<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,76,958,1329" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 24 2026 22:46:19 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260325T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="25032026-MDU-10" position.sequence="10" ex-ref="25032026-MDU-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">பதவிக்காக ஊர்ந்து சென்று யார் காலை பிடித்தாரோ அவர்   </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">காலையே வாரிவிட்டவர் எடப்பாடி பழனிசாமி!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="opsbw_10_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மதுரை, மார்ச்  25 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மதுரை வடக்கு மாவட்­டம் அலங்­கா­நல்­லூ­ரில் சோழ­வந்­தான் தொகுதி தி.மு.க. சார்­பில் தமிழ்­நாடு தலை­கு­னி­யாது பரப்­பு­ரைக்கூட்­டம் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கூட்­டத்­திற்கு வடக்கு மாவட்ட செய­லா­ளர், வணி­க­வரி மற்­றும் பதி­வுத்­துறை அமைச்­சர் பி.மூர்த்தி தலைமை வகித்­தார்.  சோழ­வந்­தான் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஆ.வெங்­க­டே­சன், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஓ.பி.ரவீந்­தி­ர­நாத், ஆர்.கோபா­ல­ 
கி­ருஷ்­ணன் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாவட்ட அவைத் தலை­வர்  
எம்.ஆர்.எம். பால­சுப்­பி­ர­ம­ணி­யன் வர­வேற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இக்­கூட்­டத்­தில் பங்­கேற்ற முன்­னாள் முத­ல­மைச்­சர் ஓ.பன்­னீர்­செல்­வம் சிறப்­பு­ரை­யாற்­றி­னார். அப்­போது  அவர் பேசி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">வெற்றி நிச்­ச­யம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சோழ­வந்­தான் தொகு­தி­யில் நடை­பெ­றக்­கூ­டிய இந்த எழுச்­சி­மிகு செயல் வீரர்­கள்­கூட்­டத்­தில் கூடி­யி­ருக்­கும் மக்­க­ளின் முகத்­தில் தெரி­யக்­கூ­டிய எழுச்­சியே கழ­கத்­தின் வெற்­றிக்கு அச்­சா­ர­மாக அமைய உள்­ளது.  மாவட்ட கழக செய­லா­ள­ரும் அமைச்­ச­ரு­மான சகோ­த­ரர் மூர்த்தி கடந்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­பாக தேர்­தல் பணியை ஆரம்­பித்து விட்­டார். தேர்­த­லில் வெற்றி பெறு­வ­தற்­கான வியூ­கத்தை இந்த மாவட்­டத்­தில் வகுத்து வைத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே  தி .மு.க.வின் வெற்றி என்­பது மதுரை வடக்கு மாவட்­டத்­தில் உள்ள நான்கு தொகு­தி­க­ளி­லும் நிச்­ச­யிக்­கப்­பட்ட  வெற்­றி­யாக தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமி­ழ­கத்­தில் இருப்­பது அ.தி.மு.க. தலை­மை­யி­லான கூட்­டணி இல்லை அது அ.தி.மு.க.வை உள்­ள­டக்­கிய 
என் டி ஏ கூட்­ட­ணி­யா­கவே செயல்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அ.தி.­மு.க. தலை­மை­யி­லான கூட்­டணி என்­றால் கூட்­டணி பேசு­வ­தற்­கும்  தொகுதி பங்­கீடு செய்­வ­தற்­கும் டெல்­லிக்கு ஏன் செல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எம்.ஜி.ஆர்., ஜெய­ல­லிதா போன்ற தலை­வர்­கள் இருந்­த­போது. எந்த தலை­வ­ராக இருந்­தா­லும் அ.தி.மு.க. தலைமை அலு­வ­ல­கத்­தில் தான் கூட்­டணி பேச்­சு­வார்த்தை செய்­துள்­ளார்­கள்.  இப்­படி ஒவ்­வொரு முறை­யும் டெல்லி சென்று பேச்­சு­வார்த்தை நடத்­தக்­கூ­டிய என் டி ஏ கூட்­ட­ணி­யில் அடி­மை­யாக எடப்­பாடி பழ­னி­சாமி உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவர் தமிழ்­நாட்­டின் முத­ல­ மைச்­ச­ராக வந்­தால் சுய­மாக முடி­வெ­டுத்து செயல்­பட முடி­யுமா, அந்­தத் தெம்­பும் திரா­ணி­யும் எடப்­பாடி பழ­னிச்­சா­மிக்கு உள்­ளதா என்­றார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக்­களை சந்­திக்­கா­மல் திடீர் முத­ல­மைச்­ச­ராக வந்த ஒரு நபர் மீண்­டும் முத­ல­மைச்­சர் பத­வியை அடை­வ­தற்­காக பா.ஜ.க.வின் அடி­மை­யாக உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ­ரால் எந்த காலத்­தி­லும் மீண்­டும் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக வரவே முடி­யாது. இந்­தி­யாவை ஆண்­டு­வ­ரக் கூடிய மோடி தலை­மை­யி­லான பாஜக அர­சின் தொழில் வளர்ச்சி எட்டு சத­வீ­த­மாக உள்­ளது. ஆனால் தமி­ழ­கத்­திற்கு வரி வரு­வாய் தரா­மல் தமிழ்­நாட்டை வஞ்­சிக்­கும் ஒன்­றிய அர­சின் பொரு­ளா­தார வளர்ச்­சியை விட தமிழ்­நாடு11.8% பொரு­ளா­தார வளர்ச்­சியை எட்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாட்­டை­யும் நாட்டு மக்­க­ளை­யும் வளர்ச்சி பாதை­யில் அழைத்­துச் செல்­லக்­கூ­டி­ய­மு­த­ல­மைச்­ச­ராக தள­பதி மு.க.ஸ்டாலின் உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டை மோடி தலை­மை­யி­லான அரசு எந்த வகை­யில் வஞ்­சிக்க நினைத்­தா­லும் தமிழ்­நாடு எந்த காலத்­தி­லும் டெல்­லிக்கு தலை வணங்­காது என்ற நெஞ்­சு­ரத்­தோடு தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­காக உழைத்­துக் கொண்­டி­ருக்க கூடிய முத­ல­மைச்­சர் தள­பதி அவர்­கள் மீண்­டும் தமிழ்­நாட்­டின் முத­ல­ மைச்­ச­ராக வரு­வது உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">எடப்­பாடி பழ­னி­சாமி யாருக்­கும் விசு­வா­ச­மாக இருந்­தது இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் பதவி மீது உள்ள ஆசை­யி­னால் 2021 ஆம் ஆண்டு தான் மீண்­டும் முத­ல­மைச்­ச­ராக வர­வேண்­டும் என்ற ஒரே எண்­ணத்­தில் எம்.ஜி.ஆர். ஜெய­ல­லிதா அவர்­க­ளால் இயற்­றப்­பட்ட கட்­சி­யின் விதியை திருத்தி தன்­னைத்­தானே பொதுச் செய­லா­ளர் என்று அறி­வித்­துக் கொண்டு என்னை கட்­சி­யில் இருந்து வெளி­யேற்றி அவர் துரோ­கம் செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர் முத­ல­மைச்­ச­ராக நான்­கரை ஆண்டு காலம் தொடர்­வ­தற்கு உதவி செய்­தேன். அந்த நன்றி விசு­வா­சம் கூட அவ­ருக்கு இல்லை.எடப்­பாடி பழ­னிச்­சாமி யாருக்­கும் விசு­வா­ச­மாக இருந்­தது இல்லை. என்னை இரண்டு முறை ஜெய­ல­லிதா  அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக ஆக்­கி­னார் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் மீண்­டும் அவர் அந்த பத­விக்கு வரு­வ­தற்கு நான் எந்த இடை­யூ­றும் செய்­வ­தற்கு விரும்­பா­மல் அவ­ருக்கு முத­ல­மைச்­சர்­ப­த­வியை தந்­து­ விட்டு வெளி­யே­றி­னேன்.  அதே­போல் ஜெய­ல­லிதா இறந்­த­வு­டன் சசி­கலா அவர்­கள் எனக்கு முத­ல­மைச்­சர் பத­வியை தந்­தார். அவ­ரும் கேட்­டுக்­கொண்­ட­தற்கு கிணங்க முத­ல­மைச்­சர் பத­வியை ராஜி­னாமா செய்­து­விட்டு மனப்­பூர்­வ­மாக வெளி­யே­றி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னிச்­சாமி பதவி பெறு­வ­தற்­காக யார்  காலை அவர் ஊர்ந்து சென்று பிடித்­தாரோ அவர் காலையே வாரி­விட்டு அவ­ரையே தரக்­கு­றை­வாக பேசி­ய­வர் தான் எடப்­பாடி பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தள­பதி மு.க.ஸ்டாலின்­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">எப்­போ­தும் முதல்­வர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதன் கார­ண­மா­கத்­தான் உள்­ளாட்­சித் தேர்­தல் சட்­ட­மன்­றத் தேர்­தல் நாடா­ளு­மன்ற தேர்­தல் என்று அவர் சந்­தித்த 10 தேர்­த­லி­லும் தோல்வி கண்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இனி எத்­தனை தேர்­த­லில் அவர் தன்னை முத­ல­மைச்­சர் என்று அறி­வித்­துக் கொண்டு நின்­றா­லும் அவ­ருக்கு படு­தோல்­வி­யைத் தான் தமிழ்­நாட்டு மக்­கள் பரி­சாக தரு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த உல­கத்தை காத்து வரக்­கூ­டி­யது ஒன்­பது கோள்­கள் அதில் முக்­கி­ய­ மான ஒரு கோள் என்­றால் அது சூரி­யன் தான் சூரி­யன் பக்­கத்­தில் யார் நெருங்­கி­னா­லும் சுட்­டெ­ரிக்­கப்­ப­டு­ வார்­கள் அதே போல் தமிழ்­நாட்­டில் உத­ய­சூ­ரி­யன் சின்­னம்­தான் மீண்­டும் உதிக்­கும் வரும் 2026 சட்­ட­மன்­றத் தேர்­த­ லில் மீண்­டும் தமிழ்­நாட்­டில் முத­ல­மைச்­ச­ராக இரண்­டா­வது முறை­யாக தள­பதி மு.க. ஸ்டாலின் அவர்­கள் பதவி ஏற்­பார் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்கு எல்­லோ­ரும் ஒற்­று­மை­யாக இருந்து தேர்­தல் நாளன்று அதி­கா­லை­க­ளில் சென்று உத­ய­சூ­ரி­யன்  சின்­னத்­தில் வாக்­க­ளித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்­டும் என்று கேட்­டுக் கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும் அனை­வ­ரும் ஒன்­றாக சேர்ந்து தமிழ்­நாடு வெல்­லட்­டும் மீண்­டும் தமி­ழக முத­ல­மைச்­ச­ராக ஸ்டாலின் தொட­ரட்­டும் என்று கோஷம் போடுங்­கள் என்று ஒட்­டு­மொத்­த­மாக பொது­மக்­களை கோஷ­மி­டு­மாறு முன்­னாள் முதல்­வர் ஓ.பி.எஸ். வலி­யு­றுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">அமைச்சர் பி.மூர்த்தி பேச்சு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வடக்கு மாவட்­டச் செய­லா­ளர்,  அமைச்­சர் பி.மூர்த்தி பேசியதாவது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மதுரை வடக்கு மாவட்­டத்தை பொறுத்த அள­வில், எந்த ஒரு பணி­யாக தலை­வர் கட்­ட­ளை­யிட்­டா­லும், அதை முன்­னின்று உங்­க­ளு­டைய ஒட்­டு­மொத்த ஆத­ர­வோடு அதை வெற்­றி­க­ர­மாக நடத்­தி­யுள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் இந்த மேடை­யில் ஒரு அமைச்­ச­ராக  நிற்­ப­தற்குகார­ணம் முத­லில் என்னை சோழ­வந்­தான் தொகு­தி­யி­னு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக ஆக்­கிய நீங்­கள் தான். அத­னு­டைய தொடர்ச்­சி­யாக, கிழக்கு தொகு­தி­யிலே நான் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராகி, அமைச்­சர் பொறுப்பு வந்­தா­லும், என்­றைக்­கும் நன்றி உணர்­வோடு இந்த சோழ­வந்­தான் தொகு­தி­யி­னு­டைய நிர்­வா­கி­ க­ளுக்­கும், மக்­க­ளுக்­கும், இருப்­பேன் என்­பது உங்­க­ளுக்­கெல்­லாம் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு கிழக்கு தொகுதி, மேலூர் தொகுதி, மேற்கு தொகு­தி­யாக இருந்­தா­லும், மற்ற தொகு­தி­கள் எல்­லாம் வெற்றி பெறு­வ­தற்கு ஏற்­ப­டக்­கூ­டிய மகிழ்ச்­சியை விட சோழ­வந்­தான் தொகுதி வெற்­றி­தான் எனக்கு முதல் மகிழ்ச்­சி­யாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">200  தொகு­தி­க­ளுக்கு மேல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வெல்­வோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய கழ­கத் தலை­வர் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் கூட்­டணி கட்­சி­க­ளுக்­கும் தொகு­தி­களை ஒதுக்கி,  சட்­ட­மன்ற  தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர்­க­ளை­யும் சில நாட்­க­ளிலே அறி­விக்க உள்­ளார், அவ்­வாறு முத­ல­மைச்­சர் என்ன கட்­டளை இடு­கி­றாரோ, அதை ஏற்று நடத்­தக்­கூ­டிய முதன்­மை­யான மாவட்­டம் நம்­மு­டைய மாவட்­டம் என்­பதை நாம் மறந்து விடக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாம் நம் கட்சி வேட்­பா­ளர்­க­ளைப் போல் கூட்­ட­ணிக் கட்சி வேட்­பா­ளர்­க­ளை­யும் பெரு­வா­ரி­யான வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நிச்­ச­ய­மாக, தமிழ்­நாட்­டிலே 200 தொகு­தி­க­ளுக்கு மேல் வெல்­வோம் என்று நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றார். துணை முத­ல­மைச்­சர் அதற்­கான பணியை செய்து கொண்­டி­ருக்­கி­றார்­அ­த­னால் அந்த வெற்­றி­யில் இந்த நான்கு தொகு­தி­க­ளி­லும் அதி­க­மான வாக்­கு­களை பெற வேண்­டும். அதிலே சோழ­வந்­தான் தொகுதி முத­லி­டம் பெற வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எப்­போ­தும் இல்­லாத அள­விற்கு சோழ­வந்­தான் தொகு­தி­யில் எழுச்­சியை காண முடி­கி­றது. நமது கழ­கத் தலை­வர் தலை­மை­யி­லான திரா­விட முன்­னேற் ­றக் கழ­க­கத்­தின் தலை­மை­யில் இருக்­கிற அத்­தனை கூட்­டணி கட்சி நண்­பர்­க­ளை­யும் ஒண்­றி­னைத்து, அந்த பணியை வெற்­றி­க­ர­மாக முடித்து தர வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த வெற்றி உங்­க­ளு­டைய வெற்றி மட்­டு­மல்ல, முத­ல­மைச்­ச­ரு­டைய   வெற்­றி­யாக அமை­யும்  என்று கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும்  இக்­கூட்­டத்­தில் தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் கரு.தியா­க­ரா­ஜன், புதூர் சேகர், தொகுதி பொறுப்­பா­ளர் சுப.த.சம்­பத், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஐயப்­பன், ஒன்­றிய செய­லா­ளர்­கள் தன்­ராஜ், முத்­தை­யன், பரந்­தா­மன், அருண்­கு­மார், பொதும்பு தன­சே­கர், பால­ரா­ஜேந்­தி­ரன், பசும்­பொன்­மா ­றன், பேரூர் செய­லா­ளர்­கள் ரகு­பதி, பால்­பாண்­டி­யன், மனோ­க­ர­வேல் பாண்­டி­யன், சத்­தி­ய­பி­ர­காஷ், பொதுக்­குழு உறுப் ­பி­னர்­கள் ஸ்ரீதர், சோழ­வந்­தான் கிரி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேரூ­ராட்சி தலை­வர்­கள் ரேணு­கா­ஈஸ்­வரி கோவிந்­த­ராஜ், ஜெய­ரா­மன், துணைத் தலை­வர்­கள் சாமி­நா­தன், கார்த்­திக், லதா கண்­ணன், மற்­றும் தி.மு.க. நிர்­வா­கி­கள் நட­ரா­ஜன், கண்­ணன், கார்த்­தி­கே­யன். சந்­த­ன­க­ருப்பு, தவ­ச­தீஷ், சோழ­வந்­தான் பெரி­ய­சாமி உள்­ளிட்ட கூட்­டணி கட்சி நிர்­வா­கி­கள் ம.தி.மு.க. புற­ந­கர் மாவட்ட செய­லா­ளர் மார்­நாடு , மார்க்­சிஸ்ட் மற்­றும் இந்­தி­ய­கம்­யூ­னிஸ்ட் கட்­சி­களை சேர்ந்த ஒன்­றிய செய­லா­ளர்­கள் கும­ரே­சன், பால­மு­ரு­கன், வி.சி.க. பொதுச் செய­லா­ளர் தமி­ழா­ளன், கொங்கு இளை­ஞர் தனி­ய­ரசு பேரவை மாவட்ட செய­லா­ளர் தயா­ளன், ஆதித்­த­மி­ழர் பேரவை மாவட்ட செய­லா­ளர் சர­வ­ணன் உள்­ளிட்டபல்­வேறு கூட்­டணி கட்சி நிர்­வா­கி­கள் உள்­ளிட்ட ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் பங்­கேற்­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>