<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 01 2026 23:25:19 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260402T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="02042026-VLR-10" position.sequence="10" ex-ref="02042026-VLR-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை    </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">02.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">ரூ.8,000 கூப்­பன் – 10 இலட்­சம் வீடு­கள்– 35 இலட்­சம் மடிக்­க­ணி­னி­கள்</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular"  size="36">  </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">இந்­தத் தேர்­த­லில் தி.மு.கழ­கத்­தின்  தேர்­தல் அறிக்கை, தேர்­த­லின் ஹீரோ மட்­டும் இல்லை, ஹீரோ­யி­னும்­தான்!</lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="70"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">திரு­வண்­ணா­ம­லை­யில் நடை­பெற்ற தேர்­தல் பிரச்­சா­ரக் கூட்­டத்­தில்</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">துணை முத­ல­மைச்­சர்  உத­ய­நிதி ஸ்டாலின் பரப்­புரை!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194334_10_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup290606_10_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="t.malai_10_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="t.malai1_10_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">திருவண்ணாமலை,ஏப். 2 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">திரு­வண்­ணா­மலை திரு­வள்­ளு­வர் சிலை அருகே, கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான 
உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் திரு­வண்­ணா­மலை சட்­ட­மன்­றத் தொகு­தி­யின் வேட்­பா­ளர் அமைச்­சர் எ.வ.வேலு அவர்­க­ளுக்கு  
உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்­கு­மாறு நேற்று முன்தினம் தேர்­தல் பிரச்­சா­ரம் செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">அப்­போது அவர்,``நம் தேர்­தல் அறிக்­கையை, தேர்­த­லின் ஹீரோ என்று எப்­பொ­ழு­துமே மக்­கள் சொல்­வார்­கள். ஆனால், இந்த முறை ஹீரோ மட்­டும் இல்லை, இந்­தத் தேர்­த­லின் ஹீரோ­யி­னும் நம் தேர்­தல் அறிக்­கை­தான்’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின்  அவர்கள் ஆற்­றிய சிறப்­பு­ரை­ வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">முத­லில் சிறப்­பான வர­வேற்பு அளித்­தி­ருக்­கக்­கூ­டிய அனை­வ­ருக்­கும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். திரு­வண்­ணா­மலை சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் உங்­க­ளி­டத்­தில் வெற்றி வேட்­பா­ள­ராக நம் எ.வ.வேலு அவர்­களை நம் தலை­வர் அவர்­கள் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள். வரு­கிற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மிகப் பெரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்து, அவரை நிச்­ச­ய­மா­கச் சட்­ட­மன்­றத்­துக்கு நீங்­கள் அனுப்­பப்­போ­கி­றீர்­கள் என்­பது, உங்­க­ளின் எழுச்­சி­யைப் பார்க்­கும்­போது நிச்­ச­ய­மா­கத் தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">வெற்றி வேட்­பா­ளர், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் எ.வ.வேலு, அவ­ரைப் பற்றி உங்­க­ளி­டம் பேசு­வ­தற்கு ஒன்­றுமே இல்லை, உங்­க­ளுக்கே எல்­லாம் தெரி­யும். அவ­ரின் ஆற்­ற­லை­யும் அவ­ரது அனு­ப­வத்­தை­யும் நீங்­கள் அனை­வ­ரும் நன்கு அறி­வீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ஏவா­மலே வேலை செய்­ப­வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">கலை­ஞர் பல­முறை சொல்­லி­யி­ருக்­கி­றார். `எல்­லோ­ரும் ஏவி­னால்­தான் வேலை செய்­வார்­கள், ஆனால், நான் ஏவா­மலே வேலை­யைச் செய்து முடிக்­கி­ற­வர் எ.வ.வேலு’ என்று கலை­ஞர் அவர்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">எ.வ.வேலு என்­றால் `எதி­லும் வல்­ல­வர் வேலு’ என்று நம் கலை­ஞர் அவர்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றார். `எப்­போ­தும் வல்­ல­வர் வேலு’ என்று நம் தலை­வர் சொல்­லி­யி­ருக்­கி­றார். நான் சொல்­லி­யி­ருக்­கி­றேன், `எதி­லும் எப்­போ­தும் வல்­ல­வர் அண்­ணன் வேலு’ அவர்­கள் உங்­க­ளின் வேட்­பா­ளர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">எந்­தக் காரி­யத்தை எடுத்­தா­லும், அதைச் சரி­யா­கச் செய்து முடிக்­கக்­கூ­டி­ய­வர் அண்­ணன் வேலு அவர்­கள். அப்­ப­டிப்­பட்ட எ.வ.வேலு அண்­ணன் அவர்­களை உங்­க­ளி­டத்­தில் தலை­வர் அவர்­கள் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள். சென்ற முறை கிட்­டத்­தட்ட 95,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் நீங்­கள் வெற்­றி­பெ­றச் செய்­தி­ருக்­கி­றீர்­கள். இந்த முறை குறைந்­தது ஒரு லட்­சம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் நீங்­கள் அவரை வெற்­றி­பெ­றச் செய்து காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கலை­ஞர் பேருந்து நிலை­யம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இன்று ஓடி ஓடி உழைக்­கி­ற­வர். இன்று தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய பல்­வேறு கட்­ட­டங்­கள், பல்­வேறு கட்­ட­மைப்­பு­கள் என பல­வற்­றை­யும் கட்டி முடித்­தி­ருப்­ப­வர் அண்­ணன் வேலு அவர்­கள்­தான். பெரு­மை­யோடு இருக்­கக்­கூ­டிய அனைத்­துக் கட்­ட­டங்­கள், மாவட்­டம்­தோ­றும் இருக்­கக்­கூ­டிய `பிரம்­மாண்ட நூல­கங்­கள்’, `நினைவு மண்­ட­பங்­கள்’, மெரினா கடற்­க­ரை­யில் அமைந்­தி­ருக்­கக்­கூ­டிய நம் `கலை­ஞர் நினை­வி­டம்’, கன்­னி­யா­கு­ம­ரி­யில் இருக்­கக்­கூ­டிய திரு­வள்­ளு­வர் சிலைக்கு அமைக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய `கண்­ணா­டிப் பாலம்’, `திரு­வா­ரூர் கலை­ஞர் கோட்­டம்’. இப்­படி எல்­லாமே அண்­ணன் வேலு அவர்­க­ளின் உழைப்­பி­னால் கட்­டப்­பட்­டவை. அப்­ப­டிப்­பட்ட வேலு அண்­ணன் அவர்­க­ளுக்­குத்­தான் உரி­மை­யு­டன் உங்­க­ளி­டம் வாக்­குக் கேட்டு வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இந்­தத் தொகு­தி­யில் திரு­வண்­ணா­ ம­லை­யில் இன்று கலை­ஞர் நூற்­றாண்­டுப் பேருந்து நிலை­யம் கட்­டப்­பட்­டது அண்­ணன் வேலு­வின் உழைப்­பால்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">திரு­வண்­ணா­மலை திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">தரு­ம­புரி, அரூர், திரு­வண்­ணா­மலை சாலை­கள் எல்­லாம் நான்கு வழிச் சாலை­க­ளாக மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன என்­றால், அண்­ணன் வேலு­வின் உழைப்பு. 56 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஒருங்­கி­ணைந்த முதன்­மைக் கல்வி அலு­வ­லர்­கள் மையம், மாணவ, மாண­வி­யர் 400 பேர் தங்­கிப் படிக்­கின்ற வகை­யில் அரசு மாதிரி பள்­ளிக் கட்­ட­டம், நந்­தன் கால்­வா­யைச் சீர­மைக்­கின்ற பணி­கள், மருத்­து­வக் கல்­லூ­ரிக்கு மருத்­து­வ­ம­னைக் கட்­ட­டங்­கள், மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் தீவிர சிகிச்­சைப் பரா­ம­ரிப்பு மையம், கிரி­வ­லப் பாதை­யில் சுகா­தார வளா­கம், மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் பொது­மக்­கள் குறை­தீர்ப்­புக் கட்­டட அரங்­கம், அண்­ணா­ம­லை­யார் கோயில் மாட­வீ­திச் சாலை­யில், கான்­கி­ரீட் சாலை மேம்­பாடு, இரண்­டரை கோடி மதிப்­பீட்­டில் சமுத்­தி­ரம் பகு­தி­யில் கலை­ஞர் பன்­னோக்கு அரங்­கம், கூடு­தல் சுற்­றுலா மாளி­கைக் கட்­ட­டம். இத்­த­னை­யும் நம் வேலு அண்­ணன் அவர்­கள் கடந்த ஐந்து வரு­டத்­தில் இந்­தத் திரு­வண்­ணா­மலை தொகு­திக்­கா­கச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இன்­னும் பல்­வேறு கோரிக்­கை­கள் வைத்­தி­ருக்­கி­றீர்­கள், அவற்­றை­யும் செய்து கொடுப்­பார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மக­ளிர் விடி­யல் பய­ணத் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இன்று நம் தலை­வர் என்­னென்ன திட்­டங்­க­ளைத் தமிழ்­நாட்­டுக்­குச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார்? சென்ற 2021–ஆம் ஆண்டு சட்­ட­மன்­றத் தேர்­த­லில் சொன்ன வாக்­கு­றுதி ஒவ்­வொன்­றை­யும் நம் தலை­வர் செய்து கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்று அவர் இட்ட முதல் கையெ­ழுத்து – மக­ளி­ருக்­கான விடி­யல் பய­ணத் திட்­டம். மக­ளிர் ஒவ்­வொ­ரு­வ­ரும் இந்த விடி­யல் பய­ணத் திட்­டத்­தின் மூல­மாக மாதம் 900 ரூபாய் வரை சேமித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">குழந்­தை­கள் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்து படிக்­க­வேண்­டும் என்று முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம். ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரை படிக்­கக்­கூ­டிய அனைத்­துக் குழந்­தை­க­ளுக்­கும் தர­மான காலை உண­வுத் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">அர­சுப் பள்­ளி­யில் படித்­துக் கல்­லூ­ரிக்­குச் சென்று சேரும் குழந்­தை­க­ளுக்­குப் புது­மைப் பெண் திட்­டம், தமிழ்ப் புதல்­வன் திட்­டம் வாயி­லாக மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்­கத்­தொகை நம் அர­சால் வழங்­கப்­ப­டு­கி­றது. நான் முதல்­வன் திட்­டம் மூல­மாக 3 இலட்­சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">ஒரு கோடியே 31 இலட்­சம் மக­ளி­ருக்­குக் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டத்தை நம் தலை­வர் கொடுத்­தி­ருக்­கி­றார், மாதம் 1,000 ரூபாய் இந்­தத் திட்­டத்­தின் மூலம் வழங்­கப்­ப­டு­கி­றது. அதை, சங்­கி­கள் கூட்­ட­மும் அ.தி.மு.க. கூட்­ட­மும் எப்­ப­டி­யா­வது நிறுத்த வேண்­டும் என்று முயற்சி செய்­தார்­கள். தேர்­த­லைக் கார­ணம் காட்டி, மக­ளிர் உரி­மைத் திட்­டத்தை மூன்று மாதம் நிறுத்த வேண்­டும் என்று ஒன்­றிய அரசு முயற்சி செய்­தது. நீதி­மன்­றத்­துக்­குச் சென்­றார்­கள். ஆனால், மூன்று மாதத்­துக்­கும் சேர்த்து 3,000 ரூபாய், கோடைக்­கால சிறப்பு நிதி 2,000 என்று 5,000 ரூபாய் நம் தலை­வர் அவர்­கள் ஒரு கோடியே 31 இலட்­சம் குடும்­பங்­க­ளுக்­குக் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இந்­தத் திட்­டங்­கள் எல்­லாம் தொடர வேண்­டும் என்­றால்,, மீண்­டும் நம் உத­ய­சூ­ரி­யன் உதிக்க வேண்­டும். பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளை­யும் நம் தலை­வர் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">மக­ளிர் உரி­மைத் தொகை மீண்­டும் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடனே 1,000 ரூபாயை, 2,000 ரூபா­யாக உயர்த்­தித் தரு­வேன் என்று தலை­வர் சொல்­லி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">எட்­டாம் வகுப்பு வரை கொடுப்­போம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம் இன்று ஐந்­தாம் வகுப்பு வரை கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றோம், அதை விரி­வு­ப­டுத்தி எட்­டாம் வகுப்பு வரை கொடுப்­போம் என்று நம் தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">புது­மைப் பெண் திட்­டம், தமிழ்ப் புதல்­வன் திட்­டம் மாதம் 1,000 ரூபாய் என்­பதை உயர்த்தி கல்வி ஊக்­கத்­தொகை 1,500 ரூபாய் கொடுப்­பேன் என்று நம் தலை­வர் உத்­த­ரவு கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">முதி­யோர் உத­வித்­தொகை இன்று 1,200 ரூபாய் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றோம், அதை உயர்த்தி 2,000 ரூபாய் தரு­கி­றேன் என்று நம் தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார். மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான ஓய்­வூ­தி­யத் தொகை 1,500–லிருந்து 2,500 ஆக உயர்த்தி கொடுப்­பேன் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">35 இலட்­சம் மாண­வர்­க­ளுக்கு மடிக்­க­ணினிகள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இப்­போது ஒரே மாதத்­தில் 10 இலட்­சம் மாண­வர்­க­ளுக்கு மடிக்­க­ணி­னி­களை கொடுத்­தோம், அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் 35 இலட்­சம் மாண­வர்­க­ளுக்கு மடிக்­க­ணினி கொடுக்­கப்­ப­டும். மக­ளிர் சுய உத­விக் குழுக்­க­ளுக்கு பிணை­யில்­லாத வங்­கிக் கடன் 5 இலட்­சம் வரை கொடுக்­கப்­ப­டும் என்ற உறு­தி­மொழி கொடுத்­தி­ருக்­கி­றோம். அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் `கலை­ஞர் கனவு இல்­லம்’ திட்­டம் – 10 இலட்­சம் வீடு­கள் கட்டி, பொது­மக்­க­ளுக்­குக் கொடுக்­கப்­ப­டும் என்ற உறு­தி­மொழி கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கூப்­ப­னின் மதிப்பு 8,000 ரூபாய்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இவற்­றை­யெல்­லாம்­விட மிக மிக முக்­கி­ய­மான ஒரு திட்­டம். அது­தான் இல்­லத்­த­ரசி திட்­டம். ஆட்சி அமைந்த உடனே நம் தலை­வர் அவர்­கள் உங்­கள் அனை­வ­ருக்­கும் ஒரு கூப்­பன் கொடுப்­பார். அரசு ஒரு கூப்­பன் கொடுக்­கும். அந்த கூப்­ப­னின் மதிப்பு 8,000 ரூபாய். அதா­வது, முத­ல­மைச்­சர் அவர்­கள் இல்­லத்­த­ரசி திட்­டம் என்று ஒரு தேர்­தல் அறிக்­கை­யில் சொல்­லி­யி­ருக்­கி­றார். நம் தேர்­தல் அறிக்­கையை `தேர்­த­லின் ஹீரோ’ என்று எப்­பொ­ழு­துமே மக்­கள் சொல்­வார்­கள். ஆனால், இந்த முறை ஹீரோ மட்­டும் இல்லை, இந்­தத் தேர்­த­லின் ஹீரோ­யி­னும் நம் தேர்­தல் அறிக்­கை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">கலை­ஞர் அவர்­கள்­தான் பெண்­கள் விற­க­டுப்­பில் சமைத்­துச் சிர­மப்­ப­டக் கூடாது என்று எரி­வாயு அடுப்பு கொடுத்­தார். அதன் பிறகு, பெண்­கள் வீட்­டி­லி­ருந்து உலக அறி­வைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும், எல்­லாமே தெரிந்­து­கொள்ள வேண்­டும் என்று கலை­ஞர் வண்­ணத் தொலைக்­காட்­சிப் பெட்டி கொடுத்­தார். அதன் பிறகு, நம் தலை­வர் பெண்­கள் வீட்­டை­விட்டு வெளியே வர வேண்­டும், வேலைக்­குச் செல்­வ­தற்­குச் சுல­ப­மாக இருக்க வேண்­டும் என்று விடி­யல் பய­ணத் திட்­டம், கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டத்­தைக் கொடுத்­தோம். பெண்­க­ளுக்­குச் சொத்­தில் சம உரிமை கொடுத்­தோம். இன்று நம் தலை­வர் வீட்­டில் இருக்­கக்­கூ­டிய பெண்­கள் அதிக வேலை செய்­யக் கூடாது என்­ப­தற்­காக அவர்­க­ளுக்கு 8,000 ரூபாய் கூப்­பன் கொடுத்­தி­ருக்­கி­றோம். இந்த 8,000 ரூபாய் கூப்­ப­னில் உங்­க­ளுக்­குத் தேவை­யான குளிர்­சா­த­னப் பெட்­டியோ, மிக்ஸி, தொலைக்­காட்­சிப் பெட்­டியோ, ஏ.சி.யோ எந்த மின்­சா­த­னப் பொரு­ளை­யும் நீங்­கள் சென்று வாங்­கிக் கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">இலட்­சம் வாக்­கு­கள் வித்­தி­யா­சம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இன்று தேதி 31, இன்­னும் தேர்­த­லுக்கு 23 நாட்­கள் இருக்­கின்­றன. நீங்­கள் அனை­வ­ரும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்­கப் போகி­றீர்­கள், அதை நீங்­கள் முடிவு செய்­து­விட்­டீர்­கள். ஆனால், நீங்­கள் அடுத்து வரு­கிற 23 நாட்­க­ளும் இந்­தப் பிரச்­சா­ரத்தை மக்­க­ளி­டம் கொண்டு சென்று இன்­னும் சேர்க்க வேண்­டும். நீங்­கள் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கிற மாதிரி அண்­ணன் எ.வ.வேலு அவர்­களை ஒரு இலட்­சம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கற்­றுக்­கொ­டுக்க வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நாம் இவ்­வ­ளவு வளர்ச்­சித் திட்­டங்­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம், இவ்­வ­ளவு வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றோம், நிறை­வேற்­றிக் காட்­டி­யி­ருக்­கி­றோம். மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தால், இதை­யெல்­லாம் செய்­வோம் என்று சொல்­லி­யி­ருக்­கி­றோம். ஆனால், எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் என்ன செய்­து­கொண்­டி­ருக்­கி­றார்? இன்று மீண்­டும் பா.ஜ.க.வின் அடி­மை­யா­கித் தமிழ்­நாட்­டுக்­குள் மோடி அவர்­க­ளை­யும், அமித்ஷா அவர்­க­ளை­யும் எப்­ப­டி­யா­வது பா.ஜ.க.வை தமிழ்­நாட்­டுக்­குள் கூட்­டிக் கொண்டு வர வேண்­டும் என்று வேலை பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றார். ‘ஜாடிக்­கேற்ற மூடி’ என்று சொல்­லு­வார்­கள். இன்று எடப்­பாடி பழ­னி­சா­மி­தான் மோடிக்­கேற்ற ஒர் அடிமை எடப்­பாடி பழ­னி­சா­மி­யாக மாறி­யி­ருக்­கி­றார். நான் அடிக்­கடி நகைச்­சு­வை­யா­கச் சொல்­லி­யி­ருக்­கி­றேன், ‘முரட்டு பக்­தர்­கள்’ பார்த்­தி­ருக்­கி­றோம், ‘முரட்­டுத் தொண்­டர்­கள்’ கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றோம். இன்று எடப்­பாடி பழ­னி­சா­மி­தான் இந்­தி­யா­வி­லேயே ஒரு நம்­பர் ஒன் ‘முரட்டு அடி­மை­யாக’, மோடி­யின் அடி­மை­யாக இருக்­கி­றார். அவ­ருக்­குச் சரி­யான பாடத்­தைக் கற்­றுக்­கொ­டுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நம் தலை­வர் சொன்ன மாதிரி, இந்­தத் தேர்­தல், தமிழ்­நாடு Vs டெல்லி தேர்­தல். இந்­தத் தேர்­த­லில் மோடியா, நம் தலை­வரா என்று பார்த்­து­விட வேண்­டும். மோடியா, தமிழ்­நாடா என்று பார்த்­து­விட வேண்­டும். நம் உரி­மை­களை மீண்­டும் மீட்­டெ­டுத்­துக் கொடுக்க வேண்­டும். தமிழ்­நாடு என்­றைக்­கும் டெல்­லிக்கு அவுட் ஆப் கண்ட்­ரோல்­தான் என்­பதை இந்­தத் தேர்­தல் மூலம் நீங்­கள் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும்.  அதை கண்­டிப்­பா­கச் செய்­வீர்­கள் என்­கிற நம்­பிக்­கை­யு­டன் உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­க­ளில் ஒரு­வ­னா­கக் கேட்­கி­றேன். உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">வெற்­றிச் சின்­னம் உத­ய­சூ­ரி­யன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இன்­னும் பெரு­மை­யா­கப் பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன். நம் வெற்­றிச் சின்­னம் உத­ய­சூ­ரி­யன் எல்லா இடத்­தி­லும் உதித்­தாக வேண்­டும். அதற்­குத் தமிழ்­நாடு முழு­வ­தும், நீங்­கள் திரு­வண்­ணா­மலை தொகுதி முழு­வ­தும், நீங்­கள் அத்­தனை பேரும் இந்­தப் பிரச்­சா­ரத்தை அடுத்த 23 நாட்­கள் கொண்டு சென்று சேர்க்க வேண்­டும். இன்று நான் வேலு அண்­ணன் அவர்­க­ளுக்­காக மட்­டும் இந்­தப் பிரச்­சா­ரத்­தில் ஈடு­ப­ட­வில்லை. நம் கீழ்ப்­பெண்­ணாத்­தூர் வேட்­பா­ளர் அண்­ணன் கு.பிச்­சாண்டி அவர்­க­ளுக்­கும், கல­சப்­பாக்­கம் வேட்­பா­ளர் அண்­ணன் பெ.சு.தி.சர­வ­ணன் அவர்­க­ளுக்­கும், செங்­கம் வேட்­பா­ளர் அண்­ணன் சகோ­த­ரர் மு.பெ.கிரி அவர்­க­ளுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப் பெரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் நீங்­கள் வெற்றி பெறச் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யா­கப் பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன். உத­ய­சூ­ரி­ய­னுக்கு வாக்­க­ளி­யுங்­கள். மிகப் பெரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் இந்­தத் திரு­வண்­ணா­ம­லை­யில் இருக்­கக்­கூ­டிய அனைத்­துத் தொகு­தி­யி­லும் உத­ய­சூ­ரி­யன் உதிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">நம் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்­டும். நம் தலை­வர் மீண்­டும் இரண்­டா­வது முறை­யாக முத­ல­மைச்­சர் பொறுப்­பில் அமர வேண்­டும் என்­றால், திரு­வண்­ணா­மலை அனைத்­துத் தொகு­தி­யி­லும் நீங்­கள் வேலை செய்து உத­ய­சூ­ரி­யன் சின்­னத்தை வெற்றி பெறச் செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இந்த அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி, நன்றி, வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் சிறப்­பு­ரை­ 
யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="11">சட்­டப்­பே­ர­வைத் துணை சபா­நா­ய­கர் கு.பிச்­சாண்டி, திரு­வண்­ணா­மலை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அண்­ணா­துரை, டாக்­டர் எ.வ.வே.கம்­பன், மாவட்­டத் துணைச் செய­லா­ளர் மு.பெ.கிரி, பிரியா விஜ­ய­ரங்­கன், விஜ­ய­லட்­சுமி ரமேஷ், மாநி­லத் தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் ஸ்ரீத­ரன், பே.சு.தி.சர­வ­ணன், மாவட்ட அவைத்­த­லை­வர் கண்­ணன், பொறி­யா­ளர் அணி­யின் செய­லா­ளர் எஸ்.கே.பி.கருணா, சௌந்­த­ர­ரா­ஜன், மாந­க­ரச் செய­லா­ளர் கார்த்­திக் வேல்­மா­றன், மாந­க­ராட்சி மேயர் நிர்­மலா கார்த்­திக் வேல்­மா­றன், ஒன்­றி­யக் கழ­கச் செய­லா­ளர்­கள் மெய்­யூர் சந்­தி­ரன்,கோவிந்­தன், ரம­ணன், இளை­ஞர் அணி மாவட்­டத் துணை அமைப்­பா­ளர்­கள் ராஜாங்­கம், கண்­ண­தா­சன், திலீப், சதீஷ், ராஜேஷ், ரமேஷ், செல்­வம் பிர­காஷ், பகு­திப் பொறுப்­பா­ளர்­கள் விஜ­ய­ராஜ், கோவிந்­தன், சண்­மு­கம், சீனி­வா­சன், ஷெரீஃப், குட்டி புக­ழேந்தி உள்­பட கழக முன்­ன­ணி­யி­னர் மற்­றும் கூட்­ட­ணிக் கட்­சி­யி­னர் உள்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>