<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,73,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 02 2026 04:56:18 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260402T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="02042026-CHN-07" position.sequence="07" ex-ref="02042026-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">`நாம்­தான் செய்து கொடுப்­போம்’ என்­கிற நம்­பிக்கை, தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு நிறை­யவே இருக்­கி­றது: </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">திட்­டங்­க­ளை­யும் வாக்­கு­று­தி­க­ளை­யும் செய்­து­மு­டிக்க மீண்­டும் ‘திரா­விட மாடல் 2.0’ ஆட்சி அமை­ய­ வேண்­டும்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">நாட்­றாம்­பள்­ளி­யில் நடை­பெற்ற தேர்­தல் பிரச்­சா­ரக் கூட்­டத்­தில்</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">துணை முத­ல­மைச்­சர்  உத­ய­நிதி ஸ்டாலின் பரப்­புரை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Udayasir142_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Udayasir1421_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Udayasir1422_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">வேலூர்,ஏப்.2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு முழு­வ­தும் உள்ள  சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் தொடர் தேர்­தல் பரப்­பு­ரையை கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின்   மேற்­கொண்டு வரு­கி­றார். இதை­யொட்டி, நேற்று ஜோலார்­பேட்டை மற்­றும் திருப்­பத்­தூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளின் வெற்றி வேட்­பா­ளர்­க­ளுக்கு, நாட்­றாம்­பள்ளி பகு­தி­யில் மக்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெற்ற உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு சேக­ரித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">அப்­போது அவர், ``பல திட்­டங்­க­ளை­யும், கொடுத்­தி­ருக்­கும் வாக்­கு­று­தி­க­ளை­யும் செய்­து­மு­டிக்க வேண்­டும் என்­றால், வரு­கிற சட்­ட­மன்­றத் தேர்­த­லில், மீண்­டும் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமை­ய­வேண்­டும். நம் தலை­வர் மீண்­டும் முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யில் அமர வேண்­டும் என்­றால், இங்கே இருக்­கக்­கூ­டிய இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­க­ளித்து, சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­பி­வைக்க வேண்­டும். நாம் இன்று இத்­தனை வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றோம். அவற்றை நாம்­தான் செய்து கொடுப்­போம் என்­கிற நம்­பிக்கை தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு நிறை­யவே இருக்­கி­றது’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­யின் விவ­ரம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">முத­லில் சிறப்­பான, எழுச்­சி­யான வர­வேற்பு அளித்­தி­ருக்­கக்­கூ­டிய உங்­கள் அனை­வ­ருக்­கும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். உங்­க­ளின் வர­வேற்­பை­யும், சிரித்த முகங்­க­ளை­யும் பார்க்­கும்­போது ஏற்­க­னவே நீங்­கள் எல்­லாம் ஒரு முடிவு செய்­து­விட்­டீர்­கள் என்று தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">வரும் 23–ஆம் தேதி உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில், திருப்­பத்­தூர் தொகு­தி­யில் வேட்­பா­ளர் அ.நல்­ல­தம்பி அவர்­க­ளுக்­கும், ஜோலார்­பேட்­டை­யில் சகோ­தரி கவிதா தண்­ட­பாணி அவர்­க­ளுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித்­தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அதி­க­மான வாக்குகள் வித்­தி­யா­சம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இன்று உங்­க­ளை­யெல்­லாம் சந்­தித்து, நம் சகோ­தரி கவிதா தண்­ட­பாணி அவர்­க­ளுக்­கும், திருப்­பத்­தூர் சட்­ட­மன்­றத் தொகுதி அண்­ணன் நல்­ல­தம்பி அவர்­க­ளுக்கு வாக்கு கேட்டு வருகை தந்­துள்­ளேன்.  அண்­ணன் நல்­ல­தம்பி அவர்­க­ளை­யும், சகோ­தரி கவிதா தண்­ட­பாணி அவர்­க­ளை­யும் தலை­வர் உங்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள். கடந்த தேர்­த­லில் வெற்­றி­யைத் தந்­தீர்­கள், இந்த முறை அதை­விட அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைத்து சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்ப வேண்­டும். கடந்த முறை பெற்ற வாக்கு வித்­தி­யா­சத்தை விட அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற செய்­வீர்­கள் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நான் தொடர்ந்து இரண்டு நாட்­க­ளாக தமிழ்­நாடு முழு­வ­தும் பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட்­டுக்­கொண்டு இருக்­கி­றேன். நானும் ஒரு வேட்­பா­ளர், நானும் ஒரு தொகு­தி­யில் நிற்­கி­றேன். இது­வ­ரைக்­கும் என் தொகு­திக்கே நான் போக­வில்லை. நான் எனக்கு வாக்­குக் கேட்­கவே இல்லை. ஆனால், என் தொகு­திக்­குப் செல்­தற்கு முன்­னால் இங்கே சகோ­தரி கவிதா தண்­ட­பாணி அவர்­க­ளுக்­கும், அண்­ணன் நல்­ல­தம்பி அவர்­க­ளுக்­கும் வாக்­குக் கேட்டு உங்­கள் முன்­னால் வந்து நிற்­கி­றேன். ஏனென்­றால் என் வெற்­றியை விட, இவர்­கள் இரு­வ­ரின் வெற்றி மிக மிக முக்­கி­ய­மான வெற்றி. நீங்­கள் அவர்­கள் இரு­வ­ரை­யும் வெற்­றி­பெற வைத்­தீர்­கள் என்­றால் நம் தலை­வரை வெற்­றி­பெற வைத்­தது மாதிரி, என்னை வெற்­றி­பெற வைத்­தது மாதிரி. அத­னால்­தான் உங்­க­ளை­யெல்­லாம் தேடி வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">வாக்­கு­று­தி­கள் நிறை­வேற்­றம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நான் இரண்டு நாட்­க­ளாக மக்­க­ளைச் சந்­தித்­துக் கொண்­டி­ருக்­கி­றேன். அதே மாதிரி நம் தலை­வர் அவர்­க­ளும் இரண்டு நாட்­க­ளாக மக்­க­ளைச் சந்­தித்து பிரச்­சா­ரத்தை மேற்­கொண்டு வரு­கி­றார். எந்­தத் தைரி­யத்­தில் மீண்­டும் மக்­களை சந்­திக்­கி­றோம்? கடந்த ஐந்து வரு­ட­மா­கக் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றி இருக்­கி­றோம். என்­னென்ன தேர்­தல் வாக்­கு­றுதி சொன்­னோமோ, அவற்­ரை­யெல்­லாம் நிறே­வேற்­றி­யி­ருக்­கி­றோம் என்­கிற நம்­பிக்­கை­யில் இன்று மக்­க­ளைச் சந்­திக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">உதா­ர­ணத்­துக்­குச் சில திட்­டங்­களை மட்­டும் சொல்ல விரும்­பு­கி­றேன். நாம் ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­தும் நம் தலை­வர், முத­ல­மைச்­சர் ஆன­வு­டன் அவர் போட்ட முதல் கையெ­ழுத்து `மக­ளி­ருக்கு விடி­யல் பய­ணத் திட்­டம்’. ஒவ்­வொரு மக­ளி­ரும் 900 ரூபா­யி­லி­ருந்து 1,000 ரூபாய் வரை இந்­தத் திட்­டத்­தின் மூலம் சேமித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">குழந்­தை­கள் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வர வேண்­டும், படிக்க வேண்­டும் என்று அர­சுப் பள்­ளி­யில் ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரை படிக்­கக்­கூ­டிய அனைத்­துக் குழந்­தை­க­ளுக்­கும் முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம். தர­மான உணவு, அதன் பிறகு தர­மான கல்வி கொடுக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கல்வி ஊக்­கத் தொகை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">அடுத்­துக் கல்­லூ­ரிக்கு செல்று படிப்­ப­தற்கு ஊக்­கு­விக்க ‘கல்வி ஊக்­கத் தொகை’. அர­சுப் பள்­ளி­யில் படித்து, எந்­தக் கல்­லூ­ரி­யில் சேர்ந்­தா­லும், தனி­யார் கல்­லூ­ரி­யாக இருந்­தா­லும்அவர்­க­ளுக்­குக் கல்வி ஊக்­கத்­தொ­கை­யாக மாதம் 1,000 ரூபாய் நம் முத­ல­மைச்­சர் கொடுத்­தார். கிட்­டத்­தட்ட 12 லட்­சம் மாணவ மாண­வி­கள் இதில் பயன்­பெற்­றி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">கடந்த மாதம் நம் தலை­வர் முத­ல­மைச்­சர் 10 லட்­சம் கல்­லூரி மாணவ மாண­வி­க­ளுக்கு இல­வச மடிக்­க­ணி­னி­க­ளை­யும் கொடுத்­தி­ருக்­கி­றார். ஒரே மாதத்­தில் கொடுத்து முடித்­தோம். இன்று அ.தி.மு.க ஒரு பொய்ப் பிரச்­சா­ரத்­தைச் செய்­கி­றார்­கள், மடிக்­க­ணினி கொடுக்­கும் திட்­டம், அ.தி.மு.க–வின் திட்­டம் என்று சொல்­கி­றார்­கள். அ.தி.மு.க ஆட்­சி­யில்அவர்­கள் பள்ளி படிக்­கும் குழந்­தை­க­ளுக்கு மடிக்­க­ணினி கொடுத்­தார்­கள். 2019–ஆம் ஆண்டே இந்­தத் திட்­டத்தை நிறுத்­தி­விட்­டார்­கள், அப்­பொ­ழுது அ.தி.மு.க ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இன்று நம் முத­ல­மைச்­சர் அது பள்­ளிக்­கூ­டக் குழந்­தை­க­ளுக்­குக் கொடுப்­பதை விடக் கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு மடிக்­க­ணினி கொடுத்­தால், இன்­னும் அவர்­க­ளுக்­குப் பய­னுள்­ள­தாக இருக்­கும், நாளை ஒரு வேலைக்­குப் போவ­தற்கு, மேற்­ப­டிப்பு படிப்­ப­தற்­குப் பய­னுள்­ள­தாக இருக்­கும் என்று இன்று கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு 10 லட்­சம் மடிக்­க­ணி­னி­களை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இவை அனைத்­தை­யும் விட மிகப்­பெ­ரிய ஒரு திட்­டம், `கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டம்’. கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லின் போது நாம் கொடுத்த வாக்­கு­றுதி. மூன்று வரு­ட­மாக ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு மாதம் 1,000 ரூபாய் உரி­மைத் தொகையை நம் அரசு கொடுத்­தி­ருக்­கி­றது. அந்­தத் திட்­டத்தை எப்­ப­டி­யா­வது நிறுத்த வேண்­டும் என்று அ.தி.மு.க–வும் பா.ஜ.க–வும் திட்­டம் போட்­டார்­கள். தேர்­த­லைக் கார­ணம் காட்டி மக­ளிர் உரி­மைத் தொகையை நிறுத்த வேண்­டும் என்று முயற்சி செய்­தார்­கள். ஆனால், நம் தலை­வர் என்ன செய்­தார்? நான் 1,000 ரூபாய் கொடுப்­பதை நீ நிறுத்­து­கி­றாயா? இப்­போது நான் கொடுக்­கி­றேன் என்று சொல்லி 5,000 ரூபாய் கடந்த மாதம் கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">தேர்­தல் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம். திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடனே மக­ளிர் உரி­மைத் தொகை 1,000 ரூபாயை உயர்த்தி 2,000 ரூபாய் தரு­கி­றேன் என்று நம் தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார். நம் தலை­வர் சொன்­னால், நிச்­ச­யம் செய்­வார் என்­கிற நம்­பிக்கை இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">காலை உண­வுத் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">தமிழ்ப்­பு­தல்­வன், புது­மைப்­பெண் திட்ட கல்வி ஊக்­கத்­தொகை 1,000 ரூபா­யி­லி­ருந்து 1,500–ஆக உயர்த்­தித் தரப்­ப­டும். 10 லட்­சம் பேருக்கு கலை­ஞர் கனவு இல்­லத் திட்­டத்­தின் மூலம் புதி­தாக வீடு கட்­டிக் தரப்­ப­டும். 50 லட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு தரப்­ப­டும்.  முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம், நாம் மீண்­டும் ஆட்­சிக்கு வந்த உடனே எட்­டாம் வகுப்பு வரை இல­வச முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம் விரி­வாக்­கம் செய்­யப்­ப­டும் என்று வாக்­கு­றுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">பல வாக்­கு­று­தி­கள் கொடுத்­தி­ருக்­கி­றோம். எல்­லா­வற்­றை­யும்­விட மிக மிக முக்­கி­ய­மான வாக்­கு­றுதி. மக­ளிர் உங்­க­ளுக்­குத் தெரி­யும், அது­தான் `இல்­லத்­த­ரசி திட்­டம்’. ஆட்­சிப் பொறுப்­பேற்ற உடனே முத­ல­மைச்­சர் ஆன­வு­டனே நம் தலை­வர் மக­ளி­ருக்கு 8,000 ரூபாய் மதிப்­புள்ள ஒரு கூப்­பன் கொடுத்­து­வி­டு­வார். அந்­தக் கூப்­ப­னில் உங்­கள் வீட்­டுக்­குத் தேவை­யான மின்­சா­த­னப் பொருட்­களை நீங்­களே தேர்வு செய்து வாங்­கிக்­கொள்­ள­லாம். ஃபிரிட்ஜ், டிவி, குக்­கர், வாஷிங் மெஷின் எது­வாக இருந்­தா­லும், 8,000 ரூபாய் மதிப்­புள்ள பொருட்­களை மக­ளிர் நீங்­களே முடிவு செய்து வாங்­கிக்­கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மீண்­டும் திரா­விட மாடல் 2.0 ஆட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இப்­படி பல திட்­டங்­க­ளை­யும், கொடுத்­தி­ருக்­கும் வாக்­கு­று­தி­க­ளை­யும் செய்­து­மு­டிக்க வேண்­டும் என்­றால், வரு­கிற சட்­ட­மன்­றத் தேர்­த­லில், மீண்­டும் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமை­ய­வேண்­டும். நம் தலை­வர் மீண்­டும் முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யில் அமர வேண்­டும் என்­றால், இங்கே இருக்­கக்­கூ­டிய இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­க­ளித்து, சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­பி­வைக்க வேண்­டும். நாம் இன்று இத்­தனை வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றோம். அவற்றை நாம்­தான் செய்து கொடுப்­போம் என்­கிற நம்­பிக்கை தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு நிறை­யவே இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நம் தலை­வர் சொல்­கி­றார், இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல் டெல்லி அணி vs தமிழ்­நாடு அணி. டெல்லி அணி­யில் மோடி அவர்­க­ளும் அமித்ஷா அவர்­க­ளும் அவர்­க­ளின் அடி­மைக் கூட்­டம் எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­க­ளும் கூட்­டணி போட்டு வந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">எப்­படி வந்­தா­லும் தமிழ்­நாட்­டுக்­குள் நம்மை அனு­ம­திக்க மாட்­டார்­கள் என்று பா.ஜ.க–விற்­குத் தெரி­யும்.  அத­னால் இன்று அ.தி.மு.க–வை உடன் அழைத்­துக்­கொண்டு அவர்­க­ளின் போர்­வை­யில் மீண்­டும் தமிழ்­நாட்­டுக்­குள் வர முயற்சி செய்­கி­றார்­கள். தமிழ்­நாட்­டில் என்­றைக்­கும் பாசிச சங்­கிக் கூட்­டத்­துக்கு அனு­மதி கிடை­யாது. இந்த சட்­ட­மன்­றத் தேர்­தல், தமிழ்­நாடு vs டெல்லி தேர்­த­லில் மீண்­டும் வெற்­றிப்­பெற போவது நம் தமிழ்­நா­டு­தான். நம் தமிழ்­நாடு என்­றைக்­கும் டெல்­லிக்கு அவுட் ஆப் கண்ட்­ரோல் தான் என்­பதை டெல்­லிக்­குச் சொல்­வோம். அதை மெய்ப்­பித்­துக் காட்ட வேண்­டிய தேர்­தல் இந்­தத் தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மோடி­யின் முரட்டு அடிமை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நீங்­கள் எல்­லாம் முரட்­டுப் பக்­தர்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள், முரட்­டுத் தொண்­டர்­கள் கேள்­விப்­பட்­டி­ருப்­பீர்­கள், எங்­கே­யா­வது முரட்டு அடி­மை­யைப் பார்த்­தி­ருக்­கி­றீர்­களா?. இன்று இந்­தி­யா­வி­லேயே மோடி­யின் முரட்டு அடிமை என்­றால், எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள். இதைச் சொன்­ன­தற்கு நேற்று அவ­ருக்­குக் கோபம் வந்­து­விட்­டது. உத­ய­நிதி என்­னைப் பற்றி ரொம்­பத் தரக்­கு­றை­வா­கப் பேசு­கி­றார், கெட்ட வார்த்­தை­யில் திட்­டு­கி­றார் என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நான் என்­றைக்­கா­வது அவ­ரைத் திட்டி இருக்­கி­றேனா? மோடி திட்­டின மாதிரி நான் திட்டி இருக்­கி­றேனா? இந்­தத் தேர்­த­லில் தமிழ்­நாட்டு மக்­கள் நீங்­கள் முடி­வெ­டுத்­துச் சொல்­லுங்­கள், பத்து தோல்வி பழ­னி­சாமி இல்லை, மொத்­தத் தோல்வி பழ­னி­சாமி என்­பதை முடித்­து­விட வேண்­டும். அதைச் செய்ய வேண்­டிய நேரம், வரு­கிற சட்­ட­மன்­றத் தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இங்கே இருக்­கக்­கூ­டிய மக்­கள் நீங்­கள் அனை­வ­ரும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று முடிவு செய்­து­விட்­டீர்­கள். நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், அடுத்த 22 நாட்­கள் பிரச்­சா­ரம் செய்­யுங்­கள். நம் கழக அர­சின் சாத­னை­கள், திட்­டங்­கள், என்­னென்ன வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம், வெற்றி பெற்­றால் என்­னென்ன செய்­வோம் என்­பதை அடுத்த 22 நாட்­கள் நீங்­கள் தொகுதி முழு­வ­தும் பிரச்­சா­ரம் செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">ஒவ்­வொரு வாக்­கா­ள­ரா­கச் சந்­தித்து என்­னென்ன திட்­டங்­கள் இருக்­கின்­றன, மீண்­டும் ஏன் நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்சி அமைக்­க­வேண்­டும் என்­கிற பிரச்­சா­ரத்தை நீங்­கள் செய்ய வேண்­டும். மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் சகோ­தரி கவிதா தண்­ட­பாணி அவர்­க­ளை­யும், அண்­ணன் நல்­ல­தம்பி அவர்­க­ளை­யும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து நீங்­கள் வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன். உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யாக, பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன். முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன். உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு ஆத­ரவு தாருங்­கள். அண்­ணன் நல்­ல­தம்பி அவர்­க­ளை­யும், சகோ­தரி கவிதா தண்­ட­பாணி அவர்­க­ளை­யும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைத்­துச் சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­புங்­கள். உங்­க­ளுக்­குத் தொகு­திக்­குத் தேவை­யான அனைத்­துத் திட்­டங்­க­ளை­யும் அவர்­கள் செய்து கொடுப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">உங்­க­ளின் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி, நன்றி, நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் 
உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">திருப்­பத்­தூர் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் தேவ­ராஜ், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.என்.அண்­ணா­துரை, முன்­னாள் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் முத்­து­செல்வி, மாவட்­டத் துணைச் செய­லா­ளர் சம்­பத்­கு­மார், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் சத்­தி­ய­மூர்த்தி, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் சாமண்­ணன், சத்­தி­ய­நா­ரா­ய­ணன், ஒன்­றிய நகர பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள் சூரி­ய­கு­மார், அன்­ப­ழ­கன், சதீஷ்­கு­மார், உமா­கண்­ரங்­கம், அசோக்­கு­மார், சுரேஷ்­கு­மார், உமா­சந்­தி­ரன், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் வடி­வேல், துணை அமைப்­பா­ளர் செந்­தில்­கு­மார், தமிழ்­மணி, நதீம், திருப்­பத்­தூர் மாவட்ட நிர்­வா­கி­கள் ஜோதி­ரா­ஜன், டி.கே.மோகன், செயற்­குழு உறுப்­பி­னர் ராஜ­மா­ணிக்­கம், ரகு­நாத், அரசு, தொகுதி பார்­வை­யா­ளர் ரமேஷ், ஒன்­றிய, நகர, பேரூர் கழ­கச் செய­லா­ளர் ராஜேந்­தி­ரன், முரு­கே­சன், குண­சே­க­ரன், மோகன்­ராஜ், ராஜேந்­தி­ரன், கழக முன்­ன­ணி­யி­னர் மற்­றும் கூட்­ட­ணிக் கட்­சி­யி­னர் உள்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="0" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="16">மீண்­டும் திரா­விட மாடல்</lang>
</p>
</block>
<block id="subarticle2" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="0" >

	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">2.0 ஆட்சி!    </lang>
	</hl2>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">பல திட்­டங்­க­ளை­யும், கொடுத்­தி­ருக்­கும் வாக்­கு­று­தி­க­ளை­யும் செய்­து­மு­டிக்க வேண்­டும் என்­றால், வரு­கிற சட்­ட­மன்­றத் தேர்­த­லில், மீண்­டும் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமை­ய­வேண்­டும். நம் தலை­வர் மீண்­டும் முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யில் அமர வேண்­டும் என்­றால், இங்கே இருக்­கக்­கூ­டிய இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­க­ளித்து, சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­பி­வைக்க வேண்­டும்.</lang>
</p>
</block>
    </body.content>
  </body>
</nitf>