<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,373,609,903" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Mar 28 2026 12:01:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260329T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="29032026-CBE-03" position.sequence="03" ex-ref="29032026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் – வாக்கு சரி­பார்க்­கும் இயந்­தி­ரங்­கள் </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">சட்­ட­மன்­றத் தொகுதி வாரி­யாக அனுப்­பும் பணி! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மாவட்ட தேர்­தல் அலு­வ­லர் ஜெ.கும­ர­கு­ரு­ப­ரன் பார்­வை­யிட்­டார்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="PR33Election_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை, மார்ச் 29–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாடு சட்­ட­மன்­றப் பொதுத்­தேர்­தல், 2026–னை முன்­னிட்டு, சென்னை சிந்­தா­த­ரிப்­பேட்­டை­யில் உள்ள மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் சேமிப்­புக் கிடங்­கில் கணினி குலுக்­கல் முறை­யில் சுழற்­சிக்கு முதல் சம­வாய்ப்­பிற்கு உட்­ப­டுத்­தப்­பட்ட (Randomization) மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள், வாக்­கா­ளர்­கள் தாம் செலுத்­திய வாக்­கினை சரி­பார்க்­கும் இயந்­தி­ரங்­கள் ஆகி­யவை அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­கள் முன்­னி­லை­யில் சட்­ட­மன்­றத் தொகுதி வாரி­யாக அனுப்­பப்­ப­டும் பணி­யினை மாவட்ட தேர்­தல் அலு­வ­லர்/பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி ஆணை­யா­ளர்  ஜெ.கும­ர­கு­ரு­ப ­ரன்,  நேற்று (27.03.2026) பார்­வை­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பின்­னர் மாவட்ட தேர்­தல் அலு­வ­லர் அவர்­கள் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­த­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை சிந்­தா­தி­ரிப் பேட்டை சேமிப்­புக் கிடங்­கில் வைக்­கப்­பட்­டுள்ள மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள், வாக்­கா­ளர் தங்­க­ளது வாக்­கினை சரி­பார்க்­கும் இயந்­தி­ரங்­கள், கட்­டுப்­பாட்டு கரு­வி­கள் ஆகி­ய­வற்றை எந்த சட்­ட­மன்­றத் தொகு­திக்கு எந்த இயந்­தி­ரங்­கள் என்­பது கணினி குலுக்­கல் சுழற்சி முறை­யில்முதல் சம­வாய்ப்­பிற்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரி­சைப்­ப­டுத்­தப்­பட்டு, அதன் விவ­ரங்­கள் அர­சி­யல் கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­க­ளுக்கு ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இத­னைத் தொடர்ந்து, அர­சி­யல் கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­கள் முன்­னி­லை­யில் மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள், கட்­டுப்­பாட்­டுக் கரு­வி­கள் மற்­றும் வாக்­கா­ளர் தங்­க­ளது வாக்­கினை சரி­பார்க்­கும் இயந்­தி­ரங்­கள் ஆகி­ய­வற்றை சைதாப்­பேட்டை, தியா­க­ராய நகர், மயி­லாப்­பூர், வேளச்­சேரி, ஆர்.கே.நகர், பெரம்­பூர், வில்­லி­வாக்­கம், எழும்­பூர் ஆகிய 8 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்கு தேவை­யான இயந்­தி­ரங்­கள் மற்­றும் கூடு­த­லாக 20% மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் மற்­றும் கட்­டுப்­பாட்­டுக் கரு­வி­க­ளும், 30% வாக்­கா­ளர் தங்­க­ளது வாக்­கினை சரி­பார்க்­கும் இயந்­தி­ரங்­க­ளும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கணினி குலுக்­கல் சுழற்சி முறை­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் கைபேசி செயலி மூல­மாக ஸ்கேன் செய்­யப்­பட்டு, சரி­பார்க்­கப்­பட்டு தொடர்­பு­டைய சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்கு அர­சி­யல் கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­க­ளின் முன்­னி­லை­யில் அனுப்­பப்­பட்டு வரு­கி­றது.  இதன் முதற்­கட்­ட ­மாக இன்று மட்­டும் 8 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மீத­முள்ள 8 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்­கான மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் ஞாயிற்­றுக்­கி­ழமை அனுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. கொண்டு செல்­லப்­ப­டும் மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் தேர்­தல் நடத்­தும் அலு­வ­லர்­க­ளின் கட்­டுப்­பாட்­டில் உள்ள பாது­காப்பு அறை­யில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சி­யல் கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­கள் முன்­னி­லை­யில் மூடி சீல் வைக்­கப்­ப­டும். மேலும், 19,500 வாக்­குச்­சா­வடி அலு­வ­லர்­க­ளுக்கு நாளை பயிற்சி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கேள்வி: சென்­னை­யில் கூடு­த­லாக எவ்­வ­ளவு மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் மற்­றும் வாக்­கா­ளர் தங்­க­ளது வாக்­கினை சரி­பார்க்­கும் இயந்­தி­ரங்­கள் இருக்­கி­றது? பழுது ஏற்­ப­டும் நிலை­யில் எவ்­வ­ளவு இயந்­தி­ரம் கையி­ருப்­பில் உள்­ளன?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">டிசம்­பர் மாதம் மூன்று வாரத்­தி­லி­ருந்து ஜன­வரி முதல் வாரம் வரை இந்த இயந்­தி­ரங்­க­ளில் முதல்­நிலை சரி­பார்க்­கும் பணி பெல்ஸ் பொறி­யா­ளர்­கள் மூல­மாக மேற்­கொள்­ளப்­பட்டு, சரி­பார்க்­கப்­பட்ட மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் மட்­டும் சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்குஅனுப்பி வைக்­கப்­ப­டு­கி­றது.  20% மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­க­ளும், 30% வாக்­கா­ளர் தங்­க­ளது வாக்­கினை சரி­பார்க்­கும் இயந்­தி­ரங்­க­ளும் கூடு­த­லாக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.  போது­மான இயந்­தி­ரங்­கள் கையி­ருப்­பில் உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கேள்வி: சென்­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட இடங்­க­ளைத் தவிர தனி­யார் இடங்­க­ளில், நட்­சத்­திர விடு­தி­கள்,ஹோட்­டல்ல அர­சி­யல் நிகழ்ச்சி நடத்­து­ற­துக்கு அனு­மதி இருக்கா? இல்ல அதுக்கு அனு­மதி வாங்­கு­ற­துக்கு வழி­முறை இருக்கா?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நட்­சத்­திர விடு­தி­கள் மற்­றும் ஹோட்­டல்­க­ளில் பொது நிகழ்ச்­சி­கள் நடத்­து­வ­தற்கு தடை­யில்லை.  தேர்­தல் தொடர்­பான கூட்­டங்­கள் மற்­றும் அர­சி­யல் கட்சி தேர்­தல் தொடர்­பான நிகழ்ச்­சி­க­ளுக்கு அனு­ம­தி­யில்லை.  அர­சி­யல் கட்­சி­கள் கூட்­டங்­கள் நடத்­து­வ­தற்கு காவல்­து­றை­யி­ன­ரால் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்ள பொது இடங்­க­ளில் மட்­டும் Suvidha செயலி மூலம் 48 மணி­நே­ரத்­திற்கு முன்­ன­தாக விண்­ணப்­பித்து அனு­மதி பெற­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கேள்வி: தமி­ழக வெற்­றிக் கழ­கத் தலை­வ­ருக்கு அனு­மதி கேட்­டு­ருக்­காங்க, அது வழங்­கப்­பட்­டி­ருக்கா? என்ன பண்­ணி­ருக்­காங்க?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தேர்­தல் நடத்தை விதி­க­ளி ன்­படி, எந்த கட்­சி­கள் மற்­றும் தனி­ந­பர்­கள் தேர்­தல் தொடர்­பான நிகழ்ச்­சி­கள் நடத்­திட Suvidha செயலி மூலம் 48 மணி­நே­ரத்­திற்கு முன்­ன­தாக விண்­ணப்­பிக்க வேண்­டும்.  மேலும், தொடர்­பு­டைய கட்­சி­கள் சார்­பாக மேடை அமைத்­தல் மற்­றும் பிரம்­மாண்­ட­மாக நடத்­தப்­ப­டும் நிகழ்ச்­சி­க­ளுக்கு பொதுப்­ப­ணித்­து­றை­யின் அனு­மதி மற்­றும் பொது­மக்­க­ளுக்கு எந்­த­வித தொந்­த­ர­வும் இல்­லாத வகை­யில் காவல்­து­றை­யின் தடை­யின்­மைச் சான்­றும் பெற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நிறைய விண்­ணப்­பங்­கள் அனு­மதி கேட்டு வந்­துள்­ளன.  அவற்­றிற்கு அனு­மதி வழங்கி வரு­கி­றோம். காவல்­துறை அனு­ம­திக்­கப்­பட்ட இடங்­கள் தவிர்த்து மற்ற இடங்­க­ளில் அனு­மதி கேட்­டால் அவை நிரா­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­க­ளும் சம்­பந்­தப்­பட்ட நபர்­க­ளுக்கு தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கேள்வி: அனு­மதி வழங்­கு­வ­தற்கு தேர்­தல் நடத்­தும் அலு­வ­லரே முடி­வெ­டுப்­பாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தேர்­தல் நடத்­தும் அலு­வ­லர் தான் அனு­மதி கொடுக்க வேண்­டும்.  தேர்­தல் தொடங்­கி­ய­வு­டன் அனு­மதி வழங்­கு­வது முழு­வ­தும் தேர்­தல் நடத்­தும் அலு­வ­ல­ரைச் சார்ந்­தது.  தொடர்­பு­டைய துறை­கள் தடை­யின்­மைச் சான்று வழங்­கிய உட­னேயே தேர்­தல் நடத்­தும் அலு­வ­லர் அனு­மதி வழங்­கி­டு­வார். தடை­யின்­மைச் சான்று வழங்­கு­வ­தற்கு கால­தா­ம­த­மா­னால் மாவட்ட தேர்­தல் அலு­வ­லரை சம்­பந்­தப்­பட்ட கட்­சி­யி­னர் தொடர்பு கொள்­ள­லாம்.  அனு­மதி பெறு­வ­தற்கு விண்­ணப்­பித்த விண்­ணப்­ப ங்­கள் அனைத்­தும் சரி­யாக இருந்­தால் மூன்று அல்­லது நான்கு மணிநேரங்­க­ளில் கூட அனு­ம­தி­ய­ளித்­துள்­ளோம்.  Suvidha செய­லி­யில் மூல­மா­கவே அனு­மதி பெற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கேள்வி: நட்­சத்­திர வேட்­பா­ளர்­கள், விஜய் மாதிரி நடி­கர்­கள் வேட்­பா­ளர்­களா உள்­ள­வர்­க­ளுக்கு தேர்­தல் பிரச்­சா­ர த்­தின் போது கூடு­தல் பாது­காப்பு இருக்­குமா? ஏன்னா ஏற்­க­னவே பல அசாம்­பா­வி­தங்­கள் நடந்­தி­ருக்கு...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இது­போன்ற நட்­சத்­திர வேட்­பா­ளர்­கள் பிர­சா­ரத்­திற்கு காவல்­து­றை­யி­னர் போது­மான காவல்­து­றை­யி­னரை பாது­காப்பு பணி­யில் ஈடு­ப­டுத்தி பொது­மக்­க­ளுக்கு இடை­யூறு இல்­லா­த­வ­கை­யில் பாது­காப்­பினை வழங்­கு­வார்­கள் எனத் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­நி­கழ்­வில் கூடு­தல் மாவட்ட தேர்­தல்/இணை ஆணை­யா­ளர்  (கல்வி) திரு­மதி க.கற்­ப­கம்,  மாவட்ட வரு­வாய் அலு­வ­லர்­கள் விஜய்­பாபு, திரு­மதி நா. பூஷ்­ணா­தேவி மற்­றும் அலு­வ­லர்­கள் உட­னி­ருந்­த­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>