<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,69,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 31 2026 03:46:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260331T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="31032026-CHN-13" position.sequence="13" ex-ref="31032026-CHN-13.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup289243_13_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup289412_13_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M1_13_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M3_13_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="M9_13_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஓர­ணி­யில் தமிழ்­நாடு என்ற முழக்­கத்­திற்­கேற்ப 22 கட்­சி­க­ளை­யும், அனைத்து சமூ­கத் தொகு­தி­க­ளை­யும் ஒருங்­கி­ணைத்து பிரம்­மாண்­ட­மான கூட்­ட­ணியை அமைத்­துள்­ளது தி.மு.க. அதன் பிற­கும் 164 தொகு­தி­க­ளில் தி.மு.க வேட்­பா­ளர்­கள் போட்­டி­யி­டு­கி­றார்­கள். மேலும் பதி­னோரு தொகு­தி­க­ளில் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் கூட்­டணி கட்சி வேட்­பா­ளர்­கள் போட்­டி­யி­டு­கி­றார்­கள். உதய சூரி­யன் சின்­னம் போட்­டி­யி­டும் தொகு­தி­கள் 175. பிற சின்­னங்­க­ளில் கூட்­டணி கட்­சி­கள் 59 தொகு­தி­க­ளில் போட்­டி­யி­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சிந்­தித்­துப் பார்த்­தால் இத்­தனை கட்­சி­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்தி, அவர்­கள் ஆமோ­திப்­பைப் பெற்று இப்­ப­டி­யொரு கூட்­டணி உரு­வாக்­கு­வது சுல­ப­மான காரி­ய­மல்ல என்­பது புரி­யும். இதனை முதல்­வர் ஸ்டாலின் சாதித்­துக் காட்­டி­யுள்­ளார். அத்­து­டன் வளர்ச்­சி­யும், நலத்­திட்­டங்­க­ளும் இணைந்த நம்­ப­க­மான, முதிர்ச்­சி­யான தேர்­தல் அறிக்­கை­யை­யும் வெளி­யிட்­டுள்­ளார். தி.மு.க கூட்­ட­ணி­யின் வெற்றி உறுதி செய்­யப்­பட்­ட­தா­கவே தோன்­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஸ்டாலின் சாத­னை­யின் அடிப்­படை வெறும் அர­சி­யல் பேர­மல்ல. சுய­நல, பதவி மோக அர­சி­யல் அல்ல. அப்­ப­டி­யி­ருந்­தி­ருந்­தால் இந்த கூட்­டணி சாத்­தி­ய­மா­கி­யி­ருக்­காது. இந்த கூட்­ட­ணி­யின் அடிப்­படை அழுத்­த­மான, ஆக்­க­பூர்­வ­மான கருத்­தி­யல் என்­ப­து­தான் முக்­கி­யம். அந்த கருத்­தி­ய­லின் அடிப்­ப­டை­கள் மூன்று: மதச்­சார்­பின்மை, சமூக நீதி, கூட்­டாட்­சி­யம். இந்த மூன்­றும் ஒன்­றி­யத்­தில் ஆட்சி செய்­யும் பாஜ­க-­வின் இந்­துத்­துவ, பார்ப்­ப­ன-­ப­னியா மேலா­திக்க ஆத­ரவு கருத்­தி­ய­லுக்கு முற்­றி­லும் எதி­ரா­னது என்­ப­து­தான் கூட்­ட­ணியை பிணைக்­கும் கருத்­தி­யல் சிமெண்ட் என்­பது யாருக்­கும் புரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க திரா­வி­ட­வி­யம் (Dravidianism) என்ற கருத்­தி­யல் எஃகுக் கோட்­டை­யால் கட்­டப்­பட்­டது. அது இந்­துத்­து­வத்­தின் துருவ எதிர்­முனை. வேறு வகை­யில் பாஜக வல­து­சாரி அர­சி­ய­லுக்கு எதிர்­மு­னை­யில் இருக்­கும் இட­து­சாரி கட்­சி­கள் தி.மு.க-வு­டன் பிணைந்­தி­ருப்­ப­தும். தலித் அர­சி­ய­லின் கோட்­பாட்­டுச் செறி­வி­னைக் கொண்ட விடு­த­லைச் சிறுத்­தை­கள் தி.மு.க-வு­டன் பிணைந்­தி­ருப்­ப­தும் அத­னால்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க-வு­டன் தமிழ்­நாட்டு வர­லாற்­றில் முர­ண­ர­சி­யல் எதிர்­மு­னை­யாக இருந்த அ.இ.அ.தி.மு.க, பாஜக தமிழ்­நாட்­டின் திரா­வி­ட­விய அர­சி­ய­லுக்கு முற்­றி­லும் எதி­ரா­னது என்­ப­தைக் கரு­தா­மல் அத­னு­டன் கூட்­டணி அமைத்­துள்­ளது. பெய­ரில் அண்­ணா­வை­யும், திரா­வி­டத்­தை­யும்  சுமந்­தா­லும் அந்த கருத்­தி­யல் அடிப்­ப­டை­களை முற்­றி­லும் துறந்­து­விட்­டது. ஆனால் பேச்­சுக்கு கொள்கை வேறு, கூட்­டணி வேறு என்று பம்­மாத்து செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்­க­ளாட்­சி­யில் எதிர்­கட்சி, ஆளும் கட்­சியை ஆட்­சி­யி­லி­ருந்து அகற்ற போரா­டத்­தானே வேண்­டும் என்று கேட்­க­லாம். அது முற்­றி­லும் சரி­யான வாதம். எப்­படி போராட வேண்­டும் என்­ப­து­தான் கேள்வி. தி.மு.க-வை விட பாஜ­க-வை நாங்­கள்­தான் தீவி­ர­மாக எதிர்க்­கி­றோம் என்று நிரூ­பித்து போராட வேண்­டும். நாங்­கள்­தான் உண்­மை­யான அண்­ணா­வின் வாரிசு, ஆரிய மாயைக்கு பலி­யாக மாட்­டோம் என்று போராட வேண்­டும். நாங்­கள்­தான் மாநில சுயாட்­சிக்­காக தீவி­ர­மாக போரா­டு­கி­றோம் என்று கூற வேண்­டும். அப்­படி செய்­தால் அது உண்­மை­யான திரா­விட முர­ண­ர­சி­யல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அ.இ.அ.தி.மு.க அதன் வர­லாற்­றுத் தோற்­று­வா­யி­லி­ருந்து முற்­றி­லும் அன்­னி­யப்­பட்டு நிற்­கி­றது. அது தி.மு.க-வை வீழ்த்த பாஜ­க-­வின் ஆத­ரவை நாடி கருத்­தி­யல்­ரீ­தி­யாக சர­ண­டைந்து விட்­டது. ஆனால் அர­சி­யல் விவா­தங்­க­ளில் பல­ரும் பழ­னி­சாமி எத்­தனை தொகு­தி­கள் பாஜ­க-­விற்­குக் கொடுத்­தார் என்­பதை வைத்து அவ­ரது ஆளு­மையை, சுதந்­தி­ரத் தலை­மையை எடை­போ­டு­கின்­ற­னர். இது எப்­ப­டிப்­பட்ட பிழை­வா­தம் என்­பதை நாம் அர­சி­யல் தத்­து­வத்­தின் துணை கொண்டு புரிந்­து­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அர­சி­யல் (POLITICS) வேறு, முர­ண­ர­சி­யல் (POLITICAL) வேறு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அர­சி­யலை மூன்று முக்­கிய பரி­மா­ணங்­க­ளில் பார்க்க வேண்­டும். ஒன்று கருத்­தி­யல், கொள்கை, கோட்­பாடு என்ற பரி­மா­ணம். அடுத்­ததுகட்சி அமைப்­பு­கள், அவற்­றின் கட்­ட­மைப்பு, சமூ­கத்­தில் அவற்­றின் வேர்­கள் என்ற பரி­மா­ணம். மூன்­றா­வது தனி நபர்­க­ளான அர­சி­யல்­வா­தி­கள், அவர்­கள் அணி­சேர்க்­கை­கள் என்ற பரி­மா­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">கருத்­தி­யல் பரி­மா­ணம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆட்சி என்­பது கருத்­தி­யல், கோட்­பாடு, கொள்­கை­கள் சார்ந்­தது. அது எந்­த­வி­த­மான தத்­து­வத்­தின் அடிப்­ப­டை­யில் குடி­ய­ரசு செயல்­பட வேண்­டும் என்­ப­தைத் தீர்­மா­னிப்­பது. கொள்கை முடி­வு­களை, அரசு நிர்­வா­கத்­தைத் தீர்­மா­னிப்­பது. குடி­ய­ர­சின் சட்­டங்­களை தீர்­மா­னிப்­பது விழு­மி­யங்­கள்; அர­சின் திட்­டங்­களை தீர்­மா­னிப்­பது கொள்­கை­கள், கோட்­பா­டு­கள். இவற்­றில் உள்ள கருத்­தி­யல் வேறு­பா­டு­கள் சில கட்­சி­க­ளுக்கு நிலை­யான அடை­யா­ளங்­களை வழங்­கு­பவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">கட்சி அமைப்பு என்ற பரி­மா­ணம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இருப்­பி­னும் கட்சி அமைப்­பு­களை கருத்­தி­ய­லு­டன் முழு­மை­யாக இணைத்­து­விட முடி­யாது. ஏனெ­னில் ஒரு கட்­சி­யின் கருத்­தி­யலே கூட காலப்­போக்­கில் மாற­லாம். அமெ­ரிக்­கா­வில் குடி­ய­ர­சுக் கட்­சி­யின் நிற­வேற்­று­மைக்கு எதி­ரான கருத்­தி­யல் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் கருத்­தி­ய­லா­கக் காலப்­போக்­கில் மாறி­யது. இந்­தி­யா­வில் காங்­கி­ரஸ் கட்­சி­யின் சோஷ­லிஸ நோக்கு உல­க­ம­ய­மா­தல் நோக்­காக மாறி­யது; மீண்­டும் மக்­கள் நலன் நோக்­காக வடி­வம் பெற்­றுள்­ளது. கட்­சி­கள் என்­ப­வற்­றின் கொள்­கை­கள், கோட்­பா­டு­கள் மாற்­றத்­திற்­கு­ரி­ய­ன­தான். வாஜ்­பேயி கால பாஜ­க-­வை­விட மோடி கால பாஜக தீவிர இந்­துத்­துவ நோக்கு கொண்­டது என­லாம். மேற்கு வங்­காள கம்­யூ­னிஸ்டு ஆட்­சி­யும் புத்த தேப் தாஸ்­குப்தா முத­ல­மைச்­சர் ஆன­போது அந்­நிய முத­லீ­டு­களை வர­வேற்­றது. ஆனால் சில கருத்­தி­யல் அம்­சங்­க­ளில் கட்சி அமைப்­பு­க­ளில் ஒரு தொடர்ச்­சி­யும் இருக்­கும் என­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">முர­ண­ர­சி­யல் பரி­மா­ணம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முர­ண­ர­சி­யல் என்­பது நபர்­கள் சார்ந்­தது. யார் ஆட்சி செய்­ய­வேண்­டும் என்­ப­தைத் தீர்­மா­னிப்­பது. முர­ண­சி­யல் என்­பது நண்­பன் யார், பகை­வன் யார் என்று அணி சேர்­வது. இதனை நடப்­ப­ர­சி­யல் அல்­லது நடை­முறை அர­சி­யல் என­லாம். இதில் தனி நபர்­க­ளுக்கு இடை­யி­லான அதி­கா­ரப் போட்­டியே முக்­கி­யத்­து­வம் பெறும். முன்­னா­ளில் மன்­னர்­க­ளுக்கு இடை­யி­லான போர்­க­ளாக இருந்­தது போல ஒவ்­வொ­ரு­வ­ரும் அதி­கா­ரத்தை நிலைப்­ப­டுத்­து­வதை நோக்கி நகர்­வ­தாக இருக்­கும். ஒரே கட்­சிக்­குள்­ளும், ஒரே சமூ­கத்­திற்­குள்­ளும், ஒரே கருத்­தி­ய­லைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­குள்­ளும். ஏன் ஒரே குடும்­பத்தை சேர்­த­வர்­க­ளுக்­குள்­ளும் கூட முர­ண­ர­சி­யல் இருக்­கும். ஆண்­டிப்­பட்டி தொகு­தி­யில் சகோ­த­ரர்­களே எதி­ரெ­திர் அணி­யில் போட்­டி­யி­டு­கி­றார்­கள். அண்­ணன் தி.மு.க; தம்பி அ.இஅ.தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அர­சி­ய­லில் நிரந்­தர நண்­பர்­க­ளும் கிடை­யாது; நிரந்­தர எதி­ரி­க­ளும் கிடை­யாது என்று சொல்­லும்­போது நண்­பர்­கள், எதி­ரி­கள் என்ற வேறு­பா­டு­தான் முர­ண­ர­சி­ய­லின் அடிப்­படை என்­பது தெளி­வா­கி­றது. அதா­வது ஐ.பி.எல் கிரிக்­கெட் அணி­கள் போல. ஆட்­டக்­கா­ரர்­கள் ஒரு அணி­யி­லி­ருந்து இன்­னொரு அணிக்கு மாறி­வி­டு­வார்­கள் – அதா­வது வாங்­கப்­ப­டு­வார்­கள். சென்னை சூப்­பர் கிங்க்­ஸில் ஆடி­ய­வர் அடுத்த ஆண்டு ராஜஸ்­தான் ராயல்­சிற்கு ஆடு­வார். ஆனால் அணி­கள் தொடர்ந்து போட்­டி­யி­டும். அர­சி­ய­லி­லும் காங்­கி­ர­ஸில் இருப்­ப­வர் பாஜ­க-­விற்­குச் சென்­று­வி­டு­வார். பாஜக தலை­வர் காங்­கி­ர­ஸில் இணைந்­து­வி­டு­வார் (குஜ­ராத் பாஜக தலை­வர் சங்­கர்­சிங் வாகேலா காங்­கி­ரஸ் கட்­சி­யின் மாநி­லத் தலை­வர் ஆனார்.)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி கட்சி மாறு­ப­வர்­க­ளுக்கு கொள்கை கிடை­யாதா என்று கேட்­ப­தில் பொருள் இல்லை. ஏனெ­னில் அவர்­களை செலுத்­து­வது முர­ண­ர­சி­யல் பரி­மா­ணமே. மேலும் மக்­க­ளாட்­சிக் கட்­சி­க­ளி­டையே பொது நன்மை, மக்­கள் நலன் என்­பது போன்ற பொது அம்­சங்­கள் நிறைய உண்டு. எந்த கட்­சி­யில் இருந்­தா­லும் அது மக்­கள் பணி­தான் என்­ப­தால் கருத்­தி­ய­லுக்கு அப்­பாற்­பட்ட குடி­ய­ரசு அர­சி­யல் என்­பது முர­ண­ர­சி­ய­லுக்கு களம் அமைக்­கி­றது. அத­னால் பரந்த நோக்­கில் எந்த கட்­சி­யி­லும் அர­சி­யல் பணி­யாற்­ற­லாம் என்­பது மக்­க­ளாட்சி நோக்­கிற்கு எதி­ரா­னது என்று சொல்ல முடி­யாது. அதனை மக்­க­ளும் ஏற்­றுக் கொள்­கி­றார்­கள் என்­பதே நிதர்­ச­னம், ஏன் கட்சி மாறி­னீர்­கள், உங்­க­ளுக்கு வாக்­க­ளிக்க மாட்­டோம் என்று சொல்­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அ.இ.அ.தி.மு.க-விற்கு என்ன நடந்­தது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அ.இ.அ.தி.மு.க முர­ண­ர­சி­ய­லில்­தான் பிறந்­தது. எம்.ஜி.ஆரும் அண்ணா பெய­ரில்­தான் கட்சி தொடங்­கி­னார். அண்­ணா­வின் உரு­வத்தை கட்­சிக் கொடி­யில் பொறித்­தார். தி.மு.க-வு­டன் எம்.ஜி.ஆரின் துவக்­க­கால வேறு­பாடு கருத்­தி­யல் வேறு­பாடு என்று சொல்­ல­மு­டி­யாது. ஆனால் காலப்­போக்­கில் அது திரா­வி­ட­விய அம்­சங்­க­ளில் மென்­போக்­கைக் கடை­பி­டித்­தது. கட்­சிப் பெய­ரி­லேயே “அகில இந்­திய” என்ற அடை­மொ­ழி­யைச் சேர்த்­தது. பெரி­யா­ரி­யத்­தி­லி­ருந்து வில­கத் துவங்­கி­யது. இது ஜெய­ல­லிதா காலத்­தில் அதி­க­ரித்­தது. ஆனா­லும், சமூக நீதி, மாநில உரிமை ஆகி­ய­வற்­றில் திரா­விட கருத்­தி­யல் வெளிக்­குள்­தான் இயங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க-வும், அ.இ.அ.தி.மு.க-வும் மாறி, மாறி ஆட்சி செய்­த­தால் திரா­விட தமி­ழர் என்ற மக்­கள் அடை­யா­ளம் உறு­திப்­பட்­டது. இந்­தி­யா­வி­லேயே மாநில முர­ண­ர­சி­யல் திட­மாக வேர்­கொண்ட மக்­கள் பரப்­பாக தமிழ்­நாடு மாறி­யது. இந்த அடை­யா­ளம் கொடுத்த தன்­னு­ணர்வு மாநி­லத்­தின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கும் பெரி­தும் உத­வி­யது. முர­ண­ர­சி­யல் போட்­டி­யும் வளர்ச்­சிக்கு உத­வி­யது.  
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஜெய­ல­லிதா மறை­வுக்­குப் பின் அ.இ.அ.தி.மு.க கட்சி அமைப்பை பல­வீ­னப்­ப­டுத்தி தன் பிடிக்­குள் கொண்­டு­வர ஒன்­றி­யத்­தில்ஆட்சி செய்த பாஜக விரும்­பி­யது. அ.இ.அ.தி.மு.க தலை­வர்­களை ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் எதி­ராக இயங்க அது தூண்டி முர­ண­ர­சி­ய­லைக் கூர்­மைப்­ப­டுத்­தி­யது. கட்­சி­யைப் பிளந்­தது; இணைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த சது­ரங்க விளை­யாட்­டில் பாஜ­க-­வின் ஒரே ஒப்­பந்­த­தா­ர­ரா­கத் தானே விளங்­க­வேண்­டும் என்று எடப்­பாடி பழ­னி­சாமி விரும்­பி­னார். சசி­கலா, ஓ.பி.எஸ், டிடிவி தின­க­ரன் ஆகிய அனை­வ­ரை­யும் விலக்­கி­விட்டு தானே கட்­சி­யின் தலை­வ­ராகி, பாஜக கூட்­டு­ற­வு­டன் ஆள­வேண்­டும் என்­பதே அவர் இலட்­சி­ய­மாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பண்­பாட்டு ரீதி­யா­கவோ, அர­சி­யல் ரீதி­யா­கவோ பழ­னி­சா­மிக்கு திரா­விட கருத்­தி­யல் புலத்­து­டன் எந்த ஒட்­டு­த­லும், உற­வும் இருக்­க­வில்லை. அவர் வள­ரும் பரு­வத்­தில் எம்.ஜி.ஆர் ரசி­க­ராக இருந்­தி­ருக்­க­லாம் என்­ப­தற்கு மேல் எந்த கருத்­தி­ய­லும் அவ­ரைத் தீண்­டி­ய­தா­கத் தெரி­ய­வில்லை. அவர் சேக்­கி­ழார் எழு­திய கம்­ப­ரா­மா­ய­ணம் என்று சொன்­னது வாய்­த­வ­றிய சந்­தர்ப்­ப­மாக இருந்­தா­லும், வேறு எந்த சந்­தர்ப்­பத்­தி­லும் அவ­ருக்கு தமிழ் பண்­பாட்டு வர­லாற்­றின் மீது எந்த பற்­றும் இருப்­ப­தாக வெளிப்­பட்­ட­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் ஆட்­சி­யி­லி­ருந்து நாலரை ஆண்­டு­க­ளில் ஒன்­றி­யத்­தில் பாஜக கொண்­டு­வந்த அனைத்து பிற்­போக்­குக் கொள்­கை­க­ளுக்­கும் ஆத­ர­வ­ளித்­தார். குடி­யு­ரிமை சீர்­தி­ருத்­தச் சட்­டத்தை நாடெங்­கும் சிறு­பான்­மை­யி­னர் எதிர்த்­த­போது, அதனை ஆத­ரித்­தார். விவ­சாய சட்­டங்­களை நாடெங்­கும் விவ­சா­யி­கள் எதிர்த்­துப் போரா­டி­ய­போது அவற்றை ஆத­ரித்­தார். இந்­தி­யக் குடி­ய­ரசு வர­லாற்­றில் முதல்­மு­றை­யாக ஒரு மாநி­லத்தை, காஷ்­மீர் மாநி­லத்தை, மாநி­லம் இல்­லை­யென அறி­வித்­த­போது வாளா­வி­ருந்­தார். தி.மு.க தலை­ந­க­ரில் அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்தை நட த்தி தீவி­ர­மான கண்­ட­னங்­க­ளைப் பதிவு செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உச்­ச­கட்­ட­மாக அவ­ரி­டம் “திரா­வி­டம்” என்று ஒரு தனி அடை­யா­ளம் கிடை­யாது என்று ஆளு­னர் கூறு­கி­றாரே என்று கேட்­ட­போது. அதை­யெல்­லாம் ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளி­டம்­தான் கேட்க வேண்­டும் என்று கைவி­ரித்­து­விட்­டார். அவர் கட்­சி­யின் பெய­ருக்­கா­கக் கூட திரா­விட அடை­யா­ளத்­திற்­காக வாதிட முடி­யாத அளவு பல­வீ­ன­மா­ன­வர்­தான் எடப்­பாடி பழ­னி­சாமி. அவ­ருக்கு அது தேவை­யு­மில்லை. அவ­ருக்கு தெரிந்­த­தெல்­லாம் எதிரி நண்­பன் முர­ண­ர­சி­யல்­தான். அதில் எப்­ப­டி­யா­வது தான் தலைமை பொறுப்­பில் இருக்க வேண்­டும், முதல்­வர் வேட்­பா­ள­ராக இருக்க வேண்­டும் என்­பது மட்­டுமே அவர் இலட்­சி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பழ­னி­சாமி முர­ண­ர­சி­யல் வெற்­றி­க­ர­மா­னதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கருத்­தி­யல், கொள்­கை­யெல்­லாம் கிடை­யாது; பழ­னி­சாமி முர­ண­ர­சி­யல் வியூ­கத்­தில் மிக­வும் கெட்­டிக்­கா­ரர் என்று கூற­லாமா என்று பார்த்­தால் அதற்கு சிறி­தும் சாத்­தி­ய­மில்லை. எப்­ப­டி­யென்று நாம் நுட்­ப­மாக ஆராய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முர­ண­ர­சி­ய­லில் என்ன செய்ய வேண்­டு­மென்­றால் எதி­ரி­க­ளை­யும் நண்­பர்­க­ளாக மாற்ற வேண்­டும். அப்­போ­து­தான் ஆத­ரவு தளம் பெரு­கும். ஆனால் பழ­னி­சாமி நண்­பர்­க­ளை­யும் எதி­ரி­க­ளாக்­கு­வ­தில் தீவி­ர­மாக இருப்­ப­வர். தன் கட்­சி­யி­லி­ருந்து எத்­தனை பேர் வில­கி­னா­லும் பிரச்­சினை இல்லை என்று இறு­மாந்­தி­ருக்­கி­றார். எப்­ப­டி­யா­வது பாஜக ஆத­ரவு இருந்­தால் போதும்; நாம் அர­சி­யல் செய்­ய­லாம் என்று நினைக்­கி­றார். அங்­கே­தான் மிகப்­பெ­ரிய வேடிக்கை இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த 2021 சட்­ட­மன்ற தேர்­தலை பழ­னி­சாமி பாஜக, ஒன்­றி­ணைந்த பாமக, தேமு­திக, புதிய தமி­ழ­கம், தமிழ் மாநில காங்­கி­ரஸ், இன்­ன­பிற கட்­சி­கள் என்ற வலு­வான கூட்­ட­ணி­யு­டன் முத­ல­மைச்­ச­ராக சந்­தித்­தார். தி.மு.க அணி­யி­டம் ஆட்­சியை பறி­கொ­டுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த தேர்­த­லின் போது அவ­ரு­டைய கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக இருந்த ஓ.பன்­னீர்­செல்­வம் தி.மு.க-வில் இணைந்­து­விட்­டார். வேறு ஓ.பி.எஸ் அணித் தலை­வர்­க­ளும், அவர்­களை பின்­பற்­றும் தொண்­டர்­க­ளும் தி.மு.க-வில் இணைந்­து­விட்­டார்­கள். செங்­கோட்­டை­ய­னும், வேறு சில­ரும் தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தில் இணைந்­து­விட்­டார்­கள். தேமு­திக தி.மு.க கூட்­ட­ணிக்­குச் சென்­று­விட்­டது. பாமக பிள­வு­பட்டு அன்­பு­மணி தலை­மை­யி­லான பிரிவு அவ­ரு­டன் கூட்­டணி அமைத்­துள்­ளது. புதிய தமி­ழ­கம் கட்சி தனித்­துப் போட்­டி­யி­டு­கி­றது. இதை­யெல்­லாம் விட உச்­ச­கட்­டம் பாஜ­க-­வு­ட­னான அவ­ரு­டைய உற­வு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பழ­னி­சா­மி­யின் கோரிக்கை என்­ன­வென்­றால் அவர் இந்­துத்­து­வத்­தின் பிர­தி­நி­தி­யாக தமிழ்­நாட்­டில் இருப்­பார். ஆனால் அ.இ.அ.தி.மு.க என்ற கட்சி அமைப்­பினை தன் பிடி­யில் வைத்­துக்­கொண்டு அதன் தலை­வ­ராக, முதல்­வ­ராக இருப்­பார். அதற்கு பாஜக ஒத்­து­ழைக்க வேண்­டும். பாஜக நேர­டி­யாக தமிழ்­நாட்­டில் ஆட்சி செய்ய முய­லக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு திரைப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ளர் ஒரு சில மாவட்­டங்­க­ளில் படத்­தின் உரி­மை­களை விநி­யோ­கஸ்­த­ரி­டம் கொடுப்­பார். சில மாவட்­டங்­க­ளில் தானே வெளி­யி­டு­வார். அது போல தமிழ்­நாட்­டில் இந்­துத்­துவ விநி­யோக உரி­மையை தன்­னி­டம் கொடுத்­து­விட வேண்­டும் என்­ப­து­தான் பழ­னி­சாமி விரும்­பும் ஏற்­பாடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், பாஜ­க-­விற்கு தானே நேர­டி­யாக விற்­பனை செய்­ய­வேண்­டும் என்று விருப்­பம். அத­னால் அண்­ணா­மலை தலை­வ­ரா­ன­போது அவரை தனித்து கட்­சியை வளர்க்­கச் சொல்லி அனு­ம­தித்­தார்­கள். அது நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பாஜக தனி கூட்­டணி அமைத்­துப் போட்­டி­யி­டும் அள­விற்­குச் சென்­றது. அப்­போது பாஜக பத்து, பதி­னோரு சத­வீத வாக்­கு­க­ளைப் பெற்­று­விட்­ட­தா­கக் கணக்­குக் காட்­டி­னார்­கள்.  இந்­தியா முழு­வ­தும் அண்­ணா­மலை புகழ் பரப்­பப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பழ­னி­சாமி பாஜ­க-­வு­டன் தொகுதி பங்­கீடு ஏற்­ப­டா­த­தால், பன்­னீர்­செல்­வத்­தை­யும் வெளி­யேற்­றிய நிலை­யில், ஒற்­றைத் தலை­மை­யாக தேமு­தி­க-­வு­டன் கூட்­டணி அமைத்து நாடா­ளு­மன்ற தேர்­தலை சந்­தித்­தார். தோரா­ய­மாக இரு­பது சத­வீத வாக்­கு­க­ளைப் பெற்­றார். ஒரு தொகு­தி­யி­லும் வெல்­ல­வில்லை. அதை­விட முக்­கி­யம் 2021 சட்­ட­மன்ற தேர்­த­லில் தோற்­ற­தற்கு பாஜ­க-வே கார­ணம் என பல முக்­கிய தலை­வர்­கள் கூறி­ய­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இருப்­பி­னும் வேறு வழி­யின்றி 2026 சட்­ட­மன்ற தேர்­த­லில் பாஜ­க-­வு­டன் கூட்­டணி அமைக்க விரும்­பி­னார். பாஜ­க­வும் அண்­ணா­ம­லை­யின் கட்சி வளர்க்­கும் முயற்சி போதிய பல­ன­ளிக்­க­வில்லை என்று நினைத்­த­தால் பழ­னி­சாமி ஏஜென்­சி­யு­ட­னேயே கருத்­தி­யல் விநி­யோ­கத்­தைத் தொட­ர­லாம் என்று நினைத்­தது. மேலும். அ.இ.அ.தி.மு.க வாக்­கு­களை தன் பக்­கம் ஈர்க்­க­வேண்­டும் என்­றால் அத­னு­ட­னேயே பய­ணிக்க வேண்­டும் என்­ப­தும் தேவை­தான். எனவே 2026 சட்­ட­மன்ற தேர்­த­லுக்கு ஓராண்­டிற்கு முன்பே மீண்­டும் உறவு புதுக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவ்­வாறு நிகழ்ந்­த­போது பழ­னி­சாமி விதித்த நிபந்­தனை என்­ன­வென்­றால் அண்­ணா­மலை பாஜ­க-­வின் மாநி­லத் தலை­வ­ரா­கத் தொட­ரக்­கூ­டாது என்­ப­து­தான். அதா­வது யாரால் பாஜக வளர்ந்து பத்து சத­வீத வாக்­கு­கள் வரை பெற்­றது என்று கூறு­கி­றார்­களோ, அவ­ரையே நீக்க வேண்­டும் என்­ப­து­தான் நிபந்­தனை. அப்­படி செய்­தால் பாஜ­க-­வும் பல­வீ­ன­ம­டைந்து, கூட்­ட­ணி­யும் பல­வீ­னம்­தானே அடை­யும்? ஆனா­லும் பழ­னி­சாமி அந்­தக் கோரிக்­கையை வலி­யு­றுத்தி ‘வெற்றி’ பெற்­று­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பாஜ­க-­வு­டன் கூட்­டணி கண்ட கட்­சி­கள் அனைத்­தை­யும், பாஜ­க-­வே­தான் கூட்­ட­ணிக்­குள் இணைக்க வேண்­டி­யி­ருந்­தது. உள்­ள­ப­டியே சொன்­னால் பழ­னி­சா­மி­தான் தேசிய ஜன­நா­ய­கக் கூட்­ட­ணி­யில் இணைந்­துள்­ளார் என­லாம். ஆனால் தமிழ்­நாட்­டில் பழ­னி­சாமி தானே கூட்­ட­ணிக்­குத் தலைமை என்று கூறு­கி­றார். அனை­வ­ரும் அவரை மகிழ்­விக்க, சரி ஆசைப்­ப­டு­கி­றார், அவரே தலை­வ­ராக இருக்­கட்­டும் என்று கூறு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உண்­மை­யில் பாஜக தலை­மை­யில்­தான் கூட்­டணி செயல்­ப­டு­கி­றது என்­பது அனை­வ­ரும் டில்­லிக்­குச் சென்று பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தில் அப்­பட்­ட­மா­கத் தெரி­கி­றது. தொடர்ந்து தானே தலை­வர் என்று கூற­வேண்­டி­யி­ருப்­பதே நிலை­மை­யின் அபத்­தத்­தைத் தெளி­வு­ப­டுத்­து­கி­றது. யார் தலை­வர் என்­பது ஐயத்­திற்கு அப்­பாற்­பட்­டு­தானே இருக்க வேண்­டும்? வெறும் தொகுதி எண்­ணிக்கை மட்­டும் தலை­மை­யத் தீர்­மா­னிக்­குமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிலை­யில்­தான் சென்ற சட்­ட­மன்ற தேர்­த­லில் 20 இடங்­கள் கொடுத்த பாஜ­க­விற்கு 27 இடங்­கள் கொடுத்­து­விட்டு அவர்­களை வெற்­றி­க­ர­மாக டீல் செய்­து­விட்­ட­தாக பெயர் எடுத்­துள்­ளார். இவர் எதற்­காக பாஜ­க-­வு­டன் கூட்­டணி அமைத்­தார், எதற்­காக அதிக இடங்­க­ளைக் கொடுத்­தார் என்­பதே தெரி­யாத நிலை­யில் அவ­ரு­டைய ஆளு­மை­யைப் புகழ்ந்து ஆளுக்­கொரு விளக்­கம் கொடுப்­ப­தைக் கண்­டால் வியப்­பாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது மூன்று பரி­மா­ணங்­க­ளில் பழ­னி­சாமி தலை­மையை தொகுத்­துக்­கொள்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">•	திரா­விட கருத்­தி­யல், கொள்கை, கோட்­பாடு என்­ப­தோ­டெல்­லாம் தொடர்­பில்லை. இந்­துத்­து­வத்­தி­டம் சர­ணா­கதி என்றே கூற­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">•	கட்சி அமைப்­பைக் கைப்­பற்­றி­னாரே தவிர, கட்­டுக்­கோப்­பாக வைத்­தி­ருக்­க­வில்லை. பல தலை­வர்­க­ளும் வெளி­யே­றி­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">•	கட்­சி­யி­லும் சரி, கூட்­ட­ணி­யி­லும் சரி எதி­ரி­கள் அதி­க­ரிக்­கி­றார்­கள்; நண்­பர்­கள் குறை­கி­றார்­கள். கடு­மை­யாக இவரை எதிர்த்த அன்­பு­மணி, டி.டி.வி.தின­க­ரன் ஆகி­யோர் பல­வீ­ன­மான கூட்­ட­ணி­யா­கவே அமைந்­துள்­ளார்­கள். பாஜ­க-­வில் அண்­ணா­ம­லை­யும். அவர் அணி­யி­ன­ரும் அதி­ருப்­தி­யு­ட­னேயே உள்­ளார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிலை­யில் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்­குத் தொகு­தி­களை  குறைத்­துக் கொடுத்து தன் ஆளு­மையை நிறு­வி­விட்­டார் என்று கூறு­வ­தெல்­லாம் எத்­த­கைய அர­சி­யல் புரி­தல் என்று வியப்­பாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இறுதி ஒப்­பீடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஸ்டாலின் முர­ண­ர­சி­யலை பயன்­ப­டுத்தி, எதி­ரி­க­ளை­யும் நண்­பர்­க­ளாக்கி, கட்சி அமைப்பை விரி­வு­ப­டுத்தி, கருத்­தி­யல் கோட்­டை­யினை வலுப்­ப­டுத்­தி­யுள்­ளார். அந்த வகை­யில் திரா­விட அர­சி­யல் மாட­லை­யும்இந்­தி­யா­விற்கு முன்­னு­தா­ர­ணம் ஆக்­கி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பழ­னி­சாமி முர­ண­ர­சி­யலை தன்­மு­னைப்­பு­டன் கையாண்டு, எதி­ரி­களை அதி­க­ரித்து, கட்சி அமைப்பை பல­வீ­னப்­ப­டுத்தி, தன் கட்­சி­யின் கருத்­தி­ய­லுக்கு எதிர்­நி­லை­யி­லுள்ள பாஜ­க-­வின் தய­வில் அர­சி­யல் செய்­யும் நிலையை எட்­டி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­னைப் புரிந்­துகொள்­ப­வர்­கள் கூறக்­கூ­டி­யது 
ஒன்­று­தான்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஸ்டாலின் தொடரட்டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்நாடு வெல்லட்டும்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>