<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,700" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 31 2026 04:05:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260331T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="31032026-TRY-12" position.sequence="12" ex-ref="31032026-TRY-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20"> திருச்சி    </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">31.03.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="50">அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சிபெற </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="80">ரூ.20 ஆயிரம் கோடியில் சிறப்புத் திட்டம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">தி.மு.க. தேர்தல் அறிக்கை... 11- ஆம் பக்கத் தொடர்ச்சி! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194334_12_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup283514_12_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="WhatsAppImage_12_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="WhatsAppImage1_12_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அனைத்து வகை­யி­லும் தடுக்க நினைக்­கும் ஒன்­றிய பாஜக அரசு மற்­றொன்று என்­பதை மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் சுட்­டிக் காட்­டி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பத்­தாண்டு கால அ.தி.மு.க.ஆட்­சி­யின் சீர­ழி­வு­க­ளைச் சரி­செய்து, ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் தடை­க­ளை­யும் வென்று இன்று தமிழ்­நாட்டை அனைத்து வகை­யி­லும் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் வளர்த்­தெ­டுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி 11.19 விழுக்­காடு என்ற அள­வுக்கு உயர்த்­தப்­பட்டு இருக்­கி­றது. இந்­திய நாட்­டின் வளர்ச்­சி­யில் நூறில் பத்து விழுக்­காடு பங்கை தமிழ்­நாடு செலுத்தி வரு­கி­றது. நிதிப் பற்­றாக்­குறை திறம்­ப­டக் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. வரு­வாய் பற்­றாக்­குறை கணி­ச­மா­கக் குறைக்­கப்­பட்­டுள்­ளது. மாநில உள்­நாட்டு உற்­பத்­தி­யில் கட­னின் விகி­தம் குறை­யும் போக்­கில் உள்­ளது. நிதி ஆயோக் வெளி­யிட்ட நிலை­யான வளர்ச்சி இலக்­கு­க­ளுக்­கான குறி­யீட்­டில் இந்­தி­யா­வில் இரண்­டா­வது இடத்­தில் தமிழ்­நாடு இருக்­கி­றது. சமூக வளர்ச்­சிக் குறி­யீ­டு­க­ளில் தமிழ்­நாடு இரண்­டா­வ­தாக இருக்­கி­றது. பண­வீக்­கம் குறைந்து வரும் மாநி­ல­மா­கத் தமிழ்­நாடு இருக்­கி­றது. 20 முக்­கிய இந்­திய மாநி­லங்­க­ளில் தமிழ்­நாடு எட்­டா­வது இடத்­தில் – குறைந்த சில்­லறை வர்த்­த­கப் பண­வீக்­கத்­தைக் கொண்­டுள்ள மாநி­ல­மாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அனைத்து நிதி­யும் வளர்ச்­சித் திட்­டங்­க­ளுக்­குச் செலவு செய்­யப்­ப­டு­கி­றது.கொடுத்த வாக்­கு­று­தி­க­ளில் பெரும்­பா­லா­னவை நிறை­வேற்­றப்­பட நிதி­நிர்­வா­கம் சீராக இருப்­பதே கார­ண­மா­கும். இதன் தொடர்ச்­சி­யாக திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கடந்த 5 ஆண்­டு­க­ளாக திரா­விட மாடல் அரசு செயல்­ப­டுத்­தி­யுள்ள முன்­னோடி மக்­கள்­ந­லத் திட்­டங்­க­ளை­யும், கட்­ட­மைப்­புப் பணி­க­ளை­யும் தொடர்ந்து மேற்­கொள்­ள­வும், இந்­தத் தேர்­தல் அறிக்­கை­யில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்ள புதிய திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­தி­டத் தேவை­யான நிதி ஆதா­ரங்­கள் அனைத்­தும் சிறப்­பான நிதி மேலாண்­மை­யால் உறு­தி­செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கடந்த 16 ஆவது நிதிக்­கு­ழு­வின் அறிக்­கை­யின் படி­யான நிதிப் பங்­கீட்டு முறை தமிழ்­நாட்­டிற்கு அடுத்த 5 ஆண்­டு­க­ளில் சாத­க­மாக இல்­லாத சூழ­லி­லும், ஒன்­றிய அரசு மாற்­றாந்­தாய் மனப்­பான்­மை­யோடு தமிழ்­நாட்­டிற்கு உரிய நிதியை விடு­விக்க மறுக்­கும் நிலை­யி­லும், தமிழ்­நாட்­டின் நிதி உரி­மை­களை மீட்­டெ­டுத்து நமக்கு சட்­டப்­படி கிடைக்க வேண்­டிய அனைத்து நிதி­க­ளை­யும் போரா­டிப் பெறு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தேவை­யற்ற செல­வி­னங்­க­ளைக் குறைப்­ப­தன் மூல­மும், தகு­தி­யான பய­னா­ளி­க­ளைக் கண்­ட­றிந்து நலத்­திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­தி­யும் உட்­கட்­ட­மைப்­புப் பணி­களை உரிய காலத்­திற்­குள் முடித்­தும், அரசு நிதி­யைச் சேமிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மேற்­கூ­றிய கடி­ன­மான சூழ­லி­லும் நிதிப் பற்­றாக்­கு­றை­யைச் சட்­டப்­படி அனு­ம­திக்­கப்­பட்ட அள­விற்கு உள்­ளா­கக் கட்­டுப்­ப­டுத்தி, அர­சின் பல்­வேறு முயற்­சி­க­ளுக்­குத் தேவை­யான நிதி ஒதுக்­கீ­டு­களை உறு­தி­செய்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">49. சிறப்­புக் கவ­னப் பகு­தி­கள் வளர்ச்­சித் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">‘எல்­லார்க்­கும் எல்­லாம்’ என்ற திரா­விட மாடல் கொள்­கை­யின்­படி அனைத்­துத் துறை­க­ளின் வளர்ச்சி, அனைத்து மக்­க­ளின் வளர்ச்சி, அனைத்­துச் சமூ­கங்­க­ளின் வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என தமிழ்­நா­டெங்­கும் உறு­தி­செய்­யப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த நோக்­கத்தை மைய­மா­கக் கொண்டு ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அறி­விக்­கப்­பட்டு 6045 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட வட­சென்னை வளர்ச்­சித் திட்­ட­மா­னது மக்­க­ளி­டையே நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதே நோக்­கத்­து­டன் தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி எல்லா மாவட்­டங்­க­ளி­லும் சீரா­கக் காணப்­ப­டும் வகை­யில், அனைத்து மக்­க­ளும் பயன்­பெ­றும் வகை­யில் மண்­டல வாரி­யாக சிறப்­புக்­க­வ­னச் செயல்­திட்­டங்­கள் வகுக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இது­வரை பெரிய முத­லீ­டு­கள் வரப்­பெ­றாத மாவட்­டங்­க­ளி­லும் திரா­விட மாடல் ஆட்­சி­யில் பெரும் தொழில் முத­லீ­டு­கள் கடந்த 5 ஆண்­டு­க­ளில் ஈர்க்­கப்­பட்­டுள்­ளன. எனி­னும் இவை பர­வ­லாக எல்லா மாவட்­டங்­க­ளி­லும் ஏற்­பட வேண்­டும். வளர்ச்சி விகி­தங்­கள் உயர்த்­தப்­பட வேண்­டும் என்ற நோக்­கத்­தில் எந்­தெந்த மாவட்­டங்­க­ளின் வளர்ச்சி மாநில சரா­ச­ரி­யை­விட பின் தங்­கி­யுள்­ள­னவோ, அவற்­றுக்­கெ­னச் சிறப்பு வளர்ச்­சித் திட்­டங்­கள் உரு­வாக்­கப்­ப­டும். அப்­ப­கு­தி­க­ளுக்­குத் தேவை­யான அடிப்­ப­டைக் கட்­ட­மைப்­பு­க­ளான சாலை­கள், போக்­கு­வ­ரத்து வசதி, வீடு­கள், குடி­நீர் வசதி போன்­றவை போர்க்­கால அடிப்­ப­டை­யில் உரு­வாக்­கப்­ப­டும். கல்வி, மருத்­து­வம், போன்­ற­வற்­றில் சிறப்­புக் கவ­னம் செலுத்தி மனி­த­வ­ளக் குறி­யீ­டு­களை இந்த மாவட்­டங்­க­ளில், மாநில சரா­ச­ரி­யின் அள­வுக்கு உயர்த்­து­வோம். இவற்­றுக்­குத் தேவை­யான சிறப்பு நிதி ஒதுக்­கப்­பட்டு பின்­வ­ரும் வகை­க­ளில் சிறப்பு வளர்ச்­சித் திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­ப­டும். இதன் தொடர்ச்­சி­யாக திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மின்­னணு மற்­றும் வாகன உதி­ரி­பா­கங்­கள் தயா­ரிப்பு, தொழிற்­பூங்­காக்­கள்அமைப்பு, வேலை­வாய்ப்­பு­க­ளைப் பெருக்­கக் கூடிய தோல் அல்­லாத காலணி உற்­பத்தி, காய்­கறி, கனி­வ­கை­கள் மற்­றும் உணவு பதப்­ப­டுத்­து­தல் தொழில்­க­ளுக்­கான உட்­கட்­ட­மைப்பு, இளை­ஞர்­க­ளுக்­கான திறன் பயிற்சி, I.T. பூங்­காக்­கள் மற்­றும் முழு­மை­யான குடி­நீர் திட்­டங்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­து­தல் உள்­ளிட்ட வட­மா­வட்­டங்­க­ளுக்­கான சிறப்பு வளர்ச்­சித் திட்­டம்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தொழில் முத­லீ­டு­களை ஊக்­கு­விக்க விரை­வுச் சாலை­கள் அமைத்­தல், திருச்­சி­யில் ஏற்­று­ம­திக்கு தேவை­யான உலர் துறை­மு­கக் கட்­ட­மைப்பு (Dry Port). தூய்மை காவி­ரித் திட்­டம்–2030செய­லாக்­கம், ஒருங்­கி­ணைந்த சுற்­றுலா மேலாண்­மைத் திட்­டங்­கள், வேளாண்­மைக்­கான நீரா­தார உட்­கட்­ட­மைப்பு தீவிர மேம்­பாடு, கடல்­சார் பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான திட்­டங்­கள் உள்­ளிட்ட டெல்டா மாவட்­டங்­க­ளுக்­கான சிறப்பு வளர்ச்­சித் திட்­டம்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">வேளாண் பொருட்­கள் ஏற்­று­ம­திக்­கான சிறப்­புத் திட்­டங்­கள், குழாய்­கள் அமைத்­தல், சாலை­கள் மற்­றும் பொதுப் போக்­கு­வ­ரத்து மேம்­பாடு, சிறு குறு நடுத்­த­ரத் தொழில் நிறு­வ­னங்­க­ளுக்­கான பொது­வ­சதி மையங்­கள் அமைத்­தல், சிறப்பு சுற்­றுலா வளர்ச்­சித் திட்­டங்­கள், இளை­ஞர்­க­ளுக்­கான திறன் வளர்ச்சி மையங்­கள், கட­லோர மாவட்ட சிறப்பு வளர்ச்­சித் திட்­டங்­கள் உள்­ளிட்ட தென்­மா­வட்­டங்­க­ளுக்­கான வளர்ச்­சித் திட்­டம் ஆகி­யவை 20 ஆயி­ரம் கோடி ரூபா­யில் செயல்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">2030–ஆம் ஆண்­டுக்­குள் மாவட்­டங்­க­ளுக்கு இடை­யே­யான வளர்ச்சி வேறு­பா­டு­கள் குறைக்­கப்­பட்டு, அனைத்து மாவட்­டங்­க­ளும் சீரான வளர்ச்சி பெற்ற மாநி­ல­மா­கத் தமிழ்­நாடு தலை­நி­மிர்ந்து நிற்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">50. சிறப்­புத் தொழில் வளர்ச்­சித் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மின் மோட்­டார் உற்­பத்தி, வாகன உதிரி பாகங்­கள், ஜவுளி, நெசவு, ஆயத்த ஆடை­கள் உற்­பத்தி, உணவு பதப்­ப­டுத்­தும் தொழில், தக­வல் தொழில்­நுட்­பம் உள்­ளிட்ட பல்­வேறு பிரி­வு­க­ளில் சிறப்­பான வளர்ச்சி கண்­டு­வ­ரும் மேற்கு மாவட்­டங்­க­ளில் தொழில் மற்­றும் வேளாண் வளர்ச்சி அடுத்­த­கட்­டத்­திற்­குக் கொண்டு செல்­லப்­ப­டும். அந்த வகை­யில் நக­ரப்­ப­கு­தி­கள் மேம்­பாடு, நவீன முறை­யில் உயர் தொழில்­நுட்ப நிறு­வன முத­லீ­டு­களை ஈர்த்­தல், நவீன திறன் மேம்­பாட்டு பயிற்சி மையங்­கள், பல்­வேறு வகை ஜவுளி ஏற்­று­ம­திக்­கான உட்­கட்­ட­மைப்­பு­கள், புதிய ஜவு­ளித் தொழில்­நுட்­பத்­து­டன் ஜவு­ளித் தொழிலை நவீ­ன­ம­ய­மாக்­கு­தல், மாவட்­டங்­கள் சார்ந்த சிறு, குறு, நடுத்­த­ரத் தொழில்­கள் வளர்ச்­சிக்­கான சிறப்­புக் குழு­மங்­கள் அமைத்­தல் மற்­றும் கட­னு­தவி ஏற்­பா­டு­கள், வேளாண்மை உற்­பத்தி மற்­றும் பதப்­ப­டுத்­து­தல் தொழில்­களை ஊக்­கு­வித்­தல் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்கி ஒரு சிறப்­புப் பெருந்­திட்­டம் ரூ.2000 கோடி மதிப்­பீட்­டில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்வாறு கழகத் தேர்தல் அறிக்கையில் 
வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>