<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,259,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Mar 26 2026 04:02:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260326T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="26032026-VLR-08" position.sequence="08" ex-ref="26032026-VLR-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="45">வெற்றி என்றால், வியந்து பேசும் மிகப்பெரிய வெற்றியாக இருக்க வேண்டும்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="45"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="76">‘தி.மு.கழக இளைஞர் அணிக்கு நிகராக ஆள் இல்லை’ என்பதை    மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="50">கரூரில் நடைபெற்ற `களத்தில் இளைஞர் அணி’ கூட்டத்தில் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தொடர்ச்சி 9 ஆம் பக்கம்</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Udhayasirphot2_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.8">கரூர், மார்ச். 26–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.8">கரூ­ரில் நடை­பெற்ற, கரூர் மற்­றும் திருப்­பூர் மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மாவட்ட, - மாந­கர, - ஒன்­றிய, - நகர, - பகுதி, - பேரூர் அமைப்­பா­ளர், துணை அமைப்­பா­ளர்­க­ளு­டன் ‘களத்­தில் இளை­ஞர் அணி’ தேர்­தல் பிரச்­சா­ரம் குறித்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில், கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">அப்­போது அவர், “இளை­ஞர் அணி தம்­பி­மார்­கள் சிறப்­பாக வேலை பார்த்­தார்­கள், தி.மு.க. இளை­ஞர் அணிக்கு நிக­ராக ஆள் இல்லை’ என்­பதை மீண்­டும் மீண்­டும் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும். வெற்றி என்­றால், அது சாதா­ரண வெற்­றி­யாக இருக்­கக்­கூ­டாது. எல்­லா­ரும் வியந்து பேசும் அள­விற்கு மிகப்­பெ­ரிய வெற்­றி­யாக இருக்க வேண்­டும்” என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­யின் விவ­ரம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">காலை­யில் கோயம்­புத்­தூ­ரில் ஆரம்­பித்து, கோயம்­புத்­தூர் நீல­கிரி ஆகிய மாவட்­டங்­க­ளைச் சார்ந்த நிர்­வா­கி­க­ளைச் சந்­தித்­து­விட்டு, அதன் பிறகு ஈரோட்­டுக்­குச் சென்று ஈரோடு, நாமக்­கல் இளை­ஞர் அணி நிர்­வா­கி­க­ளைச் சந்­தித்து, இப்­பொ­ழுது கடை­சி­யா­கக் கரூ­ருக்கு உங்­க­ளைச் சந்­திக்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">முத­லில் அனை­வ­ரும் நல­மாக இருக்­கி­றீர்­களா? எனக்கு காயம் ஏற்­பட்டு ஒரு மாதம் ஆகி­றது, எலும்பு முறிவு என்று தெரி­வ­தற்கே ஒரு வாரம் ஆகி­விட்­டது. அதன் பிறகு தொடர்ந்து ஓய்­வில் இருக்­கச் சொன்­னார்­கள். இருந்­தா­லும் தொடர்ந்து சுற்­றுப்­ப­ய­ணத்­தில் இருப்­ப­த­னால், மூன்று நாட்­க­ளுக்கு முன்பு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்­துப் பார்க்­கும்­போது இன்­னும் ஒரு 10 நாட்­க­ளா­வது ஆகும், நீங்­கள் தொடர்ந்து சுற்­றுப் 
பய­ணத்­தி­லேயே இருங்­கள், வீட்­டுக்­குச் செல்­லா­தீர்­கள் என்று மருத்­து­வர்­கள் சொன்­ன­தற்கு இணங்க இன்று மீண்­டும் சுற்­றுப் ப­ய­ணத்­தைத் தொடங்­கி­யி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">காலை­யி­லி­ருந்து எல்லா நிர்­வா­கி­க­ளும் என்­னி­டம் கேட்­கக்­கூ­டிய கேள்வி இது­தான். “நல­மாக இருக்­கி­றீர்­களா? உங்­கள் விரல் நல­மாக இருக்­கி­றதா? தலை­வர் நல­மாக இருக்­கி­றாரா? தலை­வ­ரைக் கேட்­ட­தா­கச் சொல்­லுங்­கள், உட­லைப் பார்த்­துக் கொள்­ளுங்­கள்’’ என்­ப­து­தான் அனை­வ­ரும் சொல்­வது. நீங்­கள் இருக்­கும்­போது எனக்கோ தலை­வ­ருக்கோ எது­வுமே நடக்­காது. எங்­க­ளது பலமே நீங்­கள்­தான். அப்­ப­டிப்­பட்ட நிர்­வா­கி­க­ளான உங்­க­ளைச் சந்­திப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">தனிச்­சி­றப்பு உண்டு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">நம் கழ­கத்­தைப் பொறுத்­த­வ­ரைக்­கும் இந்த கரூ­ருக்கு என்று தனி இடம், தனிச்­சி­றப்பு உண்டு. திருப்­பூ­ருக்­கும் உண்டு. இந்த கரூர் மாவட்­டத்­தில் இருக்­கக்­கூ­டிய குளித்­தலை தொகு­தி­யில்­தான் நம் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள் முதன்­மு­றை­யா­கப் போட்­டி­யிட்­டுச் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார். குளித்­தலை, இந்த கரூர் மாவட்­டம்­தான் அவரை முதல்­முறை சட்­ட­மன்­றத்­துக்­குள் அனுப்­பி­யது. அதன் பிறகு பார்த்­தீர்­கள் என்­றால், அவர் போட்­டி­யிட்ட அனைத்­துத் தேர்­தல்­க­ளி­லும் வெற்றி பெற்­றார் என்­றால், அந்த வெற்­றி­யைத் தொடங்கி வைத்­தது இந்த கரூர் மாவட்­டம். அப்­ப­டிப்­பட்ட கரூர் மாவட்­டத்­துக்கு நான் பல­முறை வந்­தி­ருக்­கி­றேன். ஏதோ வரு­டத்­துக்கு ஒரு முறை வரு­ப­வன் கிடை­யாது. செந்­தில் பாலாஜி அவர்­கள் அடிக்­கடி என்னை கரூர் மாவட்­டத்­துக்கு அழைத்து வந்து பல்­வேறு நிகழ்ச்­சி­களை நடத்­தி­யி­ருக்­கி­றார். மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு முறை­யா­வது நான் கரூ­ருக்கு வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">தி.மு.க-வின் கோட்டை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">கடந்த மாதம்­தான் நிர்­வா­கி­கள் சந்­திப்­பினை நாம் கோவை­யில் மேற்கு மண்­டல நிர்­வா­கி­கள் சந்­திப்­பாக நடத்­தி­னோம். அந்­தச் சந்­திப்­பி­லும் நீங்­கள் அனை­வ­ரும் உங்­க­ளின் உழைப்­பால் அந்­தச் சந்­திப்­பை கிட்­டத்­தட்ட ஒரு மாநாடு போல நீங்­கள் நடத்­திக் காட்­டி­னீர்­கள். அதற்­கும் இந்த நேரத்­தில் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். இன்று கரூர் மட்­டும் தி.மு.க-வின் கோட்டை கிடை­யாது, இந்த மேற்கு மண்­ட­லம் முழு­வ­துமே தி.மு.க-வின் கோட்டை என்று நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டிய காலம் வந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">ஆறு மாதங்­க­ளுக்கு முன்பு இதே கரூ­ரில்­தான் நம் முப்­பெ­ரும் விழா நிகழ்ச்­சியை, செந்­தில் பாலாஜி அவர்­கள் மிகச் சிறப்­பாக நடத்­திக் காட்­டி­னார். அந்த நிகழ்ச்­சிக்கு உங்­க­ளில் பல பேர் நிச்­ச­ய­மாக வந்­தி­ருப்­பீர்­கள். அன்று அந்த முப்­பெ­ரும் விழா நிகழ்ச்­சி­யில் கொட்­டும் மழை­யில் நம் தலை­வர் பேசி­னார். அப்­பொ­ழுது மூன்று விஷ­யத்­தைத் தலை­வர் உரக்­கச் சொன்­னார், அதனை முழக்­க­மா­கச் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">தமிழ்­நாட்டை நான் தலை­கு­னிய விட­மாட்­டேன். தமிழ்­நாடு போரா­டும், நிச்­ச­யம் தமிழ்­நாடு வெல்­லும் என்று அன்று கரூ­ரில் முப்­பெ­ரும் விழா­வில் நம் தலை­வர் அன்று சொன்­னார்­கள். தலை­வர் அன்று சொல்­லச் சொல்ல நாமெல்­லாம் திரும்­பச் சொன்­னோம். அந்த உறு­தி­மொ­ழியை நாம் அன்று எடுத்­தோம். அந்த உறு­தி­மொ­ழியை நிறை­வேற்­றிக் காட்­ட­வேண்­டிய காலத்­தின் கட்­டா­யத்­தில் நாம் இப்­பொ­ழுது இன்று இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">தனி உற்­சா­கம் ஏற்­ப­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">மிக மிக முக்­கி­ய­மான தரு­ணத்­தில் நாம் சந்­தித்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். தேர்­தல் தேதி அறி­வித்­து­விட்­டார்­கள். இன்­னும் 32 நாட்­கள்­தான் இருக்­கின்­றன. 23-ஆம் தேதி தேர்­தல். நான் அடிக்­கடி சொல்­வ­துண்டு, எப்­பொ­ழு­தெல்­லாம் உங்­க­ளைச் சந்­திக்­கி­றேனோ, பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளில் சந்­திக்­கி­றேனோ, எத்­தனை நிகழ்ச்­சி­க­ளில் கலந்­து­கொண்­டா­லும், இந்த இளை­ஞர் அணி நிர்­வா­கி­க­ளைச் சந்­திக்­கும்­போது எனக்­குத் தனி உற்­சா­கம் ஏற்­பட்­டு­வி­டும். என் குடும்ப நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு என் உற­வி­னர்­கள், சகோ­த­ரர்­க­ளைச் சந்­திக்­கிற மாதிரி ஓர் உணர்வு எனக்கு ஏற்­ப­டும். அந்த உணர்­வு­டன்­தான் நான் இன்று வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போது `களத்­தில் இளை­ஞர் அணி’ என்­கின்ற முன்­னெ­டுப்பை ஆரம்­பித்து நீங்­கள் அனை­வ­ரும் தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட்­டீர்­கள். வாக்­கா­ளர்­க­ளைச் சந்­தித்­தீர்­கள். உங்­க­ளின் அந்­தப் பிரச்­சா­ரத்­தால்­தான் நாம் 100 சத­வி­கித வெற்­றியை கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் நாம் பெற்­றோம். இன்று மீண்­டும் அந்த முயற்­சி­யில் நாம் ஈடு­பட வேண்­டும். பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட வேண்­டும். களத்­தில் இளை­ஞர் அணி என்று களத்­துக்கு இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் நாம் செல்ல வேண்­டும். மீண்­டும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அந்த 100 சத­வி­கித வெற்­றியை நாம் பெற்­றாக வேண்­டும். இந்­தி­யா­வில் இருக்­கக்­கூ­டிய பல கட்­சி­கள் இன்று வாக்­குச்­சா­வடி குழு அமைப்­ப­தற்­குத் திண­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால் இன்று இளை­ஞர் அணிக்­குப் பார்த்­தீர்­கள் என்­றால் வாக்­குச்­சா­வ­டிக்கு ஒரு நிர்­வா­கியை நாம் நிய­மித்­தி­ருக்­கி­றோம். எல்லா இயக்­கத்­தி­லும் இதெல்­லாம் சாத்­தி­யம் கிடை­யாது. தி.மு.க இளை­ஞர் அணி­யில் மட்­டும்­தான் இதெல்­லாம் சாத்­தி­யம். இவ்­வ­ளவு பெரிய ஓர் இளை­ஞர் படையை நாம் உரு­வாக்கி வைத்­தி­ருக்­கி­றோம் என்­றால் தேர்­தல் என்­கின்ற அந்­தப் போருக்கு நாம் தயா­ராக இருக்க வேண்­டும். அதற்­கா­கத்­தான் இந்­தப் படையை நாம் உரு­வாக்கி வைத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">முதன்­மை­யான அணி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">தி.மு.க-வில் 25 அணி­கள் இருக்­கின்­றன. ஆனால், கலை­ஞர் எப்­பொ­ழு­தும் சொல்­வார், எத்­த­னையோ அணி­கள் இருந்­தா­லும் இளை­ஞர் அணி­தான் முதல் அணி, முதன்­மை­யான அணி என்­பார். தலைமை என்ன சொன்­னா­லும், தலை­வர் என்ன சொன்­னா­லும் அதை, களத்­தில் முத­லில் இறங்­கிச் செயல்­ப­டுத்­திச் செய்து முடிப்­பது இளை­ஞர் அணி­யா­கத்­தான் இருக்­கும். இப்­பொ­ழுது மீண்­டும் நாம் அதை நிரூ­பிக்க வேண்­டும். தலை­வர் அவர்­கள் அந்த அள­வுக்கு இளை­ஞர் அணி மேல் எதிர்­பார்ப்பு வைத்­தி­ருக்­கி­றார். அந்த வார்த்­தையை நாம் காப்­பாற்ற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">இளை­ஞர் அணி­யைப் பொறுத்­த­வ­ரைக்­கும் அது ஒரு சிறந்த பயிற்­சிக் களம். எடுத்த உடனே எல்­லா­ரை­யும் முதன்­மைப் போட்­டி­யில் விளை­யாட விட்­டு­விட மாட்­டார்­கள். விளை­யா­டத் தெரிந்­தா­லும் சரி, விளை­யா­டத் தெரி­கி­றதா, எந்த நேரத்­தில் எப்­படி விளை­யா­டு­கி­றான் என்­ப­தைச் சரி­பார்ப்­ப­தற்­குத்­தான் `வலைப் பயிற்சி’ கொடுப்­போம் என்று சொல்­வார்­கள். எனவே நமக்கு மிகப்­பெ­ரிய பொறுப்­பு­கள் வரு­வ­தற்­கான ஒரு பயிற்­சிக் களம்­தான் இந்த இளை­ஞர் அணி பொறுப்பு. இங்கே நீங்­கள் எடுக்­கக்­கூ­டிய பயிற்­சி­தான் நாளைக்கு உங்­களை மிகப்­பெ­ரிய பொறுப்­பில் அமர்த்­தப்­போ­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">நாம் கடந்த ஐந்து வரு­டங்­க­ளா­கப் பல்­வேறு பணி­கள் செய்­தி­ருக்­கி­றோம். இளை­ஞர் அணி சார்­பா­கவே பல்­வேறு பணி­கள் செய்­தி­ருக்­கி­றோம். கடு­மை­யாக உழைத்­தி­ருக்­கி­றோம். மக்­க­ளு­டன் சேர்ந்து இருக்­கி­றோம். மக்­க­ளு­டன் தொடர்­பில் வைத்­தி­ருக்­கி­றோம். இப்­பொ­ழுது கடைசி நேரத்­தில் இன்­னும் அதி­க­மாக, இறுதி உந்­து­தல் என்று சொல்­வார்­கள். கடைசி நேரத்­தில் இந்­தக் கூடு­தல் முயற்­சியை நாம் நிச்­ச­யம் செய்ய வேண்­டும். அது­தான் இந்த அடுத்த 30 நாட்­கள். இந்த 30 நாட்­க­ளும் மக்­க­ளைச் சந்­திப்­ப­தற்­குத் தயா­ரா­கி­விட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.8">‘திரா­விட மாடல்’ அரசு சாதனை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">எந்­தத் தைரி­யத்­தில் தயா­ரா­கி­யி­ருக்­கி­றோம்? ஐந்து வரு­டங்­க­ளாக நம் திரா­விட மாடல் அரசு, நம் தலை­வர் முத­ல­மைச்­ச­ராக இருந்து பல்­வேறு திட்­டங்­களை மக்­க­ளுக்­குச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம். தேர்­தல் அறிக்­கை­யில் நாம் சொன்ன வாக்­கு­று­தி­களை எல்­லாம் செய்து காட்­டி­யி­ருக்­கி­றோம் என்­கின்ற அந்­தத் தைரி­யத்­தில் மக்­க­ளைச் சந்­திக்­கி­றோம். இன்று இந்­தி­யா­வி­லேயே மக்­களை தின­மும் சந்­திக்­கின்ற, நேர­டி­யா­கச் சந்­திக்­கின்ற ஒரே முத­ல­மைச்­சர் நம் தலை­வர் அவர்­கள்­தான். எந்­தத் தைரி­யத்­தில் சந்­திக்­கி­றார்? மக்­க­ளுக்­குச் சொன்ன வார்த்­தை­யைக் காப்­பாற்­றி­யி­ருக்­கி­றோம் என்­கிற தைரி­யத்­தில் சந்­திக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">சில திட்­டங்­களை மட்­டும் இங்கே நான் உங்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன். ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­வு­டன் நம் தலை­வர் போட்ட முதல் கையெ­ழுத்து மக­ளி­ருக்கு விடி­யல் பய­ணத் திட்­டம். 920 கோடி பய­ணங்­கள் மக­ளிர் மேற்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஐந்து வரு­டத்­தில், ஒவ்­வொரு மக­ளி­ரும் ஒவ்­வொரு மாத­மும் 900 ரூபா­யி­லி­ருந்து 1000 ரூபாய் வரைக்­கும் இந்­தத் திட்­டத்­தின் மூலம் மட்­டும் சேமித்­தி­ருக்­கி­றார்­கள் என்று புள்­ளி­வி­வ­ரங்­கள் சொல்­கின்­றன. இன்று பல்­வேறு மாநி­லங்­கள் இந்த விடி­யல் பய­ணத் திட்­டத்­தைப் பெயர் மாற்றி அவர்­க­ளின் மாநி­லங்­க­ளில் செயல்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">21 லட்­சம் குழந்­தை­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம். ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரை அர­சுப் பள்­ளி­யில் படிக்­கக்­கூ­டிய அனைத்­துக் குழந்­தை­க­ளுக்­கும் தர­மான காலை உணவு, அதன் பிறகு தர­மான கல்வி வழங்­கப்­ப­டு­கி­றது. 21 லட்­சம் குழந்­தை­கள் பயன்­பெற்று வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">அர­சுப்­பள்­ளி­யில் படித்து எந்­தக் கல்­லூ­ரி­யில் சேர்ந்­தா­லும் மாண­வ­னாக இருந்­தால் தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம், மாண­வி­யாக இருந்­தால் புது­மைப்­பெண் திட்­டம் மூல­மாக மாதம் 1,000 ரூபாய் கல்வி உத­வித் தொகை வழங்­கப்­ப­டு­கி­றது. 13 லட்­சம் மாணவ மாண­வி­கள் இந்­தத் திட்­டத்­தின் மூலம் பயன்­பெற்­றி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">உயர்­கல்வி சேர்க்கை விகி­தம் (Gross Enrollment Ratio) என்­பார்­கள். பள்­ளி­யில் படித்­து­விட்டு எத்­தனை பேர், உயர்­கல்­வி­யில் படிப்­ப­தற்­கா­கச் சேர்­கி­றார்­கள் என்­ப­து­தான் இந்த உயர்­கல்­விச் சேர்க்கை விகி­தம். இந்­தி­யா­வின் மொத்­தச் சேர்க்கை விகி­தம் 26 சத­வி­கி­தம். தமிழ்­நாட்­டின் மொத்­தச் சேர்க்கை விகி­தம் 50 சத­வி­கி­தம். இந்­தி­யா­வின் ஜி.இ.ஆர் (GER)-ஐ விட இரண்டு மடங்கு தமிழ்­நாட்­டின் ஜி.இ.ஆர் GER அதி­கம். அதற்­குக் கார­ணம் இப்­ப­டிப்­பட்ட திட்­டங்­கள் - முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம், புது­மைப்­பெண் திட்­டம், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம் ஆகி­ய­வை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">10 லட்­சம் மடிக்­க­ணி­னி­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">தலை­வர் அறி­வித்து ஒரே மாதத்­தில் 10 லட்­சம் மாணவ மாண­வி­க­ளுக்கு இல­வச மடிக்­க­ணினி திட்­டத்தை அறி­வித்­துக் கொடுத்து முடித்­து­விட்­டோம். மடிக்­க­ணினி என்­றால் அ.தி.மு.க ஆட்­சி­யில் கொடுக்­கப்­பட்ட மடிக்­க­ணி­னி­கள் மாதிரி கிடை­யாது. அதைச் சில பேர் உண்­மையை மறைக்­கி­றார்­கள். என்ன தெரி­யுமா சொல்­கி­றார்­கள்? ``அ.தி.மு.க ஆட்­சி­யில் கொடுத்­துக் கொண்­டி­ருந்­தார்­கள், அதை நீங்­கள் நிறுத்­தி­விட்­டீர்­கள்’’ என்று. கிடை­யாது, அ.தி.மு.க ஆட்­சி­யில் பள்ளி மாண­வர்­க­ளுக்­குக் கொடுத்­துக் கொண்­டி­ருந்­தார்­கள். 2019- ஆம் ஆண்­டி­லேயே அ.தி.மு.க ஆட்­சி­யில் அந்­தத் திட்­டத்தை நிறுத்­தி­விட்­டார்­கள். ஆனால் நம் தலை­வர்``கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு மடிக்­க­ணினி இன்­னும் பய­னுள்­ள­தாக இருக்­கும், அது­வும் படித்து முடித்­து­விட்டு அவர்­கள் வேலைக்­குச் செல்­லும்­போது அவர்­க­ளின் வேலைக்­கும் அது இன்­னும் பய­னாக இருக்­கும்’’ என்று சொல்லி இப்­பொ­ழுது இறுதி ஆண்டு படிக்­கக்­கூ­டிய அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் கொடுத்து முடித்­தா­கி­விட்­டது. 10 லட்­சம் மாண­வர்­க­ளுக்­குக் கொடுத்­து­விட்­டோம். நவீ­னத் தொழில்­நுட்­பத்­து­டன் கொடுத்­தி­ருக்­கி­றோம், செயற்கை நுண்­ண­றிவு மென்­பொ­ரு­ளோடு கொடுத்­தி­ருக்­கி­றோம். ஆறு மாதத்­துக்கு இல­வ­ச­மா­கக் கொடுத்­தி­ருக்­கி­றோம். இன்று அதை வாங்­கிய மாண­வர்­கள் எல்­லாம் நம் முத­ல­மைச்­ச­ரைப் பாராட்­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">`தாயு­மா­ன­வர்’ திட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">`தாயு­மா­ன­வர்’ திட்­டம். இந்­தி­யா­வி­லேயே எங்­கே­யுமே இந்­தத் திட்­டம் இல்லை. பெற்­றோர்­களை இழந்த குழந்­தை­கள் பள்­ளிக்­கூ­டம் செல்ல வேண்­டும், அவர்­க­ளின் கல்வி நிதிக்­காக மாதம் 2,000 ரூபாய், 12-ஆம் வகுப்பு படிக்­கிற வரைக்­கும் அவர்­க­ளுக்கு மாதந்­தோ­றும் நம் முத­ல­மைச்­சர், நம் அரசு கொடுக்­கி­றது. இவை­யெல்­லாம் கல்­வியை ஊக்­கு­விக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கக் கொண்டு வரப்­பட்ட திட்­டங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம். ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு மாதம் 1,000 கடந்த மூன்று வரு­ட­மாக நம் தலை­வர் அவர்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். கிட்­டத்­தட்ட 36,000 கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். மக­ளிர் மத்­தி­யில் இந்த திட்­டத்­துக்கு மிகப்­பெ­ரிய வர­வேற்பு. எப்­ப­டி­யா­வது சட்­ட­மன்­றத் தேர்­த­லைக் கார­ணங்­காட்டி அந்­தத் திட்­டத்தை நிறுத்­தி­விட வேண்­டும் என்று சங்­கிக் கூட்­டம் முயற்சி செய்­தது. சில மாநி­லங்­க­ளில் நீதி­மன்­றத்­துக்­குச் சென்று நிறுத்­தி­யி­ருக்­கி­றார்­கள். அந்­தச் செய்தி நம் தலை­வ­ருக்கு வந்­தது. தலை­வர் என்ன செய்­தார்? ``நான் 1,000 கொடுப்­ப­தைத் நீ நிறுத்­து­கி­றாய், நான் 5,000 கொடுக்­கி­றேன் எப்­படி நிறுத்­து­கி­றாய் என்று பார்த்­து­வி­டு­வோம்’’ என்று சொல்லி, கடந்த மாதம் நம் தலை­வர் பிப்­ர­வரி, மார்ச், ஏப்­ரல் மூன்று மாதம் சேர்த்து 3,000, கோடைக்­கால சிறப்பு நிதி 2,000 என்று ஒவ்­வொரு குடும்­பத்­துக்­கும் 5,000 ஒரே தவ­ணை­யில் நம் தலை­வர் கொடுத்­து­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">பிப்­ர­வரி மாதம் மக­ளி­ருக்கு எல்­லாம் பெரும் ஆச்­ச­ரி­யம் அடைந்­தார்­கள். “திடீ­ரென்று யார் 5,000 கொடுத்­தது நம் வங்கி கணக்­கிற்கு?” என்று எல்­லா­ரும் ஆச்­ச­ரி­யப்­பட்­டார்­கள். 7 மணிக்­குத் தலை­வர் பணம் போட்­டார், 9 மணிக்கு எல்­லா­ரும் வங்­கிக்­குச் சென்று பணத்தை எடுத்­து­விட்­டார்­கள். ஏன்? மோடி எடுத்­து­வி­டு­வாரோ என்­கின்ற பயம். வங்­கி­யில் இருந்து ஏதா­வது கார­ணம் சொல்லி குறைந்­த­பட்ச இருப்பு என்று சொல்லி ஏதா­வது ஒரு கார­ணத்­தைச் சொல்லி அதை­யும் மோடி பிடுங்­கி­வி­டு­வாரோ என்று நம் மக­ளிர் சென்று அந்த 5,000-த்தையும் எடுத்­து­விட்­டார்­கள். இன்று தலை­வர் 5,000 கொடுத்­த­தோடு மட்­டு­மல்­லா­மல் இன்­னொரு வாக்­கு­று­தி­யும் கொடுத்­தி­ருக்­கி­றார். ``மீண்­டும் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடனே அந்த 1,000 ரூபாய் மக­ளிர் உரி­மைத் தொகையை 2,000 ரூபா­யாக உயர்த்­திக் கொடுப்­பேன்’’ என்­கின்ற வாக்­கு­று­தி­யும் நம் தலை­வர் அவர்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">3 சத­வி­கித விளை­யாட்டு இட­ஒ­துக்­கீட்­டில் கடந்த அ.தி.மு.க ஆட்­சி­யில் 2 பேருக்கு மட்­டும்­தான் அரசு வேலை வழங்­கி­னார்­கள். ஆனால் நாம் கடந்த இரண்டு வரு­டத்­தில் மட்­டும் நம் முத­ல­மைச்­சர் எனக்கு ஆணை­யிட்­ட­த­னால், இரண்டு வரு­டத்­தில் 300 விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு அரசு வேலை வாய்ப்பை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தி­ருக்­கி­றோம். இப்­ப­டிச் குழந்­தை­க­ளி­லி­ருந்து முதி­ய­வர்­கள் வரைக்­கும் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் நம் அரசு திட்­டங்­க­ளைப் பார்த்­துப் பார்த்­துச் செய்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">கரூர் திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">இன்று கரூர் மற்­றும் திருப்­பூர் மாவட்­டங்­க­ளி­லும் பல வளர்ச்­சித் திட்­டங்­களை நம் அரசு செய்­தி­ருக்­கி­றது. சில திட்­டங்­களை மட்­டும் இங்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">கரூர் மாவட்ட அரசு மருத்­து­வ­மனை மேம்­பாட்­டுப் பணி­கள் 40 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் செயல்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. கரூ­ருக்­குப் புதிய பேருந்து நிலை­யம் 40 கோடி ரூபாய் செல­வில் நம் அரசு கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">கே.பர­மத்தி மற்­றும் அர­வக்­கு­றிச்­சிக்கு 370 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கூட்­டுக்­கு­டி­நீர் திட்­டம் நம் அரசு செய்து கொடுத்­தி­ருக்­கி­றது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கரூர் மாவட்­டம் நெரூ­ருக்­கும் திருச்சி மாவட்­டம் உன்­னி­யூ­ருக்­கும் இடையே காவிரி ஆற்­றின் குறுக்கே உயர்­மட்­டப் பாலம் கட்­டிக் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">சிதம்­ப­ரம் மற்­றும் கரூர் இடையே நான்கு வழிச் சாலையை 140 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அக­லப்­ப­டுத்­து­கின்ற பணியை இப்­பொ­ழுது நடத்தி முடித்­தி­ருக்­கி ­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">திருப்­பூர் திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">திருப்­பூர் மாந­க­ராட்­சிக்கு 1,200 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் குடி­நீர் வழங்­கல் திட்ட மேம்­பாட்­டுப் பணி­கள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. காங்­கே­யம் அரசு மருத்­து­வ­மனை40 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் தரம் உயர்த்­தப்­பட்­டி­ருக்­கி­றது. திருப்­பூ­ரில் மினி டைடல் பூங்கா. திருப்­பூ­ரி­லும் புதிய பேருந்து நிலை­யம் அமைக்­கப்­பட்டு இருக்­கி­றது. பல்­ல­டம், தாரா­பு­ரம் நான்கு வழிச்­சாலை அக­லப்­ப­டுத்­தப்­ப­டும் பணி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">சுமார் 175 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் நொய்­ய­லாறு மேம்­பாட்­டுப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இப்­படி கரூர், திருப்­பூர் மாவட்­டத்­துக்கு மட்­டும் இல்லை, தமிழ்­நாடு முழு­வ­தும் ஒவ்­வொரு மாவட்­டத்­தை­யும் பார்த்­துப் பார்த்து நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் பல்­வேறு திட்­டங்­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றார். அத­னால்­தான் இன்று இந்­தி­யா­வி­லேயே வள­ரு­கின்ற மாநி­லங்­க­ளில் முதல் மாநி­ல­மாக 11.19% வளர்ச்­சி­யோடு, முதல் முறை இரட்டை இலக்க வளர்ச்­சி­யோடு இன்று தமிழ்­நாடு முதல் மாநி­ல­மாக இடம் பிடித்­தி­ருக்­கி­றது. நம் மாநி­லம் இவ்­வ­ளவு சாத­னை­க­ளைச் செய்து, இவ்­வ­ளவு சாதித்து வரு­கி­றது. இதற்கு ஒன்­றிய அரசு, பா.ஜ.க அரசு எந்த விதத்­தி­லா­வது நமக்கு ஆத­ர­வாக இருந்­தி­ருக்­கி­றார்­களா? நிதி கொடுத்­தி­ருக்­கி­றார்­களா? நம் உரி­மை­கள் எல்­லாம் பறித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">கல்வி உரிமை, நிதி உரி­மை­யைப் பறிக்­கி­றார்­கள், நாம் கேட்­கும் நிதி­யைக் கொடுப்­பது கிடை­யாது. தமிழ்­நாட்­டுக்கு என்று எந்­தப் புதுத் திட்­டங்­க­ளை­யும் தரு­வ­தில்லை. மோடி அவர்­க­ளும் அமித்ஷா அவர்­க­ளும் நல்­ல­து­தான் செய்­ய­வில்லை, கெடு­த­லா­வது செய்­யா­மல் இருக்­க­லாம். எந்த வித­மான திட்­ட­மும் தமிழ்­நாட்­டிற்­குத் தரு­வ­தில்லை. அத­னால்­தான் பாசிச பா.ஜ.க-வை துணிச்­ச­லோடு எதிர்த்து நிற்­கி­றார் நம் தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">இன்று நான்கு அடி­மைக் கட்­சி­க­ளைப் பிடித்து வைத்­துக்­கொண்டு எப்­ப­டி­யா­வது தமிழ்­நாட்­டுக்­குள் புகுந்­து­வி­ட­லாம் என்று பா.ஜ.க முயற்சி செய்து கொண்­டி­ருக்­கி­றது. ஆனால் நான் உறு­தி­யா­கச் சொல்­கி­றேன் பாசிச சக்­தி­க­ளின் அர­சி­யல் விளை­யாட்­டு­கள் வட மாநி­லங்­க­ளில் செயல்­ப­டும், ஆனால் தமிழ்­நாட்­டுக்­குள் என்­றும் அவர்­க­ளின் அர­சி­யல் விளை­யாட்­டு­கள் என்­றும் எடு­ப­டாது. தமிழ்­நாட்டு மக்­கள் என்­றும் அதை ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள். அவர்­க­ளின் சூழ்ச்சி வேலை தமிழ்­நாட்­டில் என்­றும் எடு­ப­டாது. அத­னால்­தான் நம் தலை­வர் அவர்­கள் திரும்­பத் திரும்­பச் சொல்­கி­றார் வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­தல் தமிழ்­நாட்டு அணிக்­கும் டெல்லி அணிக்­கு­மான தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">மோடி­யின் முரட்டு அடிமை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">இந்­தத் தேர்­த­லில் நாம் ஒரு முடி­வு­கட்ட வேண்­டும். தமிழ்­நாட்டு மக்­கள் இன்று ஒரு முடிவு கட்­டி­விட்­டார்­கள். 10 தோல்வி பழ­னிச்­சா­மி­யைப் படு­தோல்வி பழ­னிச்­சா­மி­யாக நாம் மாற்­றிக் காட்ட வேண்­டும். இந்த முறை­யும் அமித்ஷா, மோடி அவர்­க­ளின் அடி­மைக் கூட்­ட­ணியை நாம் தமிழ்­நாட்­டுக்­குள் நுழைய விடக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">அர­சி­ய­லில் முரட்­டுத் தொண்­டர்­க­ளைப் பார்த்­தி­ருப்­பீர்­கள், முரட்­டுப் பக்­தர்­க­ளைக் கூடப் பார்த்­தி­ருப்­பீர்­கள், ஆனால் எங்­கா­வது முரட்டு அடி­மை­யைப் பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? எடப்­பாடி பழ­னி­சாமி ரூபத்­தில் இன்று ஒரு முரட்டு அடி­மை­யாக இன்று மோடி­யின் முரட்டுஅடி­மை­யாக அவர் திகழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார். ஒரு பழ­மொழி சொல்­வார்­கள் ஜாடிக்கு ஏற்ற மூடி கிடைத்­து­விட்­டது என்று சொல்­வார்­கள். இன்று மோடிக்கு ஏற்ற ஓர் அடி­மை­தான் இந்த எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள்.எப்­பொ­ழு­துமே ஓர் அசல் தர­மான பொருளை உரு­வாக்­கி­விட்­டார்­கள் என்­றால், அறி­மு­கப்­ப­டுத்­தி­விட்­டார்­கள் என்­றால், அந்­தப் பொருள் நன்­றாக இருக்­கும், அப்­பொ­ழுது நல்ல வர­வேற்பு கிடைக்­கும், பொது­மக்­கள் அனை­வ­ரும் அதைப்­பற்­றிப் பேசு­வார்­கள், அதை வாங்­கிப் பயன்­ப­டுத்­து­வார்­கள். உடனே ஒரு மோச­டிக் கும்­பல் இருக்­கும் அதி­லி­ருந்து எப்­ப­டி­யா­வது பணம் பார்க்க வேண்­டும் என்று நினைப்­பார்­கள் என்ன செய்­வார்­கள்? அதே மாதிரி ஒரு போலித் தயா­ரிப்பை செய்து சந்­தை­யில் உலவ விடு­வார்­கள். அதை எல்­லா­ரும் என்ன தெரி­யுமா சொல்­வார்­கள்? அசெம்­பிள்டு பீஸ் (Assembled piece), சைனா மேக்(China make) என்று சொல்­வார்­கள். அந்த வகை­யில் இன்று ஓர்­அ­செம்­பிள்டு பீசாக, சைனா மேக் மாதிரி டெல்லி மேக்­காக இருப்­ப­து­தான், இன்று இருக்­கிற அ.தி.மு.க கூட்­டணி. அவர்­கள்­தான் இந்­தக் கூட்­ட­ணியை இன்று இணைத்­தி­ருக்­கி­றார்­கள். அந்த கூட்­ட­ணி­யில் இருக்­கக்­கூ­டிய ஒவ்­வொ­ரு­வ­ரைப் பற்­றி­யும் கொஞ்­சம் பின்­னோக்கி பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.8">ஒரு­வர் என்ன சொன்­னார்? எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­க­ளுக்கு கவுன்­சி­லர் ஆவ­தற்கு கூடத் தகுதி கிடை­யாது என்று சொன்­ன­வர் தான் இன்று அவர்­கள் கூட்­ட­ணி­யில் ஒரு­வர் இருக்­கி­றார். ஒரு­வர் அப்­ப­டிச் சொன்­னார், இன்று அந்­தக் கூட்­ட­ணி­யில் இருக்­கக்­கூ­டிய ஒரு­வர், இரண்டு மாதங்­க­ளுக்கு முன் என்ன தெரி­யுமா சொன்­னார்? எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யில் அ.தி.மு.க-வு­டன் கூட்­டணி செல்­வ­தற்கு நான் தூக்­கில் தொங்கி இறந்­து­வி­டு­வேன் என்று ஒரு­வர் சொன்­னார். இன்று இவர்­கள்­தான் கூட்­டணி சேர்ந்து இருக்­கி­றார். இதை மக்­க­ளி­டம் கொண்டு போய் சேர்க்க வேண்­டி­யது, நினை­வு­ப­டுத்த வேண்­டி­யது நம் கடமை.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>