<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,69,957,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 24 2026 22:40:47 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260325T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="25032026-VLR-10" position.sequence="10" ex-ref="25032026-VLR-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="32">பகைப்­பு­லம் புகுந்து பந்­தா­டிக் காட்­டு­வோம்!   பக­ல­வன் தலை­ம­கனை முதல்­வ­ராக அமர்த்­து­வோம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup264349_10_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="18">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ப்­போ­தெல்­லாம் திரா­வி­டக் கட்சி என்று கூறிக் கொள்­ளு­கின்ற அ.தி.மு.கவின் எடப்­பாடி பழ­னிச்­சாமி அடிக்­கடி கூட்­ட­ணிப் பேச டெல்­லிக்­குச் செல்­கி­றார். அ.தி.மு.க தலைமை அலு­வ­ல­கம் டெல்­லி­யிலா இருக்­கி­றது? கூட்­ட­ணி­யைப் பேசி யாருக்கு எவ்­வ­ளவு என்று உள்­துறை அமைச்­சர் அமித்ஷா சொல்­வா­ராம்; அதை எடப்­பாடி கேட்­டுக் கொண்டு வரு­வா­ராம். அத்­வானி, ஜஸ்­வந்­சிங் போன்ற பா.ஜ.க தலை­வர்­க­ளெல்­லாம் அம்­மை­யா­ரின் போயஸ் கார்­டன் வீட்­டின் வாச­லில் நின்­றது ஒரு­கா­லம். இன்றோ நிலைமை மாறி­விட்­டது. எங்­கள் தலை­வர் போட்டி தமிழ்­நாட்­டுக்­கும் டெல்­லிக்­கும் தான் என்று சரி­யா­கத் தானே கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அ.தி.முக. எத்­த­னையோ தேர்­தல்­க­ளைச் சந்­தித்து வென்­றுள்­ள­தாக எடப்­பாடி பழ­னிச்­சாமி கூறி­யுள்­ளார். ஆனால் எடப்­பாடி தலை­மை­யேற்­றப் பின் எத்­தனை தேர்­தல்­க­ளில் அ.தி.மு.க வெற்றி பெற்­றது என்­ப­த­னைக் கூறு­வாரா? எம்.ஜி.ஆரும், அம்­மை­யா­ரும், எடப்­பா­டி­யா­ரும் ஒன்றா? இதுவே அ.தி.மு.க தொண்­டர்­கள் எழுப்­பும் கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">போர் நடக்­கி­றது எரி­வாயு (கேஸ்) கிடைக்­க­வில்லை மக்­க­ளைப் பற்­றிச் சிந்­தித்­தார் எங்­கள் தலை­வர். வீட்­டில் அடுப்பு எரிந்­தால்­தான் நாட்டு மக்­கள் வயிறு நிரம்­பும் என்று பசி­யின் நிலை அறிந்­த­தால் காலை உணவு தந்­த­வர் ஆயிற்றே! அத­னால் மின்­சார அடுப்பு பயன்­ப­டுத்­துங்­கள் எல்.பி.ஜி. கேஸ் கிடைக்­கும் வரை மின்­சா­ரம் ஒரு யூனிட்­டுக்கு 2 ரூபாய் மானி­யம் என்று அறி­வித்­தார். அப்­படி இந்­தி­யா­வில் எந்த மாநில முதல்­வ­ரா­வது அறி­வித்­தாரா? ஏன் பா.ஜ.க ஆளும் 22 மாநில முதல்­வர்­க­ளில் ஒரு­வ­ரா­வது அறி­வித்­தாரா இல்­லையே! அவர்­க­ளுக்கு மக்­க­ளைப் பற்றி சிந்­த­னை­யில்லை. மக்­க­ளைப் பற்றி சிந்­திப்­ப­வரே நல்ல தலை­வ­ராக இருக்க முடி­யும். இது­தான் நல்ல ஆளு­மைக்கு அழகு. அவரே நம்­த­லை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவல்­து­றை­யில் கர்­நா­ட­கா­வில் பணி­யாற்­றி­விட்டு தமிழ்­நாட்டு அர­சி­யலை அறவே அறி­யாது அரிச்­சு­வ­டியை மட்­டும் அறிந்­து­கொண்டு அனைத்­தும் அறிந்த மேதாவி போல் தற்­போது பா.ஜ.கவால் ஓரங்­கட்­டப்­பட்டு உட்­கார்ந்து இருக்­கும் நிலை­யி­லும் அண்­ணா­மலை வர­இ­ருக்­கிற 2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தி.மு.க. படு­தோல்வி அடை­யப் போவ­தா­க­வும் அதனை அறிந்து தலை­வர் முதல் தொண்­டர் வரை கத­று­கி­றார்­கள், பத­று­கி­றார்­கள் என உள்­ளம் மகிழ உள­றிக்­கொட்­டி­யுள்­ளார். என்னே ஆசை பார்த்­தீரா? அர­வக்­கு­றிச்­சிக்­கா­ர­ருக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவர் ஏதோ மாவீ­ரன் அலெக்­சாண்­ட­ரின் குரு அரிஸ்­டாட்­டில் பாருங்­கள். நற்­க­ருத்­துக்­களை நல்­கி­டும் நவீ­னச் சிந்­த­னை­ 
யா­ள­ரைப் போல் சொதப்­பல் கருத்­துக்­களை தொலை­நோக்கு சிந்­த­னைப் போல் கக்­கி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மது­பா­னத்­தில் முத­லில் ரூ. 34,000 கோடி ஊழல் என்­றார் பின்பு ரூ. 1000 கோடி ஊழல் என்­றார். சொன்­னால் எதி­லும் உறு­தி­யாக இருக்க வேண்­டும். மறு­க­ணமே மாற்­றிப் பேசு­வது பித்த நிலை இல்­லாத நல்ல மனி­த­னுக்கு அழ­கல்ல, விளைவு என்ன ஆனது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பா.ஜ.க. தமிழ்­நாடு தலை­வர் பத­வி­யில் இருந்து தூக்கி எறிந்­தார்­கள். பிறகு நயி­னார் நாகேந்­தி­ரனை தலை­வ­ராக ஆக்­கி­னார்­கள். அவ­ரும் பதவி ஏற்ற சில நாட்­கள் நாக­ரி­க­மாக பேசி­ய­வர் யார் சொன்­னாரோ தெரி­ய­வில்லை அண்ணா மலைக்கு அண்­ண­னாக மாறி அவ­ரும் அவ­தூ­று­களை அள்ளி விடத் தொடங்­கி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.கவின் சோலி முடிந்து விட்­ட­தாம். தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணி­தான் ஆட்சி அமைக்க போகி­ற­தாம். அப்­பப்பா என்னே ஆரு­டம்! எப்­ப­டிப்­பட்ட அர­சி­யல் ஞானம்! சோலி முடிந்­தது என்ற நயி­னா­ரைப் பார்த்து கேலி பேசி மக்­கள் சிரிப்­பது அவர் காதில் இன்­னும் விழ­வில்லை போலும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அண்­ணா­மலை அடிக்­கடி பேட்டி தரு­வ­தைப் பார்த்­தால் பா.ஜ.கவுக்கு தலை­வர் நயி­னாரா! அல்­லது அண்­ணா­ம­லையா! என்­கிற கேள்­வியை மக்­கள் கேட்­கி­றார்­கள் என்­பதை நயி­னார் அறி­வாரா? அல்­லது பத்­தி­ரி­கை­யா­ளர்­களை நான் சந்­திப்­பதை விட நீங்­களே சந்­தி­யுங்­கள் என்று அண்­ணா­ம­லை­யி­டம் நயி­னாரே கூறி­விட்­டாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒன்று மட்­டும் கற்­றுக் கொண்­டார் அண்­ணன் நயி­னார் ஏதா­வது கேள்வி கேட்­டால் “எனக்கு எது­வும் தெரி­யாது’’ என்று பதில் சொல்­கி­றார். இதற்கு ஒரு தலை­வர் தேவையா? எங்கே போனது உங்­கள் துணிச்­சல்? வள்­ளி­யூரை விட்டு வர மறுக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சி.பி.ஐ. வழக்கு என்­ற­வு­டன் தம்பி செந்­தில் பாலா­ஜி­யின் மனம் சிதைந்து போய் விட்­ட­தாம். பயப்­ப­டா­மல் போங்­கள் என்று பரி­கா­சச் சொல்லை அண்­ணா­மலை பேசி­யுள்­ளார். செந்­தில் பாலாஜி பய­மாக இருக்­கி­றது என்று இவ­ரி­டம் கூறி­னாரா? அவர் எப்­ப­டிப்­பட்­ட­வர் என்­பது எனக்கு 30 ஆண்­டு­க­ளா­கத் தெரி­யும். கரூர் தொகு­தி­யில் என் பாதம் படாத இடமே இல்லை. அந்த அள­விற்கு மாண­வர் அணி­யில் இருந்த போது என்­னை­யும் வேலை வாங்­கி­னார், அவ­ரும் வேலை செய்­தார். அத­னால் தான் இந்த உச்­சத்தை அவர் தொட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கரூர் சம்­ப­வம் நடந்­த­வு­டன் முத­லில் வந்­த­வர் எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­க­ராம், இரண்­டா­வ­தாக வந்­த­வர் பா.ஜ.கவி­ன­ராம், மூன்­றா­வ­தாக வந்­த­வர் செந்­தில் பாலா­ஜி­யாம்! இதில் முன்­வந்த மற்­ற­வர்­க­ளைப் பற்­றிப் பேசாத அண்­ணா­மலை செந்­தில் பாலாஜி ஏன் வந்­தார்? என்­கி­றார். சி.பி.ஐ விசா­ர­ணைக்கு முன்­வந்த இரு­வ­ரை­யும் ஏன் அழைக்­க­வில்லை என்று கேட்­க­வில்­லையே ஐ.பி.எஸ். அண்­ணா­ம­லையே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு முன்­னாள் அமைச்­சர், கரூர் தொகு­தி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் முதல்­வ­ருக்கு தக­வல் கூறி வர­வ­ழைத்து விட்­டார். துணை முதல்­வரை துபா­யி­லி­ருந்து வர­வ­ழைத்து விட்­டார். அப்­படி அவர்­க­ளெல்­லாம் வரும்­போது ஆம்­பு­லன்ஸ்­களை வர வழைக்க மாட்­டாரா? தி.மு.க மாவட்­டச் செய­லா­ளர் ஏற்­பாடு செய்த ஆம்­பு­லன்­ஸில் தி.மு.க கொடி­யும் மருத்­து­வ­அணி பெய­ரும் ஒட்­டப்­பட்­ட­தில் என்ன தவறு கண்­டார்? ஆக சரி­யாக மாட்­டிக் கொண்­டார் என்று மகிழ்ச்­சி­யில் அண்­ணா­மலை திளைத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அண்­ணா­மலை சொல்­கிற எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர் முன்­னாள் அமைச்­சர்­தான். அவ­ரால் மருத்­து­வ­ம­னைக்கு உடனே வர முடி­யு­மென்­றால் செந்­தில் பாலா­ஜி­யால் ஏன் வர முடி­யாது? எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர் பதவி பெற்­றது எப்­படி என்­ப­தும் அவ­ருக்கு அப்­ப­தவி எங்கு வைத்து எழு­தப்­பட்­டது என்­ப­தும் அதற்­குக் கார­ண­மாக இருந்­த­வர் செந்­தில் பாலாஜி என்­ப­தும் அண்­ணா­ம­லைக்­குத் தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">செந்­தில் பாலாஜி டெல்­லிக்­குச் சென்­றார். சி.பி.ஐ விசா­ர­ணையை சந்­தித்­தார் சிரித்த முகத்­து­டன் வெளியே வந்­தார். என்ன ஆனது? அண்­ணா­மலை நினைத்­தது எது­வுமே நடக்­க­வில்லை. இங்கு ஏமாற்­றம் அண்­ணா­ம­லைக்­குத்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த அண்­ணா­மலை ஓட்­டுக்­குப் பணம் கொடுக்­க­லாமா என்று கேட்­கி­றாரே! அர­வக்­கு­றிச்சி தேர்­த­லில் இவர் போட்­டி­யிட்ட போது ஓட்­டுக்கு ரூ.1000 கொடுத்­தாரா இல்­லையா? மறுக்க முடி­யுமா? அப்­ப­டி­யி­ருந்­தும் தோற்­றார். கழ­கம் தான் வென்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து உள்­ளாட்­சித்­துறை அமைச்­சர் அண்­ணன் நேரு அவர்­கள் மீது அபாண்­ட­மான குற்­றச்­சாட்டு ரூ.  888 கோடி ஊழல். ஆத்­தி­க­வா­தி­கள் ஒரு எட்டு இருந்­தாலே உருப்­ப­டாது என்­பார்­கள். இதில் 3 எட்டு இந்த குற்­றச்­சாட்டு தேறவே தேறாது. ஒரு பைசா கூட ஊழல் இல்லை என்­றும் முடிந்­தால் வழக்கு போடுங்­கள் சந்­திக்­கி­றேன் என்­றும் அமைச்­சர் நேரு பகி­ரங்­க­மாக சவால் விட்­டார். எதிர் திசை­யி­லி­ருந்­தும் எந்த பதி­லும் இல்லை. உண்மை இருந்­தால் தானே பழி போடத் துணி­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த லட்­ச­ணத்­தில் பிர­த­மர் மோடி திருச்சி தேர்­தல் பிரச்­சா­ரக் கூட்­டத்­தில் பேசும்­போது அமைச்­சர் நேரு மீது ஊழல் வழக்கு உள்­ள­தென்று பேசி நட­வ­டிக்கை எடுப்­போம் என்­கி­றார். பிர­த­மர் பேசும்­போது உண்­மை­யைக் கேட்­டுத் தெரிந்து தானே  பேச வேண்­டும். இப்­படி யார் எழு­திக் கொடுத்­தா­லும் பேசி­வி­ட­லாமா? அதற்­காக பின்­னர் மோடி வருத்­தப்­பட்­ட­தா­க­வும் பா.ஜ.கவி­னர் சிலர் கூறி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பலர் இரத்­தம் சிந்தி உயிரை ஈந்­திப் பெற்ற சுதந்­திர இந்­தி­யாவை எளி­தாக ஒரே நாளில் என்­பதை விட சில மணி நேரங்­க­ளில் அடிமை இந்­தியா ஆக்­கி­யப் பெருமை பிர­த­மர் மோடி­யைச் சேரும். பல­முறை இந்­தியா – பாகிஸ்­தான் போரை நான்­தான் நிறுத்­தி­னேன் என்ற டிரம்­பின் சொல்லை நாடா­ளு­மன்­றத்­தில் இது­வரை பிர­த­மர் மோடி மறுத்­துப் பேசி­னாரா? கேள்வி கேட்­ட­வர்­க­ளை­யும் சஸ்­பெண்ட் செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­திய தலைமை தேர்­தல் அதி­காரி மீது நம்­பிக்கை இல்­லாத் தீர்­மா­னம் (இது­வரை இப்­படி நடந்­த­தில்லை) 190 எம்.பி.க்கள் கையெ­ழுத்­திட்­டுக் கொண்டு வந்­துள்­ள­னர். இது தேர்­தல் ஆணை­யத்­தில் பிர­த­மர் மோடி மூக்கை நுழைத்து அழுத்­தம் கொடுக்­கி­றார் என்­பது தான் இதற்கு கார­ணம். இதற்கு உட­ன­டி­யாக தேர்­தல் அதி­காரி ஞானேஷ்­கு­மார் ராஜி­னாமா செய்­தி­ருக்க வேண்­டும். செய்­தாரா? இல்­லையே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதற்­குத்­தான் எங்­கள் முதல்­வர் அண்­ணன் தள­பதி பிர­த­மர் மோடி­யி­டம் இருக்­கும் துணை நிறு­வ­னங்­கள் இ.டி, ஐ.டி, சி.பி.ஐக்­கெல்­லாம் நாங்­கள் அஞ்ச மாட்­டோம்; துணிந்து எதிர்­கொள்­வோம் என்று கூறி­னார். இது ஒரு கட்­சித் தலை­வ­ரின் கடமை உணர்வு. அத­னால் ஏற்­பட்ட விளைவு நம்மை காக்க நம்­த­லை­வர் இருக்­கி­றார் என்ற துணிச்­ச­லு­டன் கழ­கத்­தி­னர் களப்­பணி ஆற்­றத் துவங்­கி­விட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இளை­ஞ­ரணி செய­லா­ளர், துணை முத­ல­மைச்­சர் சகோ­த­ரர் உத­ய­நிதி ஸ்டாலின் தேர்­தல் தேதி அறி­விக்­கப்­ப­டும் முன்பே இளை­ஞர் அணி மண்­டல மாநா­டு­களை நடத்தி இளை­ஞர்­க­ளுக்கு எழுச்­சி­யுரை தந்­த­தோடு தேர்­தல் பணியை சென்ற மாதமே தொடங்கி விட்­டார். அவர் காலத்­தில் தமிழ்­நாடு விளை­யாட்­டில் முதல் மாநி­ல­மாக திகழ்­வது முதல்­வ­ருக்­கும் பெருமை தமிழ்­நாட்­டுக்­கும் பெருமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இளை­ஞர்­களே! ஜார் மன்­னர் ஆட்­சியை வீழ்த்த கார்ல் மார்க்ஸ் தத்­து­வத்தை கரம் எடுத்து லெனின் ரஷ்­யப் புரட்­சியை நடத்தி சோவி­யத் யூனி­யனை மல­ரச் செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வால்­டேர் ரூசோ­வின் எழுத்­துக்­கள் புரட்சி செய்து மக்­களை சர்­வா­தி­கார ஆட்­சிக்கு எதி­ராக திர­ளச்­செய்து பிரெஞ்ச் புரட்சி நடத்தி மக்­க­ளாட்சி கொண்டு வந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று ஈரா­னில் நாசம் செய்­யும் அமெ­ரிக்­காவை வியட்­நாம் புரட்­சி­யா­ளர் ஹோசி­மின் மக்­களை ஒன்று திரட்டி எதிர்த்­துப் போராடி பல லட்­சம் உயிர்­களை பறி­கொ­டுத்து அமெ­ரிக்­காவை விரட்டி வியட்­நாமை மீட்­டெ­டுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமெ­ரிக்­கா­வின் அடிமை பாடிஸ்­டா­வின் சர்­வா­தி­கார ஆட்­சியை கரும்­புக் கட்­டுக்­குள்­ளும், மலை­க­ளுக்­குள்­ளும் தங்கி இருந்து மக்­கள் ஆத­ர­வு­டன் பிடல் காஸ்ட்­ரோ­வும் சேகு­வே­ரா­வும் தூக்கி எரிந்து ஆட்சி அமைத்­த­னர். இப்­படி எத்­த­னையோ உதா­ர­ணங்­களை கூற முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதைப் போல் தமி­ழ­கத்­தில் குடிக்­கும் தண்­ணீ­ருக்­கும் கல்­விக்­கும் நிதி தரா­மல் வஞ்­சிக்­கும் பிர­த­மர் மோடி அரசை எதிர்க்க வேண்­டிய சூழல் வந்­துள்­ளது. ஒன்­றிய அரசோ என்­ன­வெல்­லாமோ சித்து வேலை­க­ளைச் செய்து திரா­விட மாடல் அர­சை­யும் நம் அன்­பிற்­கி­னிய தலை­வ­ரை­யும் வீழ்த்த திட்­டம் வகுத்து வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எடப்­பாடி அதற்­குத் துணை போகி­றார். நம்மை பொறுத்த வரை எடப்­பாடி பா.ஜ.கவின் பொம்­மை­தான். சூழ்ச்­சி­யா­ளர்­கள் பா.ஜ.கவி­னர்­தான். திரா­விட மண்­ணில்­தான் அவர்­கள் சூழ்ச்சி வெல்­ல­வில்லை. அதனை உண்­மை­யாக்­கிக் காட்ட நம்­மு­தல்­வர் அண்­ணன் தள­பதி தம் அசைக்க முடி­யாத முதல்­வர் என்று காட்ட பா.ஜ.க. சூழ்ச்சி எதை­யும் சந்­திக்க நாம் தயா­ரென்று காண்­பிக்­கும் காலம் வந்­து­விட்­டது. இரத்­தம் சிந்த தயா­ரா­வோம். இமா­லய வெற்றி பெற்­றுக் காட்­டு­வோம். இதுவே நமது சப­தம்.
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>