<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Mar 30 2026 21:19:11 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260331T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="31032026-MDU-06" position.sequence="06" ex-ref="31032026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை    </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">31.03.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="62"> 5 ஆண்டுகளின் சாதனைகளை விஞ்சும் அளவிற்கு ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி இருக்கும்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">தி.மு.க. தேர்தல் அறிக்கை... 5- ஆம் பக்கத் தொடர்ச்சி! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup283897_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194334_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup283898_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="logo_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="WhatsAppImage_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="WhatsAppImage1_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="7" source="WhatsAppImage2_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இலங்­கைத் தமி­ழர்­க­ளின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்கு முழு அங்­கீ­கா­ரத்­தினை இலங்கை அரசு வழங்க ஒன்­றிய அரசு மூல­மாக வலி­யு­றுத்­து­வோம். மலை­ய­கத் தமி­ழர் உட்­பட அனைத்து குடி­மக்­க­ளுக்­கும் சமத்­து­வத்­தை­யும் பாகு­பா­டின்­மை­யை­யும் உறுதி செய்­யும் ஒரு கூட்­டாட்சி முறையை நிறுவ வலி­யு­றுத்­து­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">7. அய­ல­கத் தமி­ழர்­கள் நலன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அய­ல­கத் தமி­ழர்­கள் நலன்­க­ளைப் பெரி­தும் மதிப்­பது கழ­கம். புலம்­பெ­யர்ந்து வாழும் தமி­ழர்­க­ளின் உளப்­பூர்­வ­மான மற்­றும் பல்­வேறு தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வ­தற்­காக வெளி­நாடு வாழ் தமி­ழர் நலச்­சட்­டம் 2011–ஆம் ஆண்டு கழக அர­சால் இயற்­றப்­பட்­டது. ‘அய­ல­கத் தமி­ழர் நல வாரி­யம்’ என்ற அமைப்பை 15 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்டு அமைத்­தார் முத­ல­மைச்­சர். ஜன­வரி 12 அய­ல­கத்­த­மி­ழர் நாளாக அறி­வித்து கொண்­டா­டப்­ப­டு­கி­றது. இவை­யெல்­லாம் புலம்­பெ­யர்ந்த தமி­ழர்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய தன்­னம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது. இதன் தொடர்ச்­சி­யாக திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அய­லக வாழ் தமி­ழர்­கள் நம் மாநி­லத்­தின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு சிறந்த பங்­க­ளிப்பை வழங்கி வரு­கின்­ற­னர். பல்­வேறு வகை­யான திறமை வாய்ந்த தொழி­லா­ளர்­கள், செவி­லி­யர்­கள், பொறி­யா­ளர்­கள், தொழில்­நுட்ப வல்­லு­நர்­கள், தொழில் முத­லீட்­டா­ளர்­கள் என இலட்­சக்­க­ணக்­கா­னோர் தங்­கள் தாய்­நாட்­டை­யும் தங்­கள் பணி­யாற்­றும் நாட்­டை­யும் வளப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். அவர்­க­ளது பணிக்­கா­லத்­தி­லும் அயல்­நாட்டு பணி காலத்­திற்­குப் பின்­ன­ரும் பல­ன­ளித்து பாது­காக்­கும் வண்­ணம் ஒரு விரி­வான “வெளி­நாடு வாழ் தமி­ழர் நலக் கொள்கை” ஒன்று உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அய­லக வாழ் தமி­ழர் நலத்­து­றைக்கு கூடு­தல் நிதி ஒதுக்­கீடு வழங்­கப்­பட்டு கேரள அர­சின் NORKA Roots மாதி­ரி­யில் அதன் சேவை­கள் விரி­வாக்­கம் செய்­யப்­ப­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வெளி­நாட்டு வேலைக்­குச் சென்று அங்கு விபத்­து­க­ளில் உயி­ரி­ழக்­கும் தொழி­லா­ளர்­கள் குடும்­பங்­க­ளுக்கு இழப்­பீ­டும் அவ­ரது உற­வு­கள் பொரு­ளா­தார ரீதி­யாக பாதிக்­கப்­ப­டாத வகை­யில் அவர்­க­ளுக்கு தொழிற்­க­டன் உத­வி­கள் வழங்­க­வும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அய­ல­கத் தமி­ழர் நல வாரி­யத்­தில் பதிவு எண்­ணிக்­கை­யினை உயர்த்­தத் தேவை­யான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும். இதன் மூலம் அதிக அள­வில் அய­லக தமி­ழர் அர­சின் திட்­டங்­க­ளால் பய­ன­டைய இய­லும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்­டில் உள்ள 4 பன்­னாட்டு விமான நிலை­யங்­க­ளி­லும் ஒரு NRT உதவி மையத்­தினை அமைத்து அய­ல­கத் தமி­ழர்­க­ளுக்கு அரசு மேற்­கொண்டு வரும் நலத்­திட்­டங்­கள் குறித்து விளக்க உரிய முன்­னெ­டுப்­பு­கள் மேற்­கொள்­ளப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">8 . வேளாண்மை மற்­றும் உழ­வர் நலன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மண் செழிக்க... மக்­கள் மனம் மகிழ... வேளாண்மை நிதி­நிலை அறிக்­கையை முதன்­மு­த­லாக வெளி­யிட்­டது திரா­விட மாடல் அரசு. வேளாண்­மைத் துறையை நவீ­ன­ம­ய­மாக்­கு­தல், உழ­வர்­க­ளின் வரு­மா­னத்தை உயர்த்­து­தல், வேளாண்­மை­யில் உற்­பத்தி, உற்­பத்­தித் திறனை அதி­க­ரித்­தல், உணவு மற்­றும் ஊட்­டச்­சத்­துப் பாது­காப்பை உறு­தி­செய்­தல் ஆகிய இலக்­கு­களை தமிழ்­நாடு அடைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் வேளாண் நிதி­நிலை அறிக்கை மூல­மாக 1,94,076 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு உள்­ளது. 12 ஆயி­ரத்து 525 கிராம ஊராட்­சி­க­ளும் ஒட்­டு­மொத்த வேளாண் வளர்ச்சி அடைந்­திட ‘கலை­ஞ­ரின் அனைத்­துக் கிராம ஒருங்­கி­ணைந்த வேளாண் வளர்ச்­சித் திட்­டம்’ செயல்­ப­டுத்­தப்­பட்­டது. இதன் மூல­மாக 61 லட்­சம் உழ­வர்­கள் பய­ன­டைந்­துள்­ளார்­கள். இத­னால் தான் பாச­னப் பரப்­பும் உற்­பத்­தி­யும் அதி­க­மா­னது. 58 ஆயி­ரத்து 712 ஏக்­கர் தரிசு நிலங்­கள் தற்­போது சாகு­படி செய்­யப்­பட்டு, விளை நிலங்­க­ளாக மாற்­றப்­பட்­டுள்­ளன. அதா­வது மண்­ணும் செழித்­துள்­ளது; மக்­க­ளும் மகிழ்ந்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">‘முத­ல­மைச்­ச­ரின் மண்­ணு­யிர் காத்து மன்­னு­யிர் காப்­போம்’ திட்­டத்­தின் மூல­மாக 21 லட்­சம் உழ­வர்­கள் பய­ன­டைந்­துள்­ளார்­கள். நம்­மாழ்­வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் கோவை­யில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. நெல் ஜெய­ரா­மன் பெய­ரில் மர­பு­சார் நெல் ரகங்­கள் பாது­காப்பு இயக்­கம் தொடங்­கப்­பட்­டுள்­ளது. பாரம்­ப­ரிய நெல் விதை­கள் உற்­பத்தி செய்­யப்­பட்டு உழ­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கேழ்­வ­ரகு மற்­றும் கரும்­புப் பயிர் உற்­பத்­தித்­தி­ற­னில் அகில இந்­திய அள­வில் முத­லி­டம்; மக்­காச்­சோ­ளம், மொத்த எண்­ணெய் வித்­துக்­கள் மற்­றும் கரும்பு உற்­பத்­தி­யில் இரண்­டாம் இடம்; குறு­தா­னி­யங்­கள் மற்­றும் நிலக்­க­டலை உற்­பத்­தி­யில் மூன்­றாம் இடம் என்ற அள­வில் சிறந்து விளங்­கு­கி­றது தமிழ்­நாடு. உழ­வர்­க­ளின் நல­னைப் பாது­காக்­கும் வகை­யில் கடந்த நான்கு ஆண்­டு­க­ளில் இயற்கை இடர்­பா­டு­க­ளால் ஏற்­பட்ட பயிர் சேதங்­க­ளுக்கு நிவா­ர­ண­மா­கச் சுமார் 25 லட்­சம் உழ­வர்­க­ளுக்கு 2,065 கோடி ரூபாய் வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றிற்கு குறைந்­த­பட்­சம் 2,500 ரூபா­யினை விவ­சா­யி­கள் பெறும் வகை­யில், தமிழ்­நாடு அரசு தற்­போது சாதா­ரண ரகத்­திற்கு 131 ரூபா­யும் சன்ன இர­கத்­திற்கு 156 ரூபா­யும் ஊக்­கத்­தொ­கை­யாக உயர்த்தி வழங்­கி­யுள்­ளது. இதன் தொடர்ச்­சி­யாக திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்டு வேளாண் பெரு­மக்­க­ளின் நீண்­ட­கால கோரிக்­கையை நிறை­வேற்றி, 1989–ஆம் ஆண்டு அனைத்து விவ­சா­யி­க­ளுக்­கும் இல­வச மின்­சா­ரத்தை அளித்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள். இதன் பய­னாக, தமிழ்­நாட்டு விவ­சா­யி­கள் வேளாண் உற்­பத்­தி­யில் பல்­வேறு சாத­னை­களை தொடர்ந்து புரிந்து வந்­தா­லும், கிண­று­கள் மற்­றும் ஆழ்­து­ளைக் குழாய் பாச­னத்தை பெரு­ம­ள­வில் நம்­பியே இன்­றும் தமிழ்­நாட்­டின் விவ­சா­யம் உள்­ளது. இப்­பா­ச­னத்தை மேம்­ப­டுத்­தும் வகை­யில், இல­வச மின்­சா­ரம் பெறும் சுமார் 20 லட்­சத்­திற்­கும் மேற்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு, அவர்­கள் தற்­போது வைத்­தி­ருக்­கும் பம்­பு­க­ளின் சக்தி மற்­றும் அவர்­க­ளின் பாச­னத் தேவைக்கு ஏற்ப, எவ்­வித மீட்­ட­ரும் பொருத்­தப்­ப­டாத நவீன மின்­சா­ரப் பம்­பு­செட்­டு­கள் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பேரி­டர் காலங்­க­ளில் மழை வெள்­ளத்­தால் பாதிக்­கப்­ப­டும் இற­வைப் பாசன பயிர்­கள் மற்­றும் நெல் பயிர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் இழப்­பீட்­டுத்­தொகை ஹெக்­டேர் ஒன்­றுக்கு 25,000 ரூபா­யா­க­வும், நீண்­ட­கா­லப் பயிர்­க­ளுக்கு 27,000 ரூபா­யா­க­வும், மானா­வா­ரிப் பயிர்­க­ளுக்கு 12,000 ரூபா­யா­க­வும் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நிகர சாகு­படி பரப்பு (Net Cultivable Area) 50 இலட்­சம் ஹெக்­டே­ராக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தற்­கா­லிக நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­கள், வாய்ப்பு இருக்­கும் அனைத்து இடங்­க­ளி­லும் உலர்­க­ளத்­து­டன் கூடிய நிரந்­த­ரக் கட்­ட­டங்­க­ளா­கக் கட்­டப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு ரூ. 3,500–ஆக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கரும்பு கொள்­மு­தல் விலை டன் ஒன்­றுக்கு ரூ. 4,500–ஆக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">டெல்டா மாவட்­டங்­க­ளில் 10,500 கி.மீ மற்­றும் டெல்டா அல்­லாத மாவட்­டங்­க­ளில் 5,000 கி.மீ நீளத்­திற்கு ‘சி’ மற்­றும் ‘டி’ பிரிவு வாய்க்­கால்­கள் தூர்­வா­ரும் பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மண்­வள அட்­டை­கள் 43 இலட்­சம் உழ­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு, இயற்கை வேளாண்­மைப் பரப்பு 17 ஆயி­ரம் ஹெக்­டே­ரா­க­வும், உயிர் வேளாண்­மைப் பரப்பு ஒரு இலட்­சம் ஹெக்­டே­ரா­க­வும் விரி­வு­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வேளாண்­மைக்கு ஆதா­ர­மான நீரைச் சேமிக்க நுண்­ணீர்ப் பாச­னம் 21 இலட்­சம் ஹெக்­டே­ராக விரி­வு­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலை­க­ளில் ஆயி­ரம் மழை­நீர் சேக­ரிப்பு கட்­ட­மைப்­பு­கள் கட்­டப்­ப­டும். கால்­வாய்­கள் – மத­கு­கள் புன­ர­மைக்­கப்­பட்டு, நீர் மேலாண்­மை­யைச் சீர்­செய்து, தண்­ணீர் தட்­டுப்­பா­டான பகு­தி­கள் வள­மான பகு­தி­க­ளாக மாற்­றப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">உணவு உற்­பத்தி 125 இலட்­சம் மெட்­ரிக் டன்­னாக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">உழ­வர்­கள் தங்­கள் பகு­திக்கு ஏற்ற பயிர்­க­ளைச் சிறந்த சாகு­படி முறை­க­ளைப் பின்­பற்றி அதிக மக­சூலை அடைந்­தி­டும் வகை­யில், “கிராம அள­வி­லான பயிர்ச் சாகு­ப­டித் திட்­டம்” தயா­ரிக்­கப்­பட்டு செயல்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">உயிர்ம வேளாண்மை (Organic Farming) சாகு­படி பரப்­பினை 40,000 ஹெக்­டே­ரி­லி­ருந்து  அடுத்த 5 ஆண்­டு­க­ளில் ஒரு லட்­சம் ஹெக்­டே­ராக உயர்த்த நட­வ­டிக்கை எடுப்­ப­து­டன், அதன் பயன் முழு­மை­ய­டை­யும் வகை­யில் தொடர் ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இயற்கை வேளாண்மை (Natural Farming) சாகு­படி பரப்­பினை 5 ஆண்­டு­க­ளில் 5 மடங்கு அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். இயற்கை வேளாண்­மைக்­குத் தேவை­யான இடு­பொ­ருட்­கள் தயா­ரிப்­பில் மக­ளிர் சுய­உ­த­விக் குழுக்­க­ளின் பங்­க­ளிப்பு உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வேளாண் காடு­கள் பரப்­பினை அதி­க­ரிக்­கும் வகை­யில் புங்­கன், நாவல், ஈட்டி, தேக்கு, சந்­த­னம், செம்­ம­ரம், மகோ­கனி, மலை­வேம்பு, நீர் மருது போன்ற மரங்­களை வளர்ப்­பது ஊக்­கு­விக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பாரம்­ப­ரிய நெல், சிறு தானி­யங்­கள் மற்­றும் பயறு வகை­க­ளில் 75,000 ஏக்­க­ரில் சாகு­படி மேற்­கொள்­ளும் வகை­யில் ஆண்­டுக்கு 1,500 மெட்­ரிக் டன் விதை­கள் உழ­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கால­நிலை மாற்­றங்­க­ளைத் தாங்­கக் கூடிய 1000 மாதிரி பண்­ணை­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தரிசு நிலங்­கள் மற்­றும் மண்­வ­ளம் குன்­றிய 1.25 இலட்­சம் ஏக்­கர் நிலங்­கள் மீண்­டும் சாகு­ப­டிக்­குக் கொண்­டு­வ­ரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">புளூ­பெர்ரி, டிரா­கன் பழம், கிவி போன்ற அயல்­நாட்­டுப் பயிர்­கள் 2,500 ஏக்­க­ரில் சாகு­படி செய்ய ஊக்­கு­விக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வேளாண் இயந்­தி­ரங்­கள் மற்­றும் கரு­வி­கள் வாங்­கிட 1.50 இலட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு மானி­யம் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">5,000 சூரிய சக்தி பம்பு செட்­டு­கள், 1,000 சூரிய சக்தி உலர்த்­தி­கள் மற்­றும் 1,000 சூரிய சக்தி மின் வேலி­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">100 வேளாண் இயந்­திர பழு­து­பார்ப்பு சேவை மையங்­கள் அமைப்­ப­தற்கு ஊரக இளை­ஞர்­கள், பதிவு செய்­யப்­பட்ட விவ­சாய சங்­கங்­கள், உழ­வர் உற்­பத்­தி­யா­ளர் நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு மானிய உதவி வழங்­கப்­ப­டும். தேவை­யான பயிற்­சி­யும் வழங்­கப்­ப­டும். இளை­ஞர்­க­ளுக்கு வேளாண் இயந்­தி­ரங்­க­ளைப் பழுது நீக்­கம் செய்­வ­தற்­குத் தேவை­யான பயற்­சி­யும் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">1000 உணவு மதிப்­புக் கூட்­டும் மையங்­கள் நிறு­வப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மூலிகை பயிர் சாகு­ப­டியை ஊக்­கு­விக்க ‘சிறப்­புத் திட்­டம்’ உரு­வாக்கி, மருந்­துக்­கூர்­கன், செங்­காந்­தள், ஆவா­ரம், நித்­திய கல்­யாணி போன்ற மருத்­துவ பயிர்­க­ளின் சாகு­படி 25,000 ஏக்­கர் பரப்­ப­ள­வில் மேற்­கொள்­ளப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">உழ­வர் சந்­தை­கள் இல்­லாத ஊராட்சி ஒன்­றி­யப் பகு­தி­க­ளில் புதிய உழ­வர் சந்­தை­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பூச்சி மருந்து மற்­றும் பயிர் பாது­காப்பு முறை­க­ளைக் குறைந்த செல­வில் செய்து அதிக மக­சூ­லைப் பெற ட்ரோன் பயன்­பாடு ஊக்­கு­விக்­கப்­ப­டும். குறைந்த வாட­கை­யில் விவ­சா­யி­க­ளுக்கு ட்ரோன்­கள் கிடைக்­கும் வகை­யில் இ–வா­டகை திட்­டம் மூலம் இந்த முன்­னெ­டுப்பு செயல்­ப­டுத்­தப்­ப­டும். மேலும் இத்­திட்­டத்­தின் மூலம் ட்ரோன்­கள் இயக்­கு­வ­தற்­கான பயிற்சி அளிக்­கப்­பட்டு இளை­ஞர்­கள், குறிப்­பாக பெண்­கள், வேலை­வாய்ப்பு பெற­வும் வழி­வகை செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஊர­கப் பகு­தி­க­ளில் ‘உழ­வர் சந்­தை­கள்’ வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டு­வது போல், நகர்ப்­புற பகு­தி­க­ளில், 100 ‘உழ­வர் அங்­கா­டி­கள்’ அமைக்­கப்­ப­டும்,முதற்­கட்­ட­மாக மாந­க­ராட்­சிப் பகு­தி­க­ளில் இவை அமைக்­கப்­பட்டு, பின்­னர் படிப்­ப­டி­யாக, நக­ராட்­சிப் பகு­தி­க­ளி­லும் விரி­வு­ப­டுத்­தப்­ப­டும். இத­னால் உழ­வர்­க­ளுக்கு உரிய விலை கிடைக்­கப்­பெற்று பய­ன­டை­வர். நுகர்­வோ­ரும் தர­மான பொருட்­க­ளைக் குறை­வான விலை­யில் பெற வழி­வகை ஏற்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">உள்­நாட்­டி­லும், ஏற்­று­மதி வாயி­லாக வெளி­நா­டு­க­ளி­லும் வேளாண் விற்­ப­னையை அதி­க­ரிக்­கும் வித­மாக AI தொழில்­நுட்­பத்­து­டன் கூடிய “வேளாண் சந்தை நுண்­ண­றிவு மற்­றும் ஏற்­று­மதி வழி­காட்டி மையங்­கள்’’ மண்­டல அள­வி­லும், மாநில அள­வி­லும் உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வேளாண் பெருங்­குடி மக்­கள், உழ­வர் உற்­பத்­தி­யா­ளர் நிறு­வ­னங்­கள், தொழில்­மு­னை­வோர்­கள், மாண­வர்­கள், பொது­மக்­கள் உள்­ளிட்ட அனை­வ­ரும் பய­ன­டை­யும் வகை­யில், இனி ஆண்­டு­தோ­றும் மண்­டல அள­வில் வேளாண் கண்­காட்­சி­க­ளும், கருத்­த­ரங்­கு­க­ளும் நடத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வேளாண் பயிர்­க­ளில் உயர் விளைச்­சல் தரும் விதை­க­ளைக் கண்­ட­றிந்து, விதைப் பண்­ணை­கள் மூலம் உற்­பத்தி செய்து உழ­வர்­கள் பய­ன­டை­யும் வகை­யில் வட்­டார அள­வில் கிடைப்­ப­தற்கு வழி­வகை செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் வளர வாய்ப்­புள்ள, உயர் வரு­மா­னம் தரக்­கூ­டிய, முருங்கை, கொய்யா, பப்­பாளி, சப்­போட்டா, பலா, நெல்லி, நாவல், சீதா, ஆரஞ்சு போன்­ற­வற்­றின் தோட்­டக்­கலை சாகு­படி பரப்பை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பருப்பு வகை­கள், எண்­ணெய் வித்­துக்­கள் போன்­ற­வற்­றைக் கூடு­த­லாக விளை­வித்­தி­டச் சிறப்­புத் திட்­டங்­கள் வகுக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">5 ஆண்­டு­க­ளில் 5 கோடி பனை விதைக்­கப்­ப­டும். பனைப் பொருட்­க­ளுக்­கான சிறப்­புக் குழு­மங்­கள் அமைக்­கப்­ப­டும். தமிழ்­நாட்­டில் உற்­பத்­தி­யா­கும் பனைப் பொருட்­களை ஆவின் விற்­பனை நிலை­யங்­கள் வழி­யா­கச் சந்­தைப்­ப­டுத்த ஏற்­பாடு செய்­யப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">புதிய வேளாண் தொழில் பூங்­காக்­கள்: தமிழ்­நாட்­டில் விளை­யும் பொருட்­கள் சில பகு­தி­க­ளில் அடர்த்­தி­யாக காணப்­ப­டு­கி­றது. அவை பெரும்­பா­லும் மதிப்­புக் கூட்­டா­ம­லேயே விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது. இதனை மாற்றி அமைத்து மதிப்­புக்­கூட்­டப்­பட்ட பொருட்­க­ளாக உற்­பத்தி செய்­வதை ஏது­வாக்க வேளாண் தொழில் பூங்­காக்­கள் உரு­வாக்­கப்­ப­டும். முட்டை, தேங்­காய், வாழை, மா, நெல், பூக்­கள் போன்ற பொருட்­க­ளுக்­கான சிறப்பு தொழில் பூங்­காக்­கள் அமைக்­கப்­ப­டும். பட்­டுக்­கோட்டை, கிருஷ்­ண­கிரி, உத­க­மண்­ட­லம், ஏற்­காடு, கொடைக்­கா­னல், தேனி, இரா­ம­நா­த­பு­ரம், தென்­காசி, திரு­வண்­ணா­மலை, சேலம், பொள்­ளாச்சி, ஒட்­டன்­சத்­தி­ரம், திரு­வா­ரூர் போன்ற இடங்­க­ளில் அந்­தந்­தப் பகு­தி­க­ளில் பர­வ­லாக உற்­பத்தி செய்­யப்­ப­டும் பொருட்­க­ளுக்­கான வேளாண் தொழில் பூங்­காக்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நெல் விளை­யும் பகு­தி­க­ளில் செயல்­ப­டும் நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­க­ளில் நக­ரும் நெல் உலர்த்­தி­கள் தேவைக்­கேற்ப வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தானிய சேமிப்­புக் கிடங்­கு­கள் (Silo Storage): நெல்­லின் ஈரப்­ப­தம் கூடு­த­லாக இருக்­கும் பரு­வங்­க­ளில் கொள்­மு­தல் செய்­வது பெரும் சவா­லாக உள்­ளது. தானிய சேமிப்­புக் கிடங்­கு­கள் (Silo Storage) அமைத்­தால் 20% ஈரப்­ப­தம் உள்ள நெல்லை உலர்த்தி பெரு­ம­ள­வில் கொள்­மு­தல் செய்ய இய­லும். ஆகவே நெல் அதி­கம் விளை­யும் பகு­தி­க­ளில் தானிய சேமிப்­புக் கிடங்­கு­கள் உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">9. நீர் மேலாண்மை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">‘நீர் இன்றி அமை­யாது உலகு’ என்­றார் உல­கத்­துக்கு நீதி சொன்ன அய்­யன் வள்­ளு­வர். ‘குளம் தொட்டு வளம் பெருக்கி’ என்­றது புற­நா­னூறு. தலை­வர் கலை­ஞர் முத்­த­மி­ழ­றி­ஞர் மட்­டு­மல்ல; தமிழ்­நாட்­டின் நீர் நிலை­க­ளைக் காத்­த­வ­ரும் அவரே. 1967–ஆம் ஆண்டு திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சிக்கு வந்­தது முதல் 2011 வரை தமிழ்­நாட்­டில் 43 அணை­கள் கட்­டப்­பட்­டன. கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் காவிரி டெல்டா பகு­தி­க­ளில் 24,833 கி.மீ நீளத்­திற்கு தூர்­வா­ரும் பணி­கள் ரூ.459 கோடி மதிப்­பீட்­டில் சிறந்த முறை­யில் நடை­பெற்று கடை­மடை விவ­சா­யி­கள் பய­ன­டைந்­துள்­ள­னர். மாநி­லம் முழு­வ­தும் புதி­ய­தாக 121 தடுப்­ப­ணை­கள், 63 அணை­கட்­டு­கள் அமைக்­கும் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. கழக அர­சின் நீர் மேலாண்­மைப் பணி­க­ளில் மிக மிக முக்­கி­ய­மா­னது, ‘தாமி­ர­ப­ரணி – கரு­மே­னி­யாறு – நம்­பி­யாறு இணைப்பு கால்­வாய் திட்­டம்’ ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை மற்­றும் பிற மாவட்­டங்­க­ளில் வெள்­ளத்­த­ணிப்­புப் பணி­கள் ஆயி­ரத்து 640 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மேற்­கொள்­ளப்­பட்­ட­தால் வெள்ள நீர் பாதிப்­பின்றி மக்­கள் காப்­பாற்­றப்­பட்­ட­னர். ஐந்து ஆண்­டு­க­ளில் ஊரக வளர்ச்­சித்­துறை மூலம் தமிழ்­நாட்­டில் அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் 47 ஆயி­ரத்து 920 ஏரி­கள் மற்­றும் 1,33,967 கிலோ மீட்­டர் கால்­வாய்­கள் தூர்­வா­ரும் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை மாந­க­ரத்­தின் பெரு­கி­வ­ரும் குடி­நீர்த் தேவை­யைக் கருத்­தில்­கொண்டு ஆறா­வது நீர்­தேக்­க­மாக மாமல்­லன் நீர் தேக்­கத்­துக்கு அடிக்­கல் நாட்­டப்­பட்­டுள்­ளது. இதன் தொடர்ச்­சி­யாக திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நீர்­வ­ளம் பெருக்­கு­வோம்:  நீர்­நி­லை­க­ளுக்­குப் புத்­து­யிர் அளித்து நிலத்­த­டி­நீர் மட்­டத்தை உயர்த்­து­வ­தற்­கும், வேளாண் தேவை­கள் மற்­றும் குடி­நீர்த் தேவை­களை நீர் தட்­டுப்­பா­டின்றி முழு­மை­யா­கப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய வகை­யி­லும் ஊர­கப் பகு­தி­க­ளில் மாபெ­ரும் நீர் மேலாண்­மைத் திட்­டம் ஒன்று உரு­வாக்­கப்­பட்டு செயல்­ப­டுத்­தப்­ப­டும். இதன்­மூ­லம் அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 20 ஆயி­ரம் நீர்­நி­லை­கள் தூர்­வாரி, கரை­கள் பலப்­ப­டுத்­தப்­பட்டு புன­ர­மைக்­கப்­ப­டும். அவற்­றில் உள்ள மத­கு­கள், கலுங்­கு­கள் ஆகி­ய­வைச் சீர்­செய்­யப்­ப­டு­வ­து­டன், நீரா­டு­துறை போன்ற கட்­டு­மா­னப் பணி­க­ளும் மேற்­கொள்­ளப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வேளாண்­மைக்கு இன்­றி­ய­மை­யா­த­தா­கத் திக­ழும் நீர் நிலை­க­ளி­லும், அமைப்­பு­க­ளி­லும் ஆகா­யத்­தா­மரை போன்ற தாவர இனங்­க­ளின் பெருக்­கம் சீரான நீரோட்­டத்­திற்­கும், பாச­னத்­திற்­கும், பெரும் சிக்­க­லாக உரு­வாகி உள்­ளது. இவற்­றைத் தொடர்ந்து அப்­பு­றப்­ப­டுத்தி நீரோட்­டத்­தைச் சீராக்­கு­வோம். இதன் வாயி­லாக வாய்க்­கால்­கள், குளம், குட்டை, ஏரி ஆகி­யவை புத்­து­யிர்­பெ­றும். வேளாண்மை செழிக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நகர்ப்­பு­றங்­க­ளில் உள்ள நீர்­நி­லை­கள் அனைத்­தும் புன­ர­மைக்­கப்­பட்டு, அந்த நீர்­நி­லை­க­ளைச் சுற்றி நடை­பா­தை­கள் அமைத்து, மக்­கள் அத­னைத் தொடர்ந்து பயன்­ப­டுத்­தி­டும் வகை­யில் மாற்றி அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்­டின் அடுத்த 30 ஆண்­டு­க­ளுக்­கான குடி­நீர் தேவை, வேளாண்மை மற்­றும் தொழிற்­சா­லை­க­ளுக்­கான தேவை­க­ளைக் கணக்­கிட்டு, ஆய்வு செய்து அத்­தே­வை­களை நிறைவு செய்­யத்­தக்க வகை­யில் ‘தமிழ்­நாடு நீர்ப்­பா­து­காப்­புச் செயல்­திட்­டம் 2056’ உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்­டில், தேவைப்­ப­டும் மாவட்­டங்­க­ளில் குடி­நீர் விநி­யோ­கத்தை அதி­க­ரிக்­க­வும், நீர் வழங்­க­லைப் பர­வ­லாக்­க­வும் பெரிய நீர்த்­தேக்­கங்­கள் (Reservoirs) புதி­தாக உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">10. மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்வு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கோவிட் பெருந்­தொற்­றுக் காலத்­தில் ஆட்­சிக்கு வந்­தோம்; பெருந்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தி­னோம்; தடுப்­பூ­சியை அனைத்து மக்­க­ளுக்­கும் உறு­தி­செய்­தோம்; வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிதி உதவி அளித்­தோம். இதைத் தொடர்ந்து மக்­க­ளைத் தேடி மருத்­து­வம், இன்­னு­யிர் காப்­போம்  – நம்­மைக் காக்­கும் 48,  பாதம் பாது­காப்­போம்,  இத­யம் காப்­போம் திட்­டம், சிறு­நீ­ர­கம் காக்­கும் சீர்­மிகு மருத்­து­வத் திட்­டம், முதல்­வர் மருந்­த­கம்  போன்ற பல்­வேறு திட்­டங்­கள் மக்­க­ளைச் சென்­ற­டைந்து நலம் காத்து வரு­கி­றது. மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் திட்­ட­மா­னது ஐ.நா. விரு­தைப் பெற்­றுள்­ளது. ‘நலம் காக்­கும் ஸ்டாலின்’ முகாம் மூல­மாக ஒவ்­வொ­ரு­வ­ரின் நலத்­தை­யும் காக்­கும் அர­சாக திரா­விட மாடல் அரசு செயல்­பட்டு வரு­கி­றது. இதன் தொடர்ச்­சி­யாக திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">“நல­மு­டன் தமிழ்­நாடு 2030” என்ற திட்­டத்­தின்­படி தேவைப்­ப­டும் அனை­வ­ருக்­கும் போதிய மருத்­து­வக் காப்­பீடு கிடைக்­கும் வகை­யில் முத­ல­மைச்­ச­ரின் மருத்­து­வக் காப்­பீட்­டுத் திட்­டத்­தில் சேர்க்­கப்­ப­டு­வ­தற்­கான ஆண்டு வரு­மான வரம்பு ரூ.5 இலட்­ச­மா­க­வும், காப்­பீட்­டுத் தொகை ரூ.10 இலட்­ச­மா­க­வும் உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை, காஞ்­சி­பு­ரம் அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் இருப்­பது போன்று கட­லூர், தஞ்­சா­வூர், மதுரை, தூத்­துக்­குடி, திரு­நெல்­வேலி, இரா­ம­நா­த­பு­ரம், சேலம், திருப்­பூர், விழுப்­பு­ரம், திரு­வண்­ணா­மலை மற்­றும் கோவை ஆகிய மாவட்­டங்­க­ளில் உள்ள அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­க­ளில் புற்­று­நோய்க்­கான நவீன சிகிச்சை வச­தி­கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தாய்­சேய் நல­னில் IMR மற்­றும் MMR குறைக்­கும் தர­வ­ரி­சை­யில் இந்­தி­யா­வி­லேயே முதல் இடம்­பெற சிறப்பு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மண்­டல அள­வில்– தஞ்­சா­வூர், விழுப்­பு­ரம், தரு­ம­புரி ஆகிய இடங்­க­ளில் உயர்­சி­றப்பு மருத்­து­வ­ம­னை­கள் அமைக்­கப்­ப­டும். இந்த மருத்­து­வ­ம­னை­கள் ஒவ்­வொன்­றின் மூல­மும்,  சுற்­றி­யுள்ள மாவட்ட மக்­க­ளுக்கு உயர்­சி­கிச்சை அளிக்­கப்­ப­டு­வது உறுதி செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்­டில் இளம் வய­தி­னர் உயி­ரி­ழப்­பிற்­கும், வாழ்­நாள் குறை­வ­தற்­கும் கார­ண­மான இதய நோய்­கள், நீரி­ழிவு நோய், சிறு­நீ­ர­கப் பாதிப்பு, புற்­று­நோய்­கள், சுவாச நோய், செரி­மா­னம் சார்ந்த நோய்­கள் உள்­ளிட்ட முதன்­மை­யான பத்து தொற்றா நோய்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­த­வும், தடுக்­க­வும் சிறப்­புத் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நீரி­ழிவு, உயர் இரத்த அழுத்­தம், புற்­று­நோய் போன்­ற­வற்றை ஆரம்ப நிலை­யி­லேயே கண்­ட­றிய சிறப்பு முகாம்­கள் நடத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மண்­டல அள­வில் செயற்­கைக் கருத்­த­ரிப்பு மையங்­கள் தொடங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மண்­டல அள­வில் பல்­நோக்­குச் சிறப்பு கண் மருத்­துவ மையங்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நடுத்­தர வர்க்­கத்­தி­னர் அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் உள்ள வச­தி­க­ளைப் பெற, தனி­யார் காப்­பீடு வைத்­தி­ருக்­கும் மருத்­து­வப் பய­னா­ளி­க­ளும் பயன்­பெ­றும் வகை­யில், காப்­பீட்­டுச் சிறப்­புப் பகுதி விரி­வு­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சித்த மருத்­து­வப் பல்­க­லைக்­க­ழ­கம் தொடங்­கு­வ­தில் உள்ள இடர்ப்­பா­டு­க­ளைக் களைந்து சட்­ட­மி­யற்­றி­ய­வாறு அது தொடங்­கப்­ப­டும். இந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்­து­டன் இணைக்­கப்­ப­டும் மருத்­து­வ­மனை, சிகிச்சை அளிப்­ப­து­டன் சித்த மருத்­து­வத்தை நவீ­ன­ம­ய­மாக்­கும் அறி­வி­யல் ஆய்­வு­களை மேற்­கொள்­ளும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பாரம்­ப­ரிய மருத்­து­வ­மனை ஆவ­ணப்­ப­டுத்­து­தல்: தமிழ்­நாட்­டி­லுள்ள பாரம்­ப­ரிய சித்த மருத்­துவ முறை­கள் குறித்த அனைத்­துத் தர­வு­க­ளும் தஞ்­சா­வூர் தமிழ்ப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மூலம் ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">போதைப்­பொ­ருள் சம்­பந்­தப்­பட்ட குற்­றங்­க­ளில் ஈடு­ப­டு­வோரை அடை­யா­ளம் கண்டு உரிய தண்­ட­னையை விரைந்து பெற்­றுத் தரும் வகை­யில், போதைப் பொருள் விற்­பனை செய்­வோர்,  பயன்­ப­டுத்­து­வோர் குறித்த தக­வல்­க­ளைப் பொது­மக்­கள் பகிர்­வ­தற்கு ‘போதைப் பொருள் தக­வல் மையம்’ உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தீரா நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்டு நட­மாட இய­லாத நிலை­யில் உள்­ள­வர்­க­ளுக்கு ‘பரா­ம­ரிப்பு மற்­றும் சிகிச்சை மையம்’ (Hospice Care) மண்­டல அள­வில் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மாவட்­டங்­கள் முதல் வட்­டங்­கள் வரை­யி­லான அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் டயா­லி­சிஸ் சிகிச்­சைக்­கான வச­தி­கள், தேவைப்­ப­டும் அனை­வ­ருக்­கும் கிடைத்­தி­டும் வகை­யில், டயா­லி­சிஸ் கரு­வி­க­ளின் எண்­ணிக்கை தற்­போ­துள்ள நிலை­யில் இருந்து இரண்டு மடங்­காக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கண்­ணொளி மீட்­போம்:  அனை­வ­ரும் நல­மான கண்­பார்­வை­யு­டன் திகழ்­வதை உறு­தி­செய்­யும் பொருட்டு, கண்­ப­ரி­சோ­தனை முகாம்­கள் நடத்­தப்­பட்டு, தேவைப்­ப­டு­வோ­ருக்கு உரிய கண்­ணாடி வழங்­கப்­ப­டும். நலம் காக்­கும் ஸ்டாலின் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை பெருகி வரும் சூழ­லில் இந்த நோயின் தாக்­கத்­தைப் பற்­றி­யும், நோய் வரா­மல் தடுப்­ப­தற்­கு­ரிய வாழ்­வி­யல் முறை மாற்­றங்­கள் குறித்­தும், பொது­மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மா­கி­றது. எனவே,  தமிழ்­நாட்­டில் விற்­கப்­ப­டும் இனிப்பு வகை­கள், பானங்­கள் ஆகி­ய­வற்­றில் கலோரி மதிப்­பைக் குறிப்­பிட வேண்­டும் எனத் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு வலி­யு­றுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தெரு­நாய்க் கடி­யால் பாதிப்­ப­டை­யும் வாய்ப்பு அதி­கம் உள்ள முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்கு ரேபிஸ் தடுப்­பூ­சித் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­க­ளில் உள்ள உறுப்பு மாற்று அறு­வைச் சிகிச்­சைக்­கான மையங்­கள் தரம் உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்­டில் தற்­கொ­லை­க­ளால் ஏற்­ப­டும் உயி­ரி­ழப்­பு­க­ளைக் குறைக்­கும் வித­மாக ‘தற்­கொலை தவிர்ப்­புக் கொள்கை’ உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சிறப்பு ஆய்­வ­கங்­கள் (Advanced Diagnostic Labs): உயர்­தொ­ழில்­நுட்­பம் கொண்டு மேற்­கொள்ள வேண்­டிய அதி­கச் செலவு ஏற்­ப­டும் பகுப்­பாய்­வு­களை மேற்­கொள்ள சிறப்பு ஆய்­வ­கங்­கள் சென்னை மற்­றும் மது­ரை­யில் முதற்­கட்­ட­மா­கத் தொடங்­கப்­ப­டும். அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் சிகிச்சை பெறு­வோர் மட்­டு­மின்றி தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறு­வோ­ரும் இந்த ஆய்­வ­கங்­க­ளைக் குறைந்த செல­வில் பயன்­ப­டுத்­திக் கொள்ள வழி­வகை செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்­டில் செயல்­ப­டுத்­தப்­ப­டும் மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் நாட்­டிற்கே ஒரு முன்­னோ­டித் திட்­ட­மா­கும். இத்­திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக செயல்­ப­டுத்­தப்­ப­டும் பாதம் பாது­காப்­போம் திட்­டத்­தில் பயன்­பெ­றும் நோயா­ளி­க­ளுக்கு உரிய கால­ணி­கள் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் மன­நல மருத்­து­வர் மற்­றும் மன­நல ஆற்­றுப்­ப­டுத்­து­நர்­கள் நிய­மிக்­கப்­பட்டு, ஒருங்­கி­ணைந்த மன­நல மேம்­பாட்டு மையங்­கள் தொடங்­கப்­ப­டும்.தற்­போ­துள்ள வேக­மான வாழ்க்கை  சூழ்­நி­லை­யில் பொது மக்­க­ளி­டையே மன அழுத்­தம் உள்­ளிட்ட பல்­வேறு மன நலன் சார்ந்த பிரச்­ச­னை­கள் ஏற்­ப­டு­கின்­றன.  பொது­வாக மன­நல மருத்­து­வ­மனை மற்­றும் இதர மருத்­து­வ­ம­னை­க­ளில் உள்ள மன­ந­லப்­பி­ரி­வில் மன நோய்­க­ளுக்­கான (Mental illness)  சிகிச்சை முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் வழங்­கப்­பட்டு வரு­கி­றது. அதே­ச­ம­யம் மன­நல மேம்­பாட்­டிற்­கான வழி­காட்­டு­தல்­கள் ( Mental Health Promotion / Positive Mental Health), மன உளைச்­சல் மேலாண்­மைக்­கான (Stress Management Counselling)  ஆலோ­ச­னை­கள் &amp; Telecounselling Services உள்­ளிட்ட  சேவை­களை வழங்­கு­வ­தற்­காக “ஒருங்­கி­ணைந்த மன­நல மேம்­பாட்டு மையங்­கள்” வடி­வ­மைக்­கப்­ப­டும். இத்­த­கைய மையங்­கள் மூல­மாக, இளம் பரு­வத்­தி­னர் முதல் முதி­ய­வர்­கள் வரை, அனைத்து வய­தி­ன­ருக்­கும் தேவை­யான மன­நல மேம்­பாட்­டிற்­கான ஆலோ­ச­னை­கள்; மன உளைச்­சல் மேலாண்­மைக்­கான ஆற்­றுப்­ப­டுத்­து­தல் சேவை­கள்; தொலை­பேசி வழி ஆற்­றுப்­ப­டுத்­து­தல் சேவை (Tele Counselling Service) உள்­ளிட்ட பல்­வேறு மன­ந­லச்  சேவை­கள் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அனைத்து அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­
ம­னை­க­ளி­லும் Palliative and Geriatric care பிரி­வு­கள் துவங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">11. மக­ளிர் மேம்­பாடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">‘இன பாகு­பாடு இல்லை; பாலின பாகு­பாடு இல்லை’ என்­பதே திரா­விட இயக்­கத்­தின் அடிப்­ப­டைக் கொள்கை. எனவே, பெண்­கள் விடு­தலை, பெண்­ணு­ரிமை, மக­ளிர் மேம்­பாடு என்­ப­தைத் தொடக்க காலம் முதல் முழங்கி வரு­கி­றோம். திரா­விட மாடல் அர­சில் பெண்­க­ளுக்­கான பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்­கும் பாது­காப்­புக்­கும் மிகுந்த முக்­கி­யத்­து­வம் தரப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இல்­லத்­த­ர­சி­க­ளின் உழைப்­புக்கு அங்­கீ­கா­ரம் தரும் வகை­யில் ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளிர் மாதம் தோறும் ஆயி­ரம் ரூபாய் பெறு­கி­றார்­கள். ‘‘எங்க அண்­ணன் ஸ்டாலின் தரும் உரி­மைத் தொகை” என்று பெண்­கள் சொல்­கி­றார்­கள். பெண்­க­ளின் பொரு­ளா­தார உரி­மையை நிலை­நாட்டி, அவர்­க­ளது தன்­னம்­பிக்­கையை உயர்த்­தி­யுள்­ளது இந்­தத் தொகை. அத­னால்­தான், பல்­வேறு மாநி­லங்­கள் இந்­தத் திட்­டத்தை இப்­போது பின்­பற்­று­கின்­றன. முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­றுக் கொண்ட அன்றே கோட்­டைக்­குச் சென்று இட்ட முதல் கையெ­ழுத்து, ‘பெண்­க­ளுக்­குக் கட்­ட­ண­மில்லா பேருந்து’ என்­ப­து­தான். இதற்கு விடி­யல் பய­ணம் என்று பெயர் சூட்­டி­னார் முத­ல­மைச்­சர். மாதம் தோறும் 600 முதல் 1200 ரூபாய் வரை அவர்­கள் சேமிக்க வழி­வகை செய்­கி­றது இந்­தத் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அர­சுப் பள்­ளி­க­ளில் படித்து உயர் கல்­விக்­குச் செல்­லும் மாண­வி­ய­ருக்கு மாதந்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் வழங்­கப்­ப­டு­கி­றது. இத­னால் உயர்­கல்­வி­யில் சுமார் 53 ஆயி­ரம் மாண­வி­கள் கூடு­த­லா­கச் சேர்ந்­துள்­ள­னர். பணி­பு­ரி­யும் பெண்­க­ளுக்­குப் பாது­காப்­பான சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக, தோழி விடு­தி­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன. இலட்­சக்­க­ணக்­கான மக­ளிர் சுய உத­விக்­கு­ழுக்­கள் உரு­வாக்­கப்­பட்டு, கோடிக்­க­ணக்­கில் அவர்­க­ளுக்­குக் கட­னு­தவி தரப்­பட்டு தொழில் தொடங்க ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பெண்­கள் பெய­ரில் வீடு, மனை உள்­ளிட்ட சொத்­து­கள் பதிவு செய்­யப்­பட்­டால் பதி­வுக் கட்­ட­ணம் ஒரு விழுக்­காடு குறைக்­கப்­ப­டு­கி­றது. குழந்­தைத் திரு­ம­ணம், குழந்தை பாலி­யல் வன்­கொ­டுமை, குடும்ப வன்­முறை உள்­ளிட்ட பிரச்­ச­னை­க­ளுக்­குத் தீர்வு காணும் பாலின வள மையங்­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சிறு­மி­கள் மீதான பாலி­யல் வன்­கொ­டுமை, 18 வய­துக்­குட்­பட்ட பெண்­கள் மீதான கூட்­டுப் பாலி­யல் வன்­கொ­டுமை போன்ற கொடுங்­குற்­றம் செய்­வோ­ருக்கு மரண தண்­டனை விதிக்­கும் சட்­டம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு பெண்­க­ளுக்கு பொரு­ளா­தார மேம்­பா­டும், பாது­காப்­பும் வழங்­கு­வதை உறு­தி­செய்து வரு­கி­றது திரா­விட மாடல் அரசு. இதன் தொடர்ச்­சி­யாக திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கலை­ஞர் ஆட்­சிக்­கா­லத்­தில் அனைத்து வீடு­க­ளுக்­கும் கலர் டி.வி.கள் வழங்­கப்­பட்­டது முதல், திரா­விட மாடல் அரசு தற்­போது செயல்­ப­டுத்­தி­யுள்ள கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம் வரை, மக­ளிர் நலம் காக்­கும் பல்­வேறு முன்­னோ­டித் திட்­டங்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தால் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. இதன்  அடுத்­த­கட்­ட­மாக, மக­ளிர் அன்­றா­டம் பயன்­ப­டுத்­தும் பல்­வேறு வீட்டு உப­யோ­கப் பொருட்­க­ளின் தேவை அதி­க­ரித்து வரு­வ­தைக் கருத்­தில் கொண்டு, இல்­லத்­த­ர­சி­கள் தம் வீட்­டில் பயன்­ப­டுத்­தும் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி., கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ­வேவ் மற்­றும் மின் அடுப்­பு­கள் போன்ற வீட்டு உப­யோ­கப் பொருட்­க­ளைப் புதி­தாக வாங்­கவோ அல்­லது ஏற்­க­னவே பயன்­ப­டுத்­தி­வ­ரும் இத்­த­கைய பொருட்­க­ளுக்கு மாற்­றாக வாங்­கவோ, “இல்­லத்­த­ரசி” என்றபுதிய திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டும். இத்­திட்­டத்­தின்­கீழ், வரு­மான வரி செலுத்­தாத குடும்­பங்­க­ளின் இல்­லத்­த­ர­சி­கள் அனை­வ­ருக்­கும், அவர்­கள் வசிக்­கும் பகு­தி­க­ளில் உள்ள கடை­க­ளி­லேயே மேற்­கூ­றிய வீட்டு உப­யோ­கப் பொருட்­களை வாங்­கிக் கொள்­ளும் வகை­யில் ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் தலா 8 ஆயி­ரம் ரூபாய் கூப்­பன் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை மாதம் ஆயி­ரம் ரூபா­யில் இருந்து 2000 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பெண்­கள் உயர்­கல்வி பெறு­வதை ஊக்­கு­விக்­கும் புது­மைப்­பெண் திட்­டத்­தின்­கீழ் மாதந்­தோ­றும் மாண­வி­ய­ருக்கு வழங்­கப்­பட்டு வரும் ரூ. 1000 உத­வித்­தொகை, ரூ. 1500 ஆக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சுய­உ­த­விக்­குழு உறுப்­பி­ன­ராக இருக்­கும் பெண்­கள், அடுத்­த­கட்­டத்­திற்­குப் பொரு­ளா­தார ரீதி­யாக முன்­னே­றும் வகை­யில், அவர்­கள் தொழில்­மு­னை­வோ­ராக உரு­வாக்­கப்­ப­டு­வர். சுய­உ­த­விக் குழுக்­க­ளில்சிறிய அள­வில் தொழில் செய்­வோர், தொழி­லா­ளர்­கள்</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>