<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,951,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Mar 26 2026 07:41:48 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260326T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="26032026-MDU-09" position.sequence="09" ex-ref="26032026-MDU-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup266669_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்று பா.ஜ.க ஒரு அணி, பா.ஜ.க-வின் பி-அணி, சி-அணி, டி-அணி என்று பல அணி­கள் இன்று இறங்­கி­யி­ருக்­கின்­றன. எத்­தனை அணி­கள் வந்­தா­லும் தி.மு.க. தான் சாம்­பி­யன், நம் தலை­வர்­தான் சாம்­பி­யன் என்­கி­றதை நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும். முத­லில் இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள், உங்­கள் அனை­வ­ருக்­கும் ஒரு வேண்­டு­கோள். முத­லில் உங்­க­ளின் வாக்கு, உங்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரின் வாக்கு அதை முத­லில் நீங்­கள் உறு­திப்­ப­டுத்த வேண்­டும். உங்­க­ளின் பெற்­றோர்­கள், உங்­க­ளின் அண்­ணன், தங்கை, தம்­பி­மார்­கள், உங்­க­ளின் மனைவி அவர்­க­ளின் வாக்­கு­கள் எது­வுமே சிந்­தா­மல் சித­றா­மல் நம் தி.மு.க-வுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு அதை நீங்­கள் கொண்டு வந்து சேர்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">உங்­க­ளின் நண்­பர்­கள், நண்­பர்­க­ளின் உற்­றார் உற­வி­னர்­கள், தம்பி தங்­கை­கள் அவர்­க­ளி­ட­மும் நம் பிரச்­சா­ரத்­தைக் கொண்டு சேர்க்க வேண்­டும். கழக ஆட்­சி­யில் செய்­தி­ருக்­கக்­கூ­டிய சாத­னை­களை எடுத்­துக் கொண்டு சேருங்­கள். சில பேர் மாற்­றுக் கட்­சி­யி­ன­ராக கூட இருக்­க­லாம், எதிர்க்­கட்­சி­யாக இருக்­க­லாம். நம் திட்­டங்­கள் தெரி­யா­மல் நம் வர­லாறு தெரி­யா­மல் அவர்­கள் எல்­லாம் மாற்­றுக் கட்­சி­யில் சேர்ந்து இருக்­க­லாம். அவர்­க­ளை­யும் சந்­தித்­துப் பேசுங்­கள். தி.மு.க தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்கு என்­னென்ன செய்­தி­ருக்­கி­றது, மாநில உரி­மை­க­ளுக்கு நாம் என்­னென்ன செய்­தி­ருக்­கி­றோம் என்­பதை எடுத்­துச் சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்று கொள்கை என்­றால் என்­ன­வென்றே தெரி­யா­மல் ஒரு கூட்­டம் சுற்­றிக்­கொண்­டி­ருக்­கி­றது அந்த கூட்­டத்­தி­ட­மும் பொறு­மை­யாக உட்­கார்ந்து பேசுங்­கள். அவர்­க­ளை­யும் கொள்­கை­வ­யப்­ப­டுத்­து­கின்ற கடமை நமக்கு இருக்­கி­றது. நமக்கு எதி­ரா­கப் பரப்­பப்­ப­டு­கின்ற பொய் செய்­தி­களை, வதந்­தி­களை ஆதா­ரத்­தோடு நீங்­கள் களத்­தில் இறங்கி முறி­ய­டி­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">புள்ளி விவ­ரத்­து­டன் சொல்­லுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">முக்­கி­ய­மாக கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. 
ஆட்­சி­யில் தமிழ்­நாடு எவற்­றை­யெல்­லாம் இழந்­தது என்­ப­தை­யும், கடந்த ஐந்து வரு­டத்­தில் நம் முத­ல­மைச்­சர், நம் தி.மு.க ஆட்­சி­யில் அதை­யெல்­லாம் எப்­ப­டிச் சரி செய்­தோம் என்­ப­தைத் தர­வுத் தளத்­தோடு அவர்­களை சந்­தித்­துப்பேசுங்­கள். புள்ளி விவ­ரங்­க­ளோடு எடுத்­துச் சொல்­லுங்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">வட்ட, கிளை, பகுதி இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் இருக்­கிற ஒவ்­வொரு வீட்­டுக்­கும் குறைந்­தது இரண்டு முறை­யா­வது நீங்­கள் சென்று வாக்கு கேட்க வேண்­டும். இளை­ஞர் அணி­யின் இலக்கு, ஒவ்­வொரு வீட்­டி­லும் 18 வய­தி­லி­ருந்து 35 வயது வரைக்­கும் இருக்­கக்­கூ­டிய அனைத்து வாக்­கா­ளர்­க­ளும் நம் இலக்கு என்று முடிவு செய்து நாம் வேலை செய்ய வேண்­டும். நான் எப்­படி உங்­க­ளை­யெல்­லாம் பல­முறை சந்­திக்­கி­றேனோ, பல­த­டவை சந்­திக்­கி­றேனோ அதே மாதிரி நீங்­க­ளும் வட்ட மற்­றும் வாக்­குச்­சா­வடி அள­வில் இருக்­கிற இளை­ஞர் அணி நிர்­வா­கி­களை நீங்­க­ளும் சந்­தித்து அவர்­களை ஊக்­கு­வி­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் நீங்­கள் பலர் பி.எல்.ஏ.-2, பி.எல்.சி-க­ளாக இருக்­கி­றீர்­கள். அந்­தந்­தப் பொறுப்­பில் மிக­வும் கவ­ன­மாக நம் செயல்­பா­டு­கள் இருக்க வேண்­டும். உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் உங்­கள் தொகு­தி­யில் இளை­ஞர் அணி நிர்­வா­கி­க­ளின் பணி தனி­யா­கத் தெரிய வேண்­டும். களத்­தில் மட்­டும் இல்­லா­மல் அந்­தப் பணி தேர்­தல் முடி­வி­லும் தனி­யா­கத் தெரிய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நான் உங்­க­ளி­டம் எல்­லாம் கேட்­டுக்­கொள்­வது மக்­க­ளு­டன் நீங்­கள் அனை­வ­ரும் நேர­டித் தொடர்­பில் இருங்­கள். நீங்­கள் நேர­டித் தொடர்­பில் மக்­க­ளு­டன் இருந்­தீர்­கள் என்­றால் நிச்­ச­யம் அவர்­கள் நம்­பிக்­கையை நீங்­கள் பெற்­று­வி­டு­வீர்­கள். மக்­க­ளின் நம்­பிக்­கையை ஒரு முறை நீங்­கள் பெற்­று­விட்­டீர்­கள் என்­றால் அது உங்­க­ளின் எதிர்­கா­லத்­துக்கு மிகப்­பெ­ரிய ஒரு ஆத­ர­வாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பொது­வாழ்­விற்கு என்று வந்­து­விட்­டோம் என்­றால் மக்­க­ளின் நம்­பிக்­கை­தான் மிக மிக முக்­கி­யம். அத­னால் மக்­க­ளி­டம் பேசும்­போது கவ­ன­மா­கப் பேசுங்­கள். இன்று எல்­லார் கையி­லும் அலை­பேசி இருக்­கி­றது 
எல்­லா­வற்­றை­ யும் எல்­லா­ரும் பதிவு செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். தி.மு.க. நிர்­வாகி அது­வும் குறிப்­பாக இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் யாரா­வது தவ­றா­கப் பேசி­விட மாட்­டார்­களா தவ­றான வார்த்­தை­க­ளைப் பயன்­ப­டுத்­தி­விட மாட்­டார்­களா அதைச் செய்­தி­யாக்கி பெரிய விஷ­யம் ஆக்­கி­விட மாட்­டோமா என்று செய்­தித் தொலைக்­காட்­சி­கள் எல்­லாம் காத்­துக் கொண்­டி­ருக்­கின்­றன. எனவே நம் ஒவ்­வொரு வார்த்­தை­யை­யும் பார்த்­துப் பார்த்­துப் பேச வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">ஆரோக்­கி­ய­மான போட்டி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">யாரு­டைய வாக்­குச்­சா­வ­டி­யில் யார் அதிக வாக்கு வாங்­கித் தரப்­போ­கி­றீர்­கள் என்று உங்­க­ளுக்­குள் ஓர் ஆரோக்­கி­ய­மான போட்டி இருக்க வேண்­டும். நான் இந்­தத் தெரு­வுக்­குப் பொறுப்பு,நான் இந்த குடும்­பங்­க­ளுக்கு நான் பொறுப்பு, இந்த 100 வாக்­கு­க­ளுக்கு நான் பொறுப்பு என்று உங்­க­ளுக்­குள் திட்­ட­மிட்டு, உத்­தி­யோடு, கவ­ன­மா­கச் செய்­தீர்­கள் என்­றால் நுண் அள­வில் இறங்­கிப் பணி செய்­தோம் என்­றால் நிச்­ச­யம் வெற்றி உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">உதா­ர­ண­மாக ஒரு வாக்­குச்­சா­வ­டி­யில் 1,000 வாக்­கா­ளர்­கள் இருக்­கி­றார்­கள் என்­றால் அந்த 1,000 வாக்­கா­ளர்­க­ளை­யும் நாம் நிச்­ச­யம் ஒரு முறை­யா­வது நம் இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் சந்­தித்­தி­ருக்க வேண்­டும். அதை நீங்­கள் உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்­தப் பணி­களை எல்­லாம் செய்­யும்­போது ஒன்­றிய, நகர, மாவட்­டச் செய­லா­ளர்­கள் அவர்­க­ளு­டன் ஆலோ­சனை செய்து அவர்­க­ளின் வழி­காட்­ட­லு­டன் செய்­யுங்­கள். அவர்­கள் உங்­க­ளைக் கண்­டிப்­பாக வழி­ந­டத்­து­வார்­கள். தேர்­த­லுக்கு இன்­னும் 32 நாட்­கள்­தான் இருக்­கின்­றன. ஒவ்­வொரு நாளும் நீங்­கள் எத்­தனை பேரைச் சந்­தித்­தீர்­கள் எந்­தப் பகு­தி­யில் வாக்கு சேக­ரித்­தீர்­கள் என்­ப­தைக் குறிப்­பேட்­டில் குறித்து, தேதி போட்­டுப் புகைப் படத்­தோடு பதிவு செய்து வையுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நான் மீண்­டும் பிரச்­சா­ரத்­திற்­காக கரூ­ருக்­கும் திருப்­பூ­ருக்­கும் நிச்­ச­யம் வரு­வேன். அப்­பொ­ழுது வரும்­போது நிச்­ச­ய­மாக உங்­க­ளின் குறிப்­பேட்­டைப் பார்த்­துச் சரி­பார்ப்­பேன். நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் நான் இத்­தனை வாக்­கு­களை நான் உறுதி செய்து வைத்­தி­ருக்­கி­றேன், இத்­தனை வாக்­கு­களை நான் வந்து சேமித்து வைத்­தி­ருக்­கி­றேன், இத்­தனை பேரை தி.மு.க ஆத­ர­வா­ளர்­க­ளாக மாற்றி வைத்­தி­ருக்­கி­றேன் என்று நீங்­கள் சந்­தோ­ஷ­மா­கச் சொல்­லும்­போ­து­தான் எனக்கு உண்­மை­யா­கவே அன்று சந்­தோ­ஷம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் செல்­வாக்கு செலுத்­து­ப­வர்­க­ளாக மாற வேண்­டும். நான் மீண்­டும் உங்­க­ளுக்­குச் சொல்­கி­றேன் யார் உண்­மை­யாக உழைக்­கி­றீர்­களோ நிச்­ச­யம் அவர்­க­ளுக்­கான வாய்ப்­பு­கள் உங்­க­ளைத் தேடி வரும். மறு­ப­டி­யும் சொல்­கி­றேன், உங்­கள் உழைப்­பிற்­கான அங்­கீ­கா­ரத்­துக்கு நான் பொறுப்பு. நான் மட்­டும் உங்­க­ளைக் கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றேன் என்று நினைக்­கா­தீர்­கள் நம் தலை­வர் அவர்­களும் உங்­க­ளைக் கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். தலை­வர் உங்­களை மட்­டும் இல்லை என்­னை­யும் சேர்த்து கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். ஒவ்­வொரு நாளும் என்­னென்ன பணி­கள் செய்து கொண்­டி­ருக்­கி­றோம்என்று கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். இது எனக்கு மட்­டும் வைக்­கப்­பட்ட தேர்வு கிடை­யாது, உங்­க­ளுக்­கும் சேர்த்து தான். நாம் இரண்டு பேரும் சேர்ந்­து­தான் அந்­தத் தேர்வை எழு­தப்­போ­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நிச்­ச­ய­மாக தேர்ச்சி பெறு­வோம். ஆனால் சாதா­ர­ண­மா­கத் தேர்ச்சி பெற்­றால் நமக்கு அழகா? சிறப்­புத் தேர்ச்சி பெற வேண்­டும். தேர்ச்சி பெற்­றுக் காட்ட வேண்­டும். அப்­பொ­ழு­து­தான் இளை­ஞர் அணிக்­குப் பெருமை. அதை நீங்­கள் செய்­வீர்­கள் என்­கின்றஎன்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தி.மு.க. காரன் என்­றால் எல்­லா­ரும், எதிர்க்­கட்­சிக்­கா­ரன் கூட என்ன தெரி­யுமா சொல்­வான்? ‘தேர்­தல் வேலை என்று வந்­து­விட்­டால் தி.மு.க. காரன் சிங்­கிள் டீயைக் குடித்­து­விட்டு அச­ரா­மல் வேலை பார்க்­கி­றான்ப்பா,’ என்று எதிர்க்­கட்­சி­கள் சொல்­வார்­கள். அவர்­களை நாம் பேச வைக்க வேண்­டும். என்ன சொல்ல வைக்க வேண்­டும்? ‘சிங்­கிள் தக­வல் தலை­மை­யி­ட­மி­ருந்து வந்­தால் போதும், 234 தொகு­தி­யி­லும் இளை­ஞர் அணி தம்­பி­மார்­கள் வாக்­குச்­சா­வடி வரைக்­கும் இறங்கி வேலை பார்த்­தார்­கள்’ என்று அவர்­க­ளைச் சொல்ல வைக்க வேண்­டும்.தமிழ்­நாடு என்­றுமே தலை­கு­னி­யாது என்­பதை நம் தலை­வர் திரும்­பத் திரும்­பச் சொல்­கி­றார் என்­றால், அதை நாம் களத்­தில் செய்து காட்ட வேண்­டும். தலை­வர் சொல்­கி­றார், ‘தமிழ்­நாடு என்­றுமே டெல்­லிக்கு அவுட் ஆப் கண்ட்­ரோல்­தான்.’ அதை பல­முறை தமிழ்­நாட்டு மக்­கள் நிரூ­பித்­தி­ருக்­கி­றார்­கள். அதை மீண்­டும் நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தலை­வர் நமக்கு இலக்கு கொடுத்­தி­ருக்­கி­றார். ‘வெல்­வோம் இரு­நூறு, படைப்­போம் வர­லாறு’ என்று. ஆனால் நான் சொல்­கி­றேன், அடுத்த 32 நாட்­கள் களத்­தில் இறங்­கிச் சரி­யாக வேலை செய்­தோம் என்­றால், பிரச்­சா­ரத்­தைச் சரி­யாக மேற்­கொண்­டோம் என்­றால், 200 அல்ல, 234 தொகு­தி­யி­லும் நிச்­ச­யம் தி.மு.க கூட்­டணி வெற்றி பெறும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அந்த வெற்­றி­யைத் திருப்­பூர், கரூர் மாவட்­டங்­க­ளில் இருந்து நாம் தொடங்க வேண்­டும். கரூர் மாவட்­டம் ஏற்­க­னவே 100 சத­வி­கித வெற்றி பெற்­றி­ருக்­கோம். இருந்­தா­லும் இந்த முறை மெத்­த­ன­மாக இருந்­து­வி­டக்­கூ­டாது, ஜாக்­கி­ர­தை­யாக இருக்க வேண்­டும். சென்ற முறை வாங்­கிய வாக்கு வித்­தி­யா­சத்தை விட அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­துக்கு நாம் இலக்கு வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">திருப்­பூர் மாவட்­டத்­தில் இருக்­கக்­கூ­டிய தாரா­பு­ரம், காங்­கே­யம், திருப்­பூர் தெற்கு தொகு­தி­க­ளி­லும், சென்ற முறை தவ­ற­விட்ட பல்­ல­டம், அவி­னாசி, திருப்­பூர் வடக்கு, உடு­ம­லைப்­பேட்டை, மடத்­துக்­கு­ளம் தொகு­தியை நாம் இந்த முறை தவ­ற­விட்­டு­வி­டக் கூடாது. மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நாம் ஆட்சி அமைக்­கப் போவது உறுதி. தி.மு.க ஏழா­வது முறை­யாக ஆட்சி அமைக்­கப் போவது உறுதி. நம் தலை­வர் உறு­தி­யாக இரண்­டா­வது முறை­யாக முத­ல­மைச்­சர் பொறுப்­பில் அம­ரப் போவது உறுதி. அந்த வெற்­றிக்கு இளை­ஞர் அணி­யின் பங்­க­ளிப்பு மிக மிக முக்­கி­யம் என்று எல்­லா­ரை­யும் பேச வைக்க வேண்­டும். ‘இளை­ஞர் அணி தம்­பி­மார்­கள் சிறப்­பாக வேலை பார்த்­தார்­கள், தி.மு.க இளை­ஞர் அணிக்கு நிக­ராக ஆள் இல்லை’ என்­பதை மீண்­டும் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும். வெற்றி என்­றால் அது சாதா­ரண வெற்­றி­யாக இருக்­கக்­கூ­டாது. எல்­லா­ரும் வியந்து பேசும் அள­விற்கு மிகப்­பெ­ரிய வெற்­றி­யாக இருக்க வேண்­டும். அடுத்த 32 நாட்­க­ளுக்­குத் தேர்­தல் மட்­டும்­தான் நம் கண்­க­ளுக்­குத் தெரிய வேண்­டும். ஆகவே இதை மன­தில் வைத்­துக்­கொண்டு உங்­கள் பணி­க­ளைச் செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்­னொரு முக்­கி­ய­மான விஷ­யம், தேர்­தல் நெருங்க நெருங்க நிறை­யத் தேர்­தல் கருத்­துக்­க­ணிப்பு எல்­லாம் வரும். அது­வும் இந்­தக் கருத்­துக்­க­ணிப்பு எல்­லாம் பார்த்­தீர்­கள் என்­றால், இப்­பொ­ழுது எல்­லாக் கருத்­துக்­க­ணிப்­பி­லும் தி.மு.க தான்வெற்றி, தி.மு.க.தான் அடுத்த ஆட்சி அமைக்­கப் போகி­றது என்று தொடர்ந்து சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அதைப் பார்க்­கும்­போது மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது. ஆனால் தன்­னம்­பிக்­கை­யோடு இருக்­க­லாம், ஆனால் அதி­கப்­ப­டி­யான தன்­னம்­பிக்­கை­யில் இருக்­கக்­கூ­டாது. கருத்­துக்­க­ணிப்­பில் என்ன சொல்­கி­றார்­களோ அதை இரண்டு மடங்­காக மாற்­றிக் காட்ட வேண்­டும். அது­தான் தி.மு.க. இளை­ஞர் அணி­யின் வெற்றி. நம்மை அழித்­து­வி­டு­வோம், நம்மை ஒழித்­து­வி­டு­வோம் என்று இன்று புதிது புதி­தா­கக் கிளம்பி வரு­வார்­கள். ஏற்­க­னவே இருப்­ப­வர்­கள் எல்­லாம் சொல்­வார்­கள். அவர்­க­ளைப் பற்றி எல்­லாம் நாம் கவ­லைப்­பட வேண்­டாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அவர்­க­ளுக்­கெல்­லாம் பேர­றி­ஞர் அண்ணா 1940-களில் சொல்­லி­விட்­டார். என்ன தெரி­யுமா சொல்­லி­யி­ருக்­கி­றார்? ‘தி.மு.க-வை அழிக்க வேண்­டும் என்று பல பேர் கிளம்பி வரு­வார்­கள். தி.மு.க-வை அழிக்க வேண்­டும் என்று நான்கு அடிக்­குக் குழி வெட்­டு­வார்­கள். அவர்­கள் குழி வெட்­டிக்­கொண்­டி­ருக்­கும் போதே தி.மு.க ஆறு அடிக்கு வளர்ந்­து­வி­டும். உடனே அவர்­கள் ஆறு அடிக்­குக் குழி வெட்ட இறங்­கு­வார்­கள், அதற்­குள் தி.மு.க 12 அடிக்கு வளர்ந்­து­வி­டும். நீங்­கள் வெட்டவெட்ட நாங்­கள் வளர்ந்­து­கொண்டே இருப்­போம். உங்­க­ளால் எந்த நாளி­லும் தி.மு.க-வை நெருங்க முடி­யாது, வீழ்த்த முடி­யாது’ என்று பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் அன்றே சொல்­லி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எனவே, அதைமட்­டும் மன­தில் வைத்­துக்­கொண்டு தேர்­தல் பணி­க­ளில் நாம் ஈடு­ப­டு­வோம் என்று கூறிக்­கொண்டு, மீண்­டும் பிரச்­சா­ரத்­தின்­போது வரு­வேன், உங்­கள் மாவட்­டத்­திற்கே வந்து உங்­க­ளை­யெல்­லாம் மீண்­டும் நான் சந்­திப்­பேன் என்­ப­தை­யும் தெரி­வித்­துக் கொண்டு, இந்த ஆலோ­ச­னைக் கூட்­டத்தை இவ்­வ­ளவு சிறப்­பாக ஏற்­பாடு செய்­தி­ருக்­கக்­கூ­டிய மாவட்ட கழக நிர்­வா­கத்­துக்­கும், வந்­தி­ருக்­கக்­கூ­டிய அனைத்து நிர்­வா­கி­க­ளுக்­கும் மீண்­டும்என் நன்­றி­யைத் தெரி­வித்து, ‘வெல்­வோம் இரு­நூறு, படைப்­போம் வர­லாறு’ என்று கூறிக்­கொண்டு இந்த வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அமைச்­சர்­கள் மு.பெ.சாமி­நா­தன், கயல்­விழி செல்­வ­ராஜ், சக்­க­ர­பாணி, மண்­டல பொறுப்­பா­ளர் செந்­தில் பாலாஜி, மாவட்­டக் கழ­கப் பொறுப்­பா­ளர்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் செல்­வ­ராஜ், இல.பத்­ம­நா­பன், மாந­கர மேயர் தினேஷ், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈஸ்­வ­ர­சாமி, இளை­ஞர் அணி­யின் மாநி­லத் துணைச் செய­லா­ளர் கே.இ.பிர­காஷ் எம்.பி, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் இளங்­கோ­வன், சிவ­கா­ம­சுந்­தரி, மாந­க­ரச் செய­லா­ளர்­கள் கன­க­ராஜ், தங்­க­ராஜ், நெச­வா­ளர் அணி­யின் தலை­வர் நன்­னி­யூர் ராஜேந்­தி­ரன், செய­லா­ளர் பரணி மணி, கழக அணி­க­ளின் மாநில நிர்­வா­கி­கள் மணி­ராஜ், முனை­வர் ஜான், கேச­வன், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தின­க­ரன், அம்­பால் நந்­த­கு­மார், பொள்­ளாச்சி சித்­திக், சூர்யா கிருஷ்­ண­மூர்த்தி, மாந­கர மேயர் கவிதா கணே­சன், இளை­ஞர் அணி மாநி­லத் துணைச் செய­லா­ளர்­கள் சீனி­வா­சன், ஆனந்­த­கு­மார், திருப்­பூர் மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் ஜெயக்­கு­மார், கரூர் மாவட்ட அமைப்­பா­ளர் சக்­தி­வேல், மாந­கர அமைப்­பா­ளர் கராத்தே பூபதி, எம்.எஸ்.ஆர்.ராஜ் என்­கிற மணி­கண்ட பிரபு, முத்­துக்­கு­மார் உள்­பட கழக முன்­ன­ணி­யி­னர் பல­ரும்கலந்­து­ கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>