<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,65,956,997" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Mar 28 2026 22:59:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260329T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="29032026-VLR-09" position.sequence="09" ex-ref="29032026-VLR-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="32">கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="31">‘‘வெல்வோம் 200-படைப்போம் வரலாறு!’’</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup279155_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16.5">க</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், 2021 ஆம் ஆண்டு தன்னுடைய தலைமையில், தமிழ்நாட்டில் பெற்ற வெற்றியினைத் தொடர்ந்து வெற்றிப்படிக்கட்டுகளில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு விளக்கம் தேவையில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள தமிழ்நாட்டிற்கான சட்டமன்றத் தேர்தல், புதியச் சட்டமன்றத்திற்கான தேர்தல் எனினும், சித்தாந்த அடிப்படையில் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கும் தமிழ்நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் ஆகிய தமிழின அடிப்படை கருத்தியலை, இயங்கு சக்தியாக கொண்ட “திராவிட மாடல்” ஆட்சியின் வீச்சுக்கும் நடைபெறவிருக்கும் கருத்தியல் போர்க்களம்தான் 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 23ஆம் நாள் நடைபெறவுள்ள தேர்தல்களமாகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த உண்மையை தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்தவர்கள் புரியாதவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும். இந்தப் பணியென்பது ஜனநாயகக் கடமை மட்டுமல்ல, மீண்டும் தமிழ்நாடு வேதகால-சனாதன-வர்ணாசிரமக் கோரப்பிடியில் சிக்கிவிடக்கூடாது, ஆம்! வெடித்துச் சிதறிய எரிமலைச் சிதறல்களால் தாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு ஆக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்கான தன்மான-இனமான-சுயமரியாதைப் போர்க்களம்தான் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களமாகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பா.ஜ.க அரசால் ஏவிவிடப்படும் வேதகால கலாச்சார படையெடுப்பைத் தடுத்து, தகர்த்து தமிழ்நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமையும், விழிப்புணர்வும் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்பதை உளமாற உணர்ந்து இந்தக் கலாச்சார படையெடுப்பைத் தடுத்து நிறுத்தி தன்மானத் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான “திராவிட மாடல்” அரசை உறுதிசெய்ய வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்நாட்டில் திராவிடமுன்னேற்றக் கழகக் கூட்டணியைஎதிர்த்துக் களம்காணும் அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழர்களின் நலன்களை காவு கொடுத்தாவது தமிழ் 
நாட்டின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற வணிக நோக்கத்தை அச்சாணியாக்கி, அரசியல் தேரோட்டத்தில் வடம்பிடித்து இழுப்பவர்கள்தான். இவர்கள் எப்பொழுது இழுக்க வேண்டும், எப்படி இழுக்க வேண்டும் என்பதற்கான “வெள்ளை வீசும்” அதிகாரம் ஒன்றிய பாரதீயக் கட்சியின் ஆட்சியில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் உண்டு என்ற அடிமை சாசனம்தான், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் ஒப்பந்தமாகும். (National Democratic Alliance)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு நிரந்தரமான கொள்கை- கோட்பாடுகள், வழிமுறைகள் உண்டா, என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்? ஒரு அரசியல் இயக்கம் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்கு சட்டவடிவம் கொடுத்து மக்களுக்கு பயன்படும் வகையிலும், பாதுகாக்கும் முறையிலும், செயல்படுத்துவதற்குதான், தேர்தல் மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆம்! அதன்படி செயல்படுத்தும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையேற்றுள்ள இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எந்தக் கொள்கை முடிவை சட்டங்கள் மூலம் அமல்படுத்தவுள்ளது என்பதை இதுவரையில், அ.தி.மு.க தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளதா? இல்லை! ஏன்? சட்டியில் இல்லை எனவே அகப்பையில் வரவில்லை, என்றைக்கும் வரப்போவதில்லை! ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் இப்படி கேட்க இயலுமா? நிச்சயமாக இயலாது. காரணம் திராவிட மாடல் ஆட்சியின் தலைவர் தொடர்ந்து “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில்சுயாட்சி” என்கின்ற அரசியல் கோட்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது மட்டுமல்ல, இந்தக் கோட்பாட்டை இந்திய ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இதற்கான விளக்கங்களையும், ஆய்வறிக்கைகளையும் வெளியிட்டு இந்திய ஒன்றியம் முழுமையும், இந்த அரசியல் கோட்பாடு குறித்து விழிப்படைய செய்தது மட்டுமல்ல, இந்தக் கோட்பாட்டை அரசியல் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கான அரசியல் சட்டத் திருத்தம் அவசியம் (Constitutional Amendment) என வலியுறுத்திக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியின் தலைவர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை யாரால் மறைக்க முடியும், அல்லது மறுக்க முடியும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்தக் கூட்டாட்சி முறைதான் இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமையை நிரந்தரமாக காப்பாற்ற முடியும், மாநிலங்களும், தன்நிறைவோடு, அரசியல் பயணத்தைத் தொடரமுடியும் என்பதை எந்தச் சூழ்நிலையிலும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருப்பது திராவிட முன்னேற்ற கழகம்தான் என்பதையும், அதற்கான அரசியல் ஆதாரங்களையும், அரசியல் சட்ட அறிஞர்களின் அறிக்கைகளையும், போராட்டங்களையும், முன்னெடுத்து மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கிக் கொண்டிருப்பதை யாரால் மறுக்கவியலும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆட்சி மொழிப் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கென தெளிவானதும், தீர்க்கமானதுமான கொள்கை உண்டு. அது மட்டுமல்ல நம் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு எள் முனையளவு சேதம் ஏற்படுத்த முயற்சித்தாலும், இந்தி மொழியை தமிழ்நாட்டில் திணிக்க முற்பட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகம், விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் போர்க்களம் காண்பதற்கு தயாராகும் இயக்கம் என்பதை கடந்தகாலத்தில் நிரூபித்து வரலாறு படைத்த இயக்கம் மட்டுமல்ல, இனியும் அதற்கு தயாராக வுள்ள இயக்கம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேசிய கூட்டணிக்கு இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தலைமை தாங்கும்அ.தி.மு.க-.வும் எடப்பாடி பழனிச்சாமியும் இந்தி திணிப்பினை எதிர்த்து இத்தகைய முடிவினை எடுக்க முடியுமா? என்பதையும் அதற்கு பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொள்ளுமா என்பதையும், இந்த தேர்தலில் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது என்பதை இந்த கட்டுரையின் மூலம் நினைவு படுத்த விரும்புகிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஏட்டிக்குப் போட்டியாக விலையில்லா பொருட்களை தனது தேர்தல் அறிக்கையில் வழங்கியுள்ளார்கள். அதில், ஒன்றுதான் “பிரிட்ஜ்”. எடப்பாடியார் தொலைநோக்குச் சிந்தனையோடு, தன்னுடைய கூட்டணியும், சின்னங்களும் காலப்போக்கில் அழுகிப்போகாமல், கருகிப்போகாமல் இருக்க, தங்களின் கூட்டணிப் பாதுகாப்புக் கருதியும் இப்படி அறிவித்திருக்கிறார் என்று மக்கள் பொதுவிடங்களில் நகைச்சுவையாக விமர்சிப்பதை பார்க்கவும், கேட்கவும் முடிகிறது. எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியை அவர்களது விருப்பப்படி வாக்காளர்கள் “பிரிட்ஜில்” வைத்துவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குப் பெரும் வெற்றியினை வழங்குவார்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை!!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, அனைத்து மக்களும் அணிவகுப்போம், தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="11.5">வெல்வோம் 200 !</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="11.5">படைப்போம் வரலாறு!!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>