<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,135,959,1492" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Mar 26 2026 03:59:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260326T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="26032026-VLR-07" position.sequence="07" ex-ref="26032026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="141">நம் தி.மு.க.தான் மீண்­டும் சாம்­பி­யன் என்­பதை நாம் நிரூ­பிக்க வேண்­டிய தேர்­தல்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">திண்­டுக்­கல்­லில் நடை­பெற்ற ‘களத்­தில் இளை­ஞர் அணி’ கூட்­டத்­தில் –</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="44">துணை முத­ல­மைச்­சர்  உத­ய­நிதி ஸ்டாலின் சிறப்­புரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Dinducalspeech_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Dinducalspeech1_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="QuotesNew2_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">திண்­டுக்­கல், மார்ச் 26 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">திண்­டுக்­கல்­லில் ‘களத்­தில் இளை­ஞர் அணி’ தேர்­தல் பிரச்­சா­ரம் குறித்த ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற்­றது. இதில் தேனி மற்­றும் திண்­டுக்­கல் மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மாவட்ட – மாந­கர – ஒன்­றிய – நகர – பகுதி – பேரூர் அமைப்­பா­ளர், துணை அமைப்­பா­ளர்­க­ளு­டன்  கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் கலந்­து­கொண்டு சிறப்­பு­ரை­ யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">அப்­போது அவர், ‘‘இன்று பா.ஜ.க. ஒரு அணி­யாக இறங்­கி­யி­ருக்­கி­றது, அது போதாது என்று பா.ஜ.க.வின் பி–அணி, சி–அணி, டி–அணி என பல அணி­க­ளைச் சேர்த்­து­கொண்டு வரு­கி­றது. இப்­படி எத்­தனை அணி­கள் வந்­தா­லும், நம் தலை­வர்­தான் சாம்­பி­யன், நம் தி.மு.க.தான் மீண்­டும் சாம்­பி­யன் என்­பதை நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டிய தேர்­தல்,  வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­தல்’’  என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்­றிய உரை­ வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">ஒருங்­கி­ணைந்த திண்­டுக்­கல் மாவட்­டம், ஒருங்­கி­ணைந்த தேனி மாவட்­டத்­தின் நிர்­வா­கி­கள், இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள், உங்­கள் அனை­வ­ரை­யும் ஒரே இடத்­தில் சந்­திப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன். இந்­தத் தேனி மாவட்­ட­மும், திண்­டுக்­கல் மாவட்­ட­மும் என்­றைக்­கும் கழ­கத்­தின் கோட்டை என்று சொன்­னால் அது மிகை­யா­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இந்த இரண்டு மாவட்­டங்­க­ளும் நம் கழ­கத் தலை­வர் என்­ன­வெல்­லாம் உத்­த­ரவு போடு­கின்­றாரோ, அதை உட­ன­டி­யாக 100 சத­வி­கி­தம் செய்­கின்ற மாவட்­டங்­கள். அதற்கு ஒரு சிறந்த உதா­ர­ணம் கடந்த பிப்­ர­வரி மாதம் விரு­து­ந­க­ரில் மிகப் பெரிய நிர்­வா­கி­கள் சந்­திப்பை, மாநாடு மாதிரி நடத்­தி­னோம். அந்த நிர்­வா­கி­கள் சந்­திப்­புக்கு இந்­தத் தேனி மாவட்­டத்­தி­லி­ருந்­தும் திண்­டுக்­கல் மாவட்­டத்­தி­லி­ருந்­தும் அனைத்து நிர்­வா­கி­க­ளும் வந்து சிறப்­பா­கக் கலந்­து­கொண்­டீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">நான் பல­முறை சொல்­வ­துண்டு, எத்­த­னையோ நிகழ்ச்­சி­கள், சார்பு அணி­க­ளை­யெல்­லாம் சந்­திக்­கி­றோம், அண்­ணன் சக்­க­ர­பாணி சொன்­னது மாதிரி கடந்த 10 நாட்­க­ளா­கப் பல மாவட்­டங்­க­ளுக்­குச் சென்று இளை­ஞர் அணி மட்­டு­மல்ல, சார்பு அணி நிர்­வா­கி­க­ளை­யும் சந்­தித்­து­விட்டு வரு­கி­றேன். எத்­த­னையோ நிகழ்ச்­சிக்­குச் சென்­றா­லும், இளை­ஞர் அணி நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு நிர்­வா­கி­க­ளான உங்­க­ளை­யெல்­லாம் சந்­திக்­கும்­போது என் குடும்ப நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு, என் சகோ­த­ரர்­க­ளைச் சந்­திக்­கின்ற அந்த நெகிழ்வு எனக்கு ஏற்­ப­டும். அந்த உணர்ச்­சி­யோடு நான் இங்கே உங்­க­ளைச் சந்­திக்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">‘களத்­தில் இளை­ஞர் அணி’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இன்று முக்­கி­ய­மான ஒரு தரு­ணத்­தில் நாம் சந்­திக்­கி­றோம். இங்கே  ஐ.பி.செந்­தில் அவர்­கள் சொன்­னது மாதிரி, நம் கைக­ளில் இன்­னும் 29 நாட்­கள் இருக்­கின்­றன. தேர்­தல் தேதி ஏப்­ரல் 23 என அறி­விக்­கப்­பட்­டு­விட்­டது. இன்று 24–ஆம் தேதி, நம்ம கையில் இன்­னும் 29 நாட்­கள் இருக்­கின்­றன. அதற்கு நாம் தயா­ராக வேண்­டும். கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போது ‘களத்­தில் இளை­ஞர் அணி’ என்று ஒரு முன்­னெ­டுப்பை ஆரம்­பித்து, நீங்­கள் அனை­வ­ரும் களத்­தில் இறங்­கிப் பிரச்­சா­ரத்தை மேற்­கொண்­டீர்­கள். வாக்­கா­ளர்­க­ளைச் சந்­தித்­தீர்­கள், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு நம் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்­கெல்­லாம் நீங்­கள் வாக்­குச் சேக­ரித்­தீர்­கள். உங்­க­ளின்  உழைப்பு, உங்­க­ளின் பிரச்­சா­ரம்­தான் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் 100 சத­வி­கித வெற்­றியை நாம் பெற்­றுத் தந்­தது. அந்த வெற்­றிக்கு நீங்­கள் ஒரு மிக மிக முக்­கி­ய­மான கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இப்­போது இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் இளை­ஞர் அணி ஒரு விஷ­யத்­தைக் கையில் எடுத்­துக்­கொண்­டார்­கள் என்­றால், அதைச் சாதிக்­கா­மல் விட­மாட்­டார்­கள், 100% வெற்­றி­யைத் தேடிக் கொடுப்­பார்­கள் என்­பதை மீண்­டும் நிரூ­பிக்­க­வேண்­டிய கட்­டா­யம் நமக்கு வந்­தி­ருக்­கி­றது. இன்று இந்­தி­யா­வில் பல கட்­சி­கள் பூத் கமிட்டி அமைப்­ப­தற்கே திண்­டா­டிக்­கொண்டு, திண­றிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். ஆனால், தி.மு.க–வில் நம் இளை­ஞர் அணி­யில் இன்று பூத்­துக்கு ஒரு இளை­ஞர் அணி நிர்­வா­கியை நாம் நிய­மித்­துள்­ளோம். இவ்­வ­ளவு பெரிய ஒரு இளை­ஞர் படை­யைத் தேர்வு செய்து வைத்­தி­ருக்­கி­றோம். இந்த இளை­ஞர் படை­யைத் தேர்­தல் என்­கின்ற  போரில் நாம் பயன்­ப­டுத்தி, அதில் வெற்­றியை நாம் பெற்­றாக வேண்­டும். அதற்கு தயார்­ப­டுத்­து­வ­தற்­கான பாச­றைக் கூட்­டம்­தான் இன்று இந்­தக் கூட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">தி.மு.க–வில் 25 அணி­கள் இருக்­கின்­றன. ஆனால், டாக்­டர் கலை­ஞர் அவர்­கள், ``எத்­தனை அணி­கள் இருந்­தா­லும், இளை­ஞர் அணி­தான் முதன்­மை­யான அணி, முதல் அணி. தலை­வர் என்ன சொன்­னா­லும், அதை களத்­தில் இறங்­கிச் செயல்­ப­டுத்­து­கின்ற முதல் அணி இளை­ஞர் அணி’’ என்று கலை­ஞர் அவர்­கள் அடிக்­கடி பெரு­மை­யா­கச் சொல்­வார். கலை­ஞர் சொன்­னதை இன்று நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டிய நேரம் வந்­தி­ருக்­கி­றது. இந்­தத் தேர்­த­லி­லும் நம் தலை­வர்­தான் நிச்­ச­யம் வெற்றி பெறப்­போ­கி­றார். அதற்கு இளை­ஞர் அணி தம்­பி­மார்­கள், இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் நாம் கடு­மை­யாக உழைத்­தோம் என்­கின்ற பெருமை நமக்கு வர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இளை­ஞர் அணி பயிற்­சிக்­க­ளம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இளை­ஞர் அணி­யைப் பொறுத்­த­வ­ரைக்­கும் தாய்க்­க­ழ­கத்­தில் பணி­யாற்­று­வ­தற்கு ஒரு பயிற்­சிக்­க­ளம் மாதிரி. நாம் எவ்­வ­ளவு பெரிய கிரிக்­கெட் வீர­ராக வேண்­டு­மா­னா­லும் இருக்­க­லாம். ஆனால், எடுத்த உடனே நமக்கு முதன்மை ஆட்­டத்­தில் ஆட வாய்ப்பு கொடுக்க மாட்­டார்­கள். முத­லில் சோதனை செய்­வார்­கள். இவன் எப்­படி ஆடு­கி­றான், இவ­னுக்கு உண்­மை­யா­கவே ஆடத் தெரி­கி­றதா, இவன் ஆக்­ரோ­ஷ­மாக ஆடு­கி­றாரா, இவன் தொடக்க ஆட்­டக்­கா­ரரா, எந்த நிலை­யில் நன்­றாக ஆடு­கி­றான் என்­ப­தைப் பார்ப்­ப­தற்கு வலைப்­ப­யிற்சி கொடுப்­பார்­கள். அப்­ப­டிப்­பட்ட ஒரு வலைப்­ப­யிற்­சி­தான் நமக்கு இளை­ஞர் அணி வேலை­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இளை­ஞர் அணி­யில் நாம் செய்­கின்ற இந்த வேலை­கள்­தான் நாளைக்கு உங்­க­ளின் வளர்ச்­சி­யைத் தீர்­மா­னிக்­கப்­போ­கின்ற பணி­கள். நமக்கு வேலை கொடுக்­கி­றார்­களோ இல்­லையோ தொடர்ந்து இளை­ஞர் அணி­யில் பல்­வேறு பணி­க­ளைச் செய்து வரு­கி­றோம், கழ­கப் பணி­க­ளைச் செய்து வரு­கி­றோம், இளை­ஞர் அணி பணி­க­ளைச் செய்து வரு­கி­றோம், எத்­த­னையோ பணி­கள் நடந்­தி­ருக்­கின்­றன. 2019–லிருந்து தொடர்ந்து களத்­தில் இருந்து வரு­கி­றோம், பிரச்­சா­ரப் பணி­க­ளை­யும் மேற்­கொள்­கி­றோம். ஆனால், இப்­போது கடைசி நேரத்­தில் நாம் இன்­னும் தீவி­ர­மாக உழைக்க வேண்­டும். அப்­போ­து­தான் அது முழுப்­ப­ல­னைத் தரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இத்­தனை நாள் பணி­யாற்­றி­ய­தற்­கான முழுப்­ப­ல­னை­யும் நாம் அடைய வேண்­டும் என்­றால், கடைசி நிமி­டத்­தில் நாம் இன்­னும் அதி­தீ­வி­ர­மாக வேலை செய்ய வேண்­டும். ‘பைனல் புஸ்’ (Final Push) என்று ஆங்­கி­லத்­தில் சொல்­வார்­கள், கடைசி நேரத்­தில் அந்­தக் கூடு­தல் முயற்சி இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">மக்­க­ளைச் சந்­திக்­கி­றோம், சந்­திப்­ப­தற்­குத் தயா­ரா­கி­விட்­டோம். எந்­தத் தைரி­யத்­தில் மக்­க­ளைச் சந்­திக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இன்று உயர்­கல்வி சேர்க்கை விகி­தம் (Gross Enrollment Ratio – GER) என்று சொல்­வார்­கள். பள்­ளிக்­கூ­டம் முடித்­து­விட்டு எத்­தனை பேர் உயர்­கல்வி படிக்­கப் போகி­றார்­கள் என்­கின்ற புள்­ளி­வி­வ­ரம்­தான் GER என்று சொல்­வார்­கள். ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வின் ஜி.இ.ஆர். 26 சத­வி­கி­தம். ஆனால், தமிழ்­நாட்­டின் ஜி.இ.ஆர். 50 சத­வி­கி­தம். இந்­தி­யா­வி­லேயே முத­லி­டம் நம் தமிழ்­நாடு. அதை இன்­னும் ஊக்­கு­விக்க வேண்­டும் என்று அர­சுப் பள்­ளி­யில் படித்து எந்­தக் கல்­லூ­ரி­யில் சேர்ந்­தா­லும், அது தனி­யார் கல்­லூ­ரி­யாக இருந்­தா­லும் சரி, எந்­தப் பாடப்­பி­ரி­வில் சேர்ந்­தா­லும், அவர்­க­ளுக்­குக் கல்வி ஊக்­கத்­தொ­கை­யாக மாதம் 1,000 ரூபாய் ‘தமிழ்ப் புதல்­வன்’ திட்­டம், ‘புது­மைப் பெண்’ திட்­டம் மூலம் நம் அரசு கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றது. 13 லட்­சம் மாணவ, மாண­வி­கள் பயன்­பெற்று வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">300 விளை­யாட்டு வீரர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு அரசு வேலை­வாய்ப்­பில் அ.தி.மு.க ஆட்­சி­யில் 3 சத­வி­கித இட­ஒ­துக்­கீட்­டில் 2 பேருக்­கு­தான் அரசு வேலை வழங்­கி­னார்­கள்.  ஆனால், நாம் கடந்த இரண்டு வரு­டத்­தில் மட்­டும் 300 விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு அரசு வேலை­வாய்ப்பை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தி­ருக்­கி­றோம். எந்த ஆட்­சி­யி­லும் செய்­தது கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">‘கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத்’ திட்­டம். அது தேர்­தல் அறிக்­கை­யில் நாம் சொன்ன திட்­டம். அதை­யும் கடந்த மூன்று வரு­ட­மா­கக் கொடுத்து வரு­கி­றோம். ஒரு கோடியே 32 லட்­சம் மக­ளி­ருக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் நம் தலை­வர் கொடுத்­தி­ருக்­கி­றார். அந்­தத் திட்­டத்­தால் மக­ளிர் மத்­தி­யில் மிகப் பெரிய வர­வேற்பு. அதை எப்­ப­டி­யா­வது நிறுத்­தி­வி­ட­லாம், தேர்­தல் நேரத்­தி­லா­வது நிறுத்த வேண்­டும் என்று சில மாநி­லங்­க­ளில் நீதி­மன்­றத்­துக்­குச் சென்று நிறுத்­தி­யி­ருக்­கி­றார்­கள். மூன்று மாதங்­க­ளுக்கு நிறுத்த வேண்­டும் என்று முயற்சி செய்­தார்­கள். ஆனால், நம் தலை­வர் `நான் ஆயி­ரம் ரூபாய் கொடுப்­ப­தைத் தடுக்­கப் பார்க்­கி­றாயா? இப்­பொ­ழுது எப்­படி நிறுத்­து­வாய் பார்க்­க­லாம், நான் 5,000 ரூபாய் கொடுக்­கி­றேன்’ என்று இன்று, ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்­குக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். ஒரு கோடியே 31 லட்­சம் குடும்­பங்­க­ளுக்கு 5,000 ரூபாய் நம் தலை­வர் அவர்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். அது­மட்­டு­மல்ல, நம் தலை­வர் இன்­னொரு வாக்­கு­று­தி­யும் கொடுத்­தி­ருக்­கி­றார். மக­ளிர் உரி­மைத் தொகை திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடனே, 1,000 ரூபாயை உயர்த்தி 2,000 ரூபாய் கொடுக்­கி­றேன் என்­கின்ற வாக்­கு­று­தி­யும் நம் தலை­வர் கொடுத்­தி­ருக்­கி­றார். இப்­ப­டிப் பல்­வேறு திட்­டங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">‘தாயு­மா­ன­வர்’ என்று ஒரு திட்­டம். முதி­ய­வர்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் இனி­மேல் வெயி­லில் வந்து ரேஷன் கடை­யில், வரி­சை­யில் நிற்­கத் தேவை­யில்லை. அவர்­க­ளின் ரேஷன் பொருள்­கள் அவர்­க­ளின் வீட்­டிற்கே சென்று நம் அரசு கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றது. கிட்­டத்­தட்ட 28 லட்­சம் பேர் இந்­தத் திட்­டத்­தின் மூலம் பயன்­பெ­று­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">திண்­டுக்­கல், தேனி திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">குறிப்­பாக, இந்­தத் திண்­டுக்­கல், தேனி மாவட்­டங்­க­ளுக்கு என்­னென்ன திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தி­யுள்­ளோம் என்­பதை நீங்­கள் தெரிந்­து­கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">ஒட்­டன்­சத்­தி­ரம் – பழனி நெடுஞ்­சாலை இன்று 175 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்டு நான்கு வழிச் சாலை­யாக தரம் உயர்த்­தப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">திண்­டுக்­கல் – நத்­தம் சாலை­யும் நான்கு வழிச் சாலை­யாக உயர்த்­தப்­பட்­டி­ருக்­கி­றது. 70 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பழனி அரசு மருத்­து­வ­மனை இன்று தரம் உயர்த்­து­கின்ற பணி நடை­பெற்­றுக்­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">சுமார் 100 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பழனி கோயில் திருப்­ப­ணி­கள் இன்று நடை­பெற்று வரு­கின்­றன. தேனி­யில் 70 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் உண­வுப் பூங்கா அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">5 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் குமு­ளி­யில் புதிய பேருந்து நிலை­யம் அமைக்­கப் பட்­டி­ருக்­கி­றது. ஆண்­டி­பட்டி, தேனி ரயில் நிலை­யங்­க­ளுக்கு இடையே புதிய ரயில்வே மேம்­பா­லம் நம் அரசு கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">அணைக்­க­ரைப்­பட்டி முதல் போடி­நா­யக்­க­னூர் வரைக்­கும் 35 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் புற­வ­ழிச் சாலை. 100 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மதுரை – கொச்சி சாலை­யில் மேம்­பா­லம் கட்­டு­கின்ற பணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இப்­படி, தேனி மாவட்­டத்­துக்­கும் திண்­டுக்­கல் மாவட்­டத்­துக்­கும் நாம் பல்­வேறு பணி­க­ளைச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம். இதை­யெல்­லாம் மக்­க­ளி­டம் கொண்டு சேர்க்க வேண்­டிய கடமை இன்று நம்­மி­டம் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">மோடி அவர்­க­ளும், அமித்ஷா அவர்­க­ளும் தமிழ்­நாட்­டுக்கு வந்து ஒரு நான்கு அடி­மைக் கட்­சி­களை, கூட வைத்­துக்­கொண்டு இருந்­தால், தமிழ்­நாட்­டுக்­குள்ளே எப்­ப­டி­யா­வது நுழைந்­து­வி­ட­லாம் என்று முயற்சி செய்­கி­றார்­கள். நான் உறு­தி­யா­கச் சொல்­கி­றேன், கருப்பு சிவப்பு வேட்டி கட்­டிய கடைசி உடன்­பி­றப்­பு­கள் இருக்­கின்ற வரைக்­கும், நம் இளை­ஞர் அணி தம்­பி­மார்­கள் இருக்­கின்ற வரைக்­கும் நிச்­ச­யம் அதை நடக்க விட­மாட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">நீங்­கள் சூழ்ச்சி பண்ணி குரளி வித்­தை­யெல்­லாம் காட்டி வட­நாட்­டில் நீங்­கள் ஜெயிக்­க­லாம். ஆனால், தமிழ்­நாட்­டி­டுக்­குள் உங்­க­ளின் பருப்பு வேகவே வேகாது. நம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் கட்­டிக் காக்­கப்­ப­டு­கின்ற மாநி­லம் நம் தமிழ்­நாடு. அத­னால்­தான் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் அடிக்­கடி சொல்­கி­றார்.  வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­தல் டெல்லி அணிக்­கும் தமிழ்­நாடு அணிக்­கு­மான தேர்­தல். நிச்­ச­யம் நம் தமிழ்­நாடு அணி வென்று காட்­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">பொது­வாக, நீங்­கள் செய்­தி­க­ளில், தொலைக்­காட்­சி­க­ளில் பார்ப்­பீர்­கள். பிற கட்­சி­யின் தலை­வர்­கள் வேறு கட்­சி­யின் அலு­வ­ல­கங்­க­ளுக்­குச் சென்­றால் அது பெரிய முக்­கி­யச் செய்­தி­யாக போடு­வார்­கள், தலைப்­புச் செய்­தி­க­ளா­கப் போடு­வார்­கள். ஆனால், இரண்டு நாளாக நீங்­கள் செய்­தி­யில் பார்த்­துக்­கொண்டு இருந்­தி­ருப்­பீர்­கள். அ.தி.மு.க–வின் பொதுச் செய­லா­ளர்  எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் அ.தி.மு.க அலு­வ­ல­கத்­துக்கு சென்­றி­ருக்­கி­றார் என்­ப­து­தான் இப்­பொ­ழுது இரண்டு நாளாக முக்­கி­யச் செய்தி. ஏனென்­றால், இவ்­வ­ளவு நாளாக அவர் அ.தி.மு.க அலு­வ­ல­கத்­திற்கே செல்­ல­வில்லை. அவர் டெல்­லி­யில் இருக்­கக்­கூ­டிய அமித்ஷா அலு­வ­ல­கத்­துக்­கு­தான் சென்­று­கொண்டு இருந்­தார். அ.தி.மு.க கார­ருக்­கும் சேர்த்து, நாம்­தான் குரல் கொடுக்க வேண்­டி­ய­தாக இருக்­கி­றது. அவர்­க­ளின் உரி­மை­யை­யும் நாம்­தான் காப்­பாற்ற வேண்­டி­ய­தாக இருக்­கி­றது. நம் தலை­வர்­தான் தொடர்ந்து சொல்­லிக்­கொண்டே இருந்­தார். உங்­கள் அலு­வ­ல­கம் சென்னை, ராயப்­பேட்­டை­யில் இருக்­கி­றது, அங்கே செல்­லுங்­கள். ஏன் திருட்­டுத்­த­ன­மாக பத்து நாளைக்கு ஒரு­முறை டெல்­லிக்­குச் செல்­கி­றீர்­கள்? இதற்கு முன்­பா­வது முகத்தை மூடிக்­கொண்டு போய் கொண்டு இருந்­தார், இப்­பொ­ழுது முகத்தை திறந்து வைத்­துக்­கொண்டே போகி­றோர். நம் தலை­வர்­தான் கேட்­டார்­கள், `ராயப்­பேட்­டை­யில் உங்­க­ளுக்கு ஒரு அலு­வ­ல­கம் இருக்­கி­றது மறந்­து­வி­டா­தீர்­கள்’ என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இன்று அ.தி.மு.க கூட்­ட­ணிக் கட்­சி­கள் எல்­லாம் செல்ல ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. இது­தான் இன்று அ.தி.மு.க–வின் நிலைமை. இதை மக்­க­ளி­டம் பேச வேண்­டும். ஏன் இந்த நிலைமை உரு­வா­னது என்­ப­தைப் பற்றி பேசுங்­கள். நிச்­ச­ய­மாக இந்­தத் தேர்­த­லுக்­குப் பிறகு, பத்து தோல்வி பழ­னிச்­சா­மி­யைப் படு­தோல்வி பழ­னிச்­சா­மி­யாக நம் தமி­ழக மக்­கள் மாற்­றிக் காட்­டப்­போ­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">எப்­பொ­ழு­துமே ஒரு புகழ்­வாய்ந்த நிறு­வ­னம் ஒரு பொருளை அறி­மு­கம் செய்­தார்­கள் என்­றால், அந்­தப் பொரு­ளுக்கு மக்­கள் மத்­தி­யில் மிகப் பெரிய வர­வேற்பு இருந்­தது என்­றால், இந்­தப் போட்டி நிறு­வ­னங்­கள் இருப்­பார்­கள் டுபாக்­கூர் நிறு­வ­னம் என்று சொல்­வார்­கள். அவர்­கள் என்ன செய்­வார்­கள் என்­றால், எப்­ப­டி­யா­வது இதை நாம் கைப்­பற்ற வேண்­டும், இதை வைத்து நாம் சம்­பா­திக்க வேண்­டும், இதை வைத்து எப்­ப­டி­யா­வது மக்­களை ஏமாற்ற வேண்­டும் என்று `அசம்­பிள்டு பீஸ்’ தயார் செய்­வார்­கள். `சைனா மேக்’ என்று சொல்­வார்­கள் கேள்­விப்­பட்­டி­ருப்­பீர்­கள். அந்த வகை­யில், இன்று பா.ஜ.க. `சைனா மேக்’ மாதிரி ‘டெல்லி மேக்’ என்று அ.தி.மு.க கூட்­ட­ணி­யைச் அசம்­பிள்டு செய்­தி­ருக்­கி­றார்­கள். அந்­தக் கூட்­ட­ணிக்கு நிச்­ச­ய­மாக வாரன்­டி­யும் கிடை­யாது, கேரன்­டி­யும் கிடை­யாது. தேர்­தல் முடிந்த உடனே பா.ஜ.க அந்­தக் கூட்­ட­ணி­யின் இணைப்­பைத் துண்­டித்­து­வி­டும். இது நிச்­ச­யம் நடக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பீகா­ரில் என்ன நடந்­து­கொண்டு இருக்­கி­றது?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">பீகா­ரில் வெற்றி பெற்­றது  நிதிஷ்­கு­மார் அவர்­கள், பத்து முறை முத­ல­மைச்­சர். இன்று அவரை ஓரங்­கட்­டி­விட்டு அவரை எம்.பி ஆக்­கி­விட்டு, பீகா­ரில் பா.ஜ.க குறுக்கு வழி­யில் ஆட்­சி­யைக் பிடித்­தி­ருக்­கி­றது. பத்து முறை முத­ல­மைச்­ச­ராக இருந்த நிதிஷ்­கு­மா­ருக்கே இந்த நிலைமை என்­றால், பாதம் தாங்கி பழ­னிச்­சாமி நிலை­மையை நாம் யோசித்­துப் பார்க்க வேண்­டும். அ.தி.மு.க. கூட்­டணி இப்­படி இருக்­கி­றது. ஆனால், நம் கூட்­டணி மக்­க­ளால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கூட்­டணி தி.மு.க கூட்­டணி, மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி. இன்று பா.ஜ.க. ஒரு அணி­யாக இறங்­கி­யி­ருக்­கி­றது, அது போதாது என்று பா.ஜ.க.வின் பி–அணி, சி–அணி, டி–அணி என பல அணி­க­ளைச் சேர்த்­து­கொண்டு வரு­கி­றது. இப்­படி எத்­தனை அணி­கள் வந்­தா­லும், நம் தலை­வர்­தான் சாம்­பி­யன், நம் தி.மு.க.தான் மீண்­டும் சாம்­பி­யன் என்­பதை நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டிய தேர்­தல்,  வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­தல் களத்­தில் வெற்றி பெறப்­போ­வது நம் தலை­வர் அவர்­கள்­தான், அதற்கு நம் இளை­ஞர் அணி முழு ஒத்­து­ழைப்பு கொடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">கொள்­கை­யற்ற கூட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">நம் வர­லாறு தெரி­யா­மல், நாம் செய்­து­கொண்டு இருக்­கக்­கூ­டிய சாத­னை­கள் புரிந்­து­கொள்­ளா­மல் சில பேர் மாற்­றுக் கட்­சி­க­ளி­லும் இருப்­பார்­கள். அவர்­க­ளை­யும் கண்­டிப்­பாக நீங்­கள் சென்­ற­டை­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">அதே மாதிரி இப்­பொ­ழுது கொள்­கை­யற்ற ஒரு கூட்­ட­மும் சுற்­றிக்­கொண்டு இருக்­கி­றது. அந்­தக் கொள்­கை­யற்ற கூட்­டத்­தை­யும் கொள்­கைப்­ப­டுத்­து­கின்ற முயற்­சி­யில் நாம் இறங்­கு­வோம். அப்­ப­டிச் சந்­திக்­கும்­போது நம் கொள்­கை­களை அவர்­க­ளி­டம் எடுத்­துச் சொல்­லுங்­கள், நம் சாத­னை­களை எடுத்­துச் சொல்­லுங்­கள். தர­வு­கள் இருக்­கின்­றன. தர­வு­கள் பொய் சொல்­லாது. நம் சாத­னை­கள் அத்­த­னை­யும் தர­வு­க­ளாக இருக்­கின்­றன. முந்­தைய பத்து ஆண்­டுக்­கால அ.தி.மு.க ஆட்­சி­யில் தமிழ்­நாடு எப்­ப­டி­யெல்­லாம் பின்­னுக்­குப் போனது, என்­னென்ன உரி­மை­களை ஒன்­றிய அர­சுக்கு அ.தி.மு.க விட்­டுக் கொடுத்­தார்­கள், கடந்த ஐந்து வரு­டத்­தில் அதை­யெல்­லாம் எப்­படி நாம் மீட்­டெ­டுத்து இருக்­கி­றோம் என்­ப­தனை ஆதா­ரத்­தோடு எடுத்­துச் சொல்­லுங்­கள். எல்­லா­ரை­யும் ஒரே நேரத்­தில் சம்­ம­திக்க வைப்­பது கொஞ்­சம் கடி­னம். ஆனால், அதற்­கான முயற்­சியை நாம் செய்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">அடுத்த 29 நாட்­கள் நீங்­கள் சந்­திக்­கின்ற ஒவ்­வொரு நப­ரும் தேர்­தல் அன்­றைக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும். அதற்­கான முழு வேலை­யில் நாம் இறங்க வேண்­டும். யாரு­டைய வாக்­குச்­சா­வ­டி­யில் யார் அதிக வாக்­கு­கள் வாங்­கித் தரப் போகி­றீர்­கள் என்று உங்­க­ளுக்­குள் ஒரு ஆரோக்­கி­ய­மான போட்டி இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பகிர்ந்­து­கொள்­ளுங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">நீங்­கள் உங்­க­ளின் வேலை­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளுங்­கள். ``இத்­தனை வாக்­கா­ளர்­க­ளுக்கு நான் பொறுப்பு, இந்­தந்­தக் குடும்­பங்­க­ளுக்கு நான் பொறுப்பு, இந்­தத் தெரு­விற்கு நான் பொறுப்பு’ என்று உங்­க­ளுக்­குள் அந்­தத் திட்­டம்­போட்டு உத்­தி­யு­டன், நுண் அள­வில் இறங்­கிப் பணி­யாற்­றி­னீர்­கள் என்­றால் நிச்­ச­யம் வெற்றி உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">நான் எப்­படி உங்­க­ளை­யெல்­லாம் பல­முறை சந்­திக்­கி­றேனோ, அதே மாதிரி வட்­டம் மற்­றும் வாக்­குச்­சா­வடி அள­வில் இருக்­கக்­கூ­டிய இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் பொறுப்­பா­ளர்­களை நீங்­கள் தொடர்ந்து மீண்­டும் மீண்­டும் சந்­தி­யுங்­கள். உங்­க­ளில் பல பேர் பி.எல்.ஏ. 2–க்களாக, பி.எல்.சி.–க்களாக இருப்­பீர்­கள் – அந்­தப் பணி­க­ளை­யும் கவ­ன­மாக மேற்­கொள்­ளுங்­கள். உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில், உங்­கள் தொகு­தி­யில் நம் பணி, இளை­ஞர் அணி பணி தனி­யா­கத் தெரிய வேண்­டும், தனித்­து­வ­மா­கத் தெரிய வேண்­டும். களத்­தில் மட்­டு­மல்ல, தேர்­தல் முடி­வி­லும் இது தெரி­யும். ஏனென்­றால், எந்­தெந்த வாக்­குச்­சா­வ­டி­யி­லி­ருந்து யார் யார் வரு­கி­றீர்­கள் என்­கின்ற பட்­டி­யல் நம் அன்­ப­கத்­தில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">களத்­தில் இளை­ஞர் அணி பணி­க­ளைச் செய்­கின்ற பொழுது, இங்கே வந்­தி­ருக்­கக்­கூ­டிய மாவட்ட, ஒன்­றிய, நக­ரச் செய­லா­ளர்­கள், அவர்­க­ளை­யும் கலந்து ஆலோ­சித்­து­விட்டு அவர்­க­ளின் அனு­ம­தி­யைப் பெற்­று­விட்டு நிச்­ச­யம் அதைச் செய்­யுங்­கள். அவர்­கள் உங்­களை நிச்­ச­யம் வழி­ந­டத்­து­வார்­கள், எந்த விதத்­தி­லும் நிறுத்த மாட்­டார்­கள். அடுத்த 29 நாள் ஒவ்­வொரு நாளும் நீங்­கள் எத்­தனை பேரை சந்­திக்­கி­றீர்­கள், எங்­கெல்­லாம் பிரச்­சா­ரம் செய்­தீர்­கள் என்று தேதி­யு­டன், புகைப்­ப­டத்­து­டன் ஒரு சிறு குறிப்­பேடு பரா­ம­ரி­யுங்­கள். நான் மீண்­டும் பத்து நாளில் இந்த மாவட்­டத்­துக்கு வரு­வேன், தேனிக்­கும் வரு­வேன், நிச்­ச­யம் வரு­வேன். வரும் பொழுது உங்­க­ளின் குறிப்­பேட்டை நிச்­ச­யம் சரி­பார்ப்­பேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல் எனக்கு மட்­டும் இல்லை, உங்­க­ளுக்­கும் சேர்த்து வைக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய ஒரு சோதனை. நாம் நிச்­ச­யம் சரி­யா­கப் பணி­யாற்­றி­னோம் என்­றால் நிச்­ச­யம் வெற்றி பெற்­று­வி­டு­வோம். ஆனால், சாதா­ர­ண­மாக வெற்றி பெற்­றால் போதுமா? மிகச் சிறப்­பாக வெற்றி பெற வேண்­டும். நம்­மீது, இளை­ஞர் அணி மீது தலை­வர் அவர்­கள் மிகுந்த பெரிய நம்­பிக்­கையை வைத்­தி­ருக்­கி­றார். நம் அனைத்து செயல்­க­ளை­யும் தலை­வர் கவ­னித்­துக்­கொண்டு இருக்­கி­றார். உங்­களை மட்­டும் இல்லை, என்­னை­யும் சேர்த்து தலை­வர் கவ­னித்­துக்­கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">தலை­வர் அவர்­கள் நமக்கு ஒரு இலக்கு  கொடுத்­தி­ருக்­கி­றார். ‘வெல்­வோம் இரு­நூறு படைப்­போம் வர­லாறு’ என்று. இரு­நூறு என்­பது இலக்கு, ஆனால் நாம் அடுத்த 29 நாட்­கள் சரி­யாக வேலை பார்த்­தோம் என்­றால் இரு­நூறு இல்லை, 234 தொகு­தி­யி­லும் நிச்­ச­யம் நாம்­தான் வெற்றி பெறப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இங்கே நம் துணைப் பொதுச் செய­லா­ளர்  அண்­ணன் ஐ.பெரி­ய­சாமி அவர்­கள் சொன்­னது மாதிரி சென்ற தேர்­த­லில் திண்­டுக்­கல், தேனி 11 தொகு­தி­க­ளில் ஏழு தொகுதி வெற்றி பெற்­றி­ருக்­கி­றோம். இந்த முறை 11–க்கு 11, 100% வெற்றி பெற்­றாக வேண்­டும். திண்­டுக்­கல், நிலக்­கோட்டை, நத்­தம் சென்ற முறை வெற்றி வாய்ப்பை இழந்­தி­ருக்­கி­றோம். இந்த முறை வெற்றி பெற்­றாக வேண்­டும். அதே மாதிரி சென்ற முறை, தேனி மாவட்­டத்­தில் போடி­யில் வெற்றி வாய்ப்பை இழந்­தி­ருக்­கி­றோம். இந்த முறை நிச்­ச­யம் வெற்றி பெற்­றாக வேண்­டும். இந்த முறை 11–க்கு 11 வெற்றி பெற்­றாக வேண்­டும். அது மட்­டுமே நம் இலக்­காக இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">நாம் பெறும் வெற்­றி­தான்  இளை­ஞர் அணிக்கு நாம் சேர்க்­கக்­கூ­டிய பெருமை. அதை நிச்­ச­யம் செய்­வோம் என்று கேட்­டுக்­கொண்டு, மே 4–ஆம் தேதி, வாக்கு எண்­ணிக்கை. நிச்­ச­யம் அன்­றைக்கு 200 தொகு­திக்கு மேல் தி.மு.க. கூட்­டணி வெற்றி பெற்­று­விட்­டது என்ற செய்தி நம் காது­க­ளுக்கு வர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">மீண்­டும் ‘முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று நம் தலை­வர் அவர்­கள் பொறுப்­பேற்க வேண்­டும். அதற்கு இளை­ஞர் அணி­யின் உழைப்பு மிக அரு­மை­யாக இருந்­தது, இந்த வெற்­றிக்கு மிக மிக முக்­கிய கார­ணம் இளை­ஞர் அணி உழைப்பு என்று எல்­லா­ரை­யும் சொல்ல வைக்க வேண்­டும். அது­தான் இளை­ஞர் அணிக்­குப் பெருமை என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொண்டு, இந்­தச் சிறப்­பான வாய்ப்­பைக் கொடுத்த மாவட்­டக் கழ­கத்­துக்­கும், நிகழ்ச்­சிக்கு உட­ன­டி­யாக வந்­தி­ருந்த அனைத்து இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள், இரண்டு மாவட்­டத்­தைச் சேர்ந்த அனைத்து நிர்­வா­கி­க­ளுக்­கும் மீண்­டும் என் நன்­றி­யைத் தெரி­வித்து வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9">அமைச்­சர்­கள் ஐ.பெரி­ய­சாமி, அர.சக்­க­ர­பாணி, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ஐ.பி.செந்­தில் குமார், கம்­பம் ராம­கி­ருஷ்­ணன், காந்­தி­ரா­ஜன், மகா­ரா­ஜன், சர­வ­ண­கு­மார், தள­பதி, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தங்­கத்­த­மிழ்ச்­செல்­வன்,  மாந­கர மேயர் இள­மதி ஜோதி­பி­ர­காஷ், மாந­க­ரச் செய­லா­ளர் ராஜப்பா, முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்  போடி லட்­சு­ம­ணன், முத்­து­ரா­ம­லிங்­கம், சுப்­பு­ரத்­தி­னம், இளை­ஞர் அணி மாநி­லத் துணைச் செய­லா­ளர்­கள் ஜி.பி.ராஜா, ஆனந்­த­கு­மார், கழக அணி­க­ளின் மாநில நிர்­வா­கி­கள் ஜெயக்­கு­மார், இரா.பாண்­டி­யன், ஜெயன், சூர்யா கிருஷ்­ண­மூர்த்தி, மாவட்ட இளை­ஞர் அணிஅமைப்­பா­ளர்­கள் கணே­சன், ஹரி­ஹ­ர­சு­தன், ஆஜீப்­கான், செஞ்­சுரி செல்­வம், மாந­கர இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் அப்­துல் ரகு­மான் உள்­பட கழக 
முன்­ன­ணி­யி­னர் பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>