<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/03/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 31 2026 04:07:10 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260331T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="31032026-TRY-14" position.sequence="14" ex-ref="31032026-TRY-14.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி    </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">31.03.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">எரிசக்தி ஆதாரங்களை திறம்பட பன்முகப்படுத்த அரசு தவறியுள்ளது! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="39">சிலிண்டர் எரிவாயு பற்றாக்குறையைச் சமாளிக்க ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">மாநிலங்களவையில் நிதி மசோதா மீது உரையாற்றிய மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கேள்வி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup283744_14_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194334_14_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="wilsonbw_14_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">புது­டெல்லி, மார்ச் 31 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">மாநி­லங்­க­ள­வை­யில் நிதி மசோதா 2026 ன் மீது கழக உறுப்­பி­னர் பி.வில்­சன் பேசும்­போது, எரி­சக்தி ஆதா­ரங்­களை திறம்­பட பன்­மு­கப்படுத்த ஒன்­றிய அரசு தவ­றி­யுள்­ளது என்­றும் சிலிண்­டர் எரி­வாயு பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்க ஒன்­றிய அரசு என்ன நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது என­வும் கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாநி­லங்­க­ள­வை­யில், நிதி மசோதா 2026 ன் மீது தி.மு.க. மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர்  பி.வில்­சன் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த ஒன்­றிய அர­சா­னது ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற வாக்­கு­று­தி­யோ­டு­தான் ஆட்­சிக்கு வந்­தது. ஆனால், இன்று நாம் காண்­பதோ ‘சப்கா போஜ், சிர்ப் உன்கா விகாஸ்’ அதா­வது அனை­வர் மீதும் சுமை, ஒரு சில­ருக்கு மட்­டுமே வளர்ச்சி என்ற ஆட்­சி­யைத்­தான், அந்த வகை­யில் சாமா­னிய மக்­கள் மீது சுமை­யை­யும், ஒரு சில குறிப்­பிட்ட நபர்­க­ளுக்கு மட்­டுமே பலன்­க­ளை­யும் வழங்­கும் ஒரு ஆட்­சி­யாக ஒன்­றிய பா.ஜ.க. ஆட்சி நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த அரசு வெறும் முழக்­கங் ­களை வைத்தே இயங்­கு­கி­றது. இந்த நிதி­நிலை அறிக்­கை­யும் அதே போன்ற வெற்று முழக்­கங்­ க­ளால் மட்­டுமே நிரம்­பி ­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இளை­ஞர் சக்தி சார்ந்த நிதி­நிலை அறிக்கை என்று தம்­பட்­டம் அடிக்­கப்­ப­டும் இந்த பட்­ஜெட்டை வேலை­யில்­லாத் திண்­டாட்­டத்­தைப் பற்­றிய நான் ஒரு உதா­ர­ணத்­து­டன் விளக்­கு­ கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">வேலை­யில்லா திண்­டாட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தியா இன்று வேலை­யில்­லாத் திண்­டாட்­டத்­தின் பெரும் நெருக்­க­டி­யைச் சந்­தித்து வரு­கி­றது. இதில் மிக­வும் அதிர்ச்­சி­ய­ளிக்­கும் விஷ­யம் என்­ன­வென்­றால், சர்­வ­தேச தொழி­லா­ளர் அமைப்பு மற்­றும் மனித மேம்­பாட்டு நிறு­வ­னம் இணைந்து வெளி­யிட்ட ‘இந்­தியா வேலை­வாய்ப்பு அறிக்கை 2024’-ன் படி, நம் நாட்­டில் வேலை­யில்­லா­த­வர்­க­ளில் 83 சத­வீ­தம் பேர் இளை­ஞர்­கள் என்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘State of Working India 2026’ என்ற தலைப்­பி­லான அறிக்கை, 29 வய­துக்­குட்­பட்ட பட்­ட­தாரி இளை­ஞர்­க­ளி­டையே வேலை­யில்­லாத் திண்­டாட்­டம் 40 சத­வீ­த­மாக உள்­ளது என்­ப­தைக் கண்­ட­றிந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதன் பொருள் என்­ன­வென்­றால், படித்த இளம் இந்­தி­யர்­க­ளில் பத்­தில் நான்கு பேர் வேலை­யில்­லா­மல் இருக்­கி­றார்­கள் என்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த நிதி மசோதா அந்த இளை­ஞர்­க­ளுக்கு என்ன வழங்­கு­கி­றது? ‘யுவ­சக்தி’ போன்ற முழக்­கங்­க ­ளையா?... முழக்­கங்­கள் ஒரு­போ­தும் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­வி­டாது. நகர்ப்­புற இளை­ஞர்­க­ளுக்­குத் தேசிய அள­வில் எந்­த­வொரு வேலை­வாய்ப்பு உத்­த­ர­வா­தத் திட்­ட­மும் இல்லை. வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தற்­கான எந்­த­வொரு சட்­ட­பூர்­வ­மான கட்­ட­மைப்பு வச­தி­யும் இங்கு இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சமூக பாது­காப்பு திட்­டம் 
இங்கு இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வின் உழைக்­கும் சக்­தி­யில் 90 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மா­னோர் ஈடு­பட்­டுள்ள அமைப்­பு­சாரா மற்­றும் கிக் தொழி­லா­ளர்­க­ளுக்கு எந்­த­வொரு பாது­காப்­பும் இல்லை. அவர்­களுக்கு என்று எந்­த­வொரு உல­க­ளா­விய சமூ­கப் பாது­காப்­புத் திட்­ட­மும்இங்கு இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வில் நில­வும் ஏற்­றத்­தாழ்வு ஏற்க முடி­யாத அளவை எட்­டி­யுள்­ளது. ‘உலக ஏற்­றத்­தாழ்வு அறிக்கை 2026’-ன் படி, நாட்­டின் வரு­மா­னத்­தில் 58 சத­வீ­தத்தை முதல் 10 சத­வீ­தத்­தி­னர் மட்­டுமே அப­க­ரித்­துக் கொள்­கின்­ற­னர். மேலும், நாட்­டின் மொத்­தச் செல்­வத்­தில் 65 சத­வீ­தம் இவர்­க­ளி­டமே குவிந்­து ள்­ளது. அதே வேளை­யில், நாட்­டின் கீழ­டுக்­கில் உள்ள 50 சத­வீ­தத்­தி­னர் - அதா­வது 70 கோடிக்­கும் அதி­க­மான இந்­தி­ யர்­கள், வெறும் 15 சத­வீத வரு­மா­னத்தை மட்­டுமே பெறு­கின்­ற­னர்.. மேலும், நாட்­டின் மொத்­தச் செல்­வத்­தில் இவர்­க­ளி­டம் இருப்­பது வெறும் 6 சத­வீ­தம் மட்­டுமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">பசி குறியீட்டில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">102 வது இடம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நேற்­று­தான் சமூக ஊட­கங்­க­ளில் ஒரு பதி­வைப் பார்த்­தேன்.. 2014-ஆம் ஆண்­டி­லி­ருந்து அம்­பா­னி­யின் சொத்து மதிப்பு 500 சத­வீ­த­மும், அதா­னி­யின் சொத்து மதிப்பு 1000 சத­வீ­தத்­திற்­கும் மேலா­க­வும் உயர்ந்­துள்­ளது. ஆனால், அதே கால­கட்­டத்­தில் உல­கப் பசி குறி­யீட்­டில் இந்­தியா 52-வது இடத்­தி­லி­ருந்து 102-வது இடத்­திற்கு வீழ்ந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­திய வணி­கங்­கள் மற்­றும் பெரு­நி­று­வ­னங்­கள் சிறப்­பா­கச் செயல்­ப­டு­வ­தற்கு நான் எதி­ரா­ன­வன் அல்ல. சொல்­லப்­போ­னால், இந்­தி­யத் தொழில்­து­றை­யின் வளர்ச்­சி­யால்­தான் நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சியே உந்­தப்­ப­டு­கி­றது. ஆனால், இங்கே கேள்வி என்­ன­வென்­றால், நாட்­டில் நில­வும் வரு­மான ஏற்­றத்­தாழ்வு மற்­றும் சமூ­கத்­தின் நடுத்­தர மற்­றும் அடித்­தட்டு பொரு­ளா­தார வர்க்­கத்­தி­னர் மீது இந்த அரசு காட்­டும் அலட்­சி­யப்­போக்­கும்­தான்.. அப்­ப­டி­யென்­றால், இந்த வரு­மான ஏற்­றத்­தாழ்­வைக் களை­வ­தற்­கும், கடும் வறு­மை­யில் வாடு­ப­வர்­க­ளுக்கு உத­வு­வ­தற்­கும் இந்த நிதி மசோதா என்ன செய்­கி­றது? ஒன்­று­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த மசோதா பெரும் பணக்­கா­ரர்­க­ளுக்கு வரி விதிக்­கி­றதா? செல்வ வரி அல்­லது பரம்­ப­ரைச் சொத்து வரியை அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றதா? குறைந்­த­ பட்­சம் செல்­வப் பகிர்­வுக்­கான முயற்­சி­யை­யா­வது எடுக்­கி­றதா? இல்லை. மாறாக, இது பெரு­நி­று­வ­னங்­க­ளுக்­குச் சலு­கை­களை வாரி வழங்­கு­கி­றது - குறைந்­த­பட்ச மாற்று வரி 14 சத­வீ­த­மா­கக் குறைக்­கப்­ப ட்­டுள்­ளது..</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளின் ஆதிக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளுக்­கான வரி விடு­முறை 20 ஆண்­டு­க­ளாக நீட்­டிக்­கப்­பட்­டு ள்­ளது; தரவு மையங்­க­ளுக்­கான ‘சேஃப் ஹார்­பர் மார்­ஜின்’ 15 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது; மேலும் செமி­கண்­டக்­டர்­கள், அரிய வகை தாதுக்­கள் மற்­றும் மின்­ன­ணு­வி­யல் போன்ற மூல­த­னம் அதி­கம் தேவைப்­ப­டும் துறை­ க­ளுக்­குப் பெரும் ஊக்­கத்­தொ­கை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன - இவை அனைத்­தும் ஒரு சில கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளின் ஆதிக்­கத்­தில் உள்ள துறை­கள். உண்­மை­யில், கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது சமூக நலச் செல­வி­னங்­கள் ரூ.59,456 கோடி வரை குறைக்­க ப்­பட்­டுள்­ளது. பாலின நிதி­நிலை அறிக்­கை­யில் மட்­டுமே ரூ.51,144 கோடி குறைக்­கப்­பட்­டுள்­ளது.. ஏழை எளி­ய­வர்­க­ளைக் காக்­கும் திட்­டங்­க­ளான - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை­வாய்ப்­புத் திட்­டம், பிர­த­ம­ரின் வீட்டு வச­தித் திட்­டம், ஆயுஷ்­மான் பாரத், பள்­ளிச் சத்­து­ண­வுத் திட்­டம் மற்­றும் பயிர் காப்­பீட்­டுத் திட்­டம் என அனைத்­தும் நிதி ஒதுக்­கீட்­டில் வஞ்­சிக்­கப்­பட்­டுள்­ளன. மத்­திய அர­சுக்­குத் தெரிந்த ஒரே மக்­கள் நலப் பொரு­ளா­தா­ரம் என்­பது ‘நேர­டிப் பணப் பரி­மாற்­றம்’ மட்­டுமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பா.ஜ.க. மற்­றும் அதன் கூட்­ட­ணிக் கட்­சி­கள் ஆளும் மாநி­லங்­க­ளில்  தேர்­தல் காலங்­க­ளில் மட்­டுமே இந்த நேர­டிப் பணப் பரி­மாற்­றங்­கள் நடக்­கின்­றன. அது­வும் தேர்­த­லுக்கு முன்­னால் மட்­டும்­தான். தேர்­தல் முடிந்த பிறகு, அனை­வ­ருக்­கும் பொது­வான அடிப்­படை வரு­மா­னத்தை உறுதி செய்­யும் எண்­ணம் இந்த அர­சுக்­குக் துளி­யும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உர மானி­யங்­கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன. உணவு மானி­யங்­கள் துண்­டிக்­க ப்­பட்­டுள்­ளன.. எரி­பொ­ருள் ஆத­ரவு சுருங்கி வரு­கி­றது. கோடீஸ்­வ­ரர்­க­ளின் வங்­கிக் கணக்­கு­களை நிரப்­பு­ வ­தற்­காக, ஏழை­க­ளின் உயிர்­நா­டியை ஒன்­றிய அரசு பறித்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சிலிண்­டர் எரி­வாயு பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்க என்ன நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்று உல­கி­லேயே LPG ஐ அதி­கம் நுக­ரும் நாடு­க­ளில் ஒன்­றாக இந்­தியா உள்­ளது. நமது நாட்­டின் ஆண்டு நுகர்வு தோரா­ய­மாக 3.1 கோடி டன்­க­ளாக உள்­ளது. ஆனால், நமது தேசிய சேமிப்­புத் திறனோ வெறும் மூன்று முதல் நான்கு வார கால நுகர்வை மட்­டுமே ஈடு­கட்­டக்­கூ­டிய அள­வில் உள்­ளது; மேலும் நமது உத்­தி­சார் கையி­ருப்பு என்­பது மிக­வும் வரம்­பிற்­குட்­பட்­ட­தா­கவே இருக்­கி­றது. நமது LPG தேவை­யில் சுமார் 60 முதல் 67 சத­வீ­தம் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கி­றது.. இதில் பெரும்­ப­குதி ஹார்­முஸ் நீரிணை வழி­யாக மேற்கு ஆசி­யா­வி­லி­ருந்து வரு­கி­றது. இது, புவி­சார் அர­சி­யல் மாற்­றங்­க ­ளால் ஏற்­ப­டும் பாதிப்­பு­க­ளுக்கு இந்­தியா எளி­தில் இலக்­கா­கக்­கூ­டிய ஒரு சூழலை உரு­வாக்­கு­கி­றது. எரி­சக்தி ஆதா­ரங்­களை திறம்­பட பன்­மு­கப்­ப­டுத்த இந்த அரசு தவ­றி­யதே இதற்கு முக்­கி­யக் கார­ண­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எரி­வாயு குழாய்ப் பாதை­கள் மற்­றும் முனை­யங்­கள் போன்ற அவ­சி­ய­மான இயற்கை எரி­வாயு உள்­கட்­ட­மைப்­பு­களை உரு­வாக்­கு­வ­தில் இந்த அரசு காட்டி வரும் மெத்­த­னப்­போக்கு, ‘எரி­வாயு அடிப்­ப­டை­யி­லான பொரு­ளா­தா­ரம்’ என்ற இலக்கை எட்­டு­வ­தற்­குப் பெரும் தடை­யாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உதா­ர­ண­மாக, கொச்சி LNG முனை­ய­மா­னது பல ஆண்­டு­க­ளாக அதன் முழுத் திற­னுக்­கும் குறை­வா­கவே பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. சமீ­பத்­தில், குழாய் வழி இயற்கை எரி­வாயு இணைப்பு வசதி இருந்­தும், அத­னைப் பயன்­ப­டுத்­தா­த­வர்­க­ளின் எல்­பிஜி இணைப்பு துண்­டிக்­க ப்­ப­டும் என்று அரசு அறி­வித்­துள்­ளது. இது மிக­வும் கொடுங்­கோன்­மை­யான நட­வ­டிக்­கை­யா­கும். அதி­கப்­ப­டி­யான செலவு மற்­றும் தொழில்­நுட்­பச் சிக்­கல்­கள் என மக்­கள் புதிய முறைக்கு மாறா­த­தற்­குப் பல கார­ணங்­கள் இருக்­க­லாம். இத்­த­கைய மாற்­றங்­களை நாம் மென்­மை­யா­க­வும், போதிய கால அவ­கா­சம் வழங்­கி­யும் ஊக்­கப்­ப­டுத்த வேண்­டுமே தவிர, கட்­டா­யப்­ப­டுத்­தியோ அல்­லது உட­ன­டி­யா­கவோ திணிக்­கக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">வரி­ ப­யங்­கர வாதம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேற்கு ஆசி­யா­வில் தற்­போது நில­வும் சர்­வ­தே­சப் பதற்­றங்­க­ளைச் சமா­ளிக்க இந்த நிதி­நிலை அறிக்­கை­யில் ஏதே­னும் ஒரு சிறப்­புத் திட்­டம் உள்­ளதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நடுத்­தர வர்க்­கத்­தி­ன­ரைப் பொறுத்­த­வரை, இந்த மசோ­தா­வில் முறை­யான வரிச் சலு­கை­கள் எது­வும் இல்லை. அவர்­க­ளின் சேமிப்பை ஊக்­கு­விப்­ப­தற்கோ அல்­லது வரு­மா­னத்­தைத் தடை­யின்றி வெளிப்­ப­டுத்­து­வ­தற்கோ இதில் எந்­த­வி­தத் தூண்­டு­த­லும் இல்லை. மாறாக, நாம் இங்கே காண்­பது அதி­கா­ரங்­க­ளின் ஆபத்­தான விரி­வாக்­கத்­தையே ஆகும் - வரி அதி­கா­ரி­கள் இப்­போது கால வரம்புஎது­வு­மின்றி, முடிந்­து­போன வழக்­கு­க­ளில் கூட, பழைய வரி மதிப்­பீ­டு­களை மீண்­டும் திறக்க முடி­யும்.  இது சட்­டப்­பூர்வ ஆத­ர­வு­டன் நடத்­தப்­ப­டும் ஒரு ‘வரி பயங்­க­ர­வா­தம்’ ஆகும். பட்­ஜெட் முன்­மொ­ழிவு குறித்த எனது உரை­யில், வரி நிர்­வா­கத்­தில் நில­வும் இடை­வி­டாத ‘சிவப்பு நாடா’ முறை­யி­லி­ருந்து எந்­த­வித விடு­த­லை­யும் இல்லை என்­பதை நான் சுட்­டிக்­காட்­டி­ னேன். அதி­லி­ருந்து நிவா­ர­ணம் வழங்க இந்த நிதி மசோ­தா­வில் எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விவ­சா­யி­க­ளுக்­குக் குறைந்­த­பட்ச ஆத­ரவு விலைக்­கான சட்­ட­பூர்­வ­மான உத்­த­ர­வா­தம் இன்­னும் வழங்­கப்­ப­ட­வில்லை.. கடன் சுமை, கால­நிலை அபா­யங்­கள் அல்­லது விலை ஏற்­றத்­தாழ்­வு­க­ளைச் சரி­செய்­யும் விரி­வான விவ­சா­யச் சீர்­தி­ருத்­தங்­கள் எது­வு­மில்லை. விவ­சா­யி­கள் தொடர்ந்து துய­ரப்­ப­டு­கி ­றார்­கள், தற்­கொ­லை­கள் தொடர்­கின்­றன, ஆனால் இந்த அர­சாங்­கம் அத­னைப் பாரா­மு­க­மா­கவே வேடிக்கை பார்க்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பாது­காப்பு , எரி­சக்தி , துறை­ முகங்­கள் மற்­றும் விமான நிலை­யங்­கள் போன்ற முக்­கி­யத் துறை­க­ளில் ஏக­போக ஆதிக்­கம் அதி­க­ரித்து வரு­வதை இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் நான் சுட்­டிக்­காட்ட விரும்­பு­ கி­றேன். இது தேசிய நல­னுக்கு எதி­ரா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த சில ஆண்­டு­க­ளில், அனைத்து நிலக்­கரி அடிப்­ப­டை­யி­லான அனல் மின் நிலை­யங்­க­ளும், மின்­சா­ரக் கொள்­மு­தல் ஒப்­பந்­தங்­க­ளின் நிபந்­த­னை­களை மீறி, நிலக்­க­ரியை Pass Through அடிப்­ப­டை­யில் கொள்­மு­தல் செய்ய வேண்­டும் என்று இந்­திய அரசு ஒரு உத்­த­ர­வைப் பிற ப்­பித்­துள்­ளது என்­ப­தை­யும் நான் இங்கே சுட்­டி க்­காட்ட விரும்­பு­கி­றேன். இத­னால் மின் விநி­யோக நிறு­வ­ னங்­கள் கொள்­மு­தல் செய்­யும் மின்­சா­ரத்­தின் விலை விண்­ணைத் தொடும் அள­விற்கு உயர்ந்­துள்­ளது.. இறு­தி­யில் இந்­தச் சுமை நுகர்­வோர் மீதே சுமத்­தப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மின்­சா­ரச் சட்­டத்­தின் 11-வது பிரி­வின் கீழ் வழங்­கப்­பட்ட இந்த Pass Through உத்­த­ர­வு­க­ளால் ஏற்­பட்­டுள்ள நிதி நெருக்­கடி குறித்து அர­சாங்­கம் ஒரு முழு­மை­யான தணிக்­கையை மேற்­கொள்­ளும் என்­றும், இனி­வ­ரும் காலங்­க­ளில் இத்­த­கைய தற்­கா­லிக உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பி க்­கா­மல், இறக்­கு­மதி நிலக்­க­ரி­யின் அதி­கப்­ப­டி­யான விலை­யைச் சமா­ளிக்க ஒரு முறை­யான திட்­டத்தை உரு­வாக்­கும் என்­றும் நான் நம்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">4.3 சத­வீத நிதிப் பற்­றாக்­குறை இலக்கை எட்­டி­யுள்­ள­தாக அர­சாங்­கம் நிதி மேலாண்­மைத் திற­னைப் பறை­சாற்­று­கி­றது. ஆனால், மக்­கள் நலத் திட்­டங்­களை முடக்­கி­யும், மானி­யங்­க­ளைக் குறைத்­தும், ஏழை எளிய மக்­கள் மீது சுமை­யைச் சுமத்­தி­யும் இந்த இலக்கை ஒரு­போ­தும் எட்ட முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே நேரத்­தில், இந்­தி­யா­வின் கடன்-­­­ஜி­டிபி விகி­தம் 55.6 சத­வீ­த­மாக உள்­ளது,.. வட்டி செலுத்­து­ வ­தற்கே மொத்­தச் செல­வில் சுமார் 20 சத­வீ­தம் செல­வி­டப்­ப­டு­கி­றது. மொத்த வரி வரு­வாய் வளர்ச்சி வெறும் 8 சத­வீ­த­மாக மட்­டுமே உள்­ளது. ஜிஎஸ்டி வசூல் தேக்­க­ம­டைந்­துள்­ளது. நுகர்­வுத் தேவை குறைந்து வரு­கி­றது. யுபிஐ வளர்ச்­சி­யும் கூட மந்­த­ம­டைந்­துள்­ளது.. இவை அனைத்­தும் இந்­தி­யப் பொரு­ளா­தா­ரம் தனது வேகத்தை இழந்து வரு­வ­தற்­கான தெளி­வான அறி­கு­றி­க­ளா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">லாபத்தை தனி­யா­ருக்கு தாரை வார்ப்­பது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">IFSC அல­கு­க­ளுக்­கான வரிச் சலுகை 20 ஆண்­டு­
க­ளாக நீட்­டிக்­கப்­பட் ­டுள்­ளது.. அத்­தி­யா­வ­சி­யத் தாதுக்­க­ளுக்கு இறக்­கு­மதி வரி விலக்கு, தரவு மையங்­க­ளுக்கு ஊக்­கத்­தொகை மற்­றும் உள்­கட்­ட­மைப்பு இடர் உத்­த­ர­வாத நிதி எனச் சலு­கை­கள் அள்ளி வழங்­கப்­பட்­டுள்­ளன.. இது லாபத்­தைத் தனி­யா­ருக்­குத் தாரை வார்த்து, நஷ்­டத்தை மக்­கள் மீது சுமத்­தும் ஒரு தந்­தி­ர­மான வழி­மு­றை­யா­கும்.	 இது ஒரு மோச­மான முத­லா­ளித்­துவ வடி­வ­மா­கும். அர­சாங்­கம் 3.2 சத­வீ­தப் பண­வீக்­கம் பற்­றிப் பேச­லாம், ஆனால் மாண்­பு­மிகு நிதி­ய­மைச்­சர் அவர்­கள் இந்த அவையை விட்டு வெளியே வந்து உண்­மை­யான இந்­தியா எப்­படி உள்­ளது பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">வாக்குறுதிகள் என்னவானது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு பொறி­யி­யல் பட்­ட­தாரி வாடகை கார் ஓட்­டு­கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு விவ­சாயி விதை­க­ளுக்­கா­கக் கடன் வாங்­கு­கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு சிறு தொழில் சத்­த­மில்­லா­மல் மூடப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு குடும்­பம் தனது உண­வில் இருந்து புர­தச் சத்தை குறைத்­துக்­கொள் ­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பட்­ட­தா­ரி­கள் வேலை­யில்­லா­மல் தவிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வளர்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­ப­டு­கி­றது. ஆனால், அதன் விளை­வு­கள் எங்கே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆண்­டுக்கு இரண்டு கோடி வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி அளித்­தீர்­கள்.. 12 ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன, உரு­வாக்­கப்­பட்ட அந்த 24 கோடி வேலை­வாய்ப்­பு­கள் எங்கே? விவ­சா­யி­க­ளின் வரு­மா­னம் இரட்­டிப்­பாக்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி அளித்­தீர்­கள், அந்த வரு­மா­னம் எங்கே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சோப்பு, மளி­கைப் பொருட்­கள், துணி­ம­ணி­கள் வாங்­கும் போதும், கைபே­சிக்கு ரீசார்ஜ் செய்­யும் போதும், பள்ளி நோட்­டுப் புத்­த­கங்­கள் மற்­றும் இதர அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை வாங்­கும் போதும் - சாமா­னிய மக்­களே இந்த மறை­முக வரி­க­ளைச் செலுத்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">மறை­முக வரி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மறை­முக வரி விதிப்பு என்­பது, ஒரு ஏழை மனி­த­னால் அத­னைச் சுமக்க முடிந்­தா­லும் முடி­யா­ விட்­டா­லும், அவன் மீது திணிக்­கப்­படு ­கிறது - டாக்­டர் பி.ஆர். அம்­பேத்­கர் அவர்­க­ளின் இந்த வார்த்­தை­கள் இன்­றைய சூழ­லுக்கு மிகப்­பொ­ருத்­த­மா­னவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு கோடீஸ்­வ­ர­ரும் ஜிஎஸ்டி செலுத்­து­கி­றார். ஒரு கட்­டு­மா­னத் தொழி­லா­ளி­யும் ஜிஎஸ்டி செலுத்­து­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரே வரி.. ஒரே விகி­தம்.. ஆனால் அதன் சுமை வேறு­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பணக்­கா­ரர்­கள் வரி விதிப்­பைத் தங்­க­ளது கணக்­குப் பதி­வே­டு­க­ளில் உணர்­கி­றார்­கள். ஆனால், ஏழை­கள் வரி விதிப்­பைத் தங்­க­ ளது மளி­கைப் பொருட்­க­ளில் உணர்­கி­றார்­கள். ஒரு நடுத்­தர வர்க்­கத் தாய் என்­ப­வர் நாட்­டின் நிதிப் பற்­றாக்­கு ­றை­யைக் கவ­னிப்­பதில்லை.. அவர் அரிசி மற்­றும் வெங்­கா­யத்­தின் விலை­யைத் தான் கவ­னிக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த  நிதி நிலை அறிக்­கை­யா­னது, ஏழை­களை மிகக் கடு­மை­யா­கப் பாதிக்­கும் வரி முறை­யைச் சீர­மைப்­ப­தில் ஒன்­றிய அரசு தோல்­வி­ய­டைந்­துள்­ள­தைக் காட்­டு­கி­றது. வரி வசூல் மிக­வும் மந்­த­மாக வளர்ந்து வரும் நிலை­யி­லும், வரி ஏய்ப்­பைத் தடுக்­கவோ அல்­லது வரி செலுத்­து­வோ­ரின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கவோ எந்­த­வொருதெளி­வான திட்­ட­மும் அர­சி­டம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­டம் மற்­றும் நீதி அமைச்­ச­கத்­திற்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள மிகக் குறைந்த நிதி­யா­தா­ரங்­கள் குறித்து நான் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன். ஐயா, சட்­டத் தொழி­லில் ஒரு மிகப்­பெ­ரிய செயற்கை நுண்­ண­றி­வுப் புரட்­சி­யின் விளிம்­பில் நாம் இன்று நிற்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தக் கால­கட்­டத்­தில், நீதி­மன்­றங்­களை நவீ­னப்­ப­டுத்­து­வது குறித்­தும், நீதி­ப­தி­க­ளின் பணிச்­சு­மை­யைக் குறைத்து, அவர்­கள் சிறந்த முடி­வு­களை எடுப்­ப­தற்கு ஏது­வாக அதி­ந­வீ­னத் தொழில்­நுட்­பங்­களை அவர்­க­ளுக்கு வழங்­கு­வது குறித்­தும் நாம் விவா­தித்­துக் கொண்­டி­ருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால், இந்­தியா முழு­வ­தும் உள்ள மாவட்ட நீதி­மன்­றங்­கள் மற்­றும் சில மாநி­லங்­க­ளில் உள்ள உயர் நீதி­மன்­றங்­கள் கூட கணி­னி­கள், கழிப்­ப­றை­கள் போன்ற அடிப்­படை வச­தி­கள் இல்­லா­ம­லேயே தவித்து வரு­கின்­றன என்­ப­து­தான் நிதர்­ச­ன­மான உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நான் நாடு முழு­வ­தும் உள்ள பல உயர் நீதி ­மன்­றங்­க­ளுக்­குச் சென்று பார்த்­தி­ருக்­கி­றேன். ஆனால் அவற்­றின் உள்­கட்­ட­மைப்பு மிக­வும் மோச­மாக உள்­ளது. நீதித்­து­றைக்கு நிதி ஒதுக்­கு­வது நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கும் பங்­க­ளிக்­கும். வணிக ரீதி­யான வழக்­கு­கள் விரை­வா­கத் தீர்க்­கப்­ப­டும் என்ற உறுதி கிடைக்­கும்­போது, இந்­தி­யத் தொழில்­து­றை­யின் மீதான நம்­பிக்கை அதி­க­ரிக்­கும். நீண்­ட­கா­ல­மாக நிலு­வை­யில் உள்ள சொத்­துத் தக­ரா­று­கள் தீர்க்­கப் ­ப­டும்­போது, முடங்­கிக் கிடக்­கும் அந்­தச் சொத்­துக்­க­ளைப் பண­மாக்­கிப் பொரு­ளா­தா­ரப் பயன்­பாட்­டிற்­குக் கொண்டு வர முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே,   நிதி­ய­மைச்­சர் அவர்­கள், நீதித்­து­றை­யின் தேவை­களை, குறிப்­பாக உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளைக் கவ­னிக்க வேண்­டு­மாறு வலி­யு­றுத்­திக் கேட்­டுக்­கொள்­கி­றேன். அதே­போல், உச்ச நீதி­மன்ற மற்­றும் உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளின் ஊதி­யத்தை உயர்த்த வேண்­டி­ய­தன் அவ­சி­யம் குறித்து நான் பல­முறை பேசி­யுள்­ளேன். தற்­போது வழங்­கப்­பட்டு வரும் ஊதி­யம், அவர்­கள் செய்­யும் பணிக்கு இணை­யாக இல்லை. நமது நீதி­ப­தி­க­ளுக்கு நாம் நிதி பாது­காப்பை வழங்க வேண்­டி ­யது அவ­சி­ய­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">நடுத்­தர  வர்க்­கத்­தின் சேமிப்­பு­கள் கரைந்து  வரு­கின்­றன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­ க­ளின் ஓய்வு பெறும் வயதை 70-ஆக உயர்த்த வேண்­டும். உயர் நீதி ­மன்­றம் மற்­றும் உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளின் ஓய்­வூ­தி­யம், அவர்­கள் கடை­சி­யா­கப் பெற்ற ஊதி­யத்­திற்கு நிக­ராக இருக்க வேண்­டும். மேலும், ஓய்­வு­பெ­றும் நீதி­ப­தி­களை அர­சாங்­கப் பணி­க­ளுக்கு மட்­டுமே பயன்­ப­டுத்த வேண்­டும்.. தீர்ப்­பா ­யங்­க­ளில் அவர்­கள் பணி ­ய­மர்த்­தப்­ப­டு­வ­தைத் தடை செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நடுத்­தர வர்க்­கத்­தி­ன­ரின் வரு­மா­னம் தேக்­க­ம­டைந்­துள்­ளது.சேமிப்­பு­கள் கரைந்து வரு­கின்­றன. எதிர்­கா­லக் கன­வு­கள் சிதைந்து கொண்­டி­ருக்­கின்­றன. அப்­ப­டி­யி­ருந்­தும், இது ஒரு வெற்­றிக் கதை என்று சொல்­லப்­ப­டு­கி­றது. ஆனால் உங்­கள் ஆட்­சி­யின் கீழ், பணக்­கா­ரர்­கள் மட்­டுமே மேலும் பணக்­கா­ரர்­களாக மாறு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்டை வஞ்­சிக்­கும் போக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிதி மேலாண்மை மற்­றும் நிதி மேலாண்மை குறித்து மாநி­லங்­க­ளுக்கு ஒன்­றிய அரசு அடிக்­கடி பாடம் எடுக்­கி­றது. ஆனால், அதன் சொந்­தக் கடன் வளர்ச்­சிப் பாதையோ செங்­குத்­தா­க­வும், தொட ர்ச்­சி­யா­க­வும் உயர்ந்து வரு­வ­தைக் காட்­டு­கி­றது. இது ஒன்­றிய அர­சின் நிதி மேலாண்மை எவ்­வ­ளவு காலம் நீடிக்­கும் என்ற கடு­மை­யானகேள்­வி­களை எழுப்­பு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் அமைச்­ச­கம் அளித்­துள்ள பதி­லா­னது, இந்­தி­யா­வின் நிதி­சார் கூட்­டாட்சி அமைப்­பில் நில­வும் ஆழ்ந்த கவ­லைக்­கு­ரிய சம­மின்­மையை, குறிப்­பா ­கத் தமிழ்­நாட்டை வஞ்­சிக்­கும் போக்கை வெளிப்­ப­டுத்­து­கி­றது. ஒன்­றிய அரசு தமிழ்­நாட்­டி­லி­ருந்து 2022-23 ல் ரூ.1,75,088 கோடி­யும், 2023-24 ல் ரூ.2,07,314 கோடி­யும், 2024-25 ல் ரூ.2,17,165 கோடி­யும் என, கடந்த மூன்று ஆண்­டு­க­ளில் மட்­டும் மொத்­தம் ரூ.5,99,567 கோடி வரி வரு­வா­யைச் சேக­ரித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இருப்­பி­னும், இதே கால­கட்­டத்­தில் ஒன்­றிய அர­சின் வரிப் பங்­கி­லி­ருந்து தமிழ்­நாட்­டிற்கு வழங்­கப்­பட்ட நிதி 2022-23 ல் ரூ.38,731 கோடி, 2023-24 ல் ரூ.46,072 கோடி மற்­றும் 2024-25 ல் ரூ.52,492 கோடி என மொத்­தம் ரூ.1,37,295 கோடி மட்­டுமே. உதா­ர­ண­மாக, ஒன்­றிய அரசு தமிழ்­நாட்­டி­லி­ருந்து வசூ­லிக்­கும் ஒவ்­வொரு ரூ.1 வரி வரு­வாய்க்­கும், ஒன்­றிய அர­சின் வரி­க­ளின் பகிர்ந்­த­ளிக்­கக்­கூ­டிய தொகுப்­பி­லி­ருந்து மாநி­லத்­திற்குசுமார் ரூ.0.23 மட்­டுமே திரும்­பக் கொடுக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது நிதி­சார் அநீ­தியை தவிர வேறொன்­று­மில்லை. பிற மாநி­லங்­க­ளு­ட­னான ஒப்­பீடு இந்­தச் சம­மின்­மை­யின் அளவை வெளிப்­ப­டுத்­து­கி­றது. உதா­ர­ண­மாக, இதே மூன்று ஆண்டு காலத்­தில் உத்­த­ரப் பிர­தே­சம் ஒன்­றிய அர­சுக்கு ரூ.3,62,457 கோடி வரிப் பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்­ளது. இருப்­பி­னும், ஒன்­றிய வரி­க­ளி­லி­ருந்து உத்­த­ரப் பிர­தே­ சத்­திற்கு வழங்­கப்­பட்ட நிதி ரூ.6,03,220 கோடி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதன் பொருள் என்­ன­வென்­றால், உத்­த­ரப் பிர­தே­சத்­தி­லி­ருந்து ஒன்­றிய அரசு வசூ­லிக்­கும் ஒவ்­வொரு 1 ரூபாய் வரி வரு­வாய்க்­கும், மத்­திய வரி­க­ளின் பங்­கி­லி­ருந்து அந்த மாநி­லத்­திற்கு சுமார் ரூ.1.66 திரும்­பக் கிடைக்­கி­றது. பீகா­ரின் விஷ­யத்­தில் இந்­தச் சம­மின்மை இன்­னும் அதிர்ச்­சி­யூட்­டும் வகை­யில் உள்­ளது. கடந்த மூன்று ஆண்­டு­க­ளில் பீகா­ரி­லி­ருந்து வசூ­லிக்­கப்­பட்ட மொத்த வரி ரூ.49,215 கோடி மட்­டுமே. ஆனால், ஒன்­றிய அர­சின் வரி­க­ளின் பங்­கி­லி­ருந்து அந்த மாநி­லத்­திற்கு வழங்­கப்­பட்ட நிதியோ ரூ.3,38,549 கோடி­யா­கும். உண்­மை­யில், பீகா­ரி­லி­ருந்து ஒன்­றிய அரசு வசூ­லிக்­கும் ஒவ்­வொரு 1 ரூபாய் வரி வரு­வாய்க்­கும், ஒன்­றிய அர­சின் வரி­க­ளின் பங்­கி­லி­ருந்து அந்த மாநி­லத்­திற்கு கிட்­டத்­தட்ட 6 ரூபாய் 90 பைசா திரும்­பக் கிடைக் ­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வின் வலு­வான பொரு­ளா­தா­ரப் பங்­க­ளிப்­பா­ளர்­க­ளில் ஒன்­றா­க­வும், தேசிய வரி வரு­வாயை ஈட்­டித் தரும்முக்­கிய மாநி­ல­மா­க­வும் விளங்­கும் தமிழ்­நாடு, தான் வழங்­கும் பங்­க­ ளிப்­பில் மிகச்­சி­றிய பகு­தியை மட்­டுமே திரும்­பப் பெறு­கி­றது. அதே நேரத்­தில், மிகக் குறை­வான பங்­க­ளிப்பை வழங்­கும் பல மாநி­லங்­கள், குறிப்­பி­ டத்­தக்க அள­வில் மிகப் ­பெ­ரிய நிதிப்­ப­கிர்­வைப் பெறு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்டு மக்­கள் 
தகு­தி­யா­ன­வர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தாங்­கள் உரு­வாக்­கித் தரும் வளங்­க­ளில் நியா­ய­மான மற்­றும் சம­மான பங்­கைப் பெறத் தமிழ்­நாட்டு மக்­கள் தகு­தி­யா­ன­வர்­கள். கூட்­டு­றவு கூட்­டாட்சி என்ற தத்­து­வத்­திற்கு ஏதே­னும் உண்­மை­யான அர்த்­தம் இருக்க வேண்­டும் என்­றால், இந்த அப்­பட்­ட­மான முரண்­பாட்டை ஒன்­றிய அரசு சரி­செய்ய வேண்­டும். தேசிய வளங்­க­ளின் பங்­கீடு என்­பது, சிறப்­பா­கச் செயல்­ப­டும் மாநி­ல­மான தமிழ்­நாட்­டைத் திட்­ட­மிட்­டுப் பாதிப்­ப­தா­கவோ அல்­லது அதன் வளர்ச்­சிக்­கா­கவே அந்த மாநி­லத்­தைத் தண்­டிப்­ப­தா­கவோ அமை­யா­மல் இருப்­பதை உறுதி செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒன்­றிய அரசு உண்­மை­யா­கவே கூட்­டு­றவு கூட்­டாட்­சி­யில் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தால், ஒரு எளிய கேள்­விக்கு அது பதி­ல­ளிக்க வேண்­டும்: தமிழ்­நாடு செலுத்­தும் ஒவ்­வொரு 1 ரூபாய் வரிக்­கும், ஒன்­றிய அர­சின் வரி­க­ளின் பகிர்ந்­த­ளிக்­கக்­கூ­டிய தொகுப்­பி­லி­ருந்து வெறும் 23 பைசா மட்­டுமே திரும்­பக் கிடைக்­கி­றது? ஏன்? அதே நேரத்­தில், பிற மாநி­லங்­கள் தாங்­கள் வழங்­கும் ஒவ்­வொரு ரூபாய்க்­கும் 1 ரூபாய் 66 பைசா அல்­லது 6 ரூபாய் 90 பைசா வரை பெறு­வது ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிதி நிர்­வா­கம் என்­பது மக்­கள் நலத்­திட்­டங்­களை வெட்­டு­வது அல்ல.. மாறாக வளங்­களை அறி­வுப்­பூர்­வ­மாக நிர்­வ­கிப்­ப­தும், மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிப்­ப­தும் தான் என்­பதை தமிழ்­நாடு நிரூ­பித்­துக் காட்­டி­யுள்­ளது. ஆனால், ஒன்­றிய அரசு என்ன செய்­கி­றது.  எங்­க­ளின் உரி­மை­ யான நிதியை நிறுத்தி 
வைக்­கி­றது, நிதிப்­ப­கிர்வை மறுக்­கி­றது.நிலு­வைத் தொகை­யைத் தாம­தப்­ப­டுத்­து­கி­றது.  பிறகு எமக்கே நிதி  நிர்­வா­கம் குறித்­துப்பாடம் எடுக்­கி­றது. இவை அனைத்­தும் நடந்து கொண்­டி­ருக்­கும் வேளை­யில், ஒன்­றி­யத்­தின் சொந்­தக் கடனோ அதி­க­ரித்­துக்­கொண்டேவரு­கி­றது.. அதன் வட்­டிச் சுமை பட்­ஜெட்­டைச் இறுக்­கிக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டிற்கு வழங்­கப்­பட வேண்­டிய பல முக்­கி­ய­மான ஒன்­றிய அர­சின் திட்­டங்­க­ளுக்­கான நிதி இன்­னும் நிலு­வை­யில் உள்­ளது. தமிழ்­நாடு அரசு அளித்­துள்ள விரி­வான விளக்­கங்­க­ளின்­படி, பல்­வேறு திட்­டங்­க­ளின் கீழ் ரூ.10,000 கோடிக்­கும் அதி­க­மான தொகையை ஒன்­றிய அரசு தமிழ்­நாட்­டிற்கு வழங்க வேண்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஜல் ஜீவன் திட்­டத் ­தையே எடுத்­துக்­கொள்­வோம். இத்­திட்­டத்­திற்­காக ஒன்­றிய அரசு இது­வரை ரூ.5,914 கோடி மட்­டுமே வழங்­கி­யுள்­ளது.. இன்­னும் ரூ.3,112 கோடி நிலு­வை­யில் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எங்­க­ளின் சட்­டப்­பூர்­வ­மான நிதியை நீங்­கள் மறுக்­கும் போதெல்­லாம், ஆளு­நர் வழி­யா­கத் தமிழ் ­நாட்­டிற்கு முட்­டுக்­கட்­டை­ களை ஏற்­ப­டுத்­தும் போதெல்­லாம், எங்­கள் தலை­வர்   மு.க. ஸ்டாலின் அவர்­கள் எங்­கள் மக்­க­ளுக்கு எப்­போ­தும் சொல்­வது ‘தமிழ்­நாடு போரா­டும், தமிழ்­நாடு வெல்­லும்! என்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பல நிதி அறி­விப்­பு­கள் வெறும்காகி­தத்­தோடு  நின்­று­வி­டு­கின்­றன. உதா­ர­ண­மாக, நிதி­நிலை அறிக்­கை­யில் அறி­விக்­கப்­பட்ட ‘நகர்ப்­பு­றத் திட்ட நிதியை’ எடுத்­துக் கொள்­ளுங்­கள்.. அதுஅறி­விக்­கப்­பட்டு இன்று வரை தமிழ்­நாட்­டிற்கு ஒரு பைசா கூட வந்து சேர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘ஸ்டாலின் தொட­ரட்­டும் தமிழ்­நாடு வெல்­லட்­டும்!’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்று அதி­கா­ரப் பலத்­தால் கட்­டுக்­க­தை­களை நீங்­கள் கூற­லாம். ரூ.10,000 கோடிக்­கும் அதி­க­மான எங்­க­ளின் சட்­டப்­பூர்­வ­மான நிதியை நீங்­கள் நிறுத்தி வைக்­க­லாம், தர­வு­க­ளைத் திரித்­துச் சொல்­ல­லாம்.. டெல்­லி­யி­லி­ருந்து நிதி மேலாண்மை குறித்­துப் பாடம் எடுக்­க­லாம். ஆனால், உங்­க­ளால் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத ஒரு பெரும் சக்தி உண்டு - அது­தான் மக்­கள் சக்தி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவை அனைத்­தை­யும் தமிழ் நாட்டு மக்­கள் பார்த்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த ஐந்து ஆண்­டு­களில் ஒன்­றிய அர­சாங்­க­மா­னது தமிழ்­நாட்­டிற்கு எது­வுமே வழங்­க­வில்லை..மாறாக புறக்­க­ணித் ­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">என் வார்த்­தையை குறித்து வைத்­துக் கொள்­ளுங்­கள்..</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீங்­கள் எங்­களை எப்­படி நடத்­தி­னீர்­களோ, அதே வழி­யில் தமிழ்­நாட்டு மக்­கள் ஏப்­ரல் 23-ஆம் தேதி அன்று உங்­க­ளுக்­குப் பதி­லடி கொடுப்­பார்­கள். மே 4-ஆம் தேதி முடி­வு­கள் வெளி­வ­ரும் போது, தமிழ்­நாட்டு மக்­கள் உங்­க­ளுக்கு எதி­ராக வழங்­கிய தீர்ப்பை நீங்­கள் அறிந்­து­கொள்­வீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு இன்று ஒரே ஒரு முழக்­கம் தான் தெரி­யும்: ‘ஸ்டாலின் தொட­ரட்­டும், தமிழ்­நாடு வெல்­லட்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்வாறு பி.வில்சன் எம்.பி. பேசினார். </lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>