<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,65,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 01 2026 03:33:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260401T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="01042026-CBE-07" position.sequence="07" ex-ref="01042026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="1">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">பேர­றி­ஞர் அண்ணா சிலைக்கு மாலை அணி­வித்து விட்டு தேர்­தல் பிரச்­சா­ரம் தொடக்­கம்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="72">சட்­ட­மன்­றத் தேர்­த­லில் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளி­யுங்­கள்! உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக, உங்­க­ளில் ஒரு­வ­னா­கக் கேட்­கி­றேன்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="38">காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  – துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் உரை! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup284308_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="30.3.2026dmky_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="30.3.2026dmky1_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">காஞ்­சி­பு­ரம், ஏப். 1 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">வரு­கிற 23–ஆம் தேதி தமிழ்­நாட்­டில் நடை­பெ­றும் சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­கான 
சூறா­வளி சுற்­றுப்­ப­ய­ணத்தை, கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­ மான உத­ய­நிதி ஸ்டாலின்  அவர்கள் நேற்று முன்தினம்  தொடங்­கி­னார். காஞ்­சி­பு­ரத்­தில் பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் வீட்­டுக்­குச் சென்று, அவ­ரது சிலைக்கு மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­விட்டு, பெரும் திர­ளாகக் கூடி­யி­ருந்த மக்­கள் மத்­தி­யில் தேர்­தல் பிரச்­சா­ரம் செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">அப்­போது அவர், ``வரு­கின்ற 23–ஆம் தேதி நடை­பெ­றும் தேர்­த­லில்  கழக வேட்பாளர்  நித்யா சுகு­மார் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் நீங்­கள் வெற்­றி­பெற வைக்­க­வேண்­டும் என்று உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக கேட்­கி­றேன், உங்­க­ளில் ஒரு­வ­னாக  கேட்­கி­றேன்’’ என்று குறிப் 
பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின்  அவர்கள் ஆற்­றிய உரை­ வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">`எல்­லோ­ருக்­கும் என் வணக்­கத்­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். இன்று காஞ்­சி­பு­ரம் மாவட்­டத்­தில், காஞ்­சி­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகு­திக்கு, நம் தலை­வர் அவர்­க­ளால் உங்­க­ளி­டத்­தில் ஒப்­ப­டைக்­கப்­பட்டு இருக்­கக்­கூ­டிய நம் வெற்றி வேட்­பா­ளர் சகோ­தரி நித்யா சுகு­மார் அவர்­க­ளின் வெற்­றியை, உறு­தி­செய்­கின்ற அள­விற்கு, நீங்­க­ளெல்­லாம் வரு­கின்ற தேர்­த­லில் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடிக் கொடுப்­பீர்­கள் என்ற நம்­பிக்­கை­யில் உங்­க­ளை­யெல்­லாம் தேடி வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">எழுச்­சி­யும், மகிழ்ச்­சி­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">உங்­க­ளின் எழுச்­சி­யை­யும், மகிழ்ச்­சி­யான முகத்­தை­யும் பார்க்­கும்­போது ஏற்­க­னவே சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வெற்­றியை நீங்­கள் உறுதி செய்­து­விட்­டீர்­கள். வரு­கின்ற  ஏப்­ரல் 23–ஆம் தேதி வாக்­குச்­சா­வ­டிக்­குச் சென்று நம் சகோ­தரி நித்யா சுகு­மார் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­க­ளிக்­கப் போகி­றீர்­கள் என்­பது உங்­க­ளைப் பார்க்­கும்­போதே தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">கடந்த 2024–ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில், இதே காஞ்­சி­பு­ரத்­தில் பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் வீட்­டிற்­குச் சென்று, அவ­ரது சிலைக்கு மாலை அணி­வித்து மரி­யாதை செய்­து­விட்டு, அவரை வணங்கி என் தேர்­தல் பிரச்­சா­ரத்தை நான் தொடங்­கி­னேன். அதே போல் இன்று சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­கும் நம் காஞ்­சி­பு­ரத்­துக்கு வந்து, உங்­க­ளைச் சந்­தித்து, உங்­க­ளைப் பார்த்­து­விட்டு என்  முதல் பிரச்­சா­ரத்­தைத் தொடங்கி  காஞ்­சி­பு­ரம் தொகு­தி­யின் வெற்­றியை உறுதி செய்­து­விட்­டுப் செல்­லப்­போ­கி­றேன். நாளை நம் தலை­வர் அவர்­கள், கலை­ஞர் அவர்­கள் பிறந்த திரு­வா­ரூர் மாவட்­டத்­தில் பிரச்­சா­ரத்தை ஆரம்­பிக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">நான் அண்ணா பிறந்த காஞ்­சி­பு­ரம் மண்­ணில் ஆரம்­பிக்­கி­றேன். நம் தலை­வர் கலை­ஞர் பிறந்த திரு­வா­ரூர் மண்­ணில் ஆரம்­பிக்­கி­றார். நீங்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள், இரண்டு நாட்­க­ளுக்கு முன்­னால், எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி தனது தேர்­தல் பிரச்­சா­ரத்தை சென்­னை­யில் பா.ஜ.க. போட்­டி­யி­டு­கின்ற மயி­லாப்­பூர் தொகு­தி­யி­லி­ருந்­து­தான்  ஆரம்­பித்­தார். இதி­லி­ருந்து என்ன தெரி­கி­றது? நம் கொள்­கைத் தலை­வர்­கள் பேர­றி­ஞர் அண்­ணா­வும், டாக்­டர் கலை­ஞ­ரும். எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் கொள்­கைத் தலை­வர் யார்? அமித்­ஷா­வும், மோடி அவர்­க­ளும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அனு­ம­திக்க மாட்­டார்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">மீண்­டும் மோடி­யை­யும் அமித்­ஷா­வை­யும் தமிழ்­நாட்­டுக்­குள் நுழைய விட­லாமா? நிச்­ச­ய­மாக தமிழ்­நாட்டு மக்­கள் அனு­ம­திக்க மாட்­டார்­கள். நம் தலை­வர் அதைத்­தான் தொடர்ந்து சொல்­கி­றார், வரு­கின்ற தேர்­தல் டெல்­லிக்­கும் தமிழ்­நாட்­டுக்­கும் நடக்­கக்­கூ­டிய தேர்­தல். மீண்­டும் தமிழ்­நாட்­டுக்­குள் பாசிச சக்­தியை, பா.ஜ.க. சக்­தியை நுழைய விடக்­கூ­டாது. இன்று மக்­க­ளைச் சந்­திக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றோம், மக்­க­ளி­டம் சென்று வாக்­குக் கேட்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றோம். எந்த உரி­மை­யில் கேட்­கி­றோம்? 2021 ஆம் ஆண்டு சட்­ட­மன்­றத் தேர்­த­லில் என்­னென்ன செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம்? தேர்­தல் வாக்­கு­று­தி­யா­கச் சொன்ன அத்­தனை திட்­டங்­க­ளை­யும் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">ஆட்­சிப் பொறுப்­பேற்ற உடன் நம் தலை­வர் முத­ல­மைச்­ச­ரா­கப்பொறுப்­பேற்று போட்ட முதல் கையெ­ழுத்து மக­ளி­ரா­கிய  உங்­க­ளுக்­கான கையெ­ழுத்து – விடி­யல் பய­ணத் திட்­டம். இந்த விடி­யல் பய­ணத் திட்­டத்­தின் மூலம் ஒவ்­வொரு மக­ளி­ரும் குறைந்­தது மாதம் 900 ரூபாய் வரைக்­கும் சேமித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">குழந்­தை­கள் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வர வேண்­டும், படிக்­க­வேண்­டும் என்று ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரை படிக்­கக்­கூ­டிய அனைத்து குழந்­தை­க­ளுக்­கும் முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">10 லட்­சம் இல­வச மடிக்­க­ணி­னி­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இன்று 10 லட்­சம் கல்­லூரி மாணவ மாண­வி­க­ளுக்கு இல­வச மடிக்­க­ணினி திட்­டத்­தை­யும் அறி­வித்து, ஒரே மாதத்­தில் நம் தலை­வர் கொடுத்­தி­ருக்­கி­றார். பள்­ளிக்­கூ­டம் படித்­தால் போதாது, கல்­லூரி சென்று படிக்­க­வேண்­டும் என்று புது­மைப் பெண் திட்­டம், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம். அர­சுப் பள்­ளி­யில் படித்து, எந்­தக் கல்­லூ­ரி­யில் சென்று சேர்ந்­தா­லும், அவர்­க­ளுக்கு மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்­கத்­தொ­கை­யும் நம் அரசு கொடுத்­தி­ருக்­கி­றது. 13 லட்­சம் மாண­வர்­கள் பயன்­பெற்­றி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இவற்­றுக்­கெல்­லாம் முத்­தாய்ப்­பாக கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம். தேர்­தல் அறிக்­கை­யில் நாம் சொன்ன வாக்­கு­றுதி. கடந்த மூன்று வரு­ட­மாக மாதம் 1,000 ரூபாய் ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு நம் தலை­வர் கொடுத்­தி­ருக்­கி­றார். இந்­தத் திட்­டத்தை இந்­தத் தேர்­தலை, கார­ணங்­காட்டி மூன்று மாதம் நிறுத்த வேண்­டும் என்று அ.தி.மு.க.–வும், பா.ஜ.க. கூட்­ட­ணி­யும் முயற்சி பண்­ணி­னார்­கள். ஆனால், நம் தலை­வர் என்ன செய்­தார்? ‘நான் 1,000 ரூபாய் கொடுப்­பதை நீங்­கள் நிறுத்த முயற்சி செய்­கி­றீர்­களா? இதோ கொடுக்­கி­றேன் 5,000 ரூபாய்’ என்று 5,000 ரூபாய் ஒரு கோடியே 31 லட்­சம் குடும்­பங்­க­ளுக்கு நம் தலை­வர் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">2,000 ரூபா­யாக உயர்வு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இன்­னொருவாக்­கு­று­தி­யும் கொடுத்­தி­ருக்­கி­றார். மீண்­டும்நம் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடனே மக­ளிர் உரி­மைத் தொகை 1,000 ரூபா­யி­லி­ருந்து 2,000 ரூபா­யாக உயர்த்­திக் கொடுப்­பேன் என்று தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார். நம் தலை­வர் நிச்­ச­ய­மா­கச் சொன்­னால் செய்­து­காட்­டு­வார். இதை­யெல்­லாம் மக்­க­ளி­டம் கொண்டு சென்று நீங்­கள் எடுத்து வைத்­துப் பேசுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஜாடிக்­கேற்ற மூடி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இப்­ப­டிப் பல திட்­டங்­க­ளைச் செய்­த­த­னால்­தான் இன்று தமிழ்­நாடு இந்­தி­யா­வி­லேயே வள­ரு­கின்ற மாநி­லங்­க­ளில் 11.19 சத­வி­கித வளர்ச்­சி­யு­டன் இன்று நம்­பர் 1 மாநி­ல­மாக நம் தமிழ்­நாடு வந்­தி­ருக்­கி­றது. இதற்­கெல்­லாம் ஒன்­றிய அரசு பா.ஜ.க. ஏதா­வது நமக்­குத் துணை­யாக இருந்­தார்­களா? நாம் கேட்­கின்ற நிதி­யைக் கொடுக்­கி­றார்­களா? தமிழ்­நாட்­டுக்குஎன்று ஏதா­வது திட்­டத்­தைக் கொண்டு வந்­தார்­களா? ஒன்­றிய அரசு போடு­கின்ற பட்­ஜெட்­டில் தமிழ்­நாட்­டுக்கு ஒரு திட்­டம் கூட கிடை­யாது. தமிழ்­நாடு என்­கிற பெயர் கூட ஒன்­றிய அர­சின் பட்­ஜெட்­டில் கிடை­யாது. அப்­ப­டிப்­பட்ட ஒன்­றிய அரசை இன்று அ.தி.மு.க. என்­கிற அடி­மைக் கூட்­டம் தமிழ்­நாட்­டிற்­குள் கொண்டு வரு­கி­றது. ‘ஜாடிக்­கேற்ற மூடி’ என்று சொல்­வார்­கள், அது மாதிரி இன்று மோடிக்­கேற்ற ஒரு அடி­மை­யாக எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">நான் பல­முறை சொல்­லி­யி­ருக்­கி­றேன், மீண்­டும் சொல்­கி­றேன். நாம் முரட்டு பக்­தர்­க­ளைப் பார்த்­தி­ருக்­கி­றோம், முரட்­டுத் தொண்­டர்­க­ளைக் கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றோம். இன்று இந்­தி­யாவே ஒரு முரட்டு அடி­மை­யாக எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் ரூபத்­தில் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றது. அப்­ப­டிப்­பட்ட அந்த முரட்டு அடி­மையை விரட்­டி­ய­டிக்­க­வேண்­டிய தேர்­தல், வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­தல். இதை நீங்­கள் நிச்­ச­ய­மா­கச் செய்­வீர்­கள் என்­கிற நம்­பிக்கை எங்­க­ளுக்கு இருக்­கி­றது. தமிழ்­நாட்­டைத் தொடர்ந்து ஒதுக்கி வரு­கின்ற பா.ஜ.க–வை நம் தமிழ்­நாடு ஒதுக்கி வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பல்­வேறு திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">தமிழ்­நாடு என்­றைக்­கும் டெல்­லிக்கு அவுட் ஆப் கண்ட்­ரோல் என்­பதை இந்­தத் தேர்­த­லில் நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும். இன்று பல்­வேறு திட்­டங்­களை, வாக்­கு­று­தி­களை நம் அரசு கொடுத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">மக­ளிர் உரி­மைத் தொகை 1,000 ரூபா­யி­லி­ருந்து 2,000 ரூபா­யாக உயர்த்­திக் கொடுப்­பேன் என்று நம் தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார். காலை உண­வுத் திட்­டம், இப்­பொ­ழுது ஐந்­தாம் வகுப்பு வரைக்­கும் முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம் செய்­து­கொண்­டி­ருக்­கி­றோம். மீண்­டும் ஆட்சி அமைந்த உடனே ஐந்­தாம் வகுப்­பி­லி­ருந்து எட்­டாம் வகுப்பு வரைக்­கும் முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">புது­மைப் பெண் திட்­டம், தமிழ்ப் புதல்­வன் திட்­டம் வாயி­லாக மாதம் 1,000 ரூபாய் கல்­லூரி மாணவ, மாண­வி­க­ளுக்கு கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம்.  அதை 1,500 ரூபா­யாக உயர்த்­திக் கொடுப்­பேன் என்று நம் தலை­வர் சொல்­லி­யி­ருக்­கி­றார். அதே மாதிரி முதி­யோர் ஓய்­வூ­தி­யத் திட்­டம், 35 லட்­சம் முதி­யோர்­கள் வாங்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள், 1,200 ரூபாயை 2,000 ரூபா­யாக உயர்த்­திக் கொடுப்­பேன் என்று நம் தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார். மாற்­றுத்­தி­ற­னா­ளி­ க­ளுக்­கான ஓய்­வூ­தி­யம் அதை­யும் 1,500லிருந்து 2,500 ரூபா­யாக மாற்­றிக் கொடுப்­பேன் என்று நம் தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">35 லட்­சம் மாணவ – மாண­வி­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் 35 லட்­சம் மாணவ மாண­வி­க­ளுக்கு மடிக்­க­ணினி திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­ப­டும் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார் நம் தலை­வர். மக­ளிர் குழுக்­க­ளுக்கு 5 லட்­சம் வரைக்­கும் பிணை­யில்­லாத கடன்­கள் வழங்­கப்­ப­டும் என்ற வாக்­கு­று­தி­யை­யும் நம் தலை­வர் கொடுத்­தி­ருக்­கி­றார். இந்த வாக்­கு­று­தி­யை­யெல்­லாம் நிறை­வேற்ற வேண்­டும் என்­றால், வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நீங்­கள் சகோ­தரி நித்யா சுகு­மார் அவர்­களை மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைத்­துச் சட்­ட­மன்­றத்­துக்கு நிச்­ச­யம் அனுப்­பு­வீர்­கள் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">காஞ்­சி­பு­ரம் திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2"> காஞ்­சி­பு­ரம் தொகு­தி­யில் பல்­வேறு திட்­டங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. சில­வற்றை மட்­டும் உங்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">நக­ராட்­சி­யாக இருந்த காஞ்­சி­பு­ரம், இருந்த காஞ்­சி­பு­ரத்தைஇன்று மாந­க­ராட்­சி­யாக மாற்­றிக் காட்­டி­யது நம் தி.மு.க அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">300 கோடி ரூபாய் மதிப்­பில் பாதாள சாக்­கடை திட்­டப்­ப­ணி­கள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">300 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் இரண்­டாம் கட்ட திருப்­பாற்­க­டல் கூட்­டுக் குடி­நீர் திட்­டம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">40 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மஞ்­சள் நீர் கால்­வாய் மேம்­பாட்­டுப் பணி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">பேர­றி­ஞர் அண்ணா புற்­று­நோய் மருத்­துவ மையத்­தில் புதி­தாக 30 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அதி­ந­வீன மருத்­துவ உப­க­ர­ணங்­கள். 30 கோடி ரூபா­யில் காஞ்­சி­பு­ரம் ஏகாம்­ப­ர­நா­தர் திருக்­கோ­வில் குட­மு­ழுக்கு நம் ஆட்­சி­யில் நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் செங்­கல்­பட்டு – காஞ்­சி­பு­ரம் சாலையை நான்கு வழிச் சாலை­யாக மேம்­ப­டுத்தி இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">70 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் சாக்­கடை சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­கள் மேம்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">10 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் காஞ்­சி­ பு­ரம் மாந­க­ராட்­சிக்­குப் புதிய கட்­ட­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">உங்­கள் வீட்­டுப் பிள்ளை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இப்­ப­டிப் பல பணி­கள் உங்­கள் தொகு­திக்கு நடை­பெற்­றி­ருக்­கின்­றன. இன்­னும் பல்­வேறு பணி­கள் நடை­பெற வேண்­டும் என்­றால், வரு­கின்ற 23–ஆம் தேதி நடை­பெ­றும்  தேர்­த­லில் நீங்­கள், சகோ­தரி நித்யா சுகு­மார் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் நீங்­கள் வெற்­றிப்­பெற வைக்­க­வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், உங்­க­ளில் ஒரு­வ­னாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யாக, பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன். ஆத­ரிப்­பீர் உத­ய­சூ­ரி­யன், உத­ய­சூ­ரி­யன், உத­ய­சூ­ரி­யன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.2">மாவட்ட கழ­கச் செய­லா­ளர் சுந்­தர், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எழி­ல­ர­சன், மாந­க­ராட்சி மேயர் மகா­லட்­சுமி யுவ­ராஜ், சி.கே.வி.தமிழ்ச்­செல்­வன், சன் பிராண்ட் ஆறு­மு­கம், இளை­ஞர் அணி மாநில துணைச் செய­லா­ளர்­கள் அப்­துல் மாலிக், பிரபு கஜேந்­தி­ரன், அன்­ப­ழ­கன், ராம­கி­ருஷ்­ணன், சுந்­த­ர­வ­த­னம், எம்.எஸ்.சுகு­மார், சீனி­வா­சன், சிகா­மணி, ஒன்­றிய செய­லா­ளர்­கள் குமார், படு­நெல்லி பாபு, பகுதி செய­லா­ளர்­கள் தில­கர், சந்­துரு, தச­ர­தன், வெங்­க­டே­சன், தெற்கு மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் யுவ­ராஜ், மாந­கர அமைப்­பா­ளர் சுகு­மார், துணை அமைப்­பா­ளர்­கள் மணி, பால்­ராஜ், அருள்முரு­கன், சஞ்­சய்­காந்தி, ஆண்டோ, சிரில்­ராஜ், இளம்­ப­ரிதி, யுவ­ராஜ், மணி­கண்­டன், ராதா­கி­ருஷ்­ணன், சிலம்­புச்­செல்­வன், குண­சே­க­ரன், விநா­ய­ க­மூர்த்தி, ஒன்­றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு, பாக அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள், சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி­கள், மற்­றும் கூட்­ட­ணிக் கட்சி முன்­ன­ணி­ யி­னர் பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (30.3.2026) காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
<block id="subarticle2" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (30.3.2026) காஞ்சிபுரத்தில் 
பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் திருமதி நித்யா சுகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் செய்தார்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>