<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,958,733" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Mar 31 2026 14:19:26 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260401T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="01042026-TRY-03" position.sequence="03" ex-ref="01042026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="56">‘இல்லத்தரசி’ கூப்பன் ரூ.8,000 யாருக்கெல்லாம் கிடைக்கும்?    </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="37">கழகத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி. விளக்கம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">கழகத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ள</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="kanimozhicBw_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">சென்னை, ஏப். 1–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில், தி.மு.க. தேர்­தல் அறிக்கை தயா­ரிப்பு குழு தலை­வ­ரும், தி.மு.க. துணைப் பொதுச் செய­லா­ள­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. செய்­தி­யா­ளர்­கள் 
சந்­திப்­பில் கூறி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த முறை சட்­ட­மன்­றத் தேர்­தலை ஒட்டி, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தேர்­தல் அறிக்­கை­யில் 505 வாக்­கு­று­தி­களை வழங்­கி­யது. அதில் 404 வாக்­கு­று­தி­கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. அது­மட்­டு­மல்­லா­மல், காலை உணவு திட்­டம், ‘வீடு தேடி மருத்­து­வம்’ போன்ற ஏரா­ள­மான திட்­டங் களை முத­ல­மைச்­சர் நிறை­வேற்­றியுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஒன்­றிய அர­சாங்­கத்­தின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஒத்­து­ழைப்பு மறுப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மீத­முள்ள 101 வாக்­கு­று­தி­க­ளில், 37 வாக்­கு­று­தி­கள் ஒன்­றிய அர­சாங்­கத்­தின் ஒத்­து­ழைப்­பு­டன் மட்­டுமே நிறை­வேற்­றப்­ப­டக்­கூ­டி ­யவை என்­ப­தால், அவற்றை நிறை­வேற்ற முடி­யாத சூழ்­நிலை உள்­ளது. மீத­முள்ள 64 திட்­டங்­கள், அந்த பகு­தி­களில் உள்ள மக்­க­ளின் எதிர்ப்பு மற்­றும் நடை­முறை சிக்­கல்­கள் கார­ண­மாக நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், மீத­முள்ள அனைத்து வாக்­கு­று­தி­க­ளை­யும் திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­களும் நிறை­வேற்­றி­யுள்­ள­னர். அது­மட்­டு ­மல்­லா­மல், நான் குறிப்­பிட்ட காலை உணவு திட்­டம், ‘தமிழ் புதல்­வன்’, ‘புது­மைப் பெண்’, ‘நான் முதல்­வன்’ உள்­ளிட்ட பல திட்­டங்­க­ளை ­யும் செயல்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதோடு, ‘பசுமை தமிழ்­நாடு இயக்­கம்’, ‘தாயு­மா­ன­வர் மாண­வர் திட்­டம்’, ‘அன்­புக் கரங்­கள்’, மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்கு உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் பிர­தி­நி­தித்­து­வம் வழங்­கு­தல், மக­ளிர் பெய­ரில் சொத்து பதிவு செய்­யப்­பட்­டால் முத்­தி­ரைத் தாளில் ஒரு சத­வீ­தம் கட்­ட­ணக் குறைப்பு போன்ற பல திட்­டங்­க­ளை­யும் கொண்டு வந்­துள்­ள­னர். தேர்­தல் வாக்­கு­று­தி­களில் இடம்­பெ­றாத பல திட்­டங்­க­ளை­யும் நாங்­கள் செயல்­ப­டுத்­தி­யுள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த ஆண்டு வரக்­கூ­டிய சட்­ட­மன்ற தேர்­த­லுக்­கான திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தேர்­தல் அறிக்கை ஆவ­லோடு மக்­க­ளால் எதிர்­பார்க்­கப்­பட்­டது. நேற்று முன்தினம் முத­ல­மைச்­சர், அந்­தத் தேர்­தல் அறிக்­கையைவெளி­யிட்­டி­ருக்­கி­றார்­கள். பல்­வேறு தரப்­பு­களி­லி­ருந்து பாராட்­டக்­கூ­டிய அள­விற்­கான ஒரு தேர்­தல் அறிக்­கை­யாக அந்­தத் தேர்­தல் அறிக்கை அமைந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் அறிக்கை குழு பல மாவட்­டங்­களுக்கு சென்று அங்­குள்ள மக்­களை நேரில் சந்­தித்து, அவர்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்ட மனுக்­கள், AI தளத்­தின் மூலம் பெறப்­பட்ட மனுக்­கள், அது­மட்­டு­மல்­லா­மல் மின்­னஞ்­சல், வாட்ஸ்­அப் மற்­றும் குறுஞ்­செய்­தி­ கள் வழி­யாக பெறப்­பட்ட தக­வல்­கள், கோரிக்­கை­கள் ஆகி­ய­வற்றை ஒருங்­கி­ணைத்து, கிட்­டத்­தட்ட 80 ஆயி­ரம் கருத்­துக்­களை பெற்று இந்த தேர்­தல் அறிக்­கையை 
தயா­ரித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">வல்­லு­நர்­க­ளு­டன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கலந்­தா­லோ­சனை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது­மட்­டு­மல்­லா­மல், ஒவ்­வொரு துறை­யி­லும் உள்ள வல்­லு­நர்­க­ளு­டன் கலந்­தா­லோ­சனை செய்து, இந்த தேர்­தல் அறிக்­கை­யில் வழங்­கப்­ப­டும் வாக்­கு­று­தி­கள் நிறை­வேற்­றப்­ப­டக்­கூ­டிய சாத்­தி­யங்­கள் என்ன என்­ப­தை­யும் ஆய்வு செய்து இந்த தேர்­தல் அறிக்கை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு வழங்­கப்­பட்­டுள்ள வாக்­கு­று­தி­கள் அனைத்­தும் நிறை­வேற்­றப்­ப­டக்­ கூடி­ய­வை­யாக இருக்க வேண்­டும் என்று முத­ல­மைச்­சர் எங்­க­ளி­டம் உறு­தி­யாக பணித்­தி­ருந்­தார். அதன்­படி தயா­ரிக்­கப்­பட்­டதே இந்த தேர்­தல் அறிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உண்­மை­யைச் சொல்ல வேண்­டு­மெ­னில், அதி­மு­க­வின் தேர்­தல் அறிக்­கை­யைப் படிக்க நேரமோ வாய்ப்போ எங்­க­ளுக்­குக் கிடைக்­க­வில்லை. யாரும் அதைப் படித்­த­தா­க­வும் எனக்­குத் தெரி­ய­வில்லை. ஏனெ­னில், அ.தி­.மு.­க­.வின் தேர்­தல் அறிக்­கையை யாரும் பெரி­தா­கப் பொருட்­ப­டுத்­து­வ­தில்லை. 
கார­ணம், அதில் கூறப்­பட்­டுள்ள பல 
விஷ­யங்­கள் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது­மட்­டு­மல்­லா­மல், அவர்­க­ளின் தேர்­தல் அறிக்­கை­யில் ஏற்­க­னவே நடை­மு­றை­யில் உள்ள பல திட்­டங்­க­ளையே மீண்­டும் இடம்­பெ­றச் செய்­துள்­ள­னர். தமிழ்­நாட்­டில் தற்­போது எந்த திட்­டங்­கள் செயல்­பாட்­டில் உள்­ளன, இந்­தத் திரா­விட மாடல் அரசு எந்த திட்­டங்­களை செயல்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றது என்­ப­தை­யும் அறி­யா­மல் ஒரு தேர்­தல் அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யான நிலை­யில், அந்­தத் தேர்­தல் அறிக்­கையை காப்பி செய்ய வேண்­டிய அவ­சி­யம் நிச்­ச­ய­மாக கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாங்­கள் நிறை­வேற்­றிய ஒரு திட்­ட­மான மக­ளிர் உரி­மைத் தொகையை 2000 ரூபா­யாக உயர்த்­து­வோம் என்று முத­ல­மைச்­சர் அறி­வித்த பிறகு, அதி­மு­க­வும் 2000 ரூபாய் வழங்­கு­வோம் என்று கூறி ஒரு தேர்­தல் அறிக்­கையை எழு­தி­விட்டு, தற்­போது அதி­முக காப்பி பண்­றாங்­கன்னு சொல்­லும்­போது வேடிக்­கை­யா­தான் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பொள்­ளாச்சி குற்­ற­வா­ளி­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">காப்­பாற்­றிய அ.தி.மு.க.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெண்­க­ளுக்கு பாது­காப்பு இல்­லாத ஆட்சி என்­றால், பொள்­ளாச்­சி­யில் நடை­பெற்ற ஒரு பாலி­யல் குற்­றத்­துக்கு எஃப்­ஐ­ஆர் கூட பதிவு செய்ய முன்­வ­ரா­தது எந்த ஆட்சி? அந்த குற்­ற­வா­ளி­களை காப்­பாற்­று­வ­தற்­காக பல முயற்­சி­கள் செய்­தது எந்த ஆட்சி? திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் ஒரு குற்­றம் நடந்­து­விட்­டால், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்­டும், நியா­யம் கிடைக்க வேண்­டும் என்று முத­ல­மைச்­சர் ஒவ்­வொரு முறை­யும் உறுதி செய்து வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மீது விமர்­ச­னம் செய்­யக்­கூ­டிய அரு­க­தையோ தகு­தியோ அவர்­க­ளுக்கு இல்லை. ஆனால், பெண்­க­ளின் பாது­காப்பை மேலும் உறுதி செய்­வ­தற்­காக இந்த தேர்­தல் அறிக்­கை­யில் இன்­னும் அதி­க­மான வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“நான் ஒரு உதா­ர­ணத்­தைச் சொல்ல விரும்­பு­கி­றேன். தலை­வர் கலை­ஞர் ஆட்­சி­யில் இருந்­த­போது தேர்­தல் வாக்­கு­று­தி­யாக கேஸ் அடுப்பு கொடுக்­கும் திட்­டத்தை அறி­வித்­தி­ருந்­தார். அதை நிறை­வேற்­றும் போது பல அதி­கா­ரி­கள் முத­ல­மைச்­ச­ரி­டம், ‘நீங்­கள் 
எத்­தனை பர்­னர் உள்ள அடுப்பு என்று சொல்­ல­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சமை­ய­ல­றை­யி­லி­ருந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பெண்­கள் விடு­தலை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால் ஒரு பர்­னர் இருக்­கும் அடுப்பை கொடுத்­தாலே போதும், அர­சுக்கு செலவு குறை­யும்’ என்று சொன்­னார்­கள். அதற்கு முதல்­வர் கலை­ஞர் சொன்ன பதில், ‘நான்இதைத் தேர்­தல் வாக்­கு­று­தி­யாக தர­வில்லை.இரண்டு பர்­னர் இருக்­கும் அடுப்பை கொடுத்­தால் அவர்­கள் வேலையை சீக்­கி­ர­மாக முடித்­து­விட்டு சமை­ய­ல­றை­யில் இருந்து அந்­தப் பெண்­கள் வெளி­யில் வரு­வார்­கள். வாழ்க்­கை­யில் தங்­க­ளுக்கு பிடித்த மற்ற விஷ­யங்­களை செய்­யத் தொடங்­கு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போ­லத்­தான் இந்­தக் கூப்­பன் திட்­ட­மும். சமை­ய­ல­றை­யில் இருந்து சீக்­கி­ரம் விடு­தலை கிடைப்­ப­தற்­கான திட்­டம்­தான் இது. ஒரு வாஷிங் மெஷின் வாங்­கும்­போது கையில் துவைப்­ப­தற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டும் நேரம் குறை­யும். பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்­டர் போன்­ற­வற்­றைப் பயன்­ப­டுத்­தும்­போ­தும் அவர்­க­ளது நேரம் சேமிக்­கப்­ப­டும். அந்த நேரத்­தில் அவர்­கள் வேறு வேலை­க­ளைச் செய்ய இய­லும். இது இன்­னொரு முத­லீடு என்­பதை நாம் புரிந்­து­கொள்ளவேண்­டும். அந்­தக் கூப்­பன் கொடுக்­கும்­போது ‘இந்­தப் பொருட்­க­ளைத்­தான் நீங்­கள் வாங்க வேண்­டும்’என்ற கட்­டா­யம் இல்லை. எங்­கள் வீட்­டில் ஏற்­கெ­னவே ஒரு பிரிட்ஜ் இருக்­க­லாம். அப்­படிஇருக்­கும்­போது நாம் மீண்­டும் பிரிட்ஜ்கொடுப்­பது அவர்­களுக்கு பய­னற்­ற­தாக மாறி­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால், ‘எனக்கு என்ன தேவை? எனது வேலை சுமையை குறைப்­ப­தற்­கும், எனது நேரத்தை பய­னுள்ள வகை­யில் செல­வ­ழிப்­ப­தற்­கும் ஒரு வாய்ப்­பைத் தரும் பொருளை நான் தேர்வு செய்­கி­றேன்’ என்று அவர்­களே முடிவு செய்­யட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு கனி­மொழி கரு­ணா­நிதி 
எம்.பி. அவர்­கள் கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>