<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,162,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 31 2026 03:32:23 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260331T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="31032026-CBE-05" position.sequence="05" ex-ref="31032026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="47">வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="139">இல்லத்தரசிகளுக்கு  ரூ. 8000 கூப்பன்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="44">கழகத் தலைவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கழகத் தேர்தல் அறிக்கையில் உறுதி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame282693_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup283225_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="cmphoto1_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை,மார்ச் 31 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கழ­கத் தலை­வர், முதல்­வர்  மு.க.ஸ்டாலின்  
அவர்­கள், நேற்று முன்தினம் அண்ணா அறி­வா­ல­யத்­தில் சட்­ட­மன்­றத் தேர்­தல் – 2026–க்கான கழ­கத் தேர்­தல் அறிக்­கையை வெளி­யிட்­டார். அதில் புது­மைப்­பெண், தமிழ்ப்­பு­தல்­வன் திட்ட உத­வித்­தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்­கப்­ப­டும்!, 5 ஆண்­டு­க­ளில் 35 லட்­சம் மாண­வர்­க­ளுக்கு மடிக்­க­ணினி!, அரசு ஊழி­யர்­க­ளுக்கு உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட ஓய்­வூ­தி­யத் திட்­டம் சிறப்­பா­கச் செயல்­ப­டுத்­தப்­ப­டும்! என்­பன 
உள்­ளிட்ட பல்­வேறு உறு­தி­மொ­ழி­கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தேர்­தல் வாக்­கு­று­தி­கள் வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">1. மாநில உரி­மை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் தனது அழியா சாச­ன­மாக எழு­தி­ய­து­தான் மாநில சுயாட்­சிக் கொள்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">‘மாநி­லத்­தில் சுயாட்சி – மத்­தி­யில் கூட்­டாட்சி’ என்­பதை ஐம்­பெ­ரும் முழக்­கங்­க­ளில் ஒன்­றாக தலை­வர் கலை­ஞர் தனது வாழ்­நாள் முழுக்க வலி­யு­றுத்தி வந்­தார்­கள். இந்­தி­யாவை வலி­மைப்­ப­டுத்த இக்­கொள்­கையே அடிப்­ப­டை­யா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இக்­கொள்­கையை உறு­தி­யு­டன் உரு­வாக்­கிச் செயல்­ப­டுத்­திட அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தி­ருத்­தம் அவ­சி­யம் என்­ப­தால், அதற்­கான வழி­மு­றை­களை ஆராய உச்­ச­நீ­தி­மன்ற ஓய்­வு­பெற்ற நீதி­ய­ர­சர் குரி­யன் ஜோசப் தலை­மை­யி­லான குழு அமைத்­தது திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இக்­குழு தனது அறிக்­கை­யின் முதல் தொகு­தியை தமிழ்­நாடு அர­சுக்கு அளித்­துள்­ளது. ஒன்­றிய அர­சின் மித­மிஞ்­சிய அதி­கா­ரக் குவிப்­பை­யும் – மாநில உரி­மை­கள் அதி­வே­க­மா­கப் பறிக்­கப்­ப­டு­வ­தை­யும் அந்த அறிக்கை சுட்­டிக்­காட்­டு­கி­றது. அர­சி­யல் நெறி­மு­றை­யற்ற இந்­தப் போக்­கைச் சீர்­செய்ய எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் குறித்­தும், அந்த அறிக்கை பட்­டி­ய­லிட்­டுள்­ளது. 1991–ஆம் ஆண்டு ஏற்­பட்ட பொரு­ளா­தா­ரச் சீர்­தி­ருத்­தத்­தின் தாக்­கம் மிகுந்­துள்ள ஓர் அர­சி­ய­ல­மைப்­பில், அடிப்­படை மாற்­றம் ஏற்­பட வேண்­டிய காலக்­கட்­டம் இது என்­ப­தை­யும் அந்த அறிக்கை வலி­யு­றுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­திய அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்ட வர­லாற்­றுச் சூழல் வேறு என்­றும், இன்­றைய சூழல் வேறு என்­றும் எடுத்­து­ரைக்­கும் அந்த அறிக்கை, இந்­தியா போன்ற பல தேசிய இனங்­கள் வாழும் நாட்­டில், வலு­வான ஒற்றை அர­சு­முறை மிக­வும் ஆபத்­தா­னது என்­றும் எச்­ச­ரிக்­கி­றது. மாறாக, மிக வலு­வான ஒரு கூட்­டாட்­சி­தான் இன்­றைய தேவை என்­ப­தை­யும் அக்­கு­ழு­வின் அறிக்கை பரிந்­து­ரைக்­கி­றது. இதன் தொடர்ச்­சி­யாக திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஓய்­வு­பெற்ற உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர் குரி­யன் ஜோசப் தலை­மை­யி­லான குழு பரிந்­து­ரை­களை, நாடு தழு­விய விவா­தப் பொரு­ளாக்கி, ஒன்­றிய அர­சின் எதேச்­சா­தி­கா­ரப் போக்­கைத் தடுத்து நிறுத்தி, மாநில உரி­மை­களை நிலை­நாட்­டிட, உடன்­பா­டான கருத்­துள்ள இயக்­கங்­க­ளு­டன் இணைந்து செயல்­பட்டு, அதற்­குத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் கழ­கம் மேற்­கொள்­ளும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">1.‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற திட்­டத்தை ஒன்­றிய அரசு கைவிட வேண்­டும். ஆங்­கி­ல­மும், தாய்­மொ­ழி­யும் கொண்ட இரு­மொ­ழிக் கொள்­கைக்கு மாற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">2.ஆங்­கி­லம் நிரந்­தர ஆட்­சி­மொ­ழி­க­ளில் ஒன்­றாக இருக்க வேண்­டும். எட்­டா­வது அட்­ட­வ­ணை­யில் உள்ள அனைத்து மொழி­க­ளை­யும் ஆட்­சி­மொ­ழி­யாக அறி­விக்க வேண்­டும். ஆங்­கி­லம் மட்­டுமே ஒன்­றிய – மாநில அர­சு­க­ளுக்கு இடையே இணைப்பு மொழி­யாக இருக்க வேண்­டும் என தி.மு.க. தொடர்ந்து போரா­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">3.உயர்­நீ­தி­மன்­றங்­க­ளில் அம்­மா­நில மொழி, நீதி­மன்ற மொழி­யா­கப் பயன்­ப­டுத்­தப்­பட அனு­ம­திக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">4.1971 மக்­கள்­தொ­கைக் கணக்­கெ­டுப்­பின் அடிப்­ப­டை­யில் மட்­டுமே நிதிக்­குழு பரிந்­துரை செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">5.‘ஒரே நாடு ஒரே தேர்­தல்’ என்­ப­தைக் கைவிட்டு அதற்­கான சட்ட முன்­வ­ரை­வைத் திரும்­பப் பெற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">6.கல்­வியை மாநி­லப் பட்­டி­ய­லுக்கு மாற்ற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">7.பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் நிய­ம­னங்­களை மாநில அரசே செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">8.மருத்­து­வம் உள்­ளிட்ட உயர்­கல்­விக்­கான தேசிய நுழை­வுத் தேர்­வு­கள் அனைத்­தை­யும் ரத்து செய்ய வலி­யு­றுத்­து­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">9.சரக்கு மற்­றும் சேவை வரி­யின் ஒரு­பக்க சார்­பி­னைக் குறைத்து கூட்­டாட்சி சம­நி­லையை உரு­வாக்க வலி­யு­றுத்­து­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">10.சரக்கு மற்­றும் சேவை வரி வரு­வா­யில் தற்­போது மாநி­லங்­க­ளுக்கு உள்ள பங்­கினை 50 விழுக்­காட்­டி­லி­ருந்து 70 விழுக்­கா­டாக உயர்த்த வலி­யு­றுத்­து­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">2. சமூ­க­நீதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">‘குலத்­துக்கு ஒரு நீதி என்­பது அநீ­தியே’ என்­பதை முழங்கி எழுந்­ததே திரா­விட இயக்­கம். “சமூ­க­நீதி சமு­தா­யத்­தில் முன்னே உயர்ந்­த­வர்­களை கீழே இறக்கி விடு­வது அல்ல. பள்­ளத்­தைத் சமப்­ப­டுத்தி மேடு ஆக்­கு­வதே சமூ­க­நீதி எனப்­ப­டும் இட­ஒ­துக்­கீடு” என விளக்­கி­னார் தந்தை பெரி­யார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இட ஒதுக்­கீடு எனப்­ப­டும் சமூ­க­நீ­திக் கொள்­கை­யா­னது யாரா­லும் கைவைக்க முடி­யாத கொள்­கை­யாக மாற திரா­விட இயக்­கத்­தின் தொடர் போராட்­டங்­கள்­தான் கார­ணம். இது இந்­திய அர­ச­மைப்­புச் சட்­டம் ஏற்­றுக்­கொள்­ளும் கொள்­கை­யாக மாற­வும் திரா­விட இயக்­கத் தலை­வர்­க­ளின் போராட்­டமே கார­ணம். இன்று அகில இந்­தியா முழு­மைக்­கும் இக்­கொள்கை நடை­மு­றைக்கு வர முன்­னோடி மாநி­ல­மா­கத் தமிழ்­நாடே இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இட­ஒ­துக்­கீட்டு கண்­கா­ணிப்பு ஆணை­யம் அமைத்­தது திரா­விட மாடல் அரசு. இதன் தொடர்ச்­சி­யாக மேலும் பல முன்­னெ­டுப்­பு­களை எடுக்க வேண்­டி­யது அவ­சி­யம் என திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் கரு­து­கி­றது. இதன் தொடர்ச்­சி­யாக, திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இட­ஒ­துக்­கீட்டை முழு­மை­யாக எல்லா நிலை­க­ளி­லும் நடை­மு­றைப்­ப­டுத்­திட அனைத்து முயற்­சி­க­ளை­யும் மேற்­கொள்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர்­கள் நிய­ம­னத்­தில் சமூ­க­நீ­தியை நிலை­நாட்­டிட இட­ஒ­துக்­கீடு முறை­யைக் கொண்டு வரு­வ­தற்­குத் தேவை­யான அர­சி­யல் சட்­டத்­தி­ருத்­தம் மேற்­கொள்ள ஒன்­றிய அரசை வலி­யு­றுத்­து­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஒன்­றிய அர­சின் உயர்­ப­த­வி­க­ளி­லும், பொதுத்­துறை நிறு­வ­னங்­கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ், தேசிய சட்­டப்­பள்­ளி­கள் போன்ற உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளி­லும் மண்­டல் கமி­ஷன் பரிந்­து­ரைப்­படி இதர பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்­பி­ன­ருக்கு 27% இட­ஒ­துக்­கீடு முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­டாத அநீ­தியை எதிர்ப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சட்­ட­பூர்­வ­மா­கத் தரப்­பட்­டுள்ள இட­ஒ­துக்­கீடு எண்­ணிக்­கை­யா­னது முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும்; அது தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆதி­தி­ரா­வி­டர், பழங்­கு­டி­யி­னர், பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மற்­றும் சீர்­ம­ர­பி­னர் ஆகிய மாண­வர்­க­ளுக்­கான கல்வி உத­வித்­தொகை உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆதி­தி­ரா­வி­டர், பழங்­கு­டி­யி­னர் மற்­றும் மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், சீர்­ம­ர­பி­னர்  பெண்­க­ளுக்­கான தொழில்­வாய்ப்­பு­க­ளைப் பெருக்­கு­வ­தற்­கான திட்­டங்­கள் விரி­வு­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்­டி­லுள்ள மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளில் அகில இந்­திய ஒதுக்­கீடு நடை­மு­றையை மாற்றி, அதற்­குப் பதி­லாக மாநில அர­சின் இட­ஒ­துக்­கீடு கொள்­கை­யைப் பின்­பற்­றிட ஒன்­றிய அரசை வலி­யு­றுத்­து­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தேசிய மக்­கள்­தொ­கைக் கணக்­கெ­டுப்­பு­டன் எடுக்­கப்­ப­ட­வுள்ள சாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்­பின் தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் உரிய பிர­தி­நி­தித்­து­வம் கிடைப்­ப­தற்­கான வழி­வகை செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆண்­டுக்கு ரூ. 20 இலட்­சத்­திற்கு மேல் ஊதி­யம் பெறும் உயர்­நி­லைப் பணி வாய்ப்­பு­களை ஆதி­தி­ரா­வி­டர், பழங்­கு­டி­யி­னர் மற்­றும் மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், சீர்­ம­ர­பி­ன­ருக்கு  வழங்­கும் தனி­யார் நிறு­வ­னங்­க­ளுக்கு முத­லீட்டு ஊக்க மானி­யம் மற்­றும் இதர சலு­கை­கள் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">3. கலை மற்­றும் பண்­பாடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு என்­பது தமிழ் அர­சாக, தமி­ழி­னத்­தின் அர­சாக எப்­போ­தும் செயல்­பட்டு வரு­கி­றது. தாய்­நி­லத்­துக்கு தமிழ்­நாடு என்று பெயர் சூட்­டி­னார் பேர­றி­ஞர் அண்ணா. நூறாண்டு கோரிக்­கை­யான செம்­மொ­ழிக் கோரிக்­கையை நிறை­வேற்­றிக் காட்­டி­னார் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அதன் தொடர்ச்­சி­யாக இனத்­துக்­கும், மொழிக்­கும், கலைக்­கும், பண்­பாட்­டுக்­கும் தொண்­டாற்றி வரு­கி­றது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். தமி­ழர் பெரு­மையை ஆய்­வு­க­ளின் மூல­மாக உல­க­ள­வில் நிலை­நாட்­டும் கட­மை­யைச் செய்து வரு­கி­றது. இதன் தொடர்ச்­சி­யாக திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நாட்­டுப்­பு­றக் கலை­கள், வாழ்­வி­யல் மர­பு­கள், கட்­ட­டக்­கலை, தொல்­லி­யல் மற்­றும் இலக்­கி­யத் தர­வு­களை ஒருங்­கி­ணைக்­கப் பல்­வேறு துறை­களை உள்­ள­டக்­கிய “ஒருங்­கி­ணைந்த பண்­பாட்டு ஆணை­யம்” (Heritage Commission) அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நாட்­டுப்­பு­றக் கலைத்­துறை, கலைப் பண்­பாட்­டுத்­துறை, சுற்­று­லாத்­துறை மற்­றும் தொல்­லி­யல்­துறை ஆகி­ய­வற்­றின் செயல்­பா­டு­கள் ஒரு­மு­கப்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கலைத் திற­னாய்வு குறித்த குறு­கி­ய­கா­லப் படிப்­பு­கள் (Art Appreciation Courses) தொடங்­கப்­ப­டும். தொல்­லி­யல் மற்­றும் ஆன்­மீ­கச் சுற்­று­லாக்­க­ளுக்­கான சிறப்பு வழி­காட்­டி­கள் (Special Guides) உரு­வாக்­கப்­ப­டு­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பண்­பாட்டு நிகழ்­வு­கள், இசை மற்­றும் நட­னக் கலை­க­ளைக் காணொளி வாயி­லாக ஆவ­ணப்­ப­டுத்தி, உல­க­ளா­விய தரத்­தில் மின்­நூ­ல­கம் (Digital Library) அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நாட்­டுப்­பு­றக் கலை­ஞர்­க­ளின் குழந்­தை­கள் உயர்­கல்வி பெறு­வதை உறு­தி­செய்­தி­டும் வகை­யில் சிறப்­புத் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பள்ளி, கல்­லூரி மாண­வர்­க­ளி­டையே தமிழ்ப் பண்­பாட்டு மர­பு­சார் கலை­க­ளைக் கொண்டு சேர்த்­தி­டும் வகை­யில் ‘தமிழ்ப் பண்­பாட்­டுப் பய­ணம்’ என்ற திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாடு நாட்­டுப்­பு­றக் கலை­கள் நல­வா­ரி­யச் செயல்­பாட்­டினை மேலும் மேம்­ப­டுத்­தும் பொருட்டு அரசு மூலம் கூடு­தல் நிதி­யு­தவி ரூ. 5 கோடி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">4. தமிழ் வளர்ச்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி தமி­ழின் ஆட்­சி­யா­கவே எப்­போ­தும் இருந்­துள்­ளது. மனோன்­ம­ணீ­யம் சுந்­த­ர­னார் எழு­திய ‘நீரா­ரும் கட­லு­டுத்த’  பாட­லைத் தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாட­லாக அரை­நூற்­றாண்­டுக்கு முன் அறி­வித்­தார் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர். அந்­தப் பாடலை தமிழ்­நாட்டு மாநி­லப் பாட­லாக அறி­வித்­துள்­ளார் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின். அனைத்­துப் போட்­டித் தேர்­வு­க­ளி­லும், தமிழ்­மொ­ழிப் பாடம், தகு­தித் தேர்­வாக கட்­டா­யம் என ஆக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ்ப் பரப்­பு­ரைக் கழ­கம் தொடங்­கப்­பட்­டுள்­ளது. தமிழ்­நூல்­கள் நாட்­டு­டைமை, எழுத்­தா­ளர்­கள் பிறந்­த­நா­ளில் கூட்­டங்­கள், குறைந்த விலை­யில் சங்க இலக்­கிய நூல்­கள் வெளி­யீடு, திரா­வி­டக் களஞ்­சி­யம் உரு­வாக்­கம், இத­ழி­ய­லா­ளர்க்கு கலை­ஞர் எழு­து­கோல் விருது, உல­கப் பல்­க­லைக் கழ­கங்­க­ளில் செம்­மொ­ழித் தமிழ் இருக்­கை­கள், நூல­கங்­க­ளுக்கு சிற்­றி­தழ்­கள், இலக்­கி­ய­மா­மணி விரு­து­கள், உய­ரிய விருது பெற்ற எழுத்­தா­ளர்க்கு கனவு இல்­லம், திசை­தோ­றும் திரா­வி­டம், முத்­த­மி­ழ­றி­ஞர் மொழி­பெ­யர்ப்­புத் திட்­டம் – எனத் தமி­ழுக்­காக  ஏரா­ள­மான திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. இதன் தொடர்ச்­சி­யாக திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">உயர்­த­னிச் செம்­மொ­ழி­யாம் அன்­னைத் தமி­ழின் சிறப்­பி­னைப் போற்­றி­டும் வகை­யில் பன்­னாட்­டுத் தமிழ் அறி­ஞர்­க­ளை­யும் மொழி வல்­லு­நர்­க­ளை­யும் கொண்டு சங்­கத்­த­மிழ் முதல் கணி­னித்­த­மிழ் வரை­யி­லான தமிழ்­மொ­ழி­யின் வளர்ச்­சி­யை­யும், அதன் எதிர்­கா­லப் பய­ணத்­திற்­கான பாதை­க­ளை­யும் வகுக்­கும் நோக்­கில் ‘செம்­மொழி மாநாடு’ சென்­னை­யில் சிறப்­பாக நடத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கலைச்­சொல்­லாக்க முயற்­சி­யின் ஒரு பகு­தி­யாக ஒவ்­வொரு துறை­சார்ந்­தும், பன்­னாட்டு ஆய்­வி­தழ்­க­ளில் வெளி­வ­ரும் முக்­கி­ய­மான கட்­டு­ரை­கள் உட­னுக்­கு­டன் மொழி­பெ­யர்த்து வெளி­யி­டப்­ப­டும். தமிழ் வழி­யில் உயர்­கல்வி பயி­லும் மாண­வர்­க­ளுக்­கும் ஆய்­வா­ளர்­க­ளுக்­கும் இது உத­வி­யாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நவீ­னத் தொழில்­நுட்ப வச­தி­க­ளு­டன் கூடிய தமிழ்­மொழி கற்­பித்­த­லுக்­கான ஆய்­வ­கங்­கள் பள்­ளி­க­ளில் உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ் மொழி­யி­யல், இலக்­கி­யத் துறை­க­ளில் நம்­பிக்­கைக்­கு­ரிய இளம் ஆய்­வா­ளர்­களை அடை­யா­ளப்­ப­டுத்­தும் வகை­யில், ஆண்­டு­தோ­றும் ஐந்து முனை­வர் பட்ட ஆய்­வே­டு­க­ளுக்­குப் பரி­சுத் தொகை­யு­டன் கூடிய விரு­து­கள் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ் மொழிப்­பற்று, தமிழ்­நாட்­டின் பண்­பாட்­டுக் கூறு­க­ளைச் சிறப்­பா­கக் காட்­சிப்­ப­டுத்­தும் திரைப்­ப­டங்­க­ளுக்கு ‘முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­வித்­த­கர்’ விருது வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">செயற்கை நுண்­ண­றிவு காலத்­தில், தமிழ்­மொ­ழிக்­கான பெரு­மொழி மாதி­ரி­களை (Large Language Models) உரு­வாக்­கிட உரை­கள், பேச்­சு­கள் (பல்­வேறு வட்­டார வழக்­கு­கள்), படங்­கள் ஆகி­ய­வற்­றைச் சேக­ரித்­துத் தர­வுக் களஞ்­சி­யம் உரு­வாக்­கப்­ப­டும். அதனை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு செயற்கை நுண்­ண­றி­வு­சார் மொழித் தொழில்­நுட்­பக் கரு­வி­கள் உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­மொ­ழிக்­கான செயற்கை நுண்­ண­றிவு மென்­பொ­ருள்­கள் உரு­வாக்­கத்தை ஊக்­கு­விக்க கல்வி நிறு­வ­னங்­க­ளில் ‘தமிழ்–­செ­யற்கை நுண்­ண­றிவு புத்­தாய்வு நிதி­நல்கை’ (Tamil–AI Fellowship)  வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மொழிப்­போ­ராட்ட வர­லாற்­றினை இளைய தலை­மு­றை­யி­னர் அறிந்து கொள்­ளும் வகை­யில் ரூ. 10 கோடி மதிப்­பீட்­டில் நவீன நூலக வச­தி­க­ளு­டன் கூடிய ஒரு காட்­சிக்­கூ­டம் கோவை மாவட்­டம் பொள்­ளாச்­சி­யில் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பல்­வேறு துறை­க­ளி­லும் புதி­தாக அறி­மு­க­மா­கும் கோட்­பா­டு­கள், கண்­டு­பி­டிப்­பு­கள், தொழில்­நுட்­பங்­கள் தொடர்­பு­டைய கலைச்­சொற்­க­ளுக்கு இணை­யான தமிழ்ச் சொற்­க­ளைப் பரிந்­து­ரைக்க அந்­தந்­தத் துறை­சார்ந்த வல்­லு­நர்­க­ளோடு தமி­ழ­றி­ஞர்­க­ளும் இணைந்த ஒரு நிரந்­த­ரக் குழு உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஒன்­றிய அரசு ‘பார­திய பாஷா பரி­வார்’ என்ற அமைப்­பின் மூலம் எல்லா இந்­திய மொழி­க­ளை­யும் ஒன்­றி­ணைத்து இவை எல்­லா­வற்­றிற்­கும் தாய்­மொழி சமற்­கி­ரு­தம்­தான் என நிறுவ முயற்­சிக்­கின்­றது. தமிழ் உள்­ளிட்ட திரா­விட மொழி­க­ளின் தனித்­து­வத்­தை­யும், அவற்­றின் பண்­பாட்­டுக் கூறு­க­ளை­யும் காக்க தி.மு.க தொடர்ந்து பாடு­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">5. தொல்­லி­யல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மறைக்­கப்­பட்ட தமி­ழர் வர­லாற்றை – சங்­கத்­த­மிழ் காட்­சிப்­ப­டுத்­திய தமி­ழ­ரின் பெரு­மை­களை அறி­வி­யல்­பூர்­வ­மாக நிலை­நாட்­டு­வதே நமது நோக்­கம். தமி­ழர் கடந்து வந்த பாதையை எடுத்­துக்­காட்டி, எதிர்­கா­லத்­துக்­கான வள­மான பாதையை வடி­வ­மைத்து வரு­கி­றோம். கீழடி அருங்­காட்­சி­ய­கம், பொருநை அருங்­காட்­சி­ய­கம் ஆகி­யவை இழந்த பெரு­மையை மீட்ட சாட்­சி­யங்­க­ளா­கக் காட்­சி­ய­ளிக்­கின்­றன. இதன் தொடர்ச்­சி­யாக திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மைசூர் கல்­வெட்­டுத் தர­வு­களை ஆவ­ணப்­ப­டுத்­து­தல்: மைசூ­ரில் உள்ள இந்­தி­யத் தொல்­லி­யல் துறை­யின் (ASI) கிளை அலு­வ­ல­கத்­தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ்க் கல்­வெட்­டுப் படி­கள் (Estampages) பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவற்­றில் டிஜிட்­டல் மய­மாக்­கப்­பட்ட கல்­வெட்­டு­களை, நீதி­மன்ற ஆணைப்­படி இந்­தி­யத் தொல்­லி­யல் துறை­யி­ட­மி­ருந்து பெறப்­ப­டும். இவற்றை முழு­மை­யாக ஆய்வு செய்து,  உரிய வர­லாற்று விளக்­கங்­க­ளு­டன் “தமிழ்­நாட்­டுக் கல்­வெட்­டுப் பெருங்­க­ளஞ்­சி­யம்” எனும் பெய­ரில் நூல் வரி­சை­க­ளாக வெளி­யிட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். இதன்­மூ­லம் இது­வரை அறி­யப்­ப­டாத தமிழ்­நாட்­டின் இடைக்­கால மற்­றும் பிற்­கால வர­லாற்­றுச் சான்­று­கள் பொது­மக்­க­ளின் பார்­வைக்­குக் கொண்டு வரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமி­ழர்­க­ளின் வர­லாற்­றுத் தொன்­மையை அறி­வி­யல்­பூர்­வ­மாக நிறு­வி­யுள்ள கீழடி அக­ழாய்வு குறித்த அறிக்­கையை விரை­வில் வெளி­யிட ஒன்­றிய அர­சைத் தொடர்ந்து வலி­யு­றுத்­து­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வர­லாற்­றுக்கு முற்­பட்ட கால இடங்­கள் (Pre–Historic Sites), நடு­கற்­கள் (Hero Stones) பாறை ஓவி­யங்­கள், சிற்­பங்­கள் மற்­றும் வர­லாற்­றுச் சின்­னங்­களை முழு­மை­யா­கக் கண்­ட­றிந்து, டிஜிட்­டல் முறை­யில் ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­டும். இவை அனைத்­தும் அர­சுப் பாது­காப்­பில் உள்ள நினை­வுச்­சின்­னங்­க­ளாக (Protected Monuments) அறி­விக்­கப்­பட்டு, ஆக்­கி­ர­மிப்­பு­க­ளி­லி­ருந்து மீட்­கப்­ப­டும். நம் முன்­னோ­ரின் வர­லாற்­றைப் பேசும் நடு­கற்­கள் போன்­ற­வற்­றுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">குமிழி, தூம்பு உள்­ளிட்­டவை தமி­ழர்­க­ளின் பண்­டைய நீர் மேலாண்­மைக்­குச் சான்­று­க­ளாக விளங்­கு­கின்­றன. அத­னு­டன் கிடைக்­கும் கல்­வெட்­டு­கள் யாவும் பாது­காக்­கப்­ப­டு­வ­தோடு, அவை மர­புச் சின்­னங்­க­ளாக அறி­விக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்­டின் அனைத்து நிலப்­ப­ரப்­பு­க­ளில் வர­லாறு மற்­றும் பண்­பாட்­டுக் கால­வ­ரி­சைப்­ப­டி­யான தொல்­லி­யல் தளங்­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் ஆய்­வு­கள் தொட­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தொல்­லி­யல் ஆய்­வில் அறி­வி­யல் தொழில்­நுட்­பங்­கள் பயன்­ப­டுத்­தும் வித­மாக, உயர்­நிலை கதி­ரி­யக்­கக் கரிம காலக்­க­ணிப்பு (AMS dating) ஆய்வு, மட்­பாண்ட ஆய்வு, மக­ரந்­தத் தூள்­கள் ஆய்வு ஆகிய ஆய்­வு­களை உள்­ள­டக்­கிய பன்­னாட்­டுத் தரத்­தில் ஓர் ஆய்­வ­கம் சென்­னை­யில் நிறு­வப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள பழங்­குடி மக்­க­ளுக்­கும் தமி­ழர்­க­ளுக்­கும் உள்ள மொழி­யி­யல் மற்­றும் பண்­பாட்டு ஒற்­று­மை­க­ளைக் கண்­ட­றிய மொழி­யி­ய­லா­ளர்­கள், தொல்­லி­ய­லா­ளர்­கள், மானு­ட­வி­ய­லா­ளர்­கள், கலை வர­லாற்று ஆய்­வா­ளர்­கள் ஆகி­யோ­ரைக் கொண்ட குழு அமைக்­கப்­பட்டு ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">6. இலங்­கைத்­த­மி­ழர் நலன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இலங்­கைத் தமி­ழர்­க­ளின் அர­சி­யல் சமூக உரி­மை­க­ளுக்­காகதொடர்ந்து குரல் கொடுத்து வரு­கி­றது கழ­கம். இதற்­காக ஆட்­சி­யையே இழந்த வர­லாறு கழ­கத்­துக்கு உண்டு. இலங்­கை­யில் நடை­பெற்ற இனப்­ப­டு­கொ­லை­யில் இருந்து தப்பி, தமிழ்­நாட்­டில் 40 ஆண்­டு­க­ளுக்­கும் மேலா­கத் தங்­கி­யுள்ள தமி­ழர்­க­ளுக்கு இருப்­பி­டம் – கல்வி – மருத்­து­வம் போன்ற உத­வி­களை மாநில அரசு வழங்கி வரு­கி­றது. அக­தி­கள் முகாமை மறு­வாழ்வு மைய­மா­கப் பெயர் மாற்­றம் செய்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">630 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 10,469 வீடு­கள் கட்ட அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்டு, இது­வ­ரை­யில் 5,920 வீடு­கள் கட்­டி­மு­டிக்­கப்­பட்டு முகாம் வாழ் மக்­க­ளுக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. மீத­முள்ள வீடு­க­ளுக்­கான கட்­டு­மா­னப் பணி­கள் நடை­பெற்று வரு­கி­றது. இதன் தொடர்ச்­சி­யாக திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">2019–ஆம் ஆண்டு இந்­திய அரசு கொண்­டு­வந்த குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டத்­தின்­படி, இலங்­கைத் தமி­ழர்­கள் குடி­யு­ரி­மைக் கோரும் விண்­ணப்­பங்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட மாட்­டாது என்ற நிலைப்­பாட்­டைக்­கை­வி­டு­மாறு ஒன்­றிய அரசை தி.மு.க. வலி­யு­றுத்­து­கி­றது. இலங்­கைத் தமிழ் மக்­கள் குடி­யு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்­கும்­போது, அவர்­க­ளி­டம் கட­வுச்­சீட்டு, நுழைவு அனு­மதி போன்­ற­வற்­றைக் கோரா­மல் தமிழ்­நாடு அரசு வழங்­கி­யுள்ள அடை­யாள அட்­டை­யைச் சான்­றா­தா­ர­மாக ஏற்க ஒன்­றிய அரசை தி.மு.க. கோரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இலங்­கைத் தமி­ழர்­கள் குடி­யு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்­க­வும் அத­னைச் சரி­பார்த்து மேல் நட­வ­டிக்கை எடுத்­தி­ட­வும் மாவட்ட அள­வில் அதி­கா­ரி­களை நிய­மிக்க தி.மு.க. கோரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­தி­யா­வில் குடி­பெ­யர்ந்து வாழும் ஈழத்­த­மி­ழர்­க­ளின் சட்­டப்­பூர்வ நிலை­யைத் தெளி­வா­கக் கூறிட ஒன்­றிய அரசை தி.மு.க. வலி­யு­றுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்­டில் பல ஆண்­டு­க­ளாக வசித்து வரும் இலங்கை தமி­ழர்­க­ளுக்கு இந்­தி­யக் குடி­யு­ரிமை வழங்­கிட ஒன்­றிய அர­சி­டம் தொடர்ந்து வலி­யு­றுத்­தப்­ப­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இலங்­கை­யில் கொண்­டு­வ­ரப்­ப­டும் அர­சி­ய­ல­மைப்­புச் சீர்­தி­ருத்­தங்­க­ளால் இலங்­கைத் தமிழ்ச் சமூ­கத்­துக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­க­ளைக் கருத்­தில் கொண்டு, இலங்­கைத் தமி­ழர் உரி­மை­க­ளைப் பாது­காத்­திட உரிய தூத­ரக நட­வ­டிக்­கை­களை இந்­திய அரசு உட­ன­டி­யாக எடுக்க வேண்­டும். பாரம்­ப­ரி­ய­மா­கத் தமி­ழர்­கள் வாழ்ந்து வந்த பகு­தி­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள மக்­கள்­தொகை மாற்­றங்­கள், நில அப­க­ரிப்­பு­கள், தமிழ் அடை­யா­ளத்­தின் சிதைவு ஆகி­ய­வைத் தடுக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>