­படி உழைக்க வேண்­டும் என்­ப­தற்கு   </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="77">நமக்­கெல்­லாம் ஒரே ரோல் மாடல் நம் கழ­கத் தலை­வர்­தான்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">ஈரோட்­டில் நடை­பெற்ற ‘களத்­தில் இளை­ஞர் அணி’ கூட்­டத்­தில்</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="44">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு!</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="17">தொடர்ச்சி 9 ஆம் பக்கம்</lang>
	</hl7>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup264960_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Erodedcmspeec_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Erodedcmspeec1_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="CM1_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஈரோடு,மார்ச். 25 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஈரோட்­டில் நடை­பெற்ற, ஈரோடு மற்­றும் நாமக்­கல் மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மாவட்ட – மாந­கர – ஒன்­றிய – நகர – பகுதி – பேரூர் அமைப்­பா­ளர், துணை அமைப்­பா­ளர்­க­ளு­டன் ‘களத்­தில் இளை­ஞர் அணி’ தேர்­தல் பிரச்­சா­ரம் குறித்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை 
முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அப்­போது அவர், ``தேர்­தல் பணி, இளை­ஞர் அணி பணி, மக்­கள் பணி, கழ­கப் பணி­க­ளில் எப்­படி நாம் உழைக்க வேண்­டும் என்று நாம் யாரை­யும் உதா­ர­ணத்­துக்­குத் தேட வேண்­டிய அவ­சி­யம் இல்லை. நமக்­கெல்­லாம் ஒரே ரோல் மாடல் நம் கழ­கத் தலை­வர் அவர்­கள்­தான். இன்­றைக்­கும் இந்­தி­யா­வி­லேயே ஒரு முத­ல­மைச்­சர் தின­மும் மக்­க­ளைச் சந்­திக்­கக் ­கூ­டி­ய­வர் என்­றால், அது நம் கழ­கத் தலை­வர் அவர்­கள்­தான். அவர்­தான் நம் இளை­ஞர் அணிக்கே ரோல் மாடல்’’  என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­யின் விவ­ரம் வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மாவட்­டக் கழ­கத்­தின் அனு­ம­தி­யு­டன் இன்று ஈரோடு மற்­றும் நாமக்­கல் மாவட்ட இளை­ஞர் அணி­யின் ஒன்­றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள் நிகழ்ச்­சியை இங்கு நாம் நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பல்­வேறு சிறப்­பு­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்த ஈரோட்டு மண்­ணுக்கு, பல்­வேறு சிறப்­பு­கள் உண்டு. தமிழ்­நாட்­டுக்­குத் தந்தை பெரி­யார் அவர்­க­ளைத் தந்த மண் இந்த ஈரோட்டு மண். அது­மட்­டு­மல்ல, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள், தந்தை பெரி­யா­ரின் ஈரோட்டு குரு­கு­லத்­தில் தங்­கித்­தான் தன் கொள்­கைப் பாடங்­க­ளைக் கற்­றுக்­கொண்­டார். அப்­ப­டிப்­பட்ட சிறப்­பு­வாய்ந்த இந்த ஈரோட்­டுக்கு வருகை தந்து உங்­க­ளை­யெல்­லாம் சந்­திப்­ப­தில் நான் உண்­மை­யில் மிகுந்த மகிழ்ச்­சி­யும் பெரு­மை­யும் அடை
­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சரி­யாக ஒரு மாதத்­துக்கு முன்பு கோயம்­புத்­தூ­ரில் மேற்கு மண்­டல இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் சந்­திப்பை ஒரு மாநாடு போல நாம் நடத்­திக் காட்­டி­னோம். அந்த நிர்­வா­கி­கள் சந்­திப்­பின் வெற்­றிக்குஇங்கு வந்­துள்ள நீங்­கள் அனை­வ­ரும் உழைத்­தீர்­கள். நீங்­கள் அனை­வ­ரும் கோயம்­புத்­தூர் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டீர்­கள். அதற்கு இந்த நேரத்­தில் உங்­க­ளின் உழைப்­புக்­கும், அந்த நிகழ்ச்­சியை வெற்­றி­க­ர­மாக நடத்­திக்­காட்­டிய உங்­கள் அனை­வ­ருக்­கும் மீண்­டும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். இன்று மீண்­டும் நாம் அனை­வ­ரும் இங்கு சந்­திக்­கின்ற வாய்ப்­புக் கிடைத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மிக மிக முக்­கி­ய­மான ஒரு கால­கட்­டத்­தில், தரு­ணத்­தில் நாம் சந்­திக்­கி­றோம். சட்­ட­மன்­றத் தேர்­தல் தேதி அறி­வித்த பிறகு, நாம் சந்­திக்­கி­றோம். தேர்­தல் தேதி அறி­வித்­து­விட்­டார்­கள். ஏப்­ரல் 23–ஆம் தேதி தேர்­தல். இன்­னும் சொல்­லப்­போ­னால், சரி­யாக ஒரு மாத காலம் இருக்­கி­றது. இந்த ஒரு மாத காலத்­தில் என்­னென்ன பணி­களை நாம் செய்ய வேண்­டும் என்­ப­தற்­காக நாம் கலந்து ஆலோ­சிப்­ப­தற்­கா­கத்­தான் இன்று இந்­தக் கூட்­டம் நடத்­தப்­பட்­டுள்­ளது. அதற்­கா­கத்­தான் `களத்­தில் இளை­ஞர் அணி’ என்­கிற முன்­னெ­டுப்பை நாம் தொடங்க இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">களத்­தில் இளை­ஞர் அணி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போது `களத்­தில் இளை­ஞர் அணி’ என்று ஒரு முன்­னெ­டுப்­பைத் தொடங்கி நீங்­கள் அனை­வ­ரும் களத்­தில் உங்­க­ளின் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டீர்­கள். வாக்­கா­ளர்­க­ளைச் சந்­தித்­தீர்­கள். உங்­க­ளின் பிர­சா­ரத்­தின் கார­ண­மாக நாம் 100 சத­வி­கித வெற்­றியை நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பெற்­றோம். வர­வி­ருக்­கும் சட்­ட­மன்­றத் தேர்­த­லி­லும் அதே 100 சத­வி­கித வெற்­றியை நாம் நிச்­ச­யம் பெற வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் கேட்­டுக்­கொள்­வ­தற்­காக இங்கு வருகை தந்­துள்­ளேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">காலை­யில் கோயம்­புத்­தூர், நீல­கிரி மாவட்ட இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் எல்­லோ­ரை­யும் சந்­தித்­து­விட்டு, இங்கு வந்­துள்­ளேன். காலை­யில் நிர்­வா­கி­க­ளைச் சந்­திக்­கும்­போது மிகுந்த எழுச்­சி­யாக இருந்­தது. அவர்­க­ளின் வர­வேற்பு மற்­றும் உற்­சா­க­மான எழுச்­சி­யை­யெல்­லாம் பார்க்­கும்­போது நிச்­ச­யம் நம்­பிக்கை இருந்­தது. ஆனால், இப்­போது ஈரோடு, நாமக்­கல் நிர்­வா­கி­க­ளா­கிய உங்­க­ளை­யெல்­லாம் சந்­திக்­கும்­போது அந்த மகிழ்ச்சி அப்­ப­டியே இரட்­டிப்­பா­கி­றது. உங்­க­ளின் உற்­சா­கத்­தைப் பார்க்­கும்­போது வெற்றி 90 சத­வி­கி­தம் உறுதி செய்­யப்­பட்­டு­விட்­டது. ஆனால், மீத­முள்ள 10 சத­வி­கித வெற்­றியை நாம் உறுதி செய்ய வேண்­டும். அதை விட்­டு­வி­டக் கூடாது. அதை நிச்­ச­யம் செய்­வீர்­கள் என்­கிற அந்த நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">நாம் உழைக்க வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தேர்­தல் பணி, இளை­ஞர் அணி பணி, மக்­கள் பணி, கழ­கப் பணி­க­ளில் எப்­படி நாம் உழைக்க வேண்­டும் என்று நாம் யாரை­யும் உதா­ர­ணத்­துக்­குத் தேட வேண்­டிய அவ­சி­யம் இல்லை. நமக்­கெல்­லாம் ஒரே ரோல் மாடல் நம் கழ­கத் தலை­வர் அவர்­கள்­தான். இன்­றைக்­கும் இந்­தி­யா­வி­லேயே ஒரு முத­ல­மைச்­சர் தின­மும் மக்­க­ளைச் சந்­திக்­கக்­கூ­டி­ய­வர் என்­றால், அது நம் கழ­கத் தலை­வர் அவர்­கள்­தான். அவர்­தான் நம் இளை­ஞர் அணிக்கே ரோல் மாடல். எனவே, வந்­துள்ள இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் உங்­க­ளின் உழைப்பை நான் எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றேன், நம்­பு­கி­றேன். உங்­க­ளின் அர்ப்­ப­ணிப்பை நான் மதிக்­கி­றேன், தலை வணங்­கு­கி­றேன். நாடா­ளு­மன்­றத் தேர்­தல் வெற்­றி­யை­விட மிகப்­பெ­ரிய ஒரு வெற்­றியை நாம் இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பெற்­றாக வேண்­டும். அதை நீங்­கள் உறுதி செய்­வீர்­கள் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது. சாதா­ரண வெற்­றி­யாக இருக்­கக் கூடாது, மிகப் பெரிய வெற்­றி­யாக இருக்க வேண்­டும், வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க வெற்­றி­யாக இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல் வெற்றி இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இளை­ஞர் அணிப் படை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஒரு நாட்­டைப் பாது­காக்­கின்ற ஒரு ராணுவ வீர­னுக்கு எவ்­வ­ளவு பெருமை இருக்­குமோ அதே­போல, தமிழ்­நாட்­டைக் காக்­கக்­கூ­டிய ராணுவ வீரர்­க­ளாக நம் இளை­ஞர் அணிப் படை இன்­றைக்­கும் செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது. கழ­கத்­தின் ராணு­வப் படை நீங்­கள். இந்­தக் கருப்பு சிவப்பு இளை­ஞர் அணிப் படை இருக்­கும் வரை, தமிழ்­நாட்­டுக்­குள் எந்­தக் கொம்­ப­னும் கால் எடுத்து வைக்க முடி­யாது. எந்­தப் பாசிச சக்­தி­யும் தமிழ்­நாட்­டுக்­குள் நுழை­ய­மு­டி­யாது. இவ்­வ­ளவு பெரிய ஓர் இளை­ஞர் படையை, தேர்­தல் என்­கிற ஒரு ஜன­நா­ய­கப் போரில் நாம் ஈடு­ப­டுத்­தப்­போ­கி­றோம். அதற்கு நாமெல்­லாம் தயா­ரா­கின்ற ஒரு பாச­றைக் கூட்­டம்­தான் இன்று இங்கு நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எந்­தத் தைரி­யத்­தில் மக்­க­ளைச் சந்­திக்­கப் போகி­றோம்? ஐந்து ஆண்­டு­கள் ஆட்­சிப் பொறுப்­பேற்று எத்­த­னையோ திட்­டங்­களை நம் அரசு செய்­து­கொ­டுத்­துள்­ளது, நம் முத­ல­மைச்­சர் செய்­து­கொ­டுத்­துள்­ளார் என்­கிற அந்­தத் தைரி­யத்­தில் மக்­க­ளைச் சந்­திக்­கப்­போ­கி­றோம். சில திட்­டங்­களை மட்­டும் உங்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">விடி­யல் பய­ணத் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­வு­டன் தலை­வர் அவர்­கள் இட்ட முதல் கையெ­ழுத்து ‘மக­ளிர் விடி­யல் பய­ணத் திட்­டம்.’ இன்று 920 கோடி பய­ணங்­களை மக­ளிர் மேற்­கொண்­டுள்­ள­னர். அர­சுப் பள்­ளி­க­ளில் ‘முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம்’, ஒவ்­வொரு நாளும் 20 லட்­சம் குழந்­தை­கள் அந்­தத் திட்­டத்­தில் பயன்­பெற்­று­வ­ரு­கி­றார்­கள். ‘அன்­புக்­க­ரங்­கள்’ என்று ஒரு திட்­டம், இந்­தி­யா­வி­லேயே எந்த மாநி­லத்­தி­லும் இல்லை, பெற்­றோர்­களை இழந்த குழந்­தை­கள் படிப்­புச் செல­விற்கு மாதம் 2,000 ரூபாய் தர வேண்­டும் என்று நம் அரசு கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றது. ‘புது­மைப் பெண் திட்­டம்’, ‘தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம்’. அர­சுப் பள்­ளி­யில் படித்து எந்­தக் கல்­லூ­ரிக்­குச் சென்­றா­லும் கல்வி ஊக்­கத்­தொகை மாதம் 1,000 ரூபாய் நம் அரசு வழங்­கு­கி­றது. 10 லட்­சம் கல்­லூரி மாணவ, மாண­வி­க­ளுக்கு இல­வச மடிக்­க­ணினி திட்­டத்­தை­யும் அறி­வித்து, ஒரே மாதத்­தில் முத­ல­மைச்­சர் வழங்­கி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்டு வர­லாற்­றி­லேயே முதல் முறை­யாக 3 சத­வி­கித விளை­யாட்டு இட­ஒ­துக்­கீட்­டில் 300 விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு அரசு வேலை­வாய்ப்பை நம் அரசு வழங்­கி­யுள்­ளது. `கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம்.’ ஒரு கோடியே 32 லட்­சம் மக­ளி­ருக்கு கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக மாதம் 1,000 ரூபாய் நம் தலை­வர் வழங்­கி­யுள்­ளார். மீண்­டும் ஆட்சி அமைந்­த­வு­டன் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை 1,000 ரூபா­யி­லி­ருந்து 2,000 ரூபா­யாக உயர்த்தி வழங்­கு­வேன் என்­கிற வாக்­கு­று­தி­யை­யும் வழங்­கி­ யுள்­ளார். `தாயு­மா­ன­வர் திட்­டம்’, வய­தா­ன­வர்­கள், முதி­ய­வர்­கள், மாற்­றுத் திற­னா­ளி­கள் வெயி­லில் வந்து நியா­ய­வி­லைக் கடை­யில்  வரி­சை­யில் நிற்­கத் தேவை­யில்லை. அவர்­க­ளின் வீடு தேடிப் பொருள்­கள் வீட்­டுக்கே வரும். 28 லட்­சம் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் மற்­றும் மூத்த குடி­மக்­கள் இந்­தத் திட்­டத்­தில் பயன்­பெ­று­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">அனை­வ­ருக்­கு­மான அர­சாங்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்­படி குழந்­தை­க­ளி­லி­ருந்து முதி­ய­வர்­கள் வரை அனைத்து வய­தி­ன­ருக்­கு­மான ஓர் அர­சாங்­க­மாக நம் அரசு பல்­வேறு திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­தி­யுள்­ளது. ஈரோடு மற்­றும் நாமக்­கல் மாவட்­டங்­க­ளில் மட்­டும் எத்­த­னையோ திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­ப­டுள்­ளன.  ஈரோடு மாவட்­டத்­தில் 65 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் புதிய பேருந்து நிலை­யம் கட்­டப்­பட்­டுள்­ளது.  சித்­தோடு – ஈரோடு இடையே நான்கு வழிச்­சாலை. மொடக்­கு­றிச்­சி­யில் 362 கோடி ரூபாய், சென்­னி­ம­லை­யில் 440 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">300 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மேட்­டுப்­பா­ளை­யம், கோபி­செட்­டி­பா­ளை­யம், சத்­தி­ய­மங்­க­லம், ஈரோடு சாலையை நான்கு வழிச்­சா­லை­யாக மேம்­ப­டுத்­தி­யுள்­ளோம்.86 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பவானி நக­ருக்­குப் புற­வ­ழிச்­சாலை அமைக்­கின்ற பணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">10 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஈரோட்­டில் பணி­பு­ரி­கின்ற பெண்­க­ளுக்­குத் தோழி விடுதி.  மொடக்­கு­றிச்­சி­யில் சிறு விளை­யாட்டு அரங்­கம். 10 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஒரு சமூக நீதிக் கல்­லூரி மாண­வர் விடுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">நாமக்­கல் திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நாமக்­கல் மாவட்­டத்­தில் 1,100 கிரா­மப்­பு­றக் குடி­யி­ருப்­பு­க­ளில் 800 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம்.  நாமக்­கல்­லுக்­கும் புதிய பேருந்து நிலை­யம். 425 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மல்­லி­யக்­கரை, ராசி­பு­ரம், திருச்­செங்­கோடு, ஈரோடு சாலை நான்கு வழிச்­சா­லை­யாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. 350 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மோக­னூர், நாமக்­கல், சேந்­த­மங்­க­லம், ராசி­பு­ரம் இடையே இரு­வ­ழிச்­சாலை அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நாடு விடு­தலை பெற்ற பிறகு, முதல் முறை­யாக, போத­மலை மலைக் கிரா­மங்­க­ளுக்கு 140 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் சாலை வசதி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.  55 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், ராசி­பு­ரத்­தில் அரசு மருத்­து­வ­மனை கட்­டப்­பட்­டுள்­ளது. இப்­படி நாமக்­கல்­லுக்­கும் ஈரோட்­டுக்­கும் பல்­வேறு திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­தி­யுள்­ளது நம் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">உரி­மை­யைப் பறிக்­கும் ஒன்­றிய அரசு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்­படி நம் மாநி­லம் முழு­வ­தும் ஒவ்­வொரு மாவட்­டத்­துக்­கும் பார்த்­துப் பார்த்­துச் செய்­த­த­னால்­தான் இன்று நம் தமிழ்­நாடு இந்­தி­யா­வில் வள­ரும் மாநி­லங்­க­ளில் சத­வி­கித அடிப்­ப­டை­யில் முத­லி­டத்­தைப் பிடித்­துள்­ளது. 11.19% இரட்டை இலக்க வளர்ச்சி. இதற்­கெல்­லாம் ஒன்­றிய பா.ஜ.க அரசு ஏதே­னும் நமக்கு உதவி செய்­ததா? வழி­காட்­டி­யதா? எது­வுமே இல்லை. ஏதே­னும் திட்­டங்­க­ளைக் கொண்டு வந்­தார்­களா? இல்லை. நாம் கேட்­கின்ற நிதியை வழங்­கி­னார்­களா? இல்லை. நிதி உரி­மை­யைப் பறிக்­கி­றார்­கள், கல்வி உரி­மை­யைப் பறிக்­கி­றார்­கள், மொழி உரி­மை­யைப் பறிக்­கி­றார்­கள். தமிழ்­நாட்­டி­லி­ருந்து வசூல் செய்த வரிப்­ப­ணத்­தி­லி­ருந்து எந்த நிதி­யும் வழங்­கு­வது இல்லை. கல்வி நிதி வழங்க வேண்­டிய 3,200 கோடி ரூபாய் வழங்க முடி­யாது என்று கூறி­விட்­டார்­கள். புதிய கல்­விக் கொள்­கையை ஏற்­றுக்­கொண்­டால்­தான் வழங்­கு­வோம் என்று கூறி­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆனால், அந்­தப் புதிய கல்­விக் கொள்­கை­யில் என்ன இருக்­கி­றது? மீண்­டும் எப்­ப­டி­யா­வது சமஸ்­கி­ரு­தத்­தை­யும் இந்­தி­யை­யும் மும்­மொ­ழிக் கொள்­கை­யாக எடுத்து வந்து தமிழ்­நாட்­டுக்­குள் திணிக்­கின்ற முயற்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மெட்ரோ திட்­டத்­துக்கு நிதி கேட்­டால், அது­வும் இல்லை. ஜி.எஸ்.டி. வரிப்­ப­கிர்வு அதை­யும் வழங்­கு­வது இல்லை. எந்­தத் திட்­ட­மும் தமிழ்­நாட்­டுக்கு வழங்­கு­வது இல்லை. தமிழ்­நாட்­டுக்கு நல்­லது செய்­ய­வில்லை என்­றா­லும் பர­வா­யில்லை, கெடு­தல் செய்­யா­மல் இருக்­க­லாம். இன்று பாசிச பா.ஜ.க–வைத் துணிச்­ச­லாக எதிர்த்து நிற்­கக்­கூ­டிய ஒரு முது­கெ­லும்­புள்ள முத­ல­மைச்­சர், ஒரு தலை­வர் என்­றால் இந்­தி­யா­வி­லேயே நம் தலை­வர் அவர்­கள்­தான் நம்­பர் ஒன்  முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பாசிச சக்­தி­க­ளின் விளை­யாட்டு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இன்று நான்கு அடி­மை­க­ளைப் பிடித்து வைத்­துக்­கொண்டு எப்­ப­டி­யா­வது தமிழ்­நாட்­டுக்­குள் நுழைந்­து­வி­ட­லாம் என்று ‘சங்­கிக் கூட்­டம்’ முயற்சி செய்து கொண்­டி­ருக்­கி­றது. மோடி­யும் அமித்­ஷா­வும் முயற்சி செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு நாம் உறு­தி­யாக ஒன்று சொல்­வோம். பாசிச சக்­தி­க­ளின் விளை­யாட்­டு­கள், அர­சி­யல் விளை­யாட்­டு­கள் எல்­லாம் வட­நாட்­டில் உங்­க­ளுக்­குப் பல­ன­ளிக்­கும், தமிழ்­நாட்­டுக்­குள் நிச்­ச­யம் எடு­ப­டாது. தி.மு.க. இளை­ஞர் அணி நிச்­ச­யம் விட­மாட்­டோம். நம் தலை­வர் அத­னால்­தான் தெளி­வாக ஒவ்­வொரு முறை­யும் சொல்­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நடை­பெ­ற­வி­ருக்­கின்ற இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல் தமிழ்­நாடு அணிக்­கும் டெல்லி அணிக்­கு­மான ஒரு தேர்­தல். பத்­துத் தோல்வி பழ­னிச்­சாமி, இந்த முறை படு­தோல்வி பழ­னிச்­சா­மி­யாக ஆக்­கப்­போ­கி­றது தமிழ்­நாடு. இந்த முறை­யும் அமித்­ஷா­வை­யும் மோடி கூட்­ட­ணி­யை­யும் அடி­மைக் கூட்­டத்­தை­யும் நம் தி.மு.க. அணி நிச்­ச­யம் வென்று காட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அர­சி­ய­லில் முரட்­டுத் தொண்­டர்­க­ளைப் பார்த்­தி­ருப்­பீர்­கள், முரட்­டுப் பக்­தர்­க­ளைப் பார்த்­தி­ருப்­பீர்­கள். ஆனால் இன்று, இந்­தி­யாவே ஒரு முரட்டு அடி­மையை எடப்­பாடி பழ­னிச்­சாமி அவர்­க­ளின் உரு­வத்­தில் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றது. இன்­னொரு உதா­ர­ணம் சொல்­கி­றேன். எப்­பொ­ழு­துமே ஓர் அசல் தரத்­தி­லான பொருள் வந்­தால் அதற்கு மக்­கள் மத்­தி­யில் பெரிய வர­வேற்பு இருக்­கும். உடனே என்ன செய்­வார்­கள், அதே­போல ஒரு போலிப் பொருளைசந்­தை­யில் சில பேர் உற்­பத்தி செய்து இறக்­கு­வார்­கள். அதை எல்­லா­ரும் ‘அசம்­பிள்டு பீஸ்’ என்று சொல்­வார்­கள், இன்­னும் சொல்­லப்­போ­னால் ‘சைனா மேக்’ என்­பார்­கள். அந்த வகை­யில் இன்று ஓர் ‘அசம்­பிள்டு பீஸ்’ ஆக, சைனா மேக் மாதிரி ‘டெல்லி மேக்’ ஆக இன்று அ.தி.மு.க. கூட்­டணி அமைந்­துள்­ளது. அந்­தக் கூட்­ட­ணிக்கு கேரண்­டி­யும் கிடை­யாது, வாரண்­டி­யும் கிடை­யாது. எந்த நிமி­டம் வேண்­டு­மா­னா­லும் பியூசை புடுங்­கி­வி­ட­லாம். எந்த நிமி­டம் வேண்­டு­மா­னா­லும் செயல்­ப­டா­மல் போய்­வி­டும். தேர்­தல் முடிந்த உடனே நிச்­ச­யம் செயல்­ப­டா­மல் போய்­வி­டும். ஆனால், நம் கூட்­டணி அப்­படி இல்லை. நம் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி அமைந்த பிறகு, சந்­தித்த அனைத்­துத் தேர்­தல்­க­ளி­லும் நாம் வெற்றி பெற்­றி­ருக்­கி­றோம். தமிழ்­நாட்டு மக்­கள் நம் கூட்­ட­ணி­யின் மேல் நம்­பிக்கை வைத்­துள்­ளார்­கள். இன்று பா.ஜ.க. நேர­டி­யாக வரு­வ­தற்­குப் பதி­லாக ‘பி டீம்’, ‘சி டீம்’, ‘டி டீம்’ வரை இறங்­கி­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நீங்­கள் எத்­தனை டீம் வந்­தா­லும் தமிழ்­நாட்­டின் சாம்­பி­யன் எங்­க­ளின் தலை­வர்­தான், தி.மு.க. மட்­டும்­தான். அதை ஏற்­க­னவே செய்­து­காட்­டி­யி­ருக்­கி­றோம், மீண்­டும் மீண்­டும் செய்­து­காட்­டு­வோம். இங்கு வந்­துள்ள இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள், உங்­க­ளி­டம் நான் கேட்­ப­தெல்­லாம் முத­லில் உங்­க­ளின் குடும்­பத்­தி­னர், உங்­க­ளின் பெற்­றோர்­கள், உடன்­பி­றந்த தம்பி, தங்கை, உங்­க­ளின் மனைவி ஆகி­யோ­ரி­டம் பேசுங்­கள். உங்­கள் குடும்­பத்­தில் உள்ள மொத்த வாக்­கு­க­ளும் முழு­மை­யாக உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்­குத்­தான் சித­றா­மல் வர வேண்­டும். அதை நீங்­கள் உறுதி செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கொள்­கை­யற்ற கூட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நாம் தெரு­வெல்­லாம் சென்று வாக்கு கேட்­கி­றோம், நம் வீட்­டில் முத­லில் கேட்க வேண்­டும் என்­பதை மறந்­து­வி­டக் கூடாது. ``நீ எல்லா இடத்­தி­லும் கேட்­டாய், என்­னி­டம் கேட்­க­வில்­லையே’’ என்று நம் வீட்­டில் சொல்­லி­வி­டு­வார்­கள். மிக எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உங்­க­ளின் நண்­பர்­கள், உற­வி­னர்­கள் ஆகி­யோ­ரி­ட­மும் உங்­க­ளின் பிர­சா­ரத்­தைக் கொண்டு செல்­லுங்­கள். கழக ஆட்­சி­யில் நாம் இந்த ஐந்து ஆண்­டு­கள் செய்­துள்ள சாத­னை­களை எடுத்­துச் சொல்­லுங்­கள். மாற்­றுக் கட்­சி­யி­னர்­கூட உங்­க­ளுக்­குத் தெரிந்­த­வர்­கள் இருப்­பார்­கள். நம் வர­லா­றும் இயக்­கத்­தின் சாத­னை­க­ளும் தெரி­யா­மல் மாற்­றுக் கட்­சி­யில் சேர்ந்­தி­ருப்­பார்­கள். அவர்­க­ளி­ட­மும் நம் வர­லாற்றை எடுத்­துச் சொல்­லுங்­கள். அதே­போல, இன்று ஒரு கொள்­கை­யற்ற கூட்­டம் சுற்­றிக்­கொண்­டி­ருக்­கி­றது. பேசக்­கூ­டத் தெரி­ய­வில்லை, வெறும் சத்­தம்­தான். அவர்­க­ளி­டம் பேசுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முந்­தைய 10 ஆண்­டுக்­கால அ.தி.மு.க. ஆட்­சி­யில் தமிழ்­நாடு எப்­படி இருந்­தது, அதை எப்­படி இந்த 5 ஆண்­டு­க­ளில் நம் தலை­வர் சரி செய்­துள்­ளார் என்­ப­தைத் தர­வு­க­ளோ­டும், உண்­மை­யான ஆதா­ரத்­தோ­டும் எடுத்­துப் பேசுங்­கள். தமிழ்­நாடு அடைந்­துள்ள முன்­னேற்­றத்­தைப் புள்­ளி­வி­வ­ரத்­தோடு எடுத்­துச் சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">வட்ட, கிளை, பகுதி இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள், வாக்­குச்­சா­வ­டி­யில் இருக்­கின்ற ஒவ்­வொரு வீட்­டுக்­கும் குறைந்­தது இரண்டு முறை­யா­வது நீங்­கள் சென்று வாக்கு கேட்­டி­ருக்க வேண்­டும். அந்­தப் பகு­தி­யில் இருக்­கின்ற 18 வய­தி­லி­ருந்து 35 வய­துக்­குள் இருப்­ப­வர்­கள் அனை­வ­ரும் நம் இலக்கு. அதை அடைந்தே ஆக வேண்­டும். எப்­படி நான் உங்­க­ளைப் பல­முறை சந்­திக்­கி­றேனோ, அதே­போல நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் வட்­டம் மற்­றும் வாக்­குச்­சா­வடி அள­வில் இருக்­கின்ற இளை­ஞர் அணி நிர்­வா­கி­களை, பொறுப்­பா­ளர்­க­ளைச் சந்­தித்து உற்­சா­கப்­ப­டுத்­துங்­கள். உங்­க­ளில் பலர் பி.எல்.ஏ–2, பி.எல்.சி போன்ற பொறுப்­பு­க­ளில் இருப்­பீர்­கள். அந்­தப் பொறுப்­பு­களை மிகக் கவ­ன­மாக நீங்­கள் கவ­னம் செலுத்­திச் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில், உங்­கள் தொகு­தி­யில் இளை­ஞர் அணி நிர்­வா­கி­க­ளின் பணி தனித்­துத் தெரிய வேண்­டும். களத்­தில் மட்­டு­மல்ல, முடி­வு­க­ளி­லும் நிச்­ச­யம் தனித்­துத் தெரிய வேண்­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>