<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,1202" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 01 2026 23:12:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260402T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="02042026-VLR-04" position.sequence="04" ex-ref="02042026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை    </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">02.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="58">பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு செய்த திட்டங்களை சொல்ல முடியுமா?</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">திருச்சியில் தலைவர் – முதல்வர் உரை...   </lang>
	<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="43">3 ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular"  size="43">  </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194334_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup296237_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தங்­க­ளின் வீட்­டிற்­குத் தேவை­யான வாஷிங் மெஷின்,  ஃபிரிட்ஜ்,  டி.வி.,  கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ–­வேவ் அவன், இண்­ட­க்ஷன் அடுப்பு போன்ற வீட்டு உப­யோ­கப் பொருட்­க­ளைப் புதி­தாக வாங்­க­வும் அல்­லது ஏற்­கெ­னவே பயன்­ப­டுத்தி வரும் இத்­த­கைய பொருட்­களை கொடுத்­து­விட்டு அதற்­குப் பதி­லாக வேறு வாங்­கிக் கொள்­ள­வும் ‘இல்­லத்­த­ரசி’ என்ற புதிய திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டும். அது­வும் நீங்­கள் வசிக்­கும் பகு­தி­க­ளில் உள்ள உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­க­ளி­லேயே உங்­க­ளுக்­குப் பிடித்த கம்­பெனி, உங்­க­ளுக்கு பிடித்த மாட­லா­கப்  பார்த்து,  இந்­தப் பொருட்­களை நீங்­கள் வாங்­கிக் கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்­காக ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் எவ்­வ­ளவு ரூபாய் கூப்­பன்? தலா 8 ஆயி­ரம் ரூபாய் மதிப்­பி­லான கூப்­பன் கொடுக்­கப் போகி­றோம் என்று அறி­வித்­தி­ருக்­கி­றோம். இன்­றைக்கு தமிழ்­நாடு முழு­வ­தும் இதைப் பற்­றித்­தான் ஒரே பேச்­சாக இருக்­கி­றது. நம்­மு­டைய பெண்­கள் ஒரு சேலை வாங்­கி­னால் கூட, அவர்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில், அவர்­க­ளுக்­குப் பிடித்த டிசை­னில், அவர்­க­ளுக்­குப் பிடித்த கல­ரில் வாங்க வேண்­டும் என்று நினைப்­பார்­கள். அதை மன­தில் வைத்­து­தான் இந்த திட்­டத்தை உரு­வாக்கி இருக்­கி­றோம். இல்­லத்­த­ரசி திட்­டத்­தில் என்ன வாங்க வேண்­டும், எப்­படி வாங்க வேண்­டும் எல்­லாமே ‘உங்­கள் சாய்ஸ்’­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, உல­கிற்கே உணவு அளிக்­கும் உழ­வர்­களை மகிழ்­விக்க ஒரு மாபெ­ரும் அறி­விப்பை வெளி­யிட்­டி­ருக்­கி­றோம். இல­வச மின்­சா­ரம் பெறும் 20 இலட்­சத்­திற்­கும் மேற்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு, எந்த வித மீட்­ட­ரும் பொருத்­தப்­ப­டாத நவீன மின்­சா­ரப் பம்பு செட்­டு­கள் வழங்­கப்­ப­டும். அனை­வ­ரும் பழைய பம்பு செட்டு வைத்­தி­ருப்­பார்­கள். சிலது அடிக்­கடி ரிப்­பேர் ஆகும். அதிக கரண்ட் செல­வா­கும். அதிக விலை கொடுத்து வாங்க முடி­யாத நிலை­யில் இருப்­பீர்­கள். அதை நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில் அரசே இனி வாங்­கித் தரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நெல், கரும்பு, பால் கொள்­மு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">விலை அதி­க­ரிக்­கப்­ப­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கரும்பு கொள்­மு­தல் விலை டன் ஒன்­றுக்கு 4 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதி­யோர் உத­வித்­தொகை இனி மாதம் 2 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான உத­வித்­தொகை 2 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­னும் இருக்­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மீன்­பி­டித் தடைக்­கா­லச் சிறப்பு நிவா­ர­ணத் தொகை 8 ஆயி­ரம் ரூபா­யில் இருந்து 12 ஆயி­ரம் ரூபா­யாக, மீன்­பிடி குறை­வுக்­கால சிறப்பு நிவா­ர­ணத் தொகை 6 ஆயி­ரம் ரூபா­யில் இருந்து 9 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளிர் சுய உத­விக்­குழு சகோ­த­ரி­கள் நிறைய பேர் இங்கு வந்­தி­ருப்­பீர்­கள். உங்­களை எல்­லாம் பிசி­னஸ்–­வு­ம­னாக முன்­னேற்­றும் வகை­யில் பிணை எது­வும் இல்­லா­ம­லேயே, 5 இலட்­சம் ரூபாய் வரை மானி­யத்­து­டன் வங்­கிக் கட­னு­தவி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேரி­டர் கால இழப்­பீ­டு­க­ளாக இற­வைப் பாசன பயிர்­கள் மற்­றும் நெல் பயிர்­க­ளுக்கு ஹெக்­டேர் ஒன்­றுக்கு 25 ஆயி­ரம் ரூபா­யும், நீண்­ட­கா­லப் பயிர்­க­ளுக்கு 27 ஆயி­ரம் ரூபா­யும், மானா­வா­ரிப் பயிர்­க­ளுக்கு 12 ஆயி­ரம் ரூபா­யும் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உயர்­கல்வி படிக்­கும் 35 இலட்­சம் மாண­வர்­க­ளுக்­கும் அடுத்த 5 ஆண்­டு­க­ளுக்­குள் லேப்­டாப் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 10 ஆயி­ரம் புதிய பேருந்­து­கள் இயக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அனைத்­துச் சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளி­லும் முதல்­வர் படைப்­ப­கங்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் இத­ய­மாக இருக்­கும் இந்த டெல்டா மாவட்­டங்­க­ளுக்­கான சிறப்பு வளர்ச்­சித் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">– இப்­படி ஏரா­ள­மான வாக்­கு­று­தி­களை நாம் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சொன்ன வாக்­கு­று­தி­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">மறக்­கவோ மறுக்­கவோ மாட்­டேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாங்­கள் சொன்­னால் செய்­வோம். செய்­வதைத்­தான் சொல்­வோம். நான் கலை­ஞ­ரின் மகன். சொன்ன வாக்­கு­று­தி­களை மறக்­க­வும் மாட்­டேன், மறுக்­க­வும் மாட்­டேன். கடந்த 5 ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டின் நிதி நிலை­யைச் சீராக்கி, ஒவ்­வொன்­றாக நாங்­கள் நிறை­வேற்றி வரும் திட்­டங்­களே அதற்கு சாட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தன்­னு­டைய பத்­தாண்டு கால ஆட்­சி­யில் தமிழ்­நாட்டை அனைத்­துத் துறை­யி­லும் படு­கு­ழிக்­குத் தள்­ளிய அ.தி.மு.க.வும், இந்­தி­யாவை வர­லாறு காணாத சரி­வுக்­குக் கொண்டு சென்­றி­ருக்­கும் பா.ஜ.க.வும் சேர்ந்து அமைத்­தி­ருக்­கும் கூட்­ட­ணிக்கு இந்­தத் தேர்­த­லி­லும் வழக்­கம்­போல் படு­தோல்­வி­யை­தான் நீங்­கள் பரி­சாக தர வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக்­க­ளுக்கு நேர­டி­யாக எட்­டா­யி­ரம் ரூபாய்க்­கான கூப்­ப­னைத் தரப்­போ­கும் நம்­மு­டைய இல்­லத்­த­ர­சி­கள் திட்­டத்­தைப் பார்த்து இன்­றைக்கு வயிறு எரிந்து, அது ஊழ­லுக்­கான திட்­டம் என்று சொல்­கி­றார், பழ­னி­சாமி. எந்த பழ­னி­சாமி, சம்­பந்­திக்கு காண்ட்­ராக்ட் கொடுப்­ப­தற்­கா­கவே ஆட்­சியை நடத்­திய பழ­னி­சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. செய்­யும் ஒவ்­வொரு திட்­ட­மும் தர­மா­ன­தாக இருக்­கும்! எடுத்­துக்­காட்­டுக்­குச் சொல்­கி­றேன்... தலை­வர் கலை­ஞர் அவர்­கள் 2006 தேர்­த­லின்­போது, கலர் டி.வி. வழங்­கு­வோம் என்று சொன்­னார். ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்­த­வு­டனே, கலர் டி.வி.யின் கொள்­மு­தல் நேர்­மை­யா­க­வும், தர­மா­ன­தா­க­வும், யாரும் குறை சொல்ல முடி­யா­த­தா­க­வும் இருக்க வேண்­டும் என்று,  அதற்­கான டெண்­டரை முடிவு செய்ய, எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும் அ.தி.மு.க.வையும் சேர்த்து அனைத்­துக் கட்சி உறுப்­பி­னர்­கள் அடங்­கிய குழுவை அமைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">20 ஆண்­டு­க­ளாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இருந்­து­வ­ரும் கலர் டி.வி.க்கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2006–ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதமே கலர் டி.வி.க்களை வழங்­கும் விழா­வைத் தொடங்கி, ஒன்­ற­ரைக் கோடிக்­கும் அதி­க­மான, நம்­மு­டைய தமி­ழர்­க­ளின் வீடு­க­ளுக்கு கலர் டி.வி.க்களை வழங்­கி­னோம். கிட்­டத்­தட்ட இரு­பது வரு­டம் ஆகி­றது. இன்­றைக்­கும் பல வீடு­க­ளில் கலர் டி.வி.யாக மட்­டு­மல்ல; கலை­ஞர் டி.வி.யாக அது நிலைத்து நிற்­கி­றது! இதற்கு பெயர்­தான் குவா­லிட்டி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதுவே, அ.தி.மு.க. ஆட்­சி­யில் மிக்சி, கிரைண்­டர், மின்­வி­சிறி என்று கொடுத்­தீர்­கள். என்ன ஆனது? காய­லாங்­க­டை­யில் இருக்­கி­றது. இந்த லட்­ச­ணத்­தில் வாய் இருக்­கி­றது என்று என்ன வேண்­டு­மா­னா­லும் பேச­லாம் என்று பேசிக் கொண்­டி­ருக்­கி­றார், நம்­மு­டைய பழ­னி­சாமி அவர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏற்­கெ­னவே, 2021 தேர்­த­லில், மக­ளிர் உரி­மைத்­தொ­கை­யாக நாங்­கள் ஆயி­ரம் ரூபாய் வழங்­கு­வோம் என்று சொன்­ன­வு­டனே, அவ­சர அவ­ச­ர­மாக அவர் வீட்­டில் இருக்­கும் ஜெராக்ஸ் மெஷினை ஆன் செய்து, 1,500 ரூபாய் தரு­வோம் என்று அறிக்கை வெளி­யிட்­டார். பழ­னி­சா­மி­யின் வாய்ச்­ச­வ­டா­லும், அவ­ரின் அலங்­கோல ஆட்சி நிர்­வா­கத்­தின் ஊழல் பவு­சும் தெரிந்து, மக்­க­ளான நீங்­கள் அவ­ரைப் புறக்­க­ணித்­தீர்­கள். இப்­போ­தும் மக்­க­ளுக்கு நல்­லது நடக்­கக் கூடாது என்று, வயிற்­றெ­ரிச்­ச­லில், தன்னை போலவே பிற­ரை­யும் நினைத்து ஊழல் நடக்­கும் என்று பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அண்­மை­யில், மது­ரை­யில் ஒரு சம்­ப­வம் நடந்­தது. இவர்­கள் ஆட்­சிக்கு வந்­தால் என்ன நடக்­கும் என்­ப­தற்கு டிரெய்­லர்­தான் அது. மது­ரை­யில் நடை­பெற்ற கூட்­டத்­தின் நுழைவு வாயி­லில் தந்தை பெரி­யார் படத்தை வைக்­கக் கூடாது என்று பா.ஜ.க. சொன்­ன­தும், சுய­ம­ரி­யா­தையே இல்­லா­மல் அதை எடுக்­கத் துணிந்­த­வர்­தான் பழ­னி­சாமி. மதுரை பா.ஜ.க. ஆத­ர­வுக் கூட்­டத்­தில், தந்தை பெரி­யா­ரை­யும், அண்­ணா­வை­யும் கொச்­சைப்­ப­டுத்­தும் காணொ­ளியை வெளி­யிட்­டார்­கள். அண்ணா தி.மு.க.வைச் சேர்ந்த முன்­னாள் அமைச்­சர்­கள் மூன்று பேர் கொஞ்­சம் கூட சொர­ணையே இல்­லா­மல் அதைப் பார்த்­துக் கொண்­டி­ருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அ.தி.மு.க. கட்­சி­யைக்­கூட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அடி­மைக் கூட்­ட­மாக்கி விட்­ட­னர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் கேட்­கி­றேன்... மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர் இருந்­தால் விட்­டி­ருப்­பாரா? அல்­லது அம்­மை­யார் ஜெய­ல­லிதா அவர்­கள் இருந்­தால் விட்­டி­ருப்­பாரா? பேர­றி­ஞர் அண்­ணாவை இவ்­வாறு அசிங்­கப்­ப­டுத்­தி­னால் பார்த்­துக்­கொண்டு சும்மா இருந்­தி­ருப்­பார்­களா? பழ­னி­சா­மி­யின் ஒரே சாதனை அ.தி.மு.க. எனும் கட்­சியை அடி­மைக் கூட்­ட­மாக சீர­ழித்து இருப்­ப­து­தான். ‘திரா­வி­டம்’ என்ற சொல்­லும் அந்­தக் கூட்­டத்­தில் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­டது. அ.தி.மு.க. முன்­ன­ணி­யி­னர் அதை­யும் கூட தடுக்­க­வில்லை. “திரா­வி­டம் என்­றால் என்­ன­வென்றே எனக்­குத் தெரி­யாது, நான் புரா­ணங்­களை எல்­லாம் படித்­தது இல்லை” என்று கொஞ்­சம் கூட வெட்­க­மில்­லா­மல் சிரித்­துக்­கொண்டே சொன்­ன­வர்­தான் பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தத் துப்­பு­கெட்ட பழ­னி­சாமி, யார் எக்­கேடு கெட்­டா­லும் பர­வா­யில்லை – தன்­னு­டைய பத­வியை காப்­பாற்­றிக் கொண்­டால் போதும் என்று பா.ஜ.க.வின் பாதம் தாங்­கி­யாக இருந்து கொண்­டி­ருப்­ப­வர்­தான் பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சிறு­பான்­மைச் சமூ­கத்­திற்­கும், இலங்­கைத் தமி­ழர்க்­கும் துரோ­கம் இழைக்­கும் வகை­யில் குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டத்தை மாநி­லங்­க­ள­வை­யில் ஆத­ரித்து அது நிறை­வேற துணை­போன கட்­சி­தான் அ.தி.மு.க. ஏன், இவர்­க­ளு­டன் சேர்ந்து ‘பாட்­டாளி’ அன்­பு­மணி ராம­தா­சும் ஆத­ர­வாக வாக்­க­ளித்து துரோ­கம் செய்­தார். இவர்­க­ளால்­தான் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான அந்­தச் சட்­டமே மாநி­லங்­க­ள­வை­யில் நிறை­வே­றி­ யது. அதைத் தொடர்ந்து நடந்த போராட்­டங்­க­ளில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் மேல் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. சுமார் 70 பேர் கொல்­லப்­பட்­டார்­கள். இவர்­க­ளின் இரத்­தக்­கறை இன்­றைக்கு அ.தி.மு.க. கையில்­தான் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சி.ஏ.ஏ. சட்­டத்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எதிர்க்­கி­றீர்­களா – ஆத­ரிக்­கி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வ­ள­வுக்கு பிற­கும் பழ­னி­சாமி என்ன பேசி­னார்? “குடி­யு­ரி­மைச் சட்­டத்­தால் யாருக்­கும் எந்த பாதிப்­பும் இல்­லையே! எந்த முஸ்­லீம் பாதிக்­கப்­பட்­டார் என்று காட்­டுங்­கள்” என்று சொன்­ன­வர்­தான் பழ­னி­சாமி. ஆனால், சிறு­பான்­மை ­யி­னர் வாக்­கு­கள் வேண்­டும் என்று, 2024 தேர்­த­லில் தனி­யாக நின்று நாட­கம் ஆடி­ய­போது, CAA சட்­டத்தை கண்­டிப்­ப­தாக பல்டி அடித்­தார் பழ­னி­சாமி. “பா.ஜ.க. மக்­க­ளி­டையே பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­து­கி­றார்­கள், CAA சட்­டம் ஒரு வர­லாற்­றுப் பிழை” என்று பிளேட்டை அப்­ப­டியே திருப்­பிப் போட்­டார் பழ­னி­சாமி. நான் இப்­போது கேட்­கி­றேன்,  எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி அவர்­களே, நீங்­கள் இப்­போது அந்­தச் சட்­டத்தை ஆத­ரிக்­கி­றீர்­களா? எதிர்க்­கி­றீர்­களா? தைரி­யம் இருந்­தால், வெளிப்­ப­டை­யா­கச் சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னி­சா­மி­யின் துரோ­கப் பட்­டி­யல் இதோடு நிற்­க­வில்லை. மூன்று வேளாண் சட்­டங்­களை பா.ஜ.க. கொண்டு வந்­த­போது கண்ணை மூடிக்­கொண்டு அதை­யும் ஆத­ரித்­தார் இந்­தப் பழ­னி­சாமி. மூன்று வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதி­ரா­கப் போரா­டிய எட்டு மாநில விவ­சா­யி­களை, “புரோக்­கர்­கள்” என்று வசை­பா­டிக் கொச்­சைப்­ப­டுத்­தி­னார். இப்­படி, பா.ஜ.க.வுடன் கூட்­டணி சேர்ந்து, முழு சந்­தி­ர­மு­கி­யா­கவே மாறி­யி­ருக்­கி­றார் பழ­னி­சாமி. அதா­வது, முழு சங்­கி­யா­கவே மாறி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஊர் ஊரா­கச் சென்று, அதி­முக கூட்­ட­ணி­யில் எந்­தப் பிரச்­சி­னை­யும் இல்லை என்று பழ­னி­சாமி சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார். பிரச்­சினை இல்லை என்­றால், எதற்­காக அத்­தனை முறை டெல்­லிக்­குச் சென்­றீர்­கள். டெல்­லிக்­குச் சென்று அமித்­ஷா­வின் அப்­பாய்ன்ட்–­மெண்­டுக்­காக பல­மணி நேரம் ஏன் காத்­துக்­கி­டந்­தீர்­கள்? அது­வும் வேறு வேறு காரில் மாறி மாறி சென்று, முகத்தை எல்­லாம் மூடிக்­கொண்டு ஏன் வெளி­யில் வந்­தார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் கேட்­கி­றேன்... கூட்­ட­ணிக்­குத் தலைமை அ.தி.மு.க.–தான் என்று சொல்­கி­றார்­கள். ஆனால், அனைத்து கட்­சி­க­ளும் ஏன் பா.ஜ.க.விடம் சென்று பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார்­கள்?  இது எப்­படி இருக்­கி­றது தெரி­யுமா? “மாப்­பிள்ளை அவர்­தான், ஆனால், அவர் போட்­டி­ருக்­கும் சட்டை என்­னு­டை­யது” என்று நம்­மு­டைய சூப்­பர் ஸ்டார் நடித்த படை­யப்பா படத்­தில் வரும் காமெடி போன்று இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் தெரி­யா­மல்­தான் கேட்­கி­றேன், கூட்­ட­ணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை என்­றால், அதில் இருக்­கும் சிறிய கட்­சி­கள் எல்­லாம் ஏன் அ.தி.மு.க. சின்­னத்­தில் போட்­டி­யி­டா­மல்,பா.ஜ.க.வின் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­கி­றார்­கள்? பழ­னி­சா­மியை முத­ல­மைச்­சர் ஆக்­கு­வோம் என்று பிர­த­மர் மோடி அவர்­கள் இது­வரை சொல்லி இருக்­கி­றாரா? அ.தி.மு.க. என்ற பெய­ரைக் கூட அவர் சொன்­னது போன்று எனக்­குத் தெரி­ய­வில்லை. NDA சர்க்­கார், NDA சர்க்­கார் என்­று­தான் மீண்­டும் மீண்­டும் சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அறி­வுக் கொழுந்து போல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பேசு­கி­றார் எடப்­பாடி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், நாம் “தமிழ்­நாடு வெர்­சஸ் NDA, தமிழ்­நாடு வெர்­சஸ் டெல்லி” என்று சொன்­னால் மட்­டும், “இது என்ன டெல்லி தேர்­தலா?” ஏன் அப்­படி சொல்­கி­றீர்­கள்?” என்று பெரிய அறி­வுக்­கொ­ழுந்து மாதிரி கேட்­கி­றார் பழ­னி­சாமி! தன் மீதான ஊழல் புகார்­கள், உற­வி­னர்­கள் வீடு­க­ளில் நடந்த ரெய்­டு­க­ளில் இருந்து தப்­பிக்க மொத்­தக் கட்­சி­யை­யும் பா.ஜ.க.விடம் பழ­னி­சாமி அடகு வைத்­து­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக்­கள் வாக்­க­ளிக்­கா­ம­லேயே M.L.A.க்களை ஏலத்­தில் எடுத்து ஒரு முறை முத­ல­மைச்­சர் ஆகி­விட்­டார். கூவத்­தூர் வர­லாறு எல்­லாம் உங்­க­ளுக்கு தெரி­யும். மீண்­டும் இவ­ரி­டம் ஆட்சி சென்­றால் ஒட்­டு­மொத்­தத் தமிழ்­நாட்­டை­யும் டெல்­லி­யி­டம் அடகு வைத்­து­வி­டு­வார். அடகு என்ன, மொத்­த­மாக விற்­று­வி­டு­வார். இவ­ரின் ஓன­ரான பா.ஜ.க.வின் ஒரே நோக்­கம் தமிழ்­நாட்­டின் வளர்ச்­சி­யைத் தடுப்­ப­து­தான். நேராக வந்­தால் தமிழ்­நாட்டு மக்­கள் நோட்­டா­விற்கு கீழே அனுப்­பி­வி­டு­வார்­கள்! அத­னால்­தான் கொத்­த­டி­மைக் கூட்­ட­மாக இருக்­கும் அ.தி.மு.க. முக­மூ­டி­யு­டன் வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த 11 ஆண்டு காலத்­தில் பா.ஜ.க. தமிழ்­நாட்­டிற்­கான எதை­யும் செய்­ய­வில்லை. நம்­மு­டைய மக்­க­ளின் எந்­தக் கோரிக்­கை­யை­யும் நிறை­வேற்­ற­வில்லை. 12 ஆண்­டு­க­ளாக ஆட்சி செய்­கி­றார்­கள். ஆனால்,  தமிழ்­நாட்­டிற்­காக இது­வரை ஒரு சிறப்­புத் திட்­டம் கூட இல்லை. அறி­வித்த மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யும் இப்­போது என்ன நிலை­யில் இருக்­கி­றது என்று உங்­க­ளுக்கு தெரி­யும். இப்­போது வரை கட்டி முடிக்­கப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நியா­ய­மான நிதி­யை­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">விடு­விக்கவில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நமக்கு நியா­ய­மாக கிடைக்க வேண்­டிய நிதி­யைக் கூட விடு­விக்க மறுக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மதுரை, கோவை, திருச்சி மாந­க­ரங்­க­ளின் எதிர்­கால வளர்ச்­சிக்­காக மெட்ரோ இர­யில் திட்­டத்­தைக் கேட்­டோம். அது­வும் முடி­யாது என்று சொல்­லி­விட்­டார்­கள். சென்னை மெட்ரோ ரயில் திட்­டத்­திற்­கான நிதியை ஒழுங்­கா­கத் தரா­மல் இழுத்­த­டிக்­கி­றார்­கள். ஓசூர் விமான நிலை­யத்­திற்­கும் அனு­மதி தர­வில்லை. பள்­ளிக் குழந்­தை­க­ளுக்­கான கல்வி நிதி­யை­யும் தரு­வ­தைத் தடுக்­கி­றார்­கள். குடி­நீர் திட்ட நிதி­யும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வ­ளவு அநீ­தி­க­ளை­யும் செய்­து­விட்டு, தேர்­தல் வந்­து­விட்­டது என்று, தமிழ்­நாட்­டிற்­குக் கிளம்பி வரு­கி­றார்,  பிர­த­மர் மோடி அவர்­கள். கடந்த மாதம்­கூட இதே திருச்­சிக்கு பிர­த­மர் மோடி அவர்­கள் வந்­தார். நான் கேட்­கி­றேன்... அப்­படி வந்­த­வர், “இதெல்­லாம் ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் மூல­மான தமிழ்­நாட்­டிற்கு செய்த திட்­டங்­கள் என்று சொன்­னாரா? எங்­க­ளால் தமிழ்­நாட்­டிற்கு இதெல்­லாம் கிடைத்­தி­ருக்­கி­றது” என்று பட்­டி­யல் போட்­டுச் சொன்­னாரா? இருந்­தால்­தானே சொல்ல முடி­யும்! சட்­டி­யில் இருந்­தால்­தானே, அகப்­பை­யில் வரும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதில், தி.மு.க. எந்த வாக்­கு­று­தி­யை­யும் நிறை­வேற்­ற­வில்லை என்று பொத்­தாம் பொது­வா­கச் சொல்­லி­விட்­டுச் செல்­கி­றார். என்­னு­டைய ஒவ்­வொரு பேச்­சி­லும், ஒவ்­வொரு சாத­னைத் திட்­டம் குறித்­தும், புள்­ளி­வி­வ­ரங்­க­ளோடு விளக்­கிச் சொல்­கி­றேன். நம்­மு­டைய அர­சின் திட்­டங்­க­ளால் பய­ன­டை­யும் பல­ரும் ஊட­கங்­க­ளில் அதை தொடர்ந்து பதிவு செய்­கி­றார்­கள். இன்­னும் சொல்ல வேண்­டும் என்­றால், மக்­க­ளான உங்­க­ளி­டம் கேட்­டி­ருந்­தாலே, திரா­விட மாடல் திட்­டங்­களை வரி­சை­யாக சொல்­லி­யி­ருப்­பீர்­கள். பர­வா­யில்லை, எப்­போ­தும் டூர் மோடு­லேயே இருக்­கும் பிர­த­ம­ருக்கு இதை­யெல்­லாம் கேட்­டுத் தெரிந்து கொள்ள நேரம்இருந்­தி­ருக்­காது; அப்­படி இல்லை என்­றால், தமிழ்­நாட்­டைப் பற்றி புரிந்­துக் கொள்ள வேண்­டும் என்ற எண்­ணம் இருந்­தி­ருக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவ­ரி­டம் நான் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், பிர­த­மர் மோடி அவர்­களே... தமிழ்­நாட்­டிற்கு வாருங்­கள்... ஒரு­வார காலம் இங்­கேயே தங்­கி­யி­ருந்து, எங்­கள் தமிழ்­நாடு எப்­படி தலை­சி­றந்த தமிழ்­நா­டாக இருக்­கி­றது என்று தெரிந்து கொள்­ளுங்­கள். இந்­தி­யா­வி­லேயே அதி­க­ள­வில் பெண்­கள் வேலைக்­குச் செல்­லும் மாநி­லம், நம்­மு­டைய தமிழ்­நா­டு­தான்! பா.ஜ.க. ஆளும் மாநி­லங்­க­ளில் நடப்­பது மாதி­ரி­யான அட்­டூ­ழி­யங்­கள் இங்கு கிடை­யாது! பெண்­க­ளைப் பாது­காப்­பாக வாழ வைப்­போம் என்று பிர­த­மர் சொல்ல வேண்­டி­யது, தமிழ்­நாட்­டில் இல்லை; பா.ஜ.க. ஆளும் மாநி­லங்­க­ளில் சென்­று­தான் இதை­யெல்­லாம் பேச வேண்­டும்! அதை­விட்­டு­விட்டு, NDA கூட்­ட­ணி­யி­னர் தமிழ்­நாட்­டைப் பற்றி அவ­தூ­றா­கப் பேசு­வது, தமிழ்­நாட்டை நாசப்­ப­டுத்­த­வும்;  தமிழ்­நாட்டு வளர்ச்­சியை கெடுக்க வேண்­டும் என்­று­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">7வது முறை­யும் நமது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஆட்சி தொடர வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் முன்­னேற்­ற­மும் வளர்ச்­சி­யும் தொடர வேண்­டும் என்­றால், ஏழா­வது முறை­யும் நம்­மு­டைய திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி அமைய வேண்­டும், திரா­விட மாடல் தொடர வேண்­டும். பா.ஜ.க.வும் அதன் கொத்­த­டி­மைக் கூட்­ட­மும் ஆட்­சிக்கு வந்­தால் அதன் தீமை­கள் நாம் நினைத்­துப் பார்க்க முடி­யாத அள­விற்கு இருக்­கும்! தமிழ்­நாடு தமிழ்­நா­டா­க­தான் இருக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உத்­த­ர­பி­ர­தே­சம் போன்று, மணிப்­பூர் போன்று வன்­மு­றைக் காடாக ஆகக் கூடாது! இவர்­கள் வந்­தால் தமிழ்­நாட்­டின் பெய­ரையே தட்­சிண பிர­தேஷ் என்று மாற்­ற­வும் தயங்க மாட்­டார்­கள்! இதைத் தடுக்க வேண்­டும் என்­றால் ஒட்­டு­மொத்த தமிழ்­நா­டும் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்­ட­ணிக்கு எதி­ராக, ஓர­ணி­யில் இணைய வேண்­டும்! நம்­மு­டைய எதி­ரி­க­ளை­யும் பா.ஜ.க.வின் உதி­ரி­க­ளை­யும் வீழ்த்த வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நன்­றா­கப் புரிந்து கொள்­ளுங்­கள். நாம் போரா­டு­வது, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் வெற்­றிக்­காக மட்­டு­மல்ல; நம்­மு­டைய மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் வெற்­றிக்­காக மட்­டு­மல்ல, தமிழ்­நாட்­டின் வெற்­றிக்­காக! பா.ஜ.க.வின் டப்பா எஞ்­சின் முன்­னால், நம்­மு­டைய திரா­விட மாட­லின் சூப்­பர் ஃபாஸ்ட் எஞ்­சின் ஒரு­போ­தும் தலை­கு­னி­யாது! நம்­மு­டைய ஸ்பீடு என்ன என்று காண்­பித்­து­வி­ட­லாமா? வெல்­லப்­போ­வது தமிழ்­நாடு அணியா? டெல்லி அணியா? ஒரு கை பார்த்­து­வி­ட­லாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நடக்க இருக்­கும் இந்த ஜன­நா­ய­கப் போரில், அர­சி­யல் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு அப்­பாற்­பட்டு, நம்­மு­டைய தாய்த் தமிழ்­நாட்­டைக் காக்க, அனை­வ­ரும் தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணியை ஆத­ரிக்க வேண்­டும்! கலை­ஞ­ரின் மக­னாக உங்­க­ளி­டம் கேட்­கி­றேன், திரா­விட முன்­னேற்­றக் கழ­கக் கூட்­ட­ணிக்கு உங்­கள் பொன்­னான வாக்­கு­க­ளைத் தாருங்­கள். இது என்­னு­டைய கோரிக்கை மட்­டு­மல்ல; தமிழ்­நாட்­டின் நல­னில் அக்­கறை கொண்ட ஒவ்­வொ­ரு­வ­ரின் கடமை! அதை உணர்ந்து, திருச்சி மேற்கு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நம்­மு­டைய வெல்­லும் வேட்­பா­ளர் திருச்­சி­யின் தீரர் கே.என். நேரு அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளி­யுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திருச்சி கிழக்கு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நம்­மு­டைய வெல்­லும் வேட்­பா­ளர் இனிகோ இரு­த­ய­ராஜ் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளி­யுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரு­வெ­றும்­பூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொ­ழிக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளி­யுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">லால்­குடி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் பாரி­வள்­ள­லுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் அனை­வ­ரும் வாக்­க­ளிக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மண்­ணச்­ச­நல்­லூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமதுவெல்­லும் வேட்­பா­ளர் கதி­ர­வ­னுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரு­வ­ரங்­கம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் துரை­ரா­ஜுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­க­ளிக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மணப்­பாறை சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் மனித நேய மக்­கள் கட்­சி­யைச் சேர்ந்த சகோ­த­ரர் அப்­துல் சம­துக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­க­ளிக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முசிறி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் கருணை ராஜா­வுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துறை­யூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் நமது வெல்­லும் வேட்­பா­ளர் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த நம்­மு­டைய ராகுல் காந்தி அறி­விக்­கும் வேட்­பா­ள­ருக்­குக் கை சின்­னத்­தல் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும் என்று கேட்டு, உங்­கள் பொன்­னான வாக்­கு­களை உத­ய­சூ­ரி­ய­னுக்கு வழங்­குங்­கள்... வழங்­குங்­கள் என்று கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>